(Q685:1)
கேள்வி (1911 – Z. 4797) -1- ஞாயிறு பள்ளி வகுப்புகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
பதில் – பொதுவாகவே சகோதரர்களைக் காட்டிலும், சகோதரிகள் இளம் வயதினருக்கு நன்கு போதிப்பவர்களாய்க் காணப்படுகின்றனர். இத்தகைய வகுப்பாருக்கு இவர்கள் போதிப்பதற்கு வேத வாக்கியங்களில் எதுவும் மறுப்புத் தெரிவிக்கிறதில்லை. “உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறது இல்லை, என்பது அப்போஸ்தலனின் வார்த்தைகளாய் இருக்கின்றது. அவரது வார்த்தைகள் விசேஷமாய்ச் சபைக்குப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது.
ஞாயிறு பள்ளிகள் தொடர்புடைய விஷயத்தில், வேதாகமப் பாடங்களின் ஆறாம் தொகுதிகளில் நாம் எழுதியிருப்பவைகளிலிருந்து நம்முடைய கணிப்பு மாறவில்லை.
தங்களுடைய பிள்ளைகள் ஆவிக்குரியவற்றைக் கற்றுக்கொள்ளும் விஷயத்தில், கிறிஸ்தவ பெற்றோர்களே பொறுப்பாளிகளாகத் தேவனால் கருதப்படுகின்றனர் என்றும், இதை அவர்கள் செய்கையில் அவர்கள் விசேஷித்த ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் இன்னமும் நம்பிவருகின்றோம். ஒருவேளை ஞாயிறு பள்ளிகளின் தேவை ஏற்படுமாயின், அது அனாதைப் பிள்ளைகளுக்கு அல்லது உலகப் பிள்ளைகளுக்கு அல்லது இல்லத்தில் ஏற்கெனவே கற்பிக்கப்படும் பிள்ளைகளுக்கு மாத்திரமே அத்தேவைக் காணப்படும் என்று நாம் நம்புகின்றோம்.