R3107 (page 342)
கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் சில சமயம் கொஞ்சம் சிரமம் கொடுக்கும் காரியம் திருமண நிச்சயதார்த்தம் (engagement) குறித்தாகும். “நிச்சயதார்த்தம்” விஷயத்தில் எவ்வளவுக்குப் பொறுப்புக் காணப்படுகின்றது என்பது தொடர்புடைய விஷயத்தில் சில குழப்பமான எண்ணங்கள் காணப்படுகின்றன. யூதருடைய ஏற்பாட்டில் (betrothal) நிச்சயதார்த்தமானது, விவாக விழாவிற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே நடைபெறும்; மேலும் இவர்களது இந்த நிச்சயதார்த்தம் (betrothal) என்பது உண்மையான திருமணம்போன்று காணப்பட்டது. மணமகன் மற்றும் மணமகளுடைய நண்பர்களினால் சாதக பாதகங்களானது கலந்துரையாடப்பட்டு… விவரங்கள் அனைத்தும் எழுதப்பட்டு, கையெழுத்திடப்படுகின்றது. நிச்சயதார்த்த வாக்குறுதிகளுக்கான மணமகள் சார்பிலான உண்மையின்மையானது, நியாயப்பிரமாணத்தின்கீழ்த் தண்டிக்கப்படும் அளவுக்கு அந்த நிச்சயதார்த்தமானது மிகவும் பொறுப்புகளுடையதாயிருந்தது. இந்த யூத வழக்கமானது சுவிசேஷயுக சபையானவள், கிறிஸ்துவாகிய அவளது பரலோக மணவாளனுடன் நிச்சயம் பண்ணப்பட்டிருக்கும் காரியத்திற்கு நிழலாய் இருக்கும்படிக்குத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர் சார்பிலான மற்றும் நம் சார்பிலான – கர்த்தருடனான நம்முடைய ஒன்றிணைதலின் ஒப்பந்தமானது, சுவிசேஷயுகமாகிய இப்பொழுது காணப்படுகின்றது. ஆனால் உண்மையான ஒன்றிணைதலானது அல்லது “திருமண விழாவானது,” அவரது இரண்டாம் வருகையில், முழு மணவாட்டி வகுப்பாரும் திரைக்கு அப்பால் மாற்றம் அடைந்து, அவளது கர்த்தருடைய சந்தோஷங்களுக்குள் பிரவேசிப்பதுவரையிலும் நடைப்பெறுவதில்லை. ஆனால் நம் மத்தியில் இன்றைய நாட்களில் நிலவிவருகின்றதான திருமண (engagement) “நிச்சயதார்த்தங்களானது,” யூதர்களுடைய (betrothal) நிச்சயதார்த்தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாகும்.
நம்முடைய வழக்கத்தின்படி அதிகாரிகள் முன்னிலையிலோ அல்லது சுவிசேஷஊழியக்காரனால் ஆற்றப்படும் திருமண விழாவிலோ, சட்டப்பூர்வமான விதத்தில் விவாக உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கப்படுகின்றது. இதுதான் விவாக உடன்படிக்கையாகும்; இதுவே ஒப்பந்தமாகும்; இது மாற்றப்பட முடியாது; இது முறிக்கப்படக்கூடாது; இதில் ஏறெடுக்கப்படும் உறுதிமொழிகளானது எழுத்திலும், ஆவியிலும் கைக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் திருமண உடன்படிக்கைக்குச் சில வாரங்கள், மாதங்கள் அல்லது வருஷங்களுக்கு முன்னதாகப்பண்ணப்படும் “நிச்சயதார்த்தங்களானது,” (engagement) உண்மையில் உடன்படிக்கைகளே அல்ல. அது ஒன்றிணைவதற்கெனத் திருமண உடன்படிக்கையினையும், திருமண விழாவையும் எதிர்நோக்கியிருக்கும் இருதரப்பினர்களுக்கு இடையிலான முன்னேற்பாடான ஏற்பாடுகளாக மாத்திரமே காணப்படுகின்றது – ஆகையால் “நிச்சயதார்த்தத்தை” (engagement) ஒன்றிணைதலாகக் கருதுவது என்பது சட்டப்பூர்வமற்றதாகும், சட்டவிரோதமாகும். வாக்குறுதிகளை இரண்டு நபர்களால் ஊழியக்காரன் இல்லாமல் அல்லது விழா எடுக்காமல் ஜீவியம் முழுவதுமான ஒப்பந்தமாக, ஏறெடுத்திட முடியும் என்பது உண்மைதான்; எனினும் இது வழக்கத்திற்கு மாறானதும், மிகவும் அபூர்வமானதாகவும் காணப்படும் மற்றும் இது பொதுவான நலனுக்கு எதிரானது என்று நாட்டின் சட்டங்களால் தடைப்பண்ணப்பட்டுள்ளது.
ஆகையால் திருமண “நிச்சயதார்த்தமானது,” திருமணத்திற்குத் தகுதியானவர்களாய்க் காணப்படும் ஒரு புருஷனுக்கும், ஸ்திரீக்கும் இடையில் ஒரு முன்னேற்பாடான ஒப்புதல் மாத்திரமே – அதாவது திருமணத்தின் கண்ணோட்டத்தில் ஒருவருக்கொருவர் சகவாசம் கொண்டிருப்பதற்கு – அதாவது திருமண உடன்படிக்கைக்குள் பிரவேசிப்பதற்கான விருப்பம் ஏற்படத்தக்கதாகக் காரியங்களைக் கணித்திடுவதற்குரிய நியாயமான வாய்ப்புகள் கிடைப்பதற்கு ஏதுவாய் ஒருவர் இன்னொருவரின் குணங்கள், பண்புகள், காரியங்கள் முதலானவைகளை நன்கு அறிவதற்குரிய கண்ணோட்டத்தில் சகவாசம்கொண்டிருப்பதற்கான ஒப்புதல் மாத்திரமேயாகும் என்று சரியாய்ப் புரிந்துகொள்ளப்படலாம். இன்னுமாக இது அவன் அல்லது அவள் கணிப்பில் ஒருவருக்கொருவர் திருமணம் பண்ணிடுவது விரும்பத்தக்கதல்ல என்று உணருகையில், திருமணம்பண்ணிட வேண்டாம் எனும் தீர்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்பையும், உரிமையும்கூடத் தருகின்றதாய் இருக்கின்றது. திருமணத்திற்கான “நிச்சயதார்த்தத்தினை” / engagement அல்லது சாதாரணமான ஒப்புதலை முறிக்கையில், இதில் கனவீனமோ அல்லது உடன்படிக்கையினை முறித்துப்போடுதல் போன்ற எதுவுமே இருப்பதில்லை – மாறாக நியாயமானதாகவும், சரியானதாகவும், ஏற்றதாகவுமே இருந்திடும்.
இருதரப்பினருடைய நலனின் அடிப்படையிலேயே காரியங்கள் இப்படியாக இருக்க வேண்டும். ஒருவேளை இருதரப்பினரில் ஒருவர் “நிச்சயதார்த்தத்தை” இரத்துச் செய்திட விரும்புகையில், மறுதரப்பினர் திருமண உடன்படிக்கையோடு ஒன்றிணைந்திட வேண்டும் என்று சுயநலமாய் வற்புறுத்துவது என்பது நிச்சயமாகவே ஞானமற்றதாகவும், அநீதியாகவும் காணப்படும்; ஏனெனில் ஒன்றாயிருப்பவர்களுக்கு மாத்திரமே திருமணம் உரியதாகும் மற்றும் இருதரப்பினரில் யாரேனும் ஒருவர் இதற்கு எதிராய் எண்ணம் கொண்டிருந்திருப்பார்களானால், அதுவே அவர்கள் இருவரும் தங்கள் விருப்பங்கள், பிரியங்கள், விருப்பத்தேர்வுகள் முதலானவைகளில் ஒன்றாய் இல்லை என்று முடிவெடுப்பதற்குரிய மிகச் சிறந்த காரணமாய்க் காணப்படும்.
சத்தியம் தங்களை வந்தடைகிற காலத்தில் திருமணம்பண்ணிக்கொள்ளும்படிக்கு நிச்சயதார்த்தம் செய்து காணப்படும் நபர்களிடமிருந்து இது விஷயமான கேள்விகள் அடிக்கடி எங்களுக்கு வருகின்றபடியாலே, இக்காரியத்தினை இங்கு நாம் குறிப்பாய்த் தெரிவிக்கின்றோம். (இவர்களுக்குச் சத்தியம் வந்தடைகையில்) இவர்கள் காரியங்களைப் புதிய வெளிச்சத்தில் காண்கின்றனர்; சத்தியத்தினுடைய வெளிச்சத்தின்கீழ் ஜீவியமானது இவர்களுக்குப் புது அர்த்தம் உடையதாகுகின்றது; மேலும் திருமண விஷயமானது புது அழுத்தம்கொண்டதாய் இருக்கின்றது; ஜீவியத்தின் துணை சம்பந்தமாகத் தீர்மானிக்கும் காரியமானது, கர்த்தருடைய சித்தத்தைப் பெரிதும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய காரியமாயிருக்கின்றது. ஆனால் மறுதரப்பினரோ பொதுவாக நிலைமைகளின் மாற்றத்தினைக் காணத் தவறுகின்றனர்; மேலும் அநேகமாய்ச் சத்தியம் பெற்றுக்கொண்டவருக்குச் சத்தியமானது குணலட்சணத்திற்குச் சேர்த்திடும் அழகின் காரணமாய் நிச்சயதார்த்தம்பண்ணப்பட்ட இவரைப் பெரிதும் மறுதரப்பினர் மதிப்பவர்களாகுகின்றனர். ஜெநிப்பிக்கப்படாத இந்த மறுதரப்பினர் அநேகமாய் ஒரு கிறிஸ்தவர் “நிச்சயதார்த்தத்தினை” (engagement) முறித்திடுவது என்பது தவறாய் இருக்கும் என்று வலியுறுத்துகிறவர்களாகவும், வற்புறுத்துகிறவர்களாகவும் காணப்படலாம். இப்படியான கருத்து முற்றிலும் பகுத்தறிவற்றது மற்றும் முற்றிலும் தவறானதாகும்; மேலும் இப்படிக் கருத்துக்கொண்டிருப்பவர்கள் இதை முழுமையாய்ப் புரிந்தவர்களாகவும் பொதுவாய்க் காணப்படுவார்கள்; இது எல்லா விதத்திலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றிடுவதற்கு ஆவலாய் இருக்கும் சிலரின் மனசாட்சிக்கு மகா பிரச்சனையைக்கொண்டுவருவதற்குப் போதுமானதாகும்.