R4854 (page 218)
“””தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர். அவர்கள் விசுவாசமற்றோரைவிடத் தாழ்ந்தோராவர்.”” (1 தீமோத்தேயு 5:8; திருவிவிலியம்)
தன்னைச் சார்ந்திருப்பவர்களாகிய தன் சொந்த வீட்டாரை ஆதரியாத ஒருவன் விசுவாசத்தை மறுதலித்தவனாகவும், அவிசுவாசியிலும் கேடானவனாகவும் இருப்பான் என்று, மேல் இடம்பெறும் வேதவாக்கியமானது விவரிக்கப்படலாம்.
இது குறிப்பாய்க் கிறிஸ்தவ கணவன் மற்றும் அவன் தன் மனைவி மற்றும் தன் பிள்ளைகளுக்காய்க் கொண்டிருக்கும் கடமைச் சம்பந்தப்பட்டதாகும். கணவனானவன் ஒருவேளை மனைவியை ஆதரியாமலும், அவளைப் பேணுவதை நிறுத்தியும் விடுவாரானால், மேலும் இருதயத்திலோ, பாசத்திலோ அல்லது நிஜமாகவோ அவளைக் கைவிட்டுவிடுவாரானால், இப்படி இருப்பது என்பது அவர் கர்த்தரிடமிருந்தும், ஆவியினுடைய வழிநடத்துதலிடமிருந்தும், “”முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கும் பரத்திலிருந்து வருகிற ஞானத்தினிடமிருந்தும்”” கவலைக்கிடையான விதத்தில் விலகிப்போயுள்ளார் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும்.
இம்மாதிரியான சூழ்நிலைகளில் இத்தகையவர் சீர்த்திருந்தாதது வரையிலும், இவர் கர்த்தரினால் “”ஜெயங்கொண்டவரென”” அங்கீகரிக்கப்படுவார் என்று நாம் எண்ணிட முடியாது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் உலகத்தில் பிறக்கத்தக்கதாக அவர்களுக்குச் செத்துக்கொண்டிருக்கும் சிறு அபூரண சரீரங்களைக் கொடுப்பது மாத்திரமல்லாமல், ஜீவியத்தை ஆரம்பிக்கத்தக்கதாக இன்னும் அதிகமானவைகளை அவர்களுக்குச் செய்திடுவதற்கும் கடமைப்பட்டிருக்கின்றனர். பிள்ளைகளை உலகத்திற்குக் கொண்டு வந்திருப்பதினால், அவர்கள் உலகில் நிலைநிற்கத்தக்கதாக அவர்களுக்கு அவசியமான, நியாயமான காரியங்களைப் பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமையாகின்றது. இது குழந்தைப் பருவத்திலும்;, வாலிபப் பருவத்திலும் அவர்களுக்கு உணவு மற்றும் உடை வழங்குவதை மாத்திரம் உள்ளடக்காமல், இன்னுமாக நாம் அநேகம்முறை குறிப்பிட்டுள்ளது போன்று அறிவு சார்ந்த மற்றும் ஒழுக்கம் சார்ந்த அறிவுரைகளை வழங்குவதையும்கூட உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது; இவை அனைத்தும், தேவைக்குத் தவிர மற்றபடி குழந்தைகளுடைய நலன்களுக்காகச் சேர்த்து வைப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும்.
ஜீவியம் நிலையற்றதாய் இருப்பதைக் காண்கையில், பிள்ளைகள் முதிர்ச்சி நிலைமைக்கு வருவதற்கு முன்னதாக ஒருவேளை தான் மரித்தால், குடும்பத்தின் தேவைகளுக்கெனத் தகப்பன் முன்னதாகவே ஏதோ சிலவற்றைச் சேர்த்து வைப்பதற்கான வேதாகம அறிவுரைகளாக இவ்வார்த்தைகளைப் பொருத்திப்பார்ப்பதும் நியாயமானதே. ஆனாலும் பிள்ளைகள் சண்டையிட்டுக்கொள்ளத்தக்க விதத்திலும், பாதிப்பு அடையும் விதத்திலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கென்று சொத்துக்களைச் சேர்த்து வைக்க நாடிட வேண்டும் என்ற அர்த்தத்தில் அப்போஸ்தலன் இவ்வார்த்தைகளைப் பேசியுள்ளாரென நாங்கள் எண்ணுகிறதில்லை. நற்பிறப்படைந்து, நியாயமான கல்வியறிவையும், முதிர்ச்சிக்கு நேரான நியாயமான வழிகாட்டுதலையும் பெற்றிருக்கும் குழந்தையானவன் நல்ல நிலைமையில் இருப்பவனாகவும், தன்னில் ஐசுவரியமான சொத்தைப் பெற்றவனாகவும் இருப்பான்; மேலும் இத்தகைய ஏற்பாடுகளைத் தன் பிள்ளைக்காகச் செய்துள்ள தகப்பன், இவ்விஷயத்தில் தான் தெளிந்த புத்தியினாலும், பரிசுத்த ஆவியினாலும் ஆண்டு நடத்தப்பட்டிருப்பதாகவும், ஒருவேளை தன் குடும்பத்திற்கென்று தான் எந்தச் சொத்துக்களையும் விட்டுச் செல்லவில்லை என்றாலும் அல்லது ஓர் உறைவிடம் அல்லது வீட்டைத்தவிர வேறு ஏதும் விட்டுச்செல்லவில்லை என்றாலும்கூட, தான் கர்த்தரினால் அங்கீகரிக்கப்படும் நிலைமையில் இருப்பதாகவும் உணர்ந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஒரு மனுஷன் தன் உக்கிராணத்துவத்தை நிறைவேற்றியுள்ளவனாய் இருப்பான்; மற்றும் இத்தகையவருடைய பிள்ளைகள் இறுதியில் இவரது உண்மையினை நிச்சயமாய் உணர்ந்துகொள்வார்கள்.
பொதுவாய் இருக்கும் மனுக்குலத்தாரைக்காட்டிலும் நம்முடன் இரத்த பந்தத்தில் காணப்படுபவர்கள் மீது நாம் அக்கறைக்கொண்டவர்களாய் இருக்க வேண்டும். ஒருவேளை பொதுவாய் இருக்கும் மனுக்குலத்தாரிடம் நாம் இரக்கமும், பரிவும் கொண்டிருக்கத்தக்கதாக, கர்த்தருடைய ஆவியானது நம்மை வழிநடத்துமானால், நம்முடைய உறவினர்கள் மீதான நம் உணர்வுகளுக்கு நாம் விசேஷமாய்க் கவனம் செலுத்திட வேண்டும் மற்றும் நம்முடைய வாய்ப்புகளுக்கு ஏற்ப உதவிகரமாய் நாம் காணப்பட வேண்டும். எனினும் நம்முடைய கணிப்பின்படி பார்க்கையிலும், வேதவாக்கியங்களினுடைய அறிவுரைகளின்படி பார்க்கையிலும், நமது கர்த்தருடைய நடத்தையிலும், அப்போஸ்தலர்களுடைய நடத்தையிலும் நமக்கு முன்வைக்கப்பட்டுள்ளதான முன்மாதிரியின்படி பார்க்கையிலும், நம்முடைய பூமிக்குரிய உறவினர்களிடத்தில் மிக விசேஷித்த ஐக்கியத்தைக்கொண்டிருப்பதும் அல்லது விசுவாச வீட்டாரை நாம் நடத்திடுவதுபோன்று நாம் அவர்களை ஏற்றுக்கொள்வதும், நடத்திடுவதும் ஞானமாய் இராது.
[R4854 : page 219]
“”தன் சொந்த வீட்டாரை ஆதரியாதவன். . . விசுவாசத்தை மறுதலிக்கிறவனாய் இருப்பான்”” எனும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளுக்கு இசைவாக நம்மேல் சார்ந்திருக்கும் இத்தகைய நெருக்கமான உறவுமுறைகளை இங்கு நாம் விதிவிலக்காக்குகின்றோம். இந்த விதிவிலக்கிற்கு அப்பாற்ப்பட்டவர்களாகிய பொதுவான ஜனங்களுக்கு “”நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக்கடவோம்”” என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகளை நாம் பொருத்துகின்றோம் (கலாத்தியர் 6:10). விசுவாச வீட்டாருக்கு அடுத்தே நம் தூர சொந்தங்கள் வருகின்றனர்.
ஆம்! புதுச்சிருஷ்டியினுடைய கண்ணோட்டத்தின்படி புதிய உறவுகள், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கங்கள் என்பவர்கள், நம்முடைய சொந்த வீட்டாரின் அங்கத்தினர்களாய் இருப்பார்கள் மற்றும் இவர்களுடைய இம்மைக்குரிய காரியங்கள் சில விதங்களில் நமக்கான பொறுப்புகளாகுகின்றது. நம்முடைய கர்த்தர் வாழ்ந்த காலத்திலிருந்து வேறுபடும் ஒரு காலகட்டத்தில் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கும் இக்காலங்களில் பொதுத்தர்மங்கள் இருக்கின்றன; இதன் காரணமாக இவ்வார்த்தைகளை அப்போஸ்தலன் பேசினபோது அதற்கிருந்த அதே அழுத்தத்துடன் இக்காலங்களில் பொருந்துகிறதில்லை. பொது நலன்களுக்காக தன் பங்கு வரியினை ஒருவன் செலுத்துவானானால், அது உரிய முன்னேற்பாடுகளைச் செய்கிறதாய்ச் சிலசமயங்களில் காணப்படும்; அநேகமாக இதன்
இலாபங்களில் ஒரு பங்கானது பிற்காலங்களில் அவனுக்கே பயன்படும் அவசியம் ஏற்படலாம் அல்லது அவன் நண்பர்கள் யாருக்கோ – அவன் குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கோ பயன்படும் அவசியம் ஏற்படலாம்.
கிறிஸ்து தம் சொந்த வீட்டாருக்கான தலையாக இருக்கின்றார். தம் ஜனங்கள் தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் பாரமாய் இராமல், மாறாக ஒவ்வொருவரும் மற்றவர் விஷயத்தில் பொறுப்பு ஒன்றினை உணர்ந்து, பலப்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும், ஆசீர்வதிப்பதற்கும், “”ஒருவரையொருவர் மகா பரிசுத்த விசுவாசத்தில் கட்டியெழுப்புவதற்கும்”” மகிழ்ச்சியோடு உதவிகரம் அளித்திட வேண்டுமெனக் கர்த்தர் நோக்கம் கொண்டுள்ளார். இதுவே நம் கர்த்தர் தம் பின்னடியார்களைப் புதிய குடும்பமென, புதிய வீட்டாரென, “”விசுவாச வீட்டாரென”” ஒன்றுகூட்டிடுவதற்கான நோக்கமாகும். எங்கே கர்த்தருடைய நாமத்தில் இரண்டு அல்லது மூன்று பேர்கள் கூடுகின்றார்களோ, அங்கே ஆசீர்வாதம் ஒன்றை அருளத்தக்கதாக, அவர்கள் நடுவில் அவர் விசேஷமாய்க் காணப்படுவார் என்ற வாக்குத்தத்தத்துடன்கூட, நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியங்கொள்ளவும், ஒருவருக்கொருவர் உதவவும், ஒருவரோடொருவர் ஒன்றுகூடவும் வேண்டும் என்பதாகவும், ஒருவரோடொருவர் ஒன்று கூடுவதற்குத் தம் ஜனங்கள் மறந்துவிடக்கூடாது என்பதாகவும் திரும்பத்திரும்ப அறிவுறுத்தப்பட்டிருப்பதையும், ஊக்குவிக்கப்பட்டிருப்பதையும் நாம் காணலாம்.
மீண்டுமாக நம் ஆதார வசனத்திற்கு நாம் திரும்புகையில், தன் சொந்தக் குடும்பத்தைப் பற்றின தன் கடமையைப் புறக்கணிக்கிற ஒருவன், விசுவாசத்தை மறுதலிக்கிறவனாக இருப்பான் என்று அப்போஸ்தலன் கூறுவதை நாம் கவனிக்கின்றோம். நாம் அறிக்கைப் பண்ணுகிற விசுவாசமானது, நாம் பெற்றுக்கொள்ளுகின்றதான சில விஷயங்களிலுள்ள விசுவாசமாக மாத்திரம் காணப்படாமல், அது ஒழுக்கம் விஷயங்களையும், நமது குணலட்சணங்களையும், பொதுவாயுள்ள ஜீவியத்தின் காரியங்கள் அனைத்தையும்கூடத் தாக்கத்திற்குள்ளாக்குகின்றதாய் இருக்கின்றது. மற்றவர்கள் தேவனை அன்புகூருவதைக் காட்டிலும் நாம் தேவனை அதிகமாய் அன்புகூருவதாக அறிக்கைப்பண்ணுகின்றோம். நம்மை நாம் அன்புகூருவதுபோன்று நம் அயலானை அன்புகூருவதாக நாம் அறிக்கைப்பண்ணுகின்றோம். இதுவே நம் தரநிலையென நாம் அறிக்கைப்பண்ணுகின்றோம். தன்னை அன்புகூருவதுபோன்று தன் அயலானை அன்புகூருவதே தன் அயலான் விஷயத்திலுள்ள ஒரு மனுஷனுடைய கடமையாகக் காணப்படுமானால், அப்படியானால் அவனுடைய சொந்தக் குடும்பத்தின் விஷயத்தில் இதுவிஷயம் இரண்டு மடங்காய்க் காணப்படும். ஒருவன் இதுவிஷயத்தில் தவறுவானானால், அவன் தான் அறிக்கைப்பண்ணுகின்ற கிறிஸ்துவின் உபதேசங்களைத் தவறாய்க் காட்டுபவனாய் இருப்பான். ஒருவன் தான் அறிக்கைப்பண்ணிடும் உபதேசங்களுக்கு முரணாய் ஜீவித்தல் என்பது, அவன் தன் விசுவாசத்தை மறுதலிக்கின்றதாய் இருக்கும். ஜீவியத்தின் விஷயத்தில் பரவலாய் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ள இந்த நியமங்களை மீறி வாழுதல் என்பது, உலகத்தாரைக்காட்டிலும் அதிகமாக என்ற நிலைமைக்குப் பதிலாக, உலகத்தாரைவிட கீழான நிலைமையில் ஜீவிப்பதாயிருக்கும்.
விசுவாசத்தை மறுதலித்தல் என்கிறபோது, யார் மீது அக்கறைக் காண்பிக்கப்படாமலிருக்கிறதோ, அவர்களின் நலன்களுக்கடுத்த விஷயங்களில் பரிவும், அன்பும் இல்லாமல் காணப்படும் மற்றும் இதன் அளவிற்கேற்ப விசுவாசம் மறுதலிக்கப்படுகின்றதாயிருக்கும். நமது ஆண்டவர் மாபெரும் துயரத்திலும், பிரச்சனையிலும் காணப்படுகையில், அவர் மற்றவர்களைக் குறித்துப் பரிவோடு சிந்தித்துக்கொண்டிருந்த காரியத்தில், சுயநலமின்மைக்கான எத்தகையதொரு பூரணமான உதாரணத்தை நாம் காண்கின்றோம்! தம் தாயாரை அன்புக்குரிய யோவானுடைய பராமரிப்பில் அவர் ஒப்படைத்தபோது, தம் தாயாருடைய நலனுக்கடுத்த காரியங்களுக்கான அவரது ஏற்பாட்டினை நாம் கவனிக்கின்றோம் மற்றும் இப்படியாக ஆண்டவருடைய சோதனை வேளையில் தன் ஆண்டவரோடு காணப்பட்ட யோவானில், வெளியான உயர்பண்புகளை நமது கர்த்தர் அங்கீகரித்த காரியமும் வெளியானது!