R5498 – எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R5498 (Page 77)

எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?

HOW AND WHERE SHALL I SERVE?

“சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 7:24)

இந்த ஓர் அதிகாரத்தில் அப்போஸ்தலன் விவாகம் குறித்தும், அதன் பொறுப்புகள் குறித்தும் கருத்துகள் தெரிவித்துள்ளார். அவர் அடிமைகள் குறித்தும், அவர்கள் நிலைமைக் குறித்தும்கூடக் கருத்துகள் தெரிவித்துள்ளார். “அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், விடுதலைப்பண்ணப்படும்படிக்கு நாடாதே” என்று கூறுகின்றார். இன்னுமாக ஒருவேளை அடிமைக்குச் சுதந்தரம் வருமானால், சுதந்தரவாளியென அதிகளவில் ஊழியம்புரிவதற்கான வாய்ப்பினைப் பயன்படுத்திடுவதில் அவன் மகிழ்ச்சிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அடிமையானவன் தன் எஜமானை நோக்கி: “நான் தேவனுடைய பிள்ளையாகியுள்ளேன்; ஆகையால் உம் கட்டுப்பாடுகள் எனக்குப் பொருட்டில்லை இனிமேலும் நீர் என்னை உமது அடிமையாக வைத்துக்கொள்ள முடியாது” என்று சொல்லிவிடக்கூடாது.

கர்த்தருடைய ஜனங்கள் தாங்கள் அழைக்கப்பட்ட நிலைமையினின்று உடனே மாற்றம் வேண்டுமென்றிருக்கக்கூடாது எனும் கருத்தினை அப்போஸ்தலன் கொடுத்துள்ளார். “நீங்கள் இப்பொழுது செய்துகொண்டிருப்பவைகளை விட்டு விலகிட வேண்டும் என்று நீங்கள் எண்ணங்கொள்ள வேண்டாம்” என்பது அவர் கருத்தாய் இருக்கின்றது. உங்கள் தொழில் நிலைமையானது ஒரு வேலைக்கார நிலைமையாகவோ அல்லது ஓர் அடிமை நிலைமையாகக் காணப்படலாம்; இதிலேயே நிலைத்திருங்கள் – மன அமைதியோடு அதில் காணப்படுங்கள். ஒருவேளை கர்த்தர் கதவைத் திறப்பாரானால், பின்னர் அதை நாடித்தேடுங்கள். ஒருவேளை உங்கள் நிலைமையானது மிகவும் கடுமையான நிலைமைகளின் கீழுள்ள ஒன்றாய் இருக்குமானால்… நிலைமையை இலகுவாக்கிட ஒருவேளை கர்த்தர் சித்தங்கொண்டால், தம்முடைய ஏற்றவேளையில் அதை இலகுவாக்கிடும்படியாகக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்வது சரியே. ஒவ்வொரு சோதனையிலும், நாம் அவைகளைத் தாங்கிக்கொள்ளத்தக்கதாகத் தப்பித்துக்கொள்ளும் போக்கினை அருளுவதாக அல்லது அவ்வகையில் காரியங்களை வழிநடத்திடுவார் என்பதாக அவர் நமக்கு வாக்களித்துள்ளார் (1 கொரிந்தியர் 10:13). இது நம்முடைய தொழில்- உறவினர்களுக்கும் – அனைத்திற்குமே பொருந்திடும்.

ஒருவன் விவாகமாகாதவனாய் இருப்பானானால், கூடுதல் பொறுப்பினை எடுத்துக்கொள்ளும் காரியத்தினை அவன் மிகவும் கவனமாய்ச் சிந்தித்துக்கொள்ள வேண்டும். “நான் விவாகமாகாதவனாய்க் காணப்பட்டபோது அழைக்கப்பட்டேன். நான் விவாகம்பண்ணிட கர்த்தர் விரும்புகின்றாரா?” என்று அவன் சிந்தித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை விவாகம்பண்ணிட கர்த்தர் விரும்புகின்றார் என்ற முடிவிற்கு அவன் வருவானானால், “கர்த்தருக்குள் மாத்திரமே” எனும் அப்போஸ்தலனுடைய கட்டளையினை அவன் நினைவில்கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை அவன் அழைக்கப்பட்டபோது அவன் விவாகமானவனாய் இருந்தால், அவன்: “நான் விவாகம்பண்ணாமல் இருந்தால் நலமாயிருந்திருக்கும். ஒருவேளை விவாகம்பண்ணாமல் இருந்திருப்பேனாகில், என்னால் மிக நன்றாயும், மிக அதிகமாயும் செய்திருக்கமுடியும்” என்று சொல்லக்கூடாது. அவன் அழைக்கப்பட்டபோது, அவன் விவாகமானவனாய் இருந்தான்; ஆகையால் அவனுடைய நேரம் ஓர் அடைமானத்தில் உள்ளது. இந்த அடைமானத்தினை அல்லது ஒப்பந்தத்தினை அவன் கருத்தில் எடுத்துக்கொள்ளவே வேண்டும்.
[R5498 : page 213]

திறந்திருக்கும் கதவுகள் வழியாய் உட்பிவேசியுங்கள்; ஆனால் கதவுகள் திறக்கும்படி பலவந்தம்பண்ணாதீர்கள்

எனினும் ஒருவேளை அவிசுவாசியான கணவனோ மனைவியோ விட்டுப் பிரிந்துபோனால், அவர்கள் பிரிந்து போகட்டும் என்று இதே அதிகாரத்திலுள்ள முந்தைய வசனங்களில் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். அவர்கள் விட்டுப்பிரிந்துபோக மனதாய் இருந்தார்களானால் அவர்கள் அப்படிப் பிரிந்து போவதற்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று கூறுகின்றார். கர்த்தர் உங்கள் காரியங்களைப் பார்த்துக்கொள்வதற்கு வல்லவராய் இருக்கின்றார். மேலும் ஒருவேளை இதுதான் உங்களுக்கான கர்த்தருடைய ஏற்பாடாய் இருக்குமாயின் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நம்முடைய தொழிலைவிட்டுத் தொகுதி விநியோகிக்கும் வேலைக்கோ அல்லது பயண ஊழியர் வேலைக்கோ அல்லது புதிய சபை உருவாக்கும் வேலைக்கோ அல்லது வேறு ஏதோ வேலைக்கோ செல்லும் காரியமாக நாம் சிந்தித்துக்கொண்டிருக்கையில்… “கர்த்தர்தான் இக்கதவைத் திறந்துள்ளரா?” என்று நாம் சிந்தித்துக்கொள்வது சரியான காரியமாய் இருக்கும். ஒருவேளை இந்த விதத்தில் ஊழியத்திற்கான சிறந்த வாய்ப்பு நமக்கு வருகிறதையோ, அறுவடைக் களத்தில் ஊழியம்புரிவதற்கான பெரிய வாய்ப்பு நமக்கு வருகிறதையோ, கதவு திறந்திருப்பதையோ நாம் காண்போமானால், பின்னர் நாம் களிகூர்ந்து உட்பிரவேசித்திட வேண்டும்.

ஒருவேளை திறந்த கதவை நாம் காணவில்லையெனில், அத்தகைய ஊழியங்களுக்குள் பிரவேசிக்கத்தக்கதாகச் சரியான சில கொள்கைகளை மீறியே நாம் கதவைப் பலவந்தமாய்த் திறக்கிறவர்களாய் இருப்போம். நாம் கொள்கைகளுக்காக நின்றிட வேண்டும். கர்த்தருடைய ஊழியத்தில் இறங்கிடுவதற்காகச் சரியான கொள்கை எதையேனும், நாம் ஒருபோதும் எதிர்த்து மீறிடக்கூடாது; ஊழியஞ்செய்வதற்கு எப்போதுமே ஏதோ ஒரு வழியிருக்கும். அப்போஸ்தலன் இவ்வார்த்தைகளைச் சகோதரர்களுக்கே பேசுகின்றார் மற்றும் கனவீனமான தொழில்களில் காணப்படும் யார் ஒருவரையுங்குறித்து அவருடைய வார்த்தைகள் குறிப்பிடுவதில்லை.

அவமதிப்புக்குறிய தொழிலில் எந்தச் சகோதரனும் காணப்படக்கூடாது

சத்தியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு ஒரு மனுஷன் சூதாட்ட விடுதியை நடத்தினவராகவோ அல்லது அவமதிப்புக்குரிய ஏதேனும் தொழிலை நடத்தினவராகவோ இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்; மதுபான கடைக்காரராய் இருந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் [அநேகச் சகோதரர்கள் இந்தத் தொழிலிலிருந்து வந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்]. இவர் சத்தியத்தைப் பெற்றுக்கொண்ட பிற்பாடு, “இதோ நான் என்ன செய்துகொண்டு வருகிறேன்? மனுஷர்களுக்குப் பாதகமானதையா நான் அவர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றேன்? இதை நான் நிறுத்த வேண்டும்!” என்பான். ஆகையால் அவன் தேவனுடைய பிள்ளையாகுவதற்கு முன்பாக, மதுபான தொழிலிலிருந்து அவன் வெளியே வரவேண்டும்; தேவபிள்ளையாகுவதற்கு முன்னதாகவே, கொள்கைகளற்ற மனநிலையிலிருந்து அவன் வெளிவர வேண்டும். “சகோதரரே அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலேயே நிலைத்திருக்கக்கடவன்” எனும் அப்போஸ்தலனின் வார்த்தைகள் சகோதரர்களுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளாகும். தன் மனசாட்சிக்கு எதிரானதாகவும், தன் சக சிருஷ்டிக்குப் பாதகமானதுமாய்க் காணப்படும் தொழில் ஒன்றில் ஒருவன் காணப்படுகையில், அவன் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனாய் இரான்.

இந்தக் காரியங்கள் அனைத்தும் அப்போஸ்தலனின் நாட்களிலுள்ள வேலைக்காரர்கள் யாவருக்கும், ஆற்றல் மிக்கவைகளாக இருந்தன. அந்தக் காலங்களிலும் மற்றும் எல்லாக் காலங்களிலும் தாழ்மையுள்ள வகுப்பார், வேலைக்கார வகுப்பார், அடிமைகள் வகுப்பார் சுவிசேஷ செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாய் இருந்திருக்கின்றனர். ஐசுவரியவான் வகுப்பாரை நோக்கி, “ஐசுவரியவான்களே உங்களுக்கு ஐயோ!” என்று நமது கர்த்தர் கூறினார். மேலும் தரித்திரரை நோக்கி: “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்” என்று கூறினார். வெளிச்சத்திற்குள் வந்தவர்களில் ஞானிகள் அநேகரில்லை என்றும், ஐசுவரியவான்கள் அநேகர் இல்லையென்றும், பிரபுக்கள் அநேகர் இல்லையென்றும் நாம் காண்கின்றோம்.

கடுங்காவல் தண்டனை விடுதிகளில் சகோதர்கள்

கடுங்காவல் தண்டனை விடுதிகளில் கைதியாக இருப்பவன் தனக்குள்ளாக, “சிறைச்சாலையில் நான் இருக்கையில் தேவனுடைய வழிநடத்துதலின்படி இந்தச் சுவிசேஷ செய்தியானது என்னை வந்தடைந்துள்ளது. அநேகமாக நான் இங்கு வந்திருக்கவில்லையெனில் சத்தியத்தினை அடைந்திருக்கவே மாட்டேன்” என்று சொல்லுவான். ஒருவேளை இத்தகைய நிலைமையில் காணப்படும் ஒரு நபராக நாம் இருப்போமானால் விடுதலை வேண்டி மனுத்தாக்கல் கடிதத்தினை அனுப்பி வைத்துக் கதவுகளைத் திறப்பதற்கான பிரயாசங்களில் துரிதப்படுவதற்கு முன்னதாக, அத்தகைய மனுத்தாக்கலை ஆயத்தம்பண்ணுவதற்கு முன்பாக நன்கு சிந்தித்துப்பார்ப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். “சக கைதிகள் மத்தியில் கர்த்தருக்காய் ஊழியம்புரியும் வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கலாம். அவர்களுக்குப் பிரசங்கித்திடுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கலாம்” என்று நாம் எண்ணிட வேண்டும். அல்லது ஒருவேளை விடுதலைக்கான மனுத்தாக்கல் நம்மால் செய்யப்பட்டும், அந்த மனு நிராகரிக்கப்படும்போது, இந்த நிராகரிப்பை இது விஷயத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தையென்று நாம் தலை வணங்கிட வேண்டும். நாம் முழுமையாகத் திருப்தி கொண்டவர்களாகவும், முழுமையாக மகிழ்ச்சிக் கொண்டவர்களாகவும் இருக்க முயற்சித்து, “இருளிலிருந்து என்னைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்க நாடிடுவேன்” என்று சொல்லிட வேண்டும். யாருக்குத் தெரியும்? இந்நிலையில் காணப்படும் மனுஷன், வேறு இடங்களில் கிடைக்கப்பெறுவது போலவே, இங்கும் ஊழியம்புரிவதற்கான நல்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வான். தம் உண்மையுள்ளவர்கள் யாவருக்கும் கர்த்தர் சிறந்தவைகளையே கொடுத்தருளுவார்.