R5318 (page 291)
எபிரெயர் 12:1
“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.”
ஒதுக்கித்தள்ள வேண்டிய பாரங்களானது/சுமைகளானது ஒவ்வொரு நபர்களிடத்திலும் வித்தியாசப்படும். சுதந்தரித்துக்கொண்டுள்ள பட்டப்பெயர்களை, கனங்களை, ஸ்தானங்களை ஒருவர் பெற்றவராய்க் காணப்படலாம். இப்படியானவர்களில் ஒருவர் பரிசுத்தவனாகிய பவுல் ஆவார். அவர் ரோம குடிமகனாகப் பிறந்தவராவார்; இது அவருடைய நாட்களில் மிகவும் தனிச்சிறப்பியல்புள்ள கனமாகும். இந்தச் சிறப்புரிமையை இவர், கிறிஸ்தவ ஓட்டப்பந்தயத்திற்குள் நுழையும்போது ஒதுக்கித்தள்ளியவராய்க் காணப்பட்டார். அவரது ரோமக் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுவது என்பது சத்தியத்தின் காரியங்களுக்குப் பயனுள்ளதாய்க் காணப்பட்டதாலேயே, அதை அவர் குறிப்பிட்டவரானார். எனினும் அவர் ஒருபோதும் இரு நிலைகளை எடுத்துக்கொள்ள நாடவில்லை… அதாவது ஒரு பக்கத்தில் தானும் பயனடைந்து, உலகப்பிரகாரமானவர்களைத் திருப்திப்படுத்தியும் மற்றும் மற்ற நேரங்களில் கர்த்தருடைய ஜனங்களுடன் ஐக்கியம்கொண்டும் காணப்படவில்லை. அவர் ஒன்றையே செய்தார், அதை அவர் பின்வரும் வார்த்தைகள் மூலம் நமக்குத் தெரிவிக்கின்றார், அதென்னவெனில்: “சகோதரரே அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலிப்பியர் 3:13-14).
மற்றுமொரு பாரம் ஐசுவரியமாகும். அதிகம் பணம் உடைய ஒருவர் கர்த்தருடைய ஜனங்களின் கூடுகைகளில் கலந்துகொண்டிருக்கலாம், ஆனால் பெரிய வீடுகொண்டிருக்க வேண்டும், அநேக வேலைக்காரர்களைப் பெற்றிருக்க வேண்டும், உயர்மட்ட நிலையில் காணப்படும் மற்றவர்களைப்போன்று தானும் ஜீவிக்க வேண்டும் என்ற எண்ணங்களை மனதில் வைத்து வளர்த்துக்கொண்டிருப்பதன் காரணமாக அவர் ஓட்டத்தில் தடைப்பண்ணப்படலாம். இன்னொருவருக்கு ஏதோ ஒரு விதமான தாலந்து, சுமையாகக் காணப்படலாம். இன்னொருவருக்கு மனுஷனுடைய அங்கீகரிப்பு வேண்டும் என்பதான விருப்பம் முதலியவை சுமையாகக் காணப்படலாம்.
மகிமை மற்றும் நித்தியமான கனத்திற்கான ஓட்டத்தில் ஜெயங்கொள்வதற்கு விரும்புகிறவன், அனைத்துச் சுமைகளையும், இன்னுமாகச் சுமைகள் போன்றது என்று அவன் அடையாளங்காணும் மற்ற அனைத்தையும் தள்ளிவிட வேண்டும்; இல்லையேல் அவனால் நன்கு ஓட முடியாத அளவுக்கு மிகவும் ஊனமுற்றவனாகி / முட்டுக்கட்டைகள் உடையவனாகிப்போவான். சில ஓட்டப்பந்தய வீரர்கள் முற்றிலும் ஜெயங்கொண்டவர்களாகி, பரிசைப் பெற்றுக்கொள்வார்கள். சிலர் தப்பி, இரட்சிக்க மாத்திரமே படுவார்கள், காரணம் ஊனமாகும் / முட்டுக்கட்டையாகும் மற்றும் இவர்கள் தாழ்வான ஸ்தானங்களைப் பெற்றுக்கொள்பவர்களாகுவார்கள்.
இந்தப் பூமிக்குரிய உடைமைகளை, அதாவது இலட்சியங்கள், கனங்கள் முதலியவைகளை, தான் எவ்வளவாக மதித்தார் என்பதை பரிசுத்தவானாகிய பவுல் நமக்குக் கூறுகின்றார். அவர் இவைகளைக் கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய பரம அழைப்பின் பரிசுடன் ஒப்பிட்டு, மதிப்பிட்டார். பூமிக்குரிய இந்தக் கனங்களானது, அவரது கணிப்பில் குப்பையும், தூசியுமாய்க் காணப்பட்டது. ஆகையால் இவைகளை அவர் தூக்கி எறிந்துவிட்டார்.
பூமிக்குரிய காரியங்கள் மீதான தங்களது பற்றுதலைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்களைக் குறித்து கர்த்தர் கூறுவதாவது, “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாய் இருக்கிறது?” இந்த ஐசுவரியங்கள் என்பது பொன்னாய் மாத்திரம் இராமல், கனம், ஸ்தானம், அதிகாரம், மனுஷீக அங்கீகாரம் முதலியவைகளையும்கூட உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. இம்மாதிரியான விஷயங்கள் அனைத்தும், பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, நாம் அழைக்கப்பட்டதான ஓட்டத்திற்கு இடையூறாக இருக்கக்கூடியவைகள் ஆகும்.
முற்காலங்களிலுள்ள உண்மையான சாட்சிகளை நாம் திரும்பிப்பார்க்கையில், அவர்கள் தங்களோடு வெகு சொற்ப சுமைகளைச் சுமந்துகொண்டு சென்றுள்ளார்கள் என்பதாக நாம் காண்கின்றோம். அவர்கள் தங்கள் சுமைகளைத் தள்ளிவிட்டு, தங்களுக்கு முன்பாக ஓட்டத்தில் பொறுமையுடன் ஓடினவர்களாய் இருந்தார்கள்.
எனினும் அனைத்துச் சுமைகளும், முட்டுக்கட்டைகளும் தள்ளிவிடப்படக்கூடாது. மனைவியுடனும், பிள்ளைகளுடனும் இந்த ஓட்டத்திற்குள் பிரவேசிக்கும் ஒரு மனுஷன், இச்சுமைகளைத் தள்ளிவிடக்கூடாது. ஒருவேளை அவனது தோளில், அவன் ஒரு குழந்தையைப் பெற்றிருப்பானானால், அப்போது, அவன் அவர்களோடே ஓட வேண்டும். ஒருவேளை ஒருவன் இந்த ஓட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கு எண்ணிக்கொண்டிருக்கையில், அவன் திருமணமாகாதவனாக இருந்தால், அவன் தனது ஒவ்வொரு தோளிலும் எத்தனை குழந்தைகளைச் சுமக்க வேண்டும் அல்லது அவன் தனது தோள்களில் மனைவியைச் சுமக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பதை ஜாக்கிரதையாய்ச் சிந்தித்துக்கொள்ள வேண்டும். சிலர் மனைவியை உடையவர்களாய் இருப்பதன் காரணமாக இடையூறுக்குள்ளாகுகிறார்கள் மற்றும் இன்னும் சிலர் மனைவி இல்லாததன் காரணமாக இடையூறுக்குள்ளாகுகிறார்கள். அவரவர் தங்களுக்குச் சிறந்தது என்ன என்பதை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். விதிகள் போடுவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை.