R2345 (page 231)
“2 இராஜாக்கள் 4:25-37
இப்பொழுது நாம் இப்பாடத்தினுடைய ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்கு வருகின்றோம்… அதாவது சூனேமியாளையும், அவள் குமாரனையும் குறித்ததாகும் மற்றும் இந்நிகழ்வும்கூட மரித்தோரை உயிர்த்தெழுப்பிடும் மாபெரும் திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதத்தைக்குறித்த கருத்தைத் தெரிவிக்கிறதாய் இருக்கின்றது. இந்தச் சூனேமியாள் வேதவாக்கியங்களில் “”கனம்பொருந்திய”” ஒரு ஸ்திரீ என்று பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அவளும், அவளது கணவனும் ஜீவியத்தில் சௌகரியமான நிலைமையில் காணப்பட்டார்கள் என்பதாகத் தெரிகின்றது; அநேகமாகக் கனம் பொருந்தியவள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிற காரியம் கொஞ்சம் அவளது ஆஸ்தி தொடர்புடையது என்பது உறுதியே, எனினும் பதிவுகளில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது போன்று அவள் வேறு விஷயங்களிலும் மற்றச் சாதாரண ஸ்திரீகளைக் காட்டிலும் மேம்பட்டவளாக இருந்திருக்கிறாள் என்பதும் உறுதியே. பதிவுகள் சுட்டிக்காண்பிப்பது போன்று அறிவின் விஷயத்தில் அவள் தனது கணவனைக் காட்டிலும் மேம்பட்டவளாகக் காணப்பட்டிருந்திருக்க வேண்டும். நன்மையானவைகளை அடையாளங்கண்டு கொள்கிறதும், கர்த்தரையும், அவருக்குரியவர்களையும் பயபக்தியோடு மதிக்கிறதுமான கனம் பொருந்திய நிலைமையினை அவள் பெற்றிருந்தாள். தீர்க்கத்தரிசி அவள் வசிக்கும் இடத்தின் வழியாய் அடிக்கடி தீர்க்கத்தரிசிகளினுடைய பள்ளிகளுக்குக் கடந்து போவதை அவள் கண்டபோது, தங்களோடு அவர் இரவு உணவு எடுத்துக்கொள்ளுமாறு உபசரணையோடு வருந்தி அழைத்தாள். ஆகையால் அவ்வழியே கடந்துபோகும் ஒவ்வொரு முறையும் அவளது உபசரிப்பில் அவர் பங்கெடுத்தார். கர்த்தருடைய தீர்க்கத்தரிசியைக்குறித்து அதிகமதிகமாய் இந்தக் கனம்பொருந்திய ஸ்திரீ கண்டு உணர்ந்துகொண்டபோது, அவரைத் தன் வீட்டில் அழைத்துக்கொள்வதைத் தனக்கான சிலாக்கியமாக அதிகமதிகமாய் உணர்ந்துகொண்டவளாகி, அவள் தன் கணவனை நோக்கி: “”இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்”” (2 இராஜாக்கள்4:9-10). தன் மனைவியைக் காட்டிலும் இக்கணவன் மதத்திற்கடுத்த விஷயத்தில் சற்றுக் குறைவுபட்டவராக இருப்பினும், மற்றச் சில [R2346 : page 232] காரியங்களிலும் “”கனம்பொருந்திய”” நிலையில், குறைவுபட்டு இருப்பினும், மனைவிக்குரிய விதத்திலும், தகுதியான விதத்திலும் கேட்கப்பட்ட மரியாதையுடன் கூடிய அவளது இந்த வேண்டுகோளானது கணவனை இணங்கச் செய்தது மற்றும் அதை நிறைவேற்றவும் செய்தார். இந்த ஸ்திரீயின் “”கனம்பொருந்திய”” நிலைமையானது தன் சொந்தக் கணவனுடன் அவள் நடந்துகொண்ட விஷயத்தில் வெளிப்பட்டது என்று நாம் சொல்லலாம். ஒருவேளை கணவன் மற்றும் மனைவியாகிய இருவரில் மனைவி தன்னைக் கனம்பொருந்தியவளாக உணர்வாளானால்… இப்படிப்பட்ட ஸ்திரீகளில் எத்தனைபேர், திவ்விய நியமனத்தின்படி, குடும்பத்தின் தலைவனாய் இருக்கும் கணவனுடன் மதத்திற்கடுத்த வேலைகளிலும், அன்பு பாராட்டுகிற வேலையிலும் – கணவனிடம் அதிகாரத்துடன் கேட்டுக்கொள்வதற்குப் பதிலாக, அவருடன் கலந்து ஆலோசிப்பதும், ஒத்துழைப்புக் கொடுக்கும்படியாக அவரிடம் வேண்டிக்கொள்வதும் ஏற்றகாரியங்கள் என்பதை முற்றிலும் மறந்துபோய் விடுகின்றனர். தன்னடக்கம் மற்றும் தாழ்மை என்பவைகளே புருஷன் மற்றும் ஸ்திரீயாகிய இருவரிலும் கனம்பொருந்திய நிலைமை, காணப்படுவதற்கான உண்மையான அடையாளங்களாகும்.
அந்தக் காலங்களில் தங்குவதற்கான விடுதிகளும், தங்குவதற்கான இல்லங்களும், உணவகங்களுமாகிய ஏற்பாடுகள் காணப்படவில்லை மற்றும் இதனால் இன்றைய நாட்களைக் காட்டிலும் அப்போது விருந்தோம்பலானது அதிகமாய் நடைமுறையில் இருந்தது. பழக்க வழக்கங்களினுடைய மாற்றங்களின் காரணமாய்ச் சில விஷயங்களில் நாம் அதிக இழப்பிற்குள்ளாகியுள்ளோம்; ஏனெனில் விருந்தோம்பலின் ஆவியானது முற்காலங்களைக் காட்டிலும் இப்பொழுது மிகவும் குறைவுபட்டுள்ளது. ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் கூடுமானமட்டும் ஒருவேளை அவர்களது வாய்ப்புகள் அனுமதிக்கும் பட்சத்தில் தங்கள் வழியே கடந்துபோய் வரும் கர்த்தருடைய ஊழியக்காரர்களை உபசரிப்பதற்கென வீட்டில் ஓர் அறையை ஒதுக்கி வைத்துக்கொள்வது நலமாய் இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். கர்த்தருடைய ஊழியக்காரர்களையும், பொதுவாய் விசுவாச வீட்டாரையும் வாய்ப்புக்கிடைப்பதற்கு ஏற்ப உபசரிப்பதில், இரக்கத்தின், அன்பின், அன்புடன்கூடிய தயவின் இந்த ஆவியினை வளர்த்தி, விருத்தியாக்கிட நாடிடும் அனைவருக்கும் பூலோக வகையாக இல்லையென்றாலும், ஆவிக்குரிய வகையான ஓர் ஆசீர்வாதம் கடந்துவருமென்று நாங்கள் நம்புகின்றோம்.