R940 – இவைகளுக்கும் அதிகமாகவா?

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R940 (page 3)

இவைகளுக்கும் அதிகமாகவா?

MORE THAN THESE?

““என்னால் என்ன செய்யமுடியும்? என்னுடைய ஜீவியம் மிகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாய் இருக்கின்றது; மேலும் சத்தியத்திற்காய்ச் சாட்சிபகர்வதற்கும், அவருடைய மந்தைக்குப் போஷிப்பதில் ஆண்டவருக்கும், அவரது வார்த்தைக்கும் பாடுபடுவதற்குமான எனது வாய்ப்புகள் மிகவும் குறைவாய் இருக்கின்றபடியினால் பலி செலுத்துகிறவர்களில் ஒருவனாக நான் இல்லவே இல்லையென்று அஞ்சுகின்றேன். இப்படியாக இருக்குமோ?”” என்று சிலர் கேட்கலாம். அன்புக்குரிய சகோதரரே உங்கள் சூழ்நிலை என்னவென்று எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று நாங்கள் கேட்கின்றோம். நீங்கள் பின்வருமாறு: “”நான் ஒரு சுரங்கத் தொழிலாளி; என் குடும்பத்தில் நான் மாத்திரம் வேலை செய்கின்றேன்; ஞாயிற்றுக்கிழமைகளையும் மற்றும் சாயங்கால வேளைகளையும் [R943 : page 4] மாத்திரமே ஓய்வாக நான் பெற்றிருக்கின்றேன்; என்னுடைய அயலார்கள் அறியாமையில் காணப்படுகிறவர்களாகவும், அஞ்ஞானிகளாகவும் காணப்படுகின்றனர்”” என்று கூறுகின்றீர்கள். எங்கள் பதில் பின்வருமாறு: “”சரி, நீங்கள் பெற்றிருப்பதான வாய்ப்புகளைப் பயன்படுத்துவதின் மூலம் துவங்குங்கள்; போகப்போக பிரயோஜனத்திற்கேதுவான பெரிய மற்றும் அகலமான கதவுகளை உங்கள் முன்னே திறப்பார் என்று தேவனிடத்தில் விசுவாசங்கொள்ளுங்கள். முதலாவதாக மகா சந்தோஷத்தின் நற்செய்தியைக்குறித்து நீங்களே சிந்தித்துப்பாருங்கள்; அது உங்கள் சொந்த இருதயத்தில் நிரம்பி, பொங்கி வழிந்தோடுவதாக. பிற்பாடு நீங்கள் பெற்றிருப்பதான சமாதானமும், சந்தோஷமும் உங்களது சக மனிதர்களுக்கு எத்தகைய நன்மைகளைச் செய்திடும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். அது அவர்களுக்கு எவ்வளவு தேவை என்றும், அது அவர்களது ஜீவியங்களின் எதிர்காலத்தினை எத்தனை இலகுவாக்கிடும் மற்றும் இன்பமாக்கிடும் என்றும் சிந்தித்துப்பாருங்கள். பாவத்திற்காகக் கொடுக்கப்பட்ட மாபெரும் ஈடுபலி விலைக்கிரயம் குறித்தும், ஏற்படுத்தப்பட்ட முழுப்பாவ நிவாரணம்குறித்தும், அதைப் பின்தொடரும் பிரம்மாண்டமான பின்விளைவுகள்குறித்தும், தேவனுடைய தூதுவர்களென உங்களது அயலார்களிடம் சொல்வதற்கும், இக்காரியங்களைக்குறித்து ஆராயவும், ஏற்றுக்கொள்ளவும் மற்றும் தேவனோடு ஒப்புரவாகவும் நீங்கள் வலியுறுத்திடுவதற்குமான சிலாக்கியம்குறித்துச் சிந்தித்துப்பாருங்கள். பின்னர் தேவன் உங்களுக்குக் கொடுத்துள்ளதான சிலாக்கியத்தினைப் பயன்படுத்திடுவதற்கான ஞானத்திற்காகத் தேவனிடம் ஜெபம்பண்ணிடுங்கள். இத்தருணத்தில் தேவனுடைய பிரதிநிதியென உங்கள் வேலையில் உங்கள் இருதயமானது அன்பினாலும், அனலினாலும், வைராக்கியத்தினாலும் முழுக்க நிறைந்திருக்கும்; மேலும் பயமும், வெட்கமும் உங்கள் இருதயத்திலிருந்து வெளியேறிடும். படிப்படியாக வேத ஆராய்ச்சியின்மூலமாகவும், கவனமாய் இருப்பதின்மூலமாகவும் சத்தியத்தை முன்வைத்திடும் விஷயத்தில் நீங்கள் சர்ப்பத்தைப்போல வினா உள்ளவர்களாகவும், புறாவைப்போலக் கபடற்றவர்களாகவும் இருப்பதற்குக் கற்றுக்கொள்வீர்கள்; உங்கள் ஊழியமானது அங்கீகரிக்கதாய்க் காணப்படுகின்றது என்பதற்கான நிரூபணத்தைச் சீக்கிரத்தில் உங்கள் ஊழியத்தினால் உண்டாகும் பலன்களில் கண்டுகொள்வீர்கள். சிலர் சுவாரசியமடைந்து நீங்கள் கூறுவதை மகிழ்ச்சியோடு கேட்பார்கள்; ஆனால் அநேகர் உங்களை நிந்தித்துச் சத்தியத்தின் நிமித்தமாக உங்களுக்கு எதிராய்ப் பல்வேறு விதங்களில் தீமையாய்ப் பேசிடுவார்கள்; ஏனெனில் உலகம் அவரை அறியாததுபோல உங்களையும் அறிந்திடாது (1 யோவான் 3:1). உங்களது உண்மைக்கான இந்தச் சாட்சிகளுக்காகவும், வாக்களிக்கப்பட்ட இந்தத் தற்காலத்துப் பலன்களுக்காகவும் களிகூர்ந்து சந்தோஷப்பட்டு மகிழுங்கள்; ஏனெனில் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும். தகுதியற்ற நேரத்தில் ஞானமற்ற விதமாய் உங்கள் செய்தியைக்கொண்டு திணிக்காதீர்கள், சாதுரியமில்லாமல் கடுமையாய்ப் பேசிடாதீர்கள், கடினமான வார்த்தைகளில் பேசிடாதீர்கள். மாறாக உங்கள் வார்த்தைகள் கிருபையினால் சாரமேறின ஞானமான வார்த்தைகளாய் இருப்பதாக.””

ஒருவேளை பெரிய குடும்பத்தைப் பெற்ற நிலையிலும் வறுமையான சூழ்நிலைமையிலும் காணப்படும் தாயானவள் பின்வருமாறு கேட்கலாம்: “”என்னால் என்ன செய்யமுடியும்? கர்த்தருடைய ஊழியத்தில் பலி செலுத்துகிறதற்கான எந்த வாய்ப்பினையும் என்னால் காணமுடியவில்லை. என்னுடைய இல்லத்தையும், பிள்ளைகளையும் – அதாவது அவர்களது ஒழுக்கத் தேவைகளையும், சரீரத் தேவைகளையும் பராமரிப்பதிலேயே என்னுடைய முழு நேரமும் போய்விடுகின்றது”” என்று சொல்லலாம். ஆ! சகோதரியே எப்படி நீங்கள் பலி செலுத்துகின்றீர்கள் மற்றும் யாருக்காகப் பலி செலுத்துகிறீர்கள் என்பது பெரிதும் முக்கியத்துவமானது ஆகும். பலி செலுத்துதல் என்றால் என்ன என்பது குறித்துப் பெரும்பான்மையான தாய்மார்கள் நன்கு அறிவார்கள். ஒரு குடும்பத்தை முறையாய் வளர்த்துவது என்பது எவ்வளவுக்குச் சுயத்தைப் பலி செலுத்துதலை உள்ளடக்கும் என்பதை ஒவ்வொரு நல்லத் தாயும் அறிவாள். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தையும், சௌகரியத்தையும், உங்கள் நேரத்தையும், இரவும் பகலுமாகச் சுகவாழ்க்கைகளையும் பலி செலுத்துகின்றீர்கள். இப்படியாகவே அர்ப்பணம்பண்ணின அல்லது அர்ப்பணம்பண்ணாத அனைத்து நல்லத் தாய்மார்களும் காணப்படுவார்கள். ஆனால் பின்வரும் வித்தியாசம் ஒன்று இருக்கின்றது: பெரும்பான்மையானவர்கள் இப்படியாகப் பெருமை மற்றும் சுயநலமான நோக்கத்தின் நிமித்தம், தங்களுடைய பிள்ளைகளுடைய கனம், மற்றும் ஆடம்பரத்தில் கனமடைவதற்கான ஆசையில் செய்கிறவர்களாக மாத்திரம் காணப்படுகின்றனர். ஆனால் அர்ப்பணிக்கப்பட்ட தாயானவளோ காரியத்தினைப் பின்வருமாறு சிந்தித்திட வேண்டும்: “”நான் என்னையும், என் குடும்பத்தையும் தற்காலத்திலும், எதிர்காலத்திலும் தேவனுக்காகக் கொடுத்திருக்கின்றேன்; அவருடைய மகிமைக்காக என்னுடைய கணிப்பின்படி இந்த அநேகமான தாலந்துகளைப் பயன்படுத்துகிறதற்காகவும், செயல்படுத்திடுவதற்காகவும் ஒரு பொறுப்பினை அவர் என்னிடத்தில் கொடுத்திருக்கின்றார்; என் பிள்ளைகள்மீதே என் முதலாம் பொறுப்புக் காணப்படுகின்றது என்று அவரது வார்த்தைகள் எனக்குத் தெளிவாய்ப் போதிக்கின்றது: மேலும் பிள்ளைகளுடைய மற்றும் சமுதாயத்துடைய பிரயோஜனத்திற்காக பிள்ளைகளை என்னால் முயன்றமட்டும் நான் பயிற்றுவிப்பது தேவனுடைய சித்தமாக இருக்கின்றது”” என்பதேயாகும். தேவனுக்கு ஏறெடுக்கப்படும் உங்களது பலியினுடைய இப்பாகமானது – அர்ப்பணிப்பு அல்ல, எனினும் உங்கள் விஷயத்தில் அது நீங்கள் உங்கள் தாலந்துகளைக் கர்த்தருக்கு உண்மையில் பலிசெலுத்தினதாகவும், இதை நீங்கள் அவருக்கே நேரடியாய்ச் செய்தது போலவும் இருக்கும். இது நீங்கள் வெளியே புறப்பட்டுச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் செல்கையில் உங்கள் சிறுபிள்ளைகளைக் களைகள்போன்று வளரவிடுவதைக் காட்டிலும் கர்த்தருக்கு மிகவும் அங்கீகரிக்கத்தக்கதாய் இருக்கும்.

ஒருவேளை உங்கள் பிள்ளைகளுக்காய் நீங்கள் செய்யும் அனைத்திற்குமான பின்னணியில் சுயநலத்துடன்கூடிய பெருமையிராமல், அர்ப்பணிப்பின் ஆவிதான் காணப்படுமானால் பின்வருமாறு காரியங்கள் காணப்படும்: அவர்களது மேலான நன்மைக்கடுத்த விஷயங்களில் நீங்கள் அக்கறையும், கவனமும் கொண்டிருக்கும்போது உங்கள் விஷயத்தில் இருப்பதுபோலவே உங்களது பிள்ளைகளுடைய வஸ்திரங்கள் முதலானவைகள் விஷயத்திலும், பெருமையைத் திருப்தி செய்வதற்குரிய உரிமை உங்களுக்கு இல்லை என்று நீங்கள் நினைவில்கொள்வீர்கள்; உங்கள் பிள்ளைகளைச் சுத்தமாக நீங்கள் வைத்திருப்பினும், உங்களது அயலாரில் சிலர் பெருமையினாலும், ஆடம்பரத்தினாலும் தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதுபோன்று உங்கள் பிள்ளைகள் ஆடம்பரமாய் வஸ்திரம் அணியாதவர்களாகக் காணப்பட வேண்டும் என்றும் நீங்கள் நினைவில்கொள்வீர்கள். உங்கள் விஷயத்திலும் சரி, உங்கள் பிள்ளைகள் விஷயத்திலும் சரி வஸ்திரங்களுடைய காரியங்களில் கர்த்தருடைய பணத்தையும், நேரத்தையும் சிக்கனப்படுத்திக்கொள்ள நாடுவீர்கள்; மேலும் உங்களுடைய அர்ப்பணிப்பானது உங்களை வழிநடத்திடுவதுபோன்று உங்கள் பிள்ளைகளும் இவைகளையெல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இயல்பாகவே எப்போதும் விரும்பமாட்டீர்கள். நீங்கள் பின்வருமாறு: “”இவை கர்த்தருடைய நேரமாகவும், பணமாகவும் இருக்கின்றது; அது வீணடிக்கப்படக்கூடாது. என் பிள்ளைகளை நான் பராமரிக்கும்படிக்கு அவர் விரும்புகின்றார்; மாறாக அவர்களை அறிவற்றவர்களாக்கிடக்கூடாது; அவர்களில் பெருமையினை விதைத்திடக்கூடாது. அவர்களது பண்புகளைக் கெடுத்தும், தற்காலத்திலும்சரி, எதிர்காலத்திலும்சரி மெய்யான சந்தோஷத்தை அனுபவிப்பதற்கும், பிரயோஜனம் உள்ளவர்களாகக் காணப்படுவதற்கும் தகுதியற்றவர்களாக்கிடவும் கூடாது”” என்று [R943 : page 5] உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்வீர்கள். இப்படியாக அனைத்தையும் கர்த்தருக்குச் செய்வதுபோல் செய்கையில் சத்தியத்திற்கு மிகவும் நேரடியாய் ஊழியம் செய்வதற்குப் பயனாகும் விதத்தில் நேரம் முதலானவைகளை உங்களால் மிச்சப்படுத்த முடிகிறதைக்குறித்துச் சீக்கிரத்தில் கண்டுகொள்வீர்கள்; உங்களால் சிந்திக்கும் அயலானிடம் பேசுவதற்கு அல்லது நண்பருக்குச் செய்தி எழுதிடுவதற்கு, கிருபை பொருந்தின வார்த்தைகளுள்ள கட்டுரைகளைக் கொடுப்பதற்கு அல்லது அனுப்பிவைப்பதற்கு நேரமும், விருப்பமும் உடையவர்களாக உங்களைக் கண்டுகொள்வீர்கள். இப்படியாகத் திரளான ஜனங்களுக்குப் பொதுவில் பிரசங்கிப்பதற்கென ஒவ்வொரு நாளையும் செலவிடும் ஒரு நபர்போலவே, உங்கள் ஜீவியமும் உண்மையாய் அர்ப்பணிக்கப்பட்டதாகவும், கிறிஸ்துவுக்குள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் காணப்படும். ஆகையால் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் நாம் வைக்கப்பட்டாலும் – நாம் பெற்றிருப்பதான வாய்ப்புகளை, ஆண்டவருக்கு மகிமை சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், மிகவும் பிரயோஜனமாய்க் காணப்படும் என்ற நமது சிறந்த கணிப்புகளின் அடிப்படையில் பயன்படுத்துவோமானால், நம் காரியம் – மாபெரும் வாய்ப்புகளைப் பெற்றிருப்பவர்களின் உண்மைதன்மையையும், மாபெரும் விளைவுகளையும் ஆண்டவர் அங்கீகரிப்பது போலவே, அங்கீகரிக்கப்படும். உண்மையுள்ள ஒவ்வொருவனும் தன் வாய்ப்புகளையும், ஊழியங்களையும் பெருக்கிக்கொள்ள முடிகிறவனாய் இருப்பான் மற்றும் இப்படியாகத் தன் சந்தோஷங்களையும் பெருக்கிக்கொள்வான் (1 கொரிந்தியர் 7:20-22).