R4090 – கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R4090 (page 345)

கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்

SPEAK, LORD, FOR THY SERVANT HEARETH

1 சாமுயேல் 3:6-14

தீர்க்கத்தரிசியாகிய சாமுயேல் பழைய ஏற்பாட்டின் காலங்களில் காணப்பட்ட அருமையான, வலுவான கதாபாத்திரங்களில் ஒருவர் ஆவார். சிறுவயது முதலே கர்த்தருக்காக இவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பும், கீழ்ப்படிதலும், சோர்ந்துபோகாமல் நற்கிரியைச் செய்ததும், கிறிஸ்தவ வாலிபர்களுக்கு மாத்திரமல்லாமல், பெரியவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்கூட அருமையான பாடங்களைக் கொண்டிருக்கின்றது. ரூத்தினுடைய வாழ்க்கை பதிவானது இஸ்ரயேலர்களின் அக்காலத்தினுடைய வாழ்க்கையின் கணநேர கண்ணோட்டத்தினைப் போர் மற்றும் பிரச்சனைகள் குறித்த பதிவுகளுக்கிடையே நமக்குக் கொடுத்திடுவது போன்றே, சாமுயேலின் வாழ்க்கையும் காணப்படுகின்றது. கர்த்தருக்கு ஏற்கெனவே அர்ப்பணிக்கப்பட்டவர்களும், அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுமான லேவி கோத்திரத்தினைச் சாமுயேல் சார்ந்தவராவார். இவரின் பெற்றோர்களுடைய ஆழமான பக்திக் குறித்த காரியங்களானது அப்புத்தகத்தினுடைய முதலாம் அதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்த்தருக்கான பயபக்தி மற்றும் ஜெபங்களின் இத்தகைய சூழ்நிலைமைகளின் கீழ்ப்பிறந்த ஒரு குழந்தையானது, இயற்கை சட்டங்களின்படி உயர் மனமும், பக்தி நாட்டமும் இல்லாமல் இருக்க முடியாது. இக்கருத்தினைப் பெற்றோர்களாகிடும் கிறிஸ்தவர்கள் அனைவரிடத்திலும் – கருத்தரித்தலின் தருணம் முதற்கொண்டு அவர்களது பிள்ளைகள் கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்படத்தக்கதாக மனதில் பதிய வைத்திட நாங்கள் விரும்புகின்றோம்; மேலும் கர்ப்பக்காலத்தின்போதான செல்வாக்குகள் அனைத்தும் குழந்தையினுடைய உயர் மனநிலைக்கடுத்த, ஒழுக்க நிலைக்கடுத்த மற்றும் சரீர நிலைக்கடுத்த நலன்களுக்குச் சாதகமாய் இருக்கத்தக்கதாகப் பிரயாசம் எடுக்கப்படுவதாக மற்றும் தினந்தோறும் ஜெபம் ஏறெடுக்கப்படுவதாக. “அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ” என்று தீர்க்கத்தரிசி கேள்வி எழுப்பி, “ஒருவனுமில்லை” என்று அவரே பதிலளிக்கின்றார். ஆகையால் பரிசுத்தவான்களுடைய பிள்ளைகள்கூட முழுக்கப் புரணமாய்ப் பிறப்பார்கள் என்று நமது எதிர்ப்பார்ப்புக் காணப்படக்கூடாது; மாறாக கர்த்தர் இருதயத்தை, நோக்கத்தை, சித்தத்தை ஏற்றுக்கொள்கின்றார் என்றும், அவர் சுபாவத்தினை ஒழுங்குப்பண்ணியிருக்கும் முறைப்படி, பெற்றோர்களின் மனம், நோக்கம், சித்தமானது, அவர்களது குழந்தைகளில் வெளிப்படுகின்றதாயிருக்கும் என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். உண்மைதான் அபூரண மனதினால் பூரணமானவைகளைக் கிரகிக்கவோ அல்லது கற்பனைப்பண்ணிப் பார்க்கவோ முடியாது; ஆனால் அபூரண மனதினால் அவற்றிற்குக் கிட்டத்தட்ட ஒத்திருக்கப்பண்ண முடியும் மற்றும் தான் ஒத்திருக்கும் அளவிற்கேற்ப, ஒத்திருக்கும் அக்குணலட்சணங்களைப் பெற்றோர்கள் குழந்தையிலும் பதியபண்ணிட முடியும்.

அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கும் பெற்றோர்கள்

“இரத்தம் சொல்லிடும்”… எனும் ஒரு பழங்கால முதுமொழி உண்டு … அதென்னவெனில் கலாச்சாரமும், நல் இனப்பெருக்கமும் குழந்தையின்மூலம் கண்டுபிடிக்கப்படலாம் என்பதேயாகும். குணலட்சணம் காண்பித்துக்கொடுக்கும் என்பது நிச்சயமாய் உண்மையே. கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம்பண்ணியுள்ளவர்களாகவும், திவ்விய சித்தத்தை அறிய தினந்தோறும் நாடுகிறவர்களாகவும், அதன்படி செய்கிறவர்களாகவும், கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் பரிசுத்த ஆவியினுடைய அறிவுரையின்கீழ்க் காணப்படுபவர்களாகவும், கிருபையிலும், சத்திய அறிவிலும் கொஞ்சம் வளர்ந்தவர்களாகவும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினால் மனங்களை மறுரூபமடையப் பெற்றவர்களாகவும், தங்கள் நாட்டங்களைப் பரத்திற்கடுத்தவைகள்மீது வைத்தவர்களாகவும் காணப்படும் கிறிஸ்தவர்கள், தங்கள் சொந்த இருதயத்தின் ஆவிக்குரிய பண்புகளை, தங்கள் பிள்ளைகளிடத்தில் (கர்ப்பக்காலத்தில்) நிச்சயமாய்ப் பதியபண்ணிடுவார்கள். கரு தரிக்கப்பட்டது முதற்கொண்டு கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாகவும், நற்பிறப்புள்ளவர்களாகவும் காணப்படும் இப்பிள்ளைகள், நிச்சயமாய்க் குழந்தைப் பருவத்தில் அதே பெற்றோர்களினால், கர்த்தருடைய வழிகளிலும், நீதி, நியாயம், சத்தியம் மற்றும் அன்பின் வழிகளிலும் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

இப்படியாகப் பெற்றெடுக்கப்பட்டு, இப்படியாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் பிற்காலங்களில் கர்த்தருடைய வழியிலிருந்து விலகுவதோ அல்லது சோதனையினால் தற்காலிகமாகத் தவறாய் வழிநடத்தப்பட்ட போதிலும், அவர்கள் நிரந்தரமாகவே மீறுதல்காரர்களாய் இருந்துவிடுவதோ சாத்தியமற்ற காரியங்களாகவே இருக்கும்.

கர்த்தர் தம்முடைய ஜனங்களானவர்கள் அவிசுவாசிகளுடனே அந்நிய நுகத்தில் பிணைக்கப்படக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தபோதிலும், இவர்கள் கர்த்தருடன் உடன்படிக்கைப் பண்ணிடுவதற்கு முன்னதாகவே திருமணம்பண்ணினவர்களாய் இருப்பார்களானால், இவர்களது திருமணத்தின் பலனாகிய இவர்களது பிள்ளைகளானவர்கள், அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோர் வாயிலாகக் கர்த்தருடையவர்களெனக் கருதப்படுவதற்குக் கர்த்தர் ஏற்பாடுபண்ணியுள்ளார்; மேலும் பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் அவிசுவாசியாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாது, கர்த்தருடைய ஆசீர்வாதமானது அர்ப்பணிக்கப்பட்ட குழந்தையின்மீது காணப்படும். இதை 1 கொரிந்தியர் 7:14-ஆம் வசனத்தில் அப்போஸ்தலன் தெளிவாய்த் தெரிவித்துள்ளார்.

[R4090 : page 346]

குடும்ப உறவு என்பது கனவீனமானது அல்லது பாவக்கரமானது என்று எண்ணம்கொள்வது கடுமையான தவறாகும் மற்றும் இதில் கிறிஸ்தவர்கள் சிலர் வீழ்ந்துமுள்ளனர்; இன்னுமாக ” ஆதிபாவமானது” இவ்வகையாகத் தான் இருந்தது என்றுகூடச் சிலர் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். வேதவாக்கியங்களோ இதற்கு முற்றிலும் நேர்மாறாக, “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக” (எபிரெயர் 13:4) என்று தெரிவிக்கின்றது. மேலும் இனப்பெருக்கத்திற்கான திவ்விய திட்டமும், பலுகிபெருகி பூமியை நிரப்புவதற்குமான கட்டளையும், பாவம் உலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாகவே – ஏதேனில் கீழ்ப்படியாமைச் சம்பவிப்பதற்கு முன்னதாகவே ஏற்பாடுபண்ணப்பட்டிருந்தது, கட்டளையிடப்பட்டிருந்தது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். “விவாகம்பண்ண” தடைப்பண்ணுகிறவர்களை அப்போஸ்தலன் கடுமையாய்க் கடிந்துகொண்டு, தீமோத்தேயுவுக்கு அவர் எழுதின நிருபத்தில் “ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்கமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்” (1 தீமோத்தேயு 5:14) என்று தெளிவாய்க் கூறுகின்றார்.

[R4091 : page 346]

இது “விவாகம்பண்ணுகிறவனும் நன்மை செய்கிறான்; விவாகம்பண்ணாதிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்” என்று அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 7-ஆம் அதிகாரத்தில் பேசியுள்ளவைகளுக்கும் முரண்படுகிறதில்லை. தீமோத்தேயுவுக்கு அவர் நிருபம் எழுதுகையில், அவர் சபையிலுள்ள இளைஞர்களைக்குறித்துப் பேசியுள்ளார்; கொரிந்தியருக்கான அவரது அறிவுரையானது, சபையில் கர்த்தருக்கென்று தங்களை முழுமையாய் அர்ப்பணம்பண்ணியுள்ளவர்களாகவும், பரிசிற்காக இலக்கை நோக்கி ஓட்டப்பந்தயத்தில் ஓடிடுவதற்கு நாடுகின்றவர்களாகவும் காணப்படும் இத்தகைய அங்கத்தினர்களுக்கு உரைக்கப்பட்டதாகும். இது விஷயத்தில் மற்றவர்களுக்கான நம்முடைய அறிவுரையானது, பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அப்போஸ்தலன் எழுதியுள்ள இந்த வார்த்தைகளின் அடிப்படையில் மாத்திரமே காணப்படும். விவாகம்பண்ணாதிருப்பதற்கான அறிவுரையானது – கர்த்தருக்குத் தங்களை முழுமையாய் அர்ப்பணம்பண்ணியுள்ளவர்களாகவும், பூமிக்குரிய கடமைகளற்று இருந்தால் மற்றும் இருதயம் பங்குபோடப்படாமல் இருந்தால் தங்களால் அதிகமாய்க் கர்த்தருடைய ஊழியங்களில் ஆற்றிடமுடியும் என்று காண்கின்றவர்களாகவும் இருப்பவர்களுக்குப் பொதுவாய் உதவிகரமாய் இருக்கும். ஆனால் புதுச்சிருஷ்டிகள் அல்லாத மற்றவர்களுக்கோ, அவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், நற்குணசாலிகளாகவும் இருப்பினும், அவர்களுக்கு திவ்விய ஏற்பாட்டின்படி விவாகம்பண்ணுதல் என்பது ஜீவியத்தில் நியாயமான மற்றும் தகுதியான காரியமாயிருக்கும்; இதற்குத் தடைப்பண்ணப்படக்கூடாது; கூடுமான மட்டும் ஞானமாய் அறிவுறுத்தப்பட வேண்டும்.

நம்முடைய பிள்ளைகளை அர்ப்பணித்தல்

சாமுயேலினுடைய அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோர்கள், ஒரு குமாரனுக்காக அவர்களால் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தின் காரியத்திற்கும் மற்றும் தற்காலத்திலுள்ள அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களின் முறையான ஜெபத்தின் காரியத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தினை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். பெந்தெகொஸ்தே முதற்கொண்டுதான் கர்த்தருடைய ஜனங்கள் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டு, “கிறிஸ்து இயேசுவில் புதுச்சிருஷ்டிகளாகிடுவதற்குரிய” சிலாக்கியம் பெற்றிருக்கின்றனர்; மேலும் இவர்கள் சுபாவத்தின்படியானவர்களைப் பார்க்கிலும் ஆவிக்குரியவற்றை நாடுகிறவர்களாகவும், இதற்காகவே ஜெபிக்கிறவர்களாகவும் மற்றும் இதைத் தங்கள் ஆண்டவர் செய்வதுபோன்று தங்கள் ஜீவியங்களைச் செலவழிப்பதன் மூலமும், முதலாம் ஆதாமின் பிள்ளையாகிய தங்களைத் தேவனுடைய ஆவிக்குரிய பிள்ளையாக மறுரூபமாக்கிட நாடுவதன் மூலமும் செய்கின்றனர். இந்த ஒரு கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், மேலும் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்களிடத்தில் பேசுகையிலுமே, “விவாகம்பண்ணாதிருக்கிறவன் நன்மை செய்கிறான்” – ஏனெனில் பொதுவாய்ப் பேசுகையில் விவாகம்பண்ணாதிருக்கும் நிலைமையானது தன் புதிய இலட்சியங்களுக்கு மிகவும் சாதகமாய் இருப்பதைக் கண்டுகொள்வான் என்று அப்போஸ்தலன் கூறுகின்றார்.

ஜெபம் மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகப் பிறந்த சாமுயேல் சந்தேகத்திற்கிடமின்றி குறிப்பிடத்தக்க சிறுவனாய்க் காணப்பட்டார்; மேலும் சாமுயேல் சிறுவயதிலேயே சீலோவிலுள்ள பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்பட்டு, கர்த்தருடைய ஊழியத்திற்கு முறையாய் ஒப்புக்கொடுக்கப்பட்ட காரியத்திலிருந்து… அவரது பெற்றோர்கள் தங்கள் ஜெபத்திற்கு / பொருத்தனைக்கு உண்மையாய் இருந்தது தெரிகின்றது. பால் மறந்தப்பின் கொண்டுவிடப்பட்டார் என்று நாம் வாசிக்கின்றோம்; ஆனால் அவர் தாயிடமிருந்து பால்குடிப்பதை நிறுத்தினபோது கைக்குழந்தையாக இருக்கையில் கொண்டுவிடப்பட்டார் என்று நாம் எண்ணிடக்கூடாது; மாறாக அவ்வார்த்தையினைப் பரந்த பார்வையில் பார்த்திட வேண்டும் . . . தாயினுடைய பராமரிப்புத் தேவைப்படாமல் பிள்ளையே தன்னைப் பார்த்துக்கொள்ள முடிகிற விதத்தில் பிள்ளைப் பால்மறந்தது என்னும் விதத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்; அநேகமாக பத்துமுதல் பன்னிரண்டு வயது இருக்கும்.

பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகக் காணப்படும் கிறிஸ்தவ பெற்றோர்கள், சாமுயேலின் பெற்றோரை இயக்கின இந்த ஆவியினை அதிகம் வெளிப்படுத்தாதவர்களாய் இருப்பதைக் காண்கையில் நாங்கள் அடிக்கடி ஆச்சரியமடைகின்றோம். அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களாகத் தோற்றமளிக்கும் அநேகர் தங்கள் விலையேறப்பெற்ற சொத்தாகிய தங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குக் கொடுக்காமல் வைத்துக்கொள்கின்றனர்; மேலும் பிள்ளைகளை ஜீவியத்தில் ஏதோ ஓர் உலகப்பிரகாரமான அழைப்பிற்கென்று – மருத்துவம், சட்டப்படிப்பு, தொழில்துறைக்கு என்று அர்ப்பணிக்கவும் விரும்புகின்றனர். இவர்களது இத்தகைய நடத்தைக்கான காரணம் மிக அதிகமான தாழ்மையா அல்லது மிக அதிகமான சுயநலமா என்று தீர்ப்பது நமக்கடுத்த காரியமல்ல; ஆனால் இப்பெற்றோர்கள் கர்த்தர் தங்கள் காணிக்கையை (பிள்ளைகளை) ஏற்றுக்கொள்வார் என்று நம்பிடுவதற்கு ஏதுவான விசுவாசம் பெற்றிருக்கவில்லை என்பதாகத் தெரிகின்றது அல்லது தங்கள் பிள்ளைகள் உலகப்பிரகாரமான விதத்தில் செழித்தோங்குவதைக் காண்பதற்கான ஆசையினை -இவர்கள் தங்களுக்குள் அநேகமாக தங்களையுமே கொஞ்சம் அறியாமல் / கொஞ்சம் தெரிந்தும் வளர்த்துக்கொண்டிருக்கின்றனர் என்பதாகத் தெரிகின்றது; மேலும் பிள்ளைகள் கர்த்தருக்கு அர்ப்பணிப்பது என்பது, சில விதங்களில் அவர்களது பூமிக்குரிய எதிர்க்காலத்தினைக் குலைத்துப்போடுமோ என்று பெற்றோர்கள் அஞ்சுவதாகத் தெரிகின்றது. இது எத்துணைப் பெரிய தவறாகும்! தங்களையே கர்த்தருக்குக் கொடுத்துவிடுவதும், தங்களுடைய அனைத்தையும் – தங்கள் பிள்ளைகளையும் சேர்த்து ஒப்புக்கொடுத்துவிடுவது என்பதும் தங்களுக்கான சிலாக்கியமாகும் என்று இந்தப் பெற்றோர்கள் அறிந்திருக்கவில்லையா? இன்னுமாக, “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதிமொழிகள் 10:22) என்பதையும்கூட இப்பெற்றோர்கள் அறிந்திருக்கவில்லையா? பொல்லாதவர்களின் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறதைக் காட்டிலும், கர்த்தருடைய வீட்டில் வாயிற்காப்பாளனாக இருப்பது நலம் என்று இப்பெற்றோர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லையா? எல்லா வகையான சொகுசுகளும் சூழ இருப்பதினால் மகிழ்ச்சி வருவதைவிட, மற்ற வழிகளில் வரும் மகிழ்ச்சியைவிட, தரித்திரமான வாழ்க்கையாக இருந்தாலும் அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியமாய் இருக்கையில், அதில்தானே மிகுதியான மகிழ்ச்சிக் கடந்துவருகின்றதாய் இருக்கின்றது என்பதை இப்பெற்றோர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லையா? இப்படிப்பினைகளை இப்பெற்றோர்கள் தங்கள் சொந்த அனுபவங்களில் கற்றுக்கொள்ளவில்லையா? மேலும் இப்படிப்பினைகளைத் தங்கள் சொந்தப் பிள்ளைகளின் விஷயத்தில் இவர்களால் செயல்படுத்த முடியவில்லையா?

பிள்ளையைப் பயிற்றுவி

சாமுயேல் ஏலிக்குப் பணிவிடைச் செய்தார் – அதாவது பிரதான ஆசாரியனுக்கு ஊழியஞ்செய்தார்; ஏலி கர்த்தருடைய ஊழியக்காரனாகவும், பிரதிநிதியாகவும் காணப்பட்டு, ஆசாரிப்புக்கூடாரத்திற்கு அருகாமையிலுள்ள கூடாரங்களில் சஞ்சரித்து வந்தார்; ஆலயம் அதுவரையிலும் கட்டப்படாதிருந்தது. சாமுயேலின் பெற்றோர்கள் அவரை ஜீவியத்தின் ஆரம்பக்காலங்களிலேயே ஊழியக்காரனுக்குரிய கடமைகளுக்கு இப்படியாக உட்படுத்தினபோது, அவர்கள் அவரை மிகச் சிறந்த பள்ளிக்கூடத்தில் உண்மையில் சேர்த்தவர்களாய் இருந்தனர். எங்களைப் பொறுத்தவரை ஜீவியத்தின் ஆரம்பக்காலங்களானது – அதாவது 10 முதல் 18 வயதுவரையிலான காலப்பகுதிகளானது பெரிதும் விளையாட்டுகளிலேயே செலவழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தானது தவறான கருத்தாகும்; சாமுயேலின் விஷயத்தில் போன்று பிள்ளைகளைச் சிறு வயதிலேயே பொறுப்புள்ள ஸ்தானங்களில் மற்றும் ஏறக்குறைய அன்றாட வேலைகளில் மற்றும் கடுமையான உழைப்புகளில் கொண்டுவந்துவிடுவது ஞானமான காரியமாயிருக்கும்; இப்படியான உதாரணத்தினை இந்நாட்களில் இந்த நம் தேசத்திலுள்ள அநேகம் முதன்மையான ஜனங்களின் விஷயத்திலும் பார்க்கலாம். உலகப் பிரசித்திப்பெற்ற திரு. கார்நீஜீ அவர்கள் தந்தி தூதுவனாகத் தன் ஜீவியத்தில் சிறுவயதிலேயே கடின உழைப்பிற்குள் பிரவேசித்தார். உலகளாவிய எலக்ட்ரீஷியனான திரு. எடிசன் அவர்கள் செய்தித்தாள் கொடுக்கும் சிறுவனாக தன் கடின உழைப்பினை ஜீவியத்தில் துவங்கினார். இப்படியாக உலகப்பிரகாரமான காரியங்களில் இன்றுள்ள அனுபவங்களுக்கு இசைவாகப் பார்க்கையில், ஏலியின் பணிவிடைக்காரனாய்ச் சாமுயேல் சிறுவயதிலேயே அர்ப்பணிக்கப்பட்ட காரியமானது, அவர் பிற்பாடு கர்த்தருடைய தீர்க்கத்தரிசியாகவும், இஸ்ரயேலின் கடைசியான மற்றும் மகாபெரும் நியாயாதிபதியாகவும் ஆனபோது, அவர் பெற்றிருந்த குணலட்சணத்தின் உறுதிக்கும், மேன்மைக்கும் அநேகமாகப் பெரிதும் காரணமாயிற்று என்று நாம் உணர்ந்துகொள்கின்றோம்.

[R4091 : page 347]

சிறு வயதில் – அதாவது 12-ஆம் வயதில் தங்கள் பிள்ளைகளினால் மத சம்பந்தப்பட்ட காரியங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவோ அல்லது உணர்ந்துகொள்ளவோ முடியாது என்று பெற்றோர்களால் அனுமானிக்கப்படும் காரியத்தைக்காட்டிலும், பெரிய தவறு பொதுவாய் இருக்கிறதில்லை என்று நாங்கள் கவனித்திருக்கின்றோம். சாமுயேலுடைய அனுபவமும், நம்முடைய சொந்த அனுபவமும், மற்ற அநேகருடைய அனுபவங்களும் – மத சம்பந்தமான சில ஆழமான உணர்வுகளானது 12 வயதுகளிலேயே உணரப்பட்டுள்ளதை நமக்கு உறுதிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இதற்காய், இந்த அறிகுறிக்காய்ப் பெற்றோர்கள் கவனித்திருக்க வேண்டும்; மேலும் இது தங்கள் தோட்டங்களிலுள்ள மென்மையான மலர்களுக்குச் செலுத்தப்படுவதைப் பார்க்கிலும் மிக அதிகமான அக்கறையுடன் பெற்றோர்களினால் வளர்க்கப்பட வேண்டும். குழந்தையின் மனதிலுள்ள பயபக்தியின், ஆன்மீகத்தின், நம்பிக்கையின், விசுவாசத்தின் மலர்களுக்கு மென்மையான பராமரிப்பு, தண்ணீர் ஊற்றுதல், களைநீக்குதல், உதவுதல் ஆகியவை அவசியமாகும் மற்றும் இவை செய்யப்படவும் வேண்டும். இவைகளுக்குப் பெற்றோர்களானவர்கள் சுபாவத்தின் காரணமாகவும், திவ்விய கட்டளையின் காரணமாகவும் தோட்டக்காரன் போன்ற பொறுப்புள்ள ஸ்தானம் வகிக்கின்றவர்களாய் இருக்கின்றனர்; மேலும் இவர்கள் தங்கள் சொந்தக் குடும்பத்திலுள்ள இருதயங்களில் காணப்படும் மலர்களைக் கருத்தில்கொள்ள வேண்டும்; இந்தத் தன் பொறுப்பினை அவன் புறக்கணிப்பானானால், அவன் குற்றவாளியாக இருந்து, நிச்சயமாய்க் கஷ்டம் அனுபவிப்பான் – அதாவது தன் பிள்ளையினுடைய எதிர்க்காலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏமாற்றம் மாத்திரம் அடையாமல், தன் சொந்த இருதயத்திலும் சில ஆசீர்வாதங்களை இழந்து போய்விடுபவனாய் இருப்பான்; ஏனெனில் மற்றவர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிற எவனுக்கும் தண்ணீர் பாய்ச்சப்படும் என்பது திவ்விய ஏற்பாட்டின் காரியமாகும்.

பொதுப்பணிகள் / பொறுப்புகள், கடமைகள், மற்றவரது குழந்தைகளைக் காப்பாற்றுதல் ஆகியவை எதுவும் தன் சொந்தப் பிள்ளையினிடத்தில் தான் பெற்றிருக்கும் பொறுப்பிலிருந்து எந்தக் கிறிஸ்தவ பெற்றோரையும் ஒருபோதும் விலக்கிடாது; அல்லது அவனுடைய பொறுப்புகளை ஞாயிறு பள்ளி ஆசிரியர்களுக்குக் கைமாற்றிடாது. தன் கடமையை அவன் புறக்கணிக்கிற காரியமானது, நிச்சயமாய் அவனுக்கும் பாதகமாயிருக்கும், அவன் பிள்ளைக்கும் பாதகமாயிருக்கும்; ஒருவேளை கடந்த காலங்களில் அவன் இவ்விஷயங்களில் அலட்சியமாய் இருந்திருப்பானாகில், அவனால் சீக்கிரமாய்க் காரியங்களைச் சரிசெய்திட முடியாது; எனினும் தன் கடந்தகால அலட்சியத்தினை ஜெயங்கொள்வதற்கு வேண்டி மிகுந்த ஞானத்திற்காக அவன் ஜெபம்பண்ண வேண்டியிருக்கும் மற்றும் மிகுந்த ஞானத்தைச் செயல்படுத்திட நாடவும் வேண்டியிருக்கும்.

தேவனுடைய வாய்க்கருவியாகப் பன்னிரண்டு வயது சிறுவன்

சாமுயேலுக்குக் கர்த்தர் கொடுத்த முதல் தூதுபற்றின பதிவானது அதன் எளிமையில் அழகாயுள்ளது. சாமுயேலாகிய சிறுவன் பல்வேறு தருணங்களில், பல்வேறு பணிவிடைகளைச் செய்யும்படிக்கு ஏலியின் அழைப்புகளுக்குக் கீழ்ப்படியும் பழக்கமுடையவராகக் காணப்பட்டார்; மேலும் இதன் காரணமாகச் சாமுயேலின் படுக்கையறை ஏலியின் அருகாமையில் இருந்தது; ஏனெனில் ஏலி வயதானவராகக் கிட்டத்தட்ட எழுபத்தியெட்டு வயதானவராக இருந்தார். மூன்று முறை கர்த்தர் சாமுயேலை அழைத்தார் மற்றும் சாமுயேலோ ஏலியினிடத்திற்குப்போய், “இதோ இருக்கிறேன்” என்றார். மூன்றாவது முறைக்குப் பின்னரே, “கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று சொல்லும்படிக்கு அவருக்கு ஏலி கூறினார்.

கர்த்தருடைய வசனமானது அபூர்வமானதாக நீண்டகாலம் காணப்பட்டதாகப் பதிவு தெரிவிக்கின்றது. ஏலி நல்ல மனுஷனாகவும், சாமுயேலை நடத்தும் விஷயத்தில் உண்மையாயும், நேர்மையாயும், இரக்கமாயும் காணப்பட்டாலும், தன் சொந்தக் குமாரர்களைக் கையாளும் விஷயத்தில் மிகவும் தளர்வானவராய் இருந்தார்; ஏலியின் குமாரர்கள் ஆசாரியர்களாகவும், ஆசரிப்புக்கூடார பணிவிடைகளுக்கு அடுத்த விஷயங்களில் அதிகம் வேலை செய்ய வேண்டியவர்களாகவும் இருந்தார்கள்; ஆகையால் இவர்கள் எல்லாவிதத்திலும் பயபக்தியுள்ள, முன்மாதிரியுள்ள புருஷர்களாய்க் காணப்பட வேண்டும். பணவிஷயங்களில் மாத்திரமல்லாமல், ஒழுக்கம் சார்ந்த விஷயங்களிலும் ஏலியின் குமாரர்கள் பகிரங்கமாய் மீறுதலுக்குட்பட்டவர்களாகவும், சீர்க்கெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பது தொடர்பாகக் கர்த்தர் ஏற்கெனவே ஏலிக்கு எச்சரித்துள்ளார். ஏலி தன் பொறுப்புகளை உணர்ந்துகொண்டிருக்க வேண்டும் மற்றும் அவர்களது தவறான நடக்கைகளைக் கவனித்திருக்க வேண்டும்; மேலும் தேவைப்பட்டிருந்தால் அவர்கள் தன் சொந்தக் குமாரர்களாக இருப்பினும், அவர்களை ஆசரிப்புக்கூடாரப்பணியினின்று நீக்கியிருக்க வேண்டும்; மேலும் ஏலி எந்தளவிற்கு மனதிலும், சரீரத்திலும் பலவீனப்பட்டுக்கொண்டிருந்தாரோ அவ்வளவிற்கு அவர்கள் வீரியமடைந்து, அகந்தைக்கொண்டு, பயபக்தியற்றுப் போனார்கள்; மேலும் அவர்களைக் கையாளுவதற்கு அவசியமான குணலட்சணத்தின் வலுவினை இந்த முதியவர் பெற்றிராததுபோல் தெரிகின்றது. சாமுயேலுக்கு வந்த கர்த்தருடைய வசனமானது ஏலியின் குடும்பம் பற்றினதாகவும், அவர்களுடைய பாவங்களின் நிமித்தம் அவர்கள்மீது வரவிருக்கும் தண்டனை பற்றியதாகவும் இருந்தது; இவர்கள் ஜனங்களுக்கு முன்மாதிரிகளாகவும், போதகர்களாகவும் இருந்தபடியினால் இவர்களுடைய பாவங்கள் மிக அதிகமோசமானதாய்க் காணப்பட்டது.

அன்புள்ள மற்றும் செல்லம் கொடுக்கின்ற பெற்றோர்

இரண்டுவகையான உண்மையற்ற பெற்றோர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் பின்வருமாறு:

(1) கொடுமையானவர்களும், கொடூரமானவர்களும், பொல்லாதவர்களுமாய்க் காணப்படுபவர்கள்; இவர்கள் தீயப்பண்புகளை இயல்பாகவே பெற்றவர்களாய் மாத்திரம் இராமல், அவற்றை வார்த்தையினாலும், மாதிரியினாலும் போதிப்பவர்களாகவும் இருப்பார்கள். ஒருவேளை பெற்றோர் இருவருமே இவ்வகையினராய் இருப்பார்களானால் தற்கால ஜீவியத்தைப் பொறுத்த விஷயத்தில் குழந்தையினுடைய நிலைமையானது கிட்டத்தட்ட நம்பிக்கையற்றதாகவே இருக்கும். ஆயிர வருஷ அரசாட்சியில் சீர்த்திருத்தும் சூழ்நிலைகளானது மேற்கூறிய மாசினை / அழுக்கினை / பாதிப்பினை மாற்றிடுவதற்கு அவசியமாய் இருக்கும். ஆனால் பெற்றோரில் ஒருவர் கர்த்தருக்குரிய வராயிருப்பாரானால் விளைவானது கர்த்தருடைய ஏற்பாட்டின்படி நேர்மாறாய் இருக்கும் – குழந்தை நல்லக் குழந்தையாகப் பிறப்பது மாத்திரமல்லாமல், தன் பெற்றோரின் நடத்தையினுடைய தீய தன்மையினைக் கண்டுகொள்வதின்மூலம், பிள்ளையானது தீய போக்கின் நின்று விலகிட ஏவப்பட்டு மாற்றுப் போக்கினை எடுத்துக்கொள்ள ஆயத்தமாகிடும்.

(2) அன்புள்ள மற்றும் செல்லம் கொடுக்கும் பெற்றோர்களில் சிலர், தங்கள் பொறுப்பில் மிகவும் உண்மையற்றவர்களாய்க் காணப்படுவார்கள். நம் இனத்தின் பரவலான பெலவீனங்களைச் சுதந்தரித்துள்ள நம் குழந்தைகளுக்கு அன்பும், செல்லமும் காண்பிக்கப்படுமானால், அது அவர்களுடைய குணலட்சணத்தில் பெருமோசமான அன்பற்ற நிலைமையை, அதாவது தேவனுடைய பார்வையிலும், அவரது வார்த்தைக்கு இசைவாய் நடப்பவர்களின் பார்வையிலும் மிகவும் கண்டனத்திற்குரியதாய்க் காணப்படும் தன்மையினை [R4092 : page 347] வளர்த்திடும் நச்சுக்களைகளாகக் காணப்பட்டுவிடும். “அன்பும், செல்லமும் கொடுக்கும் பெற்றோர்” எனும் இவ்வார்த்தைகளானது மிகவும் பொருத்தமற்றவிதத்தில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. அநேக தருணங்களில் அதை, “பெலவீனமான, தகுதியற்ற பெற்றோர்” என்று சொல்வது நியமற்று இருந்தாலும் மிகவும் உண்மையானதாய்க் காணப்படும்.

நிச்சயமாகவே நல்லப்பெற்றோர்கள் அனைவரும் திவ்விய கண்ணோட்டத்தின்படி தங்கள் பிள்ளைகளிடத்தில் அன்பாய் இருப்பார்கள்; மேலும் இப்படியானவர்கள் அனைவரும் பிள்ளைகளுக்கு நன்மையாய் இருக்கும் எல்லைமட்டும் செல்லம் கொடுப்பதிலும் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும் – ஆனால் எல்லைத் தாண்டியல்ல. தேவைப்படுகையில் திருத்தும்படிக்குப் பிரம்பானது தவிர்க்கப்படக்கூடாது அல்லது தேவையற்றபோது பிரம்பானது பயன்படுத்தப்படக்கூடாது அல்லது பயன்படுத்துகையில் மிகக் கடுமையாய்ப் பயன்படுத்தப்படக்கூடாது என்றாலும், எங்கு அனுமதிக்க வாய்ப்புள்ளதோ – அதாவது எங்குப் பிள்ளையினுடைய பண்புகளானது அனுமதிக்க வாய்ப்புள்ளதோ – அங்குச் சிறந்த சட்டம், அன்பின் சட்டமாக இருக்க வேண்டும். பெற்றோரின் அன்பிலும் மற்றும் ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் தேவனுடைய ஒழுங்குமுறைகளுக்குப் பெற்றோர் காண்பிக்கும் நேர்மையிலும், பிள்ளையானது முழுமையான நம்பிக்கைக்கொள்ளத்தக்கதாகச் சிறுவயது முதற்கொண்டே பெற்றோரின் அன்பும், உறுதியும் பிள்ளையின் மனதினை இப்படியாக வனைந்திட வேண்டும். இத்தகைய பிள்ளைக்கு அநேக அடி கொடுப்பதைப்பார்க்கிலும், கடுமையாய்த் திட்டுவதைப்பார்க்கிலும் பெற்றோரின் முகத்தில் தெரியும் துக்கமும், வேதனையும் அல்லது துயரத்தினால் வரும் கண்ணீருமே மிகவும் பலன்கொடுக்கின்றதாயிருக்கும்.

நியாயாதிபதியாகிய ஏலி தேவனுக்கு உண்மையற்றுப் போனார்

ஒரு பெற்றோரென நியாயாதிபதியாகிய ஏலி கொண்டிருந்த பெலவீனமானது, அவர் தேவனுக்கு உண்மையற்றுப் போகச் செய்தது. இவர் “ஜெயங்கொள்ளும்” பாத்திரங்களுக்கான உதாரணமல்ல; இவர் கிட்டத்தட்ட “திரள்கூட்டத்தாரின்” குணங்களுக்கு அடையாளமாய் இருக்கின்றார். இவர் அநேகம் நல்லப்பண்புகளைப் பெற்றிருந்தார். இவரிடத்தில் இழிவான பாவங்கள் இல்லை. இவர் அநேகம் விதங்களில் தன் தனிப்பட்ட நலன்களுக்கு மேலாகவே [R4092 : page 348] கர்த்தரின் காரியங்களை வைத்திருந்தார். சாமுயேலின் முன்னேற்றத்தினை எதிர்த்திடும் சுயநலமான பேராசைகள் எதுவும் இவரிடத்தில் தெரியவில்லை. இவர் சாமுயேலை நன்கு வளர்த்தியுள்ளார் என்பதும் கவனிக்க வேண்டிய, பாராட்டுதலுக்குரிய காரியமாகும். இவர் தன் குமாரர்களுடைய நடத்தையை அங்கீகரிக்கவில்லை எனினும் வயதானவராய் இருந்தபடியால், கர்த்தருடைய வார்த்தைத் தெரிவிக்கிறதுபோல், இவர் தீவிரமாய் அவர்களது நடத்தைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தைரியம் அற்றிருந்தார். நமது கர்த்தரின் நேரடி அறிவுரைகளுக்குக் கீழ்க் காணப்பட்ட பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவன் தன் விருப்பப்படியே துரோகியானான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. எவ்வளவுதான் நன்கு பயிற்றுவிக்கப்பட்டாலும், மோசமானவர்களாய் மாறிப்போகிறவர்கள் – (கர்ப்பக்காலத்தில்) நல்வுணர்வுகள் பதியப்பெற்றுப் பிறக்கவில்லை என்று கருதுகின்றோம்; எனினும் பூரண சிருஷ்டிப்பையும், பூரண பயிற்சியையும் உடைய சாத்தான், தன் இலட்சியங்களினால் தொலைந்துபோனான் என்பதையும்கூட நாம் இங்கு நினைவில்கொள்ள வேண்டும்.

கீழ்ப்படியாத குமாரர்களுடனான ஏலியின் கஷ்டங்களானது, கர்த்தருடைய வழிகளிலும், நீதியின் வழிகளிலும் பிள்ளைகளைச் சிறுவயது முதற்கொண்டே பயிற்றுவிக்கும் காரியத்தினை அவர் புறக்கணித்ததன் காரணமாய் ஏலியின்மீது அவரே வரவைத்துக்கொண்டிருந்தாலும், அவரது இவ்வனுபவங்களுக்காய் நாம் அனுதாபம்கொள்கின்றோம். தனக்கு மிகப் பொறுமையாயும், கடுமையாயும் உழைத்து பணிவிடைச் செய்யும் உண்மையுள்ள சிறுவனாகிய சாமுயேலை ஏலி அடிக்கடிப்பார்த்து, தன் குமாரர்களும் இதுபோன்ற பண்புடையவர்களாய் இருக்க விரும்பியிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை ஆனால் இப்படி ஆசைப்படுவதற்கு இப்பொழுது காலங்கள் வெகுவாய்க் கடந்துவிட்டது; அர்ப்பணிப்பின் ஆவியில் பிள்ளைகள் பெற்றெடுக்கப்பட்டு, அதற்கு இசைவாயும், கர்த்தருடைய வசனத்திற்கு இசைவாயும் பயிற்றுவிக்கப்பட்டால், பிள்ளைகள் வளருகையில், அவர்கள் இதனின்று விலகிப்போகமாட்டார்கள். இங்கும் பெற்றோர்களுக்கு ஒரு பாடம் இருக்கின்றது; அதாவது கர்த்தருடைய ஊழியமே முதலாவது முக்கியமானதாகக் கருதப்பட்டு, தங்கள் சொந்த மாம்சத்தையும், இரத்தத்தையும் இழந்தாகிலும் அதனை செய்திட வேண்டும் என்பதேயாகும்.