R4697
செலவில்லாத மற்றும் சிறந்த ஆயுள் காப்பீடு – SUB HEADING
ஆம்! கர்த்தருடைய அர்ப்பணம்பண்ணியுள்ள ஜனங்கள் பாதுகாத்திடுவதற்கெனத் தங்களுக்கு எந்தப் பூமிக்குரிய ஜீவனும் இல்லை என்றும், தங்கள் பூமிக்குரிய ஜீவனானது, கர்த்தருக்கும், அவருடைய நோக்கங்களுக்கும் அடுத்த ஊழியங்களுக்கென்று மரணபரியந்தம் அர்ப்பணம்பண்ணப்பட்டுள்ளது என்றும் அறிந்திருக்கின்றனர். இந்தக் கண்ணோட்டத்தின்படி பார்க்கையில் செலவில்லாத மற்றும் சிறந்த காப்பீட்டுப் பத்திரம், கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளான ஞானஸ்நானத்தின் முழுமையான அர்ப்பணிப்பாகும் மற்றும் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாகிய பரிசுத்த ஆவியினுடைய ஜெநிப்பித்தலே நமக்குக் கர்த்தர் அளிக்கும் இரசீதாய் இருக்கின்றது. இத்தகையவர்கள் பொதுவாகக் கள்ளச்சகோதரர்களிடமிருந்து புறங்கூறுதலையும், தூஷணங்களையும், துன்புறுத்தல்களையும் வட்டியாக அவ்வப்போது பெற்றுக்கொள்வார்களென இவர்கள் வேதவாக்கியங்களினால் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளனர். இந்த அனுபவங்களானது அவர்களுக்கு விசேஷித்த ஆசீர்வாதத்திற்கு ஏதுவானது என்றும், அவர்களோடு திவ்விய தயவு தொடர்ந்து காணப்படுகின்றது என்பதற்கான உறுதியாய் இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்போதோ, பூமிக்கடுத்த ஆதரவுகளுக்காய்த் தங்களைச் சார்ந்திருப்பவர்களின் நலனுக்கடுத்த விஷயங்களில் தங்கள் பூமிக்குரிய ஜீவியங்களைக் கொடுப்பது தொடர்புடைய விஷயத்திலுள்ள சிலருடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க எண்ணம்கொண்டுள்ளோம். இதுவரையிலும்
இதழாசிரியர் எவ்வகையான ஜீவ காப்பீடுகளையும் கொண்டிருக்கவில்லை மற்றும் கொண்டிருக்க விரும்பவுமில்லை. எனினும் அனைவருக்கும் சூழ்நிலை ஒன்றுபோல் இருப்பதில்லை. எங்களுடைய புரிந்துகொள்ளுதலின்படி, தன்னைச் சார்ந்திருக்கும் மனைவியையும், பிள்ளைகளையும் பெற்றிருக்கும் ஒரு தகப்பன், ஒருவேளை பிள்ளைகள் சிறு பிள்ளைகளாகவும், தொழில்பண்ண முடியாதவர்களாகவும் இருக்கையில், இவர்களுக்கான சில பொறுப்புகளை உடையவராய் இருப்பார்; “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்” (1 தீமோத்தேயு 5:8) என்று அப்போஸ்தலன் கூறியுள்ளார். இவ்வார்த்தைகளானது அப்போஸ்தலனுடைய நாட்களில், வாழ்க்கைக்கான காப்பீட்டுத் திட்டங்களுக்குப் பொருந்தாது என்றும், அது ஒரு மனுஷன் தன் கடன்களைக் கட்டித் தீர்ப்பவனாகவும், தன் குடும்பத்தினை நியாயமான சௌகரிய நிலையில் வைத்துக்கொள்பவனாகவும் மற்றும் கூடுமானால், வீட்டையோ அல்லது தான் ஒருவேளை மரித்துப்போகும் காலங்களில் தன் குடும்பத்தாருக்கு உதவியாக இருக்கும் ஏதோ ஒன்றினை சிறிய முன்னேற்பாடாக ஏற்பாடுபண்ணுகிறவனுமாகவும் இருக்க வேண்டும் என்று குறிக்கின்றதாய் இருக்கும் என்று காரணம் காட்டப்படலாம். ஆனால் ஒருவேளை இப்படி அவரால் செய்ய முடியவில்லையெனில், ஜீவ காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாகத் தனது கடமையினை இக்காலங்களில் அவர் செய்திடலாம்.
சீக்கிரத்தில் காப்பீட்டு நிறுவனங்களும், நமது சமுதாயத்தின் தற்போதுள்ள மற்ற ஏற்பாடுகளும், (தானியேல் 12:1) தானியேல் தீர்க்கத்தரிசியினால் முன்னுரைக்கப்பட்டுள்ள மகா உபத்திரவ காலங்களில் சீர்க்குலைந்துபோய்விடும் என்று நாங்கள் நம்புவதாகக் கூறினது உண்மைதான் மற்றும் அதைத்தான் தொடர்ந்து சொல்லிக்கொண்டும் இருக்கின்றோம்.