R2319 (page 179)
1கொரிந்தியர் 1:26
அவிசுவாசிகள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும் உயர்பண்புள்ளவர்கள் காணப்படுகின்றனர் எனும் கூற்றினை எதிர்த்து யாரும் வாதாடுவதில்லை அதேபோல் கிறிஸ்தவர்கள் மத்தியிலும், உலகத்தார் மத்தியிலும் இழிவான ஜனங்கள் காணப்படுகின்றனர் என்னும் கூற்றினையும்கூட அனுபவமிக்கவர் எவரும் எதிர்த்து வாதாடுவதில்லை. இதைக்குறித்து நாம் என்ன சொல்லுவது? உண்மை கிறிஸ்தவத்தின் உயர்வான கொள்கைகளானது உலகத்திலுள்ள சிறந்த மனமுள்ள யாவரையும் கவர்ந்து இழுத்திடும் என்றும், இழிவான பண்புடையோரைத் தள்ளிவிடும் என்றும் எதிர்ப்பார்ப்பது நியாயமல்லவா? கிறிஸ்துவின் உபதேசங்களும், அவரது போதனைகளின் ஆவியும், அதாவது சாந்தம், தயவு, சகோதர சிநேகம், அன்பு முதலானவைகள், இப்பண்புகளை விரும்புகிற யாவரையும், உலகில் உள்ள உயர் மனமுடையவர் யாவரையும் கவர்ந்து இழுத்திடும் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம் அல்லவா? மேலும் வேதவாக்கியங்களும், கர்த்தருடைய ஆவியும் – கோபம், துர்க்குணம், பகைமை, பொறாமை, சண்டை, புறங்கூறுதல், தூஷணம் பேசுதல், அசுத்தங்கள் முதலியவைகளைக் கண்டிக்கின்றதால், மாம்சம் மற்றும் பிசாசின் இத்தகைய கிரியைகளுடன் இணக்கம் கொண்டிருக்கும் அனைவரும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் புறக்கணிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம் அல்லவா? என்று கேள்விகள் கேட்கப்படலாம்.
இது விஷயத்தில் நமது மனதின் தத்துவமானது என்னவாக இருப்பினும் நிலவரங்களின் உண்மையானது, உலகத்தினுடைய சிறந்த மனமுள்ள ஜனங்களில் பெரும்பாலானோர் கர்த்தரையும், அவரது சுவிசேஷத்தையும் புறக்கணிக்கின்றனர் என்றும், உலகத்திலுள்ள இழிவான ஜனங்களில் பெரும் எண்ணிக்கையினர் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினை ஏற்றுக்கொள்கின்றனர் என்றும் நமக்கு நிரூபித்துத் தருகின்றதாய் இருக்கின்றது. அனைத்து மற்றும் ஒவ்வொரு எதிர்ப்பார்ப்புகளுக்கும் நேர்மாறானதாகக் காணப்படும் இந்த மிக விநோதமான சூழ்நிலைக்கான காரணம் என்ன என்ற கேள்வியானது அதிகம் சுவாரசியமான மற்றும் குழப்பமான கேள்வியாகக் காணப்படுகின்றது.
இதற்கான காரணங்களை நாம் கர்த்தருடைய வார்த்தைகளின் அடிப்படையில் தெரிவிக்கின்றோம் – அது என்னவெனில் அவர் நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்பும்படிக்கு அழைக்க வந்தார் என்பதேயாகும். உண்மைதான் நீதிமான் ஒருவனாகிலும் இல்லை அனைவரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகிவிட்டனர்; தகப்பனாகிய ஆதாமின் வீழ்ச்சி என்பது அவரது சந்ததியிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனையும் உள்ளடக்கியது; ஆகையால் அனைவரும் பாவிகளாக இருக்கின்றனர் மற்றும் தங்கள் பாவங்களுக்கான மன்னிப்பிற்காகக் கிறிஸ்துவுக்குள்ளான தேவ கிருபை அனைவருக்கும் தேவையாய் இருந்தது; ஆனால் தங்கள் அயலார்களில் சிலரைப்பார்க்கிலும் ஒழுக்க ரீதியிலும், அறிவு ரீதியிலும் குறைவான வீழ்ச்சி நிலையில் தாங்கள் காணப்படுவதாகக் கண்டுகொள்பவர்கள் தங்களைப் பரிபூரணர்கள் என்று சொல்லாவிட்டாலும், சுயநீதியின் மனப்பான்மை உடையவர்களாக இருக்கின்றனர். ஆகையால் இத்தகையவர்கள் தங்களை ஒன்றுமில்லாதவர்களாகவும், திவ்விய தயவிற்குப் பாத்திரமற்றவர்களாகவும் ஒப்புக்கொள்வதற்கும், சிலுவையின் அடிவாரத்தில் புழுதிமட்டும் தங்களைத் தாழ்த்திக்கொள்வதற்கும், தேவனுடைய கிறிஸ்து இயேசுவின் மூலமான நித்திய ஜீவனின் கொடையாகிய கிருபையுள்ள ஈவைப் பெற்றுக்கொள்வதற்கும் விருப்பம் காண்பிக்காதவர்களாய் இருப்பார்கள்.
இத்தகையவர்கள் மனித சந்ததியிலுள்ள மிகவும் சீரழிந்தவர்களில் சிலருக்குத் திவ்விய அனுதாபமும், மன்னிப்பும் அவசியம் என்று உணர்கின்றனர்; மேலும் சீரழிந்தவர்களுக்குத் தேவன் மனதுருக்கம் கொண்டிருப்பதைக்குறித்தும், தேவன் இந்த இழிவானவர்களுக்கு உதவுவார் என்பதுகுறித்தும் இத்தகையவர்கள் எண்ணி மகிழ்ச்சிக்கொள்கின்றனர்; எனினும் இத்தகையவர்கள் தங்களை மூடிக்கொள்வதற்குக் கிறிஸ்துவின் நீதியினால் தரிப்பிக்கப்படும் வஸ்திரம் தங்களுக்குத் தேவையில்லையென்று எண்ணம்கொண்டிருக்கின்றனர்; இத்தகையவர்கள் தங்களை மிகவும் மதிப்பிற்குரியவர்களென எண்ணி, இதனால் தேவன் எதிர்க்கால ஜீவனை அருளுவதற்கு யாரையேனும் ஏற்றுக்கொள்வாரெனில், அவர் நிச்சயமாய்த் தங்களைத் தள்ளிவிடமாட்டார் என்று எண்ணுகின்றனர். இத்தகையவர்கள் தங்களைச் சுற்றிப்பார்த்து, தங்களைக் கிறிஸ்தவர்களுடன் ஒப்பிட்டு, அதுவும் பெருமளவிலான தற்பெருமையுடன், சரி எது, தவறு எது மற்றும் நன்னெறிகள் மற்றும் பெருந்தன்மை முதலானவைகள் குறித்த தங்கள் அபிப்பிராயங்களானது கிறிஸ்தவர்கள் என்று தங்களைக்குறித்து அறிக்கைப்பண்ணிக்கொள்கிறவர்களைக் காட்டிலும் மேலானதாக, உயர்ந்ததாக, சிறந்ததாகக் காணப்படுகின்றது என்று தங்களுக்குள் நிச்சயம்கொண்டவர்களாக இருக்கின்றனர்; மேலும் “தேவன் நீதி உள்ளவர் மற்றும் நான் பரிபூரணமானவனாக இல்லையென்றாலும், பெரும்பான்மையான கிறிஸ்தவர்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தவனாகக் காணப்படுகின்றேன் மற்றும் இதனால் இருதயம் மற்றும் மனதின் நற்பண்புகள் சிலவற்றில் என்னைக் காட்டிலும் குறைவுடையவர்களாய் இருக்கின்றனர் என்று நான் காணும் மற்றவர்களைத் தேவன் பராமரிப்பதைக் காட்டிலும், அவர் தம் நீதியில் என்னை அதிகமாய்ப் பராமரிப்பார்” என்று தங்களுக்குள்ளாகச் சொல்லிக்கொள்கின்றனர். பூர்வ காலத்திலுள்ள பரிசேயன் போன்று இத்தகையவர்கள், மற்ற மனுஷர்களைப் போன்று தாங்கள் [R2319 : page 180] காணப்படாததற்காகத் தேவனை ஸ்தோத்திரித்து, “வானத்தின்கீழ் அல்லது மனுஷர் மத்தியில் நாம் இரட்சிக்கப்படத்தக்கதாக அருளப்பட்டிருக்கும் ஒரே நாமத்தை” புறக்கணித்து விடுகின்றனர்.
நாம் விவரித்துவரும் இவ்வகுப்பார் ஒரு பெரும் வகுப்பார் ஆவர்; அநேகர் எண்ணியிருந்ததைவிட மிக பெரும் வகுப்பார் ஆவர். மேலும் இவ்வகுப்பாரில் சுவிசேஷத்தை ஒருபோதும் புரிந்திடாத, மாய்மாலக்காரர்களாய் இராத அநேகர் உள்ளடங்குகின்றனர். ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதிகளில் அநேகர் இவ்வகுப்பாரைச் சேர்ந்த புருஷர்களாய் இருக்கின்றனர் – மதத்தின்மீது மரியாதை கொண்டிருக்கின்றனர்; ஜீவியத்தில் நல்லொழுக்கம் உடையவர்களாய் இருக்கின்றனர். நீதியோடு நடந்துகொள்கின்றனர் – உதாரணத்திற்கு LINCOLN மற்றும் GRAND முதலானோர் ஆவர்; மேலும் இவர்களை இந்த வகுப்பாரின் உதாரணங்களாக மாத்திரம் குறிப்பிடுகின்றோம். இதுவுமல்லாமல் இவ்வகுப்பாரில் அநேகர் சபை கூட்டங்களில் கலந்துகொள்பவர்களாக அல்லது சபையின் அங்கத்தினர்களாகக் காணப்படுகின்றனர். நாகரிகத்தின் முன்னேற்றமானது கிறிஸ்தவ மார்க்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளது எனும் உண்மையினை இவர்கள் உணர்ந்துகொள்கின்றனர்; மேலும் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின்மீதான விசுவாசத்தின்மூலம் பாவங்களுக்கான மன்னிப்பைத் திவ்விய கிருபையின் கரங்களினின்று இத்தகையவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டிராத போதிலும், பிரபலியத்தின் மற்றும் நன்னெறியின் பக்கத்தில் நிற்பதில் மகிழ்ச்சிக்கொள்கின்றனர்.
இவர்களுக்கான சிரமத்தை நாம் காண்கின்றோம் – அதாவது கண்டிப்பான நீதி மற்றும் சட்டத்தின் கொள்கையின் அடிப்படையிலேயே கர்த்தர் கையாளுகின்றார் எனும் காரியத்தினை இவ்வகுப்பார் அடையாளம் கண்டுகொள்வதில்லை. அபூரணமான அனைத்தும் தேவனுக்கு முரணானது என்றும், ஆதியில் தேவனுடைய கிரியையானது ஆதாமில் பரிபூரணமாய் இருந்தது என்றும், அபூரணமாய்க் காணப்படும் எவற்றோடும் இணைந்துகொள்வதைத் [R2320 : page 180] தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திவ்விய பிரமாணமும், நீதியும் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இந்தப் பிரமாணத்தின்கீழ்ச் சிறியவற்றில்கூடக் குற்றமுள்ளவனாய் இருப்பவன், குற்றம்புரிந்தவனாகவும், அநேகம் மற்றும் மிகக் கடுமையான குற்றங்களின் நிமித்தம் குற்றவாளியாக இருப்பவனோடுகூட ஒரே மரணத்தண்டனையின் கீழ் வருகின்றவனாகவும் இருப்பான் என்று இவ்வகுப்பார் காணத்தவறுகின்றனர். ஆகையால் அனைத்து மனுஷரும், அபூரணராக இருக்கின்றபடியால் ஒருவனும் முழுமையாய் நீதிமானாய் இராதபடியினால், ஒரு மரணத்தீர்ப்பானது மனிதக்குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களையும் பற்றிக்கொண்டது. கிறிஸ்து இயேசுவாகிய நீதிமான் தம்மையே மனுஷருக்கான மீட்பராகும்படிக்குப் பலிசெலுத்தினதின் மூலமான தேவனுடைய ஏற்பாட்டினால் தவிர மற்றப்படி மரணத்தினின்று தப்பித்துக்கொள்ளும் எவ்வழியுமில்லை ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான வழியில்லை. ஒருவன் எவ்வளவுதான் பாவத்திற்கு எதிராய்ப் போராடினாலும் – எவ்வளவுதான் வாசலை நெருங்கினவனாகக் காணப்பட்டாலும் – வாசல் / வழி ஊடாக வரத்தவறுகிறவன் ஒருபோதும் ஜீவனை அடையான். வாசல்வழியான பிரவேசம் மாத்திரமே நித்திய ஜீவனுக்கான பிரவேசத்தினை அர்த்தப்படுத்துகின்றதாய் இருக்கும். “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்;, குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் (மரணத்தண்டனை) அவன்மேல் நிலைநிற்கும்” (யோவான் 3:36).
இப்பாடத்தின் இதே கோட்பாடானது, உலகத்தின் நற்பண்புள்ள ஜனங்களைக்காட்டிலும், இழிவான ஜனங்களே கிறிஸ்துவிடம் பெரும்பான்மையாய் ஏன் வருகின்றனர் என்பதற்கான காரணத்தையும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. தாங்கள் பாவிகள் என்று உணர்ந்துகொள்பவர்கள் மாத்திரமே, பாவத்திலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டுமென்று எண்ணுபவர்கள் மாத்திரமே, மன்னிப்பு அருளப்படுவதை ஏற்றுக்கொள்கின்றனர். தாங்கள் நோயாளிகளாக இருப்பதை உணர்ந்துகொள்ளும் நோயாளிகள் மாத்திரமே மாபெரும் வைத்தியனுக்கான தங்கள் தேவையைக்குறித்து உணர்ந்துகொள்கின்றனர். தங்கள் விழுந்துபோன, சீரழிந்த நிலைமைக்குறித்து ஓரளவிற்கு உணர்ந்துகொண்டவர்களாகவும், மற்றவர்களைக் காட்டிலும் தாங்கள் இழிவானவர்கள் என்று உணர்ந்துகொண்டவர்களாகவும் தான் அநேகர் உண்மையில் கர்த்தருடைய கிருபையைத் தேடுகின்றனர்; இத்தகைய உணர்ந்துகொள்ளுதலினால் மாத்திரமே இவர்கள் தங்கள் நிலைமைக்குறித்து விழித்தெழுகின்றதாகத் தெரிகின்றது; மேலும் இதனால் மாத்திரமே இவர்கள் “தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும்” என்று கூக்குரலிடுவதற்கு வழிநடத்தப்படுகின்றனர். திவ்விய தயவினைப் பெற்றுக்கொள்வதற்குத் தனிப்பட்ட விதத்தில் தான் பாத்திரவானில்லை என்று உணர்ந்துகொள்ளும் மனநிலையே, தேவனுடைய தயவை, அதற்கே உரிய நிபந்தனைகளோடு ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் அவசியமாயிருக்கின்றது.
நம்முடைய பாடத்திற்கான அடிப்படைக் கோட்பாட்டினை இப்படியாகக் கண்டுபிடித்துள்ளபடியால், இப்பொழுது விளைவைக்குறித்து விசாரித்தறியப் போகின்றோம். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதினால் உண்டாகும் நியாயமான விளைவென்ன? புதிய உடன்படிக்கையினுடைய நிபந்தனையின் கீழ்க் கிறிஸ்துவை முறையாய் ஏற்றுக்கொள்வதின் நிச்சயமான விளைவு, ஒழுக்கம் சார்ந்த சீர்த்திருத்துதலாய் இருக்கும் என்று நாங்கள் பதிலளிக்கின்றோம்; ஏனெனில் கடந்த காலத்தின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு மாத்திரம் விரும்பிடாமல், எதிர்க்காலத்திலும் பாவத்தை விட்டுவிடவும் விரும்பிட வேண்டும் எனும் நிபந்தனையின்கீழே யார் ஒருவரையும் கர்த்தர் ஏற்றுக்கொள்கின்றார். ஒழுக்கத்தின் அளவில் அவன் கீழ்நிலையில் காணப்பட்டால், மாற்றம் இறுதியில் மிகத் தீவிரமானதாய்க் காணப்படும்; ஆனாலும் அவனது மாற்றத்தினுடைய துவக்கத்தில் கிறிஸ்தவ பாதையில் அவனுக்கு முன்பிருக்கும் வார்த்தையிலும், எண்ணங்களிலும், கிரியையிலுமுள்ள சுத்திகரிக்கப்படுதலின் படிநிலைகள் அனைத்தையும் குறித்துக் குறைவாகவே உணர்ந்துகொள்பவனாய்க் காணப்படுவான். முதலாவதாக அவன் பாவத்தின் மோசமான வெளிப்பாடுகளில் சீர்த்திருந்த மாத்திரமே சிந்திப்பான்; படிப்படியாக, ஒன்றன்பின் ஒரு பாடமாகக் கொடுக்கப்பட்டு, மாபெரும் போதகரினால் அவன் போதிக்கப்படுவான்; மேலும் அவன் கிறிஸ்துவின் பள்ளியில் தொடர்வானாகில் அறிவிலும், உணர்ந்துகொள்ளுதலிலும், குணலட்சண வளர்ச்சியிலும் வளர்கின்றவனாய் இருப்பான்.
அப்போஸ்தலன் வாயிலாய் மாபெரும் போதகர் முன்வைத்திடும் எதிர்ப்பார்ப்பு என்னவெனில்… அவரிடத்திற்கு முழுமையான அர்ப்பணிப்பில் வருபவர்கள், விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற்பாடு, உடனடியாக “மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்த” துவங்கிட வேண்டும் என்பதேயாகும். இதைச் செய்ய முயற்சிக்காத யார் ஒருவராலும் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் தொடரமுடியாது; ஏனெனில் இப்படிப்பட்டவன் அவருடைய ஆவியைப் பெற்றிருப்பதில்லை மேலும் அவரது ஆவி இல்லாதவன் “அவருடையவன் அல்ல.” (அறிந்தும், விரும்பியும்) “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்” (1 யோவான் 3:8). பாவம் மற்றும் சுயநலத்தின் உளையான சேற்றில் மிக ஆழமாய் அமிழ்ந்துபோனவர்களும், இதன்விளைவாய் அநேகம் இழிவான இயல்புகளைப் பெற்றுக்கொண்டுள்ளவர்களுமானவர்கள் – ஓரளவிற்கு அல்லது மிக நல்ல, உயர்பண்புள்ளவர்களாகிடுவதற்கு முன்னதாக, மாபெரும் போதகருடைய பயிற்சி மற்றும் படிப்பித்தலின்கீழ் அநேகம் வருடங்கள் காணப்பட வேண்டும். குணலட்சணம் என்பது காளான் போன்றதாயிராமல், கருவாலி மரம் போன்று காணப்படும்; அது வளர்வதற்கு காலம் எடுத்துக்கொள்ளும். எனினும் கருவாலி மரமானது, கோடாரியினால் உடனடியாகக் வெட்டிப்போடப்பட முடியும்; இதுபோலவே உறுதியான குணலட்சணம் / பாத்திரம்கூட உடனடியாகப் பாவத்தினால் கெடுக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு, வீழ்த்தப்படலாம். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் மேல்நோக்கின வளர்ச்சியின் வேகம் மெதுவாகவே இருக்கும்; ஆனால் கீழ்நோக்கின மன இயல்புகள், ஒருவேளை அனுமதிக்கப்பட்டால், உடனே செயலாற்றிடும். ஆகையாலே அநேகம் கிறிஸ்தவர்களானவர்கள், கிறிஸ்துவின் மதத்தினால் தாங்களும், தங்கள் நண்பர்களும் பாவத்தின் உளையான சேற்றிலிருந்து வெளியே வந்து, கன்மலையாம் கிறிஸ்து இயேசுவின்மீது நிற்பதற்கு உதவப்பட்டு, மாம்சத்தின் அசுசிகள் அநேகவற்றிலிருந்தும், அதன் இழிவான இயல்புகள் அநேகவற்றிலிருந்தும் சுத்திகரிக்கப்பட்டு, இப்படியான பயிற்சி மற்றும் விடாமுயற்சியை மேற்கொண்டவர்களாக – பத்து அல்லது இருபது அல்லது நாற்பது வருடங்கள் ஆன நிலைமையில் இருக்கையில், இவர்கள் – தங்களுக்குச் [R2320 : page 181] சமமான நிலைமையில் நாணயத்திலும், நியாயத்திலும் அல்லது பெருந்தன்மையிலும் காணப்படும் சில அவிசுவாசிகளைக் காண்கையில் ஆச்சரியத்திற்குள்ளாகுவார்கள்.