R3110 (page 349)
ரூத் 1:16-22
“சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்.” – (ரோமர் 12:10)
கர்த்தர் தம்முடைய ஜனங்கள் தமக்கும், தங்களுடைய உடன்படிக்கைக்கும் உண்மையற்றுப் போனதற்கான அவருடைய நியாயத்தீர்ப்பாக, கிதியோனுடைய நாட்களில் காணப்பட்ட பற்றாக்குறையானது – பாலஸ்தீனியாவில் பஞ்சமாக மாறிப்போன காலக்கட்டத்தில், நகோமியினுடைய கணவன் சவக்கடலுக்கு மறுபக்கத்தில் – மோவாப் தேசத்தில் தன் குடும்பத்தோடு குடியேறுவதற்குத் தீர்மானம்பண்ணினார். மோவாபியர்கள் லோத்தினுடைய சந்ததியினராய் இருந்தனர் மற்றும் இவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாகக் கருதப்படக்கூடாது என்றும், இவர்கள் ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தத்தைச் சுதந்தரிக்கப்போகிறவர்களோடு பங்காளிகளல்ல என்றும், இதனால் இவர்கள் இஸ்ரயேலர்கள் போன்று விசேஷித்த வழிநடத்துதல்களுக்கும், சிட்சித்தல்களுக்கும், வழிகாட்டப்படுதலுக்கும் கீழ்ப்பட்டவர்களல்ல என்றும் கர்த்தர் தம் ஜனங்களாகிய இஸ்ரயேலர்களுக்குத் தெரிவித்திருந்தார். நகோமியும், அவளது இரண்டு குமாரர்களும் எவ்வித வருத்தமும் இல்லாமல், குடும்பத்திற்கு நல்ல வளம் உண்டாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தன் கணவனோடு சென்றாள். எனினும் தாங்கள் கர்த்தருடைய விசேஷித்த பாதுகாப்பு மற்றும் வழிநடத்துதலின் கீழ்க்காணப்படுகையில், இப்படியாகத் தங்கள் சொந்தக் குடும்பக்காரியங்களைத் தாங்கள் வழிநடத்த முற்பட்டது தவறு என்று அவள் பிற்பாடு உணர்ந்துகொண்டாள்.
இஸ்ரயேலர்களென அவர்கள் திவ்விய வாக்குத்தத்தங்களை மிகவும் உயர்வாய்க் கருதி இருந்து, வாக்குத்தத்தத்தின் தேசத்தையும், வாக்குத்தத்தத்தின் ஜனங்களையும் விட்டு, இந்த வாக்குத்தத்தத்திற்கு அந்நியர்களாகவும், ஏறக்குறைய விக்கிர ஆராதனைக்காரராகவும் காணப்படுபவர்களோடு போய்க் கலந்திருக்கக்கூடாது. பூமிக்குரிய ஐசுவரியங்களைப் பார்க்கிலும் கர்த்தர் பக்கத்தில், அவர் ஜனங்கள் மத்தியில் காணப்படுவதையே மிக முக்கியமானதாகக் கருதியிருக்க வேண்டும். இது விஷயத்தில் நகோமி மீது குற்றஞ்சாட்டிட முடியாது; பொறுப்பு அவள் கணவன் மீதே காணப்பட்டது மற்றும் அவள் இருதயமானது இந்தக் குடிபெயரும் விஷயத்திற்கு முழுச் சம்மதத்தோடு
இருக்கவில்லை என்பது உறுதியே ஏனெனில் பத்து வருஷங்களுக்குப் பின்பு, அவளது கணவனும், அவள் இரண்டு குமாரர்களும் மரித்துப்போன பிற்பாடு, அவள் உடனே கர்த்தருடைய ஜனங்களிடத்திற்கும், அவர் அவர்களுக்குக் கொடுத்திருந்த தேசத்தினிடத்திற்கும் திரும்பிடுவதற்கு முடிவெடுத்தாள்.
மனித சுபாவம் இப்படியாகவே எங்கும் மற்றும் எப்போதும் காணப்படுகின்றது. எத்தனை பேர்கள் தங்கள் மேலான நன்மைகளை அலட்சியம்பண்ணினவர்களாகவும், கர்த்தருடைய வாக்குத்தத்தத்தையும், அவரோடு உடன்படிக்கைப்பண்ணினதன் மூலம் அவரோடு கொண்டிருக்கும் உறவினையும் அலட்சியம்பண்ணினவர்களாகவும் காணப்பட்டு, தற்கால ஜீவியத்திற்கான திட்டங்களைத் தீட்டிட தவறுதலாய் நாடிச்செல்கின்றனர்! தம்மோடு உடன்படிக்கைப்பண்ணியுள்ள ஜனங்கள் அனைவரின் காரியங்களைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்பதும், சகலத்தையும் அவர்களது நன்மைக்கேதுவாய் நடக்கப்பண்ணிடுவார் என்பதும்தான், உடன்படிக்கைப்பண்ணியுள்ள ஜனங்களுக்கான [R3110 : page 350] கர்த்தருடைய ஏற்பாடாய் இருக்கின்றது என்பதை எத்தனை பேர் மறந்து போய்விடுகின்றனர்! பூமிக்கடுத்த நலன்களைப் பிரதானமாய்க் கவனத்தில் கொள்வதற்குப் பதிலாக, நகோமியின் கணவன் தனக்கான மற்றும் தன் குடும்பத்திற்கான மத விஷயத்திற்கடுத்த நலன்களையே பிரதானமாய்க் கவனத்தில் கொண்டிருந்து, ஒருவேளை தான் மோவாபிய தேசத்தில் மகா செழிப்பில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், தான் கர்த்தருடைய ஜனங்கள் காணப்படும் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குச் செல்வது என்பது தனது பூமிக்குரிய நன்மைகளில் சிலவற்றை இல்லாமலாக்கிப் போடுவதாக இருப்பினும், வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குச் செல்வதற்கு விருப்பமாய் இருந்திருக்க வேண்டும்.
ஆவிக்குரிய நன்மைகளுக்கடுத்த காரியங்களுக்கே எப்போதும் முன்னுரிமைக்கொடுக்கப்பட வேண்டும் என்றும், நித்தியமான நன்மையின் கண்ணோட்டத்திலேயே – ஆவிக்குரிய வளர்ச்சி, விருத்தி மற்றும் வளமையின் கண்ணோட்டத்திலேயே – தங்கள் குழந்தைகளுக்கான மேலான நன்மைகள் மற்றும் செல்வாக்குகளின் கண்ணோட்டத்திலேயே – பூமிக்கடுத்த காரியங்கள் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் உள்ள இந்தக் கருத்தினை ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய கர்த்தருடைய ஜனங்கள் தொடர்ந்து மனதில் கொண்டிருப்பது நலம். தங்களையும், தங்கள் குடும்பங்களையும் சாதகமற்ற, தேவபக்தியற்ற சூழ்நிலைக்குள் எடுத்துச் செல்லுவதற்குரிய எந்த ஆலோசனைகளைப் பின்பற்றிடுவதற்கும் இவர்கள் தயக்கம் கொள்ள வேண்டும் என்பது மாத்திரமல்லாமல், எதன் நிமித்தமும் அத்தகைய ஆலோசனைகளின்படி நடக்கமாட்டோம் என்று தீர்மானமாய்க் காணப்பட வேண்டும்; இன்னுமாகக் கர்த்தருடைய [R3111 : page 350] ஜனங்களையே இவர்களின் ஜனமாகக் கொண்டிருப்பது என்பது இந்தத் தற்கால ஜீவியத்தினுடைய சௌகரியங்களை, ஆடம்பரங்களைக் குறைவுபடுத்துவதாய் இருப்பினும், இப்படிக் கொண்டிருக்கவே தீர்மானமாய்க் காணப்பட வேண்டும்; மேலும் இது மகா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், தற்காலத்திற்குத் தயவுகளையும் கொணர்கின்றதாய் இருக்கும் மற்றும் இப்படியே தொடர்ந்தால்… தங்கள் வீடுகள், நிலங்கள், உறவினர்கள் முதலானவைகளைக் காட்டிலும் கர்த்தரை அன்புகூருகிறவர்களுக்கு அவர் வாக்களித்துள்ளதான மகிமையான பலனை அடைவதற்கு ஏதுவாகும்.