R2991 (page 110)
கேள்வி: — “அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன” என்று அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 7:14-ஆம் வசனத்தில் கூறியிருக்கின்றார். (1) எந்த விதத்தில் விசுவாசி, அவிசுவாசியினைப் பரிசுத்தப்படுத்துகின்றான்? சத்தியம் பரிசுத்தமாக்குகிறதல்லவா? மேலும் சத்தியம் மூலம் தேவன் பரிசுத்தமாக்குகிறாரல்லவா? கர்த்தருக்கும், அவர் ஊழியத்திற்கும் என்று நம்மைப் பிரித்தெடுக்கும் விதத்தில் அவர் நம்மைப் பரிசுத்தமாக்குகிறாரல்லவா? அப்போஸ்தலன் என்ன அர்த்தத்தில் கூறியுள்ளார்? (2) இந்த வசனத்தின்படி எந்த விதத்தில் பிள்ளைகள் பரிசுத்தமாயிருக்கின்றனர்? பரிசுத்தம் ஏதும் தரிப்பிக்க / சாற்றப்படுகின்றதா? பிள்ளைகள் தங்கள் பெற்றோர்கள் மூலமாகத் திவ்விய சுபாவத்தில் பங்குகொள்பவர்களாய் இருப்பார்கள் என்று சொல்லலாமா? அப்போஸ்தலன் என்ன அர்த்தத்தில் பேசியுள்ளார்?
பதில்: — இவ்வசனத்தில் இடம்பெறும் “sancify” மற்றும் “holy” (பரிசுத்தமாகுதல்) எனும் வார்த்தைகளானது, வேறு வேதவாக்கியங்களில் இடம்பெறும் இவ்வார்த்தைக்கான அதே அர்த்தத்தினை இங்குப் பெற்றிருப்பதில்லை. அப்போஸ்தலன் இவ்வசனத்தில் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் மத்தியில் சிலர் அவிசுவாசிகளுடன் அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கும் காரியத்தினை – அதாவது சத்தியம் பெற்றுக்கொண்டு, சத்திய ஆவியின் வெளிச்சமூட்டும் செல்வாக்கின்கீழும், வசனம் வாயிலாய்ப் பரத்திலிருந்து வரும் ஆலோசனைக்கீழும் வருவதற்கு முன்னதாக அவிசுவாசிகளுடன் திருமணம்பண்ணிக் காணப்படும் கர்த்தருடைய ஜனங்களின் காரியத்தினைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றார்.
(விசுவாசியான மற்றும் அவிசுவாசியான) கலப்புப் பெற்றோருக்குப் பிறக்கும் பிள்ளைகளின் பரிசுத்தம்குறித்த கேள்வியே விவாதிக்கப்பட்டது. அப்படியானவர்களின் பிள்ளைகள் அவிசுவாசியான ஒரு பெற்றோரின் காரணமாய்த் தேவனுக்கும், அவரது தயவுகளுக்கும் அந்நியர்களாக, புறம்பானவர்களாகக் கருதப்படுவார்களா அல்லது விசுவாசியான ஒரு பெற்றோரின் மூலமாகப் பிள்ளையானது தேவனிடத்தில் தயவுபெற்றிருக்கும் உறவில் காணப்படுமா? அப்போஸ்தலர்களின் நாட்களில் காணப்பட்டதுபோலவே, இன்றும் இந்த முக்கியமான கேள்வியானது தெளிவாய்ப் புரியப்பட்டுக் காணப்படுகிறதில்லை அப்போஸ்தலரின் நாட்களில் ஜனங்கள் யூதருடைய சட்டத்திலிருந்து ஆதாமின் சந்ததியார் யாவரும், அவரின் விழுகையிலும், அவர் மூலமாய் அனைவர்மீது வந்த ஆக்கினையிலும் பங்கடைந்தார்கள் என்பதையும், அனைவருமே சுபாவத்தின்படி “கோபாக்கினையின் பிள்ளைகளாக” காணப்படுகின்றனர் என்பதையும் அறிந்திருந்தார்கள் (எபேசியர் 2:3). இஸ்ரயேல் தேசத்தார் மற்றத் தேசங்கள் மத்தியிலிருந்து ஒரு நியாயப்பிரமாண உடன்படிக்கையின் வாயிலாகத் தூக்கியெடுக்கப்பட்டனர் என்பதையும், அந்தத் தேசத்தில் பிறந்த யாவரும் அந்த உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளுக்குக்கீழ்ப் பிறந்தவர்களாய் இருக்கின்றனர் என்பதையும், இதற்கு வெளியே பிறந்த யாவரும் தேவனுக்கும், அவரது ஏற்பாடுகளுக்கும் அந்நியர்களாகவும், புறம்பானவர்களாகவும் காணப்பட்டனர் என்பதையும் அப்போஸ்தலரின் நாட்களில் இருந்தவர்கள் அறிந்திருந்தனர். இப்பொழுதும் ஒரு புதிய உடன்படிக்கையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது நியாயப்பிரமாண உடன்படிக்கையின் இடத்தினை எடுத்துள்ளது என்றும் புரிந்துகொண்டனர்; மேலும் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் வந்து, அதன் தயவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், உடன்படிக்கையின்கீழ் வருவதற்குச் சில வழிவகைத் தேவைப்பட்டது போலவே, புதிய உடன்படிக்கையின் கிருபைகளுக்குக்கீழ் வருவதற்கும்கூடச் சில வழிமுறைகள் உண்டு என்று அவர்களால் உடனே புரிந்துகொள்ள முடிந்தது. விசுவாசியான கணவன் அல்லது விசுவாசியான மனைவி புதிய உடன்படிக்கையின்கீழ்க் காணப்படுகையில், அவிசுவாசியான கணவனுக்கு அல்லது அவிசுவாசியான மனைவிக்கு இவ்விஷயத்தில் எந்தப் பங்கும், பாகமோ இருப்பதில்லை என்பதையும் அவர்களால் காணமுடிந்தது. அப்போஸ்தலர் எந்தக் கேள்விக்குப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தாரோ அந்தக் கேள்வியைப் பின்வருமாறு தொகுத்திடலாம்: நம் குழந்தைகள் காரியமென்ன? பிள்ளைகள் பகுத்தறியும் வயதை அடைந்து அவர்களை நாம் கர்த்தருக்கு அறிமுகப்படுத்தி, அப்போது பிள்ளைகள் அவரை ஒருவேளை ஏற்றுக்கொண்டால், பின் அவரது பாதுகாப்பின்கீழ்க் காணப்படுவார்கள் என்று நாம் பிள்ளைகளைக்குறித்துக் கருதிடும் காலத்திற்கு முன்புவரையிலும் நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டுமா? அல்லது புதிய உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளின்கீழ்ப் பிள்ளைகளைக் கொண்டுவந்திடுவதற்கு வழி ஏதேனும் உள்ளதா? அப்போஸ்தலனின் பதில் என்னவெனில்: தேவன் தமக்குச் சொந்தமாயிருக்கும் எந்த ஒரு பெற்றோரின் பிள்ளையையும் தமக்குச் சொந்தமானதாகக் கருதுகின்றார்; இப்படியாகப் பிள்ளைகள் கருதப்படுகின்றபடியால், பிள்ளைகள் அவரால் பாவிகளாய் இராமல், மாறாக பாவம் இல்லாதவர்களாக, நீதிமானாக்கப்பட்டவர்களாக [R2991 : page 111] எண்ணப்படும் விதத்தில் கையாளப்படுகின்றனர். அநீதிமான் நிலை என்பது பாவநிலையாக இருப்பதுபோன்று, நீதிமானாக்கப்பட்ட நிலை என்பது பாவத்தை அகற்றின அல்லது பாவத்தைமூடின அல்லது பாவம் கடந்துபோன ஒரு நிலையாக இருக்கும்; ஆகையால் தூய்மையான / பரிசுத்தமான ஒரு நிலையாக இருக்கும் – எனினும் இது ஜீவபலிகளெனக் கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம்பண்ணுவதன் மூலம் வருமென வேதவாக்கியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதான பரிசுத்தமாகுதலல்ல. தங்களுடைய பெற்றோர்களின் நீதிமானாக்கப்படுதலில் பங்கடையும் இத்தகைய பிள்ளைகள் “விசுவாச வீட்டாரில்” அடங்குபவர்களாகக் கருதப்படலாம், எனினும் இவர்கள் எந்தவிதத்திலும் தங்களையே ஜீவபலிகளென ஒப்புக்கொடுக்கும் பரிசுத்தவான்களாகிடுவதில்லை. ஆகையால் இவர்கள் எந்த விதத்திலும் “கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களென,” ஆவிக்குரிய சுபாவத்திற்குப் புத்திரசுவிகாரத்தின் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களெனக் கருதப்படமுடியாது.
விசுவாசியான கணவன் அல்லது விசுவாசியான மனைவி, அவிசுவாசியான கணவன் அல்லது மனைவியைப் பரிசுத்தமாக்குகிற காரியத்திற்கு வரலாம்: குழந்தையானது பாதிக் கர்த்தருடையதாகவும், பாதிக் கோபாக்கினையின் பிள்ளையாகவும் காணப்படாமல், மாறாக முழுமையாகக் கர்த்தருடையதாகவும், சிசுப்பருவம் முதற்கொண்டு பிள்ளையானது விசுவாசியான பெற்றோருக்கு இருக்கும் அதே அளவில் உள்ள அவரது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்கீழ்க் காணப்படுவதாகவும் கருதப்படத்தக்கதாக வேண்டி, இனப்பெருக்கத்தின் வல்லமைகள் செயல்படும் விஷயத்தில், கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளைமீதான அவரது கிருபையானது… ஜீவித துணைமீதும் கடந்துவருகின்றது.