(Q648:2)
கேள்வி (1909)-2- துணிகரமான பாவங்கள் என்றால் என்ன என்று தயவாய் விவரியுங்கள் மற்றும் அவை எப்படித் திருத்தப்பட அல்லது மன்னிக்கப்பட அல்லது மறக்கப்பட முடியும்?
பதில் – ——————————————————————————————————————————————————————————————————————————————-
[தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி]
மற்றுமொரு கருத்து: இந்தப் பாவங்களை நாம் கர்த்தரிடம் ஜெபத்தில் கொண்டுசெல்கையில், எந்தமட்டும் இவைகள் மன்னிக்கப்படுகின்றன; அவர் எப்படி இவைகளை மன்னிக்கின்றார்; மேலும் ஒருவேளை மன்னிக்கின்றாரானால், ஏன் அதிகமான சிட்சை, மன்னிப்பைப் பின்தொடர்ந்து வருகின்றது? இரண்டு காரியங்களும் இசைவாகவே இருக்கின்றது என்று நான் பதிலளிக்கின்றேன். பின்வருமாறு அதை விளக்கிடலாம்: நீங்கள் உங்கள் பிள்ளையிடம்: “நீ தவறு செய்திருக்கின்றாய் மற்றும் நான் உன்னைத் தண்டித்தாக வேண்டும்; தண்டனை என்னவெனில் இரவு உணவில் உனக்கு இனிப்பு / மிட்டாய் வழங்கப்படாது” என்று சொல்லுகின்றீர்கள். ஒருவேளை பிள்ளையானது சரியான மனநிலைமையில் காணப்பட்டால் மற்றும் பயிற்றுவிக்கப்பட வேண்டிய விதத்தில் முறையாய்ப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தால்… பிள்ளையானது இனிப்பு மறுக்கப்பட்டதைவிட, பெற்றோருடைய மறுப்பைக்குறித்தே வருந்திடும். இனிப்புப்பண்டம் மறுக்கப்பட்டதே உண்மையான தண்டனையாக இருக்க, முறையாய்ப் பயிற்றுவிக்கப்பட்ட பிள்ளையானது, இனிப்புப்பண்டம் கிடைக்காத விஷயத்தைவிட, பெற்றோரின் கோபத்தைக்;குறித்தே அதிகமாய் உணர்ந்துகொள்ளும். இதனால் பிள்ளை, “என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூறிடும். பெற்றோர் பிரதியுத்தரமாக: “உன்னை நான் மன்னித்தாலும், உனக்கு இனிப்புப்பண்டம் கிடையாது” என்று கூறிடலாம்; பிள்ளையோ பிரதியுத்தரமாக: “நான் பண்டம்குறித்து எண்ணவில்லை மாறாக நான் உங்களை எவ்வளவு கஷ்டப்படுத்திவிட்டேன் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கின்றேன்” என்று கூறிடும். நீங்களோ தயவு பாராட்டும் முகப்பாவனையுடன்: “சரி என் அன்புக்குரிய பிள்ளையே நீ முற்றிலும் மன்னிக்கப்பட்டுவிட்டாய்” என்று கூறிடலாம்; நீங்கள் அங்கீகரிப்பின் முத்தத்தைப் பிள்ளைக்குக் கொடுத்திடலாம்; ஆனாலும் பிள்ளையானது இனிப்புப்பண்டத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று கூறிடுவீர்கள்: பிள்ளையும் “சரி” என்று கூறிடும். இதுவே கர்த்தருடைய ஜனங்களுக்குப் பரம பிதாவுடன் காணப்படும் உறவிற்கான விளக்கமாகும்.