R4401 (page 150)
ரோமர் 13:8-13
“கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (ரோமர் 13:14)
R4402 : page 151
சீராய் / Honesty என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதான வார்த்தையானது becomingly / பொருத்தமாய்/ மாறுதல் என்று இன்னும் சரியாய் மொழிப்பெயர்க்கப்படலாம்; அதாவது நம்முடைய விசுவாசத்திற்கு, நம்முடைய நம்பிக்கைக்கு, கர்த்தரைப்பற்றின நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு, பகலின் வெளிச்சம்பற்றின நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு இசைவாக நாம் பொருந்துதல் / மாறிக்கொள்வதாகும். வேறுபடுத்திக் காண்பிக்கும்பொருட்டு, இரவுக்குரிய சில விஷயங்களைக்குறிப்பிடுகின்றார்; இவைகள் இதன் கீழ்த்தரமான தோற்றத்தில் மாத்திரமல்லாமல், இதன் மிகுந்த நாகரிகமான தோற்றத்திலும்கூட நமக்குத் தகுதியற்றதாகுகின்றது. மதுகொண்டு வெறியில் காணப்பட வேண்டாம். நிச்சயமாய் எந்த ஒரு பரிசுத்தவானும் விருந்துகளிலோ (அ) விழாக்களிலோ / களியாட்டுகளிலோ சொல்லர்த்தமாய் மதுபான வெறிக்கொள்ளமாட்டான். ஆனால் மிகுந்த நாகரிகமான தோற்றத்திலுள்ள வெறிகொள்ளுதலும் மற்றும் களியாட்டுகளும் நிச்சயமாய் இருக்கின்றன. ஏதோ ஒரு வகையான இன்பக் களியாட்டுகளில், மோட்டார் வண்டிகளில், குழிப்பந்தாட்டங்களில் (Golf), கிரிக்கெட் / பந்து விளையாட்டுகளில் (cricket) அல்லது விறுவிறுப்பான சமூக கேளிக்கைகளில்/குழுக்களில் ( social whirl ) ஒருவர் வெறிக்கொள்ளலாம். இவைகள் அனைத்தும் உண்மை கிறிஸ்தவன், புதிய யுகத்தினுடைய காலைக்குரியவைகளல்ல என்றும், தற்கால சத்தியத்தினுடைய வெளிச்சத்திற்கு இசைவற்றது என்றும் அடையாளங்கண்டுகொள்ள வேண்டும்; இந்தத் தற்கால சத்தியத்தின் வெளிச்சமானது – புதிய யுகத்தினுடைய துவக்கத்தில் நாம் எங்கே நிற்கின்றோம் என்பதையும், தற்கால ஜீவியத்தைப் பலி செலுத்திடுவதற்கும் மற்றும் இராஜ்யத்தின் மகிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் எத்தனை அருமையான வாய்ப்புகள் காணப்படுகின்றது என்பதையும் நமக்குக் காண்பிக்கின்றதாய் இருக்கின்றது.
கிறிஸ்தவர்களென நாம் வேசித்தனத்திலும் (முறையற்ற தொடர்பிலும்), காமவிகாரத்திலும் (சுயத்தைத் திருப்திசெய்தலிலும்) நடக்கக் (ஜீவிக்க) கூடாது. இந்த அனுபவங்கள் சிலருக்கு இவைகளினுடைய கீழ்த்தரமான விதத்திலும் / தோற்றத்திலும், ஆனால் மற்றவர்களுக்கு நிச்சயமாய் மிகுந்த நாகரிகமான விதத்திலும்/தோற்றத்திலும் வரும். எந்த ஒரு தளத்திலும் ஒளிக்கும், இருளுக்கும் எந்த ஐக்கியமோ (அ) உறவோ இருப்பதில்லை காரணம் இரண்டுமே எதிர் எதிரானவைகளாகும். ஆகையால் இருளின் காரியங்களோடு, பாவத்தின் காரியங்களோடு, மாயமந்திரங்களின் காரியங்களோடு, கர்த்தருடன் முழு இசைவில்லாமல் காணப்படும் காரியங்களோடுள்ள எந்தச் சம்பந்தமும் – முறையற்ற மற்றும் நியாயமற்ற தொடர்பாகும் (அ) ஐக்கியமாயிருக்கும். இதுபோலவே காமவிகாரத்தின் (சுயநலத்தின்) விஷயமும் – நாகரிக வகையான சுயநலத்திற்கும் (சுய திருப்திக்கு), வேட்கைகளுக்கு அளவுக்கு அதிகமாகச் சலுகைக்காட்டுதலுக்கும் பொருத்தப்படலாம்; மற்றும் கர்த்தருக்காய், சத்தியத்திற்காய், சகோதர சகோதரிகளுக்காய் ஊழியம் புரிவதற்கு அல்லது நம்முடன் தொடர்புக்குள் வருகிற யாவருக்கும் வாய்ப்பிற்கேற்ப நன்மை செய்வதற்குமான நம்முடைய அர்ப்பணிப்பின் வாக்குறுதிக்கு இசைவாக, பூமிக்குரிய இன்பங்களைப் பலிசெலுத்திட தவறிடுவதற்குப் பொருத்தப்படலாம்.
கிறிஸ்தவன் வாக்குவாதத்திலும், பொறாமையிலும் ஜீவிக்கக் (நடக்க) கூடாது. இதிலும்கூடக் கீழ்த்தரமான தோற்றமும், நாகரிகமான தோற்றமும் / விதமும் உண்டு. உலகத்தைப் பொறுத்தமட்டில் வாக்குவாதத்தினுடைய கீழ்த்தரமான தோற்றம் என்பது, குத்துச்சண்டையாகவும், சரீரப்பிரகாரமான எதிர்ப்பாகவும் புரிந்துகொள்ளப்படலாம் மற்றும் கடுமையான பொறாமையானது உண்மையிலோ (அ) இருதயத்திலோ பொல்லாப்பான செய்கைகளுக்கும் மற்றும் கொலைப்பாதகங்களுக்கும் வழிநடத்துவதாய் இருக்கும் என்று புரிந்துகொள்ளப்படலாம்; இல்லையேல் இந்த எச்சரிப்புகளானது மிகுந்த நாகரிகமான விதத்தில் பரிசுத்தவான்களுக்கு, பின்வரும் புத்திமதியாகப் பொருத்திப்பார்க்கப்படலாம்: நம்முடைய ஜீவியங்கள் சண்டைத்தனமாக இருக்கக்கூடாது; நாம் சமாதானத்தைப் பின்பற்றி, சமாதானத்திற்கு ஏதுவானவைகளை எங்கும் – நம்முடைய சொந்தக் குடும்பத்தில், நம்முடைய அயலகத்தாரிடத்தில், அருகாமையிலும், தொலைவிலும் காணப்படும் கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் – ஆதரித்திட நாடிட வேண்டும். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.” பொறாமையானது, நாகரிகமான தோற்றத்தில் கிட்டத்தட்ட மனுக்குலம் முழுவதிலுமே காணப்படும். பொறாமையே, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதற்கான முக்கியக் காரணமாய்க் காணப்படுகின்றது; இது புதிய சிருஷ்டியால் பெரும்பாலும் அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றது. பொறாமை எனும் தீய பண்பே நமக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி அதிகமான பாதகம் ஏற்படுத்துமே ஒழிய, மற்றபடி வேறு எதுவுமல்ல. நாம் இவைகளைக் களைந்துபோட்டுவிட வேண்டும்.