R4093 (page 350)
[R4094 : page 351]
அறம் இல்லத்திலேயே துவங்குகின்றது – SUB HEADINGஅன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:-எனக்கு விசேஷித்த விதத்தில் தாங்கள் பாஸ்டராக இருக்கின்றபடியாலும், அனைவர் மீதும், இன்னுமாக அறுவடை சத்தியத்தினைக் கொஞ்சமே அறிந்துள்ளவர்கள் மீதுமான தங்களுடைய ஆழமான அக்கறைக் குறித்து நான் அறிந்திருப்பதினாலும், என் மனதில் நீண்டகாலமாய்க் காணப்பட்டுவரும் ஒரு காரியத்தினைக் குறித்து உங்களுக்கு இப்பொழுது எழுதுகின்றேன்.இதைச் சொல்வதற்கு நான் வேதனைப்படுகின்றேன், மிகவும் வேதனைப்படுகின்றேன்; சத்தியத்தில் காணப்படுபவர்களும், முழுமையான அர்ப்பணம்பண்ணியுள்ளதாகத் தங்களைக்குறித்து அறிக்கைப்பண்ணிக்கொள்கின்றவர்களுமான சகோதரர்களுடன் நெருக்கமாய் நான் பழகுகையில், சத்தியத்தின் விஷயத்தில் இவர்கள் தங்கள் குடும்பத்தினரை மிகவும் மோசமாய்ப் புறக்கணித்துள்ளதை அநேகந்தரம் கண்டிருக்கின்றேன். தங்கள் நண்பர்கள் மற்றும் அயலகத்தார் மத்தியில் சத்தியத்தினைப் பரப்பிடுவதற்கு ஆவலாய்க் காணப்படும் இச்சகோதரர்கள், தங்கள் மனைவிமார்கள் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியத்தக்கதாக எந்த ஏற்பாடுகளும் செய்கிறதில்லை மற்றும் சத்தியமானது தங்கள் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்குரியதல்ல எனும் எண்ணத்தைப் பதியவிடும் விதமாகக் குடும்பத்தின் முன்னிலையிலுள்ள இவர்களது சம்பாஷணைகளும் கூடக் காணப்படுகின்றது.சத்தியத்தினைப் புரிந்துகொள்வதற்குப் போதுமான அறிவுத்திறனைப் பெற்றிருந்தும் மற்றும் வேதாகமப் பாடங்களினுடைய ஆறு தொகுதிகள் மற்றும் வாட்ச் டவர் கட்டுரைகளைப் (ரீப்பிரிண்ட்ஸ்) படித்த பிற்பாடும், எப்படி ஒரு மனுஷனால் இப்படிப் பேசமுடியும் அல்லது பேசுகின்றார், செய்யமுடியும் அல்லது செய்கின்றார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை!அநேகமாக அதிகம் பெலனில்லாத மனைவியினிடத்தில் குடும்பத்திற்கடுத்த காரியங்கள் மற்றும் பிள்ளைகளினுடைய பராமரிப்பிற்கடுத்த பராமரிப்பு அனைத்தையும் கணவன் விட்டுச் செல்கின்றார் மற்றும் தன் ஓய்வு நேரம் முழுவதையும் வீட்டில் இருக்கையில், சத்தியம் படிப்பதற்கெனச் செலவிடுகின்றார்; ஞாயிற்றுக்கிழமை காலையில் தன் மனைவிக்கு உதவுவதற்கும், அவளை ஊக்குவிப்பதற்கும் பதிலாக, கணவன் விழித்துக்கொள்கின்றார், உணவு உட்க்கொள்கின்றார், துணிகள் மாற்றிக்கொள்கின்றார் மற்றும் புறப்பட்டுச் செல்கின்றார் மற்றும் கூட்டத்திலிருந்து திரும்பிவருகையில் சூடான மாலை உணவினை எதிர்ப்பார்ப்பதாக மனைவியை அறியப்பண்ணுகின்றார் மற்றும் இப்படி இருந்தால் அவளால் எப்படிக் கூட்டத்திற்குப்போக முடியும். இது நியாயமாக நிச்சயமாய் எனக்குத் தோன்றவில்லை. இதைக்காட்டிலும் பெயர்ச்சபை ஜனங்கள்கூட நன்றாய்ச் செய்கின்றனர்.சத்தியத்தினைப் பெற்றவராகவும், தன் பிள்ளைகளைப் பெயர்ச்சபை ஞாயிறு பள்ளியில் கலந்துகொள்வதற்குத் தடைப்பண்ணுகிறவராகவும், ஆனால் தன் பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கென்று எந்தப் பிரயாசமும் எடுக்காதவராகவும் காணப்படும் மனுஷனை என் இருதயத்தில் நான் பரிதாபமாகவே பார்க்கின்றேன்; மேலும் மூப்பர்களோ அல்லது தொகுதி விநியோகிப்பவரோ (colporteurs) இல்லத்தில் வருகையில், இவர்களால் ஜெபம்பண்ணிட கேட்டுக்கொண்டால் தவிர மற்றப்படி குடும்ப ஜெபமேபண்ணாத மனுஷனை என் இருதயத்தில் நான் பரிதாபமாகவே பார்க்கின்றேன். இப்படியாகத்தான் காரியங்கள் இருக்கின்றன.சபையாருடைய ஐக்கியத்திற்கென உண்மையில் வாஞ்சிக்கிற நிலையிலும் மற்றும் தன்னால் புரிந்துகொள்ள முடிந்த சத்தியம் அனைத்தையும் விசுவாசித்த நிலையிலும் மனைவி காணப்படுகையில், கணவன் ஒவ்வொரு ஞாயிறுக் கூட்டத்திலும் கலந்துகொண்டிருக்க, கணவனே மனைவியைத் தடைப்பண்ணிடும் உண்மையான காரணியாக இருந்துள்ள அநேகம் சந்தர்ப்பங்கள் என் தனிப்பட்ட கவனத்திற்கு வந்துள்ளது. இது விஷயத்தில் உங்கள் எழுத்துக்களின் ஒரு விசேஷித்த மற்றும் குறிப்பான கட்டுரை வருமானால், அது அநேகருக்கு நன்மை பயக்கின்றதாயிருக்குமென நான் நம்புகின்றேன்.இராஜாவினுடைய ஊழியத்தில் தங்கள்——————————————————————-,Tenn நாடு