R2688 – அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2688 (Page 261)

அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்

DO YE EVEN SO TO THEM

“ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” (மத்தேயு 7:12)

என்ன பரீட்சைகளை நாம் மேற்கொண்டாலும், மற்றவைகள் அனைத்தையும் காட்டிலும் இயேசு மற்றும் அவரது போதனைகளே மேலோங்கி நிற்கின்றதைக் காணமுடிகின்றது. உதாரணத்திற்குப் பொன்னான பிரமாணமானது கண்பூசியஸ் அவர்களின் எழுத்துகளிலும், புதிய ஏற்பாட்டிலும் காணப்படுகின்றது என்றும், இதுவே கண்பூசியஸ் அவர்கள் இயேசுவுக்கு நிகரானவராகவும், தேவனால் அனுப்பப்பட்டவராகவும், காணப்படுகின்றார் என்பதற்கு ஆதாரம் என்றும் நம்மிடம் அடிக்கடி தெரிவிக்கப்படுகின்றது. இப்படியான கூற்றினைத் தெரிவிப்பவர்களில் அநேகர் நேர்மையான எண்ணங்களுடன்தான் இப்படித் தெரிவிக்கின்றனர் என்பதில் எந்த ஐயமுமில்லை உண்மை என்னவெனில் இயேசுவினால் கொடுக்கப்பட்டதான பொன்னான பிரமாணத்தினுடைய ஆழத்தையும், அகலத்தையும் அநேகம் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் கண்டுணர்ந்ததில்லை மற்றும் கண்பூசியசால் எழுதப்பட்ட பழமொழியானது / கொள்கையானது பொன்னான பிரமாணத்திற்கு ஒத்திருப்பதுபோன்று தோன்றுவதினால், இரண்டும் ஒன்றே என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. பெருமளவில் வித்தியாசம் உள்ளன; மேலும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, கண்பூசியசின் வார்த்தைகள் ஆணவமான / Brazen சட்டமெனச் சொல்லப்படலாம். கண்பூசியஸ் அவர்களின் பழமொழியாவது: “மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யக்கூடாது என்று எண்ணுகின்றீர்களோ, அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதிருங்கள்.” இதுவே நமது கர்;த்தரினால் கொடுக்கப்பட்டதான பொன்னான பிரமாணத்தில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் பார்க்கப்படுகின்றது என்று நாம் மீண்டுமாகக் கூறுகின்றோம்.

கண்பூசியஸ் அவர்களின் பழமொழியானது முழு உலகத்திலுள்ள ஒவ்வொரு சிருஷ்டியினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், அதைக் காண்பதில் நாம் மகிழ்ச்சியடைந்திருப்போம்; மேலும் இப்படிச் செய்யப்பட்டிருக்குமானால் சந்தேகத்திற்கிடமின்றிப் பலனானது மனுக்குலத்திற்கு மாபெரும் ஆசீர்வாதமாகவே காணப்பட்டிருக்கும் – தற்போதைய நிலைமைகளில் மாபெரும் முன்னேற்றங்கள் சம்பவித்திருந்திருக்கும்; மேலும் கர்த்தருடைய அடிச்சுவடுகளில் தொடர்ந்து நடப்பதற்கு நாடிக்கொண்டிருப்பவர்களாகிய பரிசுத்தவான்களைத் தவிர மற்றப்படி கிட்டத்தட்ட அனைவருமே தினந்தோறும், தங்கள் அயலார் தங்களுக்கு எவைகளைச் செய்யக்கூடாது என்று விரும்புகின்றார்களோ, அதை மற்றவர்கள் விஷயத்தில் செய்யாதவர்களாய்க் காணப்பட்டிருப்பார்கள். இப்படிப் பெரிய அளவில் சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்பட வாய்ப்பிருப்பினும், இன்னமும் குறைவுகள் காணப்படவே செய்திருக்கும்; “உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போன்று பூலோகத்திலும் செய்யப்படுவதாக” என்ற நமது கர்த்தருடைய ஜெபமானது தெரிவித்திடும் நிலைமையில் உலகமானது காணப்படாமலே இருந்திருக்கும். ஏனெனில் மனுஷர்கள் கொள்கைகள் அல்லது ஏதேனும் மற்றக் காரணங்களின் நிமித்தம் ஒருவரோடொருவர் நீதியுடன் நடந்துகொண்டிருப்பார்கள் மற்றும் மற்றவர்கள் தங்களுக்குச் செய்யக்கூடாது என்று அவர்கள் கருதிடும் காரியங்களை மற்றவர்களுக்குச் செய்யாதவர்களாய்க் காணப்பட்டிருப்பார்கள் மற்றும் அவர்கள் அனைவரின் இருதயங்களும் முழுக்க சுயநலத்தினாலும், குறுகிய மனப்பான்மையினாலும், பேராசை முதலியவையினாலும் நிரம்பியிருந்திருக்கும் மற்றும் அன்பினின்று தூரமாயிருந்திருக்கும்.

ஆனால் நமது கர்த்தருடைய பொன்னான பிரமாணத்தினுடைய பரந்த தன்மையினை நாம் கவனிக்கையில், இது முற்றிலும் ஓர் அன்பின் பிரமாணம் என்றும், இதில் கூட்டவோ, குறைக்கவோ எதுவுமில்லை, இது முழுமையானதொரு பிரமாணம் என்றும் நாம் கண்டுகொள்கின்றோம். இது “தீமைச் செய்யாதே” என்று சொல்லுகிற எதிர்மறை (negative) பிரமாணமாய்க் காணப்படாமல், “நன்மை செய்வாயாக; உன் அயலான் உனக்குச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகின்றதான நன்மை யாவற்றையும், இரக்கம் யாவற்றையும், ஊழியம் யாவற்றையும், அவனுக்குச் செய்வாயாக” என்று சொல்லுகிற ஆக்கப்பூர்வமான (positive) பிரமாணமாய்க் காணப்படுகின்றது. “சுயாதீன பிரமாணம்” என்று அப்போஸ்தலனால் அழைக்கப்படும் இந்தப் பிரமாணத்திற்கு, இந்தப் பூரண பிரமாணத்திற்கு, ஜீவியத்திற்கான இந்தப் பொன்னான பிரமாணத்திற்கு, இணையான ஒரு பிரமாணமானது எங்குமில்லை, எவருடைய எழுத்துகளிலும் இல்லை மற்றும் இதற்கும் மேலாய்ப் பிரமாண்டமாய் வெளிப்படுத்தப்படவும் முடியாது. ஆனால் எத்தனை சொற்பமானவர்கள் இந்தப் பிரமாணத்தினைச் சரியாய்ப் புரிந்துகொண்டவர்களாகவும், இதனை விரும்புபவர்களாகவும் மற்றும் தங்களது சொந்த நடவடிக்கையினை அளந்துபார்த்திட இதனை தினந்தோறும் பயன்படுத்துகின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்! ஏற்கெனவே தெரிவித்திருந்ததுபோல பெரும்பான்மையானவர்கள், உலகத்திலுள்ள நல்ல ஜனங்கள்கூட, பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள்கூட இப்பிரமாணத்தினுடைய அகலங்களையும், நீளங்களையும் கவனிக்கத்தவறிப்போனவர்களாகக் காணப்பட்டு, மற்றவர்களுக்குப் பாதகம் செய்யக்கூடாது என்று சொல்லும் கட்டளையாக மாத்திரமே இதனை கண்நோக்குகின்றனர். அப்படியானால் எத்தனை சொற்பமானவர்கள் மாத்திரம் இதன் அம்சங்களைச் சந்தோஷத்தோடும், உணர்வோடும் கிரகித்துக்கொண்டவர்களாக, தங்கள் ஜீவியங்களை இப்பிரமாணத்திற்கு இசைவாகப் பெற்றிருக்கத்தக்கதாக இருதயத்திலிருந்து நாடுகின்றவர்களாய்க் காணப்படுவார்கள்! வேறுயாருமல்ல பரிசுத்தவான்களே, வேறுயாருமல்ல “தெரிந்துகொள்ளப்பட்டவர்களே” தங்கள் பரம பிதாவினுடைய அன்பின் பிரமாணத்தினுடைய ஆவிக்கும், சாரத்திற்கும் இசைவான இருதய நிலைமையில் காணப்படுவார்கள்.

மற்றவர்களிடத்தில் அளவு மீறின தயாளம் காட்டியும், தங்கள் விஷயத்தில் போதுமாய் ஜாக்கிரதையாய் இல்லாமலும் இருப்பதன் வாயிலாகக் கர்த்தருடைய ஜனங்களில் சிலர் இந்தப் பிரமாணத்தினைத் தவறாயும், தங்களுக்குப் பாதகமான நிலைமையிலும் பயன்படுத்திவிடும் அபாயமும் உள்ளது; ஆனால் இம்மாதிரியான சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகவே காணப்படும், ஏனெனில் நம்முடைய ஒட்டுமொத்த சந்ததியார் விஷயத்திலும், விழுகையானது அன்பையும், தயாளத்தினையும் இல்லாமலாக்கிப்போட்டு, நம்மைச் சுயநலத்தினால் நிரப்பிப்போட்டது. இப்படியாகச் சூழ்நிலையாகிப் போனதாலேயே, “சுயத்தைப் பாதுகாப்பதே வாழ்க்கையின் முதல் சட்டமாகும்” எனும் பழமொழி உலகத்தில் காணப்படுகின்றது; சுயம் எப்போதும் முதலாவதாகக் காணப்பட வேண்டும் என்றும், மற்றவர்களைக் குறித்துக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக, நம்மைக் குறித்தே நாம் அக்கறைக்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக் காணப்படுகின்றது.

பரிசுத்த ஆவியினால் புதுச்சிருஷ்டிகளென நாம் ஜெநிப்பிக்கப்பட்ட பிற்பாடும்கூட, நம்முடைய மனங்கள் புதிதாகத் தொடங்கின பிற்பாடும்கூட, பழைய சுபாவத்தினுடைய சுயநலத் தன்மையானது, மிகவும் ஆழமாய் விதைக்கப்பட்டுக் காணப்படுகின்றபடியால், அது நம் ஜீவிதத்தின் முடிவுபரியந்தமும் நம்மீதான அதன் பிடியினைக் கொண்டிருக்கின்றது என்பதை அனுபவத்தின் வாயிலாக நாம் அனைவருமே அறிந்திருப்போம். கர்த்தருடைய சித்தத்திற்கு முழு இசைவுடன் காணப்பட வேண்டும் என்ற வாஞ்சையில் சிலர் இந்தப் பொன்னான பிரமாணத்தினை மிதமிஞ்சின கண்ணோட்டத்தில் எடுத்துக்கொண்டு, “உன் அயலான், அவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகின்றானோ, அதையே நீ உந்தன் அயலானுக்குச் செய்வாயாக” என்று பொன்னான பிரமாணம் தெரிவிப்பதாக எடுத்துக்கொள்கின்றனர்; மேலும் இப்படியாகப் பிரமாணத்தினை எடுத்துக்கொள்வது என்பது முற்றிலும் வேறுபட்ட பிரமாணமாய் இருக்கும் என்பதையும், எல்லா விதத்திலும் பாதகமாகவே காணப்படக்கூடும் என்பதையும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இப்படியாகச் சிலர்தான் தவறு செய்யும் அபாயம் இருப்பினும், அநேகர் இக்காரியத்தினை இக்கண்ணோட்டத்தில் சிந்தித்தவர்களாகப் பின்வருமாறு கூறுகின்றனர்: “இந்தப் பொன்னான பிரமாணத்தினை ஜீவியத்தின் அன்றாட காரியங்களில் எங்களால் கடைப்பிடித்திட முடியாது; உதாரணத்திற்கு என் அயலான் எனக்கு என்ன செய்ய நான் விரும்புவேனோ, அதையே நானும் என் அயலானுக்குச் செய்ய வேண்டுமெனில்… அப்படியானால் ஐந்து டாலர் மதிப்புள்ள ஒரு ஜோடி செருப்பினை நான் அயலானுக்கு ஒரு டாலருக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்… அல்லது இருபது டாலர் மதிப்புள்ள உடைகளை, ஐந்து டாலருக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்… அல்லது கோதுமையை அல்லது ஓட்ஸை பாதி விலைக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒருவேளை இப்படியான ஒரு பிரமாணத்தை நான் ஒருவர் விஷயத்தில் கடைப்பிடித்தேனாகில், நான் அனைவருக்குமே அதைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் மற்றும் இப்படியே தொடர்ந்தால் சீக்கிரத்தில் என்னுடைய தொழிலானது நஷ்டத்தைச் சந்திக்கும்; ஆகையால் பொன்னான பிரமாணமானது தற்காலத்தில் மனுஷன் சம்பந்தப்பட்ட காரியங்களில் கடைப்பிடிக்கப்படவே முடியாது.”

ஆனால் இது பொன்னான பிரமாணம் குறித்த தவறான கண்ணோட்டமாயிருக்கின்றது என்றும், இதைக் குறித்து நிதானித்துப் பார்த்தாலே ஒருவனுடைய சொந்த இருதயத்தில் காணப்படும் சுயநலமே பிரச்சனை என்பதைக் கண்டுகொள்ளலாம் என்றும் நாங்கள் பதிலளிக்கின்றோம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களைத் தெரிவித்து இருப்பவர், தனது அயலான் தன்னிடம் வாங்கும் பொருட்களை அதற்கேயுரியதான விலைக்குக் குறைவான விலையில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று தன்னிடம் எதிர்ப்பார்ப்பான், காரணம் தானும் தன்னுடைய அயலானிடம் பொருட்களை வாங்கும்போது அதற்கேயுரிய விலைக்குக் குறைவான விலையில் தனக்குத் தரப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பைக் கொண்டிருப்பான் என்ற சிந்தனை உடையவராய் இருக்கின்றார். பொன்னான பிரமாணத்தைக் கடைப்பிடிக்கும் காரியமானது [R2688 : page 262] இவருக்கு, இவரது பிரச்சனையைச் சுட்டிக்காண்பித்திடும்; இவர் செருப்பு வாங்கும்படியாக தனது அயலானிடம் செல்கையில், தனது அயலான் இவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று இவர் விரும்புவாரோ அதையே இவரும் அயலானுக்குச் செய்திட வேண்டும் என்றும், செருப்புகளுக்காக அயலானுக்கு நியாயமானதொரு விலையினை, ஜீவிப்பதற்கு நியாயமானதொரு இலாபத்தினை, தான் செலுத்திட வேண்டும் என்றும் உள்ள படிப்பினையைக் கற்றுக்கொடுத்திடும். மேலும் இப்படியே எல்லாப் பரிவர்த்தனைகளிலும் செய்திட வேண்டும். ஒருவேளை நாம் உற்பத்தியாளராய் இருந்து, பொருள்களை விற்கையில், நமக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்று விரும்புவோமோ அப்படிபோலவே – விவசாயினுடைய விளைச்சலுக்கு உரிய விலையைச் செலுத்திடுவதற்கும், உற்பத்தியாளருடைய பொருட்களுக்குரிய விலையினைச் செலுத்திடுவதற்கும் நாம் விருப்பம் உள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்று பொன்னான பிரமாணமானது நமக்குக் கற்றுத் தருகின்றதாய் இருக்கின்றது. இதுபோலவே ஒருவேளை நாம் விற்கிறவர்களாய் இருக்கையில் நம்முடைய வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக இலாபம் ஈட்டும் விதத்தில் விலை சொல்வதற்கு நாம் எண்ணிவிடக்கூடாது, அதாவது அவர்கள் ஒருவேளை விற்கிறவர்களாகவும், நாம் வாடிக்கையாளர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பதையே நாமும் அவர்களுக்குச் செய்திட வேண்டும். ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் யாரெல்லாம் ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் இந்தப் பொன்னான பிரமாணத்தைப் பயன்படுத்துவதில் நன்கு பழக்கமடைந்திருப்பார்களோ அவர்கள் நீதி, நியாயம், நேர்மை பற்றின தங்களது புரிந்துகொள்ளுதலானது இதினிமித்தம் அதிகமடைந்திருப்பதைக் கண்டுகொள்வார்கள்; மேலும் தேவனுக்கொத்த இந்தச் சாயல்களானது – அதாவது அவர்கள் ஆண்டவருடைய பொன்னான பிரமாணத்திற்கு இசைந்திருப்பதின் காரணத்திற்காக மாத்திரம் அல்லாமல், அவற்றின் உண்மையான அழகையும், பிரமாண்டத்தையும் அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் காரணத்தினாலும், அவற்றோடு அவர்களின் இருதயங்கள் இசைந்திருப்பதின் காரணத்தினாலும், அவற்றிற்கு அவர்கள் கீழ்ப்படியும் நிலையை அடைவது வரையிலும் தேவனுக்கொத்த இந்தச் சாயல்களானது – அவர்களது குணலட்சணங்களில் ஒரு பாகமென அவர்களில் அதிகமதிகமாய் வளர்ச்சியடையும்.

நீதியை மனதில் ஆழப் பதியவைத்திடும் இந்தப் பிரமாணமானது, இதையும் தாண்டி கருணையையும்கூட மனதில் பதியவைக்கின்றது; அதாவது நாம் ஒருவேளை தேவையில் இருப்பவர்களாகக் காணப்படும் பட்சத்தில், மற்றவர்களிடத்தில் நாம் எதிர்ப்பார்த்திடும் கருணையினை நம் மனதில் பதியச் செய்திடும். ஓ! கர்த்தருடைய உண்மையான பரிசுத்தவான்கள் இந்தப் பொன்னான பிரமாணத்தினுடைய செல்வாக்கின் கீழ் வருகையில் அவர்கள் ஆவிக்குரிய குணலட்சணத்தில் எத்துணை முழுமையடைந்தவர்களாக இருப்பார்கள்! இது ஜீவியத்தின் கிரியைகளை மாற்றி அவர்கள் அவர்களோடு கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருக்கும் அனைவரிடத்திலும் நீதியோடு காணப்படச் செய்து, பின்னர் அவர்களது உதவிக்கான தேவையில் காணப்படுபவர்கள் யாவருக்கும், தங்களால் முடிந்த உதவியினை யாருக்கும் பாதகமில்லாமல் செய்யத்தக்கதான கருணையுடையவராகவும் இருக்கச் செய்திடும் – மேலும் இது அவர்களிடத்திலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளின் விஷயங்களிலும்கூட அதன் தாக்கத்தைக் கொண்டிருக்கும். இந்தப் பொன்னான அளவுகோலினுடைய வழிநடத்துதலின் கீழ், கசப்பான அல்லது கோபமான அல்லது பழித்தூற்றுதலான வார்த்தைகள் குறைந்துவிடும்; ஏனெனில் இம்மாதிரியாகத் தங்களிடத்தில் கோபமாகவும், கசப்பாகவும் மற்றும் குரோதமாகவும் உள்ள வார்த்தைகள் பேசப்படுவதையோ அல்லது தங்களைக் குறித்துப் புறங்கூறப்படுவதையோ யாரும் விரும்புவதில்லை. கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டிருப்பவர்கள் கோபம், பகைமை, குரோதம், வாக்குவாதம், பொறாமை, தூஷணங்கள் முதலானவைகளைக் களைந்துபோட வேண்டும் என்று அப்போஸ்தலன் நம்மிடத்தில் கூறியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்னுமாக இந்தப் பொன்னான பிரமாணமானது அன்பான வார்த்தைகளை, கனிவான செயல்பாடுகளை, தாழ்மையான நடக்கையைக் கொண்டிருப்பதற்கும்கூட நம்மை வழிநடத்தும்; ஏனெனில் யார்தான் இப்படியெல்லாம் தனது அயலான் நடக்கக்கூடாது என்று எண்ணம்கொள்வார்கள்? அப்போஸ்தலர் மறுபடியும் சொல்வது போன்று சாந்தம், பொறுமை, தயவு, நீடியபொறுமை, சகோதர சிநேகம், அன்பு முதலான கிறிஸ்தவ குணங்களை நாம் தரித்துக்கொள்ள வேண்டும் (கொலோசெயர் 3:8- 10, 12-15).

வெளியரங்கமான கிரியைகளின் விஷயத்தில் துவங்கி, பின்னர் நம்முடைய வார்த்தைகளின் விஷயங்களையும் தாக்கத்திற்குள்ளாக்கும் இந்தப் பொன்னான பிரமாணமானது சீக்கிரமாய் நம்முடைய எண்ணங்கள் விஷயங்களிலும்கூட அதன் தாக்கத்தைக் கொண்டிருக்கும்; மற்றவர்கள் நம்மைக் குறித்து அற்பமாய் எண்ணுவதையோ, நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கிரியைகளைக் குறித்தும் தவறாகக் கற்பனை பண்ணிக்கொள்வதையோ நாம் விரும்புவதில்லை. மாறாக நம்முடைய வார்த்தைகளையும், நம்முடைய கிரியைகளையும், அன்போடும், இரக்கத்தோடும் கண்ணோக்க நாம் விரும்புவோம்; ஆகையால் இந்தப் பொன்னான [R2689 : page 262] பிரமாணத்தினுடைய செல்வாக்கின் கீழ் மற்றவர்களைக் குறித்த நமது எண்ணங்கள் மிகவும் கருணையோடும், மிகவும் பரந்த மனப்பான்மையோடும், சந்தேகிக்கும் தன்மை இல்லாமலும் காணப்படும்.

இந்தப் பொன்னான பிரமாணமே, நம்முடைய அருமை மீட்பர் வேறொரு தருணத்தின்போது, “உன்னை நீ அன்புகூருவதுபோல உன் அயலானையும் அன்புகூருவாயாக” என்று கூறி வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்திட்ட திவ்விய பிரமாணமாகும் என்பதில் உறுதியே. ஆகையால் ஒரு பிரமாணமானது, மற்றப் பிரமாணத்தினை விளக்குகின்றது என்றும், நாம் நம்மை அன்புகூருவதுபோன்று நம் அயலானை அன்புகூருவது என்பது, நம் அயலான் எவ்விதம் நம்மை அன்புகூரவும், நமக்கு எவற்றைச் செய்யவும் நாம் விரும்புகின்றோமோ, அவ்விதமே நாமும் நம் அயலானை அன்புகூர வேண்டும் மற்றும் அயலானுக்காய் நாம் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இதைவிட மேலான அர்த்தம் இருக்கும் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது. சட்ட ரீதியாகவோ அல்லது இரத்தபந்தத்தின் வாயிலாகவோ நாம் பொறுப்பைப் பெற்றிருப்பவர்களுக்காகவும் – நமது குடும்பத்தினர், நமது உறவினர்களுக்காகவும் மற்றும் நமக்காகவும் உள்ள நியாயமான தேவைகளைச் சந்திக்கும்படி தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கின்றார் என்று அப்போஸ்தலன் கூறியுள்ளார் -” ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8)

ஆகையால் நம்முடைய அயலாருக்கு நாம் எதையாகிலும் செய்வதற்கு முன்பதாக, நமது சொந்த வீட்டாரைக் குறித்தே நாம் முதலாவதாக அக்கறைக் கொள்ள வேண்டும், பொறுப்பேற்க வேண்டும் மற்றும் நியாயமான கவனம் செலுத்திட வேண்டும். இதினிமித்தம் நமது அயலாருக்கும், நமக்கும் இடையேயும், நமது அயலார் குடும்பத்திற்கும், நம்முடைய சொந்தக் குடும்பத்திற்கும் இடையேயும் வித்தியாசம் காணவேண்டும்; எனினும் இக்காரியமானது பொன்னான பிரமாணத்தினால் நன்கு சீர்ப்படுத்தப்படுகின்றது; நமது அயலான் தேவையின் சூழ்நிலையில் காணப்படுகையில் – நாம் ஒருவேளை அயலானின் சூழ்நிலைமையிலும், அவர் நம் நிலைமையிலும் காணப்பட்டால் அவர் நமக்கு என்ன செய்திட வேண்டும் என்று நாம் விரும்புவோமோ, அதையே நம்முடைய அயலான் தேவையின் சூழ்நிலையில் காணப்படுகையில் – நாம் அவருக்குச் செய்திட வேண்டும் என்று பொன்னான பிரமாணம் நம்மிடம் எதிர்ப்பார்க்கின்றது என்று பிரமாணம் குறித்துச் சரியாய்ப் புரிந்துகொள்ளப்பட்டால், நாம் தெரிந்துகொள்ளலாம். மேலும் நம்முடைய மனங்களானது, நீதியின் தளத்துடன் சமநிலையில் காணப்படுவதினால், நாம் பெருந்துயரத்தில் காணப்படுகையில், நம் அயலான் முதலாவதாக தன் சொந்தக் குடும்பத்திற்கு நியாயமான தேவைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்றும், அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு எதுவும் இல்லாமல் போகத்தக்கதாக அல்லது அவர்களுக்குப் பாதகம் உண்டாக்கத்தக்கதாக நமக்குக் கொடுத்து உதவிடக்கூடாது என்றும் நாம் எண்ணம் கொண்டிட வேண்டும்.