R4190 – கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R4190 (page 186)

கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று

PAY THY VOWS UNTO THE LORD

“அன்புக்குரிய சகோதரன் மற்றும் பாஸ்டர் அவர்களே:–

சபையில் இருபாலினருக்கிடையிலான தகுதியான நடத்தைக்கடுத்த காரியத்தைக்குறித்துச் சில காலங்களாகவே உங்களுக்கு எழுத வேண்டுமென்றிருந்தேன். கடந்த சில மாத காலங்களுக்குள் சில விஷயங்கள் என் கவனத்திற்கு வந்தபடியால், அத்தலைப்பை / பாடப்பொருளை உங்கள் கவனத்திற்கு நினைப்பூட்டுவது என்னுடைய கடமை என்று உணர்ந்தேன். என் கவனத்திற்கு வந்த அந்தக் குறிப்பிட்ட சம்பவங்களை உங்களுக்குத் தெளிவாகவும், முழுமையாகவும் என்னால் எழுத முடியும் என்றாலும், அப்படி எழுதுவதற்கான சுயாதீனம் எனக்கடுத்ததல்ல; ஆனால் எதிராளியானவன் அனைத்து நாடுகளிலும் இப்படியான விஷயத்தின் அடிப்படையில் கடுமையான தாக்குதல்களை ஏறெடுத்துக் கொண்டிருக்கின்றன; – அதாவது மாம்சத்தில் உறவினர்களாயிராத / உடன்பிறக்காதவர்களாயிருக்கும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையில் – கட்டிப்பிடிப்பது மற்றும் முத்தங்கள் கொடுப்பது மற்றும் அதிகப்படியான நேசமான வார்த்தைகளுள்ள கடிதங்கள் எழுதுவது முதலானவைகள் ஆவிக்குரிய பாசத்தின் தகுதியான வெளிப்படுத்தல்களாகவே இருக்கின்றன என்று [மாம்சத்திலும், ஆவியிலும் போதுமான அளவுக்கு வயதில் முதிர்ந்தவர்களாகிய] அருமையான சகோதரர்களில் சிலர் எண்ணிக்கொள்ளத்தக்கதாக, எதிராளியானவன் வஞ்சிக்கின்றான் என்று நான் நம்புமளவுக்கு நான் அச்சம்பவங்களைக் குறித்துக் கேள்விபட்டுமிருக்கின்றேன் மற்றும் கண்டும் இருக்கின்றேன்.

இத்தகைய மனப்பான்மையின் நிமித்தமான விளைவானது, நிச்சயமாகவே ஆவிக்குரியவற்றில் பெலவீனமடைதலாக இருக்கும்; இன்னுமாக ஊற்றி வழியப்படும் பாசத்திற்குப் பாத்திரமான வேறு சிலரைப் புறக்கணித்துவிடும் நிலைமையையும் மற்றும் இந்த வேறு சிலரிடம் அன்பற்றுக் காணப்படும் நிலைமையையும் சிலசமயங்கள் உண்டாக்கிவிடும். ஒருவேளை எதிராளியானவன் தன் திட்டத்தில் வெற்றியடைவானாகில், மிகுந்த ஒழுக்கக்கேடும், நாம் அன்புகூருகின்றதான தேவ நோக்கங்களுக்கு வெளியரங்கமான அவமானமும் நிச்சயமாய்க் கடந்துவரும். இப்படி வர வேண்டுமா? தேவன் தடுத்திடுவாராக! அவரால் முடியும் மற்றும் அவர் நம்மை விடுவிப்பார் என்று நான் நம்புகின்றேன். அந்த அருமையான சகோதரரின் இருதய நோக்கங்கள் தூய்மையானவையாய் இருக்குமானால் (தூய்மையானது என்றே நான் நம்புகின்றேன்), அப்படியானால் இவ்விஷயமானது நிச்சயமாகவே சாத்தானுடைய வஞ்சனையே ஆகும்.

இப்பொழுதும் அருமை சகோதரர் ரசல் அவர்களே, இக்கடிதத்தில் நான் கீழே மேற்கோளிட்டுக் காட்டியுள்ள ஆறாம் தொகுதியினுடைய 651, 652-ஆம் பக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ள காரியங்கள் தொடர்பாக, தாங்கள் தெளிவான மற்றும் அதேசமயம் மாற்றி அர்த்தம் எடுக்க முடியாத வார்த்தைகளில் வாட்ச் டவர் கட்டுரை ஒன்றை வெளியிட தங்களிடம் கேட்டுகொள்ள விரும்புகின்றேன். இவ்வகையான நடத்தையை விமர்சிக்கத் துணியும் எவரும், “”தீமை பேசுகிறார்கள்”” என்றெல்லாம் சொல்லிக் கடிந்துகொள்ளப்படுவதற்கு உங்களது எழுத்துகளையும், வேதவாக்கியங்களையும் சிலர் திரித்துப் பயன்படுத்துவதை நான் அறிந்துள்ளபடியால் நீங்கள் இப்படிச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

இக்காரியத்தை முன்வைத்ததில் நான் அதிகப்படியான துணிச்சல் காட்டியிருப்பேனாகில், அருமையான சகோதரனே, என்னை மன்னியுங்கள்; இவ்விஷயம் குறித்து நான் மிகவும் கவலைக்கொண்டுள்ளேன். மிகுந்த கிறிஸ்தவ அன்புடன், இராஜாவின் ஊழியத்தில் என்றென்றும் உங்கள், சகோ. Horace. E. Hollister.

வரம்புமுறையற்ற சகவாசம் கூறப்படவில்லை
(தொகுதி – 6, பக்கம்: 651,652; திருத்தம் செய்யப்பட்ட பத்திகள்)

அப்போஸ்தலர் மூலமாக, ஆண்டவர் தெளிவாகக் கற்றுக்கொடுக்கிற காரியங்களாவன: ஆண்டவருடைய கிருபையும், சிலாக்கியங்களும் எல்லாப் புதுச்சிருஷ்டிகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன; அது அவர்களுடைய வைராக்கியத்தைப் பொறுத்தும், அவர்கள் அவர்மேல் வைத்திருக்கிற அன்பைப் பொறுத்தும், அவருடைய காரியங்களின்மேல் வைக்கும் அன்பைப் பொறுத்தும் இருக்கிறது; மேலும் அழிவுக்குரிய சரீரத்தின் நிறம், பால், இனம் முதலானவை – அவர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பதிலும், அவர்களை மதிப்பீடு செய்வதிலும், இறுதியில் வெகுமதிகளை அளிப்பதிலும் எந்தவிதமான பாகுபாட்டையும் காட்டாது என்பதேயாகும். இந்த விஷயத்தில் பிதாவின் சித்தத்தை அறிந்து, புதுச்சிருஷ்டிகள் அனைவரும், இதே கருத்தைக் கொண்டிருக்கவேண்டும்; புதுச்சிருஷ்டிகள் அனைவரையும் கிறிஸ்துவுக்குள் “”சகோதரர்”” என்று மதிக்கவேண்டும்; எல்லாரிடமும் மிகவும் அன்பாய் இருப்பதோடு, எல்லாருக்கும் ஊழியம்செய்ய நாடவேண்டும்; ஆண்டவர் தம்முடைய காரியங்களுக்காக மிக அதிக அளவு வைராக்கியத்தைக் காட்டியவர்களுக்குத் தயவுபாராட்டிக் கனப்படுத்தினார் என்று அவர்தாமே காட்டியபடி தவிர, மற்றபடி சகோதரர்களிடையே பாகுபாடு நாம் காட்டக்கூடாது. இப்படி நிறம், பால், இனம் என்பவைகளை ஒதுக்கிவிட்டு பாகுபாடு பார்க்காமல் இருப்பது என்பது நம் புதுச்சிருஷ்டி விஷயத்திலேயே ஆகும்; ஆனாலும் இவை நம்முடைய அழிவுக்குரிய சரீரங்கள் விஷயத்திலும், உலகத்தோடு உள்ள உறவின் விஷயத்திலும், ஒருவரோடு ஒருவர் நாம் கொண்டுள்ள உறவின் விஷயத்திலும் முற்றிலும் புறக்கணிக்கப்படக்கூடாது; ஆகவே [R4191 : page 186] இருபாலருக்கும் இடையில் உள்ள உறவு மற்றும் நடத்தை விஷயத்தில் ஒழுக்கமானது புதுச்சிருஷ்டிகளால் காக்கப்பட வேண்டும்.

இவர்கள் தெளிந்த புத்தியின் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறபடியால், உண்மையிலேயே உலகத்தாரைக்காட்டிலும் அதிக அளவு ஞானமும், முன்யோசனையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆகையால் தாங்கள் ஒரு புதுச்சிருஷ்டியாகக் காணப்பட்டு, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்க முற்படுகிறபடியால், தங்களுடைய மாம்ச பெலவீனங்களுடைய விஷயத்திலும், இருபாலருக்கும் இடையில் காணப்பட வேண்டிய சில தகுதியான நடத்தை, அடக்கம், கட்டுப்பாடு போன்றவைகளில் சில எல்லைகளை வரையறுக்கும் விஷயத்திலும், உலகத்தாரைக்காட்டிலும் இன்னும் அதிக ஜாக்கிரதை உள்ளவர்களாக இருப்பது அவர்களுக்கு நல்லது. புதுச்சிருஷ்டியானது எந்த அளவுக்கு ஆவிக்குரிய வாழ்க்கையை வாஞ்சிக்கிறதோ, புதுச்சிருஷ்டியின் நலனுக்கு எதிராக பாலிய இச்சைகள் யுத்தம் செய்கின்றன என்று எந்த அளவுக்கு உணருகின்றதோ, அவ்வளவாய் அவர்களுடைய பாதங்களுக்குச் செம்மையான பாதைகளை உண்டுபண்ணவும், அவர்களுக்கும், இச்சைகளுக்கும் இடையில் அதிகம் தடைகளை, உறுதியாக உண்டுபண்ணவும், புதுச்சிருஷ்டி உலகத்தாரைக்காட்டிலும் அதிகமாகச் செய்யவும் முயற்சிக்க வேண்டும்.

சகோதரர் ரசல் அவர்களின் பதில்

மேலே இடம்பெற்றுள்ள கடிதத்தை அப்படியே வெளியிடுவது நமது கர்த்தருடைய சித்தமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். விசேஷமாய் உடன்படிக்கைப் பண்ணியுள்ள ஜனங்களாகிய நாம் எதிர்க்க வேண்டிய உலகளாவிய ஒரு போக்கினை – தீமையான நோக்கம் ஏதும் இல்லாமல் இக்கடிதமானது கவனத்திற்குக்கொண்டுவருகின்றதாய் இருக்கின்றது. அறுவடைக் காலத்தின் கடைசி ஏழு வருட காலங்களில் எதிராளியானவன் பல்வேறு விதமான எதிர்க்கும் / தாக்கும் தந்திரங்களை முயற்சிப்பான் என்று எதிர்ப்பார்க்கலாம் என்றும், கர்த்தர் அவனுக்குச் சுதந்திரம் கொடுப்பார் என்றும் ஏற்கெனவே கவனத்திற்குக்கொண்டு வந்திருந்தோம். சோதனை காலமானது பூமியில் குடியிருப்பவர்கள் அனைவரையும் சோதித்திடும் (வெளிப்படுத்தல் 3:10) என்று நமக்குச் சொல்லப்பட்டிருப்பினும், அது விசேஷித்த ஆற்றலுடன் அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு, ஆலய வகுப்பாருக்கு அல்லது தேவனுடைய வீட்டாருக்கு (1 பேதுரு 4:17) எதிராய் வருமானால், அதில் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எதிர் பாலினரிடமிருந்து சோதனைகள்

 

அர்ப்பணிக்கப்பட்டவர்களைப் பொறுத்தமட்டில், சோதனைகள் வேறுபடுகின்றன. பூரண அன்பானது அடையப்பட வேண்டிய மற்றும் அதிலே தொடர்ந்து நிற்க வேண்டிய இலக்காகவும் உள்ளது; இந்த இலக்கை நோக்கி செல்வதிலிருந்து நம்மைத் தவிர்க்க முடியாது என்று காணும் எதிராளியானவன், நம்மைத் தள்ளிவிடத் துவங்குகின்றான் – இலக்கினின்று, மேல் இடம்பெறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதான பூமிக்குரிய அன்பிற்குள்ளாகத் தள்ளிவிடுகின்றான். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு, ஆபத்து நன்கு விளங்கும். கர்த்தருடைய அங்கத்தினர்கள் மத்தியிலுள்ள ஆவிக்குரிய அன்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதினால், அது தகுதியானதேயாகும். நம்முடைய இருதயங்களைக் கிறிஸ்தவ அன்பில் கட்டுகின்றதான கட்டானது, நாங்கள் அறிந்திருக்கிறவரை அருமையானதாகவும், பலமானதாகவும் உள்ளது. இந்த அன்போடுகூட, ஒருவர் இன்னொருவருடைய நோக்கத்திலுள்ள நாணயத்தின் மீது அடையும் நம்பிக்கையும் கூடவே கடந்துவருகின்றது; இதில் விழிப்பாய் இருக்கவில்லையெனில், அனுபவம் காரணமாய் உலகத்திற்கு அவசியமானது என்று சமுதாயம் கண்டுகொண்டுள்ளதான வரையறைகள் சிலவற்றைச் சிலர் தளர்த்திவிட நேரிட்டுவிடும். கர்த்தருடைய ஜனங்கள் உலகத்தாரைக் காட்டிலும் ஒழுக்கம் விஷயத்தில் குறைவான நெறிமுறைகளைக் கொண்டிருக்கின்றார்கள் என்று நாம் சொல்லவில்லை மாறாக உயர்வான கொள்கைகளை உடையவர்களாய் இருப்பதினால், அவர்கள் மாம்சத்தில் இல்லாமல், மாறாக ஆவியில் ஒருவரில் ஒருவர் புதிய நம்பிக்கையினை அடைந்திருக்கின்றனர் என்றே நாம் சொல்கின்றோம். அப்போது அவர்கள் மாம்சம் குறித்த அனைத்தையும் மறந்துபோய்விடுகின்றனர் மற்றும் இந்த விஷயத்திலேயே எதிராளியானவன் பதுங்கியிருந்து, அவர்களைத் தாக்கிடும் அபாயத்திற்குள்ளாக்குவான்.

இன்னொரு பக்கத்தில் கசப்பை, பொறாமையை, சண்டைகளை எழுப்புவதன் மூலம் உண்மையுள்ளவர்களை “”இலக்கிலிருந்து”” தள்ளிவிடுவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றான். இத்தகைய மேற்கூறிய விதைகளானது தானாய் முளைத்தெழுகின்றது என்று அர்ப்பணிக்கப்பட்டவர்களின் இருதயங்களில் எண்ணம் ஏற்படத்தக்கதாய் அவன் மிகவும் தந்திரமாய்ச் செயல்படுகின்றான். நாங்கள் புரிந்திருக்கிறவரை, நீதி, தூய்மை மற்றும் சத்தியம் விருத்தியடைவது போன்ற தோற்றத்தில் தீமையின் விதைகளை விதைப்பதே எதிராளியானவனின் பிரயாசமாய் இருக்கின்றது. ஆ! அவன் தந்திரமுள்ள சத்துருவாவான் மற்றும் கண்ணியில் அகப்படுத்துவதற்கான அவனது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று நம்மால் யூகிக்க அவ்வளவாக முடியாவிட்டாலும், “”அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.””

மேல் இடம்பெறும் கடிதத்தில் சகோ. Hollister அவர்கள், தான் யாருடைய நடத்தைகளை அங்கீகரியாமல் இருந்தாரோ, அவர்களைக் குறித்துத் தீமையாய் யூகம் பண்ணிடுவதற்கான சோதனைக்குள்ளானார்; ஆனால் அவர் கண்ணியிலிருந்து தப்பித்துக்கொள்வதில் ஜெயம் கொண்டார்; ஆகையால் மற்றவர்கள் தீய நோக்கமும், அசுத்தமான உள்நோக்கமும் கொண்டிருந்தனர் என்று நியாயந்தீர்க்காமல், அவர் எங்களைப் போன்று காரியத்தைக் கண்நோக்கினவராகவும் மற்றும் கர்த்தர் எவ்வாறு கண்ணோக்குவார் என்று நாங்கள் நம்புவதுபோன்று கண்ணோக்கினவராகவும் இருக்கின்றார் – அதாவது அது எதிராளியானவனுடைய கண்ணி என்றும், அன்பில் சகோதர சகோதரிகளை எச்சரிப்பது நம்முடையதான கடமை என்றும் கண்நோக்கினவராக இருக்கின்றார்.

மத்தேயு 18:15-17-வரையிலான வசனங்களினுடைய அர்த்தத்தைக்குறித்தும், அதை எவ்வாறு சரியாய்ப் பொருத்திப்பார்ப்பது என்பதைக் குறித்தும் கற்றுக்கொள்வதற்குக் கர்த்தருடைய அருமையான பின்னடியார்கள் எத்தனை காலம்தான் எடுத்துக்கொள்வார்கள்! [R4191 : page 187] இந்தப் பிரமாணத்தைக் கவனிக்கவும், சரியாய்ப் பயன்படுத்தவும் தவறுவது என்பதே, எல்லாத் திசைகளிலும் சகோதரர்களுக்கிடையிலுள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரச்சனைக்குமான ஆணிவேராய் இருக்கின்றதென எங்களுக்குத் தோன்றுகின்றது. எங்களுக்குத் தெரிந்தவரை, இவ்விஷயத்தைக் குறித்து வேதாகம பாடங்களினுடைய ஆறாம் தொகுதியில் மிக எளிமையாய் விவரித்துள்ளோம்; எனினும் இது விஷயத்தில் கிறிஸ்துவின் அருமையான அங்கத்தினர்களிலுள்ள மிகவும் வளர்ச்சிப் பெற்றுள்ள சகோதரர்களில் சிலர் கண்மூடித்தனமாகத் தவறுவதைக் காண்பதில் எங்களுக்கு ஆச்சரியமும், மனவேதனையும் உண்டாகுகின்றது. இந்தத் திவ்விய பிரமாணத்தினை ஓரங்கட்டுவதற்குப் “”பழைய மனுஷனால்”” வழக்கமாய்ப் பயன்படுத்தப்படும் போலிவாதம் என்னவெனில்: “”இப்பிரமாணத்தை இந்த ஒரு சம்பவத்திற்கு / விஷயத்திற்குப் பொருத்திட முடியாது;”” அல்லது “”தன் விஷயத்தில் இப்பிரமாணத்தினை எப்படிப் பொருத்திச் செயல்படுவது என்று தனக்குத் தெரியாது என்ற எண்ணம் கொண்டு, இதனால் மற்றவர்களுடைய ஆலோசனையைக் கேட்க வேண்டும்”” என்று கூறுவதேயாகும்; “”அவனிடத்தில் போய், நீயும், அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து”” எனும் கர்த்தருடைய வார்த்தைகள் எவற்றைத் தடைச்செய்துள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படிப்போய்ப் பேசுவது என்பது, தவறில் உள்ளவரைக் கடிந்துகொள்வதற்கோ அல்லது கண்டனம் பண்ணுவதற்கோ அல்லது அவமானப்படுத்துவதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ அல்ல என்பதை வெகு சிலரே புரிந்துகொண்டவர்களாய் இருக்கின்றனர். அப்படிச் செய்ய வேண்டியவற்றையெல்லாம் கர்த்தர் பார்த்துக்கொள்வார் – கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார். நம்முடைய நோக்கமானது, தவற்றைத் தடுத்து நிறுத்துவதும் மற்றும் இவ்வாறாகச் “”சகோதரனை ஆதாயப்படுத்துவதும்”” என்பதாக மாத்திரம் காணப்பட வேண்டும். ஆகையால் “”முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைப் பார்”” என்ற நமது கர்த்தருடைய ஆலோசனையானது பரவலாய்த் தேவைப்படுகின்றது என்று எண்ணுவது சரியே. ஆகையால் மத்தேயு 18:15-17-வரையிலான வசனங்களைச் செயல்படுத்த முயற்சிப்பதற்கு முன்னதாக, முதல் கட்டப்பிரயாசம் எடுப்பதற்கு முன்னதாகத் தேவனுக்கு முன்பு முழங்கால்படியிடுவதும், நம்முடைய இருதயங்களை மிகவும் தாழ்மையான, அன்பான நிலைமைக்கும், கசப்பு முதலியவைகளற்ற நிலைமைக்கும் கொண்டுவருவதும் ஞானமான காரியமாய் இருக்கும். பின்னர் அவ்வேதவாக்கியங்களை (மத்தேயு 18:15-17) மீண்டுமாக வாசியுங்கள் மற்றும் வேதாகம பாடங்களின் ஆறாம் தொகுதியில் இடம்பெறும் விளக்கவுரைகளை வாசியுங்கள் மற்றும் “”மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவர்”” சம்பந்தப்பட்ட காரியத்தில், முறையின்றி நடந்துகொள்ளக்கூடாது என்னும் அச்சம் கொண்டு, மிகவும் கவனமாய்ச் செயல்படுங்கள்.

கிறிஸ்துவினுடைய “”அங்கத்தினர்களிலுள்ள”” யாரும் தங்கள் சொந்த ஆவிக்குரிய பாதங்களுக்கோ அல்லது மற்றவர்களுடைய ஆவிக்குரிய பாதங்களுக்கோ விரும்பின நிலையிலும், வேண்டுமென்றும் கண்ணிகளை ஏற்படுத்திக்கொள்ளமாட்டார்கள் என்ற சகோ. Hollister அவர்களின் கருத்தை நாங்களும் ஒத்துக்கொள்கின்றோம். அவர்களது நல்நோக்கங்களிலும், மாம்சத்தின் மீதான தங்கள் கட்டுப்பாட்டின் மீதுள்ள அதிகபடியான அவர்களது நம்பிக்கையிலும் மற்றும் எதிராளியானவனுடைய தந்திரங்கள் குறித்துத் தெரிந்திருக்க, எதிராளியானவனுடைய தந்திரத்தைக்குறித்து அவர்கள் மறந்துபோனதிலும்தான், அவர்களுக்கான அபாயங்களானது பதுங்கியிருக்கின்றது எனும் கருத்தை நாங்கள் முற்றிலும் ஒப்புக்கொள்கின்றோம். தீமையாய் யூகம் பண்ணிடக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்திடும் அதே வேளையில், “”கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும், கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாய் இருங்கள்”” (பிலிப்பியர் 2:15) எனும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளையும்கூட வலியுறுத்துகின்றோம். சுயத்தை மேற்கொள்ளும் விஷயத்தில் நாம் நம்மைக்குறித்து ஒருவேளை நன்கு சுயக்கட்டுபாடு உடையவர்கள் என்றும், சோதனைக்குள் சிக்கவே மாட்டோம் என்றும் நம்பிக்கைக்கொண்டவர்களாக இருந்தாலும்கூட, நம்மால்; எப்படி மற்றவர்களைக் கணிக்க முடியும் அல்லது நம்மை போன்றே அவர்களும் இருப்பார்கள் என்று சொல்ல முடியும்? அல்லது சத்தியத்திலுள்ள ஜனங்கள் அனைவரும் ஒவ்வொரு சிந்தைகளையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம், சிறைப்படுத்துவதன் மூலம் நன்கு வளர்ந்துள்ளார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அப்போதும் அவர்கள் மனுஷர்களுக்கு உதவும் வண்ணமாகவும், பரலோகத்தில் இருக்கும் தங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் தங்கள் வெளிச்சத்தைத் தொடர்ந்து பிரகாசிப்பிக்க பண்ண வேண்டாமோ? “”ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்”” (1 கொரிந்தியர் 8:13) எனும் அப்போஸ்தலனின் வார்த்தைகளைக் கவனியுங்கள். நம் மாம்சம் மரித்துப்போய்விட்டது என்று நாம் எண்ணிக்கொள்ளாதிருப்போமாக. இதற்கு மாறாக எண்ணிக்கொண்டிருப்பதுதான்; பாதுகாப்பானதாகும்; நம்மையோ அல்லது மற்றவர்களையோ அகப்படுத்தும்படிக்கு எதிராளியானவனால் ஏற்படுத்தப்படும் ஒவ்வொரு கண்ணிக்கும் எதிராக நம்மைக் காத்துக்கொள்வதுதான் பாதுகாப்பானதாகும்.