R3462 (page 347)
2 நாளாகமம் 29:18-31
யூதாவின் சிங்காசனத்தில் கர்த்தருடைய பார்வையில் மிகவும் நல்ல இராஜாக்களாகக் காணப்பட்ட மூன்றுபேரில் ஒருவர் எசேக்கியாவாக இருந்தார் – தாவீது மற்றும் யோசியா இராஜாக்கள் மற்ற இருவராகக் காணப்பட்டனர் (2 இராஜாக்கள் 18:5). எசேக்கியாவின் விஷயம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவர் சிங்காசனத்தில் அமர்ந்துள்ள மிகவும் அருவருக்கத்தக்க இராஜாக்களில் ஒருவரான ஆகாஸ் இராஜாவின் குமாரன் ஆவார்; இந்த ஆகாஸ் இராஜா மிகவும் இழிவானவராகக் காணப்பட்டப்படியால், இவர் இராஜாக்களோடுகூட அடக்கம்கூடப்பண்ணப்படவில்லை. ஆகாஸ் இராஜா மிக மோசமான அளவில் விக்கிரக ஆராதனையை ஆதரித்தவராவார் மற்றும் இவரது இராஜ்யபாரத்தின்கீழ், இராஜ்யமானது எல்லாவிதத்திலும் மிகக்கீழான நிலைமைக்குள்ளானது. எசேக்கியாவின் தகப்பன் மரித்த, தனது இருபத்தி ஐந்தாவது வயதில் எசேக்கியா அரியணைக்கு வந்தார் மற்றும் இவரது இராஜ்யபாரம் முழுவதும் சீர்த்திருத்தமான ஒன்றாகவும், கர்த்தரைப் பிரியப்படுத்திடுவதற்குரிய இருதயப்பூர்வமான வாஞ்சையினை வெளிப்படுத்தினதாகவும் இருந்தது.
தகப்பன் மற்றும் குமாரனுக்கு இடையிலுள்ள இந்த வித்தியாசத்தின் இரகசியமானது, இவரது தாயார் தேவ பக்தியுள்ள ஸ்திரீயாகக் காணப்பட்ட உண்மையில் அடங்குகின்றது மற்றும் ஐயத்திற்கிடமின்றி இக்காரணத்தினாலேயே அபியாள் என்ற அவளது பெயர் வேத வாக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெயரின் அர்த்தம் “யேகோவா என் பிதாவாவார்” என்பதாகும்; மேலும் இது இவளது பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவருமே பயபக்தியுள்ளவர்களாகவும், தேவ பயமுள்ளவர்களாகவும் இருந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இத்தனை இழிவான ஓர் இராஜாவிற்கு இவள் எப்படி மனைவியானாள் என்பது குறித்து நமக்குத் தெரியவில்லை… ஆனாலும் இவளது கணவனின் விக்கிரக ஆராதனையும், பயபக்தியின்மையும் இவள் மனதின்மேல் தொற்றிடும் தாக்கத்தினைக் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியே. இது இவளது குமாரனாகிய எசேக்கியாவிற்குச் சூட்டப்பட்டுள்ள பெயரின்மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது; எசேக்கியா என்றால் “யேகோவா என் பெலனாவார்” என்பதாகும். இவ்விஷயத்தை “அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே, [R3462 : page 348] இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன” (1 கொரிந்தியர் 7:14) என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகளுக்கான மற்றுமொரு உதாரணமாக நாம் பார்க்கின்றோம். பெற்றோரைப் பொறுத்த விஷயத்தில் . . . கர்த்தர் பிள்ளையை விசுவாசியாய்க் காணப்படும் நபரின் பிள்ளையாய் அடையாளம் கண்டுகொள்ள சித்தமுள்ளவராயிருக்கின்றார் என்றும், இப்படியாகப் பிள்ளையானது அதன் விசுவாசியான பெற்றோருக்கு இருப்பது போன்று, தெய்வீக வழிநடத்துதல் மற்றும் பராமரிப்பின் கீழ், பகுத்தறியும் வயதை அடைவதுவரையிலும் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு நன்மைக்கேதுவான தாயினுடைய வல்லமைக்குறித்து எத்தகைய பாடம் காணப்படுகின்றது. உண்மைதான் இச்சம்பவத்தில் மனைவியென அவளால் தன் கணவனைத் தேவனிடம் பயபக்திகொள்வதற்கும், நீதியின் திசையில் திருப்பிடுவதற்கும் ஏதுவாய்ச் செல்வாக்கினைச் செயல்படுத்திட முடியவில்லை என்றாலும், அவள் தன் குமாரனுடைய குணலட்சணத்தினை உருவாக்கிடும் விஷயத்தில் வனைந்திடும், கட்டுப்படுத்திடும் செல்வாக்கினைச் செயல்படுத்தினாள் என்பது உறுதியே. மனைவி மற்றும் தாயின் செல்வாக்கானது சரியாய்ச் செயல்படுத்தப்பட்டால், மிகவும் அதிகமான பாராட்டுதலுக்கு ஏதுவாயிருக்கும்; ஆனால் இல்லத்தில் தங்களின் சிலாக்கியங்களையும், வாய்ப்புகளையும் சரியாய் மதித்திட தவறிடும் சிலர், இல்லத்தின் கடமைகளைப் புறக்கணித்தவர்களாகப் பொதுப்படையான பிரயாசங்களில் ஈடுபட்டுள்ளனர் – இது கடுமையான தவறாகும்.