R3710 (page 28)
R3711 : page 29
அபூரண பெற்றோர்களினால், அபூரணமான குழந்தைகளை முழுக்க ஞானம் நிரம்பினவர்களாகவும், பூரணத்தின் தன்மைகள் உடையவர்களாகவும் வளர்த்திடுவதற்கு எதிர்ப்பார்த்திடலாம் என்று நாங்கள் ஊக்குவித்திட முடியாது; மாறாக பிள்ளைகள் எவ்வகையான புருஷர்களாக அல்லது ஸ்திரீகளாக உருவாகுவார்கள் என்பதும், அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையா அல்லது மகிழ்ச்சியின்மையையா, துயரத்தையா அல்லது சந்தோஷத்தையா கொண்டுவருவார்கள் என்பதும், தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர்கள் பயிற்றுவிக்கிறதான வழியினைப் பெரிதும் சார்ந்துள்ளது என்று பெற்றோர்களுக்கு நாங்கள் உறுதியாய்க் கூறிட முடியும். பிள்ளைகள் போகக்கூடாத திசையில் அநேக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவித்துவிடுகின்றனர் என்பதும் – அவர்களில் தவறான உணர்வுகளை விதைத்துவிடுகின்றனர் என்பதும், மேலும் இதனால் பெற்றோர்கள் அவமானத்திற்காளாகும் இயல்புகள், பிள்ளைகளிடத்தில் உருவாகின்றது என்பதும், இவ்வியல்புகளின் நிமித்தம் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கண்டிக்கின்றனர், கடிந்துகொள்கின்றனர் என்பதும், பிள்ளைகள் வளருகையில், அவர்கள் இவ்வியல்புகளுக்கு எதிராக ஜீவிதகாலம் முழுவதும் போராட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகுகின்றனர் என்பதும் கவலைக்குரிய உண்மையாகும். எவ்வளவு சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு பயிற்சியும், ஒழுக்கம் கற்றுக்கொடுத்தலும் அவசியமெனவும் – இவை குழந்தைப் பிறப்பதற்கு முன்னதாகப் பெற்றோரில் துவங்க வேண்டுமெனவும் – உறுதியாயும், அன்பாயும் மேற்கொள்ளப்படும் ஒழுக்கப் பயிற்சியும், கீழ்ப்படிதலும் பிறந்தநாள் முதற்கொண்டு விடாமல் மனதில் ஆழப்பதிய வைக்கப்பட வேண்டுமெனவும் – பெற்றோரினால் சரியாய்ப் புரிந்துகொள்ளப்பட்டால், இது பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் எத்துணை ஆசீர்வாதமாய்க் காணப்படும்.
எங்கு ஒரு குழந்தை நியாயமான நல்லப் பிறப்பு அடைந்து, கிறிஸ்தவ இல்லத்தினுடைய செல்வாக்கின்கீழ் வளர்க்கப்படுகின்றதோ – அந்த இல்லத்தில் வேதாகமமானது நியமமாக / தரநிலையாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் – அங்கு ஒன்று அல்லது இரு பெற்றோர்களும் கர்த்தருக்கு அர்ப்பணம்பண்ணினவர்களாயிருந்தால் – அங்குக் கர்த்தர்மீதான விசுவாசத்திற்கும், அவரது பராமரிப்பின்மீதான நம்பிக்கைக்கும் பெற்றோருடைய ஜெபங்களானது தொடர்ச்சியான சாட்சியாகக் காணப்படுமானால் – அங்கு ஆவியின் கனிகளாகிய சாந்தம், தயவு, பொறுமை, நீடிய பொறுமை, சகோதர சிநேகம், அன்பை மாதிரித்துவம்படுத்திடுவதற்கு மாத்திரம் பெற்றோர்கள் நாடாமல், இவைகளைக் குழந்தைகளிலும் ஆழப்பதிய வைத்திடுவதற்கு நாடுவார்களானால் – இம்மாதிரியான அனுபவங்களின்கீழ்ப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதான பிள்ளைப் பொதுவாகவே 12-ஆம் வயதில் கர்த்தருக்குத் தன்னை அர்ப்பணிக்கவும், திவ்விய வசனத்தினுடைய அறிவுரைகளை நாடவும், அதன்படி செய்யவும் ஆயத்தமாய்க் காணப்படும்.
தங்கள் இருதயங்களைக் கர்த்தருக்குச் சிறுவயதிலேயே கொடுப்பவர்களுக்கான வாக்குத்தத்தங்களானது நாம் அனைவருமே அறிந்ததாகவும், அநேகரில் அவற்றை நாம் கண்டதாகவும் இருக்கின்றது – “அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” ” those that seek me early shall find me” (நீதிமொழிகள் 8:17; 22:6). ஒரு பிள்ளை உலகில் அதன் இஷ்டப்படி காணப்படுவதற்கும், சிந்தித்துச் செயல்படாமல் காணப்படுவதற்கும், மரியாதையற்றுக் காணப்படுவதற்கும், சுயநலத்துடன் காணப்படுவதற்கும் பயிற்றுவிக்கப்பட்டால், அவன் பெரியவனாகுகையில், சுயநலமென்னும் மேடுபள்ளத்தினின்று அவனைக் கண்ணியத்தின் மற்றும் மற்றவருக்காய் அன்பு பாராட்டும் மற்றும் அக்கறைக்கொள்ளும் பெரும்வழிச் சாலைக்குத் திருப்புவது என்பது உண்மையில் மிகச் சிரமமான காரியமாய்க் காணப்படும்.
நாம் வாழும் காலங்களானது, பிள்ளைகளைச் சரியாய்ப் பேணிவளர்ப்பதற்கு மிகச் சிரமமான காலப்பகுதி என்பதினை நாங்கள் ஒத்துக்கொள்கின்றோம். எனினும் இக்காலத்தினுடைய இந்நிலைமையானது பெற்றோரைச் சோர்வுபடுத்திடுவதற்குப் பதிலாக அல்லது பெற்றோர் தன் கடமைகள் விஷயத்தில் அலட்சியமாய்க் காணப்படுவதற்கு ஏதுவாக்கிடுவதற்குப் பதிலாக… இந்நிலைமையானது நீதி, நியாயம், இரக்கம் மற்றும் சத்தியம் குறித்த புரிந்துகொள்ளுதலாகிய சிமெண்ட்டைக்கொண்டு போடப்பட்ட குணலட்சணத்திற்கான அஸ்திபாரத்தினால் குழந்தையை ஜீவிதகாலம் முழுதும் ஆசீர்வதித்திடும் தன் கடமையினைப் பெற்றோர் செய்யத்தக்கதாக, அவனை மிகுந்த ஊக்கம்கொள்ளச் செய்யவும், பரத்திலிருந்து வரும் ஞானத்தினை ஊக்கமாய் அதிகம் நாடவும் அவனை வழிநடத்துவதாய் இருத்தல் வேண்டும்.