R2365 (page 290)
“உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” – ( நீதிமொழிகள் 3:6).
(R2366 : page 292)
தன் மகனுக்கும், ஆகாப் மற்றும் யேசபேலின் குமாரத்திக்கும் இடையில் திருமணத்தினை ஏற்பாடுபண்ணினதே யோசபாத்தின் மூன்றாம் தவறாகும். இத்திருமணத்தின் வாயிலாகத் தன் குமாரனுடைய கரங்களில் பிரிந்திருந்த இராஜ்யத்தை இணைக்க வேண்டும் என்பதே இவரது எண்ணமாக இருந்தது என்பதில் ஐயமில்லை. கர்த்தருக்குத் தேவை என்றால், அவரே இராஜ்யத்தினை இணைத்திட மிகவும் வல்லவராய் இருக்கின்றார் என்பதையும், மேலும் கர்த்தருடைய அங்கீகரிப்பில்லாமல் காணப்படும் எந்த ஓர் ஒன்றிணைதலும் பாதகமாகவே காணப்படும் என்பதையும் இவர் மறந்துபோனதாகத் தெரிகின்றது. யூதாவின் இராணியாகிட்ட யேசபேலின் மகளோ பொல்லாதவளாய்க் காணப்பட்டு, தன் தாயைப் போன்றே செயல்பட்டாள்; மேலும் தாழ்மையும், தேவபக்தியுமுள்ள ஸ்திரீயினால் எத்தனை நன்மையான செல்வாக்கினைச் செயல்படுத்திட முடியும் என்பதற்கு நாம் அநேகம் உதாரணங்களைப் பெற்றிருப்பதுபோலவே, இச்சம்பவமும்கூடப் பேராசையுள்ள மற்றும் பொல்லாத ஸ்திரீயினால் எத்தனை பொல்லாப்பான செல்வாக்கினைச் செயல்படுத்திட முடியும் என்பதற்கான இன்னுமொரு உதாரணமாய்க் காணப்படுகின்றது.
துன்மார்க்கரோடு பிணைக்கப்பட்டு, திருமணம் செய்து கொடுப்பதன் வாயிலாகத் தங்களுடைய பிள்ளைகளுடைய நலனுக்கடுத்த காரியங்களில் முன்னேற்றம் காண்பதற்கு ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் நாடிடக்கூடாது என்று அவர்கள் அனைவருக்கும் இச்சம்பவத்தில் ஒரு படிப்பினை இருக்கின்றது. எத்தனை கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் படிப்பினைகளைச் செயல்படுத்தாமல் புறந்தள்ளி, தங்கள் பிள்ளைகள் அர்ப்பணிக்கப்படாதவர்களைத் திருமணம்பண்ணிடுவதற்குத் தாங்கள் ஒப்புக்கொள்ளும் அளவுக்கும், திருமணத்திற்கு உதவும் அளவுக்கும் பிள்ளைகளுக்கான தங்களது அறிவுரைகளானது பெருமையினால், பேராசையினால், சுயநலத்தால் ஏவப்படுவதற்கு அனுமதித்துவிடுகின்றவர்களாய் இருக்கின்றனர். இப்படி நடந்துகொண்டவர்களில் எத்தனை பேர்கள் பிற்பாடு தங்கள் தலையணைகளிலும், தங்களுடைய பிள்ளைகளின் தலையணைகளிலும் முட்களை விதைத்துள்ளார்களெனக் கண்டுகொள்கின்றனர். பிரச்சனை பின்வரும் ஒரு அல்லது இரு காரியமாகக் காணப்படலாம்: (1) அவர்கள் ஒன்றில் கர்த்தருக்கு முழுமையாயும், உண்மையாயும் அர்ப்பணம்பண்ணாதவர்களாய் இருக்கலாம் மற்றும் தங்கள் காரியங்கள் அனைத்தையும் வழிநடத்திடுவதற்கான அவரது ஞானத்திலும், வல்லமையிலும் முழுமையாயும், உண்மையாயும் விசுவாசம் இல்லாதவர்களாய் இருக்கலாம்; ஆகையால் தங்கள் காரியங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முற்படுகின்றனர்; அல்லது (2) நம்முடைய ஜீவியத்தின் ஒவ்வொரு காரியத்தையும் நாம் கர்த்தருடைய சித்தத்தின்படி ஒழுங்குபண்ண வேண்டியிருக்க, அந்தச் சித்தத்தை அவரது வார்த்தைகளில் கண்டுகொள்ளலாம் என்றும், அது அப்படியே பின்பற்றப்பட்டு, விளைவுகள் அனைத்தும் அவரது வழிநடத்துதல்களிடத்தில், அவரது ஞானம், அன்பு, வல்லமைமீதான முற்றும் முழுமையான நம்பிக்கையில் விடப்பட வேண்டும் [R2366 : page 293] என்றும் அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. கர்த்தருடைய ஜனங்களைப் பொறுத்தமட்டில், அவரை அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் திவ்விய வழிநடத்துதலின்கீழ் நன்மைக்கேதுவாய் நடக்கும் என்று நம்பி முதலாவது பரலோக இராஜ்யத்தையும், அதன் நீதியையும் நாடுவதே, அனைத்துக் காரியங்களிலுமுள்ள ஜீவியத்தின் சட்டமாகும்.