R2747 (page 382)
“பரலோக மற்றும் பூலோக கணவனிடத்திலான கடமை
கேள்வி: — நான் ஒரு கிறிஸ்தவ சபை பிரிவைச் சார்ந்த ஊழியக்காரனுடைய மனைவி ஆவேன். பல வருஷங்களாக நான் சத்தியத்தினைப் படித்துக்கொண்டு வருகின்றேன் மற்றும் வாட்ச் டவர் வெளியீடுகளானது, உண்மையான சுவிசேஷமாய்க் காணப்படுகின்றது என்ற உறுதியும் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. என்ன பின்விளைவுகள் ஏற்படுவதாக இருப்பினும், என் ஆண்டவருக்கு உண்மையாய் இருந்திட நான் விரும்புகின்றேன்; ஆனால் என்னுடைய கடமை என்னவாக இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதில் நான் கொஞ்சம் குழப்பத்தில் காணப்படுகின்றேன். ஓர் ஊழியக்காரனின் மனைவியாக நான் இருப்பதினால், நான் அச்சபையின் அங்கமாகவும் காணப்படுகின்றேன்; சபையாருக்கு இசைக்கருவியை வாசித்திடும் ஆர்கனாகவும், ஞாயிறு பள்ளியின் ஆசிரியராகவும் நான் காணப்படுகின்றேன். என்னுடைய கேள்வி என்னவெனில்: தேவனுடைய சத்தியம் மற்றும் குணலட்சணம் பற்றி – சுவிசேஷத்தைப் பற்றி அநேகம் விதங்களில் தவறாய் எடுத்துக்காட்டப்படுகின்றது என்று நான் புரிந்துகொண்டுள்ளதான சபையின் ஆராதனையினின்றும், அதற்கு ஒத்துழைப்புக்கொடுப்பதிலிருந்தும் நான் விலகிட – பாபிலோனை நான் விட்டு வெளியேறிட வேண்டுமா அல்லது வேண்டாமா? என்பதேயாகும்.
என்னைப் பொறுத்தமட்டில் நான் கர்த்தர் அனுமதித்திடும் எந்தப் பாடுகள்படவும் விருப்பத்துடன் இருப்பதினால், பூலோக நன்மைகளைப் பெரிதாகப்பார்த்திட விருப்பம்கொள்ளவில்லை. என்னோடுகூடக் கஷ்டப்படப்போகிற மற்றவர்கள் குறித்தே என்னுடைய தயக்கம் காணப்படுகின்றது. இதனால் தன் ஸ்தானத்தினையும், அதன் சிறிய சம்பளத்தையும் இழந்துபோக வாய்ப்புள்ளதான என் கணவனோ, சத்தியத்துடன் ஒத்துணர்வு கொண்டவரல்ல; சத்தியத்தின் மீதான அவருடைய ஆர்வத்தினைத் தூண்டிடுவதற்குரிய என் சிறந்த பிரயாசங்கள் பயனற்றதாகின. அவரும் கஷ்டத்திற்குள்ளாவார் மற்றும் எங்கள் இரண்டு பிள்ளைகளும் கஷ்டத்திற்குள்ளாவார்கள் மற்றும் நானும் கஷ்டத்திற்குள்ளாகுவேன்; என்னுடைய கேள்வி என்னவெனில் – எந்தமட்டும் மற்றவர்களை இதில் நான் சம்பந்தப்படுத்துவது சரியாயிருக்கும்? நமது கர்த்தருக்குப் பிரியமாய்க் காணப்படும் விதத்தில் நான் என்ன செய்திட வேண்டும்?
பதில்: — அருமையான சகோதரியே, உங்கள் காரியம் அசாதாரணமான காரியமாகும். இது விஷயத்தில் கர்த்தருடைய சித்தம் என்னவாக இருக்கும் என்று நாங்கள் கருதுபவைகளை முன்வைத்து மற்றும் அதற்கான காரணங்களையும் தெரிவித்து, காரியங்களை நீங்களே முடிவெடுப்பதற்கெனக் காரியத்தினை உங்கள் சொந்த மனசாட்சியின்படி செய்ய விட்டுவிடுகின்றோம். உங்களால் அடையமுடிந்த சிறந்த வெளிச்சத்தின்படி, கர்த்தருடைய சித்தம் என்னவென்று நீங்கள் புரிந்துள்ளவைகளைச் செய்திடுவது உங்களது கடமையாக இருக்கின்றது.
ஆகையால் முதலாவதாகச் சூழ்நிலைகள் அனைத்தையும் உங்கள் கணவனிடத்தில் முழுமையாகவும், ஒளிவுமறைவு இல்லாமலும் விவரியுங்கள் மற்றும் சபையின் பிரதிநிதியாகவும், ஊழியக்காரனாகவும் காணப்படும் அவரிடம், உங்களுடைய பெயரை, பட்டியல் முதலானவைகளிலிருந்து நீக்கிட கேட்டுக்கொள்ளும் கடிதம் ஒன்றினைக் கொடுங்கள்; [R2747 : page 383] (இதற்கான அச்சடிக்கப்பட்ட கடிதங்களை நாமே இலவசமாய் வழங்கிடுவோம்). சபையின் பிரதிநிதியாகக் காணப்படும் உங்கள் கணவன் விரும்பினால், பெயர்ப்பட்டியலிலிருந்து உங்கள் பெயரை அழித்துவிடலாம். இக்காரியத்தினைப் பொதுப்படையாய் அறிவித்திடும்படிக்கு நீங்கள் அவரிடத்தில் கேட்டுக்கொள்ளலாம்; ஆனாலும் உங்களது வேண்டுகோளின்படியே செய்திடுவதற்கு அவருக்குக் கட்டாயமில்லை மற்றும் (வழக்கத்திற்கு மாறாக) நீங்கள் அசாதாரணமான சூழ்நிலைமையில் காணப்படுவதினால், … உங்கள் கணவன் விரும்பினால் தவிர, மற்றப்படி “”விலகும் கடிதங்களை”” சபையின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் நீங்கள் அனுப்பிட வேண்டாம் என்று நாங்கள் அறிவுரை வழங்குகின்றோம். பொறுப்பினைக் கணவனிடத்தில் விட்டுவிடுங்கள்.
ஞாயிறு பள்ளியில் போதித்தல் தொடர்புடைய விஷயத்தில் – ஒருவேளை வயதுவந்த பிள்ளைகளுடைய வகுப்பாய் இருக்கும்பட்சத்தில், நீங்கள் சபை பிரிவுணர்ச்சிக் கோட்பாடுகள் இல்லாமல், மாறாக வேதாகமத்தின் உண்மையான இறையியலைப் போதித்து, அந்த வகுப்புகளைத் தொடரும்படியாக நாங்கள் அறிவுரை வழங்குகின்றோம். இப்படிப் போதித்திடும் ஒரே நிபந்தனையின்படியே நீங்கள் உங்களது வகுப்புகளைத் தொடர்ந்து நடத்துவீர்கள் என்பதை, சபையின் பாஸ்டராகிய உங்கள் கணவனுக்குத் தெரியப்படுத்துங்கள். இசைக்கருவிகளை வாசிக்கும் விஷயத்தில், அதையும் நீங்கள் தொடர்ந்து செய்திடும்படி நாம் பரிந்துரைக்கின்றோம்; அதுவும் வேதவாக்கியத்திற்கு முரணானது என்று நீங்கள் நம்பிடும் தவறான கீர்த்தனைகளுக்கு இசைவாசித்திட உங்களது மறுப்பினைக் குறித்துக் கணவனிடம் விவரித்துவிடுங்கள் மற்றும் இசைக்கருவிகளை நீங்கள் தொடர்ந்து வாசித்திட கணவன் விரும்புவாரானால், கீர்த்தனைகளைத் தெரிவுச் செய்யும் விஷயத்தில் அவர் உங்களுக்குச் சில சிறு சுயாதீனங்களைக் கொடுக்கும்படிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஆனாலும் இந்த விஷயத்தில் நீங்கள் மிக அதிகமாய்க் கடுமையாய்ப் பேசுபவராகவும் / ஜாக்கிரதையானவராகவும், குற்றம் காணுகிறவராகவும்
இருக்க வேண்டாம் என்று நாங்கள் அறிவுரை வழங்குகின்றோம். ஒரே வார்த்தையிலிருந்து மற்றவர்களால் சரியற்ற கருத்துகளை அடைய முடிகிறதாயிருக்க மற்றும் நம்மால் சரியான கருத்துக்களை அடைய முடிகிறதாயிருக்க, அப்படியான எந்தவொரு வார்த்தையையும் தேவனைத் துதித்திடும் விஷயத்தில், தேவ ஜனங்கள் பயன்படுத்துவதில் தவறு செய்யவில்லை என நியாயப்படுத்திடலாம் என்று நாங்கள் எண்ணுகின்றோம்.
நாங்கள் வழக்கமாய் ஆலோசனை வழங்குவதிலிருந்து இப்பொழுது வேறுபட்டு வழங்குவதற்கான எங்கள் தரப்புக் காரணங்கள் இரண்டாகும்; அவை: (1) உங்கள் கணவன் பெயர்ச்சபையினராகவும், அநேகமாக உண்மையில் ஒரு கிறிஸ்தவனாகவும் இருக்கின்றார் மற்றும் இதனால் உங்கள் மனசாட்சி சம்பந்தப்படாத விஷயத்தில் – அதாவது உதாரணத்திற்கு மேலே சொல்லப்பட்டுள்ள காரியங்களில் நீங்கள் கணவனது கணிப்புகளுக்குச் சிலவற்றை விட்டுக்கொடுத்துவிடுவது உங்களுக்குத் தகுதியானதாய் இருக்கும்.
(2) இம்மாதிரியான காரியங்களுக்குக் கணவனுடைய ஸ்தானத்திற்கும், மனைவியினுடைய ஸ்தானத்திற்கும் சிறு வித்தியாசம் உள்ளது; மனைவியானவளால் பொறுப்புகள் சிலவற்றைக் கணவன் மீது வைத்திடலாம்; ஆனால் கணவனால் மனைவி மீது எந்தப் பொறுப்பினையும் வைத்திட முடியாது. நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை எனினும் காரியங்களைக் குறித்த கர்த்தருடைய கண்ணோட்டங்கள் பற்றின சில புரிந்துகொள்ளுதலை நியாயப்பிரமாணமானது நிழலான விதத்தில் நமக்குக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது; உதாரணத்திற்கு லேவியராகமம் 30-ஆம் அதிகாரத்தினைப் பார்க்கவும். உங்களுடைய அனைத்தையும் நீங்கள் அர்ப்பணம்பண்ணியுள்ளதான கர்த்தருக்குரிய உங்களது வாக்குறுதியினை, உங்கள் கணவன் அறிவார் மற்றும் இதற்கு அவர் ஒத்துக்கொள்ளாமல் இருக்கவில்லை. ஆகையால் உங்கள் கணவன் தன்னுடைய மனசாட்சியினை மீறி நடக்காமல், உங்களது மனசாட்சியினுடைய சுயாதீனத்தில் எவ்விதத்திலும் குறுக்கிட முடியாது.