R4717 (page 367)
கர்த்தருக்குள்ளான எங்களது அன்புக்குரிய பாஸ்டர் அவர்களே:–
இந்தக் கடைசி காலங்களில், தங்களை முழுமையாய் அர்ப்பணம்பண்ணினவர்களெனக் கூறுபவர்கள் விஷயத்தில், திருமணம்குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? திருமணத்தினுடைய ஏற்புடைமைக்குறித்துக் காவல்கோபுர கட்டுரை ஒன்று வந்தால், மிகவும் நன்மைக்கேதுவாயிருக்கும் என்று நான் எண்ணுகின்றேன். தங்களுக்கு இருக்கும் மிகச் சிறியவைகளைப் பலி செலுத்திடுவதற்குரிய தங்கள் சிலாக்கியம்குறித்து அநேகர் புரிந்துகொள்ளாததாகத் தெரிகின்றது.
———————————————————————————————————————————-
கர்த்தருக்குள் உங்கள்,
——————————
பதில்:– காலம் சமீபமாயுள்ளது என்றும், அர்ப்பணம்பண்ணியுள்ளவர்கள் அனைவருக்கும் இராஜாவின் ஊழியத்திற்கெனவும், அவருக்கான தங்களது அன்பு மற்றும் நேர்மையை நிரூபிப்பதற்கெனவும் அனைத்துத் தாலந்து மற்றும் அனைத்து நேரமும் தேவையாய் இருக்கின்றது என்றும் அன்புக்குரிய சகோதரரே உங்கள் உணர்வுகளை நாங்களும் ஒத்துக்கொள்கின்றோம். அநேகம் திருமணங்களானது ஆவிக்குரியவற்றிற்குப் பாதகமாய்ப் போனதை நாங்களும் முற்றிலும் ஒப்புக்கொள்கின்றோம். அனைத்துத் திருமணங்களும் இப்படியாகத்தான் கடந்துபோனதா என்று எங்களுக்குத் தெரியாது.
எனினும் இவ்விஷயத்தில் எந்த விருப்பத்தேர்வுகளும் / முடிவுகளும் எங்களுக்கு இல்லை. திருமணமானது யாவருக்குள்ளும் கனமானது என்று கர்;த்தருடைய வார்த்தைத் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றது. ஆகையால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திருமணத்தினைத் தடைப்பண்ணிடுவது என்பது யாருக்கடுத்த காரியமுமல்ல. அநேகம் தருணங்களில் நமக்கு ஆசீர்வாதத்தினைக் கொண்டுவந்திட்டதான அறிவுரைகளைக் கொடுத்த சபையின் திவ்விய போதகனாகிய பரிசுத்த பவுல் அடிகளாரின் வார்த்தைகளைக் கவனத்திற்குக் கொண்டுவருவதே எங்களுக்கான சிலாக்கியமாய்க் காணப்படுகின்றது. “விவாகம்பண்ணுகிறவன் நன்மைசெய்கிறான்; விவாகம்பண்ணாதிருக்கிறவன் அதிக நன்மைசெய்கிறான்” என்று அவர் கூறுகின்றார்.
அப்போஸ்தலனின் அறிவுரைச் சுட்டிக்காட்டுவதில் திருப்திக்கொண்டும், சிலர் விஷயத்தில் இந்தப் பொதுவான விதி பொருந்தாது என்பதை மறவாமலும், இக்காரியத்தில் முடிவெடுக்கும் விஷயத்தினை அருமை நண்பர்களின் கரங்களிலேயே நாங்கள் விட்டுவிடுகின்றோம். கர்த்தருடைய ஜனங்களிலுள்ள ஒவ்வொருவரும் இவ்விஷயத்தில் அவனது அல்லது அவளது கணிப்புகள் மற்றும் நிதானிப்புகளுக்கு இசைவாக முடிவெடுத்துக்கொள்வார்களாக. “இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” (ரோமர் 14:13).