R5229 (page 133)
“இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1)
பூமியிலுள்ள சில குடும்பங்களில், ஒற்றுமை அதிகமாகவே காணப்படுகின்றது. அத்தகையவர்களைக் குறித்து நாம் சில சமயங்களில், “இந்தக் குடும்பத்தினர் நன்கு ஒற்றுமையுடன் இருக்கின்றனர்” என்று கூறுவதுண்டு. சில குடும்பங்களில் பிரிவினையே காணப்படுகின்றது. கணவனும், மனைவியும், சகோதரர்களும், சகோதரிகளும் ஒருவருக்கொருவர் உதவிச்செய்திட நாடிடும்போமது, “இந்தக் குடும்பத்தில் அதிகமாய் அன்பு நிலவுகின்றது” என்று நாம் சொல்லிடுவோம்; அதாவது பூமிக்குரிய அன்பாகும் – அதாவது சுபாவ அன்பாகும். இத்தன்மை சரியானதேயாகும். நம்முடைய நெருக்கமான உறவுகள் விஷயத்தில் நமக்குப் பொறுப்பு ஒன்று, விசேஷித்த கடமை ஒன்று இருக்கின்றது என்று வேதாகமம் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஒரு மனுஷன் தன் வீட்டாரைப் புறக்கணிக்கக்கூடாது என்றும், தன் சொந்த வீட்டாரை ஆதரியாதவன் அவிசுவாசியிலும் கேடானவன் என்றும் வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன (1 தீமோத்தேயு 5:8).
ஆதியில் மனுஷன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருந்தான் மற்றும் திவ்விய அன்பினை தன் ஜீவியத்தில் இயக்கும் சக்தியாய்ப் பெற்றிருந்தான். இந்த அன்பானது பாவத்தின் பிரதிநிதியாகிய சுயநலத்தினால் பெரிதும் அகற்றப்பட்டுள்ளதாய் இருக்கின்றது. எந்தளவுக்கு ஜனங்கள் வீழ்ந்திருப்பார்களோ, அவ்வளவாய் அவர்கள் சுயநலமானவர்களாய் இருப்பார்கள். சிலர் தங்கள் சொந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்களிடம் இரக்கமாகவும், தயவாயும் காணப்படுகின்றனர் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிச் செய்திடும் விஷயத்தில் ஒத்துழைத்திடுவதற்கு நாடுகின்றவர்களாய் இருக்கின்றனர். மற்றவருக்குப் பாதகமாய் இராமல், தன் சொந்த வீட்டாருக்காய் நன்மையானவைகளைச் செய்ய நாடுவது என்பதை நாம் சரியற்ற கொள்கையெனச் சொல்லிவிட முடியாது. சகோதரர்களும், சகோதரிகளும் ஒருவர் மீது ஒருவர் அனுதாபம் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிடும் ஆவியையும் தங்களில் பெற்றிருக்க வேண்டும். எங்கெல்லாம் குடும்பத்தில் இத்தகைய ஆவியினை நாம் காணுவோமோ அப்போது, “அது ஒரு சந்தோஷமான குடும்பம்” என்று நாம் கூறிடுவோம்.
சில குடும்பங்களில் தனிப்பட்ட காரியங்களில் சுயநலம் காணப்படுகின்றது மற்றும் சகோதர பாசமும் இருப்பதே இல்லை. இத்தகைய குடும்பங்களில் தங்கள் சொந்த வீட்டாருக்குச் செய்வதைப் பார்க்கிலும், வெளியாட்களுக்கே அதிகமாய்ச் செய்திடுவதற்கான விருப்பம் காணப்படும். குடும்பத்தின் அங்கத்தினர்கள் தங்கள் சொந்த வீட்டாரிடத்திலேயே அதிகம் குறைவுகளைக் காணுகின்றவர்களாய் இருப்பார்கள். இம்மாதிரியான நிலைமைகளை, நீதி இல்லாமை என்றே நாம் சொல்லிடுவோம். எப்போதெல்லாம் நீதியின் கொள்கையானது ஒதுக்கப்படுகின்றதோ, அப்போது அன்பிற்குப் பதிலாகப் பகைமையின் ஆவி உருவாகிடும் மற்றும் இத்தகையச் சூழ்நிலைகளில் ஒற்றுமைக்கு வாய்ப்புமிராது.