OV 229
“ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும், தீர்க்கத்தரிசனங்களுமாம்.” ( மத்தேயு 7:12)
தேவனைப் பற்றியதான நம்முடைய புரிந்துகொள்ளுதலானது, நம்முடைய உயர்ந்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் படம்பிடித்துத் தருகின்றதாயிருக்கும். சர்வ வல்லவரைக் குறித்துக் கீழான அல்லது அரைக்குறையான புரிந்துகொள்ளுதலைக்கொண்டிருக்கும் யார் ஒருவனும், அவனது ஜீவயத்தின் நடத்தைகளில் ஏறக்குறைய கீழ்த்தரமானவனாகவும் மற்றும் கவனக்குறைவானவனாகவுந்தான் காணப்படுவான்; ஏனெனில் ஒவ்வொரு மனுஷி அல்லது மனுஷன் தனது சொந்த கொள்கைகளையே பின்பற்றுகிறவனாகக் கொஞ்சம் காணப்படுவான் மேலும் இது “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவைப்போன்று பூரணசற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்ற நமது மீட்பருடைய வார்த்தையினால் உறுதிப்படுத்தவும்பட்டுள்ளது. இருண்ட யுகங்களில் வாழ்ந்திட்டதான நம்முடைய முன்னோர்கள் ஒருவரையொருவர் கழுமரத்தில் கட்டி எரித்தார்கள் மற்றும் ஒருவரையொருவர் சித்திரவதைப் பண்ணினார்கள்; காரணம் தேவனுடைய குணலட்சணம் குறித்த அவர்களது தவறான புரிந்துகொள்ளுதலேயாகும். காரணம் அவர்களது கொள்கை மிகவும் கீழ்த்தரமானதாய்க் காணப்பட்டது. அவர்கள் உருவாக்கி, நமக்கும் கையளித்ததான விசுவாசப் பிரமாணங்களை உண்மையிலேயே நம்பினவர்களாக அவர்கள் காணப்பட்டனர்; அதாவது தற்காலத்தில் பரலோக நிலைக்கென்று கொஞ்சம் பரிசுத்தவான்களை மனுஷர் மத்தியிலிருந்து தேவன் கூட்டிச் சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்றும், மீதமானவர்களை – அதாவது ஆவியின்படி நடவாமல், மாம்சத்தின்படி நடக்கின்ற யாவரையும் – பேய்களின் கரங்களில் நித்திய காலத்திற்குமான சித்திரவதைக்கென்று தேவன் ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றும் அவர்கள் உண்மையிலேயே நம்பினவர்களாகக் காணப்பட்டனர்.
வேதாகமப் போதனைகளின் விஷயங்களில் இத்தகைய தவறான கருத்துக்களைத் தங்கள் மனதுக்கு முன்பாகக் கொண்டிருந்து, அந்தத் தவறான கருத்துக்களை அப்படியே பின்பற்றினவர்களாக மாத்திரம் காணப்பட்டனர். இருண்ட யுகங்களின் நியமங்களுக்கு அப்பால், நாகரிகமடைந்துள்ள மனிதர்கள் கடந்துவந்துள்ளார்கள் என்பது பாராட்டத்தகுந்த காரியமேயாகும். எனினும் தப்பறையினின்றுள்ள அவர்களது விடுதலையானது, அது கொண்டுவர வேண்டியதான ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கொண்டுவரவில்லை என்பது வருத்தம் தரும் காரியமாகவே உள்ளது. இவர்கள் – வேதாகமத்தைப் புறக்கணிப்பதன் மூலமும், அதன் தவறிழைக்காத; தன்மையினை மறுதலிப்பதன் மூலமும், வேதாகமப் போதனைகளுக்கு முரண்பாடாய் உள்ள தங்கள் சொந்த கணிப்புகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதன் மூலமும் – உயர் நிலைகளைப் பெருமளவில் எட்டியுள்ளனர். வேதாகமம் திவ்விய ஏவுதலின்படியான தேவனுடைய வெளிப்படுத்தல் என்பதை இன்றுள்ள கிறிஸ்தவ மண்டலத்தின் உயர் சிந்தையுள்ள பெருபான்மையானவர்கள் மறுத்து, வேதாகமம் அறியாமையில் காணப்பட்ட நல்ல நோக்கமுடைய புருஷர்களின் படைப்பு மாத்திரமே என்று அவர்கள் கருதுவதும், வேதத்தை எழுதினவர்களைக்காட்டிலும் இன்றைய காலத்தின் இறையியல் வல்லுனர்கள் எல்லாவிதத்திலும் வல்லவர்களாகவும், வேதாகமத்தைவிட மேலான காரியங்களைத் தங்கள் சொந்தத்திலிருந்து எழுத வல்லவர்களாகவும் இருக்கின்றனர் என்று அவர்கள் கருதுவதும் எத்துணை வருத்தமான காரியமாக உள்ளது.
தேவனுடைய இராஜ்யத்திற்கு அல்லது சிங்காசனத்திற்கு நீதி ஆதாரமாய்க் காணப்படுகின்றது என்ற வேதாகமத்தின் கருத்தானது, தேவனுடைய குணலட்சணங்களின் ஒவ்வொரு அம்சத்திற்கும், நீதியுடன்கூடத் தொடர்பு இருக்கின்றது எனும் விதத்தில், நீதியின் முக்கியத்துவத்தினைக் குறித்த ஒரு புரிந்துகொள்ளுதலை மனதிற்குக் கொடுக்கின்றதாயிருக்கின்றது. “தயாளமாய் இருக்கிறதற்கு முன்னே முதலாவதாக நீதியாயிரு” என்பது மனுஷர் மத்தியில் காணப்படும் பழமொழியாகக் காணப்படுகின்றது மற்றும் இது தேவனுடைய குணலட்சணம் குறித்து வேதவாக்கியங்கள் தெரிவிக்கும் காரியங்களுக்கு முழு இசைவாகவே காணப்படுகின்றது. அவர் முதலாவது நீதியுள்ளவராகக் காணப்படுகின்றார் – நீதியில் குறைவுப்பட்ட நிலைமையில் அவர் எதிலும் காணப்படுகிறதில்லை. அவரது ஞானம், அவரது வல்லமை, அவரது அன்பு யாவும், நீதி எனும் இப்பண்புடன் இணங்கி மற்றும் இதனை ஆதாரமாய்க் கொண்டுசெயல்பட வேண்டும். இப்படியாகவே இந்தக் குணலட்சணத்தினைப் பின்பற்றுகிற யாவருடைய விஷயத்திலும் காணப்பட வேண்டும். அவர்களும் முதலாவதாக நீதியுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். நீதி எனும் இந்த அம்சத்தினை எவ்வளவேனும் புறந்தள்ளின நிலையில், எந்தவொரு அஸ்திபாரத்தின் மீதும் கட்டியெழுப்பப்படுகின்றதான குணலட்சணமானது, தவறானதாக, தகாததாக, பாவமானதாகக் காணப்படும். தேவனுடைய சாயலிலும், ரூபத்திலும் படைக்கப்பட்ட முதல் மனுஷன் நீதியைத் தனது குணலட்சணத்திற்கான அஸ்திபாரமாகப் பெற்றிருந்திருக்க வேண்டும். முதல் மனிதனின் சந்ததியினர் யாவரும் இப்பண்பினைப் பல்வேறு அளவுகளில் பெற்றிருப்பினும், இன்னமும் அதைப் பெற்றிருக்கவே செய்கின்றனர். அதைத்தான் நாம் மனசாட்சியென்றும், நீதி நியாயம் என்றும் அழைப்பதுண்டு. சிலரிடம் இப்பண்பானது மிகவும் பலன்குன்றிக் காணப்படுவதினால் பாராட்டு விரும்புதல், முதலான மனதின் பலமான பண்புகளினால் எளிதில் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் மனித மனங்களின் பலமான பண்புகள் யாவும் கட்டுப்படுத்தப்படுவதற்கும், அவர்களது மனசாட்சியினையும், நீதி நியாயம் குறித்த அவர்களது உணர்வுகளையும் ஊக்குவிப்பதற்கும் என்று சிறைச்சாலைகள் அவசியமாய் இருக்கின்றன. நீதியின் இந்தக் கொள்கைகளானது, ஆரம்பம் துவங்கி திவ்விய கொள்கைகளாகக் கருதப்பட்டும், மதிக்கப்பட்டும் வருகின்றன மற்றும் நாத்திகர்களைத் தவிர மற்றவர்களால் இதுவரையிலும் அப்படியாகவே கருதப்பட்டும் வருகின்றன.
பொன்னான பிரமாணம் அல்லது வேதவாக்கியங்களின் ஏதேனும் செய்தியானது மனுக்குலத்தின் உலகத்திற்காகக் கொடுக்கப்பட்டவை என்று அனுமானிப்பவர்கள் மாபெரும் தவறு செய்தவர்களாய் இருக்கின்றனர். இல்லை அவை சபைக்கு மாத்திரமே உரியனவாகும் மற்றும் இதற்கான ஆதாரமானது நமது கர்த்தருடைய வார்த்தைகள் அவருடைய சீஷர்களுக்குப் பேசப்பட்டவையாய் இருக்கின்றன என்பதில் விளங்குங்குகின்றன; இதுவுமல்லாமல் அப்போஸ்தலர்களின் நிருபங்கள்கூடப் பரிசுத்தவான்களுக்கொன்றும், விசுவாச வீட்டாருக்கும் என்றும்தான் எழுதப்பட்டிருக்கின்றன எனும் காரியத்திலும் விளங்குகின்றன. மற்றவர்களால் அவற்றைச் சரியாகப் பார்க்க, புரிந்துகொள்ள, உணர்ந்து கொளள் முடியாது. உலகப்பிரகாரமான மனதினால் “நேர்மையே சிறந்த கொள்கை” எனும் கூற்றினைப் புரிந்துகொள்ள முடியும் மற்றும் புரிந்துகொண்டிருக்கின்றனர். அதுவும் பல மாற்றங்களுக்குப் பிற்பாடே இப்படியாக இறுதியில் புரிந்திருக்கின்றனர்; ஆனாலும் இக்கூற்றினை ஒரு கொள்கையெனவும், ஜீவியத்திற்கான சட்டம் எனவும் ஏற்றுக்கொள்வதற்கு விரும்பும்விதத்தில், நம்முடைய ஆதார வசனத்தின் காரியத்தினை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
இந்தக் கருத்துக்கு இசைவாக நம்முடைய ஆதார வசனத்தின் முக்கியத்துவத்தினை – பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்து இயேசுவுக்குள் இழுக்கப்பட்டு, அழைக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு மற்றும் திவ்விய குணலட்சணத்தின் ஆதாரமாய் நீதி காணப்படுகின்றது என்று ஓரளவிற்குப் பார்த்தவர்களுக்கு மாத்திரமே வலியுறுத்த விரும்புகின்றோம். பொன்னான பிரமாணம் என்பது, கிறிஸ்தவனுடைய கடமை அனைத்தையும் உள்ளடக்கினதல்ல; இப்பிரமாணத்தினுடைய காரியங்களையும் தாண்டி அவன் நடத்தையிலும், குணலட்சணத்தின் வளர்ச்சியிலும் வளரவேண்டும் என்று அவனிடத்தில் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அவன் இப்படிக் கூடுதலாய் வளர்ந்து முன்னேறுவது என்பது அன்பிலுள்ள அவனது வளர்ச்சியினைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். பொன்னான பிரமாணம் என்பது அளவுகோலில், அடிப்படையான / கீழ்த்தள / lowest standard அளவாகும் மற்றும் இது சபையிலும் உலகத்திலுமுள்ள மற்றவர்களுடனான நம்முடைய கையாளுதலுக்கான – நீதிக்கான அளவுகோலாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நம்முடைய ஆதார வசனமானது, மனுஷர்களுடைய சாதாரண காரியங்களுக்கு அப்பாற்பட்டதாயினும், அது கிறிஸ்துவினுடைய ஒவ்வொரு பின்னடியாராலும் ஒவ்வொரு நாளும் மற்றும் ஒவ்வொரு மணி நேரமும் பயன்படுத்தப்பட வேண்டும். “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” இந்தவொரு பிரமாணத்தினை நமது கர்த்தர் ஒரு சுவிசேஷநியமமாக மற்றும் அன்பின் நியமமாகக் கொடுக்கவில்லை என்பது, இதைக் கூறியதோடுகூட அவர், “இதுவே நியாயப்பிரமாணமும், தீர்க்கத்தரிசனங்களுமாம்” என்று கூறின வார்த்தைகளில் விளங்குகின்றது; அதாவது இதுவே நீதியினைச் செய்திட நாடிடும் யாவரிடமும் – நியாயப்பிரமாணமும், தீர்க்கத்தரிசனங்களும் எதிர்ப்பார்க்கின்றன என்ற விதத்தில் கூறினார்.
பொன்னான பிரமாணம் எனும் அளவுகோலைத் தாண்டி, மேலாய் நாம் அன்பில் அடையும் எந்தவொரு வளர்ச்சியும்தான், கிறிஸ்துவில் புதுச்சிருஷ்டிகளென உள்ள நம்முடைய வளர்ச்சியாய்க் காணப்படும். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று நாம் எண்ணுகிறோமோ, அதையே நாமும் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று நீதியானது எதிர்ப்பார்க்கின்றதாய் இருக்கின்றது. அன்போ: “நான் எந்தக் கோரிக்கையும் வைக்கிறதில்லை ஆனால் திவ்விய அன்பின் நீளங்களையும், உயரங்களையும், ஆழங்களையும் உனக்குக் காண்பித்துத் தந்து, அதை நீ உணர்ந்துகொள்வதைக் காண்பதற்கும் மற்றும் உங்களுக்காகத் தம் ஜீவனையே தந்தவரான தேவனுடைய அன்பின் குமாரனுடைய சாயலாகிடுவதற்கு எப்படி நீ நாடுகின்றாய் என்பதைக் காண்பதற்கும் காத்திருப்பேன்” என்று கூறுகின்றதாய் இருக்கின்றது. சீஷனாய் இருப்பதற்கென்றும், கர்த்தருடைய அடிச்சுவடுகளில் நடப்பதற்கென்றும் அர்ப்பணம் பண்ணினவர்களிடம், “இயேசுவின் மாதிரிக்கேற்ப – நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாய் இருக்கிறோம்” என்று பரிசுத்த பவுல் அடிகளார் கூறுகின்றார்.
கர்த்தருடைய ஜனங்கள் யாவரும் அவரையும், சகோதரர்களையும், தங்கள் சத்துருக்களையும்கூட அன்புகூர்ந்திட வேண்டும். எனினும் தற்போது அன்பைக்குறித்துப் பார்ப்பதை இத்தோடு நிறுத்திவிட்டு, நம்முடைய நடவடிக்கைகளின் விஷயத்தில் பொன்னான பிரமாணத்தின் எளிமையான நீதியானது எப்படிக் காணப்பட வேண்டும் என்பதை மாத்திரம் பார்த்திடலாம். முற்றிலும் அன்பிற்கு அப்பாற்பட்டதும், முற்றிலும் நீதி சம்பந்தப்பட்டதுமான இந்தப் பொன்னான பிரமாணத்திற்கு இசைவாக நம்முடைய அன்றாட ஜீவியங்கள் எப்படிக் காணப்படுகின்றன? ஒருவேளை நீங்கள் எஜமானராக இருப்பீர்களானால், இந்தப் பிரமாணத்திற்கு இசைவாக உங்களின் கீழ் வேலை பார்ப்பவனை நடத்துகின்றீர்களா மற்றும் ஒருவேளை நீங்கள் வேலைக்காரனாகவும், அவன் எஜமானாகவும் இருந்திருந்தானானால், அவன் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களோ, அதைத்தான் இப்போது நீங்கள் எஜமானாய் இருக்கையில், அவனுக்குச் செய்கின்றீர்களா?
நீங்கள் எஜமானாய்க் காணப்படுவீர்களானால், பின்வருமாறு உங்களிடத்திலேயே கேட்டுக்கொள்ளுங்கள்: “ஒருவேளை எங்கள் ஸ்தானம் மாறியிருந்து நான் வேலைக்காரனாகவும், அவன் எஜமானாகவும் இருந்திருந்தால், அவன் என்னையும், என் காரியத்தையும் எப்படிக் கையாள வேண்டும் என்று விரும்பியிருந்திருப்பேனோ, அப்படித்தான் நான் என் வேலைக்காரரையும், அவன் காரியங்களையும் கையாளுகின்றேனா? ஒருவேளை உங்கள் ஸ்தானங்கள் மாறியிருந்து, எப்படி உங்கள் கறிக்கடைக்காரனும், உங்கள் ரொட்டிக்கடைக்காரனும், உங்கள் காய்கறிக்கடைக்காரனும் உங்களைக் கையாள வேண்டும் என்று விரும்பியிருந்திருப்பீர்களோ, அப்படித்தான் உங்கள் கறிக்கடைக்காரனையும், உங்கள் ரொட்டிக்கடைக்காரனையும், உங்கள் காய்கறிக்கடைக்காரனையும் தாங்கள் கையாளுகின்றீர்களா? அவர்களிடத்தில் தாங்கள் மரியாதையாய் நடந்துகொள்ளுகின்றீர்களா மற்றும் அவர்களுக்குத் தேவையற்ற பிரச்சனை கொடுக்க விருப்பமற்றவர்களாய் இருக்கின்றீர்களா? அவர்களுக்கான பணத்தினை உடனடியாகக் கட்டிவிடுகின்றீர்களா? அல்லது தாங்கள் ஒருவேளை வாடிக்கையாளர் நிலைமையில் காணப்பட்டிருந்தால், உங்களை வியாபாரி எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புவீர்களோ, அப்படித்தான் நீங்கள் வியாபாரியாகக் காணப்படுகையில், உங்கள் வாடிக்கையாளர்களை நடத்துகின்றீர்களா?
அவர்களிடத்தில் நியாயமான விலையினைத்தான் தெரிவிக்கின்றீர்களா? அவர்களுக்குப் பொருட்களைச் சரியான எடை அளவில்தான் கொடுக்கின்றீர்களா? உங்களுக்கு நல்ல பொருட்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவதுபோன்று, நீங்களும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல பொருட்களைக் கொடுக்கின்றீர்களா? நீங்கள் நல்ல ஓர் அயலானாய் இருக்கின்றீர்களா? உங்கள் பிள்ளைகள் மற்றவர்களுக்குத் தொந்தரவாய் இராதபடிக்குப் பார்த்துக் கொள்கின்றீர்களா? உங்கள் வீட்டுக் கோழிகள் உங்கள் அயலார்களின் தோட்டங்களை நாசமாக்காதபடிக்குப் பார்த்துக்கொள்கின்றீர்களா? உங்கள் வீட்டு நாய் ஆக்ரோஷமானதாய் இல்லாமலும், அதன் குரைப்புச் சத்தத்தினால் அயலார்களின் தூக்கத்திற்கு இடைஞ்சல் இல்லாமலும் பார்த்துக்கொள்கின்றீர்களா? சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமெனில் பொன்னான பிரமாணத்தின்படி நீதியாய் உங்கள் அயலானை நடத்துகின்றீர்களா? அதாவது உங்கள் அயலான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புவீர்களோ, அதைத்தான் நீங்களும் உங்கள் அயலானுக்குச் செய்கின்றீர்களா? அடிக்கடி இக்கேள்வியினைய் உங்களிடத்தில் கேட்டுக்கொள்ளுங்கள்.
இப்பொழுது நாம் வீட்டின் காரியங்களுக்குத் திரும்பி, அவைகளைப் பொன்னான பிரமாணத்தின்படி அளவிட்டுப் பார்க்கலாம். புருஷர்களாகிய நீங்கள், உங்கள் மனைவிகளை எப்படி நடத்துகின்றீர்கள்? மனைவிகளாகிய நீங்கள், உங்கள் புருஷர்களை எப்படி நடத்துகின்றீர்கள்? ஒருவருக்கொருவர் உங்கள் வார்த்தைகளில், உங்கள் நடத்தைகளில், உங்கள் எதிர்ப்பார்ப்புகளில் பொன்னான பிரமாணத்தினைச் செயல்படுத்துகின்றீர்களா? இல்லையேல் மற்றவர் சகித்திருக்கும் எல்லை மட்டும் அற்பத்தனமாய், சுயநலமாய் நடந்து, வாய்ப்பை உங்களுக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொள்கின்றீர்களா? பொன்னான பிரமாணத்தின்படித்தான் உங்கள் குழந்தைகளைக் கையாளுகின்றீர்களா? பெற்றோராய்ப் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமை குறித்ததான உங்களது மேலான கொள்கையின்படி செயல்பட்டு, ஒரு முன்மாதிரியான பெற்றோராய் நடந்துகொள்கின்றீர்களா? அவர்களைப் பயிற்றுவிக்கும் விஷயத்தில் உங்களுக்குப் பொறுப்புக் காணப்படுகின்றது என்றும், சூழ்நிலைகள் அனுமதிப்பதற்கேற்ப, அவர்களுக்கு நல்ல சூழ்நிலைகளையும், மகிழ்ச்சியையும், கல்வியறிவையும் கொடுப்பதிலும், நல்வாழ்க்கையை அடைய ஆயத்தப்படுத்துவதிலும் உங்களுக்குப் பொறுப்புக் காணப்படுகின்றது என்றும் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? அல்லது அவர்களது நலனுக்கடுத்தவைகளில் தாங்கள் அலட்சியமானவர்களாய்க் காணப்படுகின்றீர்களா? உங்கள் பொறுப்புகளைக் குறித்து அலட்சியமாய்க் காணப்படுகின்றீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு சில உரிமைகள் காணப்படுகின்றது என்றும், அவர்கள் முதிர்ச்சியடைகையில்/வளர்கையில் அவ்வுரிமைகளும் அதிகரிக்கின்றது என்றும் நீங்கள் கண்டுகொண்டுள்ளீர்களா? அல்லது இவைகளைக் குறித்து மறந்தவர்களாகவும், பிள்ளைகளைக் குழந்தைப் பருவத்தில் வைத்திருந்தது போன்று கட்டுப்பாட்டில் வைப்பதற்கு முற்பட்டு, அவர்கள் தங்களுக்கு அநீதி செய்யப்படுகின்றது என்று கோபம் கொண்டு, குடும்பப்பிரச்சனை உண்டாகும் அளவுக்கு அவர்களது பண்புகளைக் கடுகடுப்பானவைகளாக்கி, அவர்களை மகிழ்ச்சியற்றவர்களாக்குகின்றீர்களா? ஒருவேளை நீங்கள் பிள்ளைகளானால், நீங்கள் உங்கள் பெற்றோரைக் குறித்தும், அவர்களுடைய நலனுக்கடுத்தவைகளைக் குறித்தும், அவர்களுடைய விருப்பங்கள் குறித்தும், அவர்களது மகிழ்ச்சிக் குறித்தும் சிந்திக்கின்றீகளா? உங்கள் பிள்ளைகள் உங்களிடத்தில் கரிசனையாய் இருக்க வேண்டும் என்று விரும்புவதுபோன்று, உங்கள் பெற்றோர்கள் விஷயத்தில் கரிசனையாய் இருக்கின்றீர்களா? நீங்கள் சிறுபிள்ளையாய் இருக்கையில், உங்களுக்காக உங்கள் பெற்றோர்கள் பாடுபட்ட, கஷ்டப்பட்ட, பெலவீனப்பட்ட அந்த மணி நேரங்களையும், வாரங்களையும் நினைவில் வைத்திருக்கின்றீர்களா? மேலும் அந்த அன்பிற்குக் கைமாறு செய்ய நாடிக்கொண்டிருக்கின்றீர்களா? மற்றும் அவர்களது கடைசி நாட்களை, அவர்களது ஜீவியங்களிலேயே உள்ள சந்தோஷமான நாட்களாக்குகின்றீர்களா? உங்கள் பெற்றோர்கள் விஷயத்தில் பொன்னான பிரமாணத்தினைக் கடைப்பிடிக்கின்றீர்களா? உங்கள் உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் விஷயத்தில் அதைக் கடைபிடிக்கின்றீர்களா? அவர்கள் உங்கள் பொருள்களைக் கடனாக வாங்கிச் சென்று திருப்பித்தராதபோது, நீங்கள் அவர்களது பொருட்களைக் கடனாக வாங்கிச் சென்று திருப்பிக்கொடுக்காமல் பழித்தீர்த்துக்கொண்டு, குடும்பத்தில் தொடர்ந்து, அமைதியின்மையினை உண்டுபண்ணிக்கொண்டிருக்கின்றீர்களா? அல்லது நீங்கள் நீதியின் பொன்னான பிரமாணத்தினைக் கடைப்பிடித்து, உங்களுக்கோ அல்லது உங்கள் உடைமைகளுக்கோ எவைகள் செய்யப்படக்கூடாது என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ, அதை நீங்கள் உங்கள் உடன்பிறந்த சகோதரனுக்கும், சகோதரிக்கும் அல்லது அவர்களது உடைமைகளுக்கும் செய்யாமல் இருக்கின்றீர்களா?