R2100 (page 38)
“தாயாகிய ஏவாள் மீட்கப்பட்டிருக்கின்றாளா?
கேள்வி: — மனிதனாகிய கிறிஸ்து இயேசு ஆதாமுக்காகவும், அவர் அரையிலிருந்து பிறந்திடாத சந்ததியாருக்காகவும் தம்மையே ஈடுபலியென அல்லது சரிநிகர் சமான விலையாகக் கொடுத்தார் – காரணம் ஆதாமில் பிறந்திடாத சந்ததி, அவர் கீழ்ப்படியாமல் போன காலக்கட்டத்தில் அவருடைய அரையில் காணப்பட்டு, பின்னர்ப் பிறந்தது முதற்கொண்டு அவருடைய தண்டனையின் அனைத்து அம்சங்களிலும் இயல்பாகவே பங்கடைந்தவர்களாய் இருக்கின்றனர் என்று வேதவாக்கியங்கள் போதிக்கின்றன என்று நீங்கள் நிரூபிப்பது உண்மையாக இருக்குமானால், தாயாகிய ஏவாளின் விஷயம் எப்படியாக இருக்கும்? மீறுதலின்போது அவள் ஆதாமுக்குள்ளாகக் காணப்படவில்லை, மாறாக ஒரு தனிப்பட்ட ஜீவியாக தன் சொந்தக் கிரியைகளுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவளாகவும், கீழ்ப்படியாமையின் பாவத்தில் முதலாவது பங்கெடுத்தவளாகவும் காணப்பட்டாள் மற்றும் இதனால் ஆதாமுக்கு முன்னதாகவே மரணத்தண்டனைத் தீர்ப்பில் பங்கெடுப்பவளாக இருக்கின்றாள். அவளுக்கான ஈடுபலி எப்படிச் செலுத்தித்தீர்க்கப்பட்டது அல்லது எப்போதேனும் அது செலுத்தித் தீர்க்கப்பட்டதா மற்றும் தண்டனைத் தீர்ப்பினின்று அவள் எப்போதேனும் விடுவிக்கப்படுவாளா?
பதில்: — ஆரம்பத்தில் ஏவாள் ஆதாமினுடைய சரீரத்தின் ஒருபாகமாய் இருந்தாள் மற்றும் சரீரரீதியில் ஆதாமிடமிருந்து ஏவாள் பிரிக்கப்பட்ட பிற்பாடு, அவள் உண்மையில் ஆதாமிடமிருந்து பிரிக்கப்பட்டவளாக இல்லை ஆதாம் கூறினதுபோல “”இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய்”” இருக்கிறாள் – அவர்கள் இருவரல்ல, மாறாக ஒரே மாம்சமாய் இருந்தார்கள்;. ஏவாளுக்கு உதவிப்புரியும் துணைவனாக இருக்கும்படிக்கு ஏவாளுக்காய் ஆதாம் கொடுக்கப்படாமல், மாறாக ஆதாமுக்கு (பொருத்தமான) துணைவியாக இருக்கும்படிக்கு ஏவாள் ஆதாமுக்காகக் கொடுக்கப்பட்டாள். இதில் எதுவும் ஏவாளை, ஆதாம் அடிமையாக நடத்திடுவதற்கு அல்லது அவளிடத்தில் கொடுமையாய்க் காணப்படுவதற்கு அல்லது அவளைப் புண்படுத்திடுவதற்கு அல்லது அவளிடத்தில் அன்பற்று இருப்பதற்கு, ஆதாமிடம் உரிமையிருப்பதாக விழுந்துபோன சந்ததியில் சிலர் கற்பனைபண்ணிக்கொள்வது போன்று ஏதுமில்லை. முற்றிலும் நேர்மாறாக ஆதாம் ஓர் உண்மையான மனுஷனாகக் காணப்பட்டு ஏவாளை தன் “”சொந்தச் சரீரமெனப் பாவித்து,”” அவளை அன்புகூர்ந்து, அவளுக்காகத் திட்டங்கள்பண்ணி மற்றும் அவளுக்காக அக்கறைக்கொண்டிருந்தார். தேவன் பிரித்தபோது ஒருவர் இன்னொருவருடைய தேவைகளுக்குப் பொருத்தமானவர்களாய் இருக்கும்படிக்குப் பார்த்துக்கொண்டார். சரீர ரீதியிலும், மனரீதியிலும் பலமானவராய்க் காணப்பட்ட ஆதாம், தன்னுடைய பராமரிப்பு மற்றும் அன்பின் தேவையில் உள்ள ஒரு துணைவியைப் பெற்றிருப்பதில் மகிழ்ந்தார். “”வலுக்குறைந்த பாத்திரமாகிய”” ஏவாள் சரீர ரீதியிலும், மனரீதியிலும், பாங்கிலும் மென்மையானவளாக இருந்தபடியினால், அவள் தனது கணவனாகிய இராஜாவினுடைய கனிவான மற்றும் உயர்தரமான உணர்வுகளைத் தன்பால் ஈர்க்கப்பெற்றவளானாள் மற்றும் ஆதாமும் தன் ஆட்சிக்குட்பட்ட ஆசீர்வாதங்கள் மற்றும் கனங்கள் அனைத்திலும் இராணியென, அவளுக்கு ஒரு பங்கினைக் கொடுத்திட பிரியமாய் இருந்தார்.
ஆனால் அவர்கள் இருவரல்ல, மாறாக ஒருவரே ஆவர் மற்றும் அந்த ஒருவருக்கு ஆதாம் தலையாக இருந்தார். அவர்களைக் கையாளும்போது தேவன் தனித்தனியே பார்க்காமல் ஒருவராகவே பார்த்தார். ஆதாம் தன்னுடைய சொந்த ஆள்துவத்தை மாத்திரம் அல்லாமல், தன் மனைவியின் ஆள்துவத்தையும் அடையாளப்படுத்துகின்றவராகவே இருந்தார்; ஏனெனில் அவள் ஆதாமின் சொந்தச் சரீரமாய் இருந்தாள் மற்றும் ஆதாமின் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமாய் இருந்தாள் – அவள் ஆதாமின் ஒரு பாகமாவாள்.
[R2100 : page 39]
ஆகையாலே “”ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கின்றார்கள்”” என்று எழுதப்பட்டுள்ளது. இப்படியாகவே ஏவாளின் அடையாளம் ஆதாமுடன் இணைக்கப்பட்டிருந்தது; விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும் பாவத்தில் ஒருவேளை அவள் பங்கெடுக்காமல் இருந்தாலும், அவள் ஆதாமின் ஒரு பாகமென, அவரது துணைவியென அவரது தண்டனையாகிய மரணத்தில் பங்கடைந்திருப்பாள். அதுபோல மீறுதலில் ஏவாளே முதலாவதாக உட்பட்டிருந்தபோதிலும், அவளுடைய செய்கையானது சந்ததியினை அபாயத்திற்குள்ளாக்கவில்லை ஏனெனில் சந்ததியானது அவளுக்குள் இல்லாமல் ஆதாமுக்குள்ளே இருந்தது (1 கொரிந்தியர் 15:22). “”இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று”” (ரோமர் 5:12-19).
இன்னுமாகப் பொறுப்பானது குடும்பத்தின் தலைவனாகிய ஆதாமினிடத்தில் காணப்படுவதினால் ஏவாள் அடைந்த ஏமாற்றமும், அவளுடைய மீறுதலும் அவள் மீது மரணத்தைக் கொண்டுவந்தாக வேண்டும் என்ற அவசியமும் கண்டிப்பாய் இல்லை அவள் அநேகமாகச் சிட்சிக்கப்பட்டிருந்திருப்பாள். இந்த ஒரு கொள்கையானது, இதே சிருஷ்டிகரினால் வடிவமைக்கப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ்க் கர்த்தரினால் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது – இதுவும் கணவன் மற்றும் தகப்பனையுமே எல்லாவற்றிலும் குடும்பத்தினுடைய தலையாகவும், பிரதிநிதியாகவும் அங்கீகரித்தது மற்றும் இந்த ஏற்பாட்டினையே முன்வைக்கவும் செய்தது. உதாரணத்திற்கு எந்தவொரு மனுஷனும் கர்த்தருக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தால், அதினின்று அவனால் தப்பிக்க இயலாது; ஆனால் ஒருவேளை ஒரு மனைவியோ அல்லது மகளோ கர்த்தருக்கென்று ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தால், அது கணவனால் அல்லது தகப்பனால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் தவிர மற்றபடி அது செல்லாததாகிவிடுகின்றது (எண்ணாகமம் 30:2,5,8,13,16). வேறுவார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் மனுஷனைக் குடும்பத்தின் தலைவனாகச் செயல்பட வைப்பதை மற்றும் ஸ்திரீயானவளை அவரது துணைவியாக வைப்பதை இயற்கையின் விதிகள் மூலம் இப்படியாகக் குடும்ப உறவுகளைத் தேவன் நிறுவினதோடல்லாமல், “”கனமிக்கதும்,”” “”நீதியானதும்,”” “”நன்மையானதுமாக”” இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களிலும்கூட மேற்கூறிய காரியத்தினை அவர் தெளிவாய் வெளிப்படுத்தியுள்ளார் (ரோமர் 7:12).
திவ்விய ஏற்பாடுகளினுடைய இந்தக் காரியங்களை நாம் பார்க்கையில் ஏவாள் ஆதாமின் ஒரு பாகமாக மாத்திரம் கர்த்தரினால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டாள் என்பதை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகின்றது; ஆகையால் இதினிமித்தம் அவள் ஆதாமின் மீறுதலில் மாத்திரமல்ல, அதன் விளைவாகிய தண்டனையாகிய மரணத்திலும் அவளைச் சம்பந்தப்படுத்தியது என்று நம்மால் பார்க்கமுடிகின்றது. இன்னுமாக ஆதாமின் மீட்பு என்பது ஆதாமின் பாகமாகிய, “”அவரது சரீரமாகிய”” ஏவாளின் மீட்பையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. திவ்விய ஒழுங்கில் கணவன் மனைவிக்கு இடையிலான இந்த நெருக்கமான உறவானது அப்போஸ்தலனாகிய பவுலினால் மிகத்தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது (எபேசியர் 5:22-33).
***
இப்பொழுது அநேக திருமணங்கள் திவ்விய மாதிரியின்படியாக இருப்பதில்லை. மனரீதியிலும், ஒழுக்க ரீதியிலும், சரீர ரீதியிலும் மனுஷஜாதியினுடைய விழுகையானது அதன் பல்வேறு அங்கத்தினர்களை – சிலரை அதிகமாகவும் மற்றும் சிலரைக் குறைவாகவும் பாதித்துள்ளது. ஆதியில் பூரண பொருத்தத்துடன் காணப்பட்ட ஜோடி பெற்றிருந்த உயர்க்குணலட்சணங்களை அனைத்துப் புருஷர்களும், அனைத்து ஸ்திரீகளும் ஏறக்குறைய இழந்துவிட்டனர். ஆகையால் பொருத்தமற்றச் ஜோடிகள் அநேகர் இக்காலங்களில் இணைவதும் மற்றும் இதன் விளைவாக மகிழ்ச்சியற்ற நிலைமை ஏற்பட்டிருப்பதைக் காண்கையில் – அதுவும் விசேஷமாகப் பொருத்தத்தின் விஷயத்தில் திவ்விய ஒழுங்கானது அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதைக் காண்கையில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. திவ்விய மாதிரியின்படி ஒரு மனுஷன் தன்னைவிட மேம்பட்டவளாக ஒரு ஸ்திரீயையும், அதேசமயம் தன்னைவிட கீழ்ப்பட்டவளாக இருக்கும் ஒரு ஸ்திரீயையும் திருமணம்பண்ணிடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்; ஏனெனில் தன்னைவிட கீழ்ப்பட்ட ஒரு ஸ்தீரி எனும்போது ஜீவியத்தில் அவள் பொருத்தமற்றத் துணைவியாக இருப்பதினால், அவனால் அவளிடம் உண்மையான ஐக்கியத்தினைக்கொண்டிருக்க முடியாது; தன்னைவிட மேம்பட்ட ஸ்திரீயினுடைய விஷயத்தில் மேம்பட்ட ஒருவளுக்குத் தலையாக அல்லது கணவனாக இருக்கும் ஸ்தானத்தினை நிறைவேற்றிடுவதற்கு அவன் இயலாதவனாக இருப்பதினால், தொடர்ந்து போராட்டமே நிலவிடும். அதுபோலவே ஸ்திரீயும் தன்னைவிட கீழ்ப்பட்ட ஒரு புருஷனை, அதாவது “”மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்”” (எபேசியர் 5:22-23) என்ற திவ்விய கட்டளைக்கு ஏற்ப குடும்பத்தின் தலைவனாகவும், பொருத்தமான கணவனாகவும் தன்னால் பார்க்க முடியாத ஒரு நபரைத் திருமணம்பண்ணிக்கொள்ளாதபடிக்கு விசேஷமாய் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
[R2101 : page 39]
மனுஷன் நாகரிகமற்ற நிலைமைக்குள் மூழ்கினபோது, ஸ்திரீயும் அவனோடேகூட மூழ்கினாள்; மனுஷன் நாகரிகமான நிலைக்கு உயர்ந்ததுபோல, ஸ்திரீயும் அவனேடாடேகூட உயர்ந்தாள்; இதுபோலவே மனிதன் சீரழிவிற்குப்போனபோது அல்லது சீரடைந்தபோது, இதற்கேற்ப அவன் கீழுள்ள விலங்கு ஜீவராசிகளும், தாவரங்களும் சபிக்கப்பட்டன அல்லது ஆசீர்வதிக்கப்பட்டன. இது திவ்விய பிரமாணத்தினுடைய செயல்பாடாகும். சிறுவர்களுக்கான பள்ளிகளுடைய ஏற்பாடு போலவே, சிறுமிகளுக்கான பள்ளிக்கூடங்களும், பயிற்சிக் கல்லூரிகளும், புருஷர்களாலேயே ஏற்பாடு பண்ணப்பட்டன. வளர்ந்துவரும் நாகரிகத்திற்கு ஏற்ப படிப்படியாக மாறிவரும் சட்டங்களானது புருஷர்களுடைய, அதே சமயம் ஸ்திரீகளுடைய உயர்ந்துவரும் நிலைமைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றது; எனினும் இந்தச் சட்டங்களானது புருஷர்களாலேயே இயற்றப்படுகின்றது.
மனித சட்டங்களும், திவ்விய சட்டங்களைப் போலவே கணவன் மற்றும் தகப்பனையே – இவரில் பாகமாய் இருக்கும் இவரது மனைவிக்கு மாத்திரமல்லாமல், இவரது சிறு வயதுள்ள பிள்ளைகளுக்கும், பொதுவான நலனுக்கடுத்த காரியங்களில் பிரதிநிதியாகக் கருத்தில் எடுத்துக்கொள்கின்றது – அதாவது இஸ்ரயேலில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது போலவும், ஏதேனுக்குள் பாவம் பிரவேசிப்பதற்கு முன்பு அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது போலவுமாகும். நவீன காலங்களில் குடும்பத்தின் ஒற்றுமையை அழித்துப்போடுவதற்கும், ஒருவராய் இருந்த கணவன் மனைவியினை இருவர் ஆக்கிடுவதற்குமான பிரயாசங்களானது – தற்கால தீமைகளுக்கான தீர்வாயிருக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்குலமானது பற்றிக்கொண்டிருக்கும், மற்ற வஞ்சனைகள் போன்றதொரு வஞ்சனையே ஆகும். தங்கள் கணவன்மார்களுடனும், மகன்களுடனும் இணக்கமாயிராத தாய்மார்களும் மற்றும் தங்கள் சகோதரர்களுடனும், தகப்பன்மார்களுடனும் இணக்கமாயிராத சகோதரிகளும் இதினிமித்தம் உரிமைக்கோர அபாத்திரர்களாகத் தங்களை நிரூபித்துக்கொள்கிறவர்களாக இருக்கின்றார்கள். ஆனாலும் இணக்கமாய் இருப்பவர்களுக்கு உரிமைக்கோர அவசியமில்லை, காரணம் இவர்கள் தேவன் ஏற்படுத்தியுள்ள ஒழுங்குடன் இசைவாக இருந்து, அதை உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.