R3607 – ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R3607 (page 235)

ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்

A GOOD SON OF A BAD FATHER

2 நாளாகமம்34:1-13

“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.” ( பிரசங்கி 12:1 )

அரியணைக்கு எட்டு வயதில் வந்தமர்ந்தவுடன், தன் மனம் மற்றும் இருதயத்தை மதியீனமானவைகள் மீது மற்றும் தற்பெருமைக்கு அடுத்தவைகள் மீது செலுத்திடுவதற்குப் பதிலாக, யோசியா, தனது பதினாறாவது வயதில் சரியான இராஜாவாக தான் ஆண்டுவந்த இராஜ்யம் தொடர்புடைய விஷயத்தில் தேவனுடைய சித்தத்தை அறியவும், அதைச் செய்யவும் ஊக்கமாய் நாடத்துவங்கினது குறிப்பிடத்தக்க காரியமாகும். இவரது இருபதாவது வயதில், இவரது தீர்மானங்கள் / நம்பிக்கைகள் ஸ்திரமடைந்தது மற்றும் யூதேயா இராஜ்யத்தில் இவர் முழுமையான சீர்த்திருத்தத்தைக் கொண்டுவரத்துவங்கினார் மற்றும் இதே சீர்த்திருத்தத்தை தன் இராஜ்யபாரத்திற்கும் தாண்டி, மனாசே, எப்பிராயீம், சிமியோன் மற்றும் நப்தலியின் பாகங்களிலும் செய்திட்டார். விக்கிரகங்களையும், அதனோடு உள்ள மற்ற பல்வேறு உடைமைகளையும் அழித்துப்போட இவர் கட்டளையிட்டதோடு மாத்திரமல்லாமல், இவரே நேரில் [R3607 : page 236] சென்றும் இக்காரியங்களை மேற்பார்வையிட்டார் – இதற்குரிய பொறுப்பினை இவர் ஒப்படைத்திருந்ததான அதிகாரிகளோடுகூட இவரும், விக்கிரகங்கள் முற்றும் முழுமையாக அழிக்கப்படுகின்றதா என்று நேரில் சென்று பார்வையிட்டார். இவரின் இந்தச் சீர்த்திருத்த வேலையைக்குறித்தும், பெத்தேலில் இவர் பாகாலின் பலிபீடத்தில் பாகாலுடைய ஆசாரியர்களின் எலும்புகளைச் சுட்டெரித்துப்போடுவது குறித்தும் பல வருடங்களுக்கு முன்னதாகவே தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டிருந்தது (1 இராஜாக்கள் 13:1-3; 2 இராஜாக்கள் 23:15-17).

யோசியாவின் மற்றும் யூத யுகத்தினுடைய மற்றச் சீர்த்திருத்தவாதிகளினுடைய செய்கைகளானது – அதாவது பல்லாயிரம் பாகாலின் ஆசாரியர்களை வெட்டிப்போட வைத்திட்டதான எலியாவின் செய்கைகளானது, அநேகம் உண்மையுள்ள கிறிஸ்தவர்களுடைய மனங்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி, பொதுப்படையான அல்லது தனிப்பட்ட விஷயத்தில் வன்முறை செயல்களில் இறங்க ஏதுவாக்கிற்று; ஆனால் இது இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய ஆவிக்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். இது விஷயத்தில் சரியான புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்வதற்கு – யூத தேசமானது திவ்விய ஏற்பாட்டின்படி, உலகத்திலுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பினை அடையாளப்படுத்துகிறதாய் இருப்பதை நாம் நினைவில்கொள்வது அவசியமாகும்; நியாயப்பிரமாணத்தின் கீழ் இஸ்ரயேலின் ஒவ்வொரு இராஜா மீதும், அந்தத் தேசத்தின்மீதும், தனிநபர்கள் மீதும்கூடச் சில விதங்களில் வன்மையாக விக்கிரக ஆராதனையை எதிர்ப்பதற்குரிய ஒரு குறிப்பிட்ட பொறுப்புக் காணப்பட்டது, காரணம் அந்த இராஜ்யபாரமானது தேவனையும், அவரது நீதியுள்ள ஆளுகையையும் அடையாளப்படுத்தினதாய் இருப்பதை நாம் நினைவில்கொள்வது அவசியமாகும். யூத யுகத்தினுடைய முடிவில், மாம்சீக இஸ்ரயேலர்கள் ஒரு ஜாதியாராகத் தெய்வீகத் தயவினின்று அறுபுண்டுப்போனபோது, மேற்கூறப்பட்டுள்ள விஷயங்களை நிர்வகிக்கத்தக்கதாக அந்த ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டதான அனைத்துப் பிரமாணங்களும், சட்டங்களும் முடிவிற்கு வந்தது, இரத்துச் செய்யப்பட்டது, செல்லுபடியாகாமல் போனது. இது, அவர்களை நோக்கி நமது கர்த்தர்: “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்று கூறினதுபோன்று ஆயிற்று (மத்தேயு 23:38).

பெந்தெகொஸ்தே நாளில் ஆவிக்குரிய இஸ்ரயேலர் ஏற்படுத்தப்பட்டதோடுகூட, ஒரு புதிய உடன்படிக்கை, ஒரு புதிய உறவு, புதிய சட்டதிட்டங்கள் செயலாக்கத்தில் வந்தது. ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் பூலோக ஆயுதங்கள்கொண்டு யுத்தம்பண்ணிடக்கூடாது. அவர்களுடைய யுத்தம் அவரவர் சொந்த இருதயத்திற்குள்ளாகக் காணப்பட வேண்டும்… மாம்சத்தின் ஆசைகள், எதிராளியானவனின் தந்திரங்கள் மற்றும் உலகத்தினுடைய ஆவிக்கு எதிராய் விசுவாசத்தின் நல்லப் போராட்டத்தினைப் போராடிட வேண்டும். ஒவ்வொரு இருதயத்திற்கும் கைப்பற்றிடுவதற்குரிய சொந்த இடங்கள் உண்டு, அப்புறப்படுத்திடுவதற்கு விக்கிரகங்கள் உண்டு; ஒவ்வொரு இருதயமும், மாம்ச சரீரத்தினுடைய எல்லைகள் அனைத்திலும், நமது தேவனாகிய கர்த்தருக்கான தொழுதுகொள்ளுதலை, ஆராதனையை, சேவித்தலை நிலைநாட்டிடுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது. உலகத்தின் காரியங்களைப் பொறுத்தமட்டில், அவர்களோடு நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது. “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல” (யோவான் 17:16). உலகம் தற்போது புறஜாதிகளினுடைய கரங்களில் காணப்படுகின்றது மற்றும் இது தெய்வீக அனுமதியின் பேரிலேயே ஆகும். புதுச்சிருஷ்டிகள், ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் தங்களை உலகத்திடமிருந்து பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் இவர்களது மனசாட்சியானது இவர்களை அனுமதித்திடும் அளவிற்கு, இவர்கள் அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்த அதிகாரங்கள் தேவனாலே அனுமதிக்கப்பட்டவைகளேயாகும். ஆனால் அதற்கென்று இவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள அதிகாரங்களினுடைய செய்கைகள் அனைத்திற்கும் இணங்கிட வேண்டும் என்று அர்த்தமாகாது – ஒருவேளை இணங்கிடுவார்களானால், இவர்கள் மிகவும் துக்கம் அடைபவர்களாய் இருப்பார்கள்; ஆனாலும் இவர்கள் அனுபவித்திடும் துக்கம் அல்லது எதிர்ப்பு அல்லது பாடுகள் அல்லது பொறுமை மற்றும் விசுவாசத்திற்கான சோதனைகள் எதுவாயினும், அது – இவர்களை எதிர்கால இராஜ்யத்தினுடைய நிலைமைகளுக்கு ஆயத்தம்பண்ணுவதற்குரிய கர்த்தருடைய மெருகூட்டிடும், தகுதிப்படுத்திடும் செயல்முறையாகவும் கருதப்பட வேண்டும்; மேலும் அது – இவர்களைத் தமக்கும், நீதிக்கும் அதிகமதிகமாய் நேர்மையுள்ளவர்களாகவும் மற்றும் தாழ்மையுள்ளவர்களாகவும், பொறுமையுள்ளவர்களாகவும் ஆக்கிடத்தக்கதாகவும், எதிர்காலத்தில் கர்த்தருடைய செம்மையான வழிகளில் உலகினை ஆசீர்வதிப்பதும், ஆளுகைச்செய்வதும், நியாயந்தீர்ப்பதும், சீர்த்தூக்கிவிடுவதும், ஊக்குவிப்பதுமான மகா வேலைக்கு, இவர்கள் நன்கு தகுதியடைந்தவர்களாகக் காணப்படத்தக்கதாகவும் ஆக்கிடும் அவரது செயல்முறையாகவும் கருதப்பட வேண்டும்.

தாயின் செல்வாக்கு – SUB HEADING

வேறொரு பாடத்தில் எப்படி ஒரு நல்லத் தகப்பன், ஒரு துன்மார்க்கமான குமாரனைப் பெற்றிருந்தார் என்பதையும், மேலும் அது அந்தத் தகப்பன் மற்றக் காரியங்களில் எல்லாம் எவ்வளவுதான் வைராக்கியமும், உண்மையுள்ளவராக இருப்பினும், பெற்றோருக்குரிய தாலந்துகளில் தனக்கிருக்கும் குறைபாடு குறித்து என்னதான் காரணங்கள் காட்டினாலும், அவர் தகப்பனுக்குரிய தன் கடமைகளில் உண்மையற்று இருந்ததை, கடமை தவறியதைச் சுட்டிக்காட்டினது என்பதையும் பார்த்தோம். நம்முடைய இன்றைய பாடம் நேர்மாறானதாகக் காணப்பட்டு… துன்மார்க்கமான தகப்பன் ஒருவனுடைய நல்லக் குமாரனைக்குறித்துக் காண்பித்துத் தருகின்றதாய் இருக்கும்; மேலும் இது ஒரு நல்லத் தாயார் இருந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றது என்று அனுமானிப்பது முற்றிலும் நியாயமானதாக எங்களுக்குத் தோன்றுகின்றது. ஏனெனில் துன்மார்க்கமான ஒரு தகப்பனும், துன்மார்க்கமான ஒரு தாயும், ஒரு நல்லக் குமாரனை வளர்த்து உருவாக்கினார்கள் என்பது முற்றிலும் சாத்தியமற்றதாகும். ஆகையால் யோசியாவின் தாயார், ஒரு தேவபக்தியுள்ள ஸ்திரீ என்று எடுத்துக்கொள்வது நியாயமானதென நாங்கள் எண்ணுகின்றோம்.

தாய் மனம் வைத்தால், அவள் தன்முன் கொண்டிருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்கேற்ப தன் பிள்ளைகளைப் பயிற்றுவித்து வளர்ப்பதில் தன் சக்தியினைப் பிரயோகிக்கத்தக்கதாக, மனித குடும்பத்திலுள்ள தாய்மார்களைத் தொழில் மற்றும் அரசியலுடைய சண்டைச்சச்சரவுகளினின்றும், சுயநலத்தினிடமிருந்தும் அதிகளவில் பிரித்து வைத்துள்ளதான தெய்வீக ஏற்பாடானது, மனுஷஜாதிக்குப் பல்வேறு வழிகளில் மாபெரும் ஆசீர்வாதமாகவே இருந்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஐயத்திற்கிடமின்றி இது எல்லை மீறின சுயநலம் மற்றும் பாவத்திற்குள் வேகமாய்ச் சீரழிந்து போவதையும் தடுத்திருக்கின்றது மற்றும் எங்கெல்லாம் இயற்கையான இந்த ஏற்பாடு குறுக்கிடப்பட்டுள்ளதோ, அது அங்குக் குழந்தைகளுக்கு ஏறக்குறைய பாதகமாகவே இருந்துள்ளது என்பதிலும் உறுதியே.

ஓ! உலகத்தின் தாய்மார்கள் கர்த்தரினால் தங்களது கரங்களில் வைக்கப்பட்டுள்ள நன்மைக்கேதுவான மகா வல்லமையினை அறிந்துகொள்வார்களாக! தொட்டில் ஆட்டும் கைகள்தான், உலகத்தை ஆளும் கைகளாகும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்களாக! இதை உணர்ந்துகொள்வதும், தங்கள் கைகளில் தேவனால் இவ்விதம் வைக்கப்பட்டுள்ள வாய்ப்பினைப் பயன்படுத்திடுவதும், தெய்வீக ஏற்பாட்டிற்கு முறையாய் இணங்குவதாக இருக்கும் மற்றும் இது அரசியல், தொழில் முதலானவைகளில் பங்குபெறுவதற்கான இலட்சியங்களை இவர்களிடத்திலிருந்து முற்றிலும் எடுத்துப்போட்டுவிடும். மற்றப் பாடப்பொருள் விஷயத்தில் போலவே, இந்த ஒரு பாடப்பொருள் மீதான கர்த்தருடைய வார்த்தைகளிலுள்ள ஆலோசனைகளும், தெய்வீக வழிநடத்துதலினுடைய ஏற்பாடுகளும் கவனிக்கப்படாமல் போவதே [R3608 : page 236] பிரச்சனையாய் இருக்கின்றது. பாவப்பட்ட உலகமானது தனக்குத் தெரிந்ததற்கேற்ப அநேகமாகச் செய்துகொண்டுவருகின்றது; அதுவும் இயற்கையான சுபாவ உள்ளுணர்வை அங்கீகரித்து, அது நேர்மையாய் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஏற்ப, சிலர் சிறப்பாகவும், சிலர் மோசமாகவும் செய்துகொண்டுவருகின்றனர்.

கிறிஸ்தவ தாய்மார்கள், அதிலும் விசேஷமாகத் தெய்வீகக் குணலட்சணம் மற்றும் திட்டம் குறித்து அதிகம் புரிந்துகொள்ளத்தக்கதாகத் தங்கள் புரிந்துகொள்ளுதலின் கண்களைத் திறக்கப்பெற்றவர்கள், தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதிலுள்ள தங்களுக்கான சிலாக்கியங்களைத் தங்களுக்கான பொறுப்புகளைப் பயன்படுத்திடுவதில் துரிதமாய்க் காணப்பட வேண்டும். இவ்வேலையானது சிறியது என்றோ, முக்கியத்துவமற்றது என்றோ, ஆற்றலற்றது என்றோ யாரும் எண்ணிட வேண்டாம். தேவனுக்கும், அவரது வார்த்தைகளுக்கும், தங்கள் பெற்றோர்களுக்கும், பென்னான பிரமாணத்திற்கும், அதாவது தங்கள் விளையாட்டு நண்பர்கள், அயலார்களிடத்தில் நடந்துகொள்ளும் விஷயத்தில் பொன்னான பிரமாணத்திற்கும் கீழ்ப்படியவும், மரியாதைக்கொண்டிருக்கவும் மற்றும் ஒழுங்காய் இருக்கவும், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்கவும், காலந்தவறாமல் இருக்கவும், ஒழுக்கமாக இருக்கவும், உண்மையாய் இருக்கவும் முறையாய்ப் பயிற்றுவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குமாரனும், ஒவ்வொரு குமாரத்தியும் . . . ஜீவியத்தில் அவன் மற்றும் அவளது சொந்த ஆசீர்வாதத்திற்கு ஆயத்தமாக்கப்பட்டவர்களாய் மாத்திரம் இராமல், இன்னுமாக மற்றச் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும், புருஷருக்கும், ஸ்திரீக்கும் முன்மாதிரியாகவும், ஆசீர்வாதமாகவும் இருப்பதற்கும்கூட ஆயத்தமாய் இருப்பார்கள். இப்படியாக ஒவ்வொரு தாயினுடைய செல்வாக்கானது நாட்கள் செல்லச்செல்ல விரிவடைகின்றது மற்றும் பெருகுகின்றது.
[R3608 : page 237]

ஒருவேளை இத்தகைய விரும்பத்தக்கச் செல்வாக்குகளானது குடும்ப வட்டாரத்தைத் தாண்டி வெளியே உள்ளவர்களுக்காய்ச் செயல்படுத்தப்படவில்லை என்றாலும், குழந்தைகளை முறையே பயிற்றுவிப்பது என்பது, குடும்பத்திற்கு மிகவும் அவசியமானதாகும் – குடும்பத்தின் பொதுவான சமாதானத்திற்கும், சௌகரியத்திற்கும், அன்பிற்கும் மிகவும் அவசியமானதாகும். தகப்பன் குடும்பத்தின் தலைவனெனத் தன் பொறுப்பினைத் தட்டிக்கிழிக்காதவராகவும், இவரோடுகூட உடன்வேலையாளாகவும், வாழ்க்கைத் துணையாகவும் தாயானவள் ஊக்கமாய் ஒத்துழைத்தாலும்… குடும்பத்தின் தேவைகளைச் சந்திப்பதற்கென உழைக்கும் தகப்பன் குழந்தைகளுடன் அதிகம் தொடர்பில் இராததால், குழந்தைகளைப் பயிற்றுவிப்பதிலுள்ள பொறுப்பினுடைய பெரும்பகுதி தாய் மேலேயே காணப்படுகின்றது. ஒருவேளை தாயானவள் மாத்திரம் கிருபையின் பிள்ளையாக இருக்கும் பட்சத்தில், அவள் கணவன் அனுமதிக்கும் அளவுக்குத்தக்கதாக இந்த முழுப்பொறுப்பும் அவள் தோள்கள்மீதே காணப்படும் மற்றும் அவளுக்கு
இருக்கும் ஒரே உதவியும், வழிநடத்துதலும் கர்த்தர் அருளிடும் உதவியும், வழிநடத்துதலும் மாத்திரமேயாகும். அந்தோ பரிதாபம்! ஒழுங்கும், கட்டுப்பாடும் இல்லாத அநேகம் குடும்பங்கள், உண்மையில் குடும்பங்களே அல்ல. அன்பு மற்றும் செல்லம் காட்டுதல்குறித்த தவறான அபிப்பிராயங்கள் உடைய அநேகம் பெற்றோர்கள் – தேவனுக்கும், பெற்றோருக்கும், மற்றவர்களுடைய நலன்கள், உரிமைகளுக்குமான உரிய மரியாதை காட்டாத விதங்களில் பிள்ளைகள் வளருவதற்கு அனுமதித்துவிடுகின்றனர். இதுவே உலகமெங்கிலும் வெளிப்படும் ஒழுங்கின்மையினுடைய அதிகரிப்பிற்கும், கட்டுபாடற்ற ஜீவியத்திற்குமான இரகசியமாகும். உண்மையில் ஆச்சரியம் என்னவெனில்… விதிமுறைகளும், ஒழுங்கும், அன்பும், இரக்கமும் இல்லாத குடும்பங்களையுடைய உலகமானது, அது இருக்க வேண்டிய மோசமான நிலைமையைக் காட்டிலும், இப்பொழுது குறைந்த மோசமான நிலைமையிலேயே காணப்படுகின்றது.

உன் வாலிபப் பிராயத்தில் – SUB HEADING

நம்முடைய பாடத்தினுடைய ஆதார வசனமானது, ஒவ்வொரு குடும்பங்களிலும் முக்கியமானதாய்க் கருதப்பட வேண்டும். தன் சிருஷ்டிகரை நினைவுகூருவதற்கும், மதிப்பதற்கும் கற்றுக்கொண்டுள்ள பிள்ளை – தன் சொந்த அபூரணங்களைக்குறித்து, இது எவ்வாறு வந்தது என்பது குறித்தும், தன்மீதும், உலகம் அனைத்தின்மீதும் காணப்படும் மரணத் தண்டனையானது பூமிக்குரிய வளங்கள் / நம்பிக்கைகள் அனைத்தையும் அழித்துப்போட்டது என்பது குறித்தும் அறிந்துகொண்டுள்ள பிள்ளை – சாபத்தினின்றுள்ள இரட்சிப்பைக்குறித்த செய்தியை ஏற்றுக்கொள்வதற்கும், தேவன் எப்படித் தம்முடைய அன்பினால் இயேசுவை மாபெரும் மீட்பராகக் கொடுத்தருளியுள்ளார் என்பதையும், இவரது மரணம் பெற்றுத் தந்ததான விடுதலையானது, மனித குடும்பத்தினுடைய ஒவ்வொரு அங்கத்தினன்மீதும் சீக்கிரமாய்க் கடந்துவரும் என்பதையும் ஏற்றுக்கொள்வதற்கும் ஆயத்தமாயிருப்பான். தேவனுக்கு மரியாதைக் கொண்டிருப்பதன் இயல்பான விளைவுதான், பெற்றோருக்கு மரியாதைக் கொண்டிருப்பதாகும்.

இந்தப் பத்திரிக்கையினுடைய இதழாசிரியர் (சகோதரர் ரசல் தன்னைக்குறித்துப் பதிவு செய்கின்றார்) கிறிஸ்தவ பெற்றோர்களுக்குப் பிறப்பதற்கும், கிறிஸ்தவ செல்வாக்கின் கீழ்ப்பேணி வளர்க்கப்படுவதற்குமுரிய நற்சிலாக்கியம் பெற்றவராய் இருந்தார் மற்றும் இப்படியாகத் தேவனுடைய வழிநடத்துதலினால் ஜீவியத்தின் ஆரம்பக்காலங்களிலேயே கர்த்தருக்கு அர்ப்பணம்பண்ணிடுவதற்கான சிலாக்கியத்தினையும், ஆசீர்வாதத்தினையும் காணும்படிக்கு வழிநடத்தப்பட்டார். இப்படியாக அவர் தப்புவிக்கப்பட்டதான அநேகம் படுகுழிகளையும், கண்ணிகளையும் வேதனையான அனுபவங்களையும் மற்றும் இப்படியாக அவர் அடைந்திட்டதான மாபெரும் ஆசீர்வாதங்களையும் மிகத் தெளிவாய் அவரால் இப்பொழுது ஜீவியத்தைத் திரும்பிப்பார்க்கையில் காணமுடிகின்றது. தேவனுடைய கிருபையினால் பாவத்தினின்று விலகியோடி, மாபெரும் ஜீவன் கொடுப்பவரைப் பற்றிப்பிடித்து, அவர் கரத்தை உறுதியாய்ப் பிடித்து, அவர் அடிச்சுவட்டில் நடக்க நாடிடும் அனைவரின்மீதும் இதழாசிரியரின் அனுதாபங்கள் காணப்படுகின்றது. இத்தகையவர்கள் அனைவரோடுகூட இதழாசிரியர் களிகூருகின்றார்; எனினும் பொல்லாத நாட்கள் வருமுன்னும்… இளமைப் பருவத்துக்குரிய இன்பக் களியாட்டங்களில் மூழ்கி, பின்னர்க் கசப்பான அனுபவங்களை அனுபவிப்பதற்கு முன்னும் … ஜீவியத்தினுடைய ஆரம்பக்காலங்களிலேயே கர்த்தரை நாடித்தேடுகிறவர்கள்மீது இதழாசிரியர் விசேஷமாய் அக்கறைக்கொண்டுள்ளார். இந்தப் பத்திரிக்கையினுடைய வாலிப வாசகர்கள் அனைவரிடத்திலும்… அதிலும் விசேஷமாகத் தேவனுடைய அன்பு தங்கள் இருதயங்களைக் கட்டி இழுப்பதை உணர்ந்தவர்களாகவும், அந்த இழுக்கும் வல்லமைக்கு இணங்கி, நம்முடைய இரட்சிப்பின் அதிபதியினுடைய அடிச்சுவடுகளில் – அதாவது சுயத்தை வெறுத்தல் எனும் அடிச்சுவட்டில், சுயத்தை பலிசெலுத்துதல் எனும் அடிச்சுவட்டில், மகிமையின்மேல் மகிமைக்கு வழிநடத்துகின்ற அடிச்சுவட்டில் – நடப்பதற்கென்று தங்களை முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களாகிய வாலிபர்கள் அனைவரிடத்திலும் நாம் ஆழமான அக்கறைக்கொண்டிருக்கின்றோம். அத்தகையவர்கள் அனைவருக்கும் நாம் கர்த்தருக்குள் உற்சாகமான வாழ்த்துதல்களைத் தெரிவிக்கின்றோம் – ஏற்கெனவே அடியெடுத்து நடந்துவந்துள்ள அடிகளுக்காய்ப் பாராட்டுத் தெரிவிக்கின்றோம் மற்றும் இனிமேலும் அடியெடுத்து நடக்கவேண்டியவைகளுக்காய் வாழ்த்துச் சொல்கின்றோம்.