R4899 (page 389)
கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். (ரோமர் 12:18)
மனுஷர் யாவர் மீதும் வரவிருக்கின்றதான சோதனை காலத்தைக்குறித்து வேதவாக்கியங்கள் கூறுகின்றன. (வெளி 3: 3,10). அந்தச் சோதனை காலமானது நம்மீது இருக்கின்றதென – ஏற்கெனவே துவங்கிவிட்டதென நாம் நம்புகின்றோம். உலகத்தின் விஷயத்தில் அது அதிருப்தியை, கசப்பை, தீமையான கற்பனைகளை, பகைமையை, சண்டையை, திருட்டை, கொலையைக் குறிக்கின்றதாய் இருக்கும். இந்த ஆவியே சமுதாயத்தைச் சிதைக்கப்போகின்றதாய் இருக்கின்றது. இந்த உண்மையினை வேதவாக்கியங்களானது மிகத் தெளிவாய் உறுதிப்படுத்துக்கின்றதாய் இருக்கின்றது.
இந்தச் சோதனை காலமானது சில விதங்களில் சபையாகிய நம்மிடத்தில் துவங்கிடும் என்பதை நாம் மறவாமல் இருப்போமாக. தேவனே இதை அனுமதித்துள்ளார். தேவன் தம்மைக்குறித்தும், தம் குணலட்சணம், தம் மகிமையான திட்டம் முதலானவை குறித்துமுள்ள மாபெரும் வெளிச்சத்தினை நமக்குக் கொடுத்திருக்கின்றார். திவ்விய சுபாவத்திற்குரிய நமக்கான “”பரம அழைப்பு”” குறித்தும் அவர் நமக்கு அறிவுரையளித்திருக்கின்றார். அவரது அழைப்பினை ஏற்றுக்கொண்டு, நாம் அவருடைய பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கின்றோம். நாம் கிறிஸ்துவின் பள்ளியில் பிரவேசித்திருக்கின்றோம் மற்றும் மணவாட்டி வகுப்பாரில் அங்கத்தினர்களென நாம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவசியமான குணலட்சணம் தொடர்புடைய படிப்பினைகளும் நமக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அநேகம் விதங்களில் நாம் அனுகூலம் பெற்றவர்களாய் இருக்கின்றோம். இப்பொழுது Exam / பரீட்சைத்தேர்வு தொடங்கியுள்ளது. நம்மில் யார் தேர்ச்சிப் பெறுவார்கள்? முன்னோர் வழிவந்த மாம்சத்தின் அபூரணங்களை உடையவனாக இருப்பினும், தரித்திரனாக இருப்பினும், தன் இருதயத்திலும், மனதிலும் கர்த்தருக்கொத்த குணலட்சணத்தின் சாயலை அடைந்துள்ளான் என்று யார் யார் காண்பிக்கப் போகின்றனர்? இதுவே பரீட்சையாகும்.
இந்தப் பரீட்சையானது எப்படி வருமென நாம் எதிர்ப்பார்த்திடலாம்? அன்புக்குரியவர்களே, அது எவ்வாறு வருகின்றது என்று நாம் காண்கின்றோம்; கூர்ந்து கவனிப்பதன் வாயிலாகவும், மற்றவர் வாயிலான தகவல் வாயிலாகவும் அந்தப் பரீட்சைத்தேர்வானது சிலர் விஷயத்தில் அனுகூலமாகவும், மற்றவர்கள் விஷயத்தில் அனுகூலமற்ற விதமாகவும் போய்க்கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். சில இடங்களில் முழுச்சபையாரும் பரீட்சைக்குள்ளாகுகின்றனர். அதிகாரம் மற்றும் சில வழிமுறைகள் (methods) சம்பந்தமாய் எழும்பும் முக்கியமற்ற கேள்விகள் கவனத்தைச் சிதறப்பண்ணி, பிரச்சனைகளை எழுப்புகின்றன. இது சத்தியத்திற்கு ஊழியம் புரிவதிலிருந்து கவனத்தைத் திருப்பிவிடுகின்றது. இது சிலருடைய ஆவல்களைத் தணித்துவிடுகின்றது; இது சிலரை மிகவும் கசப்படைய செய்துவிடுகின்றது. கோபம், துர்க்குணம், பகைமை, பொறாமை, கருத்துவேறுபாடுகள், சண்டைகளாகிய தீய ஆவியின் கனிகளானது சில விதங்களில் கட்டுப்பாடு பண்ணுகின்றதாய் இருக்கின்றது.
நாங்கள் யாரையாவது நியாயந்தீர்க்கவோ, குற்றவாளி என்று தீர்க்கவோ இல்லை மாறாக ஒவ்வொருவனும் தன்னைத்தான் நிதானித்துக்கொள்வானாக என்றே அப்போஸ்தலனோடுகூடச் சேர்ந்து கூறுகின்றோம். ஒவ்வொருவனும் தாழ்மை, நீடியபொறுமை, சகோதர சிநேகம், அன்பு என்னும் ஆவியின் கனிகளைத் தான் பெற்றிருக்கின்றானா என்று மாத்திரம் பார்த்துக்கொள்ளாமல், இன்னுமாக இப்பண்புகள் தன் நடத்தையிலும், தன் வார்த்தைகளிலும் தன்னால் வெளிப்படுத்தப்படுகின்றதாவென்றும் பார்த்துக்கொள்வானாக. அருமையானவர்களுக்காகவும், நல்லவர்களுக்காகவும், நற்குணமுள்ளவர்களுக்காகவும் உள்ள அன்பின் அடிப்படையில் மாத்திரமில்லாமல், வழிவிலகியுள்ளவர்களுக்காகவும், சத்துருக்களுக்காகவும், பொறுமையாய், பரிவாய், அன்பாய் சகிக்கும் அன்பின் அடிப்படையிலுந்தான் கர்த்தர் பரீட்சிக்கின்றார் என்பதைக்கூட நாம் நினைவில்கொள்ள வேண்டும். அன்புபோல நீதியும் திவ்விய குணலட்சணத்தினுடைய அடிப்படை அம்சமாய் இருக்கின்றது என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். ஆகையால் தேவனுக்கொத்த சாயலாக வேண்டுமெனில், தேவனுடைய அன்பின் குமாரனுக்கொத்த சாயலாக வேண்டுமெனில், நம்முடைய குணலட்சணங்களில் நீதியின் கொள்கையினை நாம் உறுதியாய்க் கொண்டிருக்க வேண்டும். நாம் அனைவரிடமும் இரக்கமாயும், தயவாயும், அன்பாயும் காணப்பட வேண்டும்; ஆனால் தயவாய் இருப்பதற்கு முன்னதாக நாம் நீதியாய் நடந்திட வேண்டும். காண்கின்ற சகோதரனை நம்மால் அன்புகூர முடியவில்லையெனில், நாம் எப்படி அவனது பிதாவையும், நாம் கண்டிராத நம் பிதாவையும் அன்புகூருகின்றோம் என்பதைக் காண்பித்திட முடியும்?
இதே அதிருப்தியின் ஆவியானது, தேவனுடைய ஜனங்களை அவர்களது இல்லங்களிலும் சோதிக்கின்றதாய் இருக்கின்றது. சரி மற்றும் தவறு குறித்தும், நீதி மற்றும் அநீதி குறித்தும் நுணுக்கமாய் உணர்ந்துகொள்ளுதல் என்பது, நாம் நீதியாய் அல்லது அநீதியாய் நடந்திருக்கின்றோமா என்பதையும், மற்றவர்கள் நம்மிடத்தில் நீதியாய் அல்லது அநீதியாய் நடந்திருக்கின்றார்களா என்பதையும் காண நம் அனைவருக்கும் உதவுகின்றதாய் இருக்கும். இந்த அறிவின் பெருக்கமானது நம்மீது தனிப்பட்ட விதத்தில் ஒரு பொறுப்பினைக் கொண்டுவருகின்றதாய் இருக்கின்றது… அது கடந்த காலங்களில் செய்யப்பட்டுள்ள ஏதேனும் அநீதிகளின் விஷயத்தில் முழுமையாயும், உடனடியாகவும், இருதயப்பூர்வமாகவும் மன்னிப்புக் கேட்கப்பட்டு, சரிச்செய்யப்பட்டு, இனிமேல் செய்யாதபடிக்குத் தவிர்க்கப்படுதல் எனும் பொறுப்பாகும். இதை நாம் முழுமையாய்ச் செய்வோமானால், இது நம்மை முழுமையாய் ஆக்கிரமித்து வைத்திருக்கும்… நம்மையே சரிபடுத்திக்கொள்ளுவதிலும் மற்றும் நாம் அதிகமதிகமாய்த் திவ்விய தரநிலைகளை உணர்ந்துகொண்டு வருவதினால் நம்முடைய அழிவுக்குரிய சரீரங்களின் நடத்தைகள் மற்றும் எண்ணங்களை அந்தத் திவ்விய தரநிலைக்கு முழுக்கக் கீழ்ப்படுத்திக்கொள்வதிலும் ஆக்கிரமிக்கப்பட்டு / ஈடுபட்டு இருப்போம்.
நம்முடைய தவறுகளைக் கண்டுகொள்ளாமலும், அவற்றைச் சரிப்படுத்தாமலும், மாறாக மற்றவர்களுடைய தவறுகளைப் பார்ப்பதற்கும், நமக்கு மற்றவர்கள் செய்துள்ளதான அநீதிகளைக் கவனிப்பதற்கும், நம்முடைய உரிமைகள் குறித்த நம்முடைய புதிதான உணர்ந்துகொள்ளுதலை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும், அதுவும் உடனே ஏற்றுக்கொண்டிட வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக வற்புறுத்தப்பட வேண்டுமென்று தீர்மானிப்பதற்கும் ஏதுவான ஒரு மனநிலைக் காணப்படுகின்றது. இதுவே உலகத்தின் ஆவியாய் இருக்கின்றது மற்றும் இது மகா உபத்திரவ காலத்தை விரைவுப்படுத்துகின்றது. அதிகாரத்தில் இருப்பவர்கள், தாங்கள் பலவந்தத்தைப் பிரயோகிக்க வேண்டுமென எண்ணுகின்றனர். முன்பு ஒருபோதும் இல்லாதளவுக்குத் தொழிலாளிகள் தங்கள் வல்லமைக்குறித்து உணர ஆரம்பித்திருக்கின்றனர் மற்றும் இதினிமித்தம் அதைச் செயல்படுத்துவதற்குச் சோதனைக்குள்ளாகுகின்றனர்; மேலும் உரிமை மற்றும் நீதி விஷயத்திலுள்ள அவர்களின் தீர்ப்புகளை உலகத்தின் மீது திணித்திட தீவிரிக்கின்றனர்.
காரியங்களைப் பலவந்தம் பண்ணும் விதத்தில் கையாண்டிட வேண்டாம் என்றும், “”நான்… எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்”” என்றும் நாம் உலகத்தாருக்கு வலியுறுத்துகையில், கிறிஸ்துவின் சபையினிடத்திலும் நாம் வலியுறுத்துவதாவது: “”உங்களிடத்தில் பூரண நீதியுடன் நடந்துகொள்ளும்வரை, உங்கள் கணவன்மார்களை, மனைவிமார்களை, பெற்றோர்களை மற்றும் பிள்ளைகளை வற்புறுத்திக்கொண்டிராதீர்கள். நம் மீதும், மனுக்குலத்தார் யாவர் மீதும் தேவன் அனுதாபம்கொண்டும், பொறுமையோடு சகித்து இருப்பதும்போல, நீங்களும் அனுதாபத்தோடும், பொறுமையோடும் காணப்படுங்கள். ஒருவேளை அநீதியானது நமக்கு நீண்டகாலமாய்ச் செய்யப்பட்டுவரும் காரியமானது – அதை நாம் விரைவாய்ச் சரிபடுத்திட நம்மை நடத்திடாமல், மாறாக நாம் தவறு செய்தவருக்குத் தவறைச் சுட்டிக்காண்பித்து, அன்பில் சத்தியத்தை எடுத்துக்கூறி, நம்மை எதிர்க்கிறவர்களுக்குச் சாந்தமாய் அறிவுரைக் கூறுகையில் நாம் நீடிய பொறுமையோடு காணப்படுவதற்கும், இரக்கம் காண்பிப்பதற்கும் நடத்துகின்றதாய் இருக்க வேண்டும்.””
நீதியின் கொள்கைகளுக்கும், அன்பின் கொள்கைகளுக்கும் எதிராய் மனுக்குலத்தாரில், பாதிக்கும் மேலானவர்கள் கடுமையாய் மீறி ஜீவித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை. சிலசமயம் கணவன் தன் மனைவியையும், பிள்ளைகளையும் அன்புகூருகிறவனாக இருந்தும்… அவர்கள் தன் அன்பையும், பரிவையும் சந்தேகிக்கும் அளவுக்கு அவர்களை மிகவும் நியாயமற்ற விதத்தில் ஆளுகிறவனாய் இருக்கின்றான். இத்தகைய நடத்தையானது கர்த்தருக்குள்ளான சகோதரன் ஒருவனிடத்தில் காணப்படுமானால், அது தெய்வீக ஒழுங்கைக்குறித்த தவறான புரிந்துகொள்ளுதலின் காரணமாய் இருக்கும். அவனோ வேதாகமமானது – கணவன் என்பவர் குடும்பத்தின் தலைவனாய் இருக்கின்றார் என்று போதிக்கின்றது என்பதை அறிந்தவனாய் இருப்பினும், இந்த உயர்ந்த தலைமைத்துவத்தை எவ்வாறு கையாளுவது மற்றும் செயல்படுத்துவது என்பதைக் குறித்துச் சரியாய்த் தெரிந்துகொள்ளாதவனாய் இருக்கின்றான். ஜீவியத்தின் பூமிக்குரிய காரியங்களைக் கொடுப்பது மாத்திரம் அல்லது குடும்பத்தின் நலன்களுக்குடுத்த விஷயத்தில் இறுதியான முடிவுகளை எடுக்கும் பொறுப்புள்ள தலையாகக் காணப்படுவது மாத்திரம் தலைமைத்துவத்தின் [R4899 : page 390] பிரதான வேலையல்ல என்று அநேகர் கற்றுக்கொள்ளவில்லை என்பதாகத் தோன்றுகின்றது. சரியான விதத்தில் பார்க்கின்றபோது, புருஷனுடைய தலைமைத்துவம் என்பது அதிகமதிகமானவைகளை உள்ளடக்கியுள்ளது. தன் குடும்பத்திற்கான ஆரோக்கியத்தினை, மகிழ்ச்சியினை, நல்லொழுக்கத்தினை மற்றும் ஆவிக்குரிய நலன்களைப் பார்த்துக்கொள்வது அவருடைய கடமையாக இருக்கின்றது. இது அவர் அவர்களுடைய சரீரப்பிரகாரமான பெலவீனங்கள் மற்றும் அபூரணங்களையும், மனரீதியிலான, ஒழுக்கரீதியிலான இயல்பான பெலவீனங்கள் மற்றும் அபூரணங்களையும் நியாயமான விதத்தில் கருத்தில் எடுத்துக்கொள்வதை உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது.
மகிழ்ச்சியான குடும்பத்தினுடைய ஓர் உண்மையான தலைவன் அநேகம் விஷயங்களில் தன் சொந்த விருப்பங்களையும், ஆசைகளையும் அடிக்கடி புறக்கணித்துவிடுபவனாக இருக்க வேண்டும்; ஏனெனில் இப்படிச் செய்வது என்பது குடும்பத்திற்கான அவனது கடமைக்கும், அவர்களது மகிழ்ச்சிக்கும் தேவையாய் இருக்கும். ஆகையால் வேதவாக்கியங்களினுடைய கண்ணோட்டத்தின்படி புருஷனுடைய தலைமைத்துவம் என்பது “”அதிகாரம் செலுத்துபவராக/ boss,”” விசாரிக்கிறவராக / judge, காரியங்களைத் தீர்மானிப்பவராக இருப்பதற்கும் அதிகமானவைகளை உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. இது இன்னும் அதிகமாய்க் கிறிஸ்து மற்றும் சபையும், அவர்கள் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள உறவும் – கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் காணப்பட வேண்டிய சரியான அன்பு, மரியாதை மற்றும் ஒத்துழைப்பிற்கான மாதிரியாய் இருக்கின்றது என்ற வேதவாக்கிய கூற்றினாலும், சித்தரிப்பினாலும்கூட நிரூபிக்கப்படுகின்றதாய் இருக்கின்றது.
நமது கர்த்தர் உண்மையில் சபைக்குத் தலையாய் இருக்கின்றார் மற்றும் எந்தளவுக்குச் சபையாகிய நாம் இந்தத் தலைமைத்துவத்தினை அடையாளம் கண்டுகொண்டு, அவர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றோமோ, அவ்வளவாய் அதை ஞானமானதாகவும், உதவிகரமானதாகவும் மற்றும் அனுகூலமானதாகவும் கண்டுகொள்வோம். எந்தளவுக்கு நாம் பின்பற்றாமல் இருக்கின்றோமோ, அவ்வளவுக்கு நாம் சில ஆசீர்வாதங்களை இழந்துள்ளோமெனப் பிற்காலங்களில் உணர்ந்துகொள்வோம். தம்முடைய தலைமைத்துவத்தினை நாம் அங்கீகரித்திட வேண்டுமென நமது கர்த்தர் நம்மை வற்புறுத்துகிறதில்லை. இதை நமக்கான தேவைகளே நமக்கு வற்புறுத்துகின்றதாய் இருக்கின்றது. இப்படியாகவே சரியாய் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்திலும் இருக்க வேண்டும். கணவன் மற்றும தகப்பனுடைய நடத்தையானது, தலைமைத்துவத்தினை வலியுறுத்துகிறதாகவும், கட்டளையிடுகிறதாகவும் அல்லது பயமுறுத்துகிறதாகவும் இராமல், மாறாக தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்காகச் சுயத்தைப் பலிசெலுத்தும் அன்புடன் கூடியதாகவே காணப்பட வேண்டும்.
குடும்பத்தலைவனுடைய மேற்பார்வையின் கீழ்க்காணப்படுகிறவர்கள், அவர்களுக்கான அவனது அன்பினையும், பராமரிப்பினையும் உணர்ந்துகொள்ளுவதற்கு முன்னதாக – அவற்றைக் குடும்பத்தின் தலைவன் அவர்களுக்காய் நிரூபிப்பதற்குப் பல நாட்கள் அல்லது வாரங்கள் அல்லது வருஷங்கள் தேவைப்படும். அநேகமாக அவரது அன்பானது தற்கால ஜீவியத்தில் ஒருபோதும் அடையாளம் கண்டுகொள்ளப்படாமலும்கூடப் போகலாம். அவரது அன்பானது அவரது குடும்பத்தாரால் எப்படி அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றதோ அல்லது அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றதோ, எப்படியிருப்பினும் ஒரு தந்தையென, கணவனென, பராமரிக்கிறவரென அவருக்கு இருக்கும் கடமைகள் அனைத்தும் அவர் மீதே முழுமையாய்க் காணப்படுகின்றதாயிருக்கும். கர்த்தரிடம் வெளிப்படுவதுபோலவே, கணவனிடத்திலும் எப்போதுமே சாந்தம், நற்குணங்கள், அக்கறை வெளிப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இது விஷயமான வேதாகமப் பாடங்களினுடைய ஆறாம் தொகுதியின் காரியங்களானது, அருமையான சகோதரர்களில் சிலரால் தவறாய் அர்த்தங்கொள்ளப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டு, வேதனையடைந்தோம் மற்றும் இப்படித் தவறாய் அர்த்தம் எடுத்துக்கொண்டதன் காரணமாய் அவர்களது ஜீவியங்கள் மிகவும் அன்பானதாகவும், தயவானதாகவும் இருப்பதற்குப் பதிலாக, நேர்மாறாய் மிகவும் சர்வாதிகாரம் செலுத்துகிறதாகவும், பரிவற்றதாகவும், அடக்குமுறையானதாகவும் ஆகியுள்ளது. இந்தத் தகவல்களானது சிலவற்றில் மிகைப்படுத்தப்பட்டிருந்தது என்று நாம் எண்ணுகின்றோம் மற்றும் இது விஷயத்தில் தெளிவான அறிவு அடைவதினால் சிலர் இன்னும் அதிகமாய்ச் சிறந்தவர்களாகியுள்ளனர் என்றும், இன்னும் அதிகமாய் உண்மையுள்ளவர்களாகியுள்ளனர் என்றும், தங்களுடைய குடும்பத்தினரால் இன்னும் அதிகமாய் மதிக்கப்படுகிறவர்களாகியுள்ளனர் என்றும்கூட நாம் நம்புகின்றோம்.
சகோதரிகளின் காரியமென்ன? அந்தோ பரிதாபம்! சகோதரிகளில் அனைவரும், கர்த்தர் நமக்கு மிகவும் கிருபை பாராட்டியுள்ளதான விலையேறப்பெற்ற சத்தியங்களினால் சரியாய்ப் பயிற்றுவிக்கப்படவில்லை. நீதி, அநீதி குறித்தும், புருஷன், ஸ்திரீக்கான உரிமைகள் குறித்துமுள்ள மாபெரும் அறிவானது, சகோதரர்களுக்குப்போலவே சகோதரிகளுக்கும் பரீட்சையாகியுள்ளது. சகோதரிகளும்கூடச் சோதனை காலத்தில், சோதனையில் காணவேபடுகின்றனர். “”பெண் உரிமையின்”” உணர்வுகளானது பரவிக்கிடக்கின்றன. இது சமாதானத்தையோ, இணக்கத்தையோ கொண்டுவருகிறதில்லை. மாறாக இது பொதுவாய் நிலவிக்கொண்டிருக்கும் அதிருப்தியின் ஆவியில் – எதிராளியானவனால் அதிகமதிகமாய்த் தூண்டிவிடப்படுகிறதான உலகத்தின் ஆவியில் ஒரு பாகமாய் இருக்கின்றது. உலகத்தில் இது உபத்திரவகாலத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கின்றதுபோல, உலகத்தில் உபத்திரவம் வருவதற்கு முன்னதாகவே, இது சபையிலும், குடும்பத்திலும் உபத்திரவகாலத்தினைக் கொண்டுவருகின்றதாய் இருக்கின்றது. அந்தோ பரிதாபம்! நாம் சில உரிமைகளைப் பெற்றுக்கொள்வதினாலும் மற்றும் நாம் ஜீவித்துக்கொண்டிருப்பது வரையிலும் ஆதரிப்போம், ஆறுதல் பண்ணிடுவோம் மற்றும் தாங்கிடுவோம் என்று நாம் யாருக்காக வாக்களித்திருக்கின்றோமோ, அவர்களின் சமாதானம், சந்தோஷத்தையும் மற்றும் நம் சொந்தச் சமாதானம், சந்தோஷத்தையும் அழித்துப்போடுவதினாலும் என் அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே என்ன நன்மை நமக்குக் கிடைக்கப்போகின்றது?
பரிசுத்த பவுல் அடிகளார் கூறியுள்ளதுபோன்று, “”நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றீர்க்ள்; அந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமலிருங்கள். “” தப்பறைகள் மற்றும் மூடநம்பிக்கைகளிலிருந்துள்ள சுதந்தரமும் – சுயநலத்தினுடைய அடிமைத்தனத்திலிருந்துள்ள சுதந்தரமும் – சகோதரர்களுக்காகவும், வாய்ப்புக் கிடைக்கும்போது யாவருக்காகவும் பலிசெலுத்துவதற்கும், ஊழியம் புரிவதற்கும், [R4900 : page 390] தங்கள் ஜீவியங்களை ஒப்புக்கொடுப்பதற்குமான சுதந்தரமும் மற்றும் விசேஷமாகப் பூமிக்குரிய உறவினர்களிடத்தில் நாம் ஆண்டவருடைய சாயலில் இருக்கிறோம் என்பதையும், சுயத்தை வெறுத்தல், அன்பு, பரிவு, நற்கனிகளாகிய அவர் ஆவியினைப் பெற்றிருக்கின்றோம் என்பதையும் வெளிப்படுத்துவதற்கான சிலாக்கியம் அல்லது சுதந்தரமும்தான் – நமக்கு ஆசீர்வாதத்தினையும், தெய்வீகத் தயவையும், ஆத்துமாவிற்குச் சமாதானத்தையும் கொண்டுவரும் நமக்குரிய மெய்யான சுதந்தரமாய் இருக்கின்றது.
கொள்கைகளுக்காக உறுதியாய் நிற்பதற்கும், தேவனைத் தொழுதுகொள்வதற்கான சுதந்தரத்திற்காய் உறுதியாய் நிற்பதற்குமான சந்தர்ப்பங்களும், இடங்களும் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இருக்கின்றது என்பது உண்மைதான்; ஆனால் இவைகள் அடையப்பெற்ற பிற்பாடு, அற்பமான மற்றக் காரியங்கள் அனைத்தையும் நாம் தியாகம்பண்ணிட வேண்டும்; இல்லையேல் நாம் போராட வேண்டுமெனில், நமது மீட்பர் எத்தகைய காரியங்களுக்காகப் போராடியிருப்பரோ, அத்தகைய காரியங்களுக்காக மாத்திரம் போராடிடுவோமாக. இப்படியாய் அவர் நமக்கு முன்வைத்த மாதிரியில், அவர் அடிச்சுவடுகளில் நாம் நடந்திடுவோமாக (1 பேதுரு 2:21).