R5908 (page168)
பிலிப்பியர் 4:8
மனதினுடைய மகா வல்லமையைக்குறித்தும், நமது ஜீவியத்தின் காரியங்கள் அனைத்தின் மீதான அதன் ஆற்றல்மிக்கச் செல்வாக்குக்குறித்தும் உணர்ந்துள்ளவர்களாகக் கல்விமான்களிலும், விஞ்ஞானிகளிலும்கூட வெகுசிலரே காணப்படுகின்றனர். கருநிலையில் இருக்கும் தங்கள் குழந்தைகளில், பண்பு உருவாகும் விஷயத்தில், தங்கள் சிந்தனைகளானது பெரும் பங்கு வகிக்கின்றது என்றும், ஒன்றில் உதவிகரமான அல்லது பாதகமான இயல்புகளைக் கொணர்கிறதாய் இருக்கும் என்றும் ஒரு சில தாய்மார்களே உணர்ந்திருக்கிறார்கள். இதைக்குறித்து உணர்ந்தவர்களாக அல்லது கர்ப்பக்காலத்தின்போது, தங்களது மனைவிமார்களின் மனங்களை உயர் எண்ணங்களினாலும், உயர் குறிக்கோள்களினாலும், உயர் இலட்சியங்களினாலும், அழகான, கலைநயமிக்க, எழில் மிக்க, தூய்மையான, பயபக்திக்குரிய, ஆவிக்குரிய காரியங்களுக்கடுத்த எண்ணங்களினாலும் எழுச்சியுற செய்வதன் மூலமாய் நற்குணமுள்ள பிள்ளைகளைக்கொணர்வதில் தங்கள் மனைவிமார்களோடு ஒத்துழைக்க நாடுபவர்களாக ஒரு சில தகப்பன்மார்களே காணப்படுகின்றனர். தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் நன்மைக்கேதுவான அல்லது தீமைக்கேதுவான தாயினுடைய மனதின் ஆற்றலைக்குறித்து ஜனங்கள் அறிய வருகையில், இது அநேகம் குடும்பங்களில் அபார மாற்றத்தினைக் கொண்டுவந்திடும் என்பதில் ஐயமில்லை ஏனெனில் பெரும்பான்மையான ஜனங்கள் தவறு செய்வதைத் காட்டிலும், சரியானதையே செய்ய விரும்புவார்கள் என்பதும், இவர்களுக்கான பிரதான சிரமங்களிலும், இடர்பாடுகளிலும் ஒன்று அறியாமை என்பதும், எங்களது நம்பிக்கையாய் இருக்கின்றது.