ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R1551 (page 207)

ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்

WOMAN A HELP, MEET FOR MAN.

“””பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில்(ish) எடுக்கப்பட்டபடியினால் மனுஷி (ishah) என்னப்படுவாள் என்றான்.”” (ஆதியாகமம் 2:18,20,22-23).

தேவனுடைய சிருஷ்டிப்பில் ஸ்திரீக்கு நியமிக்கப்பட்டுள்ள ஸ்தானம் பற்றின நம்முடைய ஆராய்ச்சிக்கென்று, அவள் பூமிக்கும், மனுஷனுக்கும் முதலாவதாக அறிமுகப்படுத்தப்படும் காரியம்குறித்து மேல் இடம்பெறும் சுருக்கமான பதிவினிடத்திற்கு நாம் திரும்புகின்றோம்; அப்போஸ்தலன் கூறுவதுபோன்று “”ஸ்திரீ புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டாள்”” (1 கொரிந்தியர் 11:9). பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றதுபோல ஸ்திரீ சிருஷ்டிக்கப்பட்டதற்கான நோக்கம், அவள் புருஷனுக்கு ஏற்ற பொருத்தமான துணையாக இருப்பதற்கேயாகும். மனுஷனுக்கு இத்தகைய துணைவியின் அவசியம் இருந்தது என்பது, “”மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல”” என்றுள்ள தேவனுடைய அறிக்கையினால் மாத்திரமல்லாமல், மிருகங்கள் அனைத்தின் மத்தியிலும் மனுஷனுக்கான “”ஏற்ற துணைக் காணப்படவில்லை”” என்றுள்ள வார்த்தைகளினாலும்கூட அறிந்துகொள்கின்றோம். மிருகங்கள் அனைத்தும் மனுஷனைத் தங்களது ஆண்டவரும், எஜமானுமாக எண்ணி, பூரணமாய்க் கீழ்ப்பட்டிருந்ததும், தேவையான அனைத்தையும் மனுஷனுக்குச் செய்வதில் பூரண கீழ்ப்படிதல் கொண்டிருந்ததும் உண்மையே. மிருகங்களில் அநேகமானவைகள் மனுஷனுடைய சுமைகளைச் சுமக்கும் அளவுக்கு வலிமையானவைகளாக இருந்தன; மனுஷனுக்கான காரியங்களைச் செய்திடுவதற்குச் சில மிருகங்கள் துரிதமாய் ஓடுபவைகளாய் இருந்தன; சில மிருகங்கள் மற்றும் இறகுகள் உள்ள சில ஜீவராசிகள், தோற்றத்திலுள்ள அழகின் மீதான மனுஷனுடைய இரசனையைத் திருப்திப்படுத்தின; சில ஜீவராசிகள் மனுஷனுடைய செவிகளுக்கு இசை இசைத்தன; அனைத்து மிருகங்களும் ஏறக்குறைய அறிவையும், பாசத்தையும் வெளிப்படுத்தின; எனினும் இவைகள் எல்லாவற்றிலும் ஒன்று குறைவுப்பட்டிருந்தது. பூரண மனுஷன் சுமை சுமக்கிற ஒன்றையோ அல்லது துரிதமாய்த் தூதுகொண்டு செல்லும் ஒன்றையோ அல்லது பார்வைக்கு இனிமையான வர்ணங்களுள்ள பட்டாம் பூச்சியையோ அல்லது இசை இசைத்திடும் ஒன்றையோ பேராவலுடன் எதிர்ப்பார்க்கவில்லை அறிவுள்ள, ஒத்த உணர்வுள்ள துணையையே பூரண மனுஷன் பேராவலுடன் எதிர்ப்பார்த்தார்; மேலும் இந்தக் குறைவை, “”ஏற்ற துணையை”” தேவன் பிற்பாடு கொடுத்தார்; பொருத்தமானதைக் கொடுத்தார்.

தேவன் அவளைச் சிருஷ்டித்து, ஆதாமினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, ஆதாம் அவளுக்கு மனுஷி என்று பெயரிட்டார். இவ்வார்த்தையானது தாய்மையின் ஆற்றலை விசேஷமாய்ச் சுட்டிக்காண்பிப்பதற்குப் பயன்படுத்தப்படவில்லை என்கிற காரியமானது… பிற்பாடு தேவன் அவள் தாயாகுவாள் என்று கூறினபோது, ஆதாம் அவள் பெயரை ஏவாள் என்று மாற்றினார், காரணம் அவள் “”ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்”” ஆவாள் எனும் உண்மையில் வெளியாகுகின்றது. “”ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்”” (ஆதியாகமம் 3:20) என்றும் நாம் வாசிக்கின்றோம் (ஆதியாகமம் 5:2). ஆகையால் தேவனும், மனுஷனும் இந்தப் புதியதொரு [R1552 : page 207] சிருஷ்டியானவளை (ஸ்திரீயை) மனுஷனுடைய சாயலாக, அதேசமயம் சரீர ரீதியிலும், அறிவு ரீதியிலும் மனுஷனிடமிருந்து வேறுபடுபவளாக அடையாளம் கண்டுகொண்டனர். அவள் இன்னொரு மனுஷனல்ல, மாறாக இன்னொரு மனித ஜீவியாக, மனுஷனுடைய தேவையைப் பூர்த்திசெய்யும் ஒரு துணையாக மற்றும் இதனால் மனுஷனுக்கு ஏற்ற உதவியாளாய் இருப்பாள்.

அவள் ஆதாமுக்குத் துணைவியாய் இருக்கும் விதத்திலேயே அவள் உதவுபவளாக இருக்கின்றாள். அவள் வருவதற்கு முன்னதாக, ஆதாம் மிருக ஜீவராசிகளினால் சூழப்பட்டிருந்தபோதிலும், அவர் தனிமையாய் இருந்தார் மற்றும் அவைகளினால் கொடுக்கமுடியாத, துணையின் உதவியினுடைய அவசியத்துடன் காணப்பட்டார். தேவைப்பட்ட அந்த உதவியானது, சந்ததியைப் பெருகப்பண்ணிடும் வேலையாக மாத்திரம் இருக்கவில்லை என்பது – அவள் துவக்கம் முதற்கொண்டும், சந்ததி பெருகப்பண்ணிடும் காரியம் குறிப்பிடப்படுவதற்கு முன்னதாகவும், அவள் ஏற்ற மற்றும் விரும்பத்தக்கத் துணைவியாக / உதவியாளாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள காரியத்திலிருந்து தெளிவாகுகின்றது – சந்ததி பெருகின காரியம் விழுகைக்கு முன்பாகத் துவங்கிடவில்லை. இது சந்ததியிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனும், கிறிஸ்து மூலமான மீட்பின் ஆசீர்வாதங்களில் பங்கடைவதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவதுபோன்று ஒரு கிருபையுள்ள ஏற்பாடாகும் (ரோமர் 5:12; 11:32-33).

இப்படியாக மனுஷன் ஸ்திரீயில் ஓர் அறிவுள்ள துணையை, தன் சந்தோஷங்கள் அனைத்தையும் (அவருக்குத் துக்கங்கள் இருக்கவில்லை) உணர்ந்துகொள்ள முடிகிறவளை, சந்தோஷங்களில் பங்குகொள்ள முடிகின்றவளை மற்றும் தன் நன்மைகள் அனைத்திலும் தன்னோடுகூடப் பங்குகொள்ள முடிகின்றவளைக் கண்டடைந்தான். இப்படியெல்லாம் இல்லாதவளாக அவள் இருந்திருப்பாளாகில், அவள் ஏற்ற துணையாக அல்லது உதவியாளாக இருந்திருக்கமாட்டாள் மற்றும் ஆதாமும் இன்னமும் சில விதங்களில் தனிமையாகவே இருந்திருப்பார். மனுஷனுடைய குமாரர்களும், குமாரத்திகளும் பெருகினபோதும் – இருவரும் வீழ்ச்சிக்குள்ளானார்கள் என்பது தவிர மற்றப்படி, ஆதியில் இருந்த அதே இயல்புகளானது தொடர்ந்து இருபாலினர்களையும் வேறுபடுத்திக்கொண்டு வந்தது; ஆகையால் இருபாலினரும் அதேபோல் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாய் இருப்பார்கள் – மனுஷன் பூமிக்குரிய சிருஷ்டிப்பின் “”தலையாவான்”” மற்றும் மனுஷி அவனுக்கு “”ஏற்ற துணையாவாள்.”” மேலும் இந்த நிலையானது அப்போஸ்தலன் (1 கொரிந்தியர் 11:3) சுட்டிக்காண்பித்துள்ளபடி, விவாக உறவு இல்லாமலும் நிலவுகின்றது. தேவனுடைய ரூபத்திலும், சாயலிலும் உள்ள மனுஷனானவன், [R1552 : page 208] பூமியின் இராஜாவாகச் சிருஷ்டிக்கப்பட்டவன் ஆவான் மற்றும் “”புருஷனுடைய மகிமையாயிருக்கும்”” ஸ்திரீயானவள் ஜீவியத்தின் இயல்பான உறவுகள் அனைத்திலும், விசேஷமாக மனைவியின் நிலைமையில், மனுஷனுக்கும் பாத்திரமான துணைவியாகவும், உடன் சுதந்தரவாளியாகவும், அவனுடைய இராணியாகவும் காணப்படுகின்றாள். இந்த விதத்தில் தேவன் இருவருக்கும் ஆதியில் பூமிக்குரிய ஆளுகையை மீன்கள், ஆகாயத்துப் பறவைகள், காட்டு மிருகங்கள் முதலானவைகள் மீது கொடுத்தார் (ஆதியாகமம் 1:27-28; சங்கீதம் 8:6-8).

ஆகையால் பாலினங்களின் இந்த இயற்கையான உறவுமுறையானது எப்போதும் கவனிக்கப்பட வேண்டும்; ஸ்திரீயானவள் உலக காரியங்களில் மனுஷனுடைய சரியான மற்றும் தயவான தலைமைத்துவத்தின் கீழ், தனது வல்லமைகள் யாவற்றையும் பயன்படுத்திடுவதற்கு அதிகமான வாய்ப்புகளைப் பெற்றிருக்கும் போதிலும், அவள் தலை அல்ல, அதிபதி அல்ல, வழிநடத்துபவள் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் ஸ்திரீயானவளால் செய்ய முடியுமென வெளிப்படுத்திடும் உதவிகளை மனுஷன் முழுமையாய அடையாளம் கண்டுகொள்வதும், அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதும் ஏற்றதாகவும், அவசியமாகவும் காணப்படுகின்றது. தேவன் அவளுக்குத் திறமைகளைக் கொடுத்திருந்தாரானால், அவள் மனுஷனுக்கு மிகவும் திறமிக்க உதவியாளாக / துணைவியாக இருக்கத்தக்கதாக, அத்திறமைகள் வளர்த்தி விருத்தியாக்கப்படுவதற்காகவும், பயன்படுத்துவதற்காகவும்தான் அவளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; மேலும் இத்தகைய உதவியினை மறுப்பதோ, இத்தகைய திறமைகளைக் குன்றிப்போகச் செய்வதோ மனுஷனுக்கு ஏற்ற காரியமாய் இராது, தகுதியாயும் இராது. உதவியாள் / துணைவி தற்போதைய அபூரண சூழ்நிலைமையில்கூடச் சிலசமயம் அவளது இயல்பான அல்லது அவள் சம்பாதித்துக்கொண்ட திறமைகளின் விஷயத்தில் புருஷனைவிட மிஞ்சுகிறவளாய்க் காணப்பட்டாலும்கூடக் கூடுமானமட்டும் உதவுவாளாக. ஸ்திரீயானவளின் வேலையானது தன்னடக்கத்தோடும், பெண்மைக்குரிய பாங்கோடும், தேவனால் நியமிக்கப்பட்ட தலையை அல்லது பூமியின் இராஜாவை இறுமாப்பாய் ஆண்டிடுவதற்கான மனப்பாங்கு இல்லாமலும் செய்யப்படும்வரை, அவள் தன் கைக்கு அகப்படுவது எதுவோ, அதை முழுப்பெலத்தோடு செய்வாளாக.

ஸ்திரீயானவளின் விசேஷவேலையானது பொதுவாகவே அவளை எல்லைக்குட்படுத்துகின்றதான எல்லைக்குள்ளாகவே, அவளது விசேஷித்த உதவும் தன்மைகள் செயல்படுகின்றன – அதாவது மனைவியாக, தாயாக, சகோதரியாக, தோழியாக, அவள் வீட்டிலும், பள்ளி அறையிலும், மத ரீதியான வாழ்க்கையில், சமுக ரீதியான வாழ்க்கையில் இயல்பாகவே அவளுடையதாகிடும் கடமைகளிலும் மற்றும் அவ்வப்போது தொழில் சார்ந்த பகுதிகளிலும் செயல்படுகின்றாள். இந்த உறவு வகைகள் அனைத்திலும், ஸ்திரீயானவள் அவளது உயர்பட்ச நன்னெறிகளையும், அறிவுசார்ந்த சாதனைகளையும், சிறந்த கலைத்திறன்களையும், அவளது இயல்பான திறமையும், வளர்த்திக்கொண்ட திறமையும் அருளிடும் மிகச் சிறந்த அம்சங்களையும் கொண்டுவந்திடுவாளாக மற்றும் அவள் பூமியின் இராஜாவாகிய மனுஷனுக்கு ஏற்ற மற்றும் பாத்திரமான துணைவியாக / உதவியாளாக உள்ள தன் நிலையினை நிறைவேற்றிடுவாளாக. உண்மைதான் மனுஷனும், மனுஷியும் இராஜாவெனவும், உடன்சுதந்தரவாளியெனவும் அவர்களுக்கு அருளப்பட்டிருந்த பூமியின்மீதான ஆளுகையினை இழந்துவிட்டனர்; ஆனாலும் சாபத்தின் கீழ்க் காணப்பட்டாலும், இன்னமும் பூரணத்தினை நோக்கி செல்லுவதற்குரிய போராட்டத்தில் இன்னமும் ஸ்திரீயானவள் மனுஷனுக்கு உதவியாளாகவும், துணைவியாகவும் காணப்படலாம்; மேலும் சகோதரிக்குரிய சிநேகத்தின் ஆவியில் உதவிசெய்யப்படும்போது, இந்த உதவும் தன்மையினை எந்த உண்மையான மனுஷனும் அசட்டைப்பண்ணான்.

ஸ்திரீ ஒரு மனைவியாக

பொதுவாக மனுஷன் விஷயத்திலுள்ள ஸ்திரீயினுடைய இயல்பான அணுகுதல் என்பது ஏற்ற உதவியாளாக / துணைவியாக இருப்பதே ஒழிய, தலைவன் விதத்தில் அல்ல என்பதை பார்த்துள்ளப்படியால், இப்பொழுது ஸ்திரீ மனைவியாக இருப்பது பற்றின வேதாகம பார்வையினைப் பார்த்திடலாம். அந்தோ பரிதாபம்! அநேகருடைய விஷயத்தில் பூமியிலுள்ள இந்த அருமையான உறவானது, குடும்பத்தில் அடிமைத்தனமாகச் சீரழிந்துள்ளது. அடிமைத்தன்மையை வலியுறுத்திடும் கொடுங்க்கோலர்கள் பெரும்பாலும் தங்கள் நடத்தைக்கு ஆதரவாய் இருக்கும்படிக்கு அப்போஸ்தலர்களுடைய போதனைகளைத் திரித்துக்கூறுகின்றனர் அல்லது அதற்குத் தவறாய் அர்த்தம் கொடுத்து விளக்குகின்றனர் – சிலர் அறியாமல் இப்படிச் செய்கின்றனர். ஆகையால் குடும்பத்தில் கொடுங்கோல் ஆட்சி / அடக்குமுறை செய்வதற்கும், பூமிக்குரிய தளத்தில் – ஓர் உண்மையான மனைவியென அவளுக்கு இருக்கும் எல்லையில் அவளை வளர்ச்சி குன்றச்செய்வதற்கும், அவளைக் கீழ் நிலைக்குத் தள்ளுவதற்கும் என்று அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றதான வேதவாக்கியங்களை, ஆராய்வது நமது நோக்கமாகியுள்ளது.

அவ்வேதவாக்கியங்கள் சரியாய்ப் பகுத்தறியப்பட்டால் அவைகள் இப்படியான எதையும் போதிப்பதில்லை எனும் காரியத்தை நாம் இங்கு முதலாவதாகத் தெரிவித்துக்கொள்கின்றோம் மற்றும் அவ்வேதவாக்கியங்களானது இப்படியாகப் போதிப்பதில்லை என்பதற்கான சிறந்த ஆதாரங்களில் ஒன்று… கர்த்தர் இவ்வுறவுமுறையைத்தான் தமக்கும், மகிமையடைந்த சபைக்கும் இடையிலான உறவை விவரிப்பதற்கு அடையாளமாகத் தெரிந்துகொண்டுள்ளார்; இந்த உறவுமுறையானது மிகவும் மகிமையானதாகவும், சுவிசேஷயுகம் முழுவதிலுமுள்ள உண்மையான தேவ பிள்ளைகளுக்கான பரிசாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கின்றது; ஒவ்வொரு பூமிக்குரிய நன்மைகளும் மரணபரியந்தம் பலி செலுத்திடுவதற்குப் பாத்திரமான ஒரு பரிசாக இப்பரிசு காணப்படுகின்றது. இந்த உறவிற்கான அடையாளமானது, சில விதங்களில் வரவிருக்கும் அந்த மகிமையினை நிச்சயமாகவே வெளிப்படுத்திட வேண்டும்.

கணவன் மற்றும் மனைவியுடன் அப்போஸ்தலனால் ஒப்பிடப்படுகிறதும், யேகோவா மற்றும் கிறிஸ்து இயேசுவினுடைய உறவிலும், நமது கர்த்தராகிய இயேசு மற்றும் சபைக்கிடையிலான உறவிலும் விவரிக்கப்பட்டுள்ளதுமான – தலை மற்றும் சரீரத்தின் உறவில், தேவனுடைய குமாரர்களுடைய மகிமையான சுயாதீனத்திற்கு இசைவற்றது ஏதுமில்லை என்று நாம் ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம்; ஆகையால் ஸ்திரீயின் மீதான மனுஷனுடைய தலைமைத்துவமும் சரியாய்ச் செயல்படுத்தப்பட்டால், மகிமையான சுதந்தரத்திற்கு இசைவாகவே இருக்கும்.

கர்த்தருக்கான ஊழியத்தில் ஸ்திரீயானவள் ஞானமுள்ள உக்கிராணக்காரியென, அவளது தாலந்துகளை முழுமையாய் அவள் பயன்படுத்திடும் கடமை மற்றும் சிலாக்கியத்திலிருந்து அவளைத் தடைப்பண்ணிடுவதற்காக மனுஷனுடைய தலைமைத்துவமானது வடிவமைக்கப்படவில்லை, மாறாக அவளது ஆற்றல்களையும், [R1552 : page 209] வல்லமைகளையும், இன்னும் பலமான வல்லமையினுடைய (மனுஷனுடைய) ஒத்துழைப்புடன், அவளது பிரயோஜனமான தன்மையினை அதிகரிக்கவே ஆகும் என்பதையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

கணவனுக்கு மனைவி அடிமைத்தனமாகக் கீழ்ப்பட்டிருத்தல் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக அனுமானிக்கப்படும் அப்போஸ்தலருடைய போதனைக்கு உதாரணமாகச் சில சமயங்களில் நமக்கு எபேசியர் 5:22-24-ஆம் வசனங்கள் தெரிவிக்கப்படுகின்றன; “”மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.””

ஒருவேளை தலைமை ஸ்தானமானது பொதுவாய் மனுஷனில் இயற்கையாகவே அமைந்துள்ளதெனில் மற்றும் இது பொதுவாய் ஸ்திரீகளினால் கவனிக்கப்பட வேண்டுமெனில், இவ்விஷயமானது கணவன், மனைவி எனும் விசேஷித்த உறவில் ஆற்றல்மிக்கதாய்க் காணப்படும்; ஏனெனில் எதிர்பாலினர்மீது ஸ்திரீயானவளினால் இயல்பாய் உணரப்படும் பயபக்தியானது / மரியாதையானது, அவளால் தன்னுடைய புருஷன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்ற மனுஷன் விஷயத்தில் நிச்சயமாகவே அதிகரித்திட வேண்டும். எந்த விதத்தில் மனைவியானவள் அவளது கணவனுக்குக் கீழ்ப்படிந்திட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்படும் காரியமானது – “”சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல”” என்று அப்போஸ்தலனால் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் சபை எப்படிக் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது என்று கவனிப்பதற்கு நாம் ஏவப்படுகின்றோம். சபை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது என்பது விருப்பத்துடன்கூடிய கீழ்ப்படிதலாக இருக்கின்றது என்றும், அந்தக் கீழ்ப்படிதலானது அன்பினாலும், மரியாதையினாலும், நன்றியறிதலினாலும், நமக்கான கர்த்தருடைய அன்பு மற்றும் பராமரிப்பின் மீதான நமது முழுமையான நம்பிக்கையினாலும், விசுவாசத்தினாலும் ஏவப்படுகின்றது என்றும், இன்னுமாக நாம் நமக்குச் செய்துகொள்பவைகளைக் காட்டிலும் அதிகமாய் நமக்குச் செய்திடும் அவரது மேலான ஞானத்தின் மீதான நமது முழுமையான நம்பிக்கையினாலும், விசுவாசத்தினாலும் ஏவப்படுகின்றது என்றும் நாம் காண்கின்றோம். இந்த ஒரு மனோநிலையினையே கிறிஸ்துவின்பால் அப்போஸ்தலன் பூரணமாய்க் கொண்டவராக, ஒவ்வொரு சிந்தையையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்துவதற்கே தன் பிரயாசம் காணப்பட்டதாகக் கூறுகின்றார் (2 கொரிந்தியர் 10:5). இத்தகைய மனோநிலையினை மனைவியானவள், அவளது பூலோக தலைவனிடத்தில் பெற்றிருப்பது என்பது எப்போதும் கூடாத காரியம் என்பதை அப்போஸ்தலன் புருஷர்களை நோக்கி: “”மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கத்தக்கதாக, உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்”” என்று கூறும்போது ஒத்துக்கொள்கின்றார். “But also you the everyone, each one the of himself wife thus let love as himself; the and wife so that she may reverence the husband” (Diaglott; எபேசியர் 5:33); “Let each one of you, individually, so love his own wife as himself, in order that (hina என்ற வார்த்தை எபேசியர் 3:10-ஆம் வசனத்தில் இப்படியாகவே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது – Diaglott) the wife may reference her husband” (எபேசியர் 5:33).

(கணவனின்) உண்மையான அன்பும், உண்மையான உயர் குணலட்சணமும் மாத்திரந்தான் இத்தகைய மரியாதை / பயபக்தியை மனைவிகொண்டிருக்க வழிநடத்திடும்; இல்லையேல் சபை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து இருப்பதுபோல மனைவியானவளால் அவளது கணவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பது என்பது கூடாத காரியமாகும். இழிவானதும், பரிசுத்தமற்றதுமாய் இருக்கும் ஒன்றிற்குக் கீழ்ப்படிவது அல்லது பயபக்திகொண்டிருப்பது என்பதும்கூடச் சரியான காரியமாய் இராது. ஆனால் எந்தப் பூமிக்குரிய தலைவனிடத்தில் தன்னுடைய தவறிழைக்கும் தன்மையைத் தாழ்மையாய் ஒப்புக்கொள்ளும் உயர்குணலட்சணம் இருக்கின்றதோ மற்றும் வேதவாக்கியங்களிலுள்ள தேவனுடைய சத்தத்திற்கும், பகுத்தறிவிற்கும் கட்டுப்படும் தன்மையிருக்கின்றதோ, அத்தகையவரிடத்தில் தவறிழைக்கும் தன்மை இருப்பினும் அவருக்கு மனைவி கீழ்ப்படிவதும், பயபக்திகொண்டிருப்பதும், கூடுகிற காரியமாகவும், உள்ளார்ந்து செய்ய முடிகிற காரியமாகவும் இருக்கும்.

புருஷர்களுக்கான அப்போஸ்தலனுடைய ஆலோசனையைக் கவனிக்கையில் (வசனம் 25-29) சபைமீதான கிறிஸ்துவின் மேற்பார்வையும், அவருக்கான அவளுடைய கீழ்ப்படிதலுக்குமான நோக்கமாவது – அவளது ஆவிக்குரிய அல்லது அறிவுசார்ந்த கருத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கோ, அவளது ஆற்றல்களைக் குன்றச் செய்வதற்கோ அல்லது குறைத்துப்போடுவதற்கோ, இழிவான அல்லது சுயநலமான ஆதாயத்தை அடைவதற்கோ என்று காணப்படாமல், மாறாக அவள் பரிசுத்தமானவளாகவும், குறையற்றவளாகவும், கறைதிரையற்றவளாகவும் அல்லது இவைகள் ஏதும் அற்றவளாகவும் காணப்படத்தக்கதாகத் திருவசனமாகிய தண்ணீரின் சுத்திகரிப்பினால், அவள் சுத்திகரிப்பை அடைய வேண்டும் மற்றும் முற்றும் முழுமையான பரிசுத்தமாகுதலை அடைய வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். மேலும் சபையினிடத்திலுள்ள கிறிஸ்துவின் இந்த மனப்பான்மையானது, அவர் சபையை அன்புகூர்ந்து, தம்மையே சபைக்காகக் கொடுத்திட்ட சுயத்தைப் பலிசெலுத்தும் அவரது ஆவியின்மூலம் அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போஸ்தலன் கூறினதுபோன்று, “”அப்படியே புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து அவர்களில் அன்புகூர வேண்டும்”” மற்றும் இப்படியாக அவர்கள் “”எந்த/எல்லாக் காரியத்திலேயும்”” மனைவி தன்மீது பயபக்தி கொண்டிருக்கவும், தனக்கு அன்புடன் கீழ்ப்படியவும் எதிர்ப்பார்த்திட வேண்டும்; “”எந்தக் காரியத்திலேயும்”” என்று சொல்லும்போது அது நிச்சயமாகப் பரிசுத்தமற்றதும், அசுத்தமானதும், சுயநலமானதுமான எந்தக் காரியங்களையும் குறிக்காமல், மாறாக பரிசுத்தத்திற்கும், தூய்மைக்கும் மற்றும் உண்மையான உயர்குணலட்சணத்திற்கும் அடுத்த எந்த / எல்லாக் காரியத்தையும் குறிக்கின்றதாய் இருக்கும்; இவைகளின் கொள்கைகள் தேவ வசனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. அனனியாவின் மனைவியாகிய சப்பீராளின் விஷயத்தில், கணவனுக்கான மனைவியினுடைய சரியற்ற கீழ்ப்படிதலுக்கு எதிராக கர்த்தருடைய அதிருப்தியின் தெளிவான உதாரணத்தைக் காண்கின்றோம் (அப்போஸ்தலநடபடிகள் 5:7-10).

அனைத்துப் புருஷர்களும், அனைத்து மனைவிகளும் கிறிஸ்து மற்றும் சபையின் முன்மாதிரியைப் பின்பற்றிடும் மாணாக்கர்களாக இருப்பார்களானால் நிச்சயமாகவே காரியங்கள் ஆசீர்வாதமான மற்றும் சந்தோஷமான நிலைமையில் இருந்திருக்கும்; ஆனால் [R1553 : page 209] வெகுச் சிலரே மேற்கூறிய அறிவுரைகளைத் தங்களுடைய இருதயங்களில் செயல்படுத்துகிறவர்களாக இருக்கின்றார்கள் என்பது வருந்தத்தக்க உண்மையாகும்; மேலும் அநேகம் கணவன்மார்கள் (கிறிஸ்து மற்றும் சபையின்) முன்மாதிரியைப் பின்பற்றிடுவதற்கான அப்போஸ்தலர் பவுலினுடைய அறிவுரைகளை மறந்தவர்களாகத் தன்னிச்சையாகவும், சுயநலமாகவும் அதிகாரம் செலுத்திடுவதற்குத் தங்களுக்கு உரிமையிருப்பதாகக் கற்பனைபண்ணிக்கொள்கின்றனர் மற்றும் இதற்கு எதிராக மனைவிமார்களோ, கீழ்ப்படிதலுக்குத் தூரமாய் இருக்கும் நீதியான கோபத்தையும், எதிர்ப்பையும் காட்டுகின்றனர் மற்றும் இது விஷயம் வேதவாக்கியங்கள் கூறுபவைகளைப் புரிந்துகொள்ள கணவன்மார்கள் தவறினவர்களாகி, வேதம் குடும்பத்தில் அடிமைதனத்தையும், கொடுங்கோல் ஆட்சியையும் போதிப்பதாக வலியுறுத்துகின்றனர் மற்றும் இப்படியாக எண்ணுகின்றனர்; இப்படியாகச் சந்தேகத்திற்கும், நாத்திகத்திற்கும் நேராய் வழித்திறக்கின்றனர்.
[R1553 : page 210]

கிறிஸ்தவ கொள்கைகளினால் வழிநடத்தப்படாதவராகவும், ஆளும் உரிமை தனக்கிருப்பதாகச் சுயநலத்தில் கற்பனைப் பண்ணிக்கொண்டு அவ்வுரிமையை வலியுறுத்துபவராகவும் காணப்படும் கணவனையுடைய கிறிஸ்தவ மனைவியானவள்: நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கின்றாள்? அது சூழ்நிலைச் சார்ந்ததாய் இருக்கும்; கர்த்தருக்குள் மாத்திரமே விவாகம்பண்ணிக்கொள்ளுங்கள் எனும் அப்போஸ்தலனுடைய ஆலோசனையை உங்கள் வாலிபப் பிராயத்தில் நீங்கள் நினைவுகூர்ந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும் மற்றும் உங்கள் தவறுக்காக நீங்கள் சில தண்டனைகள் இப்போது அனுபவிக்க வேண்டியுள்ளது. யார் ஒருவரையும் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் உங்கள் மனச்சாட்சியினை மீறிடக்கூடாது என்பதை முதலாவது நீங்கள் நினைவில்கொண்டிருக்க வேண்டும்; ஏனெனில், “”மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும், தேவனுக்குக் கீழ்ப்படிவதே அவசியமாய்
இருக்கிறது”” என்று அப்போஸ்தலர் பேதுரு கூறுகின்றார் (அப்போஸ்தலநடபடிகள் 5:29; 4:19-20). ஆனால் எந்தச் சூழ்நிலைகளில் மனைவிமார்களின் மனச்சாட்சியானது அதன் (மறுப்பு) கருத்தைத் தெரிவிக்கிறதில்லையோ, அத்தகைய நிலைமையில் காணப்படும் மனைவிமார்களுக்கு அப்போஸ்தலர் அநீதியான எஜமான்களைப் பெற்றிருக்கும் வேலைக்காரர்களுக்கு கொடுத்திடும் அதே ஆலோசனையைக் கொடுக்கின்றார் (1 பேதுரு 2:18-23; 3:1,2). வேலைக்காரர்களை நோக்கி அவர்: “”வேலைக்காரரே (கோபமூட்டிவிடாதபடிக்கு ஜாக்கிரதையோடு) அதிகப்பயத்தோடே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தமுள்ளவர்களுக்கும் மாத்திரமல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்பட்டிருங்கள்”” என்று கூறுகின்றார்; ஏனெனில் நம்முடைய உரிமைகளாக இருப்பினும் அதற்காகப் போராடுவதற்குப் பதிலாக, அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களை அனுபவிப்பது நலம். “”ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்”” (1 பேதுரு 2:19-20). பின்னர் இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில் கிறிஸ்துவின் மாதிரியை அப்போஸ்தலன் சுட்டிக்காட்டி “”இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்”” (1 பேதுரு 2:21) என்று கூறுகின்றார். “”சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல”” (மத்தேயு 10:24). பின்னர் “”அந்தப்படியே முரட்டுக்குணமுள்ள புருஷன்மார்களைப் பெற்றிருக்கும் மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்கள் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தால், சண்டையிடாமல், அன்புடன்கூடிய சகிப்புத்தன்மையின் ஆவியினை வெளிப்படுத்திடும் (கோபமூட்டாதபடிக்கு ஜாக்கிரதையோடுகூடிய) பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையைப்பார்த்து . . . ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்”” என்று கூறுகின்றார் (1 பேதுரு 3:1).

மனைவியானவள் கிறிஸ்துவின் தாழ்மையினைப் பிரதிபலித்திடும்படியாக அவளுக்கு விசேஷமாய் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கும் அதேவேளையில், கிறிஸ்துவின் பெருந்தன்மையினைப் பிரதிபலித்திடும்படியாகப் புருஷர்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது – “”அந்தப்படியே புருஷர்களே, மனைவியானவள் பெலவீனபாண்டமாயிருக்கிறபடியினால் (உங்கள் பலத்தினால் அவளை ஆதரியுங்கள் மற்றும் ஊக்குவியுங்கள்; மாறாக அவளை ஒடுக்கிடுவதற்காக உங்கள் பலத்தினைப் பயன்படுத்தாதீர்கள்), நீங்கள் விவேகத்தோடு (ஞானத்தோடு மற்றும் பெருந்தன்மையோடு) அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் (தயவுகளை மற்றும் ஆசீர்வாதங்களை) சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள் (அவளுடைய வளர்ச்சியிலும், அவளது அனைத்துச் சிறந்த சாதனைகளிலும், செய்கைகளிலும் மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்)”” (1 பேதுரு 3:7).

எதிர்த்துப் போராடிடுவதற்குப் பதிலாக, இதே கீழ்ப்படியும் ஆவியே முழுச்சபையும், உலக அதிகாரிகளிடத்தில் கொண்டிருக்கும் நடக்கையில் பெற்றிருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது. அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுவதாவது: கர்த்தருடைய ஆவி அல்லது சிந்தை உங்களில் வெளிப்படத்தக்கதாக… “”நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்””; ஏனெனில் “”நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.””(1 பேதுரு 2:1-17);””எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்”” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறியுள்ளார் (ரோமர் 13:1,5); மேலும் தீத்துவுக்கு எழுதுகையில், “”துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்”” என்று கூறியுள்ளார் (தீத்து 3:1).

(குடும்ப உறவில் மனைவிக்கு விசேஷமாய்க் காணப்படும்) கீழ்ப்படிவதற்குரிய இந்தக் கடமையானது, முழுச்சபையாருக்குமே தனிப்பட்ட விதத்தில், ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் உறவிலும்கூட வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகையாலே அப்போஸ்தலனாகிய பேதுரு: “”உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்; உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாகமனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், (தாழ்மைக்கு, சகோதர சிநேகத்திற்கு, பொறுமைக்கு, உண்மைத்தன்மைக்கு மாதிரிகளாகவும்) கண்காணிப்புச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள், நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்”” (1 பேதுரு 5:1-6) என்று கூறுகின்றார் (எபேசியர் 5:21).

ஒருவேளை சபையில் ஒரு பரிபூரணமான மனுஷன் இருப்பானானால், அங்கத்தினர்கள் யாவரும் அந்த மனுஷனுடைய வழிகாட்டுதலுக்கும், அறிவுரைக்கும் கீழ்ப்படியும்படி அநேகமாக ஆலோசனை வழங்கப்பட்டிருக்கும். ஆனால் சபையில் தவறிழைக்காத மனுஷனுக்குப் பதிலாக, நாம் தவறிழைக்காத தேவவசனங்களைப் பெற்றிருக்கின்றோம் மற்றும் இதைக்கொண்டே நாம் ஒவ்வொருவரும் மற்றும் அனைவரும் காரியங்களைச் சோதித்தறியும்படியாக அறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம். ஆகையால் எழுதப்பட்டுள்ள தேவவசனத்திற்குக் கீழ்ப்படிவதே நமது முதலாம் கடமையாகும் மற்றும் பிற்பாடு திருவசனத்தைக்கொண்டு சோதித்தறிந்து ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய வேண்டும்; மற்றும் கடைசியாகத் தாழ்மையின் அல்லது [R1553 : page 211] கீழ்ப்படிதலின் இந்த ஆவியானது எப்போதும் நம் அனைவரிலும் வெளிப்படத்தக்கதாக… நம்முடைய நடத்தையும்/பாவனையும், சம்பாஷணையும் / வார்த்தைகளும் தன்னடக்கத்தினாலும், சகோதர மற்றும் சகோதரிக்குரிய சிநேகத்தினாலும், கபடற்ற தன்மையினாலும் சாரமேற்றப்பட்டிருப்பதாக.

இப்படியே… இன்னும் ஆற்றல்மிக்க விதத்தில் குடும்ப உறவுகளில் மனைவியின் சார்பிலான கீழ்ப்படியும் கடமை குறித்து அப்போஸ்தலன் முன்வைக்கின்றார். அது அன்பின், பயபக்தியின், நம்பிக்கையின் மற்றும் தாழ்மையின் மணம்வீசும் கீழ்ப்படிதலாகும் மற்றும் அது “”தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்துடன்”” இசைந்து செல்லுகின்றதாய் இருக்கும் (ரோமர் 8:21) மற்றும் அது கர்த்தருடைய ஆவி எங்கெல்லாம் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் காணப்படும் (2 கொரிந்தியர் 3:17) மற்றும் இதில்தானே நாம் “”நிலைக்கொண்டு இருக்கும்படியாகவும்”” அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்துகின்றார் (கலாத்தியர் 5:1).

ஆபிரகாமின் மனைவியாகிய சாராள்… மனைவியின் அடங்கியிருத்தலுக்கு/கீழ்ப்படிதலுக்குச் சரியான உதாரணமாய்க் காணப்படுகின்றாள் என்று அப்போஸ்தலனாகிய பேதுருவினால் நமக்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபிரகாமை ஆண்டவன் என்று சாராள் அழைப்பதிலிருந்து (ஆதியாகமம் 18:12) சுட்டிக்காண்பிக்கப்படுவது போன்று… சாராள் ஆபிரகாமை பயபக்தியோடு நடத்தினபோதிலும், தன் சொந்தத் தேசத்தையும், நண்பர்களையும் ஐயமின்றி சந்தோஷத்தோடு விட்டுவிட்டு, தன் கணவனுக்குத் தேவனால் கட்டளையிடப்பட்டவைகளுக்குச் சாராள் கீழ்ப்படிந்து, வாக்குத்தத்தத்தின் தேசத்தினை நோக்கின ஆபிரகாமின் பயணத்தில், அவரோடுகூடப் பிரயாணித்து, விசுவாசத்தோடு ஆபிரகாமோடு நடந்தபோதிலும் – அவளது அடங்கியிருத்தலானது / கீழ்ப்படிதலானது… ஆபிரகாமின் கருத்துகளுக்கு வேறுபட்ட கருத்துக்களை அவள் வெளிப்படுத்திடுவதற்குத் தடைப்பண்ணிடும் கண்மூடித்தனமான கீழ்ப்படிதலாய் இருக்கவில்லை இப்படிக் கண்மூடித்தனமான கீழ்ப்படிதலை ஆபிரகாம் எதிர்ப்பார்த்ததாகவும்… அவளிடத்தில் ஆபிரகாம் நடந்துகொண்ட எந்த நடத்தையிலும் தென்படுகிறதில்லை. அவள் சிந்திக்கும் ஸ்திரீயாகக் காணப்பட்டாள்; உலகத்தின்மீது ஆசீர்வாதம் கடந்துவரும் ஒரு குமாரனை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தினை நம்பினாள்; மேலும் அவள் வயது இதற்குச் சாத்தியமற்றது போன்று தோன்றியபோது, வாக்குத்தத்தமானது நிறைவேறுவதற்கு வாய்ப்புள்ள வழி ஒன்றினை அவள் யோசனையாகத் தெரிவித்தாள். ஆகார் பெருமைப்பாராட்டி, தன் எஜமாட்டியை அற்பமாய் எண்ணினபோது சாராள் இதை ஆபிரகாமிடத்தில் முறையிட்டாள் மற்றும் இதற்கு/குற்றத்திற்கு அவரும் கொஞ்சம் பொறுப்பாளியாக இருக்கின்றாரென வலியுறுத்தினாள். ஆபிரகாமின் இருதயமானது, அவளது வேலைக்காரிக்கும் பங்குபோடப்படக்கூடாது என்று சாராள் விரும்பினாள். அத்தகைய பங்கிடுதல்கள் இல்லை என்றும், அவளது வேலைக்காரி, இன்னமும் அவளது கட்டுப்பாட்டின் கீழாகவே இருக்கின்றாள் என்றும் உள்ள ஆபிரகாமின் பதிலானது, அவளுக்கு உறுதியளித்தது. பின்னர் ஆகாரைச் சாராள் நடத்தின விதமானது, அவளது பெருமையையும், அவளது நாச்சியாரிடத்திலுள்ள அவளது சரியற்ற நடத்தையையும் சரி செய்யும் விதத்தில் இருந்தது. ஆகார் ஓடினபோது, கர்த்தருடைய தூதனானவர் அவளைச் சந்தித்து, அவள் தனது நாச்சியாரிடத்திற்குத் திரும்பிடுவதற்கும், எஜமாட்டிக்குக் கீழ்ப்படிந்திருக்கவும் கூறினார் மற்றும் அவள் இப்படியாகச் செய்தபோது, அவள் சாராளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டாள் (ஆதியாகமம் 16).

வேறொரு தருணத்தில்… ஈசாக்கு பிறந்தப் பிற்பாடு மற்றும் இரு சிறுவர்களும் சேர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும்போது, ஆகாரின் போட்டிமனப்பான்மை, மீண்டுமாக இஸ்மயேல் வாயிலாய் வெளிப்பட்டது; சாராளின் குமாரனாகிய ஈசாக்கினை இஸ்மயேல் துன்புறுத்திக்கொண்டிருந்தான் (ஆதியாகமம் 21:9; கலாத்தியர் 4:29). மீண்டும் சாராள் துயரம் அடைந்து, அடிமைப்பெண்ணையும், அவள் குமாரனையும் அனுப்பிவிடுமாறு ஆபிரகாமினிடத்தில் வேண்டிக்கொண்டாள்; ஏனெனில் இஸ்மயேலை ஆபிரகாம் தன்னுடைய குமாரனோடுகூடச் சுதந்தரவாளியாக்கிவிடுவார் என்றும், இப்படிச் செய்வது தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு இசைவாய் இராது என்றும் சாராள் அஞ்சினாள் (ஆதியாகமம் 21:10- 12; 15:4; 17:17-19). இதை ஆபிரகாம் செய்ய விரும்பவில்லை மற்றும் சாராள் தன் காரியத்தைக்குறித்து வலியுறுத்திக்கொண்டிருந்தபோது… இக்காரியத்தில் தேவன் தம்முடைய சித்தத்தைச் சுட்டிக்காட்டுவதுவரையிலும்… “”தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது”” (ஆதியாகமம் 21:11) என்று நாம் வாசிக்கின்றோம்.

இன்னுமாக (இப்படித் தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பவர்களை நோக்கி) “”நன்மைசெய்து ஓர் ஆபத்துக்கும் – தீமையான விளைவுகள் எதற்கும் – பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்”” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு உதாரணத்தினைச் சுட்டிக்காண்பிக்கின்றார் (1 பேதுரு 3:6). அப்போஸ்தலர்களினால் அறிவுறுத்தப்படும் கீழ்ப்படிதலானது / அடங்கியிருத்தலானது… நியாயமான கீழ்ப்படிதலாகவும், மனைவியின் தாழ்மையான, தன்னடக்கமுள்ள உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்கிறதும் மற்றும் அந்த உணர்வுகளானது கணவனினால் நியாயமாய்க் கருத்தில் எடுத்துக்கொள்ளச் செய்கிறதுமான கீழ்ப்படிதலாய் இருக்கின்றது; உண்மையுள்ள ஆபிரகாமின் சந்தர்ப்பத்தில், அவர் ஓர் அறிவாலியான மனைவியின் மனம்போன விருப்பங்களினால் எவ்விதத்திலேயும் வழிநடத்தப்படாமல், தன் மனைவியின் உணர்வுகளையும், பிரச்சனைகளையும் நியாயமாய்க் கருத்தில் எடுத்துக்கொண்டிருக்கும் அதேவேளையில், மனைவியின் விருப்பங்களுக்கு இணங்குவதற்கு முன்னதாகக் கர்த்தருடைய சித்தத்தை அறிய காத்திருந்தார்.
மேற்கூறியவைகளை வைத்துப்பார்க்கும்போது கர்த்தருக்கும், சபைக்கும் இடையிலிருக்கும் அருமையான உறவிற்கு உதாரணமாய்க் கர்த்தரினால் சுட்டிக்காண்பிக்கப்படும் கணவன், மனைவி இடையிலான மனுஷீக உறவுமுறையானது எந்தவிதத்திலும் கணவன் மனைவியாகிய இருவரில் யார் சார்பிலும் அடக்குமுறையை அல்லது கொடுங்கோலை வெளிப்படுத்திடுவதற்கு ஏதுவானதல்ல என்று வெளிப்படையாகத் தெரிகின்றது. மேலும் எங்கெல்லாம் இத்தகைய (தவறான) நிலைமை நிலவுகின்றதோ அங்கு அவரின் திவ்விய ஒழுங்கை மீறியவர்களாய் இருப்பார்கள். ஏதேனில் முதல் ஜோடியின் ஒன்றிணைதலை ஆசீர்வதித்து அவ்வுறவுமுறையை ஏற்படுத்தினபோது – இராஜா மற்றும் இராணியென… தலை மற்றும் துணைவியென அவர்களைப் பூமிக்குரிய ஆளுகையின் உடன்சுதந்தரவாளிகள் ஆக்கினபோது – பிற்பாடு பெற்றோர்கள் இருவரையும் கனப்படுத்தவும், அவர்களுக்குக் கீழ்ப்படியவும் பிள்ளைகளுக்குக் கட்டளையிட்டபோது – கர்த்தர் திருமணத்தின்மீது தம்முடைய அங்கீகரிப்பினால் முத்திரையிட்டார் (ஆதியாகமம் 1:27,28; யாத்திராகமம் 20:12; எபேசியர் 6:1,2).

பாவத்தின் சாபமானது ஸ்திரீயின்மேலும், புருஷன்மேலும் வெகுப்பரவலாய்க் காணப்படுகின்றது; ஆனால் மனைவியின்மீதுள்ள சாபத்தினுடைய பாரப்பளுவினை இலகுவாக்கிடுவதற்கும், அதைச் சுமப்பதில் அவளுக்கு உதவுவதற்கும் முயற்சிப்பதற்குப் பதிலாக, தன் மனைவியின்மீது சாபத்தினுடைய பளுவைக்கூட்டிக்கட்ட நாடிடும் கிறிஸ்தவ புருஷன் கவலைக்கிடமான விதத்தில் பரலோக மணவாளனுடைய ஆவியில் குறைவுபட்டவனாய் இருப்பான். இப்படியாகவே கிறிஸ்தவ மனைவியின் விஷயத்திலும் இருக்கும் – புருஷனுடைய உழைப்பை இலகுவாக்கிடுவதற்கும், அவனது பாரங்களில் பங்கெடுப்பதற்கும் நாடுவதற்குப் பதிலாக, மனைவியானவள் சுயநலமுடையவளாய்க் கணவனுக்குச் சாபத்தின் காரணமாய் ஏற்பட்ட முகத்தின் வேர்வையை, அளவிற்கு மிஞ்சி கேட்டுக்கொள்வாளானால் அவள் கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டியினுடைய அந்த ஆவியில் கவலைக்கிடமான விதத்தில் குறைவுபட்டவளாய் இருப்பாள். பாவமே நம் சந்ததியின்மீது சாபத்தைக்கொண்டுவந்தது; பாவத்திற்கு எதிராய் நாம் போராடுகையிலும், நீதிக்கும், தேவனுக்கு ஒத்த சாயலிலும் நாம் முன்னேறுகையிலும், நாம் ஒருவருக்கொருவர் சாபத்தினுடைய தீமைகளைத் தணிக்கின்றவர்களாய் இருப்போம். தேவனுக்கு நன்றி! ஏனெனில் “”இனி ஒரு சாபம் இராது”” என்றுள்ள காலமும், “”பூமியில் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம்”” ஸ்தாபிக்கப்படும் காலமும் இப்பொழுது வெகு அண்மையில் இருக்கின்றது; கிறிஸ்து மற்றும் உயர்த்தப்பட்ட சபைக்கு இடையில் மிகவும் அருமையாய் மாதிரியாக்கப்பட்டுள்ள அன்பின் ஆவியானது, பூமிக்குரிய தளத்திலும் (அக்காலத்தில்) மகிமையான விதத்தில் அடையப்பெற்றிருக்கும்; சாபம் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும்போது ஸ்திரீயானவள் தனது உயர்குணமுள்ள கணவனின் அருகே தனக்கான ஸ்தானத்தையும், கனப்படுத்தப்பட்ட ஸ்தானத்தையும், புருஷனுக்கு ஏற்ற உதவியாளாகவும், துணைவியாகவும் – அப்போஸ்தலனாகிய பவுல் விவரிப்பதுபோன்று “”புருஷனுக்கு மகிமையாகவும்”” இருப்பாள் மற்றும் புருஷனே நியமிப்பது போன்று “”நித்திய ஜீவனாகிய கிருபையைப் புருஷனோடுகூடச் சுதந்தரிக்கிறவளுமாய்”” இருப்பாள் மற்றும் இந்தச் சுதந்தரிக்கும் காரியமானது, யோபுவின் நிழலான திரும்பக்கொடுத்தலில், அவர் தன் குமாரத்திகளுக்கு அவர்களது சகோதரர்கள் நடுவில் சுதந்தரவீதம் கொடுத்ததில் அருமையாய்க் காண்பிக்கப்பட்டுள்ளது (யோபு 42:15).

முடிவாகப் பார்க்கையில் திருமண உறவானது வேதவாக்கிய வெளிச்சத்தில் பார்க்கப்படும்போது கனமிக்க ஒன்றாகவும், ஆசீர்வாதமான ஒன்றாகவும் காணப்படுகின்றது; எனினும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாகிய இது, அப்போஸ்தலன் காண்பிக்கிறதுபோல தேவனுடைய வரவிருக்கும் இராஜ்யத்திற்கடுத்த காரியங்களில் திசைத்திருப்பங்கள் இல்லாமல் கவனம் செலுத்திடும் இன்னும் மேலான சிலாக்கியத்திற்காக வேண்டி, பரிசுத்தவான்கள் அநேகர் துறப்பதற்குச் சிலாக்கியம் பெற்றிருக்கின்றனர் (1 கொரிந்தியர் 7:32-35). பலி செலுத்திடும் சபையானவள் இராஜாவை அழகுபொருந்தினவராய்க் காண்கையில் மற்றும் சபையைக் கர்த்தர் தமக்கு ஏற்ற மணவாட்டியாகவும், உடன்சுதந்தரவாளியாகவும் அடையாளம் கண்டுகொள்கையில், அந்த உறவில் கொடுங்கோலினுடைய அல்லது அடிமைத்தனத்தினுடைய / அடக்குமுறையினுடைய வாசம் இருப்பதில்லை, மாறாக வார்த்தையினால் விவரிக்கமுடியாத பேரின்பம் தரும் அன்பு மற்றும் மதித்துணர்தல் சேர்ந்து காணப்படும்.