R3826 (page 237)
“கிட்டத்தட்ட எல்லாக் கேள்விகளுக்குமே இரண்டு பக்கங்கள் காணப்படும் மற்றும் ஸ்திரீ தொடர்பான கேள்வியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஸ்திரீகளுக்கென்று உரிமைகள் இருக்கின்றது மற்றும் புருஷர்களுக்கென்று உரிமைகள் இருக்கின்றது; மேலும் ஒவ்வொரு சிருஷ்டியும், அதன் அறிவிற்கேற்ப சில உரிமைகளைப் பெற்றிருக்கின்றது மற்றும் அது மதிக்கப்படுவது நீதியாய் இருக்கும். எனினும் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் நிலைமைகளின் கீழ் வெகு சில புருஷர்களும், ஸ்திரீகளும் அல்லது விலங்குகளும் தங்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொண்டவர்களாக அல்லது பெற்றுக்கொள்ள முடிகிறவர்களாக இருக்கின்றனர் என்பதும் உண்மையே. மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதான ஆதி சாயலினை எந்தளவுக்கு ஒருவர் தக்கவைத்திருக்கின்றாரோ, அவ்வளவாய் அவர்கள் மற்றவர்களுக்கு அவர்களது உரிமைகளை அளிப்பதிலும் மற்றும் தங்கள் சொந்த உரிமைகளை உணர்ந்துகொள்வதிலும் நிச்சயம் பிரியப்படுகிறவர்களாய் இருப்பார்கள்.
ஆனால் அந்தோ பரிதாபம்! அனைவருமே அந்தப் பூரண சாயலிலிருந்து, சிருஷ்டிகருடைய அந்தப் பூரண ரூபத்திலிருந்து விழுந்துபோயுள்ளனர். ஆகையால் சந்ததியினுடைய ஒவ்வொரு அங்கத்தினனிடமும் கொஞ்சம் சுயநலமும், மனதின் பல்வேறு நல்ல மற்றும் கெட்டத் தன்மைகளும், பல்வேறு அளவுகளில் காணப்படுவதினால், இனம் முழுவதுமே தெளிந்த மனமில்லாதவர்கள் என்றும், சீரான நிலைமையில் இல்லாதவர்கள் என்றும், அநீதியானவர்களாய்க் காணப்படுகின்றார்கள் என்றும் கூறப்படுகின்றது மற்றும் உலகத்தின் ஆவியானது பொதுவாகவே நீதி, நியாயத்திற்கு முரண்படுகின்றதாகவும் இருக்கின்றது என்று அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார். கோபம், துர்க்குணம், பகைமை, பொறாமை, சண்டை, பெருமை, பேராசை முதலானவைகள் தெளிவான பகுத்தறிவிற்கு இடர்பாடுகளாய்க் காணப்படுகின்றன. இவைகளைக் கூறுகின்றதான தேவனுடைய வார்த்தைகளானது, நாம் பரத்திலிருந்து வரும் ஞானத்தினையும், கர்த்தருடைய சிந்தையையும் நாடும்படிக்குப் புத்திகூறுகின்றதாய் இருக்கின்றது மற்றும் இது – நம்முடைய சுபாவ மனங்களும், மனவிருப்பங்களும், தன்னம்பிக்கைகளும் அழிக்கப்பட்டு, வேதாகமத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதான திவ்விய நிலைப்பாடுகளுக்கு ஏற்ப நம்முடைய கண்ணோட்டங்கள் நெறிமுறைப்படுத்துவதன் மூலம் அடையப்பெறலாம் என்றும் புத்திகூறுகின்றதாய் இருக்கின்றது. ஆகையால் நாம் நாடிட வேண்டிய காரியமானது, ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தையில் உயர்வான கிறிஸ்தவ நிலைப்பாடேயாகும் மற்றும் கர்த்தருடைய பின்னடியார்கள் யாவராலும் கர்த்தருடைய சிந்தையானது, கர்த்தருடைய வார்த்தையானது, அந்தத் தரநிலையாக/நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
[R3827 : page 237]
நாம் உலகத்தாரை நோக்கிப்பார்க்கையில், யாருமே நடைமுறையில் பார்க்கையில் தனது உரிமைகளைப் பெற்றிருப்பதில்லை – நிச்சயமாகவே யாரும் தனது உரிமைகள், தனக்கு உரியது என்று கருதுபவைகளைப் பெற்றுக் கொள்கிறதில்லை – தேவனுடைய தயவினாலும், இரத்தத்தினாலும் மூழ்க்கடிக்கப்பட்டிருக்கும் மிகவும் தாழ்மையான மனம் கொண்டிருப்பவர்கள், எல்லாவிதத்திலும் தங்கள் தகுதிக்கும் மிக அதிகமாகவே தாங்கள் கர்த்தரிடத்திலிருந்து ஏற்கெனவே பெற்றுக்கொண்டுள்ளதாகவும், தொடர்ந்து பெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறிடுவதற்கு ஆயத்தமாய் இருக்கின்றனர். இவர்கள் நன்றியுணர்விலும் மற்றும் இதற்கேற்ப மகிழ்ச்சியாயும் காணப்படுகின்றார்கள். நன்றியற்றவர்களாகவும், மகிழ்ச்சியற்றவர்களாகவும் காணப்படுகின்ற மற்றவர்களோ, மனுக்குலத்தின் உலக ஜனங்களாகக் காணப்படுகின்றனர் – இவர்களில் பெரும்பாலானவர்கள், கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக்கொண்டிருப்பவர்களாகக் காணப்படுகின்றனர்.
தம்முடைய பின்னடியார்கள் தங்களது பூமிக்குரிய உரிமைகள் அனைத்தையும் முழுமையாய் “”பலிச் செலுத்தும்படி கர்த்தர் வலியுறுத்தி மற்றும் அது தமக்கும் மற்றும் தாம் முன்வைக்கும் பிரமாணங்களுக்குமான அவர்களது அர்ப்பணிப்புக்குறித்த சாட்சியாக தம்முடைய பார்வைக்குப் பிரியமாய்க் காணப்படும் என்று அவர்களுக்கு உறுதிப்படுத்தியும், அது அவர்களுக்குத் தற்கால ஜீவியத்திற்கு நலம் பயக்கின்றதாகவும், அவர்களுக்கு நித்தியமும் நன்மைப் பயக்கின்றதாகவும் காணப்படும் என்று உறுதிப்படுத்தியும் காணப்படுகின்றார். ஆகையால் கிறிஸ்தவ ஆண்களும், பெண்களும், சுபாவ புருஷர்கள் மற்றும் ஸ்திரீகள் என்ற தங்களது உரிமைகளானது தங்களால் கவனிக்கப்படுவதில்லை என்றும், அதற்காக உரிமைப்பாராட்டப்படுவதில்லை என்றும், அதற்காக நாடப்படுவதில்லை என்றும், அதற்காக போராடப்படுவதில்லை என்றும், இதற்குப் பதிலாக புதிய நம்பிக்கைகளும், புதிய குறிக்கோள்களுமுள்ள புதிய சுபாவத்தினை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள் என்றுமுள்ள ஓர் உடன்படிக்கையினைப் பண்ணியுள்ளனர்; இந்தப் புதிய சுபாவத்தின் உரிமைகளும், கனங்களும், சிலாக்கியங்களும், மேன்மைகளும் – முழுமையாக முதலாம் உயிர்த்தெழுதலில் வரும்போது, நிறைவானது வருகையில், குறைவானது ஒழிந்துபோகிறபோது, அவர்கள் தங்கள் கர்த்தரோடுகூட மகிமைப்படும்போது அவர்களுக்குக் கடந்துவருகின்றதாய் இருக்கும்.
எங்கள் அனுதாபங்களும், ஆலோசனைகளும் – SUB HEADING
இந்தப் பத்திரிக்கையின் இதழாசிரியர் போன்று வெகு சிலரே, புதுச்சிருஷ்டிகள் மற்றவர்களுடன் தொடர்புக்குள் வருகையில் எதிர்க்கொள்ளும் சிரமங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளும் நல்வாய்ப்புடையவர்களாகக் காணப்படுகின்றனர். கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு வரும் ஜீவியத்தின் கடுமையான சோதனைகள் மற்றும் பிரச்சனைகள் எப்படி நன்கு எதிர்க்கொள்ளப்படுவது குறித்து ஆலோசனைகளைக் கேட்டும், சூழ்நிலைகளை விவரித்தும் எழுதப்படும் கடிதங்களைத் தொடர்ந்து பெற்றுக்கொள்கின்றவராக இதழாசிரியர் இருக்கின்றார். மற்றவர்களைக் காட்டிலும் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களுடன் அதிகமான தொடர்பு காணப்படுவதினால், அநேகமாக தவிக்கும் சிருஷ்டியாகிய சுபாவ மனுஷர்களுக்காக மாத்திரமல்லாமல், புதுச்சிருஷ்டிகளுக்காகவும் அனுதாபம் கொள்வதற்குரிய நல்வாய்ப்புப் பெற்றவராய் இருக்கின்றார். ஆகையால் [R3827 : page 238] புருஷர்களுக்கு அவர்களது மனைவிகளினால் அநியாயம் எப்போதும் செய்யப்படுகிறதில்லை என்றாலும், மனைவிகளுக்கு, அவர்களது புருஷர்களால் அடிக்கடி அநியாயம் செய்யப்படுவதைக்குறித்து அவர் நன்கு அறிந்தவராகவே இருக்கின்றார். இப்படியாக அநியாயமாய் நடத்தப்படுகிற வர்களுக்கு, வேதவாக்கியங்களின் பாஷையிலான அவரது பொதுவான அறிவுரை என்னவெனில்… “”இப்படியிருக்க சகோதரரே கர்த்தர் வருமளவும் – அவரது நீதியின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு, அவரது மகிமையான சாயலுக்கு ஒத்த சாயலுக்கு மாறுவது சமீபித்திருப்பதினால் – நீடிய பொறுமையாயிருங்கள் என்பதே ஆகும் (யாக்கோபு 5:7).
சாந்தமாய்க் காணப்பட்டும், நட்புமுறையில் அறிவுரைக்கூறியும், அன்பாய்ப் பொறுமையாய் இருந்த பிற்பாடு, நிலவரமானது தாங்கமுடிகிறதாய் இருக்கும் பட்சத்தில், கர்த்தரிடம் ஞானமும், தேவையான கிருபையும் கேட்டுக்கொண்டு, அதைச் சகித்துக்கொள்ளுங்கள். இருளினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவித்திட நாடிடுங்கள்; நம்மிடத்தில் ஐசுவரியமாய் வாசம்செய்யும் கிறிஸ்துவினுடைய ஆவியின் வல்லமையினை, அன்பின், தயவின், பொறுமையின், நீடிய பொறுமையின் மற்றும் சகிப்புத்தன்மையின் வாயிலாக உங்களது துணையாளனுக்கு வெளிப்படுத்திட நாடிடுங்கள்; முடிந்தமட்டும் மற்றவர்களின் வார்த்தை மற்றும் செயல்களினால் அதிருப்திக்கொள்ளாமல், பாரம் சுமக்கும் மாபெரியவராகிய கர்த்தரிடம் போவதற்கு அதிகமதிகமாய்க் கற்றுக்கொள்ளுங்கள். “”ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் (எபிரெயர் 12:3); காலம் குறைவாய்க் காணப்படுகின்றது என்று நினைவில்கொண்டு, தீமைக்குத் தீமை செய்யாமலும், உதாசனத்துக்கு உதாசனத்தைச் சரிக்கட்டாமலும், தூற்றுதலுக்குப் பதில் பழித்தூற்றாமலும், பட்டயத்திற்குப் பட்டயம் எடுக்காமலும் இருக்கும்படிக்குக் கூறும் வேதவாக்கியங்களின் புத்திமதிக்குச் செவிக்கொடுத்து, ஜீவியத்தின் பரீட்சைகளின் போது கர்த்தர் பொறுப்பேற்றிருக்கின்றார் என்றும், ஜீவியத்தின் பரீட்சைகளானது நம் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதத்தினை – அதாவது இதைப் பெற்றுக்கொள்வதற்குரிய சரியான இருதய நிலைமையில் நாம் காணப்படும் பட்சத்தில், ஆசீர்வாதத்தினை நமக்குக் கொண்டுவருகின்றதாய் இருக்கும் என்றுமுள்ள உணர்ந்துகொள்ளுதலில், ஜீவியத்தின் பரீட்சைகளில் நம்மை முழுமையாய்க் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுக்க நாடுகிறவர்களாக நாம் இருகக் வேண்டும்.
“”இவ்வுலகத்தின் அதிபதியின்கீழ்த் தனக்கான உரிமைகளை விழுந்துபோன மற்றும் குருடாக்கப்பட்டுள்ள தன்னுடைய அயலார்களிடம் நாடிடும் மற்றும் எதிர்ப்பார்த்திடும் ஒவ்வொரு தேவபிள்ளையும், இது விஷயத்தில் நிச்சயமாகவே இருளிலே நடக்கிறவனாகவே இருப்பான். கர்த்தருடைய ஜனங்கள் “”அவரால் கற்பிக்கப்படுகையில், தங்களது உரிமைகளுக்காக நாடவோ, அவைகளை எதிர்ப்பார்க்கவோ கூடாது என்றும், அநீதி செய்கிறவர்களிடத்தில் பொறுமையோடும், நீடிய பொறுமையோடும் மற்றும் இரக்கத்தோடும் காணப்படுவதற்கும் சீக்கிரமாய்க் கற்றுக்கொள்வார்கள். தாங்கள் கொடுமைப்படுத்தப்படாத மற்றப் பாதைகளை நாடியும் மற்றும் தங்களைத் துன்புறுத்தி மற்றும் அநியாயமாய் நடத்துபவர்களிடமிருந்து தங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப ஓடிப்போகிறதுமாய் இருக்க, அவர்கள் தங்கள் சத்துருக்களை அன்புகூர்ந்திடுவதற்குக் கற்றுக்கொள்வது மாத்திரமல்லாமல், தங்களால் முடிந்த நன்மை யாவற்றையும் அவர்களுக்குச் செய்திடவும் மற்றும் உலகத்தாரிடம் காணப்படுகின்றதான பெரும்பான்மையான சுயநலமும், கீழ்த்தரமான செய்கைகளும் மற்றும் கொடுமைகளும் விழுகையின் விளைவான பாவம் மற்றும் அறியாமையின் விளைவுகளேயாகும் என்று அனுதாபத்தோடுகூட உணர்ந்து கொள்வதற்கும் கற்றுக்கொள்வார்கள். இதற்கேற்ப அவர்கள் “”உம்முடைய இராஜ்யம் வருவதாக, பூமியிலே உமது சித்தம் செய்யப்படுவதாக என்று ஏங்குபவர்களாகவும், ஜெபிப்பவர்களாகவும் காணப்படுவார்கள் மற்றும் இப்படியாக அவர்களது தற்காலத்துச் சோதனைகளும், கஷ்டங்களும், வரவிருக்கின்ற ஆசீர்வாதங்கள் மீது ஆழமான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றதாயிருக்கும் மற்றும் அவர்கள் தங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கும், மிக அதிகமான நித்திய கனமகிமையை அடைவதற்கும் உதவுகின்றதாயிருக்கும்.
சரி எது, தவறு எது என்பது குறித்துக் குரல் எழுப்புவதில் புருஷர்களும், ஸ்திரீகளும் அதிகமதிகம் ஆர்வம் காட்டிடும் இக்காலக்கட்டத்தில் மற்றும் சுதந்தரத்திற்கான ஒவ்வொரு கட்டுப்பாட்டிற்கும் எதிர்ப்புத்தெரிவிக்கப்படுகின்ற இக்காலக்கட்டத்தில், இது விஷயத்தில் கர்த்தருக்கும், அவரது வார்த்தைகளுக்கும் நேர்மையாய் இருப்பவர் தவறாய்ப் புரிந்து கொள்ளப்படுவதற்கு – அதாவது சுதந்திரத்திற்கும், உரிமைகளுக்கும் எதிர்ப்பவராகவும், தவறுகளை ஆதரிப்பவராகவும் புரிந்து கொள்ளப்படுவதற்கு மிகுந்த அபாயம் காணப்படுகின்றது. இப்படியாக பொது ஸ்தானங்களில் காணப்படுகின்றதான தேவனுடைய ஊழியக்காரனின் நேர்மைக்கான பரீட்சையானது அவன்மேல் திணிக்கப்படுகின்றது மற்றும் “”உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியமாம். இம்மாதிரியான ஸ்தானத்தில்தான் இப்பத்திரிக்கையின் இதழாசிரியர்கூடக் காணப்படுகின்றார் மற்றும் இவரும் ஆண்டவருக்கும், அவரது வார்த்தைகளுக்கும் முழுமையாய் நேர்மையுடன் காணப்பட விரும்புகின்றார். இப்படிச் செய்வதினால் இவர் ஸ்திரீகளுக்கு எதிரானவர் என்றும், இப்பாலினரை அவமதிப்போர் மற்றும் இழிவுப்படுத்துவோர் பக்கத்தில் காணப்படுபவர் என்றும் சிலரால் கருதப்படுகிறதற்கு ஏதுவாயிற்று. இது மிகவும் உண்மையற்றதும் மற்றும் எல்லா விதத்திலும் அநியாயமானதுமாகும்.
உண்மையுள்ள இருதயமுடைய மற்றும் உயர் சிந்தையுடைய ஒவ்வொரு மனுஷனும், எதிர்ப்பாலினரை, அதுவும் உண்மையான பெண்மைக்குரிய நற்பண்புகளுடன், தாலந்துகளும், வரங்களும் மற்றும் பரந்த மனப்பான்மையும், திறமைகளும் விசேஷமாய்க் காணப்படும் பட்சத்தில், நிச்சயமாகவே உயர்வாய் மதிக்கிறவனாய் இருப்பான். இம்மாதிரியான நிலைமைகளில் உயர்பண்புள்ள மனுஷனானவன், கிறிஸ்துவுக்குள்ளான அச்சகோதரிகளைச் சபையில் மிகவும் முதன்மையான நிலைக்குக் கொண்டுவந்திடுவதற்கு முற்படுவது அவனது இயல்பாய் இருக்கும். மேலும் இதற்கு ஏதேனும் மறுப்புத் தெரிவிக்கப்படுகையில், இது – கர்த்தருடைய வார்த்தையிலிருந்து (இதுவிஷயமான) அவரது சத்தம் தெளிவாய்க் கேட்கப்படுவதற்கு முன்பு வரையிலும், மறுப்புத் தெரிவித்தவர்கள் சார்பில் குறுகின மனப்பான்மை காணப்படுகின்றதென சந்தேகங்களானது புருஷர்கள் மற்றும் ஸ்திரீகள் இருவரின் மத்தியில் எழுப்புகின்றதாய் இருக்கும். கர்த்தருடைய சத்தம் கேட்கையில், உண்மையான ஆடுகள் அனைத்தும், மாபெரும் மேய்ப்பனின் சத்தத்திற்குச் செவிக்கொடுத்து, இவ்விஷயம் தொடர்பான தங்களது சொந்த சித்தங்கள் மற்றும் எண்ணங்களைத் துறந்து, அவரது செய்தியை ஏற்றுக்கொள்கின்றது; “”என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிக்கொடுத்து, எனக்குப் பின்செல்லுகின்றது; அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின் செல்கிறதில்லை.
இந்த ஒரு நிலைப்பாட்டினைத்தான் இதழாசிரியர் மில்லேனியேல் டாண், வேதாகம பாடங்களின் ஆறாம் தொகுதியில் எடுத்துக்கொள்கிறதற்குக் கடமைப்பட்டுக் காணப்பட்டார். பொறுமையாயும் மற்றும் குறிப்பாயும் அவர் அதில் தனது சொந்த கருத்துக்களை முன்வைத்திடாமல், மாறாக அவர் அதில் முன்வைத்துள்ளவைகளானது, அநேக விதங்களில் அவரது சொந்த நிலைப்பாட்டிற்கு நேர்மாறானவைகளாகவே காணப்படுகின்றது. இந்த விஷயத்தில் அவர் தனது சித்தத்தினைக் கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுத்து, தேவனுடைய பிரியமான குமாரனால் விசேஷமாய் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்கள் வாயிலாகச் சபைக்குக் கொடுக்கப்பட்டதான செய்தியினை, கர்த்தருடைய வாய்க்கருவியென அவர் திரும்பக் கூற மாத்திரம் செய்தார். “”இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று தம்முடைய குமாரன் குறித்தப் பிதாவின் செய்தியைக்கேட்ட இதழாசிரியர், “”பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று தம்முடைய அப்போஸ்தலர்கள் குறித்துக் குமாரன் கூறிடும், குமாரனின் சத்தத்திற்கும் இதழாசிரியர் செவிக்கொடுத்தார் (மத்தேயு 18:18). வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில், அப்போஸ்தலர்களின் போதனைகளானது, தேவனுடைய குமாரனால் நேரிடையாய் ஏவப்பட்டுப் பேசப்பட்ட வார்த்தைகளாக – பிதாவின் வார்த்தைகளாக ஏற்றுக்கொள்ளப்படும்படிக்கு சபைக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சபையில் ஸ்திரீகளினுடைய ஸ்தானம் குறித்து அப்போஸ்தலன் நம்மிடம் பேசுகையில், அவரது வார்த்தைகளை எதிர்த்து வாதாடுவதற்கோ, அதைக்குறித்து வாக்குவாதம்பண்ணிடுவதற்கோ, அதைப் புறக்கணிப்பதற்கோ நமக்கு அனுமதியில்லை. இப்படிச் செய்கிற எவரும் ஆவியினுடைய சத்தத்தைப் புறக்கணிக்கிறவர்களாகக் காணப்பட்டு, ஏதோ விதத்தில் நிச்சயமாய்ப் பின்விளைவை எதிர்க்கொள்பவர்களாய்க் காணப்படுவார்கள்.
இது விஷயத்தில் எங்களுடைய எந்தச் சொந்த போதனையையும் நாங்கள் முன்வைக்கவில்லை. நாங்கள் கர்த்தருடைய அப்போஸ்தலர்கள் வாயிலாக, அவரது சத்தத்தைக் கேட்டுள்ளபடியால், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலுள்ள சகோதரிகளின் ஸ்தானம் தொடர்பாக அவர்கள் மிகவும் தெளிவாய்ச் சுட்டிக்காட்டியுள்ளவைகளை நாங்கள் கவனத்திற்குக் கொண்டுவர மாத்திரமே செய்துள்ளோம். பொதுவில் செய்யப்படும் ஊழியங்களும், போதிக்கும் ஊழியங்களும் சகோதரிகளுக்கு அருளப்படாமல், மாறாக அவைகள் குறிப்பாய் அவர்களுக்குத் தடுத்துவைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காண்பிக்கையில், கிறிஸ்துவின் சரீரத்தில் சகோதரிகளின் ஊழியங்களானது முக்கியமில்லாத ஒன்று என்று எந்த விதத்திலும் நாங்கள் சொல்லிடவில்லை. மாறாக அவர்கள் சபையில் மிகவும் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கின்றனர் என்றும், நன்மைக்கு அல்லது தீமைக்கு ஏதுவான மிகவும் பரந்த செல்வாக்கினை – கணக்கிடமுடியாத செல்வாக்கினைத் திறமையாகப் பயன்படுத்த முடிகிறவர்களாக இருக்கின்றனர் என்றும், அந்தச் செல்வாக்கானது திவ்விய வார்த்தைகளுக்கு இசைவாகவே ஒழிய, முரணாக பயன்படுத்தப்படாதபடிக்கு, அந்தச் செல்வாக்கிற்குப் பொறுப்பாளிகளாகக் காணப்படுவது, அவர்களது உக்கிராணத்துவத்தின் ஒரு பாகமாக
இருக்கின்றது என்றும் நாங்கள் எண்ணுகின்றோம். திவ்விய ஒழுங்கில் சபையிலுள்ள ஆண்கள் தலையாகிய கர்த்தருக்கு அடையாளமாய்க் காணப்படுகின்றனர் மற்றும் ஸ்திரீகள் மணவாட்டியாகிய சபைக்கு அடையாளமாய்க் காணப்படுகின்றனர்.
இதுவே உண்மையுள்ள கீழ்ப்படிதலுக்கான வழிமுறையாகும்; மற்றும் “”பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலே – அதாவது கீழ்ப்படியாமல் பொது ஊழியங்களில் கடுமையாய் உழைப்பதைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே – தேவனுடைய பார்வையில் மேன்மையாய்க் காணப்பட்டது என்ற வேதவாக்கியத்தையும் நாம் நினைவுகூருகின்றோம். கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களாகிய சகோதரர்களும், சகோதரிகளும், யாவரும் இது விஷயமாக டாண் தொகுதி 6-இல் இடம்பெறும் ஐந்தாம் அத்தியாயத்தை மறுபடியுமாக மிக ஜாக்கிரதையாக வாசிப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம். இவ்விஷயமானது இந்த அறுவடையின் காலக்கட்டத்தில், அவரது அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்குப் பரீட்சையின் ஒரு பாகமாகக் காணப்படத்தக்கதாக கர்த்தர் சித்தம் கொண்டுள்ளார் என்று நாங்கள் நம்புகின்றோம். இவ்விஷயத்தில் நமது சொந்த எண்ணங்களும், இது விஷயமாக மற்றவர்களிடத்திலான நம்முடைய [R3828 : page 239] வார்த்தைகளும், செல்வாக்கும், நம்மால் முடிந்தமட்டும் கர்த்தருடைய சிந்தையின்படியாக, அவரது வார்த்தைகள் போதிப்பவைகளுக்கு முழு இசைவாகக் காணப்படும்படிக்குத் தீர்மானித்துக் கொள்வோமாக. “”இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை (ஏசாயா 8:20).
பரப்பப்படுகின்ற வஞ்சகமான போலிவாதங்கள் சிலவற்றை நாம் இங்குத் தெளிவுப்படுத்திடுவது தகுதியாய் இருக்கும் – இப்படியாக இது விஷயத்தில் கர்த்தருடைய உண்மையான ஜனங்கள் சரியான நிலைப்பாட்டினைப் பெற்றுக்கொள்ள நாம் உதவிட முடியும். இந்தப் போலிவாதங்களின் ஓர் அம்சம் என்னவெனில், கொரிந்துவிலுள்ள சபைக்கு அப்போஸ்தலனால் எழுதப்பட்டவைகளானது, அந்தத் தலைமை நகரத்தின் ஸ்திரீகளினுடைய தரக்குறைவின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது என்றும், அவர் மற்றச் சபைகளுக்கு இதே வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கமாட்டார் என்றும், சபைக்கடுத்தப் பொது ஊழியங்களில் இதேபோல சகோதரிகளுக்கான உரிமைகளின் கட்டுப்பாட்டினை மற்றச் சபைகளுக்குச் சொல்லியிருக்கமாட்டார் என்றும், இதனால் அவரது வார்த்தைகளானது, தற்காலத்திற்குப் பொருந்துகிறதில்லை என்றுமாகும். இது போலி வாதமாகும், தவறான நியாயமாகும். கொரிந்தியர்களுக்கு எழுதப்பட்ட நிருபங்களானது, அந்நாட்களிலுள்ள ஒழுக்கமில்லாத ஆண்களுக்கோ, பெண்களுக்கோ என்று எழுதப்படாமல், ஆண்களும், பெண்களுமாகக் காணப்பட்ட கொரிந்து பட்டணத்தின் பரிசுத்தவான்களுக்கு எழுதப்பட்டது; மேலும் கொரிந்து விலுள்ள ஒரு பரிசுத்தவான் என்பவர், எந்த ஓர் இடத்திலும் காணப்படும் ஒரு பரிசுத்தவான் போன்றவரேயாவார்; அதாவது பாவத்திலிருந்து நீதியினிடத்திற்குத் திரும்பி, இயேசுவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு அனைத்தையும் முழுமையாய் அர்ப்பணம் பண்ணினவர் என்பவர் தான் பரிசுத்தவான்.
ஸ்திரீகளுக்கான செயல்பாடு எல்லை குறித்ததான அப்போஸ்தலனின் கட்டுப்பாடானது, மறுபக்க தரப்பினராலேயே ஏற்பட்டது என்பதாகத் தெரிகின்றது – அதாவது கொரிந்து பட்டணத்தில் இருந்த சபையார், மற்றச் சபையாரைக் காட்டிலும் தங்களை உயர்வானவர்களாக எண்ணி, மற்றச் சபைகள் சிந்தித்துக்கூடப் பார்க்காத உரிமைகளை இவர்கள் தங்கள் ஸ்திரீகளுக்குப் பெற்றுக்கொடுக்க விரும்பிட்டார்கள். ஆகையால்தான் பவுல் அவர்களைக் கடிந்துகொண்டு கேட்டதாவது, “”வேதவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? [நீங்களா அதை உண்டாக்கினீர்கள்? கொரிந்து பட்டணத்து கிறிஸ்தவர்களைச் சுவிசேஷத்தின் விளக்கமளிப்பவர்கள் என்று நாங்கள் பார்க்க வேண்டுமா?] அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? [மற்றவர்கள் பெற்றுக்கொண்டது போல்தானே நீங்களும் சுவிசேஷத்தினைப் பெற்றுக்கொண்டீர்கள்? அதைத் தோற்றுவித்தவர்கள் நீங்களல்ல என்று ஒத்துக்கொள்கின்றீர்களா? அதன் ஒழுங்குகளில், கூடச் சேர்ப்பதற்கோ அல்லது அதை மாற்றிடுவதற்கோ உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இவ்விஷயத்தினை நீங்கள் அதன் சரியான வெளிச்சத்தில் பார்க்கையில் தேவனுடைய கிருபையைப் பற்றின செய்தியினை, அவர் அனுப்பின வழியில் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் உங்கள் நடுவில் காணப்படுகின்றதான முன்னுரிமைப் பற்றி நீங்கள் ஊகித்திடும் சில போதனைகளுக்குப் பொருந்தத்தக்கதாக அச்செய்தியினைத் திருத்தம் செய்யும் எண்ணம் ஏதும் இல்லாமல், அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்] (1 கொரிந்தியர் 14:36). “”பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்டதான விசுவாசமானது மாறுபடும் தன்மையுடையதல்ல, மாற்ற முடியாத ஒன்றாகும். ஆகையாலே “”நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக (பிலிப்பியர் 3:16) என்று அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார்.