R4458 (page 251)
அப்போஸ்தலர் 20:2-38
“”என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலிப்பியர் 4:13)
கலகத்திற்குப் பின்னர்ப் பரிசுத்தவானாகிய பவுல், எபேசுவிலிருந்து போன பிற்பாடு, அவர் ஸ்தாபித்த ஐரோப்பியாவிலுள்ள சபைகளைச் சந்திக்கும்படி பிரயாணம் மேற்கொண்டார். கொரிந்து பட்டணத்தை நோக்கி, அவர் மக்கெதோனியா வழியில் செல்கையில், அவர் மீண்டும் எபேசுவுக்குத் தெற்கே 50 மைல் தொலைவில் காணப்பட்ட மிலேத்துவுக்குக் கப்பலில் வந்தார். ஆசியா மைனரிலுள்ள பல்வேறு சபையின் பிரதிநிதிகளும் அவரோடேகூடப் பிரயாணப்பட்டிருந்தார்கள். அவர் எருசலேம் நோக்கிப் பிரயாணப்பட்டிருந்தார்; எருசலேமிலுள்ளவர்கள் ஏழைகளாக இருந்தபடியால், அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்த நான்கு மாகாணத்திலிருந்து அவர்களுக்கு உதவிகளைச் சேகரித்தார். தெசலோனிக்கேயா, பெரோயா, தெர்பை மற்றும் எபேசு பட்டணத்திலுள்ள சபையின் பிரதிநிதிகளாகிய, ஏழு நபர்களும் பவுலோடு சேர்ந்து வழித்துணையாய்ப் பிரயாணம் பண்ணினார்கள். இந்தப் பிரயாணத்திற்குப் பல மாதக்காலம் தேவைப்பட்டிருக்கும் என அனுமானிக்கப்படுகின்றது. மேலும், அவர் இப்பொழுது மிலேத்துவை அடைந்திருந்த இத்தருணமானது எபேசு பட்டணத்துச் சபையின் மூப்பர்களுக்குப் பிரியாவிடைக் கொடுப்பதற்கான கடைசி சந்தர்ப்பமாக இருந்தது. எருசலேம் துறைமுகத்தை நோக்கிப் பிரயாணித்த அவர்கள் சென்ற கப்பலானது மிலேத்துவில் நிறுத்தினபோது பவுல், [R4458 : page 252] எபேசுவிலுள்ள மூப்பர்களை வரும்படி செய்தி அனுப்பினபோது அவர்கள் மிலேத்துவுக்கு வந்தார்கள்.
இந்த மூப்பர்களுக்குக் கொடுக்கப்பட்ட அப்போஸ்தலரின் வார்த்தைகளைக் குறித்தே விசேஷமாக நம்முடைய பாடத்தில் நாம் பார்க்கப் போகின்றோம். அவர் இவைகளைப் பெருமையாகப் பேசினார் என்று நாம் புரிந்துகொள்ளக்கூடாது, மாறாக தான் பேசும் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் முழுமையாக ஒப்புக்கொள்ளக்கூடிய காரியங்களையே அவர் மீண்டும் எளிமையாகப் பேசினார். மேலும், இதில் பெருமைபாராட்டிக் கொள்ளுவதற்கும் ஒன்றுமில்லை. அவர் தனக்காகவோ அல்லது தன்னைப் புகழ்வதற்காகவோ இவைகளைக்குறித்து மீண்டும் பேசாமல், அந்தச் சகோதரர்களுக்கு அக்காரியங்களைக்குறித்து நினைப்பூட்டி, அக்காரியங்கள் அவர்களிடத்தில் நன்கு பதிய வேண்டும் என்பதற்காகவே பேசினார். அவர்கள் மூன்று வருட காலமாகத் தன்னைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்திருந்திருந்தார்கள், தனது ஜீவியத்தை அறிந்திருந்திருந்தார்கள் மற்றும் கர்த்தருக்கும், சத்தியத்திற்கடுத்த ஊழியங்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கடுத்த ஊழியங்களுக்கும், தான் கொண்டிருந்த அர்ப்பணிப்பையும் அறிந்திருந்திருந்தார்கள் என்று நினைப்பூட்டினார். தன்னுடைய தாழ்மையான மனதையும், தான் பெருமைபாராட்டாதவன் என்றும், தன்னுடைய நடத்தைகள் கர்வமற்றது, ஆணவமற்றது என்றும், சபையை “”இறுமாப்பாய் ஆளுவதற்கு””, நாடவில்லை என்றும் நினைப்பூட்டினார்; இன்னுமாக தனக்கு யூதர்களாலும், கள்ளச்சகோதரர்களினாலும் வந்திட்ட கஷ்டங்கள் மற்றும் அநேக சோதனைகளை அவர்களோடு அவர் சகித்ததையும் நினைப்பூட்டினார்.
பவுலுடைய வேலையைக்குறித்தும், அவர் சகித்துப்போராடினதைக் குறித்தும், சபைக்கு நன்மையாயிருக்கும் யாதொன்றையும் அவர் மறைத்து வைக்காததைக்குறித்தும், வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும்பட்சத்தில் அவர் தனிப்பட்ட விதத்திலும், பொதுவாகவும் போதித்தார் என்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள். யூதர்களிடமும், கிரேக்கர்களிடமும் கிறிஸ்துவின் ஒரே ஒரு சுவிசேஷம்தான் உள்ளது என்றும், அது விசுவாசத்தின் மூலமும், பாவத்திலிருந்து திரும்புவதன் மூலமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும்; பவுல் சாட்சி பகர்ந்திருந்தார். இப்படியாக தன்னுடைய குணலட்சணங்களின் இவ்வம்சங்கள் மீது அவர்களுடைய கவனத்தைத் திருப்புவதன் வாயிலாக, தன்னுடைய பக்திவைராக்கியம் மற்றும் உண்மையை அவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற தனது அடுத்த புத்திமதிக்கான அடித்தளத்தைப் போட்டார். அவர் அவர்களது நலனுக்கடுத்தவைகளைக் கவனித்துக்கொண்ட உண்மையுள்ள கண்காணியாக இருந்துள்ளார். ஆவிக்குரிய விஷயங்களில் அவர்கள் போஷிக்கப்படத்தக்கதாக பார்த்துக்கொள்வதிலும், அவர்களது நலனுக்கடுத்தவைகளில் வழிநடத்துவதிலும் உண்மையுள்ள மேய்ப்பராக இருந்துள்ளார். இவைகள் அனைத்தும் உண்மை என்று அவர்கள்; அறிந்திருப்பதினால், இத்தகைய ஒருவரிடமிருந்து வரும் அவருடைய கடைசி புத்திமதியையும் – அதாவது அவர் அவர்களுக்குக் கொடுக்கப்போகும் மாபெரும் பாடத்தையும் – ஏற்றுக்கொள்ள நன்கு ஆயத்தமாயும் இருந்திருப்பார்கள்.
தான் சரீரத்தில் சுதந்திரமாய் இருப்பினும், தன்னால் தட்டிவிட முடியாத அளவுக்கு தனது மனம் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்திருக்கின்றார் என்றும், தான் எருசலேமுக்குப் போக வேண்டும் என்றும், அப்படிச் செய்வதே தனக்கான கர்த்தருடைய வழிநடத்துதலாய் இருக்கின்றது என்றும், அதே வேளையில் கட்டுகளும், உபத்திரவங்களுமே தனக்கு எருசலேமில் வைக்கப்பட்டுள்ளது என்று “”வரங்கள்”” வாயிலாக மற்றவர்கள் மூலம் தனக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சகோதரர்களுக்குப் பவுல் அறிவித்தார். அப்போஸ்தலர் பின்னர்த் தைரியமான வார்த்தைகளைப் பேசுகின்றார். அதாவது, “”அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்”” (அப்போஸ்தலர் 20:24,25). மற்றவர்களைக்காட்டிலும், எபேசு பட்டணத்துச் சபையாரோடு அப்போஸ்தலர் மிகவும் நெருக்கமாக இருந்தார். இக்காரியமே அவர்களுக்கு மிகப்பெரிய ஐசுவரியமாக இருந்ததாக தெரிகின்றது. கர்த்தருடைய வழிநடத்துதலின்படி, அவர்களோடு பவுல் அதிகக் காலம் செலவிட்டார் மற்றும் இதனால் உண்டாகியுள்ள பலன்களைப் பார்க்கையில், அவர் நீண்ட காலம் தங்கினதை நியாயப்படுத்துகின்றதாகவும் இருக்கின்றது. நண்பர்கள் பிரியும் விஷயம் மிகவும் வேதனையுடையதாகும். திரைக்கு இப்பக்கத்தில் இனி மீண்டும் பார்ப்பதற்கான நம்பிக்கையில்லாமல் பிரியும் சம்பவமானது இரட்டிப்பான கடும் வேதனையாக இருக்கும்.
“”தேவனுடைய இராஜ்யம் குறித்துப் பிரசங்கித்தலே””- கிறிஸ்துவினுடைய சுவிசேஷம் என்றுள்ள அப்போஸ்தலரின் விசேஷமான வலியுறுத்துதலை நாம் இங்குக் கவனிக்கின்றோம். இந்தச் சுவிசேஷத்தையே நாம் இன்று பிரசங்கித்துக்கொண்டிருக்கிறோம் என்று நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமானால் நல்லது; ஒருவேளை இல்லையெனில், நாம் சரியானதைப் பிரசங்கிக்கவில்லை என்றதாகிவிடும். தேவனுடைய கிருபையானது, அவருடைய ஈவாகிய குமாரனிடத்தில் வெளிப்பட்டது. மேலும் தேவனுடைய கிருபையினால் குமாரனானவர் எல்லா மனுஷருக்காகவும் மரணத்தை ருசிபார்க்கிறவரானார். கிறிஸ்துவின் மரணமானது எப்படி நம்முடைய மனுக்குலத்திற்கு ஆசீர்வாதம் கொண்டுவரும்படி திட்டமிடப்பட்டுள்ளது என்பதில் – தேவனுடைய கிருபையானது இன்னுமாக வெளிப்பட்டுள்ளது. அதென்னவெனில்:-
(1) மனுக்குலத்தை ஆளுவதற்கும், பாவம் மற்றும் மரணத்தை அடக்குவதற்கும், சத்துருக்களால் கட்டுண்டவர்களைச் சீர்த்தூக்குவதற்கும், பரலோகத்தின் கீழ் இராஜ்யம் இறுதியில் ஸ்தாபிக்கப்படுவதன் மூலம் தேவனுடைய கிருபை வெளிப்படுகின்றது.
(2) “”உம்முடைய இராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக”” என்று நாம் ஜெபிக்கும் உலகத்திற்குரிய பொதுவான ஆசீர்வாதங்கள் வருவதற்கு முன்னதாக, அந்த இராஜ்யத்தில் அருமையான மீட்பரோடு உடன்சுதந்தரர்களாகிடுவதற்குச் “”சிறுமந்தையினர்”” முதலாவதாக தெய்வீக அறிவிப்பினால் அழைக்கப்படுகின்றனர். தேவனால் நமக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்ட காரியங்களை நாம் அறிந்துகொண்டு, இவ்விதமாக நமது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிபடுத்திக்கொள்வதற்கு நாம் உதவிபெற்றிடவும்வேண்டி – இருண்ட யுகத்தின் பாரம்பரியங்களினால் நமது பார்வையிலிருந்து நீண்ட காலமாய் மறைக்கப்பட்டிருந்த தேவனுடைய இராஜ்யம் மற்றும் தேவனுடைய கிருபைக் குறித்ததான இந்த விலையேறப்பெற்றச் சத்தியங்களானது – இப்பொழுது ஆவியினாலும், நம்முடைய கண்கள் பிரகாசிக்கப்பட்டிருப்பதினாலும் வெளியாகிக் கொண்டிருப்பதற்காகத் தேவனுக்கு நன்றி.
“”தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்”” (அப்போஸ்தலர் 20:26,27) என்ற அழுத்தமிக்க வார்த்தைகளை அப்போஸ்தலர் குறிப்பிட்டதில் ஆச்சரியமில்லையே. மூன்று வருடங்களாக எபேசு பட்டணத்துச் சபையாரோடு அவர் தங்கி போதித்த அதே விஷயங்களே, பல்வேறு சபைகளுக்கு அவர் எழுதிட்ட நிருபங்களின் வாயிலாகத் தெய்வீக ஏற்பாட்டினால் நமக்கும் வந்துள்ளது. பரிசுத்த பவுலின் செய்திகளில் – தெய்வீகத் திட்டத்தின் பாகமாயிராத நித்தியத்திற்குரிய சித்திரவதைக் குறித்த எந்த ஒரு வார்த்தையும் இடம் பெறாததை நாம் கவனிக்கலாம். பரிசுத்த பவுல், கர்த்தருடைய அருமையான ஜனங்களை உற்சாகப்படுத்துவதிலும், போதிப்பதிலும், கடிந்துகொள்வதிலும் மிகப் பொறுமையாக இருந்தார் என்பதை இந்த நிருபங்களின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளலாம். பவுல் தன்னை முற்றிலும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்திருந்தபடியால் அவர் கர்த்தரால் அதிகம் பயன்படுத்தவும் பட்டிருந்தார்.
இங்குத் தேவனுடைய பரிசுத்த ஆவியின் செயல்பாட்டிற்கும், பரிசுத்தமில்லாத ஆவிகளாகிய விழுந்துபோன ஆவிகளின் செயல்பாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்கலாம். இரண்டு விஷயங்களிலும்/பக்கத்திலும் எந்தளவுக்கு அந்த நபர் தனது சொந்த சித்தத்தை விட்டுக்கொடுக்கின்றாரோ, அவ்வளவாய் (ஆவியின்) கட்டுப்பாடும் காணப்படும். ஆனால், அதிர்ஷ்டவசமாக மனுக்குலமாகிய நாம் அனைவரும் நம்மை முற்றிலும் அர்ப்பணிக்க / ஒப்புக்கொடுக்க இயற்கையாகவே பயம் கொண்டுள்ளோம். இப்படியான சுபாவம் இல்லையெனில், சந்தேகத்திற்கிடமின்றி இன்று முழு உலகமும், அல்லது பெரும்பான்மையானவர்கள் விழுந்துபோன ஆவியின் கட்டுப்பாட்டிற்குள் போயிருந்திருப்பார்கள். ஆவியுலக ஊடகர்கள்கூடத் தங்கள் சித்தத்தைப் பகுதியளவே ஒப்புக்கொடுத்துள்ளபடியால், முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று ஆவிகள் வலியுறுத்துகின்றன. முழுமையாக சித்தத்தை ஆவிகளுக்கு ஒப்புக்கொடுத்து, இதனால் தீய ஆவிகள் முழு அதிகாரத்தையும் எடுக்க ஒப்புக்கொடுப்பது என்பது மாபெரும் அபாயம் என ஆவியுலக
இடையீட்டார்களுக்கு, ஆவியுலக புத்தக வெளியீடுகளில் எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தோ பரிதாபமான ஆவியுலக இடையீட்டாளர்கள்! இவர்கள் தங்கள் மூலம் தொடர்புகொள்ளும் அனைத்து ஆவிகளும் பொல்லாத ஆவிகள் என்றும், பிசாசுகள், விழுந்துபோன ஆவிகள் என்றும், மனிதர் போன்று வேஷம் தரித்த ஆவிகள் என்றும், நம்முடைய மரித்த நண்பர்கள் போன்று வேஷம்போடும் ஆவிகள் என்றும் அறியாமலிருக்கின்றார்கள்.
புருஷர்களும், மனைவிகளும்கூடத் தங்களுடைய சித்தங்களை ஒருவருக்கொருவர் முற்றிலும் ஒப்புக்கொடுக்கத் துணியும் விஷயத்திலும் பாதிப்புக்கேதுவான ஆபத்தில்லாமல் இல்லை. பெற்றோர்களும்கூடத் தங்களுடைய பிள்ளைகளின் விஷயத்தில், பிள்ளைகள் தங்களுக்கென்று சொந்த சித்தம் வைக்காத அளவுக்கு அவர்களைக் கட்டுப்படுத்த / வற்புறுத்த முயற்சிக்கக்கூடாது. பிள்ளைகள் எவ்வளவாய்க் கட்டுப்படுத்துகிறார்களோ, அவ்வளவாய்ப் பெற்றோர்கள் அவர்களை பாதிப்புக்குள்ளாக்கி, அவர்களின் தனிமனித பண்புகளைக் குலைத்துப்போட்டு, விழுந்துபோன ஆவிகள் எளிதில் அவர்களை வஞ்சிக்கும் நிலையில் உள்ளாக்கிவிடுவார்கள்.
நாம் நம்மை முற்றும் முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டிய ஒரே ஒருவர் கர்த்தராவார். இவரே தம்மிடத்தில் முழுமையாகச் சித்தத்தை ஒப்புக்கொடுக்கும்படி அழைக்கின்றார். மேலும் நாம் அவருடைய நாமத்தினால், அவருடைய ஸ்தானாபதிகளாக இருந்து, நமது பிள்ளைகளையும், நமது நண்பர்களையும், நமது அயலகத்தாரையும் கர்த்தரிடத்தில் தங்கள் இருதயத்தை முழுமையாக ஒப்புக்கொடுக்கும்படி அழைக்கலாம். எந்தளவுக்குச் சித்தங்கள் முழுமையாக அர்ப்பணிக்கப்படுகின்றதோ, அந்தளவுக்கு ஒப்புக்கொடுத்தலும் அதிகமாயிருக்கும். அத்தகைய அனுபவமும் மிக ஆசீர்வாதமாய் இருக்கும். அதாவது, கர்த்தருடைய வேலைகளில் அதிகம் பயனுள்ளவர்களாகவும் இருப்போம். இதுவே, “”ஆவியினாலே நிறைந்து,”” உங்களைப் பரிசுத்தப்படுத்தி, முற்றிலுமாகக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுங்கள் என்ற பரிசுத்த பவுல் அவர்களின் புத்திமதியில் உள்ள சாராம்சமாகும். இந்த அர்ப்பணிப்பு அல்லது சித்தத்தை ஒப்புக்கொடுக்கும் அளவிற்கு ஏற்ப, நாம் கர்த்தருடைய வேலைக்கு, சத்தியத்தின் வேலைக்கு, மந்தையின் வேலைக்கு ஆயத்தமாய் இருக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படலாம். கர்த்தருக்கென்று முழுமையாகச் சுயத்தை அர்ப்பணிக்கும் விஷயத்திலும், ஆவியில் நிரப்பப்படும் விஷயத்திலும், சுயசித்தத்தை வெறுமையாக்கும் விஷயத்திலும், உலகத்திற்கும் அதன் திட்டத்திற்கும் அதன் சித்தத்திற்கும் அதன் வேலைகளுக்கும் மரிக்கும் விஷயத்திலும், பரிசுத்த பவுல் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார்.
இப்படியாக, அப்போஸ்தலன் தான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, தன்னைச் சகோதரர்கள் பின்பற்றுங்கள் என்று சொன்னதில் ஆச்சரியமில்லையே. கிறிஸ்து பிதாவின் ஆவியினால் நிரப்பப்பட்டவராக இருந்தார். பரிசுத்த பவுல், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை [R4458 : page 253] உண்மையாய்ப் பின்பற்றுகிறவராக இருந்து, அவரைப்போன்றே ஆவியில் நிரப்பப்பட்ட அனுபவம் பெற்றிருந்தார். எனினும், குறைந்த அளவிலேயே நிரப்பப்பட்டிருந்தார். மேலும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகத் தேவபக்தியாய் ஜீவிக்கிற அனைவரும்கூட அவருடைய ஆவியினால், கிறிஸ்துவின் சித்ததினால், பிதாவின் சித்ததினால் நிரப்பப்பட்டு, பூமிக்குரிய நோக்கங்களுக்கு மரித்தவர்களாயிருக்க வேண்டும். மூப்பர்களை வரவழைப்பதற்கான அப்போஸ்தலனுடைய நோக்கமானது, தன்னைப்போன்று, கர்த்தருக்கு அர்ப்பணம் பண்ணினவர்களாக மாத்திரமல்லாமல், சபையில் போதகர்களாகவும் காணப்படும் அவர்கள், தங்களைக்குறித்தும் மற்றும் தங்களைக் கண்காணிகளாகக் கர்த்தர் ஏற்படுத்தியுள்ள சபைக்குறித்தும், இரண்டுமடங்கு பொறுப்புடையவர்களாகக் காணப்படுகின்றனர் எனும் உண்மையினை, அவர்களது மனதில் பதியவைப்பதற்கேயாகும். “”ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய (குமாரனுடைய) சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக (கிரேக்க வார்த்தை, episcopos – bishops) வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்”” எனும் அவரது வார்த்தைகளைக் கவனியுங்கள் (அப்போஸ்தலர் 20:28).
“Take heed un to yourselves, and to all the flock, in which the holy spirit hath made you bishops, to feed the church of God which he purchased with the blood of his own son.” (Revised Version)
“Take heed to yourselves therefore and to all the flock among whom the holy spirit made you oversees to feed the church …” (Diaglott)
அப்போஸ்தலர் 20:28-ஆம் வசனத்திலுள்ள பல்வேறு விஷயங்களானது, மிகவும் கவனமாய்க் கவனிப்பதற்குப் பாத்திரமானவைகளாகும். ரிவைஸ்ட் மொழியாக்கத்தில் ‘In the which – the Holy Spirit hath made you bishops” என்று இடம்பெறும் மொழிப்பெயர்ப்பானது, சபையின் மூப்பர்களானவர்கள் மேற்பட்ட வகுப்பார் அல்லது “”குருமார்”” வகுப்பார் எனும் விதத்தில் சபை மீது ஏற்படுத்தப்படாமல், மாறாக சபை வாயிலான கர்த்தருடைய நியமித்தலின்படி அவர்கள் சபையில் – அதன் அங்கத்தினர்களாக – மேற்பார்வையிடும் அங்கத்தினர்களாக, உதவி செய்யும் அங்கத்தினர்களாகக் காணப்படுகின்றனர் எனும் வேதவாக்கியத்தின் காரியத்திற்கு இசைவாயுள்ளது. இரண்டு விஷயங்களைக் கவனிக்கவும்:-
[R4459 : page 253]
(1) அவர்கள் தங்களைக்குறித்தும் மற்றும் மந்தையைக்குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சபையில் மேய்க்கும் பணியினைச் செய்ய முற்படும் எவரும், முதலாவதாக தான் சோதனைக்குள் விழுந்துபோகாதபடிக்கு விழிப்பாய் இருப்பது அவசியம்; ஏனெனில் அப்போஸ்தலன் கூறுவது போன்று, சபையில் மூப்பர்களுடைய – போதகர்கள், மேற்பார்வையாளர்களுடைய ஊழியத்தை ஏற்றுக்கொள்பவர்கள் விசேஷித்த சோதனைகள், விசேஷித்த இடர்பாடுகளுக்கு உள்ளாவார்கள். மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற இவர்கள், ஆகாதவர்களாய்ப் போய்விடாதபடிக்கு, இவர்கள் முதலாவது, தங்களைக்குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(2) “”திவ்விய ஒழுங்குமுறையின் கீழ் மூப்பராகிய சகோதரர்களெனச் சபையில் ஊழியத்தினை ஏற்றுக்கொள்பவர்கள், தாங்கள் ஒரு கனமான பொறுப்பினை எடுத்துக்கொண்டுள்ளனர் என்றும், அது விஷயம் தாங்கள் தேவனுக்குக் கணக்குக்கொடுக்க வேண்டும் என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும். இது சகோதரரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கிறதைக் குறிக்கின்றதாய் இராது. இது சகோதரருக்குப் பிரசங்கம் பண்ணுவதை மாத்திரமோ அல்லது வியாதியஸ்தர்களைப் போய்ச் சந்திப்பதை மாத்திரமோ மற்றும் பிரச்சனையில் இருப்போருக்கு ஆலோசனை வழங்குவதை மாத்திரமோ குறிப்பதாகாது. இது சபையாருடைய மற்றும் அதன் தனித்தனி நபர்களுடைய – இருவருடைய நலனுக்கடுத்த காரியங்கள்குறித்த ஓர் ஆவிக்குரிய மேற்பார்வையை, பராமரிப்பைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இந்த ஜீவியத்திற்கடுத்த கவலைகளினால் பாரமடைந்திருப்பவர்கள், ஜீவனுள்ள தேவனுடைய சபையில் இந்த ஊழியத்திற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்வதற்குரிய நிலைமையில் எவ்விதத்திலும் காணப்படாதவர்களாய் இருப்பார்கள். மேலும் இத்தகையவர்கள் அப்பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள அழைக்கப்படவும் கூடாது, மூப்பர் என (voted) வாக்களிக்கப்படக் கூடாது. கர்த்தருடைய இராஜ்யம் மற்றும் அதன் நீதிக்கடுத்தவைகளை முதலாவது நாடுபவர்கள் மாத்திரமே எவ்விதத்திலும், சபையிலுள்ள இத்தகைய ஊழியத்திற்குப் பொருத்தமானவர்களாய் இருப்பார்கள். மற்ற அங்கத்தினர்கள் எப்படி வளர்ந்து கொண்டிருக்கின்றனர், விசேஷமாக அவர்களது ஆவிக்குரிய காரியங்களில் எப்படி வளர்ந்து கொண்டிருக்கின்றனர் என்று கவனிப்பது தங்களது பொறுப்பினுடைய ஒரு பாகமாக இருக்கின்றது என்று மூப்பர்கள் கருதிட வேண்டும். வாய்ப்புக் கிடைப்பதற்கேற்ப மற்ற அங்கத்தினர்கள் யாவருக்கும் புத்திமதி கூறுவதும், உற்சாகமூட்டுவதும், உதவிசெய்வதும் தங்களது கடமையினுடைய ஒரு பாகமாக இருக்கின்றது என்று இவர்கள் உணர்ந்திட வேண்டும்.
தாங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் ஏதோ தனிப்பட்ட காரியமாய் இருந்தால் ஒழிய, மற்றப்படி ஒவ்வொருவரையும் சரிப்படுத்த முயற்சிப்பது என்பது சகோதர சகோதரிகள் யாவருக்குமான சிறப்புரிமையல்ல. தனிப்பட்ட காரியமாய் இருக்கும் சந்தர்ப்பங்களில், மத்தேயு 18:15-17-வரையிலான வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளதான நமது கர்த்தருடைய அறிவுரையானது கண்டிப்பாய்ப் பின்பற்றப்பட வேண்டும். மூப்பர் ஒருவர் இந்தத் தனது ஊழியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், சபையாரின் காரியங்கள் மீதான இத்தகைய கண்காணிப்பைப் பண்ணிடவும், சந்தர்ப்பத்தினுடைய தன்மைக்கேற்ப புத்திமதி வழங்கிடவும், கடிந்துகொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்; மேலும் இவற்றைச் செய்கையில் – தானும் ஒருவேளை இதே விஷயங்களில் சோதனைக்குள்ளாகவில்லை என்றாலும், வேறு ஏதேனும் விஷயங்களில் சோதனைக்குள்ளாகக்கூடும் என்று நினைவில் கொண்டு சாந்தத்துடன் செய்திட வேண்டும். மூப்பரும்கூட மத்தேயு 18:15-17-ஆம் வசனங்களின் காரியங்களை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
கண்காணிக்கும் இக்கடமையினை மூப்பர்களிடத்தில் பதியவைக்கும் வண்ணமாய்க் கர்த்தர் இந்த மந்தையைத் தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் சம்பாதித்தார் என்றும், கர்த்தருடைய பார்வையில் காணப்படும் இந்த விலையேறப்பெற்றக் காரியமானது – அவர்களால் ஏறெடுக்க முடியும் எந்த ஊழியத்திலும் சகோதரருக்கெனத் தங்கள் ஜீவியங்களைத் தியாகம் பண்ணிடுவதற்கு அவர்கள் விரும்பத்தக்கதாக – அவர்களது மனங்களில் மிக ஆழமாய்ப் பதிய பெற்றிருக்க வேண்டும் என்றும், அவர்களுக்குப் பரிசுத்த பவுல் அடிகளார் நினைப்பூட்டினார்.
முன்னமே கொடுக்கப்பட்ட எச்சரிப்பிற்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணமாக அப்போஸ்தலன் தீர்க்கத்தரிசனமாய், இவர்கள் தங்களுக்காகவும், மந்தைக்காகவும், தங்களைக்குறித்து எச்சரிக்கையாய் இருப்பது மிகவும் அவசியம் என்றும், மூப்பர்கள் மத்தியிலிருந்து விசேஷமாக மனுஷர்கள் எழும்பிச் சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள் என்றும் கூறினார். தலைவர்களாகிட வேண்டுமென்ற ஆசையில், தங்கள் பதவி ஆசை நிறைவேற உதவும்படிக்கு சபையில் பிரிவினையை உருவாக்கிடுவதற்கு இவர்கள் தயங்கிடமாட்டார்கள். வசனம் 30-இல் இடம் பெறும் ‘perverse’ ( மாறுபாடானவைகள்) எனும் வார்த்தை அதன் மூல பாஷையில், திரித்துக்கூறுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. கர்த்தருடைய ஆவியினை இழக்கத் துவங்குபவர்கள், சத்தியத்தினைப் பற்றின தங்களது தெளிவான புரிந்துகொள்ளுதலையும் இழக்கத் துவங்குவார்கள் என்பதே கருத்தாகும். சுயநலமான மற்றும் தனிப்பட்ட ஆசைகளானது அவர்களது கண்பார்வையினை மறைக்கையில், அவர்கள் வேதவாக்கியங்களை மிகமிக மங்கலாய்க் காண்பார்கள் மற்றும் அவை தங்களது சொந்த ஆசையினை ஆதரிக்கத்தக்கதாக, அவற்றைத் தாராளமாய்த் திரித்திடுவார்கள்.
அப்போஸ்தலனின் வார்த்தைகள் எத்துணை உண்மையாய் உள்ளது! இவைகள் விஷயத்தில் விசேஷமாய் மூப்பர்களுக்கு, மந்தையினுடைய கண்காணிகளுக்கு எத்துணை மகா ஆபத்து உள்ளது! நிச்சயமாகவே சுயநலமான ஆசை என்பது இவர்கள் எதிர்த்துப் போராட வேண்டிய மாபெரும் சத்துருக்களில் ஒன்றாய் இருக்கின்றது. இந்தப் பதவி ஆசைகளானது, சடுதியாய் முளைத்து, பூப்பூத்து, கனிகொடுத்துவிடுவதில்லை. இது ஒரு படிப்படியான காரியமேயாகும்; ஆகையால் மிகவும் அபாயகரமானதாகவும், மிகவும் வஞ்சனையுள்ளதாகவும், கவனிக்கத்தவறப்படுகிறதாகவும் காணப்படுகின்றது. ஆகையால் கர்த்தருடைய மந்தையில் அனைவரும், விசேஷமாக மூப்பர்கள் தங்களைக்குறித்து எச்சரிக்கையாக இருப்பதும், தங்கள் நடத்தைகளை அதிலும் குறிப்பாக தங்கள் செய்கைகளுக்குப் பின்னுள்ள நோக்கங்களைக்கூர்ந்து கவனிப்பதும் எவ்வளவு முக்கியமாயுள்ளது. சித்தத்தில் முழுமையான தூய்மை என்பது அவசியமாயுள்ளது என்பதை நாம் நினைவில்கொள்வோமாக. கலந்திடும் ஒவ்வொரு சுயநலமும், எவ்வளவு சிறியதாயிருப்பினும், அது கவனிக்கப்படாத பட்சத்தில், இரண்டாம் மரணத்திற்கு வழிநடத்திவிடும் நச்சுக்கிருமியாயிருக்கும். “”உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்”” என்பதே அப்போஸ்தலனின் எச்சரிப்பாய் இருக்கின்றது. ஏனெனில், மூப்பர்கள் மத்தியில்தான் சில மனுஷர் எழும்பி சீஷர்களைத் தங்கள் பக்கமாக இழுக்கவும், மந்தையில் தலைவர்களாக இருக்கவும், மனுஷனுடைய பாராட்டு மற்றும் கனம் பெற்றுக்கொள்ளும் காரணங்களுக்காக மாறு பாடானவைகளைப் பேசுவார்கள். ஆ! தெய்வீகக் கிருபையையும், நித்தியத்திற்குரிய ஜீவனையும் இழப்பது என்பது எத்துணைப் பெரிய விலை!
“”கொடிதான ஓநாய்கள்”” என்பது இரக்கமற்ற ஓநாய்களாகும். கொஞ்சக்காலம் இவர்கள் தங்கள் ஓநாய் சுபாவத்தை மூடிமறைத்துள்ள வெளிப்புறமான நடத்தையினாலும், வெளிப்புறமான அறிக்கையினாலும், செம்மறி ஆடுகளை ஏமாற்றிடலாம். மந்தையை வஞ்சிப்பதற்கான இவர்களது வெளித்தோற்றமான நடத்தையை, வேதவாக்கியங்களானது, “”ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டுள்ள ஓநாய்”” என்று குறிப்பிடுகின்றது (மத்தேயு 7:15,16). இவர்களது குணலட்சணமானது, செம்மறி ஆடுகளுக்கு வெளிப்படுவதற்கு வெகுக்காலத்திற்கு முன்னதாகவே, மேய்ப்பன் அவைகளை அறிந்திருப்பார். ஆனால் ஓநாய்களானது, மந்தையைக் கடிக்கவும், பட்சிக்கவும், சிதறடிக்கவும் துவங்குவது வரையிலும் சாதுவான மற்றும் கபடற்ற ஆடுகளானது வஞ்சிக்கப்பட்டே காணப்படும். கோபத்தின், துர்க்குணத்தின், பகைமையின், பொறாமையின், சண்டைச்சச்சரவின் ஊளைகளானது, வேதவாக்கியங்களில் “”மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகள்”” என்று குறிப்பிடப்பட்டுள்ளது – இவை நீதியின், சமாதானத்தின் மற்றும் அன்பின், கர்த்தருடைய ஆவியின் கிரியைகள் அல்ல – ஓநாயானது அதன் வாயினாலே தீங்கு செய்கின்றது; அதுபோலவே “”கொடிதான ஓநாய்களும்”” செய்கின்றன. புறங்கூறுதல், தூற்றுதல் மற்றும் சகல பொல்லாத கிரியைகளைச் செய்கின்றனர். எவற்றை எதிர்ப்பார்த்திடலாம் என்று எபேசுவின் மூப்பர்களை அப்போஸ்தலன் எச்சரித்தார் மற்றும் அவரது வார்த்தைகள் உண்மையாகவுமானது. “”இமெனே, அலேக்சந்தர், பிகெல்லு, எர்மொகெனே என்பவர்களுடைய நாமங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது (1 தீமோத்தேயு 1:20; 2 தீமோத்தேயு 1:15; 2:17). அதே கொள்கை இன்றளவும் கிரியைச் செய்கின்றது. அதே எச்சரிப்பிற்கு இன்றும் செவிக்கொடுக்கப்பட வேண்டும். ஆம் இது போன்றதான பல்வேறு அனுபவங்களானது, சுவிசேஷயுகம் நிறைவடைகின்றதும், நாம் இப்பொழுது ஜீவித்துக்கொண்டிருக்கின்றதுமான, “”பொல்லாத நாட்களில்”” சபை மீது வருமென வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன.
வசனம் 31-இல், அப்போஸ்தலன் இரண்டு காரியங்களை நமக்கு முன்வைக்கின்றார். இவ்வளவுக்குச் சித்தரிக்கப்பட்டுள்ளதான இந்தத் தீமைகளுக்கு எதிராய் முதலாவதாக மூப்பர்கள் விழித்திருக்க வேண்டும். அவர்கள் ஓநாய்களுக்கு எதிராய், மந்தையினுடைய நலனுக்கடுத்தவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். ஆடுகளில் யாரேனும் ஓநாயினுடைய வெறிக்கடியினால் (Rabies) வெறியடைந்து, ஜலபய வியாதிக்கான (hydrophobia) அறிகுறிகளை வெளிப்படுத்திடும் நிலை ஏற்படாதபடிக்கு, மூப்பர்கள் ஆடுகளுக்குப் புத்திமதி கூறிட வேண்டும்; ஒருவரையொருவர் புறங்கூறுதல் என்பது, ஜலபய வியாதியின் வழக்கமான அறிகுறியாகும் – இதோடுகூடச் சத்தியத்திற்கு அடையாளமான தண்ணீருக்கான தாகம் இருப்பது போன்று காணப்பட்டும், அதைப் பருகிடுவதற்கு மறுத்தல் – அதாவது அதற்கு எதிராய் மாறிவிடுதல் என்பதுமாகிய அறிகுறியும் காணப்படும்.
இரண்டாவதாக மூப்பர்கள் தங்கள் மத்தியிலிருந்து, நிச்சயமாக எழும்புபவர்களுக்கு எதிராகவும் கண்காணித்துக்கொள்ள வேண்டும். சரியாய்க் கண்காணித்தல் என்பது, நம்முடைய சொந்த இருதயங்களில் துவங்குகின்றதாயிருந்து, “” ஆண்டவரே நானோ?”” என்று கேட்டிட [R4459 : page 254] வேண்டும். இப்படியாகக் கண்காணிக்கும்போது, இமெனேயும் பிலேத்துவையும் போன்றவர்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். மேலும் சரியாய்க் கண்காணித்தலானது, உரிய காலத்தில் அத்தகைய பாத்திரங்களை அடையாளம் கண்டு கொண்டு, அத்தகையவர்களை – அவர்களின் மீதான எந்தவொரு கசப்பின் காரணமாக இல்லாமல், மாறாக மந்தையினுடைய பாதுகாப்பிற்காக அத்தகையவர்களை வெளிப்படுத்திடும் (1 தீமோத்தேயு 1:20; 2 தீமோத்தேயு 1:15; 2:17).
இப்படியாகத்தான் தன்னுடைய நடத்தைக் காணப்பட்டதாக, பரிசுத்த பவுல் அடிகளார் சகோதரருக்கு நினைப்பூட்டினார் – அதாவது அவர்கள் மீதும், ஆசியா மைனரிலுள்ள சபைகள் அனைத்தின் மீதும் மிகுந்த அக்கறையும், கவலையும், கண்காணிப்பும் உள்ள ஒன்றாய்த் தன்னுடைய நடத்தைக் காணப்பட்டதாக அவர்களுக்கு நினைப்பூட்டினார். “”இரவும், பகலும் கண்ணீரோடு”” எனும் வார்த்தைகளானது – கிறிஸ்துவோடு ஆயிரம் வருடங்கள் ஆளுகை செய்திடும், கிறிஸ்துவினுடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தின் அங்கத்தினர்களாக
இருக்கப்போகின்றவர்களை அழைப்பதற்கும், ஆயத்தப்படுத்துவதற்கும் உதவி செய்யத்தக்கதாக, சபையின் மாபெரும் தலையானவரால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதான “”புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரரென,”” கர்த்தருடைய மந்தைக்கான கண்காணியென, உடன் மேய்ப்பனென, இராஜாதி இராஜனுடைய ஸ்தானாபதியென, தேவனுடைய ஊழியக்காரனெனத் தன்மீது காணப்படும் பொறுப்பினுடைய பாரத்தினைச் சரியாய் அவர் உணர்ந்து கொண்டிருந்ததைத் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.
அப்போஸ்தலனுடைய அறிவுரையின் இறுதி வார்த்தைகளானது, அப்போஸ்தலன் தன்னுடைய வார்த்தைகளானது, தனது இந்த உள்ளார்ந்த போதித்தல்களானது, மூப்பர்களைத் தங்களது பொறுப்புகள் குறித்து விழிப்பிற்குள்ளாக்குவது மாத்திரமல்லாமல், இப்படியாகச் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளதான ஆபத்தின் விஷயத்தில் எந்தப் பாதுகாப்பின் மீது தாங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்று விசாரித்திட அவர்களை வழிநடத்திட வேண்டும் என்று அப்போஸ்தலனின் எண்ணம் காணப்பட்டதாகத் தெரிகின்றது. நமது ஆசீர்வாதங்கள் அனைத்திற்கும் மகா மையமாகக் காணப்படுபவரும், நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் அளிப்பவருமான தேவன் நம்முடைய சார்பிலும், அவரது ஏற்பாடுகளுடன் ஒத்துழைப்பதற்கு நாடிடும் அனைவரின் சார்பிலும் காணப்படுகின்றார் எனும் உண்மையினிடத்திற்கு அப்போஸ்தலன் கவனத்தைத் திருப்புகின்றார்.
இன்னும் விவரிக்கும் வண்ணமாக, அவர் வேதவாக்கியங்களை, தேவனுடைய கிருபையுள்ள வசனத்தை, சுவிசேஷ செய்தியினைக் குறிப்பிடுகின்றார். தேவவசனமானது நம்மைக் கட்டியெழுப்ப முடிகிறதாகவும், அவசியமான குணலட்சணத்தினுடைய வளர்ச்சியினைக் கொடுக்க முடிகிறதாகவும், இந்தச் செய்தியினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் யாவருக்குமாக தேவன் வைத்துள்ளதான மாபெரும் சுதந்தரத்தில், நமக்கு ஒரு பங்கினை இறுதியில் கொடுக்க முடிகிறதாகவும் காணப்படுகின்றது என்று அவர்களுக்கும் மற்றும் நமக்கும்கூட அவர் கூறுகின்றார். இவை அனைத்தையும் இருதயத்தில் வைத்துக்கொள்வோமாக. தேவ வசனத்தைப் புறக்கணித்தல், அவரது வாக்குத்தத்தத்தைப் புறக்கணித்தல் என்பது, நமக்கான சோதனையைச் சகிப்பதற்கான பலத்தில் குறைவுப்பட்டிருப்போம் என்பதாகும். இது நம்மைக் குழப்பத்தக்கதாக, இருளுக்குப் பதிலாக வெளிச்சத்தையும், வெளிச்சத்திற்குப் பதிலாக இருளையும் சாத்தான் முன்வைத்திடுவதற்கு அவருக்குக் கதவைத் திறப்பதையும் குறிக்கின்றதாய் இருக்கும். மேலும், இதில் எச்சரிப்பாய் இருப்பதற்குக் கவனம் செலுத்தத் தவறினவர்கள் – ஆட்டினுடைய சத்தத்திற்கும், இரவில் ஊளையிடும் ஓநாயின் சத்தத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்ள முடியாத நிலைக்குப் போவதைக் குறிக்கின்றதாகிவிடும். மேலும், கர்த்தருடைய வார்த்தையாகிய எக்காளத்தைப் பற்றிப்பிடித்து ஊதுகிறவர்களுக்கும் மற்றும் மந்தையைப் பிரித்துத் தங்கள் பக்கமாக ஆடுகளை இழுத்துக்கொள்ளும் நோக்கத்திற்காக மாறுபாடானவைகளைப் பேசி ஆடுகளின் மத்தியில் பிரிவினைகளைக் கொண்டுவர நாடுபவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலைக்குப் போகின்றதைக் குறிக்கின்றதாகிவிடும்.
தவறு செய்யாதிருப்போமாக. கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் மத்தியில் பங்கு உண்டு அல்லது பங்கு இல்லை என்பதுதான் கேள்வியாகும். கொஞ்சத்தில் உண்மையுள்ளவன் கர்த்தரையும், பூமிக்குரிய மற்றும் ஆவிக்குரிய விஷயங்கள் தொடர்பான, அவருடைய சகல ஆசீர்வாதங்கள் தொடர்பான அவருடைய ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளுகிறவனாயிருந்து, தொடர்ந்து வைராக்கியத்துடன் காணப்பட்டு மேய்ப்பனின் பராமரிப்பைப் பெற்றுக்கொள்வான். ஆனால், ஏற்றகாலச் சத்தியத்தையும், இந்த அறுவடை காலத்தின் விசேஷமான ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவனோ ஆயத்தமற்றவனாயிருந்து, தன்னை வஞ்சிக்கவும், இழுத்துக்கொள்ளவும் நாடுபவர்களால் வஞ்சிக்கப்பட்டுப்போவான்.
[R4460 : page 254]
போரடிக்கிற மாடானது கூலிக்குப் பாத்திரமாய் இருப்பதுபோல, ஆவிக்குரிய விஷயங்களில் சபைக்கு ஊழியம் செய்த ஒருவன், தான் சேவித்தவர்களின் பூமிக்குரிய ஆசீர்வாதங்களின் ஒரு பங்கை நியாயமாய்ப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிசுத்த பவுல் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தான் பூமிக்குரிய விஷயங்களைப்பார்க்கிலும் மிக விலையேறப்பெற்ற ஆவிக்குரிய விஷயங்களில் சபைக்கு ஊழியம் செய்திருக்கிறபடியால், தன்னுடைய பூமிக்குரிய தேவைகளைச் சந்திப்பதில் சபை புரியும் ஊழியம் சிறு காரியமே என்றும் அப்போஸ்தலனாகிய பவுல் சுட்டிக்காட்டியுள்ளார். இவைகள் சபையாரால் கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான விஷயங்கள் என்று குறிப்பிட்டிருந்தாலும், அவைகளை அவர்களிடம் அப்போஸ்தலனாகிய பவுல் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த விஷயங்களைச் சரியான வெளிச்சத்தில் பார்ப்பது அவர்களுக்கு அனுகூலமாயிருக்கும். ஆனால் பூமிக்குரிய விஷயங்களில் தனக்கும், சத்தியத்தின் மற்ற ஊழியர்களுக்கும் உதவிகள் புரியும் தங்களுக்குரிய சிலாக்கியங்களை அவர்கள் பார்க்கத் தவறினாலும், இதனால் அவர் சத்தியத்தின் சேவையில் சுயத்தைப் பலிச்செலுத்துவதற்கும், சுயத்தை வெறுப்பதற்கும் அதிக வாய்ப்புகளைப் பெற்றதாக உணர்ந்திருந்தார். அவர்கள் செய்யத் தவறின விஷயங்களுக்காகக் கோபம்கொண்டு நீங்கள் என் பூமிக்குரிய தேவைகளைச் சந்திக்க மறுத்தபடியினால் நானும் உங்கள் ஆவிக்குரிய தேவைகளைச் சந்திக்க மறுக்கிறேன் என்று கூறவில்லை. மாறாக, அவருடைய எண்ணம் இப்படியாக இருந்தது:- இந்த அருமையான ஆடுகளுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் தேவையாய் உள்ளது. மேலும், அவர்களுக்கு அவைகளை அளிப்பதற்கான கர்த்தருடைய ஊழியக்காரனாகும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளபடியினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எந்த அளவிற்கு என்னிடம் சுயத்தைப் பலிச்செலுத்தலும், சுயத்தை வெறுத்தலும் காணப்படுகின்றதோ, அவ்வளவாய் அது நான் அவருக்காகவும், அவருடைய சத்தியத்திற்காகவும், அவருடைய மந்தைக்காகவும் கொண்டுள்ள அன்பை நிரூபிக்கின்றதாய் இருக்கும். மேலும் தம்முடைய பலியின் மூலமாய் ஆடுகளைச் சம்பாதித்த மாபெரும் மீட்பருக்கு ஒத்து நான் அதிகம் காணப்படுவதினால், மாபெரும் மேய்ப்பனின் கிருபையையும் நான் அதிகமாய் பெற்றுக்கொள்வேன் என்பதேயாகும்.
இவ்வாறாகத் தற்பெருமைக்காக அல்லாமல், அவர்களுடைய நலனுக்காக, கர்த்தருடைய உடன் மேய்ப்பனுக்குரிய சரியான குணலட்சணங்களை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளத்தக்கதாகத் தன்னுடைய நடத்தையின் மீது அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பினார். “”ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை”” என்று கூறினார் (அப்போஸ்தலர் 20:33). சொத்துக்களைக் குவிப்பதற்கோ அல்லது தற்கால ஜீவியத்தின் சொகுசுகளை அடைவதற்கோ அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுக்கு ஊழியம் புரியவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுடைய இருதயத்தையே இச்சித்தார். சபையின் மாபெரும் தலையோடு அவர்களை உறவிற்குள் கொண்டுவரும் சந்தோஷத்தையே அவர் இச்சித்தார். கிறிஸ்துவின் சரீர அங்கங்களை ஆயத்தப்படுத்துவதிலும், தேவனுடைய வார்த்தையில் வாக்களிக்கப்பட்டுள்ள மகிமையான விஷயங்களுக்கு அவர்களுடைய அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் உறுதிபடுத்திக்கொள்ள உதவுவதிலுமான புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரனான தனது சிலாக்கியங்களை அப்போஸ்தலர் பவுல் உணர்ந்திருந்தார்.
“”நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது”” (அப்போஸ்தலர் 20:34) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகின்றார். பரிசுத்த பவுலோடுகூடப் பிரயாணம் மேற்கொண்டவர்களில் சிலருக்குத் தொழில் தெரியாத காரணத்தினாலும், இலாபகரமான வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியாததாலும், அப்போஸ்தலனாகிய பவுலின் கூடாரஞ்செய்யும் தொழிலானது பல்வேறு கடலோரப் பட்டணங்களில் வரவேற்கப்பட்ட நிலையில் இருந்ததினாலும், பவுலின்மீது இந்தச் சகோதரர்கள் அவர்களின் பூமிக்குரிய மற்றும் ஆவிக்குரிய தேவைகளுக்குப் பெரிதளவில் சார்ந்திருந்தார்கள் என்பது தெரிகின்றது. அப்போஸ்தலர் பவுல் என்றுமே இதைக்குறித்து முறையிடவில்லை. இந்த வேதப்பகுதியிலும்கூட அவர் குற்றஞ்சாட்டவில்லை. மாறாக, கர்த்தருக்குப் பிரியமாய் இருக்கும் என்று தன்னால் நம்பப்பட்டதும், தன்னால் பின்பற்றப்பட்டதெனத் தான் நம்பினதுமான தகுதியான நடத்தையினை அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தார். அவர்களும் இதேவிதத்தில் சுயத்தைப் பலிச்செலுத்தி கர்த்தருக்காகவும், சபைக்காகவும், சத்தியத்திற்காகவும் அன்பின் ஆவியைக் கொண்டிருக்க வேண்டுமென்று தெரிவித்தார். இவ்விதமாக அவர்கள் தேவனுடைய இரக்கத்தின் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாகவும், அவருடைய மந்தையை உண்மையாய்க் கண்காணிக்கிறவர்களாகவும் இருக்க முடியும். இதையே அவர் 35-ஆம் வசனத்தில் தெரியப்படுத்துகின்றார். “”இப்படி பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றார்.