OV 212
“ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள். உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
(எரேமியா 31:15-17)
கர்த்தர் எரேமியா தீர்க்கத்தரிசி வாயிலாக, அவரை விசுவாசிக்கும் மற்றும் இறப்பினால் உண்டாகும் துக்கத்தில் காணப்படும் ஒவ்வொரு பெற்றோரின் இருதயங்களுக்கு ஆறுதலின் செய்தியை அனுப்பிவைக்கின்றார். “ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள். உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 31:15-17) என்று நாம் வாசிக்கின்றோம்.
இவ்வசனத்தின்மூலம் ஐந்து காரியங்கள் நம் கவனத்திற்கு வருகின்றன:-
முதலாவது: உலகம் முழுவதும் மரணத்தின் நிமித்தமான துக்கம் காணப்படுகின்றது; அப்போஸ்தலன் கூறுவதுபோன்று, “ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது” (ரோமர் 8:22).
இரண்டாவது: ஆறுதலின் விதமானது விவரிக்கப்பட்டுள்ளது – அது உயிர்த்தெழுதலின் நம்பிக்கையாகும், மரித்தவர்கள் உயிரடைவதன் நம்பிக்கையாகும் – “மரித்தவர்கள் மீண்டும் வருவார்கள்;” அவர்கள் மீண்டும் ஜீவனுக்குள் வருவார்கள்.
மூன்றாவது: மரணத்தில் நம் அன்புக்குரியவர்கள் சத்துருக்களின் தேசத்தில் காணப்படுகின்றனர்; அதாவது “பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு மரணம்” (1 கொரிந்தியர் 15:26) என்று அப்போஸ்தலன் கூறியுள்ளது போன்றதாகும்.
நான்காவது: தங்கள் பிள்ளைகளைச் சரியாய் வளர்த்திடுவதற்கான பெற்றோர்களின் பிரயாசங்களானது, பலனற்றுப்போவதில்லை”உன் கிரியைக்குப் பலனுண்டு.”
ஐந்தாவது: இவ்வசனத்தின் கடைசி அம்சம், ஆனாலும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமானது, இது கர்;த்தருடைய வார்த்தை என்பதாகும்; இது முறிக்கப்படமுடியாது – இவ்வார்த்தைகளானது இவ்விஷயம் தொடர்பான மனுஷருடைய வார்த்தைகளினின்று எவ்வளவுதான் வித்தியாசமாக இருப்பினும், இது நிச்சயமாய் நிறைவேறித் தீரும்.
——————————————————————————————————————————————————————————————————————————————————————–
இப்பொழுது இறுதியாக நம் சந்ததி அனைத்திற்குமான கர்த்தருடைய வார்த்தைகளுக்கும், குறிப்பாகப் பெற்றோர்களுக்கான அவரது வார்த்தைகளுக்கும்… “உன் கிரியைக்குப் பலனுண்டு” என்ற அவரது வார்த்தைக்கும் வரலாம். இது எத்தகைய ஓர் ஆசீர்வாதம் மற்றும் ஆறுதல் ஆகும்! இந்த வார்த்தைகளில், தங்கள் பிள்ளைகளை நடத்த வேண்டிய வழியில் பயிற்றுவிக்க நாடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள், அவர்கள் மிகவும் அன்புகூர்ந்த பிள்ளைகளை மரணத்தின் அம்புகள் தாக்கினபோது, மிகவும் காயமடைந்து, சோர்ந்துபோய்க் காணப்படுகையில், இத்தகைய பெற்றோர்களுக்கு எத்தகைய ஆறுதலும், ஊக்கமூட்டுதலும் காணப்படுகின்றது. இப்படி மரணத்தில் பறிக்கொடுத்திட்ட பெற்றோர்கள் “ஆ! என் அன்பும், என் அறிவுரைகளும், எனது தாய்க்குரிய பராமரிப்பும், எனது தகப்பனுக்குரிய பராமரிப்பும் / பிரயாசமும் வீணாகிவிட்டது” என்று சொல்லுவதற்கு ஏதுவாய் ஆரம்பத்தில் காணப்படுவார்கள். ஆனால் கர்த்தரோ: “இல்லை உன் கிரியைக்குப் பலனுண்டு” என்று கூறுகின்றார்.
உங்கள் பிரயாசங்களினுடைய பலனை நீங்கள் எதிர்க்காலத்தில் காண்பீர்கள்; அப்பொழுது நாம் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளலாம். நமது அன்புக்குரியவர்கள் நம்மோடுகூடக் காணப்படுவார்கள்; மேலும் இக்காலத்தில் பிள்ளைகளை நீதியின், சத்தியத்தின், நேர்மையின், பயபக்தியின் அடிப்படையில் வனைந்திடுவதற்குச் செலவிடப்படும் நேரமும், எடுக்கப்படும் பிரயாசமும் நிச்சயமாய் வீணாகாது. இந்தப் பிரயாசங்களுக்கு ஏற்ப, பிள்ளைகள் உயிர்த்தெழுந்து வருகையில் மனம் மற்றும் ஒழுக்கத்தின் வளர்ச்சியில் மிகவும் மேம்பட்டு உயிர்த்தெழுந்துவருவார்கள்; மேலும் இதற்கேற்ப அக்காலத்தில் கர்த்தர் பிள்ளைக்கு முன்பாக வைத்திடும் பிரம்மாண்டமான உயர்ந்த கொள்கைகளை மிக எளிமையாக அடைந்துவிடுவார்கள்.
இன்னொரு பக்கத்தில் தன் பிள்ளைகளைக்குறித்து அக்கறையற்றவர்களாகவும், பெற்றோரெனத் தன் சிலாக்கியங்கள் மற்றும் கடமைகளைப் புறக்கணித்தவர்களாகவும் காணப்பட்ட பெற்றோர், தன் பிள்ளைக்குத், தன்னால் எவைகளையெல்லாம் செய்திருக்க முடியும், ஆனால் தான் செய்யாமல் போயுள்ளதைக்குறித்து எதிர்க்காலத்தில் காண்கையில், தன் அசட்டைக்கான பலனைச் சந்தேகத்திற்கிடமின்றி அடைவான்.
மேலும் திவ்விய பிரமாணத்தின்படி, பெற்றோரெனத் தன் கடமையினை உண்மையாய் நிறைவேற்றியுள்ள ஒவ்வொரு பெற்றோரும், தன் கிரியைக்கான பலனைத் தன்னிலே அடைவான் என்றும், தனக்குரிய இந்தக் கடமையினை அசட்டைப்பண்ணியுள்ளதான ஒவ்வொரு பெற்றோரும், தன் கிரியைக்கான பலனைத் தன்னில் அடைவான் என்றும் உள்ளது. பிள்ளையை நடத்த வேண்டிய வழியில் பயிற்றுவிப்பதற்கும், கர்த்தருக்கான பயபக்தியிலும், கர்த்தருக்கேற்ற போதனையிலும் வளர்ப்பதற்கும் வேண்டி பிரயாசம் எடுப்பதன் வாயிலாகத் தன்னைத்தான் வளர்த்துக்கொள்வதற்காகப் பெற்றோருக்கு வரும் வாய்ப்பினைப் போன்று, வேறு மகா சிலாக்கியமோ அல்லது வாய்ப்போ இல்லை என்று யார்தான் உணராமல் இருந்திருப்பார்கள்!
மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கான ஒவ்வொரு பிரயாசத்திற்கும், அதிலும் விசேஷமாக உங்கள் சொந்த பிள்ளைகளுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு பிரயாசத்திற்கும் ஈடாக ஆசீர்வாதங்கள் உங்கள் சொந்த இருதயங்களில் உண்டாகும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையே. வருஷங்கள் கடந்து செல்லச்செல்ல இந்த ஆசீர்வாதம் ஆழமாகுவதாக.