R4977 (page 66)
“””நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெய்யைப்போல் இருக்கும்; அது என் தலையை நொறுக்கிப் போடுவதில்லை.”” – (சங்கீதம் 141:5; சரியான மொழியாக்கம்)
வேதவாக்கியங்களில் நீதிமான் என்ற வார்த்தையானது இரண்டு விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு விதத்தில் அது முற்றும் முழுமையான நீதியான நிலையைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; உதாரணத்திற்கு, “”அந்தப்படியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.”” நம்முடைய ஆதார வசனத்தில், நமது கர்த்தர் இயேசு குட்டுகிற நீதிமானாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இப்படியான விதத்தில் பார்க்கும்போது, சிட்சைகள் என்பது நமது கர்த்தரிடத்திலிருந்து வருகின்றதாய் இருக்கின்றது; மற்றும் சிட்சையைப் பெற்றுக்கொள்கின்றவன், இப்படியான கண்டித்தலிலுள்ள தேவனுடைய ஞானம், நீதி மற்றும் அன்பை அறிந்தவனாக, அதை உணர்ந்துகொண்டுள்ள நிலையில் ஏற்றுக்கொள்வான். ஆனால் இன்னொரு விதத்தில் நீதிமான் என்ற வார்த்தையானது, மனுக்குலத்திற்குப் பொருந்தும் வகையிலும் பயன்படுத்தப்படுகின்றது. வேதவாக்கியங்களில் பல்வேறு நபர்கள் நீதிமான்கள் என்று குறிப்பிடப் படுகின்றனர்; காரணம் அவர்கள் பூரணமானவர்கள் என்பதினால் இராமல், மாறாக அவர்கள் சரியான நோக்கமும், சரியான சித்தமும் உடையவர்களாய் இருந்து, தங்கள் நடக்கையில் தேவனுடைய ஆவியை,நீதியின் ஆவியை வெளிப்படுத்தினதினாலேயே ஆகும்.
இப்படியாக நீதிமான் என்ற இந்த வார்த்தையை, ஆதார வசனத்தில் பொருத்திப் பார்க்கும்போது, அது கர்த்தருடைய ஜனங்களாய் இருப்பவர்கள் அனைவரும் யாரை திருத்திட முயற்சிக்கின்றார்களோ, அவர்களுக்கு உதவியாகவும், அவர்களுடைய நன்மைக்காகவும் இருக்கும் வகையில், நீதியாய்க் கண்டித்தலையும், நெறிப்படுத்துதலையும் செய்யமுடிகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும்;; அதுவும் ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும், புத்துணர்வையும் கொண்டுவரும் விதத்தில் செய்ய முடிகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும்; அதுவும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நறுமணம் கொண்டுள்ள நறுமண எண்ணெய் போன்று இருக்கும் விதத்தில் செய்யமுடிகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இந்தக் கருத்துக்களை நம்முடைய மனங்களுக்கு முன்பாகக் கொண்டிருக்கும்போது, இதில் நமக்கு விலையேறப்பெற்ற படிப்பினைகள் கிடைக்கின்றதாய் இருக்கும். முதலாவதாக நாம் கர்த்தரிடமிருந்து வரும் சரிப்படுத்துதல்களை ஏற்றுக்கொள்பவர்களில் அடங்குகின்றவர்களாக இருத்தல் வேண்டும் மற்றும் ஏதேனும் காரியத்தில் நாம் தவறு செய்திருந்தால், அதனை சரிசெய்துகொள்வதில் மகிழ்ச்சியாய் இருப்பவர்களாக இருத்தல் வேண்டும்; அடுத்தப்படியாகக் கண்டித்தல் வழங்கப்படுவது ஏற்றதாக இருக்குமென்றால், அது பாதிப்பை ஏற்படுத்துகிற விதமாய் இராமல், மாறாக ஆவிக்குரியதாகவும், தூக்கிவிடுவதாகவும், புத்துணர்வு ஊட்டுவதாகவும் காணப்பட வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இப்படியாகக் காணப்பட வேண்டுமெனில், கண்டித்தல் என்பது அனுதாபத்துடன் / இரக்கத்துடன்கூடிய ஒன்றாகக் காணப்படவேண்டும். கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் மாம்சத்தில் விழுந்துபோனவர்களாகவும், ஆனால் கிறிஸ்துவில் புதுச்சிருஷ்டிகளாகவும் காணப்படுகின்றனர் என்றும், அவர்கள் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகள் என்றால் அவர்கள் கர்த்தருடைய மனதையும், அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருப்பார்கள் என்றும் நாம் நினைவில் கொண்டிருத்தல் வேண்டும். இந்த ஒரு கண்ணோட்டத்திலிருந்து கண்டித்தலை வழங்கக்கூடிய எந்த ஒரு சகோதரரும், தான் யாரைக் கண்டிக்கின்றாரோ அந்நபர் தீமையான நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதை அடையாளம் கண்டுகொண்டு, முடிந்தமட்டும் தயவாயும், இரக்கமாயும், உண்மை விவரங்களை விளக்கிக்கொடுப்பவராய்க் காணப்படுவார். இம்மாதிரியான கண்டித்தலானது திடீரென்று கொடுக்கப்படக்கூடாது; மற்றும் கண்டித்தலை வழங்கும் நபர், வழங்கப்படவேண்டிய தண்டனை மற்றும் அதற்கான ஏறற் வேளை முதலானவைகள் கர்த்தருக்குரியது என்பதையும் நிதானித்துக்கொள்ள வேண்டும். இப்படியாகவே நீதிமானாய்க் காணப்படும் யாவரும், மற்றவரைக் கண்டிக்கும்போது காணப்பட வேண்டும். ஜாக்கிரதையாய்க் கருதிக்கொண்டும், ஜெபத்தில் வைத்த பிற்பாடும்தான், கண்டித்தல் பண்ண வேண்டும் மற்றும் இப்படிக் கண்டிப்பதே ஒரு சகோதரனுக்கு (அ) சகோதரிக்கு உதவி செய்வதற்கு இருப்பதிலேயே மிகச் சிறந்த வழியாய் இருக்கும் என்ற முடிவிற்கு வந்த பிற்பாடே கண்டிக்க வேண்டும். இப்படியான நிலைமையில் கண்டிப்புகள் யாவும் கொடுக்கப்பட்டால், இது சாதாரணமாய் வழங்கப்படும் கண்டிப்புகளைக் காட்டிலும், மிகவும் உதவிகரமானதாகக் காணப்படும் என்று நம் அனைவராலும் ஒத்துக்கொள்ள முடியும்.
ஆதார வசனத்தில் இடம்பெறும் “”அது என் தலையை நொறுக்கிப்போடுவதில்லை”” என்பதான வார்த்தைகளானது, கண்டித்தல் துன்பத்தைக் கொடுக்கிறதாகவோ, நொறுக்கிப்போடுகிறதாகவோ காணப்படாமல், ஆசீர்வாதமாய்க் காணப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஒருவருடைய தலையை நொறுக்கிப்போடுதல் என்பது, அந்நபரைக் கொன்றுபோடுவதான காரியமாகும். மற்றவர்களுக்குப் பாதகம் ஏற்படுத்துவதற்கான (அ) மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான நோக்கத்திற்காக நீதிமான்கள் உலகத்தில் காணப்படாமல், மாறாக உலகத்தில் நன்மை புரிவதற்கான நோக்கத்திற்காகவே காணப்படுகின்றனர். மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றவர்கள், இப்படிச் செய்ததற்கு ஏற்ப அநீதிமான்களாய் இருப்பார்கள். தங்களால் கண்டிக்கப்படுபவர்களை நொறுக்கிப்போடத்தக்கதாக தங்களது விமர்சனங்களையும் / குற்றஞ்சாட்டுதல்களையும் மற்றும் கண்டனங்களையும் பயன்படுத்துகின்றவர்கள் நீதிமான்கள் அல்ல. இப்படிப்பட்டவர்கள் குற்றங்களைச் சரியாய் எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் அப்போஸ்தலனின், “”கடிந்துகொள்ளுதல்,”” “”கண்டனம் பண்ணுதல்”” முதலான வார்த்தைகள், தேவனுடைய ஜனங்கள் அனைவரிடமும் கூறப்படாமல், மாறாக மூப்பனாகிய தீமோத்தேயுவிடம் கூறப்பட்டதை அறிந்துகொள்ள வேண்டும். இதனால்தான் சாந்தகுணமுள்ள மனிதர்களாகவும், வளர்ச்சியடைந்துள்ள மனிதர்களாகவும், தங்களது சொந்த ஜீவியங்களையும், சொந்த நாவுகளையும் கட்டுப்படுத்தியுள்ள மனிதர்களாகவும் இருப்பவர்கள் மாத்திரமே மூப்பர்களாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்; இதினிமித்தம் இவர்கள் மற்றவர்களை நொறுக்கிப்போடுகின்றவர்களாய் இராமல், மாறாக இவர்களது கடிந்து கொள்ளுதலானது, மற்றவரைக் கர்த்தரிடம் நெருக்கமாய்க் கொண்டுவருவதற்கு நோக்கமாயும் மற்றும் இதற்கு உதவியாயும் மற்றும் உற்சாகமூட்டுகிறதாயும் மற்றும் துணைப்புரிகின்றதாயும் காணப்படும்.
முதிர்வயதுள்ளவரைக் கடிந்துகொள்ளாமல், அவரைத் தகப்பனைப்போன்று பாவிக்கும்படிக்கு, பரிசுத்தவனாகிய பவுல், தீமோத்தேயுவுக்குப் புத்திமதி கூறினபோது, அப்போஸ்தலன் இங்குச் சபையிலுள்ள மூப்பரைக் குறித்துக் குறிப்பிடாமல், மாறாக ஒரு நபரைக்காட்டிலும் வயதில் முதிர்ந்தவராய் இருப்பவரைக் குறித்துக் குறிப்பிடுகின்றார். உன்னைக்காட்டிலும் வயதில் முதிர்ந்தவரைக் கடிந்துகொள்ளாதே என்றும், அவரைத் தகப்பன்போன்று பாவிக்க வேண்டும் என்றும், இதுபோலவே முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய புருஷர்களைச் சகோதரர்கள்போலவும், பாலிய ஸ்திரீகளைச் சகோதரிகள் போலவும், நடத்தவேண்டும் என்றும் உள்ள விதத்தில் அப்போஸ்தலன் குறிப்பிடுள்ளார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், மற்றவர்களுடைய சுயாதீனங்களை நசுக்கிடுவதற்கோ (அ) மற்றவர்களை அச்சுறுத்துவதற்கென்றோ, சபையில் மூப்பர்கள் நியமிக்கப்படவில்லை. தயவு, காருண்யம் முதலானவைகளின் ஆவியே பரிசுத்த ஆவியாய் இருக்கின்றது. இவைகள் அல்லாத வேறே ஆவியில் ஒரு மூப்பர் கடிந்துகொள்வாரானால், அவர் தன்னால் கடிந்துகொள்ளப்படும் நபர் ஒரு குழந்தை அல்ல என்பதையும், அந்நபர் குழந்தை போன்று நடத்தப்படக்கூடாது என்பதையும், அந்நபர் கடிந்து கொள்ளப்படவோ (அ) தாக்கிப்பேசப்படவோ (அ) “”இவைகள் அனைத்துமே தவறு!”” என்று கூறப்படவோ கூடாது என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். ஞானமற்ற விதங்களில் வழங்கப்படும் கடிந்துகொள்ளுதலானது, பிரச்சனைக்கான பலமான காரணமாய் அமைகின்றது.
வயதில் முதிர்ந்த ஒருவர், ஒரு காரியத்தை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது என்று, வயதில் குறைந்த ஒரு நபர் எண்ணி, “”இவைகளையெல்லாம் நீங்கள் அறிய வேண்டியிருக்கிறது, நான் உங்களுக்குப் பாடம் புகட்டுகிறேன்”” என்று வயதில் குறைந்தவர் கூறுவதும், பொறுமையை இழந்துபோவதும், ஞானமுள்ள காரியமாகவோ (அ) இரக்கமுள்ள காரியமாகவோ (அ) தயவுள்ள காரியமாகவோ இருந்திடாது. இம்மாதிரியான ஆவியானது, அநேக இடங்களில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான நடக்கைகளுக்கு எதிர்மாறாகவே அப்போஸ்தலனுடைய புத்திமதி காணப்படுகின்றது மற்றும் அவர் இரக்கத்தையும், தயவையும், வயதை கருத்தில்கொள்ளும் தன்மையையும் மற்றும் இது விஷயத்தில் தேவையான அனைத்தையும் அறிவுறுத்துகின்றவராய்க் காணப்படுகின்றார். அநேக வேதவாக்கியங்களைப் பார்க்கும்போது, நம் நாட்களில் நாம் காணமுடியாத அளவு, முற்காலங்களில் குடும்பத்தின் மீதான ஓர் அனுதாபம் காணப்பட்டுள்ளது என்பது நிச்சயமே இதுவே அப்போஸ்தலனின் பின்வரும் வார்த்தைகளிலும் வெளிப்படுகின்றது. “”முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு”” (1 தீமோத்தேயு 5:1-2).
இன்றைய நாட்களில் அந்நியர்களிடம் மிகவும் பரிவுடன் / பண்பட்ட விதத்தில் நடந்துகொள்வதும், ஒருவருடைய சொந்த குடும்பத்தாரிடம் மிகவும் பரிவற்ற / பண்பற்ற விதத்தில் நடந்துகொள்வதும் வழக்கமாய்க் காணப்படுகின்றது; சிலர் வெளியாட்களிடம் மிகவும் பரிவுடன் / பண்பட்ட விதத்தில் நடந்து கொள்வார்கள், ஆனால் தாங்கள் யாருக்கு இரக்கமும், உதவியும் மற்றும் அனுதாபமும் காண்பிக்க வேண்டுமோ அத்தகையவர்களிடம் மிகவும் பரிவற்று/பண்பற்று நடந்துகொள்வார்கள். இதே கருத்தே, “”சகோதர சிநேகமுள்ளவர்களாய் இருங்கள்”” என்ற புத்திமதியில் வெளிப்படுகின்றது. ஆனால் இன்றைய நாட்களில் நீங்கள் உண்மையான நண்பர்களைத் தேடுகையில், நீங்கள் சொந்தக் குடும்பத்திற்குள் பெரும்பாலும் தேடிடுவதில்லை. இந்த விஷயத்தில் நம்முடைய வளர்ச்சி என்பது பரிணாம [R4978 : page 67] வகையாய் நிச்சயமாய்க் காணப்படுவதில்லை. தகப்பன், தாய், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அக்கறையுடனும், இரக்கத்துடனும், அன்புடனும் நடத்தப்பட வேண்டும். மேலும் இந்தக் கொள்கையானது விசுவாச வீட்டாரிடத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.
2 தீமோத்தேயு 4:2-ஆம் வசனத்தில், தேவனுடைய கிருபையின் ஊழியக்காரனாக அப்போஸ்தலன், சுவிசேஷம் அறிவிக்கப்படும் விஷயத்தில் அடங்கும் மூன்று அம்சங்களை அதாவது: (1) கண்டனம்பண்ணுதல்; (2) கடிந்துகொள்ளுதல்; (3) புத்திசொல்லுதல் எனும் அம்சங்களைக் குறித்து விவரிக்கின்றார். ஆனால் முதல் இரண்டு அம்சங்களைத் தாராளமாய்ப் பயன்படுத்தும் விஷயத்திற்கு எதிராக, கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் எச்சரிக்கப்படுவது பாதுகாப்பானதாகும். சரியாய்க் கண்டனம் பண்ண வேண்டுமெனில் இருதயமானது, அன்பினாலும், அனுதாபத்தினாலும் மிகவும் நிரம்பிக் காணப்பட வேண்டும்; இல்லையேல் கண்டனங்களும், கடிந்துகொள்ளுதல் களும் கூர்மையுடன் கடந்துவருகின்றதாய் இருந்து, நன்மையைப் பார்க்கிலும், பாதகத்தையே உண்டுபண்ணுகிறதாய் இருக்கும். இருதயம் முழுக்க அன்பினால் நிரம்பி இருந்தாலும், யாருக்கு உண்மையில் அவசியப்படுகின்றதோ, அப்படிப்பட்டவர்களுடைய நன்மைக்கு ஏதுவாக கடிந்துகொள்ளுதல்களையும், கண்டித்தல்களையும் பயன்படுத்த முடிகின்றதான மிகுந்த சீரான தலையும்கூட அவசியமாய் உள்ளது. இதில் தேவனுடைய ஜனங்கள், “”சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப்போலக் கபடற்றவர்களாகவும்”” காணப்பட வேண்டும். “”புத்திசொல்லும்”” வகை ஊழியமானது, பெரும்பான்மையான கர்த்தருடைய ஜனங்களினால் நன்கு பயன்படுத்தப்படலாம். இந்த வகை பிரயாசங்களும், மற்ற வகை பிரயாசங்களும், பொறுமையுடனும், நீடிய பொறுமையுடனும், சகோதர சிநேகத்துடனும் கையாளப்பட வேண்டும்.
“