R2880 – முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2880 (page 298)

முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்

HATED WITHOUT A CAUSE

ஆதியாகமம் 37:5-28

“அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமை கொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். தேவனோ அவனுடனேகூட இருந்தார்.”―அப்போஸ்தலர் 7:9,10

யாக்கோபினுடைய மிகுந்த பிரியத்திற்குரிய மனைவியாகிய ராகேல் மரித்துப்போய்விட்டாள், அவளுடைய முதல் பிறப்பாகிய யோசேப்பே, மற்றப் பத்து ஒன்றுவிட்ட உடன் பிறந்த சகோதரர்களைக்காட்டிலும் யாக்கோபினுடைய பிரியத்திற்குரியவராகக் காணப்பட்டார். பதிவை வைத்துப் பார்க்கும்போது, இந்த அன்பானது, யோசேப்பினுடைய தாயினிமித்தமாக மாத்திரமல்லாமல், யோசேப்புக் கொண்டிருந்த பரிவும், உயரிய குணலட்சணங்களும் விசேஷமாய் அவரது தகப்பனாருடைய கவனத்தை ஈர்த்தது மற்றும் தகப்பனுடைய பாசத்தையும் வென்றது என்றும் நாம் எடுத்துக்கொள்வது நியாயமானதே. யோசேப்பு யாக்கோபினுடைய முதிர் வயதின் குமாரனாக இருந்தபடியினால், யாக்கோபு யோசேப்பிற்கு அநேக விதங்களில் தயவு பாராட்டிட விருப்பமுள்ளவராகக் காணப்பட்டார் மற்றும் குமாரர்கள் அனைவரின் மத்தியிலும் யோசேப்பிற்கு விலையுயர்ந்த வஸ்திரத்தை / அங்கியைப் பெரிதும் முயன்று வாங்கிக்கொடுத்தார்; இந்த வஸ்திரமானது அக்காலக்கட்டத்தில் சிறந்த ஒன்றாயிருந்தது மற்றும் இதைப் போன்ற வஸ்திரமானது பென்னி – காசனின் எகிப்திலுள்ள கல்லறையில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது; அது “பல்வேறு நிறங்களிலுள்ள சிறுசிறு துண்டு பகுதிகள் ஒன்றாய் இணைத்துத் தைக்கப்பட்டுள்ள, [R2880 : page 299] பல வருணங்களும், சித்திரங்களும் உடைய நீண்டதும், அதிகமான சித்திர தையல்கள் உள்ளதுமான வஸ்திரங்களாய் இருந்தன.” எகிப்தினுடைய இராஜாவினால் அன்பளிப்பாக அனுப்பப்பட்ட இத்தகைய அங்கி ஒன்றைக் குறித்து ஹெரோட்டஸ் அவர்கள் பின்வருமாறு விவரிக்கின்றார், “பல்வேறு விலங்குகளின் உருவங்கள் துணியில் பொன்னினால் சித்திரத்தையலிடப்பட்டிருந்தது.”

தன்னுடைய இந்தப் பாரபட்சமானது, எந்த அளவுக்குத் தன்னுடைய மற்றக் குமாரர்களிடத்தில், யோசேப்பிற்கு எதிராகப் பொறாமை மற்றும் பகைமையின் எண்ணத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது என்பதை அநேகமாக யாக்கோபு உணர்ந்து கொள்ளவில்லை; இன்னுமாகக் குணலட்சணங்கள் வளருதல் தொடர்புடைய விஷயத்தில், இம்மாதிரியான (பாரபட்சம் காணப்பட்ட) சூழ்நிலைகளின் கீழ், யோசேப்பு வீட்டிலேயே தங்கியிருந்த காரியமானது, யோசேப்பிற்கு நன்மையாக இருந்திருக்குமோ என்று நமக்குக் கேள்வி எழும்பலாம்; ஏனெனில் மிகுதியான பாரபட்சத்தினாலும், செல்லமான வளர்ப்பினாலும் பேரப்பிள்ளைகள், பாட்டி, தாத்தாவினால் கெடுக்கப்படுவதற்கும், பாரபட்சம் காட்டப்படும் பிள்ளையினிடத்தில், பெருமையின் சிந்தை வளர்த்திடுவதற்கும் மற்றும் இந்தச் சிந்தை பிள்ளையை ஜீவியம் முழுவதும் பாதிப்பிற்குள்ளாக்குவதற்கும் வாய்ப்புள்ளது என்பதினால், யோசேப்பும் இப்படியாகச் சீரழிக்கப்பட்டிருப்பாரோ என்று நமக்குக் கேள்வி எழும்பலாம்.

யோசேப்பினுடைய தகப்பன் காட்டின பாரபட்சத்தின் நிமித்தமான, யோசேப்பினுடைய சகோதரர்களின் பொறாமையானது, யோசேப்பின் இரண்டு சொப்பனங்களினால் இன்னமும் அதிகமானது; இந்த இரண்டு சொப்பனங்களையும் யோசேப்பு கபடற்ற நிலைமையிலும், எளிமையுடனுந்தான் தன்னுடைய சகோதரர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஒரு சொப்பனத்தில் யோசேப்பு வயலில் யாக்கோபின் குமாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக மொத்தம் பன்னிரண்டு அரிக்கட்டுகள் காணப்பட்டதாகவும் மற்றும் பதினொன்று அரிக்கட்டுகள், தன்னுடைய அரிக்கட்டிற்கு முன்னதாக வணங்கி நின்றதாகவும் கண்டார். மற்றொரு சொப்பனத்திலோ, யோசேப்பு சூரியன், சந்திரன் மற்றும் பதினொரு நட்சத்திரங்களும் தன்னை வணங்கி நின்றதாகக் கண்டார். யோசேப்பைக்காட்டிலும் மூத்தவர்களாகிய அவரது சகோதரர்கள், தங்களைக் காட்டிலும் யோசேப்பு உயர்வடைவது பற்றின எண்ணங்களினால் ஆத்திர மூட்டப்பட்டவர்களாக இருந்தனர்; இன்னுமாக யோசேப்பு அவருடைய பெற்றோர்களைக் காட்டிலும் பெரியவராகவும், அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் பெரியவராகவும் இருக்கப் போகின்றார் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் வண்ணமாக அந்தச் சொப்பனம் காணப்பட்டப்படியால், யோசேப்பினுடைய தகப்பன்கூட அந்தச் சொப்பனத்திற்கு அர்த்தம் இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்க மறுத்தார். அநேகமான சொப்பனங்கள் கற்பனைகளாகவும், பேராசைகளாகவும் காணப்பட்டாலுங்கூட, யோசேப்பினுடைய இந்தச் சொப்பனங்களானது, அவருடைய கற்பனைகளும், பேராசைகளுந்தான் என்று நாம் எண்ணக்கூடாது; மாறாக இந்தச் சொப்பனங்களானது, தீர்க்கத்தரிசனமானவைகள் என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும்; அதாவது யோசேப்பினுடைய வாழ்க்கைத் தொடர்புடைய விநோதமான சூழ்நிலைகள் அனைத்திலும் கர்த்தருடைய கரம் காணப்பட்டிருந்தது என இறுதியில் யாக்கோபும், யோசேப்பும், அவருடைய சகோதரர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக தேவன் எதிர்க்காலத்தைக் குறித்து முன்னறிவித்தவராக இருந்தார் எனும் விதத்திலும், இன்னுமாக தேவன் அனைத்தையும் முன்னறிந்தவராக, அனைத்தையும் இறுதியில் நிகழ்ந்தது போல நடைபெறச் செய்திட்டார் எனும் விதத்திலும் இந்தச் சொப்பனங்களானது, தீர்க்கத்தரிசனமானவைகள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது கர்த்தர் மற்றும் அவரது அனுபவங்கள் பற்றியதான தீர்க்கத்தரிசனமான அறிவிப்புகள் போன்றே, யோசேப்புப் பற்றின இந்த முன்னறிவிப்பானது, பாடங்கள் புரிந்துகொள்ளும் காலங்களில், அப்பாடங்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மிகவும் நம்பத்தகுந்ததாகவும் ஆக்குகின்றன. யாக்கோபும், அவருடைய குடும்பமும், எகிப்தின் பிரபுவாகிய யோசேப்பிற்கு முன்பாகச் சென்று, இராஜாவுக்கு மரியாதைச் செலுத்துவது போன்று, யோசேப்பிற்கு மரியாதைச் செலுத்தின போது, அந்தச் சொப்பனங்கள் நிறைவேறினது.

பொறாமையை, அப்போஸ்தலன் மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகளில் ஒன்று என வகைப்படுத்தினது சரியே (கலாத்தியர் 5:19-21). இந்த விதையானது, இது வேர்க்கொள்ளும் எந்த இருதயத்திலும் வேகமாக தழைத்தோங்குகின்றது மற்றும் இது எத்தகைய கசப்பான பலனைக்கொடுக்கும் என்று யாரால் சொல்லக்கூடும்? அந்தச் சகோதரர்களுடைய இருதயத்தில் பொறாமை அத்து மீறி வளர்ந்திருந்தபடியால் யோசேப்பு தன்னுடைய தகப்பனிடமிருந்துள்ள செய்தி ஒன்றுடன், தோத்தானிலுள்ள வயல்வெளியில், அவர்களிடத்திற்கு வந்த போது, அவர்களது பொறாமை எல்லை கடந்துசென்று, அவர்கள் யோசேப்பைக் கொலைச் செய்வதற்குத் திட்டமிட்டனர். பின்னர் அவர்களில் ஒருவரான ரூபனுடைய ஆலோசனையின் பேரில், யோசேப்பினுடைய ஜீவன் தப்புவிக்கப்பட்டது; யோசேப்பு பட்டினியில் கிடந்து மரித்துப்போகத்தக்கதாக, வறண்ட கிணற்றிற்குள்ளாகப் போடப்பட்டார். ரூபன் யோசேப்பை விடுவிக்க வேண்டுமென முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். பின்னர் யோசேப்பின் சகோதரனாகிய யூதாவினுடைய ஆலோசனையின் பேரில், யோசேப்பினுடைய ஜீவனானது குழியினின்று தப்புவிக்கப்பட்டது மற்றும் எகிப்திய சந்தையில் அடிமையாகக் கொண்டுபோகப்படத்தக்கதாக, சில வியாபாரிகளாகிய பயணிகளிடத்தில் யோசேப்பு விற்கப்பட்டார்; பிற்பாடு இந்த எகிப்தில் தான் யோசேப்பு, போத்திபாரின் வீட்டில் ஊழியக்காரனாகப் பணி அமர்த்தப்பட்டார். இந்தச் சகோதரர்களுடைய இருதயங்கள் எவ்வளவு கடினமாய்க் காணப்பட்டிருக்க வேண்டும் மற்றும் தன்னுடைய தகப்பனுடைய செல்லப் பிள்ளையாகக் காணப்பட்ட யோசேப்பினுடைய இருதயமானது எவ்வளவு கடும்வலி அடைந்திருக்க வேண்டும் மற்றும் எவ்வளவு திகைத்துப் போயிருந்திருக்க வேண்டும்! யோசேப்பினுடைய கண்ணீர்களைக் குறித்தோ, அவர் கெஞ்சினது குறித்தோ, இவைகளுக்கு எல்லாம் அவரது சகோதரர்கள் மறுத்தது குறித்தோ நமக்குப் பதிவுகள் எதுவும் தெரிவிப்பதில்லை, ஆனால் இவைகள் குறித்து ஆதியாகமம் 42:21-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் (யோசேப்பின் விஷயத்தில்) குற்றம் புரிந்திருந்த சகோதரர்கள், பிரச்சனையில் காணப்பட்டப்போது, “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக் கொண்ட போது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவி கொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக் கொண்டார்கள்” (ஆதியாகமம் 42:21).

யாரொருவர் தன்னுடைய இருதயத்தில் பொறாமை, பகைமை (அ) வன்மமானது ஓரளவில் இருப்பதைக் காண்கின்றாரோ அவர் சத்துருவுக்கு, தான் புகலிடம் கொடுத்திருக்கின்றார் என்றும், இந்த ஆவியானது, சில சந்தர்ப்பங்களில் உடனடியாகக் கொலைப்பாதகத்தின் ஆவியாக மாறும் என்றும் அறிந்து கொள்ள வேண்டும். ஆகையால் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகப் புதிய சிருஷ்டியாகியுள்ள அனைவரும் தீமையின், பகைமையின், பொறாமையின், வாதின் (சண்டையின்) ஆவியை அழித்திடுவதற்கும், கொன்றுபோடுவதற்கும், புதைத்துப்போடுவதற்கும், களைந்துவிடுவதற்கும் மற்றும் கர்த்தருடைய ஆவியின் மறுரூபப்படுத்தும் தாக்கத்தின் மூலமாக, அதிகமதிகமாய், நாளுக்கு நாள், அன்பின் ஆவியை, கிறிஸ்துவின் ஆவியைத் தரித்துக் கொள்வதற்கும் அப்போஸ்தலன் பரிந்துரைக்கின்றார். யோசேப்பினுடைய சகோதரர்களின் அனுபவங்களில் நம்மால் ஒரு பாடத்தைப் பார்க்க முடிகின்றது: அதென்னவெனில் (இச்சம்பவத்தில் நடந்த அளவுக்கு) பொறாமையானது நம்மை இவ்வளவாய் நடத்திச் செல்லவில்லை என்றாலும், இச்சம்பவமானது பொறாமையினுடைய போக்கிற்கான உதாரணமாக / விளக்கமாகக் காணப்படுகின்றது மற்றும் பொறாமையை நாம் வெறுக்க வேண்டும் மற்றும் வெறுப்பதற்கேற்ப, அதை நம்முடைய இருதயங்களிலிருந்தும் ஒழித்துக்கட்டவும் வேண்டும் என்பதாகும்.

இப்பாடத்தினுடைய பிரதான பாடம், தெய்வீகச் செயல்பாடு பற்றியது ஆகும். இது இந்தச் சுவிசேஷ யுகத்திலுள்ள தேவனுடைய பிள்ளைகளுக்கு, “தேவனை அன்புகூருபவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடந்தேறும்” எனும் கர்த்தருடைய வார்த்தைகளை நினைப்பூட்டுகின்றது. இது சூழ்நிலைகள் அனைத்தும் நமக்கு எதிராகக் காணப்பட்டாலுங்கூட, நாம் தெய்வீக வல்லமை, ஞானம் மற்றும் அன்பின் மீது எவ்வளவு முழுமையாகச் சார்ந்திருக்கலாம் என்பதை நமக்குக் கற்றுத்தருகின்றது மற்றும் தேவன் நம் பட்சத்தில் இருந்தால், எப்படி நம்முடைய சத்துருக்களின் வல்லமைகள் அனைத்தும், நமக்கு உண்மையாகப் பாதிப்பை / தீங்கை ஏற்படுத்தும் விஷயத்தில் ஒன்றுஞ்செய்ய இயலாதவைகள் என்றும் நமக்குக் கற்றுத் தருகின்றது (ரோமர் 8:31). கொலைப்பாதகத்தின் ஆவியானது, ஒன்பது சகோதரர்களிடத்தில் இருந்தது என்பது தெளிவாகத் தெரிகின்றது மற்றும் கர்த்தர் காரியங்களை வழிநடத்தவில்லை என்றால், அவர்களில் சிலர் உடனடியாகவே யோசேப்பைக்கொன்று போட்டிருப்பார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் இந்த ஒரு வழி மாத்திரமே யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுவருவதற்கும், எகிப்தியர்களுக்கு அவர்களின் பஞ்சத்தின் போது (ஆகாரம் வழங்கும்) ஜீவன் கொடுப்பவராகவும், இஸ்ரயேலர்களுக்குங்கூட ஜீவன் கொடுப்பவராகவும் யோசேப்புக் காணப்படத்தக்கதாக, யோசேப்பை அரியணைக்குக் கொண்டுபோவதற்கும், மற்றும் இப்படியாக எகிப்தில் முழு இஸ்ரயேல் ஜனங்களும் அடிமைத்தனத்திற்குள் போய்க் கற்பிக்கப்படுவதற்கும், எகிப்தியர்கள் அறிந்திருக்கும் கலைகளைக் கற்றுக்கொள்வதற்கும் வேண்டி, கொண்டுவரப்படுவதற்கும் மற்றும் இறுதியில் தேவன் அவர்களை விடுவித்ததுபோன்று விடுதலைப்பண்ணுவதற்கும், தேவனிடம் இருந்ததென நாம் எண்ணிக்கொள்ளக்கூடாது (ஆதியாகமம் 41:40). சர்வவல்லமையுள்ள தேவன், சர்வ ஞானமுள்ளவராகவும், சர்வ ஆற்றலுள்ளவராகவும் இருக்கின்றார் என்றும், தமது நோக்கத்தை நிறைவேற்றிடுவதற்கு அவரால் பல வழிகளைத் தெரிந்துகொண்டிருக்க முடியும் என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். இப்பாடமானது, தேவன் தம்முடைய ஞானத்தின் மூலமாகப் பொல்லாத மனிதர்களுடைய சதிகளை ஜெயிக்க முடிபவராக மாத்திரமல்லாமல், அவர்களின் தீமையான கிரியைகளை, தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதிலும், தம்முடைய திட்டங்களை நடந்தேற்றுவதிலும், தாம் வழிநடத்துபவர்களை ஆசீர்வதிப்பதிலும் பயன்படுத்துவதற்கும் முடிபவராகக் காணப்படுகின்றார் என்பதற்கான உதாரணமாய்க் காணப்படுகின்றது. இப்பாடத்திலிருந்து தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள், அதாவது உத்தம ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் அனைவரும், விசுவாசத்திற்கான மாபெரும் உந்துதலை அடைவார்களாக மற்றும் முன்பில்லாத அளவுக்குக் கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் அதிக பலமாயும், முழுமையாயும் சார்ந்திருப்பார்களாக. பூமிக்கடுத்த மற்றும் ஆவிக்குரிய காரியங்களுக்கடுத்த நம்முடைய நலன்களில், கர்த்தர் பொறுப்பேற்றுள்ளார் என்பதை நாம் விசுவாசத்தின் மூலமாக உணர்ந்துகொள்ள முடிகையில், இதினிமித்தம் எத்துணை சமாதானமும், எத்துணை சந்தோஷமும், எத்துணை ஆறுதலும் கடந்துவருகின்றது!

கொலைப் பண்ணுவதற்குத் திட்டம் போடுபவர்களும், பொறாமையினாலும், வன்மத்தினாலும், பகைமையினாலும் முழுக்க நிரம்பியிருப்பவர்களும், தங்கள் தீய வழிகளை, வஞ்சகத்தினாலும், மோசடியினாலும், பொய்யினாலும் / ஏமாற்றுத்தனத்தினாலும் ஆதரிப்பதற்குத் [R2880 : page 300] தயக்கம் காண்பிக்கமாட்டார்கள். இப்படியாகவே யோசேப்பினுடைய பத்துச் சகோதரர்களின் விஷயத்திலும் காணப்பட்டது. அவர்கள் யோசேப்பினுடைய பலவருண அங்கியை எடுத்துக்கொண்டு, அதை இரத்தத்தில் தோய்த்து, தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்திற்கு, வேறு ஆள் மூலம் அனுப்பி வைத்தார்கள். யாக்கோபும் அவர்கள் மேல் சந்தேகங்கொள்ளாமல், தன்னுடைய பிரியமுள்ள குமாரன் காட்டு மிருகத்தினால் கொடூரமாகப் பட்சிக்கப்பட்டுள்ளார் என்ற கருத்தை உடனடியாக ஒப்புக்கொண்டு, வருடக்கணக்காக யோசேப்பினுடைய இழப்பினிமித்தமாக துக்கம் கொண்டாடினார்; யாக்கோபினுடைய மற்றக் குமாரர்கள், அவரை ஆறுதல்படுத்த முற்பட்டும், முடியாமற்போயிற்று மற்றும் அவர்களும் தங்களுடைய கிரியையினிமித்தம் கடுந்துயரம் ஓரளவுக்கு அடைந்திருப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. தீமையின் இந்த அனுபவமானது அநேகமாக இறுதியில் யாக்கோபிற்கும், அவருடைய குமாரர்களுக்கும் நன்மைக்கேதுவானதாகவே இருந்திருக்கும், இதைப் பின் இடம்பெறும் சம்பவப் பதிவானது சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இங்கும் நமக்கு ஒரு படிப்பினை உள்ளது, அதாவது தீமையான தாக்கங்களுக்கு தங்களை ஒப்புக்கொடுப்பவர்கள், பிற்பாடு அதனின்று விலையேறப்பெற்ற படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வார்கள் மற்றும் அவர்கள் நீதியினிடத்திற்குத் திரும்புவார்கள் என்று நாம் நம்பிக்கைக்கொள்ளலாம் எனும் படிப்பினைகள் இங்குள்ளது. இதுவே வரவிருக்கின்ற ஆயிர வருட யுகத்தில், உலகத்தார் தொடர்புடைய விஷயத்தில் நம்முடைய நம்பிக்கையாய் இருக்கின்றது; அதாவது உலகத்தார் செய்த தவறுகளுக்குத் தண்டனைகள் சிலவற்றைப் பெற்றுக்கொண்ட பிற்பாடும் மற்றும் அக்காலத்தினுடைய நியாயத்தீர்ப்புகளின் கீழ் மிகவும் சிறந்த வழியைக் கற்றுக்கொண்ட பிற்பாடும், போகப்போக, பாவம், பகைமை, பொறாமை மற்றும் வாது சம்பந்தப்பட்ட தற்கால அனுபவங்கள், உலகத்தாருக்கு விலையேறப் பெற்றதாகத் தோன்றும் என்பது நம்முடைய நம்பிக்கையாய் இருக்கின்றது.

யோசேப்பு தன்னுடைய சகோதரர்களால் பகைக்கப்பட்டப்போது, அதுவும் முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டப்போது மற்றும் அவருடைய தகப்பனால், சகோதரர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோதே உருவகமாகக் கொல்லப்பட்டது போலவே, தம்முடைய சகோதரர்களாகிய யூதர்களிடத்தில், அவர்களுடைய நலனுக்காக, பிதாவின் பிரதிநிதியென வந்த இயேசுவும் முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார் மற்றும் உண்மையில் கொல்லப்பட்டார். எனினும் தெய்வீகச் செயல்பாட்டினால், இந்தப் பகைமையே, அவரைப் பூமியின் சிங்காசனத்திடத்திற்கும், [R2881 : page 300] வல்லமையின் / அதிகாரத்தின் ஸ்தானத்தினிடத்திற்கும் இறுதியில் கொண்டு வந்து, அனைத்து உணவின், அதாவது, “ஜீவ அப்பத்தின்” மீதும் அவருக்கு அதிகாரம் கொடுத்து மற்றும் இவ்வாறாக எகிப்தியர்களால் அடையாளப்படுத்தப்படுகின்ற மனுக்குலத்தின் உலகத்தாருக்கு மாத்திரமல்லாமல், அவருடைய சகோதரர்களாகிய யூதர்களுக்கும், அக்காலத்தில் முன்வைக்கப்படும் பொதுவான நிபந்தனைகளின் பேரில் ஜீவ அப்பத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் மறைமுகமாக அவரை ஜீவனளிப்பவராக ஆக்கிற்று.

“அவர் இருந்த பிரகாரமாகவே,” அவருடைய சரீரத்தின் அங்கங்களாகவும், இப்பொழுது அவரது மாம்சீகப் பிரதிநிதிகளாகவும் காணப்படும், “நாமும் இவ்வுலகத்தில் இருக்கின்றோம்” மற்றும் நாம் உண்மையுள்ளவர்களாகக் காணப்பட்டோமானால், நாம் இறுதியில் சிங்காசனத்தில் அவருடன் உடன் சுதந்தரர்களாகவும், மரித்துக் கொண்டிருக்கும் உலகத்தாருக்கு அவரோடுகூட ஜீவனை வழங்குபவர்களாகவும் இருப்போம் (1 யோவான் 4:17).

ஆகையால் நாம் உலகத்தால் பகைக்கப்படுவதைக் காணும்போது, நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை, ஏனெனில் ஆண்டவர் கூறியுள்ளது போன்று, “அவர் நிமித்தம் பலவித தீமையான மொழிகள் நம்பேரில் பொய்யாய்ச் சொல்லப்படும்.” “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” என்ற அவருடைய வார்த்தைகளையும் நாம் நினைவில் கொள்வோமாக (யோவான் 15:18,19).

நம்முடைய ஆண்டவர் முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டது போன்று, நம் விஷயத்திலும் காணப்படுவதாக; அதாவது நமக்கு எதிராக பொழியப்படும் பொறாமையும், கொலைப்பாதகமும், பகைமையும், வன்மமும், கூடுமானவரை முழுக்க நம்மால் (நம்முடைய செயல்பாடுகளினால்) உண்டானதாகக் காணப்படக்கூடாது; அதாவது கூடுமானவரை நம்முடைய ஜீவியங்கள் தூய்மையானதாகக் காணப்பட வேண்டும்; அதாவது கூடுமானவரை நம்முடைய எண்ணங்களும், வார்த்தைகளும், கிரியைகளும், நம்முடைய கர்த்தருடைய புண்ணியங்களை அறிவிக்கின்றதாகவும் மற்றும் சகல மனுஷரிடத்திலும், அதிலும் விசேஷமாக விசுவாச வீட்டாரிடத்திலான நம்முடைய அன்பைத் தெரிவிக்கின்றதாகவும் காணப்பட வேண்டும். போகப்போக, சபை மகிமைப்பட்டிருக்கும் போது, புதிய யுகம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் போது, இப்பொழுது எதிராளியானவனால் குருடாக்கப்பட்டுள்ள காரணத்தினாலும், அவனால் தவறாய் வழிநடத்தப்பட்டுள்ள காரணத்தினாலும் நம்மைப் பகைக்கின்றவர்கள், கர்த்தருடைய அபிஷேகிக்கப்பட்டவர்களாகிய நம் முன் வணங்குவார்கள் மற்றும் அவர்களைத் தூக்கிவிடுவதற்கும், அவர்களை ஆசீர்வதிப்பதற்கும், அவர்களை உற்சாகமூட்டுவதற்கும், அவர்களை மன்னிப்பதற்கும் மற்றும் அவர்கள் தேவனுடைய சாயலுக்கும், ரூபத்திற்கும் திரும்பக் கொண்டுவரப்படத்தக்கதாக நாம் அவர்களுக்கு உதவுவதற்குமுரிய மாபெரும் விருப்பமுள்ளவர்களாகக் காணப்படுவோம்.

நம்முடைய ஆதார வசனத்தில் இடம்பெறும், “தேவனோ அவனுடனேகூட இருந்தார்” எனும் முக்கியமான வார்த்தைகளைக் கவனிப்போமாக. ஜீவியத்தின் வெற்றியானது, பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கப்படுகின்றது. மாவீரன் அலெக்சாண்டர், சீசர், பிரபலமிக்க இராஜாக்கள், சக்கரவர்த்திகள் மற்றும் தளபதிகள் அல்லது இராஜ்யங்களுக்குப் பணங்களைக் குவித்தவர்களாகிய குரோசியஸ், கார்நெசியி முதலானவர்களே வெற்றிகரமான ஜீவியங்கள் வாழ்ந்துள்ளதாக, சிலர் கருதுகின்றனர். ஆனால் இவர்கள் எவர்களுடைய தகுதிகளையும், அறக்கொடைகளையும் நாம் அலட்சியப்படுத்தாமல், மகத்துவம் குறித்து வித்தியாசமான புரிந்துகொள்ளுதலை உடையவர்களைக் குறித்தே, அதாவது வேதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மகத்துவத்தின் தெய்வீகக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களாகிய ஆபிரகாம், யோசேப்பு, மோசே, யோபு, தாவீது, பரிசுத்த தீர்க்கத்தரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் இவர்கள் அனைவருக்கும் மேலாக நமது கர்த்தர் இயேசுவையும் குறித்தே நாம் எழுதுகின்றோம். இவர்கள் ஒவ்வொருவருடைய வெற்றிக்கான இரகசியம், “தேவனோ அவனோடேகூட இருந்தார்” என்பதேயாகும்.

இதே கொள்கையானது, தெய்வீக ஊழியம் தொடர்புடைய அனைத்துக் காரியங்களிலும், இன்றும் உண்மையாகவே காணப்படுகின்றது; “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” எனும் கொள்கை இன்றும் உண்மையாகவே காணப்படுகின்றது. யூத யுகத்தின் போது, தேவனுடைய தயவோ, பூமிக்குரிய செழிப்பில் வெளிப்படுத்தப்பட்டது; ஆனால் இந்த யுகத்தில் அப்படியாகக் காணப்படுவதில்லை; அதாவது ஆவிக்குரிய செழிப்பினால் மாத்திரமே தேவனுடைய தயவானது சுட்டிக்காட்டப்படுகின்றதும், ஐசுவரியவான்களும், பிரபுக்களும் அழைக்கப்படாமல், பிரதானமாக இவ்வுலகத்தில் தரித்திரர்களாகவும், விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், இராஜ்யத்தின் சுதந்தரர்களாகவும் காணப்படுகின்றவர்கள் அழைக்கப்படுகின்றதுமான இந்த யுகத்தில் அப்படியாகக் காணப்படுவதில்லை. தேவன் நம் பட்சத்தில் இருந்தால் மற்றும் நம்முடன் இருந்தால், நமக்கு எதிராய் நிற்பவர்கள் யார்? அவர்களுடைய எதிர்ப்பானது என்னவாக இருந்துவிடும்? அவர்கள் (எதிர்ப்பவர்கள்) நமக்குத் துயரத்தையோ (அ) அசௌகரியங்களையோ ஏற்படுத்தலாம், ஆனால் நமக்குப் பாதிப்போ அல்லது நம்முடைய மேலான நன்மைகளுக்குப் பாதகமோ ஏற்படுத்திட முடியாது; ஏனெனில் சர்வ வல்லமையுள்ளவரோ, “தம்முடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்” என்று நமக்கு வாக்களித்துள்ளார் (ரோமர் 8:28).

தேவன் யாருடைய பட்சத்தில் காணப்படுகின்றாரோ மற்றும் தேவன் யாருடன் கூடக் காணப்படுகின்றாரோ மற்றும் யாரை ஆசீர்வதிக்கத்தக்கதாக தேவன் இப்படி ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் தலையிடுகின்றாரோ, அப்படிப்பட்டதான அந்த வகுப்பாருடைய பண்புகள் என்னவாக இருக்க வேண்டும்?

ஆ! அவர்கள் அவருடைய சொந்த ஜனங்கள் ஆவார்கள்; அவர்கள் நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களும், நீதிக்காக பக்திவைராக்கியமுள்ளவர்களும், தேவனுக்காகவும், அவரது தயவுகளுக்காகவும், பக்திவைராக்கியமுள்ளவர்களும், அவரது ஊழியத்திற்கும் மற்றும் அவரது அங்கீகரிப்பைப் பெற்றுக்கொள்வதில் பக்திவைராக்கியமுள்ளவர்களும், உண்மையுள்ளவர்களும், நம்பத்தகுந்தவர்களும், சாந்தமுள்ளவர்களும் ஆவார்கள். “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்” (1 யோவான் 3:2); நாம் நமது அருமை மீட்பருடைய அடிச்சுவடுகளை உண்மையாய்ப் பின் தொடருவோமானால், மாம்சத்திற்கேற்ப நடவாமல், ஆவிக்கேற்றப்படி நடப்போமானால், தேவனுடைய தயவும் நமக்குத் தொடர்ந்து காணப்படும் என்ற வாக்குத்தத்தங்களை நாம் பெற்றிருக்கின்றோம். ஆகையால் நாம் கனத்துக்குரிய பாத்திரங்களாயிருந்து, எஜமானுக்கு உபயோகமாகத்தக்கதாக நாம் நம்மைப் பொறாமையினின்று, வன்மத்தினின்று, சுயநலம் மற்றும் தற்பெருமையினின்று சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்வோமாக.
R2881 : page 301