R2902 (page 345)
யாத்திராகமம் 2:1-10
“பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” – ( நீதிமொழிகள் 22:6)
எல்லாக் குழந்தைகளும் மோசே போன்று பிறப்பதில்லை மற்றும் எந்த அளவிலான பயிற்சியும்கூட எவரையும் அவருக்குச் சமமாக்குவதில்லை. ஆதார வசனத்திற்கு ஆதாரமாகவே நாம் பேசுவோமே ஒழிய, அதற்கு எதிராக அல்ல; எனினும் மகத்துவமான குணலட்சணத்திற்கான அஸ்திபாரமானது பிறப்பிற்கு முன்னதாகவே போடப்பட வேண்டும். அநேகரால் செய்யப்படும் மாபெரும் தவறு ஒன்றுள்ளது – மேலும் அது தவறான இறையியல் கண்ணோட்டத்தினால் ஏற்பட்டதாகும் – அது என்னவெனில் ஒவ்வொரு குழந்தையும் தேவனுடைய விசேஷித்த சிருஷ்டியாகும்; ஆகையால் குழந்தையானது அறிவிலியாய் இருக்குமெனில் அதற்குக் காரணம் தேவனே ஆவார்; ஒருவேளை குழந்தையானது நன்கு புத்திகூர்மையானதாகவும், மனதளவிலும் சரீரளவிலும் சீரானதாகவும் இருக்குமானால், இதற்கும் தேவனே காரணமாவார் என்பதேயாகும். இதற்கு நேர் எதிர்மாறாக வேதவாக்கியங்களின் கூற்றுக் காணப்படுகின்றது… அதாவது தேவனுடைய கிரியை / வேலைப்பாடு பூரணமாயிருக்கின்றது என்றும், ஆதாம் அவரது கரத்தின் கிரியையாய் இருந்தார் என்றும், நம் இனத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்களையும் ஏறக்குறைய பாழாக்கிட்ட அபூரணங்களுக்கும், களங்கங்களுக்கும்/ குறைபாடுகளுக்கும் தேவன் பொறுப்பாளியல்ல என்றும் வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஒருவிதத்தில் பார்க்கையில், நாம் பெற்றிருப்பவைகள் அனைத்தும், அபூரணமாய்க் காணப்பட்டாலும்கூட, அவை தேவனுடையதேயாகும்; ஏனெனில் அவரே ஜீவன் அனைத்திற்கும் ஆதாரமாயும், மறைமுகமாய் நம் சிருஷ்டிகராகவும் காணப்படுகின்றார் (யாத்திராகமம் 4:11).
நம்முடைய குறைபாடுகள் – பாவத்தின் விளைவுகள் என்றும், அதன் மரணத்தண்டனையினுடைய இயல்பான செயல்பாடுகள், மரபியல் சட்டத்தின்கீழ் (தகப்பன் தன் தன்மைகளைப் பிள்ளைகளுக்குக் கடத்தும் சட்டத்தின்கீழ்) நம் இனத்தின்மீது செயல்பட்டுவருகின்றது என்றும் வேதவாக்கியங்கள் நமக்கு விவரிக்கின்றன. நாம் அனைவரும் பாவத்தில் பிறந்தோம்; துர்க்குணத்தில் உருவானோம்; நம் தாய் நம்மைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் (சங்கீதம் 51:5). ஆனால் நாம் அனைவரும் ஒரே அளவிலுள்ள சீரழிந்த நிலைமையில் பிறந்திடவில்லை. விழுந்துபோன பெற்றோர்களினால் பூரணமான குழந்தைகளைப் பிறப்பிக்க முடியாது என்றாலும், சிலசமயங்களில் தங்களைக் காட்டிலும் மேலான நிலையிலுள்ள பிள்ளைகளைப் பிறப்பிக்க முடியும் மற்றும் பிறப்பிக்கவும் செய்திருக்கின்றனர். இது பெற்றோர்களின் மனநிலையினை, அதிலும் விசேஷமாகக் கர்ப்பக்காலத்தில் தாயினுடைய மனநிலையினைத் தாக்கத்திற்குள்ளாக்கும் இயற்கை விதியினால் நடைபெறுகின்றது (தாயானவள் அவளது கணவனிடமிருந்துவரும் சாதகமான அல்லது பாதகமான மனம்சார்ந்த மற்றும் நன்னெறிச் சார்ந்த செல்வாக்குகளினால் எப்போதும் தாக்கத்திற்குள்ளாகுவாள்).
இந்தத் திவ்விய சட்டத்தின்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் காணப்படும் முக்கிய குணலட்சணத்தின் இயல்புகளுக்கு ஓரளவு பொறுப்பாளிகளாகக் காணப்படுகின்றனர். இக்காரியமானது பெற்றோர்களினால் மிகவும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படுமானால், மிகவும் முழுமையாக உணர்ந்துகொள்ளப்படுமானால் பிறக்கும் பிள்ளைகளின் இயற்கையான இயல்புகளில் பெரும்முன்னேற்றம் என்பதே விளைவாக இருக்கும். உயர்ந்த எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் இலட்சியங்களை மனைவி கொண்டிருப்பதற்குச் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்திடுவதற்குக் கணவன் முயற்சிப்பார்; மனைவி ஒத்துழைக்கிறவளாகவும், சிறந்த மற்றும் நல்ல மற்றும் தூய்மையான மற்றும் பெருந்தன்மையான காரியங்கள்மீது சாந்தத்தோடு தன் நாட்டங்களை வைத்திருப்பவளாக இருப்பாள்; இப்படியாக இருக்கும்பட்சத்தில் பிறக்கும் குழந்தையானது கிட்டத்தட்ட மோசேயைப்போன்று இருக்கும், அதாவது உயர்ப்பண்புகளையும், தாழ்மையையும் சேர்த்துப் பெற்றிருக்கும்.
இதில் எதுவும் இந்த “அறுவடையின் காலத்தில்” வாழ்ந்துகொண்டிருக்கும் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு ஊக்கப்படுத்தும் [R2902 : page 346] வண்ணமாய்ச் சொல்லப்படுகிறதில்லை. மாம்சத்தில் ஜெநிப்பிக்கப்பட்டதும், பிறந்ததும் மாம்சமாயிருக்கும் மற்றும் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டதும், பிறந்ததும் ஆவிக்குரியதாயிருக்கும் (யோவான் 3:6). ஒருவேளை பரிபூரண பிள்ளைகளைப் பெற்றெடுப்பது என்பது சாத்தியமான காரியமாய் இருக்க வாய்ப்புக் காணப்பட்டாலும்கூட, இதைக் காட்டிலும் இன்னும் உயர்வான மற்றும் பிரம்மாண்டமான வேலையினைக் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான “புதுச்சிருஷ்டிகள்” பெற்றிருக்கின்றனர். “புதுச்சிருஷ்டிகளை,” தேவனுடைய ஆவிக்குரிய குமாரர்களை வளர்த்திடுவதில் தேவனோடு ஒத்துழைத்திடும் சிலாக்கியத்தினை இவர்கள் பெற்றிருக்கின்றனர்; மேலும் நமது கர்த்தர் மற்றும் அப்போஸ்தலர்கள் போன்று இவர்களும் சிலாக்கியங்களிலேயே உயர்வான இந்தச் சிலாக்கியத்தினையே விரும்புகின்றனர். “விவாகம் யாவருக்குள்ளும் கனம்வாய்ந்தது” எனும் அப்போஸ்தலனின் வார்த்தைகளுக்கு எதிராக நாம் ஒருகணம்கூட வாதாடுகிறதில்லை மாறாக அவரோடுகூட நாங்களும்: “விவாகம்பண்ணுகிறவன் நல்லதைச் செய்கிறான்; விவாகம்பண்ணாதிருக்கிறவனும் அதைவிட நல்லதையே செய்கிறான்” என்றே வலியுறுத்துகின்றோம் (1 கொரிந்தியர் 7:38; எபிரெயர் 13:4). ஆகையால் சுபாவத்தின்படியான சிறந்த பிள்ளையைப் பிறப்பிக்கிறவன் நல்லதைச் செய்கின்றான்; ஆனாலும் ஆவிக்குரிய குமாரர்களுடைய ஜெநிப்பித்தலுக்காய்த் தேவனோடு ஒத்துழைக்கிறவன் அதைவிட நல்லதைச் செய்கிறவனாய் இருப்பான் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
மோசேயின் பிறப்பு மற்றும் குழந்தைப் பருவம் குறித்த தகவல்கள் மிகவும் சொற்பமானவையாய் இருக்கின்றது. இவரது தகப்பனின் பெயர் அம்ராம் ஆகும்; இதன் அர்த்தம் “உயர்ந்த ஜனம்” ஆகும். இவரது தாயாரின் பெயர் யோகெபெத்தாகும்; இதன் அர்த்தம் “யேகோவா மகிமையானவர்” ஆகும். இவர்கள் எபிரெயர்களாகவும், எகிப்தியர்களின் கீழ் அடிமைகளாகவும் இருப்பினும், இவர்களது பெயர்களானது, லேவி கோத்திரத்தின் இக்குடும்பத்தார் ஒழுக்கம்சார்ந்த, மதம்சார்ந்த உணர்வுகளை உடையவர்களாக – நற்குணமுள்ள ஜனங்களாகவே இருந்துள்ளதைச் சுட்டிக்காண்பிக்கின்றது. இது இவர்கள் விசுவாசத்தினால் செயல்பட்டார்கள் எனும் அப்போஸ்தலனின் அறிக்கையிலும் சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது (எபிரெயர் 11:23).
எபிரெயர்களின் தொகை வேகமாகப் பெருகிவரும் காரியமானது, அவர்களை அதிகாரமுள்ள சந்ததியாராக்கிடும் என்றும், அவர்கள் நம்பிவந்த பாரம்பரியத்தின்படியோ அல்லது அவர்கள் எகிப்திலிருந்து புறப்படும் காலம் குறித்தோ, தேவனுடைய வல்லமையின் குறுக்கிடுதலினால் இறுதியில் வரும் விடுதலைக்குறித்தத் தேவனுடைய வாக்குத்தத்தம் குறித்தோ அப்பாரம்பரியமானது அவர்களுக்குப் போதித்தப்படி, அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறிடுவதற்கு வழிநடத்திடும் என்றும் புதிய சாம்ராஜ்யத்தினுடைய எகிப்திய அதிகாரிகள் பயந்தனர். எபிரெய ஜனங்கள் தங்கள் கையைவிட்டுப்போக எகிப்தியர்கள் விரும்பிடவில்லை ஏனெனில் அவர்கள் வேலை செய்யத் திறமிக்கவர்களாக இருந்தனர் மற்றும் வணிகத்தின் விஷயத்தில் எகிப்தியர்களுக்கு இலாபம் ஈட்டித்தருபவர்களாய் இருந்தனர். எபிரெயர்களை வெளியேற்றிடுவதற்கோ அல்லது அவர்களைக் கொன்றுபோடுவதற்கோ எகிப்தியர்கள் விரும்பிடவில்லை. எபிரெயர்கள் எண்ணிக்கையில் வேகமாய்ப் பெருகிடக்கூடாது என்று மாத்திரமே எகிப்தியர்கள் விரும்பினார்கள். இந்த அசாதாரணமான பெருக்கத்தினைத் தடைப்பண்ணிடுவதற்குப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன; எதுவுமே பலன் தரவில்லை இறுதியாக அடக்குமுறை முயற்சியாக… எபிரெயர்களின் இனப்பெருக்கத்தினைச் சிறிதுகாலம் தடைப்பண்ணத்தக்கதாகவும், பிற்பாடு பிள்ளைகள் பிறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவும் உள்ள நோக்கத்துடன் எபிரெய ஆண்பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுவதற்கான கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஒரு காலப்பகுதியில்தான் மோசே பிறந்தார்; இம்மாதிரியான கட்டுப்பாடுகளானது இவரது மூத்த சகோதரனாகிய ஆரோன் பிறந்த காலத்தில் இருக்கவில்லை. மோசே, குடும்பத்தில் மூன்றாவது நபர் ஆவார்; இவரது சகோதரியும், இரண்டாவது பிள்ளையுமான மிரியம்தான், நம்முடைய பாடத்தில் இடம்பெறும் சிறுபெண் ஆவாள். குழந்தையாகக் காணப்பட்ட மோசே, இராஜாவின் கட்டளைக்கு மீறின நிலையிலும், தாய் சேயுடைய ஜீவன் பணயம் வைக்கப்பட்ட நிலையிலும், அவரது தாயாரினால் மூன்று மாதக்காலங்கள் ஒளித்து வைக்கப்பட்டார்; இப்படி அவள் செய்வதற்குக் காரணம், அவள் அக்குழந்தையை அழகுள்ள குழந்தையாக – அவர் உண்மையில் எதிர்க்காலத்தில் மாமனிதர் ஆனதுபோலவே, மாமனிதர் ஆவார் என்று நம்பிக்கை அளித்த குழந்தையாக இருந்தார் என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பெற்றோர்கள் விசுவாசம்கொண்டிருந்தனர் என்றும், அந்த விசுவாசம் குழந்தையினிடத்திலோ அல்லது தங்களிடத்திலோ அல்லது இராஜாவினிடத்திலோ இல்லை என்றும், தேவனிடத்தில் காணப்பட்ட விசுவாசமாக, அதாவது அக்குழந்தையைத் தேவன் ஆசீர்வதிப்பார், பாதுகாப்பார் என்ற விசுவாசமாக இருந்தது என்றும் அப்போஸ்தலன் தெரிவித்துள்ளார்; மேலும் இந்த விசுவாசத்தோடுகூட, கர்த்தரிடத்தில் ஜெபமும் ஏறெடுக்கப்பட்டிருந்திருக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை. குழந்தைப் பிறப்பதற்கு முன்பாகக்கூட இத்தகைய விநோதமான சூழ்நிலைமைகளின்கீழ், தேவபக்தியுள்ள, உண்மையுள்ள அந்தப் பெற்றோர்கள் குழந்தையைக் கர்த்தருக்கும், அவருக்காகப் பயிற்றுவிக்கப்படுவதற்கும், தங்களால் முடிந்தமட்டும் போதிக்கப்படுவதற்கும், கர்த்தர் தங்கள் குமாரனை எந்த விதத்தில் பயன்படுத்த பிரியப்படுகிறாரோ அப்படியாகக் கர்த்தருடைய ஊழியக்காரனாய்க் குமாரன் காணப்படுவதற்கும் வேண்டி அப்பிள்ளையை அர்ப்பணித்திருந்திருப்பார்கள் என்பதிலும் நமக்கு ஐயமில்லை. இம்மாதிரியான சில நம்பிக்கைகளும், ஜெபங்களும் இல்லாதிருந்தால், அப்போஸ்தலனால் குறிப்பிடப்படும் விசுவாசமானது பொருத்தமற்றதாயிருக்கும். நம்முடைய விஷயங்களிலும், நமது பிள்ளைகள் விஷயங்களிலும், நம்முடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் விஷயங்களிலும் – பொதுவாகவே விசுவாசமும், ஜெபங்களும், அர்ப்பணிப்பும் சேர்ந்தே செயல்படுகின்றதாயிருக்கும்.
பிள்ளையைப் பாதுகாக்கிற விஷயத்தில் இப்பெற்றோரினால் செய்யப்பட்ட காரியமானது, மிகவும் விவேகமானதாய் இருக்கின்றது; இது ஒன்றில் திவ்விய வழிநடத்துதலையோ அல்லது மனுஷ சுபாவத்தினைப்பற்றின நல்லப் புரிதலுடன்கூடத் திட்டமிடும் ஆற்றலுள்ள மனதையோ அல்லது இவை அனைத்தையுமே சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. எகிப்தின் இளவரசி (அநேகமாய் மத சம்பிரதாயமாக) குளிக்க வருகையில் குழந்தையைக் கண்டால், அவள் இருதயம் தொடப்படும் என்றும், அப்படியாகக் காணப்படும் எந்தக் குழந்தையின்மீதும், அதுவும் மிகவும் “அழகுள்ள” ஆண் குழந்தையாக விசேஷமாகக் காணப்படுகையில், அதன்மீது இரக்கம்கொள்வாள் என்றும் மோசேயின் பெற்றோர்கள் எண்ணம்கொண்டதிலிருந்து, மனித சுபாவத்தினை அவர்கள் வாசித்தறிய முடிந்தவர்களாய் இருந்தார்கள் என்பது தெரிகின்றது. குழந்தைக் கூடையில் கண்டெடுக்கப்படும் தருணத்தில் மோசேயின் சகோதரியாகிய மிரியாம் அங்குக் காணப்பட்டதும், பிள்ளைக்குப் பாலூட்ட எபிரெய ஸ்திரீயை அழைக்கும்படிக்கு அவள் யோசனைக் கொடுத்தும், பின்னர்க் குழந்தையின் தாயையே அவள் கூட்டிக்கொண்டு வருவதும்கூடத் திட்டமிட்ட ஏற்பாடேயாகும். சந்தேகத்திற்கிடமின்றி கர்த்தருடைய கரமும், ஞானமும் இக்காரியங்கள் அனைத்திற்கும் பின்பாகக் காணப்பட்டது; ஆனாலும் இச்சம்பவமானது, தேவன் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றிடும் விஷயத்தில் மனித பாத்திரங்களைப் பயன்படுத்துவதில் பிரியம்கொண்டிருந்தார் என்னும் பாடத்தையும் நமக்குக் கற்பிக்கின்றதாய் இருக்கின்றது. அப்பெற்றோர்கள் கர்த்தரில் விசுவாசம்கொண்டிருந்த அதேவேளையில், தங்கள் குழந்தையைப் பாதுகாக்கிற விஷயத்தில் தங்கள் அறிவையும் [R2903 : page 346] செயல்படுத்தினது சரியே. இப்படியே நம் விஷயத்திலுமாகும்; கிரியைச் செய்திடுவதற்கு மறுத்திடும் சோம்பல் வகையான விசுவாசமாய் நமது விசுவாசம் காணப்படக்கூடாது; சோம்பல் வகையான விசுவாசம் காணப்படுகையில், கர்த்தர் பயன்படுத்த சித்தம்கொண்டுள்ள வழியில் நாம் பயன்படுத்தப்பட முடியாதவர்களாகிடுவோம்; மாறாக நம்முடைய விசுவாசம் கிரியைகளினால் வெளிப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய விசுவாசத்திற்கே, ஆசீர்வாதம் அருளிட கர்த்தர் பிரியம்கொள்வார்.
இளவரசியானவள், ராமசேஸ் II-இன் மனைவியும், முந்தின இராஜாவின் மகளுமான நெபிராரி (Neferari) ஆவார்; எகிப்திய இராஜாக்கள் அனைவரும் பார்வோன் என்று அழைக்கப்பட்டனர். இவள் குழந்தையைத் தனது குமாரனாகத் தத்தெடுத்தாள், ஆனாலும் கொஞ்சம் காலம் குழந்தையானது எபிரெய வீட்டில் பேணி வளர்க்கப்பட விரும்பினாள்; குழந்தை ஏழு அல்லது பன்னிரண்டு வயதை அடைவதுவரையிலும் இப்படியாகக் காணப்பட விரும்பினாள் என்று அனுமானிக்கப்படுகின்றது; பிற்பாடு பிள்ளையை இராஜ அரண்மனைக்குக் கொண்டுவந்து, எதிப்தியர்களின் சகல கல்விகளிலும், ஞானத்திலும் கற்பிக்கப்படப்பண்ணினாள். மோசேயினுடைய விஷயத்தில் பின்வரும் கவிஞனின் வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாய்க் காணப்படுகின்றது; கவிஞனின் வார்த்தைகள் பின்வருமாறு:
“தேவன் தம் அற்புதங்களை நிகழ்த்திட விசித்திரமான வழிகளில் செயல்படுகின்றாரே!”
எகிப்தின் அடிமைத்தனத்தினின்று வந்த இஸ்ரயேலின் வழிநடத்துனன், மாபெரும் மேசியாவிற்கு நிழலானவர், கல்வியறிவுள்ள மனிதனாக அல்லது கல்விமானாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு ஏற்ற காரியமாயிருக்கின்றது; எனினும் மதத்தின் அடிப்படைக்கொள்கைகளை அவர் மனதில், குழந்தைப் பருவத்தில் முதலாவதாக நன்கு பதியவைத்திடுவது என்பது இன்னும் எவ்வளவு அவசியமானதாகக் காணப்படுகின்றது; மேலும் மோசேக்கான கல்வியின் இந்த இரண்டு அம்சங்களையும் கர்த்தர் எத்துணை ஆச்சரியமான விதத்தில் ஏற்பாடுபண்ணியிருக்கின்றார். முன்னமே விசுவாசத்தினை வெளிப்படுத்திட்டதான இந்தப் பெற்றோர்கள், தாங்கள் விசுவாசித்ததான ஆபிரகாமின் வாக்குத்தத்தங்களை, அதாவது ஆபிரகாமின் சந்ததியாரெனத் தாங்கள் இறுதியில் மாபெரியவர்களாய் இருப்பார்கள் மற்றும் பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசிர்வதிப்பதற்கான கர்த்தருடைய கால்வாய்களாகத் தங்கள் ஜனங்கள் பயன்படுத்தப்படுவார்கள் மற்றும் ஆபிரகாமிற்கு முன்னுரைக்கப்பட்டது போன்று எகிப்தின் அடிமைத்தனத்தினின்று தம்முடைய ஜனங்களைக் கர்த்தர் பெலத்த கையுடனும், [R2903 : page 347] வல்லமையுள்ள ஓங்கிய புயத்துடனும் வெளிக்கொண்டுவருவதற்கான காலம் சமீபித்துள்ளது என்றும் அச்சிறுவனுக்குப் போதித்திருப்பார்கள் என்பதிலும் நமக்கு ஐயமில்லை. மோசே இஸ்ரயேலர்களுடன் கொண்டிருந்த தன் உறவுமுறைக்குறித்து முழுமையாய்த் தெரியப்படுத்தப்பட்டிருந்தார் என்பதில் ஐயமில்லை மேலும் வாக்குத்தத்தங்கள்மீதான விசுவாசம் மாத்திரமல்லாமல், தன் ஜனங்களுக்கான தேசப்பற்றின் உணர்வுகளும்கூட அவருக்குத் தாராளமாய்ப் போதிக்கப்பட்டது; ஏனெனில் இந்தப் பண்புகளானது அவரில் முழுமையாய்ப் பதியவைக்கப்பட்டு, நெஞ்சார நேசிக்கப்பட்டதாலேயே, அவைகள் அவரது ஜீவியம் முழுவதிலும் தலைச்சிறந்து விளங்கியது.
தங்கள் சொந்தப் பிள்ளைகள் விஷயத்தில் தங்கள் கரங்களில் வைக்கப்பட்டுள்ளதான சிலாக்கியங்கள் மற்றும் பொறுப்புகள்குறித்து வெகு சிலரே உணர்ந்துகொண்டதாகத் தெரிகின்றது. வளர்ந்துவரும் குடும்பத்தினைப் பெற்றிருக்கும் கிறிஸ்தவ தாயானவள், தன் சிறுபிள்ளைகளுக்கு நீதியிலும், கர்த்தருக்கான பயபக்தியிலும் அறிவுரைகள் புகட்டிடுவதற்குத் தன் தாலந்துகளைப் பயன்படுத்துவாளானால், தன் தாலந்துகள் அனைத்தையும் பயன்படுத்திடுவதற்கான பரந்த விரிந்த வாய்ப்புகளை நிச்சயமாய்ப் பெற்றிருப்பாள். பிள்ளைகளினால் மத சம்பந்தமான கொள்கைகளைப் புரிந்திடமுடியாது, ஆகையால் அவர்களுக்கு “திருவசனத்தின் பாலாகாரம்” கூட அல்லது திவ்விய பிரமாணத்தின் அடிப்படைப் பாடங்கள்கூடக் கொடுக்கப்படக்கூடாது என்ற தவறு அடிக்கடிச் செய்யப்படுகின்றதாய் இருக்கின்றது. இதற்கு நேர்மாறாக நாங்கள் நம்புவது என்னவெனில்… குழந்தைகள் குறிப்பிட்ட அளவு சீரழிவுடனும், தீமை மீதான விருப்பத்துடனும் பிறந்திருந்தாலும், எனினும் அவர்களது சிறுமனங்களானது பெரிதளவில் வெறுமையான பக்கங்களை உடையதாக இருக்கின்றது; இந்த வெறுமையான பக்கங்களில் நன்மைக்கேதுவான அல்லது தீமைக்கேதுவான கொள்கைகளானது ஆழமாய் நிச்சயமாய்ப் பதிய வைக்கப்படலாம். நீதி, இரக்கம், அன்பு மற்றும் பொறுமை ஆகியவைகளுக்கு நேராகக் குழந்தைகளினுடைய மனங்களானது வழிநடத்தப்படவில்லையெனில், இவைகள் தேவனால் எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்றும், இவைகள் அவர்களது புத்தியுள்ள ஆராதனையாய் இருக்கும் என்றும் கற்பிக்கப்படவில்லையெனில், பிள்ளைகள் ஜீவியத்தின் பல்வேறு சீரழிக்கும் செல்வாக்குகளுடன், அதாவது உலகம், மாம்சம், பிசாசு என்பவைகளுடன் தொடர்புக்குள் வருகையில் மேற்கூறப்பட்டவைகளுக்கு நேர் எதிர்மாறானவைகளாய் இருப்பவைகள் குறித்துப் பிள்ளைகள் நிச்சயமாய்க் கற்பிக்கப்பட்டவர்களாகிடுவார்கள். எந்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் சிறு தோட்டங்களாகக் கருதுகின்றார்களோ மற்றும் எந்தப் பெற்றோர்கள் நீதியின், அன்பின், பொறுமையின், சாந்தத்தின், தயவின் மற்றும் ஆவியின் கனிகள் அனைத்தினுடைய விதைகளை அந்தச் சிறு தோட்டத்தில் உண்மையாய்த் தங்களால் முடிந்தளவிற்கு விதைக்கின்றார்களோ, அதிலும் விசேஷமாக ஒருவேளை பிள்ளையானது கர்த்தருக்குக் குழந்தைப் பருவம்முதல் அல்லது பிறப்பதற்கு முன்னதாகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தால் – கர்த்தருடைய ஆசீர்வாதத்தின்கீழ் உண்டாகும் குணலட்சணத்தின் கிருபைகளில், ஐசுவரியமான பலனை நிச்சயமாய் அடைவார்கள்.
ஆனால் இந்த இயல்புகளையும், மனரீதியான மற்றும் ஒழுக்கரீதியான மலர்களையும் கொடுத்திடும் விதைகளை விதைத்திடுவதற்கு நேரம் ஒதுக்காதவர்கள் பூமிக்குரிய தோட்டத்தின் விஷயத்தில் இருப்பதுபோலவே முதிர்ச்சியான வயது அடையும்வரையிலும், மிக்க ஏற்ற காலங்கள் வருவதுவரையிலும் இருதயம் காலியாக இருக்காது என்பதைக் கண்டுகொள்வார்கள்; இன்னுமாகத் தீமையின் இயல்புகளாகிய கெடுதியான களைகள் வளர்ந்து, செழித்து, திரும்பத்திரும்ப விதைத்தலுக்குள்ளாகக் கடந்துசென்று அந்த ஒரு குமாரனுக்கு மாத்திரமல்லாமல் பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் மனவேதனையை / தொந்தரவைக் கொடுக்கும் கசப்பான பலன்களைக் கொணர்ந்துவிடும். ஆகையால் ஒவ்வொரு பெற்றோரும் தன்னால் பிறப்பிக்கப்படும் எந்தப் பிள்ளையும், உதவிகரமான கர்ப்பக்கால செல்வாக்குகள்மூலம் நல்லப்பிள்ளையாக, நல்ல அனுகூலமுள்ள பிள்ளையாகவும் காணப்படத்தக்கதாகத் தன்னால் முடிந்தமட்டும் பார்த்துக்கொள்வானாக; மேலும் பெற்றோரெனத் தான் பொறுப்பினைக் கொண்டிருப்பதினால் தன் பராமரிப்பின்கீழ்க் காணப்படும் இந்தச் சிறு தோட்டங்களில், தான் நல்ல வேலையைச் செய்யத்தக்கதாகவும், தப்பறையின் களைகளை உடனுக்குடன் பிடுங்கிப் போடத்தக்கதாகவும், நல்லவிதைகள் தாராளமாய் விதைக்கப்படத்தக்கதாகவும் பார்த்துக்கொள்வானாக.