R1275 (page 7)
“ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய ஜீவியத்திலும், கண்டிப்பான நீதியானது வெளிப்பட வேண்டும். அவன் எந்த ஒரு பொருளையும் மதிப்பிடும் விஷயத்தில் நியாயமாய்க் காணப்பட வேண்டும்; ஒருவேளை ஒரு பொருளை வாங்குவானானால், அதற்கே உரிய நீதியான, சமமான தொகையைச் செலுத்த விரும்பிட வேண்டும்; தான் பெற்றுக்கொள்ளும் சம்பளத்திற்குத் தக்கதாகத் தன்னை வேலையமர்த்தியவருக்கு நியாயமான, சமமான உழைப்பினைக் கொடுத்திட வேண்டும். ஒருவேளை வியாபாரத்தில் அவன் மற்றவர்களுடன் போட்டியிடுகிறவனாய் இருப்பானானால், அவனது பொருட்களைத் தன் சக வியாபாரியைப் பார்க்கிலும் மிகக் குறைந்த விலையில், உரிய விலைக்குக் குறைவான விலையில் விற்க நாடிடக்கூடாது. ஒருவேளை பெற்றோனாய் இருப்பானானால், அவனது ஆண்பிள்ளையானாலும், பெண்பிள்ளையானாலும் சரி, அவர்கள் முதிர்ச்சி / பக்குவ வயதை எட்டுகையில், அவர்களுக்கான தனிப்பட்ட உரிமைகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு இத்தகைய பருவம் அடைவதுவரையிலும் பெற்றோரின் கட்டுப்பாடு அவசியமே ஆனாலும் இவ்வயதைத் தாண்டியும் செயல்முறைப்படுத்தப்படுமானால், அது அநீதியாய் இருக்கும்; ஒருவேளை அவ்வயதைத் தாண்டியும் செயல்முறைப்படுத்தப்பட்டால், அது எதிர்க்காலத்தில் பிள்ளைப் பயனுள்ள பாத்திரமாய் இருப்பதைத் தடைப்பண்ணிடும் மற்றும் தேவனிடமுள்ள அவர்களது தனிப்பட்ட உறவையும், பொறுப்பையும் குறுக்கிடுகிறதாயும் இருக்கும்.
பெற்றோர்களில் உள்ள நீதியானது, பக்குவமடைந்துள்ள குமாரன், குடும்பத்தை விட்டுச் செல்வதற்கும், தனக்கான எதிர்க்காலத்தினைத் தானே பார்த்துக்கொள்வதற்கும் பெற்றிருக்கும் உரிமையினை அடையாளம் கண்டுகொள்ளும்; இப்படியே பெண் பிள்ளைகள் விஷயத்திலுமாகும். பிள்ளைகளில் காணப்படும் நீதியும்கூட – (பெற்றோருக்குக் காட்டப்படவேண்டிய) பாசக் கடமைகளின் உரிமைக்கோரல்களை, மரியாதை காண்பிக்கப்படவேண்டும் என்ற உரிமைக்கோரல்களை, அன்பு பாராட்டப்படுவதற்கான உரிமைக்கோரல்களை, பெற்றோர்களின் முதிர்ச்சியான ஞானம் வரவேற்கப்பட வேண்டும் எனும் உரிமைக்கோரல்களை, பெற்றோர்கள் வயதாகையில், பலவீனமடைகையில், வாழ்க்கையின் கடைசி காலங்களில் அவர்கள் அன்போடு பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கான உரிமைக்கோரல்களை அடையாளம் கண்டுகொள்கின்றது.