R4019 – மற்றவர்களுக்கான நமது கடமைகள்

No content found

R4019 (page 199)

மற்றவர்களுக்கான நமது கடமைகள்

OUR OBLIGATIONS TOWARD OTHERS

“யாத்திராகமம் 20:12-17

“”உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக.”” (லேவியராகமம் 19:18)

R4020 : page 201

களவு செய்யாதிருப்பாயாக

மற்றவர்களுடைய உரிமைகள், மற்றவர்களுடைய உடைமைகள் குறித்தச் சரியான அடையாளம் கண்டுகொள்ளுதல் குறித்து இங்குப் போதிக்கப்பட்டுள்ளது. இதில் சுபாவத்தின்படியான மனுஷனோ, உலக ஞானியோ வரையறைகளைக் கண்டுப்பிடிப்பதில்லை இது பின்வருமாறு: “”நீங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்குரிய, பிடிபடுவதற்குரிய, தண்டிக்கப்படுவதற்குரிய வாய்ப்பானது கொஞ்சமேனும் இருக்குமானால் களவு செய்யாதிருங்கள்””; “”கொஞ்சம் பணத்திற்காகக் களவு செய்யாதிருங்கள்; ஏனெனில் கொஞ்சம் பணத்திற்காகக் களவு செய்து பிடிப்படும் பெரிய அபாயத்தினை எடுத்துக்கொள்ள வேண்டாம்; உங்களால் முடியுமானால் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு அல்லது ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டாலும் சட்டப்படி செய்தது என்ற தோற்றத்தில் மூடி மறைக்கப்படத்தக்கதாகக் கொஞ்சம் சட்டப்பூர்வமான விதங்களில் செய்யுங்கள்”” என்று கூறிடவில்லை. இக்கட்டளையானது ஒவ்வொரு யூதனும், மற்ற ஒவ்வொரு யூதனுடைய உரிமைகளையும், உடைமைகளையும், நலன்களையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்றும், இவைகளை அபகரித்தல் கூடாது என்றும் எளிமையாகவும், தெளிவாகவும் தெரிவிக்கின்றது. இந்தக் கட்டளையானது பொதுப்படையான மற்றும் தனிப்பட்ட எல்லா வகையான களவுகளையும் பற்றியே தெரிவிக்கின்றது; ஏனெனில் களவுகள் அனைத்திலும் மிகமோசமான களவுகளாக நாம் பார்ப்பவைப் பொதுப்படையான களவுகளாகும்; இந்தக் களவுகளானது சட்டப்பூர்வமானது என்ற போலி தோற்றத்தின்கீழ், பொதுச் சொத்துக்களை அபகரிக்கின்றது அல்லது சட்டத்தின் மொழியில் குறிப்பிட வேண்டுமெனில் நியாயமான பங்கு கொடுக்கப்படாமல் “”பறிமுதல்”” செய்யப்படுதல் ஆகும்.

இந்தக் கட்டளையானது பொதுவாய் நீதி சம்பந்தப்பட்டதாய் இருக்கின்றது; பிள்ளையினுடைய உரிமைகளையும் பெற்றோர் அடையாளம் கண்டுகொள்ள தவறுவதின் மூலமும், பெற்றோரெனத் தனக்கிருக்கும் கடமைகளை அடையாளம் கண்டுகொள்ள தவறுவதின் மூலமும் பெற்றோர் தன் பிள்ளையிடமிருந்து களவு செய்யக்கூடும். உதாரணத்திற்கு ஜீவியத்தின் கடமைகளுக்குப் பிள்ளைகள் ஆயத்தமாகத்தக்கதாக அவர்களுக்கு ஒரு சராசரி / பொதுக்கல்வியையாகிலும் கூடுமானால் பெற்றோர்கள் வழங்குவது பெற்றோருடைய நியாயமான கடமையாக இருக்கின்றது; ஆனால் காரணம் இல்லாமல் தன் பிள்ளையினிடமிருந்து இக்காரியத்தினைப் பறிக்கிறவன், பிள்ளையிடமிருந்து களவு செய்கிறவனாய் இருப்பான் மற்றும் பிள்ளைக்கு உரிமையான இவைகளை, பொதுவான இவைகளை, நியாயமான இவைகளை அவர்களிடமிருந்து பறிக்கிறவனாய் இருப்பான். பிள்ளைகளும்கூடத் தங்கள் பெற்றோரிடத்திலும் மற்றும் தங்களுக்குள் ஒருவர் இன்னொருவரிடத்திலும் உள்ள கடமையினை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்; என்னுடையவை [R4020 : page 202] மற்றும் உன்னுடையவைகள் என்பவை ஒவ்வொரு இல்லத்திலும் ஒழுங்கின் அடிப்படையாகவும், நீதியின் அஸ்திபாரமாகவும் அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும்; குடும்பங்களில் ஒருவர் மற்றவருடைய உரிமைகளைப் புறக்கணிப்பது – ஒருவர் இன்னொருவரைச் சாதகமாகப் பயன்படுத்துவது – வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ஒருவர் இன்னொருவரிடமிருந்து, அதாவது சாதாரணமான காரியங்களைக் களவு செய்வது என்பவைகள் குடும்பங்களில் ஏற்படுத்திவிடும் சண்டை சச்சரவுகள் தவிர, மற்றபடி வேறு எதுவும் சண்டை சச்சரவுகளைக் கொண்டுவருவதாக நாம் அறிந்திருக்கிறதில்லை. முக்கியத்துவமில்லாத காரியங்களில் மனசாட்சியும், நீதியும் புறக்கணிக்கப்படுதல் என்பது மனச்சாட்சியினை நோய்க்குள்ளாக்ககுகின்றது – பின்னர் இறுதியில் மற்றவர்களுடைய உரிமைகளை அலட்சியம்பண்ணுவதற்கும் வழிநடத்திவிடுகின்றது – அபாயமும், தண்டனையும் மிக அதிகமாய்க் காணப்படும் எக்காரியத்தையும் மற்றும் அனைத்தையும் தன் சொந்தப் பயன்பாட்டிற்கு எனச் சுயநலமாய் அபகரித்திடுவதற்கு வழிநடத்திவிடுகின்றதாய் இருக்கும்.

புதுச்சிருஷ்டியைப் பொறுத்தமட்டில் அவனது மனம் மற்றும் இருதயத்தின் சாராம்சமாய் இருக்கும் அவனது அன்பின் பிரமாணமானது களவு செய்வதற்கு எதிராய் இருக்கும்; அன்பானது கொடுப்பதற்கும், உதவுவதற்கும் ஏவுகின்றதாய் இருக்கும்; நன்மையானவைகளைச் செய்வதிலும், நன்மையானவைகளைப் பேசுவதிலும், நன்மையானவைகளைக் கொடுப்பதிலும் சந்தோஷம்கொள்கின்றது. சத்தியத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் மாத்திரம் அவன் பிரியம்கொள்ளாமல், மாறாக கர்த்தருடைய ஆவியானது அவனுடைய இருதயத்தையும், அவனுடைய ஜீவியத்தையும் நிரப்பியிருக்கும் அளவிற்கும், ஊடுருவியிருக்கும் அளவிற்கும் ஏற்ப அவன் தேவையில் இருப்பவர்கள் அனைவருக்கும், பூமிக்குரிய நன்மைகளைக் கொடுப்பதிலும் பிரியமுள்ளவனாய் இருப்பான். அன்பின் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட புதிய இருதயத்தின், புதிய மனதின், புதிய மனநிலையின் அம்சமாய்த் தயாள குணம் காணப்படுகின்றது. எனினும் பொதுவாய் நிலவிவரும் ஒழுங்கின்மையில் பழக்கப்பட்டிருப்பதினாலும், வீட்டிலும், தொழிலிலும் சிறுசிறு அநியாயங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதினாலும், இவைகள் அனைத்தும் அன்பிற்கு இசைவற்றதாய் இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதற்குப் புதுச்சிருஷ்டிக்குச் சில காலங்கள் எடுத்துக்கொள்ளும்; எனினும் எந்தளவிற்குப் பரிசுத்த ஆவியானது அவன் இருதயத்தில் பொங்கி வழிகின்றதோ அவன் அந்தளவிற்குத் தன் வார்த்தைகளையும், கிரியைகளையும், ஆம் தன் எண்ணங்களையும் கவனிப்பான்; மேலும் தேவனுடைய சிங்காசனத்தின் அஸ்திபாரமாய் இருக்கும் நீதியானது, ஜீவியத்தில் மற்றவர்களிடத்திலுள்ள தன் நடத்தைகள் அனைத்திற்கும் அஸ்திபாரமாகக் காணப்படுகின்றதா என்று பார்த்துக்கொள்வான் – நீதிக்குக் குறைவான எதையும் தான் மற்றவர்களுக்குச் செய்யாதபடிக்குப் பார்த்துக்கொள்வான்.

அடுத்ததாக அவன் நீதிக்கும் அதிகமாய்ச் செய்திடுவதற்கு எதிர்ப்பார்க்கப்படும் தருணங்களில், அதுவும் பாதகமாய்க் காணப்படாத தருணங்களில், அன்பானது எப்படி நீதிக்கும் அதிகமாய்ச் செய்திடும் என்பவைகளில் கவனம்கொள்வான்; மேலும் மற்றவர்கள் தன்னிடம் நடந்துகொள்ளும் விஷயத்தில், தனக்கு முழுமையாய் நீதியோடு காரியங்கள் செய்யப்பட வேண்டும் என்று கேட்கவோ அல்லது எதிர்ப்பார்க்கவோ செய்யாதளவுக்கு, விழுந்துபோன நிலைமையிலுள்ள பொதுவான மனுக்குலத்தின்மீது முழுக்க அனுதாபம்கொண்டிருப்பான். மனுக்குலத்தினுடைய விழுந்துபோன நிலைமைக்குறித்த அவனது அறிவானது, அவனால் கையாளப்படுபவர்களிடத்தில் அவனை அனுதாபம்கொண்டிருக்க செய்திடும். அவனது இவ்வன்பும், தயாளமும் அவன் பொறுப்பின் கீழுள்ள அவனது சொந்தக் குடும்பத்தாருக்குப் பாதகம் செய்யாதப்படிக்கு, இதுவிஷயத்தில் அவன் தனக்கு வேகத்தடையிட்டுக்கொள்வதும் கூட அவசியமாயிருக்கும். கர்த்தருடைய ஜனங்களில் குடும்பங்களுடைய தலையானவர்களாய்க் காணப்படும் சிலர்… ஒருவேளை ஒவ்வொரு விஷயத்திலும் தனக்குக் காரியங்கள் நீதியாய்ச் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தாதிருந்தாலும், குடும்பத்தினுடைய பல்வேறு அங்கத்தினர்களிடையே காரியங்கள் நீதியாய்ச் செய்யப்படத்தக்கதாக அன்போடும், தயவோடும், அதேசமயம் உறுதியோடும் அவர்களிடம் வலியுறுத்திடுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.