R797 (page 3)
“(R799 : page 4)
குறிப்பாய்த் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், கணவனும், மனைவியும் தேவனைத் தொழுதுகொள்ளும் விஷயத்திலும், திவ்விய சித்தத்திற்குப் பணியும் விஷயத்திலும்… தங்கள் இருதயங்களை ஒருங்கிணைப்பதும், தங்கள் முழங்கால்களை முடக்கிடுவதும் எத்துணை ஏற்ற காரியமாய் இருக்கும். இது எவ்வளவாய் அந்த இருதயங்களையும், ஜீவியங்களையும் ஒன்றிணையப்பண்ணிட வேண்டும். இத்தகைய முன்மாதிரியானது குழந்தைகளுக்கு எத்துணை ஆசீர்வாதமாய் இருக்கும். சடங்காச்சாரமான, நீண்ட ஜெபங்கள் மூலமாய் இல்லாமல், கர்த்தர் ஜெபம்பண்ணினதுபோன்று எளிமையான, உண்மையான, விசுவாசமுள்ள ஜெபங்களின் வாயிலாய்ப் பெற்றோர்கள் நன்மையான ஒவ்வொரு ஈவுகளை அருளுகிறவர் பாலுள்ள தங்கள் அன்பையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதன் காரணமாய் – இந்தச் சிறு ஒலிவ கிளைகளானது / பிள்ளைகள் தங்களது வாலிப நாட்களில் சிருஷ்டிகரை நோக்கிப் பார்ப்பதற்குப் பயிற்றுவிக்கப்படுவது எத்துணை அருமையான காரியமாய் இருக்கும். பெற்றோர்கள் தங்கள் பரலோக பிதாவினுடைய உன்னதமான சித்தத்திற்கும், ஞானத்திற்கும் தலைவணங்கிடுவதையும், அதை அடையாளங்கண்டுகொள்வதையும் பிள்ளைகள் காணும்போது, தங்கள் சிருஷ்டிகரைப்பற்றி அறிந்துகொள்வதற்கும், அவரைத் தொழுதுகொள்வதற்கும் கற்றுக்கொண்டு வருகையில், பெற்றோரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது மற்றும் கீழ்ப்பட்டிருப்பதுபற்றிய பாடங்களையும் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்வார்கள்.
பிள்ளைகள் சிந்தித்துச் செயல்படும் வயதிற்கு வருகையில் தினந்தோறும் உள்ள குடும்ப ஜெபமானது, அது காலையிலோ அல்லது மாலையிலோ செய்யப்படுவதாக இருப்பினும்… அதைத் தேவன் நமக்கு முன் (ஜெபம் ஏறெடுத்தல் எப்படி இருக்க வேண்டுமென்று) எப்படி முன்வைத்தாரோ, அப்படியே பிள்ளைகளின் பார்வையிலும்; காணப்பட வேண்டும்; அதாவது கட்டாயத்தின்பேரில் இல்லாமல், மாறாக விருப்பமுள்ள மனதினால், நன்றியுள்ள, அன்புள்ள இருதயங்களினால் ஏறெடுக்கப்பட வேண்டும். இத்தகைய செல்வாக்கும், முன்மாதிரியும் பிள்ளைகளுடைய எதிர்க்கால வாழ்க்கையில்… இல்லத்தையும், பெற்றோர்களையும், பரிசுத்தமான காரியங்களையும்… அவர்களுக்கு அருமையானவைகளாக்கிடும். தேவனை உண்மையாய்த் தொழுதுகொள்வது என்பது தற்கால மற்றும் எதிர்க்கால ஜீவியத்திற்கும் நன்மை பயக்கின்றதாயிருக்கும். “