Q59:2 – பிள்ளைகள் – முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்

No content found

(Q59:2)

பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்

CHILDREN—Re Ancient Worthies and Materialized Demons.

கேள்வி (1911)-2- முற்பிதாக்கள் உயிர்த்தெழுந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் உருவெடுத்துவரும் பிசாசுகள் அல்ல என்றும் நம் பிள்ளைகள் எப்போது நிச்சயம் அடைவார்கள்?

பதில் – இக்கேள்விக்கு என்னால் பதிலளிக்கமுடியாது என்று நான் எண்ணுகின்றேன். இது சம்பந்தமாக நான் சிலவற்றைச் சொல்லுவேன், ஆனாலும் அது இக்கேள்விக்கான துல்லியமான பதிலாய் இராது. என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் வகுப்பாராகிய – பூரண மனுஷர்களென உயிர்த்தெழுப்பப்படும் முற்பிதாக்கள் வாயிலான திவ்விய வல்லமையின் வெளிப்பாடானது, மிகவும் முழுமையானதாக இருக்கும் என்பதினால்… திவ்விய வல்லமையின் மிகவும் அற்புதகரமான வெளிப்படுத்துதலாக இருக்கும் என்பதினால், இது கர்த்தருடன் இசைவிற்குள் காணப்படும் அனைவருக்கும் போதுமான நிரூபணத்தினைக் கொடுத்திடும்; அதிலும் குறிப்பாக யூதர்கள் அவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். இப்படியே இக்கேள்விக்கு நான் பதிலளிக்கின்றேன்.