Q129:6 – தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?

No content found

(Q129:6)

தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?

COLPORTEURING WORK--How Manage With a Dependent Family.

கேள்வி (1906)-6- ஒருவர் மீது குடும்பத்தினர் சார்ந்திருக்க, அவர் ஒருவேளை இதற்கு ஏற்பாடுகள் பண்ணமுடியுமானால், அவர் தொகுதி விநியோகிக்கும் வேலைக்குச் செல்வது சரியாய் இருக்குமா?

பதில் – ஒரு மனைவி தன் வீட்டையும், கணவனையும் கவனிக்காமல் விட்டுவிட்டு இவ்வேலைக்குச் செல்வது சரியாயிருக்கும் என்று நான் எண்ணுவதில்லை. அவள் தன் கணவனுக்கும், தன் வீட்டிற்கும் மனைவிக்குரிய கடமைகளைப் பெற்றிருக்கின்றாள். ஆனால் ஒருவேளை அவள் கணவனும் சத்தியத்தில் காணப்பட்டு, இதற்கு இணங்குவாரானால், சரி. ஒருவேளை அவள் கணவன் உலகப்பிரகாரமான கணவனாய் இருப்பாரானால், தன் இல்லம் பராமரிக்கப்படும்படிக்குக் கேடடுக்கொள்வதறகுரிய உரிமையினை அவர் உடையவராய் இருப்பார்; இது மனைவி (திருமணத்தில்) பண்ணின ஒப்பந்தத்தின் ஒரு பாகமாகும், மேலும் அதை அவள் மீறக்கூடாது என்று நான் எண்ணுகின்றேன்.