R3093 : page 313
R3094 : page 315
விழுகையின் காரணமான நம்முடைய பெலவீனங்கள் காரணமாகவும், எதிராளியானவன் மற்றும் உலகத்தினுடைய மயக்கங்கள் காரணமாகவும், நாம் கர்த்தரிலும், அவரது சத்துவத்தின் வல்லமையிலும் பெலமுள்ளவர்களாய்க் காணப்படத்தக்கதாக, நாம் புதுச்சிருஷ்டியையும், அதன் நல்லத் தீர்மானங்களையும் வேலியடைத்துக் காத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு உண்மையுள்ள இஸ்ரயேலனும் யோசுவாவைப் போன்று, “நானும் என் வீட்டாருமோ, கர்த்தரையே சேவிப்போம்” என்போமாக; மேலும் இது ஒருவனுடைய தனிப்பட்ட காரியத்தில் சாதாரணமான காரியமாய் இராததுபோன்று, அவனது வீட்டாருடைய விஷயத்திலும் இது சாதாரணமான காரியமல்ல; இது அவனுடைய பிள்ளைகள் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; மேலும் இது சிறுபிள்ளைகள் வீட்டை ஆளும்படிக்கு அனுமதிக்கப்படக்கூடாது என்பதையும், வீட்டிற்கு வெளியே பெற்றோரை அவமதித்திடும் விதத்தில் நடந்திடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றதாயிருக்கின்றது; இன்னுமாக தயவோடும், அன்போடும், உறுதியோடும் செயல்படுத்தப்படும் பெற்றோரின் செல்வாக்கானது, ஒவ்வொரு குடும்பத்திலுள்ள பிள்ளைகளைக் கூடுமான மட்டும் கர்த்தருடன் உடன்படிக்கை உறவிற்குள் கொண்டுவருவதற்கும், வார்த்தை மற்றும் முன்மாதிரியின் வாயிலாகக் கர்த்தருடைய வழியில் அவர்களைப் போதிப்பதற்கும் நாடிட வேண்டும்.