R4192 (page 188)
1 சாமுயேல் 8:10-22
சாமுயேலின் பயிற்சியானது ஏலியுடன் காணப்பட்டது என்பதையும், ஏலியின் குமாரர்களோ இலஞ்சம் வாங்குகிறவர்களாகவும், திவ்விய சட்டம் மற்றும் நீதிக்குத் தங்களது தவறான உதாரணத்தினால் இழிவு கொண்டுவந்தவர்களாகவும் ஆகிப்போனார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆகையால் சாமுயேலின் குணலட்சணத்தினுடைய பிரம்மாண்டத்திற்கும், கொள்கைக்கான அவரது உண்மைக்கும் காரணம் – சாமுயேல் சிறந்த சூழ்நிலைகளின் கீழும், சிறந்த ஆசிரியர்களின்கீழும் காணப்பட்டார் என்று ஆகாது. நாம் இன்னும் திரும்பிப்பார்க்கையில் இவரது பெற்றோர்கள் இவர் சிறு பிள்ளையாய் இருக்கும்போது மாத்திரமல்ல, இவரது பிறப்பிற்கு முன்னதாகவே இவரைக் கர்த்தருக்கு அர்ப்பணித்தார்கள் என்றும், இந்த அநுகூலமான செல்வாக்கினாலேயே கர்த்தருக்குப் பயபக்திகொண்டவராக இவர் பிறந்தார் என்றுமுள்ள காரியத்திலிருந்து உண்மையைக் கண்டுபிடிக்கின்றோம். பெற்றோர்களின் எண்ணங்கள், விசேஷமாகத் தாயின் எண்ணங்களானது, கர்ப்பக்காலத்தின் போது, பிள்ளையினுடைய மனப்பண்புகள் விஷயத்தில் பெரும் செல்வாக்குக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு பிள்ளையும் தேவனுக்கான, நீதிக்கான, சத்தியத்திற்கான, நன்மைக்கான பெரிதளவிலுள்ள பயபக்தியுடன் பிறந்திட வேண்டும். இப்படியாகப் பிறப்பது என்பது தற்காலத்தினுடைய சூழ்நிலைமைகளின்கீழ் நீதியின் பாதையில் பயணிக்க அனுகூலமான துவக்கத்தினைப் பெற்றிருப்பதாக இருக்கும். இப்படியாகக் கருத்தரிக்கப்பட்டு, பிறந்த குழந்தையாகிய சாமுயேல், கர்த்தருடைய ஊழியத்திற்கென்று ஏலியின் கீழ் ஒப்படைக்கப்படும் காலம்வரையிலும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருப்பார் என்பதிலும் நமக்கு நிச்சயமே. இங்கும் ஒரு பிள்ளை நடக்க வேண்டிய வழியிலே நடத்தப்பட்டால், அவன் அதை விடாதிருப்பான் எனும் உண்மைக்கான சாட்சியினை நாம் பெற்றிருக்கின்றோம். தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவித்திடும் விஷயத்தில், அதுவும் கற்றுக்கொடுக்கப்படும் படிப்பினைகள் மிக ஆழமாய் மனதில் பதிந்திடும் அவர்களது அந்த வருஷங்களில் அவர்களைப் பயிற்றுவித்திடும் விஷயத்தில் தங்கள் கைகளில் எத்தகைய பொறுப்புக் காணப்படுகின்றது என்பதைக் கிறிஸ்தவ பெற்றோர்கள் உணர்ந்துகொள்வார்களானால், அது ஓ! எத்துணை நலமாயிருக்கும்.