R3593 (page 212)
நாம் நம்மிடத்திலும்,நம்முடைய பெலவீனத்திலும் பொறுமையாய் இருப்பதைக்காட்டிலும், மற்றவரிடத்திலும், அவர்களுடைய குற்றங்குறைகளைக் காணும்போதும் மிகுந்த பொறுமையுடன் காணப்பட வேண்டும். விழுகையின் காரணமாக முழு உலகமும் சரீர பிரகாரமாகவும், ஒழுக்கரீதியிலும், மனரீதியிலும் ஆரோக்கியமற்றவர்கள் என்பதை நாம் நினைவுகூருகையில், அவர்களுடைய பெலவீனங்களுக்காக நாம் அனுதாபம் கொள்ளவேண்டும். கர்த்தர் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தின் புண்ணியத்தினால் நமது கறைகளை, கிருபையுடன் மறைக்கச் சித்தமுள்ளவராய் [R3594 : page 213] இருக்கையில், நம்மைக் காட்டிலும் மற்றவர்களுடைய பெலவீனங்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் நாம் அவர்களிடத்தில் அனுதாபமும், உருக்கமான இரக்கமுமே கொள்ளவேண்டும். இக்கோட்பாடு விசேஷமாக உங்கள் குழந்தைகளுக்குப் பொருந்தும். உங்கள் பிள்ளைகளிடத்தில் காணப்படும் பெலவீனங்கள், உங்களிடத்திலிருந்து அல்லது உங்கள் வாயிலாகவே அவர்களுக்குக் கொஞ்சம் வந்துள்ளதால், அவர்களுடைய தப்பிதங்களை கையாளும் போது,நீங்கள் உங்கள் சொந்த தவறுகளை எவ்வாறு கையாளுவீர்களோ, அப்படியே அவர்களிடத்திலும் நீதியாய்க் கையாள வேண்டும்……அவர்கள் நீதியின்படி சரிசெய்யப்பட உண்மையுடனும், கண்டிப்புடனும் கையாளப்பட வேண்டும், அதேசமயம் இதை அனுதாபத்துடனும், இரக்கத்துடனும், அன்புடனும் செய்யவேண்டும்.