R4839 (page 135)
2 நாளாகமம் 33:1-20
இந்த ஆராய்ச்சியினுடைய மைய நபராகிய மனாசே நல்ல இராஜாவாகிய எசேக்கியாவின் குமாரனாவார். மனாசே தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் யூதேயாவின் சிங்காசனத்தினிடத்திற்கு வந்தார் – இவர் நல்லதொரு தந்தையினுடைய கெட்ட குமாரனாவார். நல்லத் தகப்பனமார்களுக்குப் பொல்லாத குமார்கள் காணப்படுவதும் மற்றும் பொல்லாத தகப்பன்மார்களுக்கு நல்லக் குமாரர்கள் காணப்படுவதும் அநேகமாகத் தாய்மார்களினுடைய நல்ல அல்லது பொல்லாத குணங்களின் காரணத்தினாலும், நாட்டினுடைய காரியங்களில் மூழ்கிக்கிடந்த இராஜாக்களினால் தங்கள் சொந்தப் பிள்ளைகளில் குணங்களை வளர்த்திடும் விஷயத்தில் உரிய கவனம் கொடுக்க முடியாத காரணத்தினாலும் ஆகும். இதில் சில விதிவிலக்குண்டு என்பதில் ஐயமில்லை எனினும் ஒவ்வொரு உதவாக்கரைப் பிள்ளையினுடைய விஷயத்திலும், பெற்றோருக்குப் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.
பெற்றோருக்குரிய நிலைமை என்பது மனுஷீக ஜீவியத்தினுடைய உயர்வான மற்றும் மிக முக்கியமான வேலையாய் இருக்கின்றது. எனினும் வெகு சிலரே பெற்றோருக்குரிய பொறுப்பினுடைய புனிதத் தன்மையினை உணருகின்றவர்களாய் இருக்கின்றனர்! “அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை” (யோபு 14:4) என்று தீர்க்கத்தரிசி கேட்கின்றார். நம் இனத்திலுள்ள எவரும் பூரணமாய் இருக்க முடியாது என்பதை ஒத்துக்கொண்டாலும், தங்களுடைய பிள்ளைகளின் நற்பண்புகள் அல்லது பொல்லாப்புகள் விஷயத்தில் பெற்றோர்களிடத்தில் மகா பொறுப்புக் காணப்படவே செய்கின்றது என்பதையும் நாம் ஒப்புக்கொண்டிட வேண்டும். இந்தப் பொறுப்பானது திருமணத்திற்கு முன்னதாகவே உணரப்பட வேண்டும். இனப்பெருக்கத்தின் அடிப்படையில் திருமணத்தினைப் பார்ப்பதற்கும், நேர்த்தியான மனவுணர்வுகளை அலட்சியம்பண்ணுவதற்கும் நாங்கள் வலியுறுத்துகிறதில்லை; மாறாக தம்பதிகளினுடைய இலக்கினையும், மகிழ்ச்சியையும் மாத்திரமல்லாமல், அவர்களுடைய குழந்தைகளுடையவற்றையும் தாக்கத்திற்குள்ளாகும் ஜீவீயத்தினுடைய அந்த முக்கிய ஒப்பந்தத்தினுடைய விஷயத்தில் தெளிந்த புத்தியின் ஆவியுடன் நாட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம்.
உச்சிதமான கனிகளையும், மலர்களையும், காய்கறிகளையும் பெற்றுக்கொள்வதற்கென அறிவியல் சார்ந்த தோட்டக்காரனினாலும், பூந்தோட்டக்காரனினாலும் செலுத்தப்படும் மிகுந்த கவனத்தைக் குறித்து அறியவரும் ஒருவர், மனித இனத்தில் உயரிய கொள்கைகளை விதைத்திடுவதற்குக் காண்பிக்கப்படும் மிகக் குறைந்த கவனத்தின் நிமித்தம் வெட்கமே அடைவார் – உண்மைதான் பெரும்பான்மையானவர்களிடத்தில் எவ்விதமான கொள்கையும் இருப்பதில்லை கண்மூடித்தனமான, முரட்டுத்தனமான உணர்வுகள் மாத்திரமே காணப்படுகின்றது.
உயர்தரமான குதிரைகள், நாய்கள், கால்நடைகள் முதலானவைகளை இனவிருத்திப் பண்ணுகிறவன், இனப்பெருக்கத்தின் காலத்தில் தாய் விலங்கினிடத்தில் தான் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருப்பான் என்று விவரிப்பான் – அதன் ஆரோக்கியம், அதன் சுற்றுச்சூழல் அனைத்துமே கவனிக்கப்படுகின்றது; ஏனெனில் இவை அனைத்தும் தாயின் குட்டியைப் பாதிக்கின்றதாய் இருக்கும்; எனினும் கால்நடைகள், குதிரைகள், கோழிகள் முதலானவைகளை இனப்பெருக்கம் பண்ணுபவர்கள் தங்களுடைய சொந்தக் குழந்தைகளுக்கான தாயாகிய, தங்கள் மனைவியினுடைய நிலைமைகளுக்கு, அவளது கர்ப்பக்காலத்தில் கவனம் செலுத்துகிறதில்லை. ஓடிக்கொண்டிருக்கும் குதிரைகளினுடைய படங்களையும், குதிரைகள் பந்தயத்தில் ஓடுவதையும் இனப்பெருக்கம் பண்ணிடும் பெண்குதிரைப் பார்ப்பதினால், நன்மைப் பெறுகின்றது என்றும், இதன் காரணமாக அதன் குட்டி மிகவும் வேகமாய் ஓடுகின்றதாகவும், மிகவும் உயர்தரமானதாகவும் காணப்படும் என்றும் உணர்ந்துகொள்ளும் குதிரை- பிரியன் . . . இந்தக் கொள்கையினைத் தன் மனைவி விஷயத்தில் செயல்படுத்தத் தவறுவது எத்துணை விநோதமாய் இருக்கின்றது!
தாயானவள் கருவைச் சுமந்துகொண்டிருக்கையில் அவள் பல்லாயிரம் வழிகளில் அமைதியற்றும், தொல்லைப்படுத்தப்பட்டும் இருக்கையில், அவள் பிள்ளைகள் பலவீனமானவர்களாக / கோழைகளாக மற்றும் சிடுசிடுப்பானவர்களாகப் பிறப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லையே. கோபமுள்ள, எரிச்சலுள்ள, இச்சையுள்ள குழந்தைகளெனப் பிறந்தவர்கள் விஷயத்தில், இவர்களில் இதைப் பதியவைத்திட்டதான இவர்களுடைய தாய்மார்களுடைய அனுபவங்களைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கையில், இவர்கள் இப்படிப் பிறந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லையே. நியாயமாய்ச் சிந்தித்திடும் பெற்றோர்கள் அனைவரும், இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்கையில், நிச்சயமாகவே தங்கள் பிள்ளைகளில் சரியான அஸ்திபாரங்களைப் போடுகின்றவர்களாய் இருப்பார்கள் – இந்த அஸ்திபாரத்தினுடைய அடிப்படையில்தான் பிற்பாடு பெற்றோர் – நீதியின் உயர் கொள்கைகள், பரிசுத்த அலங்காரம் மற்றும் சிருஷ்டிகருக்கான நேர்மை ஆகியவற்றிற்கு இசைவாகப் பொறுமையோடும், ஜாக்கிரதையோடும், அன்போடும் தங்கள் பிள்ளைகளை வளர்த்துகின்றவர்களாய் இருப்பார்கள்!