R5475 (page 173)
தேவ ஜனங்கள், தேவனுக்குச் சித்தத்தை முழுமையாய் ஒப்புக்கொடுப்பதின் வாயிலாக மாத்திரமே அவருடன் உறவிற்குள் வரமுடியும் என்று புரிந்துகொள்ள வேண்டும். கர்த்தருக்குத் தவிர மற்றபடி வேறு யாருக்காகிலும் இப்படிச் சித்தத்தை ஒப்புக்கொடுத்திடும் காரியம் ஞானமற்றதாய் இருக்கும்;; மேலும் சிறுபிள்ளைகள் விஷயத்தில் அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு அல்லது ஆசிரியர்களுக்குச் சித்தங்களை ஒப்புக்கொடுத்திடலாம்.
பிள்ளையானவன் சரியாகப் பின்வருமாறு: “எனக்கென்று சொந்தச் சித்தம் ஒன்று உள்ளது, ஆனாலும் நான் அதைப் புறக்கணித்து என் பெற்றோரின் சித்தத்தைச் செய்திடுவேன்”என்று சிந்திக்கலாம். இதுவே நல்ல மற்றும் அறிவுள்ள பெற்றோர்களின் கரங்களில் காணப்படும் பிள்ளைக்கான தகுதியான மனப்பாங்காகும். பிள்ளையானவனுக்கு அவனுடைய சித்தம் பயிற்றுவிக்கப்படவில்லையென்றும், ஆகையால் அவன் தனது பெற்றோர்களுக்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து வழிக்காட்டுதலுக்காகவும், வழிநடத்துதலுக்காகவும் பெற்றோர்களை நோக்கிட வேண்டும் என்றும் உணரத்தக்கதாகக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். பிள்ளையைக் கண்காணிக்கும் தன் பொறுப்பினை அடையாளம் கண்டுகொள்ளும் ஒவ்வொரு பெற்றோரும், பிள்ளையை அவனுடைய சுயாதீனத்தின் கண்ணோட்டத்தின்படியே கையாண்டிட / நடத்த வேண்டும்; மேலும் காரியங்கள் ஏன் இன்னின்னபடியாகச் செய்யப்படுகின்றது என்பதற்கான காரணத்தைப் பிள்ளைக்குக் காண்பிக்க நாடி, கூடுமானமட்டும் பிள்ளையினுடைய சொந்தச் சித்தத்தை அறிவுள்ள விதத்தில் பிள்ளையைக்கொண்டு செயல்படவைத்தே, பிள்ளையைக் கட்டுப்படுத்திட நாடிட வேண்டும்.