R934 – நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R934 (page 7)

நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்

WHAT WILT THOU HAVE ME TO DO?

அப்போஸ்தலர் 9:6
ஆண்டவரில் உண்மையாய் அன்புகொண்டிருக்கும் இருதயத்தினால் – அவரது வார்த்தையின்மூலமாய் அவரது ஆவியில் பங்குகொண்டிருக்கும் இருதயத்தினால் அலட்சியமாகவோ, சோம்பலாகவோ இருக்க முடியாது; மேலும் அவரது மாபெரும் வேலையின் அளவானது, ஊழியம்புரிவதற்குத் தொடர்ச்சியான உந்துதலாய் இருக்கும். இத்தகைய ஒருவரின் ஜெபமானது, “ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?” என்பதாகவே இருக்கும். சரியான வைராக்கியம் என்பது ஏனோதானோ என்று வேலையில் ஈடுபடாமல், கர்த்தருடைய திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்திடும்.”ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (கலாத்தியர் 6:10) என்று பவுலடிகளார் கூறியுள்ளார்.இப்பாடத்தில் மூன்று காரியங்களானது விசேஷமாய்ப் பார்க்கப்படவிருக்கின்றது. முதலாவதாக நமது கடமைகளினால் நமக்கான வாய்ப்புகள் வரையறுக்கப்படுகின்றது. இரண்டாவதாக நமது சிறந்த ஆற்றல்கள் அனைத்தும் கூடுமானமட்டும் விசுவாச வீட்டாருக்கென்று பிரயோகிக்கப்பட வேண்டும்; அதேசமயம் விசேஷமானதாகவும், பிரதான முக்கியத்துவம்கொண்டதாகவும் காணப்படும் வேலைகளில் குறுக்கிடாத அளவிற்குள்ள, உலகத்திற்கு நன்மைசெய்யும் வாய்ப்புகள்கூடப் பயன்படுத்தப்படலாம். மூன்றாவதாக விசுவாச வீட்டாருக்கு நன்மைசெய்வதற்கான எந்த வாய்ப்புகளையும் நம்மால் கண்டுகொள்ள முடியவில்லையெனில், நமது ஆற்றல்கள் அனைத்தும் மற்றவர்களுக்காய்ப் பிரயோகிக்கப்பட வேண்டும்.பவுல் அடிகளார் வாயிலான இந்தப் போதனையானது, ஒருவனது தாலந்துகளானது எவ்வளவுதான் மங்கலாகத் தெரிகின்றதாய் அல்லது எவ்வளவுதான் வரையறுக்கப்பட்டதாய் இருப்பினும், ஒவ்வொருவருக்கும் வேலையிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. பெரிய குடும்பத்திற்கு அவசியமான அநேகம் பராமரிப்புகளுக்கடுத்த காரியங்களினால் சூழப்பட்டிருக்கும் ஒரு தாயாக நீங்கள் இருக்கலாம்; அல்லது குடும்பத்தின் தேவைகளைத் தொடர்ந்து சந்திப்பதற்கென்று கடினமான மற்றும் நீண்டநேர உழைப்பினால் அடையும் சிறு சம்பாத்தியத்தையுடைய ஒரு தகப்பனாய் நீங்கள் இருக்கலாம். உங்களுக்கான பரம அழைப்பினையும், வேலையும் குறித்து உணர்ந்துகொள்வதற்கு முன்னதாகவே இந்தப் பராமரிப்புகளுக்கடுத்த காரியங்களானது உங்களைக் கிட்டத்தட்ட திணறடிக்கும் அளவிற்கு உங்கள்மீது காணப்பட்டிருந்திருக்கலாம்; மேலும் இவைகள் இப்பொழுது புறந்தள்ளப்படமுடியாது, புறந்தள்ளப்படவும்கூடாது; ஆகையால் இவைகள் இப்பொழுது உங்கள் கடமையின் ஒரு பாகமாக இருக்கின்றன; மேலும் கர்த்தருக்குச் செய்வதுபோல் அவைகள் உண்மையாய் நிறைவேற்றப்பட்டால், அது உங்களது அன்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான சான்றுகளாய் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்.சில தாய்மார்கள் தங்கள் இல்லங்களிலேயே எப்போதும் வேலையில் ஈடுபட்டுள்ளவர்களாகவும், அவசியம் இப்படி ஈடுபட்டிருக்க வேண்டியவர்களாகவும் இருக்கையில், வெளியில் போய் ஊழியம்புரிவதற்கு வாய்ப்பில்லாதவர்களாய் இருப்பார்கள்; எனினும் இதேபோன்ற நிலைமையில் காணப்படும் அயலார்களிடம் இத்தாய்மார்கள் அடிக்கடி பேசிடலாம். ஆகையால் இங்கும், உங்கள் சொந்த இல்லத்திலும் உங்களுக்கான வேலையிருக்கின்றது. அநேகமாக இத்தகைய அயலார்களில் யாரும் விசுவாச வீட்டாராய் இருப்பதில்லை மற்றும் அவர்களிடம் இத்தகைய காரியங்கள் குறித்தும் பேசுவதினால் பயனில்லை என்றும், அவர்கள் கவனம் செலுத்தமாட்டார்கள் என்றும், என்னை விநோதமானவளாக மாத்திரம் எண்ணிக்கொள்வார்கள் என்றும் நீங்கள் சொல்லலாம். ஆனால் இவ்விஷயமானது அவர்களை நீங்கள் எப்படி ஞானமாய்க் கையாளுகின்றீர்கள் என்பதைச் சார்ந்துள்ளது. ஆவிக்குரிய காரியங்களில் ஆர்வம் அற்றவர்களிடம், ஆவிக்குரிய காரியங்களைக்குறித்துப் பேசுவது ஞானமற்றக் காரியமாய் இருக்கும்; ஏனெனில் சுபாவத்தின்படியான மனுஷன் ஆவிக்குரிய காரியங்களை ஏற்றுக்கொள்ளான், அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, காரணம் அவைகள் ஆவியில் நிதானிக்கப்படுகிற காரியங்களாகும். ஆனால் இத்தகையவர்களினால் சுபாவத்தின்படியான காரியங்களைப் [R935 : page 7] புரிந்துகொள்ள முடியும், உதாரணத்திற்குச் சுபாவத்தின்படியான மனுஷனுக்குரிய திரும்பக்கொடுத்தலின் காரியங்கள் பற்றியாகும். உங்கள் சிறுபிள்ளைகளாலும்கூட இதற்கும் அதிகமாய்ப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் சுபாவ மனுஷனுக்குரிய தளத்தில் காணப்படுகின்றனர்; ஆனால் அவர்கள் இப்பொழுது பெற்றுக்கொள்ளும் அறிவுரை அல்லது பயிற்சி எதுவும் அவர்களை இறுதியில் பரிபூரணத்திற்குக் கொண்டுவரப்போகின்ற, பொதுவான அந்தப் படிப்பித்தல்களில் ஒரு பாகமாகக் காணப்படும். உங்கள் வேலையினை மரணமானது குறுக்கிட்டாலும், உங்கள் வேலை நஷ்டத்திற்குள்ளாகுவதில்லை. ஒருவேளை அது இந்த யுகத்தில் மிகப்பெரியளவில் பலனுக்குரிய தோற்றத்தினைக் காண்பித்திடவில்லை என்றாலும், அது அடுத்த யுகத்தில் தெரிந்துவிடும்.களைப்புற்ற தகப்பனுடைய மாலைவேளைகளானது, தனது குடும்பத்திலும், அயலார்கள் மத்தியிலும் ஆற்றப்படும் இந்த மேற்கூறிய சந்தோஷகரமான மற்றும் பாக்கியமான வேலைகளுக்கு உதவுவதில் பயன்படுத்தப்படலாம்; ஒருவேளை ஆண்டவரைக் கனப்படுத்துவதற்கான ஒவ்வொரு வாய்ப்புகளுக்காகவும் இவர் விழித்திருப்பாரெனில், இவர் விசுவாச வீட்டாரிலுள்ள சிலருக்கு அல்லது அன்றாடம் தன்னுடன் தொடர்புக்குள் வரும் உலகத்தாரில் சிலருக்குச் சில சத்தியங்களைச் சொல்லமுடிகிறவராய் இருப்பார் அல்லது நிலையான கிறிஸ்தவ குணலட்சணத்தின் வெளிச்சத்தினை இவர்கள்முன் பிரகாசிப்பிக்கப்பண்ண முடிகிறவராகவாவது இருப்பார்.இந்த வாய்ப்புகளோடுகூட இவர் தொலை தூரத்திலிருக்கும் நண்பர்களுக்கு, மகிமையான செய்தியின் சிறுபாகம் உள்ளடக்கப்பட்ட கடிதங்களை எழுதிடலாம். இப்படியாகத் திறமையற்றவர்கள் அநேகரும், மிகக் குறுகலான வட்டத்திற்குள் அடைக்கப்பட்டவர்களுமானவர்கள் நற்செய்தியினைப் பரப்பிடுவதற்கான சில வாய்ப்புகளைக் கண்டடையலாம். மேலும் இத்தகையவர்கள் பாடுகள் மத்தியில் பொறுமையுடன்கூடிய தங்களது சகிப்பினாலும், அசைவுறாத தங்களது விசுவாசத்தினாலும், மேலும் தேவைகளுக்காய் வேலைபுரிவோருக்கு ஆலோசனையான மற்றும் உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவதின்மூலம் அடிக்கடி தேவனை மகிமைப்படுத்திடமுடியும். நமது வெளிச்சத்தினைப் பிரகாசிக்கப்பண்ணிடுவதற்கான வழிகளை நாம் எண்ணிப்பார்க்கையில் ஓ! வெளிச்சத்தைப் பிரகாசிப்பதற்கு எத்தனை அநேகம் வழிகள் இருக்கின்றன! வெளிச்சத்தை மரக்காலின்கீழ், மூடிவைத்திடுவதற்கும்கூட அநேகம் வழிகள் இருக்கின்றன. நீங்கள் பிரயோஜனமாய்க் காணப்படுவதற்கான வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்வதற்குக் காணப்படும் மற்ற அநேகம் வழிகளைக்குறித்துச் சிந்தித்துக்கொள்ளலாம். பெரிதளவிலான பலன்களை அடைவதற்கு வேண்டி, நம்முடைய தாலந்துகளை எப்படிப் பயன்படுத்துவது என்று ஆராய்ந்து அறிந்துகொள்வது என்பது நம்முடைய சிலாக்கியம் மற்றும் கடமையின் பாகமாய் இருக்கின்றது. இந்தக் கடமையானது தாலந்து உவமைகளில் தெளிவாய் முன்வைக்கப்பட்டுள்ளது; பணத்தினை இலாபம் ஈட்டுவதற்காக நாம் முதலீடு செய்வதுபோலத் தாலந்துகளைக் கர்த்தருக்காய் முதலீடு செய்வதும் அவசியமாகும் (மத்தேயு 25:14-30).நாம் மேலே குறிப்பிட்டுள்ளதான வகுப்பார், மிகவும் வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளை உடையவர்கள் ஆவர்; இவர்கள் கர்த்தருக்காய்க் கொண்டிருக்கும் பக்தியானது உறுதியானதாகக் காணப்பட்டு, இவர்கள் தங்களுடைய ஒன்று அல்லது இரண்டு தாலந்துகளைச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவார்களெனில், இவர்களில் சிலர் அதிகமான தாலந்துகளையும், வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ளலாம். சிலருக்குச் சிறிய குடும்பத்தினர் அல்லது வளர்ந்தவர்களை உள்ளடக்கின குடும்பம் காணப்படலாம் அல்லது குடும்பம் இல்லாமல் இருக்கலாம்; இவர்கள் நேரத்தையும், ஏற்பாடுகளையும் ஒழுங்குப்படுத்திக்கொள்வார்களானால், வெளியில் சென்று ஊழியம்புரிந்திடுவதற்குரிய அநேகம் மணி நேரங்களைப் பெற்றிருப்பார்கள். உங்கள் சமுகத்தின் மக்கள் அனைவரும் சபை பிரிவுணர்ச்சிக்குள் பிணைக்கப்பட்டிருப்பதினால், நீங்கள் பிரயாசம் எடுப்பதற்கு முன்னதாகவே, உங்களது பிரயாசத்திற்குப் பலனிராது என்று நீங்கள் எண்ணிடலாம். ஆனால் உண்மையில் அப்படித்தானா? இக்காரியத்தினை நீங்கள் சோதித்துப் பார்த்திருக்கின்றீர்களா? உங்கள் பட்டணத்தில் அல்லது கிராமத்தில் அல்லது உங்கள் தொடர்புக்குள் காணப்படுபவர்களில் ஒருவர்கூட உண்மையான விசுவாச வீட்டாராய் இல்லை என்று சந்தேகத்திற்கு இடமின்றி சோதித்துப் பார்த்துவிட்டீர்களா? ஞானமாய் இக்காரியத்தினை நீங்கள் சோதித்துப் பார்த்திருக்கின்றீர்களா?இப்படிச் செய்திருப்பீர்களானால், நீங்கள் உங்கள் பாகத்தையாகிலும் உண்மையாய்ச் செய்தவர்களாய் இருப்பீர்கள்; மேலும் இந்த உண்மையானது ஆண்டவரின் கவனத்திலிருந்து தப்பிடுவதில்லை இதைக்குறித்து உறுதியாயிருங்கள். ஆனாலும் ஒருவேளை இப்படித்தான் சூழ்நிலை இருப்பினும், அந்த அயலார்கள் மத்தியில் இன்னமும் உங்களால் பிரயோஜனம் உண்டாகும் களம் இருக்கவே செய்கின்றது. உலகத்தின் பிள்ளைகளில் சிலர் அநேகமாக மிக ஏழைகளாக, அநேகமாக மிக அறியாமையில் உள்ளவர்களாக அல்லது சீரழிந்தவர்களாக அங்குக் காணப்படலாம்.இத்தகையவர்கள்மீது கவனம் செலுத்துவதற்கோ அல்லது இவர்கள்மீது அக்கறைக்கொள்வதற்கோ யாருமே எண்ணியிருந்திருக்க மாட்டார்கள். ஒருவேளை பலரால் மதிக்கப்படுகின்ற நீங்கள் இத்தகையவர்களை, தொண்டு ஆற்றுகின்றோம் எனும் தோற்றத்தில் இல்லாமல், உண்மையாய் நண்பர்கள் அல்லது அயலார்கள் என்று அழைப்பீர்களானால், இது இத்தகையவர்களின் பாலைவன ஜீவியத்தில் எத்தகையதொரு பாலைவனச் சோலையாய்க் காணப்படும்!இத்தகையவர்கள் அநேகர் நமது ஆண்டவருக்குச் சந்தோஷமாய்ச் செவிக்கொடுத்திருக்கின்றனர். இத்தகையவர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியோடு செவிக்கொடுத்திடுவதற்கு வாய்ப்புண்டு. சில இடங்களில் கோதுமைகள் அனைத்துமே பெயர்ச்சபையிலிருந்து கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்; மேலும் அவ்விடங்களில் உங்கள் ஊழியங்களுக்குப் பலனையோ அல்லது மேலும் வாய்ப்புகளையோ காணமுடியாது, காரணம் அவர்கள் உங்களுக்குச் செவிக்கொடுக்கக்கூடாது என்று தீர்மானமாயிருப்பார்கள்; அதிலும் சிலர் கொஞ்சம் காலம் எதிர்ப்பவர்களாய் இருப்பினும், அவர்கள் நம் நிலைப்பாட்டினுடைய உறுதி என்ன என்று காணமாத்திரமே அப்படிச் செய்கிறவர்களாய் இருப்பார்கள். அப்படியானால் அதை அவர்கள் காண அனுமதித்து, தேவனை மகிமைப்படுத்துங்கள். மிகவும் தாமதமாக வருவதாக இருப்பினும், ஏற்றவேளையில் கனி வெளிப்படும். இவ்வுலகத்தின் ஏழைகளையாகிலும், நீங்கள் எப்போதும் உங்களுடன் பெற்றிருப்பீர்கள். இங்குச் சத்தியத்தைத் துணிந்து தள்ளின குருடரான யூதர்கள் சிலருக்கான பவுலினுடைய வார்த்தைகளை நாம் நினைப்பூட்டுகின்றோம். “அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே (தேவனுடைய ஏற்பாட்டின் ஒரு பாகமாக) தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்” (அப்போஸ்தலர் 13:46-47).அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் உலகம் அனைத்திற்கும் வெளிச்சமாக வைக்கப்பட்டுள்ளனர். அது இப்பொழுது கூடுமானமட்டும் அதிகமாய்ப் பிரகாசிப்பதாக. விசுவாச வீட்டார் என்று தங்களைக்குறித்துக் கூறிக்கொள்பவர்கள் ஒருவேளை சத்தியத்தை மறுப்பார்களானால், உங்கள் வெளிச்சத்தை, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தின்மேல் திருப்பிடுவது உங்களுக்கான சிலாக்கியமாகும். எங்குப் பயன்படுவதற்கான அநேகம் வழிகள் திறந்திருக்கின்றதோ, எங்கு ஊழியம்புரிவதற்குரிய அவசியம் மிகுதியாய்க் காணப்படுகின்றதோ, அங்கு அர்ப்பணம்பண்ணியுள்ளவன் ஒருவேளை தனது அழைப்பை மறந்துபோய், அனலுமின்றி குளிருமின்றி ஆகிப்போய், அலட்சியம்பண்ணுகிறவனாய் மாறிப்போனால் தவிர, மற்றப்படி உண்மையாய் அர்ப்பணம்பண்ணியுள்ளவனால் ஒன்றுஞ்செய்யாமல் இருக்கமுடியாது.இப்படிச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் செல்வது என்பது உங்களது முற்காலத்து நண்பர்கள் அநேகரிடமிருந்து நிந்தனையை உங்கள்மீது சுமத்திடும். நிந்தனை வரும் என்று நீங்கள் அறிவீர்கள்; ஆனால் இதைக்குறித்து – நீங்கள் உங்கள் அனைத்தையும் பலிபீடத்தில் வைத்தபோதே – நீண்ட காலங்களுக்கு முன்னதாகவே சிந்தித்து, யோசித்துவிட்டீர்கள். அதைக்குறித்து இப்பொழுது மீண்டும் சிந்தித்து யோசித்துக்கொண்டிராதீர்கள். “கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய இராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல” (லூக்கா 9:62). ஒருவேளை வன்முறையான எதிர்ப்புகளாக இல்லையென்றாலும், நீங்கள் அநேகம் புறக்கணிப்புகளை எதிர்க்கொள்வீர்கள்; ஆனாலும் நற்செய்தியினைப் பரப்புவது என்பது உங்களது பிரதான மற்றும் ஒரே நோக்கமாக இருக்குமானால், இந்தப் புறக்கணிப்புகளை இலேசானவைகளாகக் கருதிடுவீர்கள். உங்கள் பிரயாசங்களுக்குப் பலன்கள் இல்லாததுபோன்று தோன்றினால், சோர்வடையாதீர்கள்; ஏனெனில் “அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் (குருடாக்கப்பட்டவர்களின் மற்றும் பாடுகள் படுகிறவர்களின் மீதான அனுதாபத்தினால்) அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.” (சங்கீதம் 126:6) – திருமதி C. T. ரசல்.