R1554 (page 212)
“பிணைக்கப்படாத நிலைமையில் இருப்பவர்களாகிய – அதாவது திருமணம்பண்ணாதவர்களாய் இருப்பவர்களாகிய, அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்குக் கர்த்தரிடத்திலுள்ள, தங்களது அர்ப்பணிப்பின் வாக்குறுதியினை நிறைவேற்றிடுவதற்கு, இத்தகைய நிலைமையே மிகமிக அனுகூலமானதாய் இருக்குமென அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுரை வழங்குகின்றார் (2 கொரிந்தியர் 6:14; 1 கொரிந்தியர் 7:25-40). ஆனாலும் திருமணம்பண்ணாதவர்களாய் இருந்துவிடுவதற்கான அறிவுரை என்பது கட்டாயமாய்ச் செய்யப்பட வேண்டியதல்ல என்று நாம் புரிந்துகொள்ளும்படிக்கு அப்போஸ்தலன் விரும்புகின்றார் (1 கொரிந்தியர் 7:35,36). திருமணம்பண்ணிடுவதற்கு யாரும் தடைப்பண்ணப்படுகிறதில்லை திருமணம்பண்ணிடுவதற்குத் தடைப்பண்ணுகிறவர்களாகிய கள்ளப்போதகர்கள் கடுமையாய் ஒழுங்கிற்கு மீறினவர்கள் எனக் கண்டிக்கப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றனர் (1 தீமோத்தேயு 4:1-3). போப்மார்க்கமானது அதன் குருமார்கள் மீது கொண்டுவந்திட்டதான இந்தத் தடையானது, அதன் நாசகரமான சரித்திரத்தைக் கருமையாக்கிட்ட நாற்றமான கறைகளில் ஒன்றாகும். தேவன் திட்டம்பண்ணியிருந்ததுபோன்று திருமண உறவானது தூய்மையிலும், பரிசுத்தத்திலும் தக்கவைக்கப்படுமானால், திருமணம் இன்னுமே கனமிக்க ஒன்றாயிருக்கும் (எபிரெயர் 13:4). திருமண பந்தத்தில் இணைந்துள்ள இருவருமே ஒரே நுகத்தில் பிணைக்கப்பட்டவர்களாய் இருப்பார்களானால் மற்றும் அவர்களின் இருதயங்களானது ஒரே பரிசுத்த நோக்கத்திற்கடுத்த காரியங்களுக்காகத் துடிக்கும்போது – அதுவும் ஒருவேளை அந்த நோக்கமானது பூமிக்குரிய தளத்திற்கடுத்ததாய் இருந்து, சந்ததியாரைப் பெருக்குவதற்கும், சந்ததியைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் வளர்த்துவதற்கும் என்று இருந்தாலும் சரி (ஆதியாகமம் 1:28; எபேசியர் 6:4) அல்லது ஆவிக்குரிய தளத்திற்கடுத்ததாய் இருந்து தேவனுடைய ஆவிக்குரிய குடும்பத்திருக்கென்று நுகத்தில் பிணைக்கப்பட்டுள்ள உண்மையுள்ளவர்களெனச் சேர்ந்து வேலை செய்வதாய் இருந்தாலும் சரி… அந்த நோக்கத்திற்க்கடுத்த காரியங்களுக்காக இருதயம் துடிக்கும் போது, திருமணம் இன்னுமே கனமிக்க ஒன்றாயிருக்கும்.
எனினும் மிகவும் அபூர்வமாகவே, அர்ப்பணிக்கப்பட்டவர்கள் தேவனோடு தனித்துச் சஞ்சரிப்பதன் மூலமும், எல்லா விஷயங்களில் தன் விருப்பத்தை மாத்திரமே கலந்தாலோசிக்கப் பெற்றிருப்பதன் மூலமும், குடும்பத்திற்கடுத்த அக்கறையினால் முழுவதுமாய்த் தடைப்பண்ணப்படாததன் மூலமும் தங்கள் உடன்படிக்கையினை நன்கு நிறைவேற்ற முடிகின்றவர்களாய் இருப்பார்கள். இதுவே பவுல் அடிகளாருடைய கணிப்பாக இருந்தது; மேலும் இதுவே தங்கள் வாலிபப் பிராயத்தில் தங்கள் சிருஷ்டிகரை நினைவுகூருவதற்கு மறந்துபோனவர்களும் மற்றும் பல்வேறு கவலைகளில் சிக்கிக்கொள்வதற்கு முன்னதாகவும், தங்களின் தவறான போக்கினுடைய விளைவு காரணமாய்த் தடைப்படுவதற்கு முன்னதாகவும் தங்கள் வழியினைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பதற்கு மறந்துபோனவர்களுமான ஆயிரக்கணக்கானோரின் சாட்சியாக இருந்துள்ளது (பிரசங்கி 12:1; சங்கீதம் 37:5; நீதிமொழிகள் 3:5,6).
1தீமோத்தேயு 5:14-ஆம் வசனத்தின் வார்த்தைகளானது கர்த்தருக்கு அர்ப்பணம் பண்ணியுள்ள வாலிபச் சகோதரிகள் பற்றியதாயிராமல், மாறாக 3 முதல் 16-வரையிலுள்ள வசனங்களுக்கு இசைவாக, அவ்வார்த்தைகள் சபையிலுள்ள இளம் விதவைகள் குறித்துப் பேசப்பட்டவையாயிருந்தது; இவர்கள் சபைக்குப் பொருளாதார விஷயத்தில் பாரமாய் இருத்தல் கூடாது. இத்தகையவர்களில் எவரேனும், அதாவது ஜீவபலியாய் ஜீவித்திடும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் அல்லாதவர்கள் எவரேனும், விசுவாச வீட்டாரின் விசுவாசிகளாய் இன்னமும் இருப்பதினால், இவர்கள் திருமணம் முதலியவைகளைச் செய்துகொள்வார்களாக. இப்படியாய்ப் பார்க்கும்போது இந்த வேதவாக்கியமானது, புதிய ஏற்பாட்டினுடைய பொதுவான போதனைகளுக்கு இசைவாகவே உள்ளது.
நாம் யாருக்கு மாத்திரம் பேசிக்கொண்டிருக்கின்றோமோ, அந்தத் தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளைகள் மத்தியில், ஒரு சிறுபான்மையினர் மாத்திரமே வாலிபப் பிராயத்திலும், இந்த ஜீவியத்தின் சிக்கல்களிலிருந்து விடுபட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இத்தகையவர்கள் அனைவருக்கும், மேலே இடம்பெறும் அப்போஸ்தலனால் ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ளவைகளுக்கும் மேலாக வேறு எந்த அறிவுரையும் [R1554 : page 213] நாம் கூறிடுவதற்கில்லை. அவ்வசனங்களோடுகூட நாம் கூறிடுவதாவது: “”உங்கள் சிலாக்கியங்கள் குறித்துக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இராதேயுங்கள்; உங்கள் உக்கிராணத்துவத்தை நன்கு பயன்படுத்திடுங்கள்; உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள ஓட்டத்தில், நம்முடைய மகிமையான மணவாளனாகிய, இயேசுவைத் தேவையான கிருபை மற்றும் ஐக்கியத்திற்க்காய் நோக்கிப்பார்த்துப் பொறுமையோடே ஓடுங்கள்; மரணப்பரியந்தம் உண்மையுள்ளவர்களாய் இருங்கள் மற்றும் நீங்கள் சோர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்தில் மகிமையான பலனை அறுப்பீர்கள். குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் (பூமிக்குரிய ஐக்கியங்களை) மறந்துவிடு. அப்பொழுது இராஜா உன் அழகில் (குணலட்சணத்தில்) பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.”” (சங்கீதம் 45:10,11)
இந்தக் கருத்துக்களானது உலகத்தாருக்குப் பொருந்துகிறதில்லை மேலும் இவைகள் பரிசுத்தவான்கள் மீது கட்டாயமாகவும் காணப்படுகிறதில்லை. இந்தப் பரிந்துரையானது நலம் அளிக்கிறவைகளில் ஒன்றாகும் – இது தனிப்பட்ட வளர்ச்சிக்கும், கர்த்தருடைய பொதுவான வேலை முன்னேற்றம் அடைவதற்கும் உதவுகிறதாய் இருக்கும் மற்றும் இது மத்தேயு 19:12-ஆம் வசனத்தில் இடம்பெறும் கர்த்தருடைய போதனைகளுக்கு இணையானதாகும். உலகத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்ளட்டும் மற்றும் உண்மையுள்ள, அன்புள்ள கணவன்மார்களென, மனைவிமார்களென மற்றும் பெற்றோர்களென உலகில் கனமிக்க ஸ்தானங்களை எடுத்துக்கொண்டு, நிறைவேற்றிடட்டும்; மேலும் வளமையும், மகிழ்ச்சியுமுள்ள இல்லங்களின் செல்வாக்கானது கூடுமானமட்டும் கடந்துவந்து, துயர்மிகுந்தவர்களின் மற்றும் குடும்பங்களற்றவர்களின் மகிழ்ச்சியற்ற சூழ்நிலைகளை நல்லதாக்கட்டும். அப்போஸ்தலனின் விசேஷித்த அறிவுரையோ… ஜீவபலியாய்க் காணப்படுவதற்கு அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களுக்கு – ஆண்டவரின் பயன்படுத்துதலுக்காய் முழுமையாய் ஒப்புக்கொடுத்துவிட்டு, மகா மேன்மையான பலனை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படிக்குக் காத்திருப்பவர்களுக்கு மாத்திரம் உரியதாகும்.
ஆனால் ஏற்கெனவே அவிசுவாசியுடன் பிணைக்கப்பட்டுள்ள நிலைமையிலும், அநேகம் கவலைகளினால் தடையோடு இருக்கும் நிலைமையிலும், அநேகம் குழப்பமான பிரச்சனைகளினால் மனவேதனையுள்ள நிலைமையிலும் காணப்படும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளவர்களில் காணப்படுவோருக்கு நாங்கள் கூறுவதாவது: “”தைரியமாயிருங்கள்! இருளினின்று உங்களைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்தவரும், மகிமை, கனம் மற்றும் அழியாமைக்கு நேராய் வழிநடத்திடும் இடுக்கமான வழிக்குள் உங்களை நடத்தினவருமானவர், இந்த வழியானது உங்களது தற்போதைய சூழ்நிலையில் உங்களுக்கு எவ்வளவு கடினமாயிருக்கும் என்று அறிவார்; மேலும் அவரது பொங்கி வழியும் கிருபை மூலமாய் உங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திடுவதற்கென, உங்களையும், உங்கள் திறமைகளையும் அவர் ஏற்றுக்கொண்டிட விரும்புகின்றார் என்பதை, அவருடைய அழைப்பானது சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.”” எனினும் அப்போஸ்தலன் முன்னெச்சரித்தது போன்று, இத்தகையவர்களுக்கு மாம்சத்தில் பிரச்சனைக் காணப்படவே செய்யும் (1 கொரிந்தியர் 7:28).
விசுவாசியாய் இருக்கும் கணவன், அவிசுவாசியான தன் மனைவியினைத் தள்ளிவிடக்கூடாது மற்றும் விசுவாசியாய்க் காணப்படும் மனைவி, அவிசுவாசியான தன் கணவனைத் தள்ளிவிடக்கூடாது, மாறாக சமாதானமாயிருக்க நாட வேண்டும் எனும் அப்போஸ்தலனுடைய அறிவுரையை நினைவுகூருகையில் (1 கொரிந்தியர் 7:10-16) அர்ப்பணம் பண்ணியுள்ளதான விசுவாசி தேவன் முன்னிலையிலும், அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட்டுள்ள தன் ஜீவித துணையின் முன்னிலையிலும் எத்தனை ஜாக்கிரதையாய் நடக்க வேண்டும் என்றும் நாம் காண்கின்றோம் (மத்தேயு 19:3-10). எத்தனை தாழ்மை அவசியம் மற்றும் வரும் அநேகம் சோதனைகளை எத்துணைப் பொறுமையோடு சகித்திட வேண்டும். எனினும் அன்புக்குரியவர்களே, அப்படிச் சோதிக்கப்படும்போது, பொறுமையானது பூரண கிரியைச் செய்யக்கடவது மற்றும் ஏற்றவேளையில் நீங்கள் சுத்தமாக்கப்பட்டவர்களாகச் சூளையினின்று வெளியே வருவீர்கள். பரிசுத்த அலங்காரத்தை வெளிப்படுத்துவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்; ஒருவேளை இது உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதை மாற்றாவிட்டாலும், இது அவனுக்கு அல்லது அவளுக்கு எதிராய்ச் சாட்சியாகவாகிலும் இருக்கும் மற்றும் பரிசுத்தமாகுதலின் தாக்கமானது, குழந்தைகள் மற்றும் அயலார்கள் மீது இல்லாமல் போகாது; தேவனுக்குத் துதி உண்டாகுவதாக!
இத்தகைய மனைவி, மனைவிக்குரிய கடமைகளைக் கவனமாய் நிறைவேற்றிடுவாளாக மற்றும் ஒருவேளை தன் கணவன் மீதான மதிப்பைப் பெரிதளவு இழந்துபோக வேண்டிய நிலைமைக்குள்ளானாலும், அவள் கணவன் என்ற உறவிற்கு மதிப்புக்கொடுப்பாளாக. மேலும் இத்தகைய கணவன், குடும்ப ஜீவிதத்திற்கடுத்த பராமரிப்பினுடைய வேலைகள் வலியுள்ளதாக இருப்பினும், கணவனுக்குரிய கடமைகளைக் கவனமாய் நிறைவேற்றிடுவானாக. “”மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் (அவன் / அவள்) பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்”” (1 கொரிந்தியர் 7:16; 7:15).
ஆனால் திருமண பந்தத்தினைப் பிரித்திடும் சரியான முகாந்திரமென ஒரு காரணமானது, வேதவாக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது (மத்தேயு 19:3-10). நமது ஆண்டவருடைய இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, பரிசேயர்கள் போன்று சீஷர்களும் ஆச்சரியம் அடைந்து, இப்படியாகக் காரியம் இருக்குமானால்… அதாவது விவாக உடன்படிக்கையானது இப்படியாகப் பிணைக்கப்பட்டுள்ளதானால், முறிக்கப்பட முடியாததானால்… விவாகம் செய்வது நல்லதல்ல… அபாயமானதாய் இருக்குமே என்று கூறினார்கள். இப்படியான விதத்தில் கர்த்தர், நாம் இவ்வுறவினைக் கருதிட விரும்புகின்றார். குற்றமற்றவரைக் குற்றம்புரிந்தவரிடமிருந்து, உண்மையற்றவரிடமிருந்து விடுவித்திடும் அந்த ஒரே காரணம் தவிர மற்றப்படி, விவாக ஒப்பந்தத்தை மரணமானது பிரிப்பது வரையிலும், விவாக ஒப்பந்தமானது, தொடர்ந்து நீடிக்கிற ஒன்றாகும். ஜீவியத்திற்கெனப் பரஸ்பரம் ஒருவரோடொருவர் பண்ணிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் காரணமாய் இணைக்கப்பட்டுள்ள இருவரும், இதுமுதற்கொண்டு இருவரல்ல, மாறாக ஒரே மாம்சமாய் இருக்கின்றனர்; மேலும் தற்கால ஜீவியத்திலுள்ள அவர்களின் எதிர்கால மகிழ்ச்சி, வளமை யாவும் அவர்களுடைய நேர்மையினை, பெருந்தன்மையினை, அன்பினை, ஒருவர் இன்னொருவருக்காய்க் கொண்டிருக்கும் அக்கறையினைச் சார்ந்துள்ளதாய் இருக்கின்றது.
திருமண உறவானது அதன் அம்சங்களின் விஷயத்திலும், நீடித்திருக்கும் காலத்தின் விஷயத்திலும், கிறிஸ்து மற்றும் சபையினுடைய என்றென்றும் நிலைத்திருக்கும், உண்மையாயிருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றிணைதலுக்கான நிழலாய் இருக்கும்படிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து சபையானவளை ஒருபோதும் விட்டுவிலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை மேலும் சபையானவளும் அவருக்கான தன் உண்மையினின்றும், விசுவாசத்தினின்றும் விலகிடுவதில்லை. தம்மை விட்டு விலகிடுவதற்கு விரும்புபவர்களுக்குக் கிறிஸ்து அனுமதித்துவிடுவதுபோன்று, ஒருவேளை விசுவாசியிடமிருந்து, அவிசுவாசியான [R1554 : page 214] ஜீவித – துணை பிரிந்துபோனால்… அவன் அல்லது அவள் பிரிந்துபோகட்டும். விசுவாசி ஒருமுறை அவிசுவாசியான ஜீவித துணையினால் விட்டுச் செல்லப்பட்டால், விட்டுச் சென்றவரை மறுபடியுமாக விவாக பந்தத்திற்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விசுவாசிக்குக் கடமை இல்லை… ஆயினும் சரியான மனந்திரும்புதல் இருப்பதற்கான ஆதாரங்களினுடைய அடிப்படையில், சீர்ப்பொருந்திவிடுவதும் நலமே – ஆனாலும் (விட்டுச் சென்ற) முதலாம் ஜீவித – துணை உயிரோடு காணப்படுவது வரையிலும், விசுவாசியான அவன் அல்லது அவள் இன்னொருவரை விவாகம் செய்திடுவதற்கும் கடமையில்லை (1 கொரிந்தியர் 7:11). தன் மனைவியின் தேவைகளை முடிந்தமட்டும் சந்திப்பதற்குக் கணவன் தவறிவிடும் காரியமானது, அவன் விவாக வாக்குறுதிகளுக்கு உண்மையற்றுப் போவதாயிருக்கும்;, மேலும் இப்படிக் காணப்படுகையில் அவன் ஒருவேளை அவளோடு வாழ விரும்பிட்டாலும் மற்றும் அவள் ஆதரவை அவன் பெற்றிருந்தாலும்கூட – அவளைக் கைவிட்டுவிடுவதாக இருக்கும்; கணவன் நோய்வாய்ப்பட்டு இருக்கையில் மற்றும் தேவைகளைச் சந்திக்க முடியாதிருக்கையில்… விவாக உடன்படிக்கைக்கு ஏற்ப மனைவியானவள் முடிவுவரைக் கணவனை ஆதரிப்பதில் தன்னையே ஈடுபடுத்திக்கொள்வது மனைவியின் கடமையாய் இருக்கின்றது.
விவாக உறவின் சிலாக்கியங்கள் மற்றும் கடமைகள் தொடர்புடைய விஷயத்தில் உலகத்தின் கருத்து என்னவாக இருப்பினும் (அந்தோ பரிதாபம்! இக்கருத்துக்கள் தூய்மை மற்றும் நீதிக்கு அப்பாற்பட்டதாகவும், மாம்சத்திற்கு ஏதுவானதாகவுமே காணப்படுகின்றது), கர்த்தருடன் பிணைக்கப்பட்டுள்ளவர்கள் “”ஆவிக்கேற்றபடி (அல்லது கிறிஸ்துவினுடைய மனதின்படி) நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது”” (கலாத்தியர் 5:16,17) எனும் அப்போஸ்தலனின் ஆலோசனையை நினைவுகூர வேண்டும்.
ஆனால் விவாகமான பரிசுத்தவான்கள் அனைவருமே கர்த்தருக்குள் விவாகமானவர்களல்ல மற்றும் இதன் காரணமாய் அநேகர் – இவ்வுறவினுடைய மனுஷீக கோணங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்வதற்கும் மற்றும் இவ்வுறவுக்கடுத்த பூலோக நோக்கங்கள், இலட்சியங்களாகிய… சந்ததியைப் பெருக்கிக்கொள்ளுதல், பிள்ளைகளைப் பராமரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் ஆகியவைகளுக்கு ஓரளவுக்குத் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கும் கடமைப்பட்டிருக்கின்றனர்; இத்தகைய கடமைகளானது விவாக உடன்படிக்கையினால் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது மற்றும் இவைகளிலிருந்து கர்த்தருக்கான அர்ப்பணிப்பானது ஒருவரை ஒருபோதும் விடுவிக்கிறதில்லை. ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியதான கடமைகளானது, விவாகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது மற்றும் இவைகளினின்று இருவரின் பரஸ்பர சம்மதத்தினால் தவிர மற்றப்படி விலகிச் [R1555 : page 214] சென்றிட முடியாது. இது விஷயத்தில் அப்போஸ்தலனின் அறிவுரையானது மிகத்தெளிவாகவும்; விவாகம்பண்ணியுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஆற்ற வேண்டியதான கடமைகள்குறித்து நாம் சற்று முன்பு பார்த்து வந்தவைகளுக்கும் முழுமையாய் இசைவாகவும் காணப்படுகின்றது (1 கொரிந்தியர் 7:1-9). மேலும் இருவரின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதான உரிய கருணையும், தன்னடக்கமும் எந்த விதமான குடும்பப்பிரச்சனைகளையும் மற்றும் அதன் விளைவான பிரிவினைகளையும் தவிர்த்துப்போடுகிறதாய் இருந்து, ஒருவர் இன்னொருவர் மீது கொண்டிருக்கும் அன்பு மற்றும் மரியாதையின் உறுதியான அஸ்திபாரத்தின் அடிப்படையில் ஒற்றுமையினைக் கொண்டுவரவேண்டும். ஆனால் மாம்சத்தின் ஆசைகளை முழுமையாய்க் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும், ஆவியில் நடப்பதற்கும் முடிகிறவர்கள் மற்றும் இப்படி விரும்புபவர்கள் பாக்கியவான்களாய் இருப்பார்கள்; “”(இந்தப் போதகத்தைத் தன்னுடைய நிலைமையிலும், தன்னுடைய சூழ்நிலைமையிலும்) ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன்”” (மத்தேயு 19:12).
தாங்கள் உட்பிரவேசித்துள்ளதான உடன்படிக்கையினுடைய புனிதத்தன்மையினை இவ்விதம் கண்ணோக்குவதற்கும், கருத்தில் எடுத்துக்கொள்வதற்கும் உள்ள நிலைக்குக் கர்த்தருடைய அருமையான ஜனங்களில் சிலர் வருகையில், அநேகமாக இதற்கு முன்புவரை எண்ணியிருந்ததைக் காட்டிலும், எவ்வளவு அதிகமாய்த் தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் தேவனை மகிமைப்படுத்திடலாம் என்பதைக் காணத்துவங்குவார்கள். கடந்துபோன காலங்களிலுள்ள எக்காரியங்களைச் சரிப்படுத்திட வேண்டும் என்று அனைவரும் காணமுடியாமல் இருந்தாலும், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சத்தியத்தினால் தங்கள் ஆத்துமாக்களைப் புத்துயிர் அடையப்பெற்ற சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் மற்றவர்களுக்குச் சத்தியத்தினை வைராக்கியமாய்ச் சுமந்து சென்றிருக்க, தங்கள் கணவன் அல்லது மனைவி சத்தியத்தின் மீது ஆவல் கொண்டவர்களல்ல என்று எண்ணி, இப்படிச் சாதகமாக்கிக் கொள்கின்றார்களல்லவா?
சத்தியத்தின் மீது கவனம் செலுத்த முடியாதளவுக்குத் தங்கள் மனைவிகள் குடும்பத்திற்கடுத்த காரியங்களில் மிகவும் விறுவிறுப்பாய் / busy இருக்கின்றனர் அல்லது சத்தியத்திற்கடுத்த காரியங்களில் ஈடுபடுவதால், உலகத்திடமிருந்து வரும் நிந்தனைக்குறித்துத் தங்கள் மனைவிகள் மிகவும் அச்சங்கொள்வார்கள் என்று சில கணவன்மார்கள் எண்ணி இதன் காரணமாய் அவர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்குச் சத்தியத்தினைச் சுமந்து செல்கின்றனர். ஆனால் இப்படிச் செய்வது என்பது கணவனுக்குரிய பங்கினை நிறைவேற்றுவதாய் இருக்குமா? ஓர் உண்மையான கணவன் என்பவர் தேவைகளை அருளுபவராக இருப்பார் மற்றும் இவருடைய பராமரிப்பு என்பது தன் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆவிக்குரிய காரியங்களையும், பூமிக்குரிய உணவு, உடைகளையும் அருளுவதை உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. ஆகையால் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது, தன் துணைவிக்குச் சத்தியத்தைக் கொடுப்பதே கணவனுடைய முதலாம் பிரயாசமாக இருக்க வேண்டும். கணவன் மாலையில் வீடு திரும்பும்போது, மனைவி குடும்பத்திற்கடுத்த பராமரிப்புகளில் – அதாவது இரவு ஆகாரம் தயாரிப்பதிலும், பிற்பாடு வீட்டைச் சுத்தம் செய்வதிலும், சிறு குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதிலும், அடுத்த நாளுக்கான தேவைகளுக்கு ஆயத்தங்கள் பண்ணுவதிலும் ஈடுபட்டிருப்பதைக் காண்கையில், கணவன் தன் வேலை நேரங்கள் எல்லாம் முடிந்து காணப்படுகையில், மனைவியானவளே அந்தக் குடும்பக்காரியங்களைத் தனியே பார்த்துக்கொள்ளும்படிக்கு அவளை விட்டுவிட்டு – தகுதியான மற்றும் கனமிக்கத் துணையாக அவள் பார்க்கப்படுவதற்குப் பதிலாக, புறக்கணிக்கப்பட்டவளாக, அவமதிக்கப்பட்டவளாக, வீட்டுக்காரியங்களுக்கு மாத்திரம் உதவுபவளாக அவள் எண்ணத்தக்கதாக அவளை விட்டுவிட்டு, கணவன் சத்தியம் படிப்பதற்கென அமைதியான இடத்தைத் தேடவேண்டுமா அல்லது இரட்சிப்பின் மற்றும் சந்தோஷத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அல்லது அயலார்களுக்குச் சுமந்து செல்வதற்கெனத் தனியே வெளியே செல்ல வேண்டுமா?
ஆ! இல்லை! தொண்டாற்றுதல் / அறம் இல்லத்திலிருந்து துவங்குவதாக! ஒருவேளை கடந்த காலங்களில் ஞானமற்று நடந்துகொண்டதன் காரணமாய்த் தன்னால் சுமப்பதற்கும் அதிகமான குடும்பப்பாரங்களின் பளுவினால் மனைவியானவள் அமிழ்த்தப்பட்டிருந்தாளானால், இன்னும் கூடுதலாய்ப் பாரத்தைக் கூட்டிவிடாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள், மாறாக “”தோள் கொடுங்கள்”” மற்றும் முடிந்தமட்டும் அக்காரியங்களில் அவளுக்கு உதவிடுங்கள். குழந்தைகளைப் பராமரிப்பதும், பாத்திரங்களைக் கழுவுவதும் பெண்களின் வேலையாய் இருக்குமானால்… அதுவும் உங்களோடோ அல்லது கர்த்தரோடோ அல்லது சத்தியத்தைத் [R1555 : page 215] தனக்காய் வாசித்தறிவதற்கோ நேரம் கிடைக்காமல் போகுமளவுக்கு அவ்வேலைகள் அவளுக்கு அதிகமாய்க் காணப்படுமானால் – அல்லது ஒருவேளை தொடர்ச்சியாய்க் கடமைகளைச் செய்துவரும் நிலைமையினுடைய அழுத்தத்தின்கீழ், அவள் சமூக பேச்சுகளின் சுவையினையோ, ஆவிக்குரிய காரியங்களுக்கடுத்த தன் விசுவாசத்தினையோ இழந்துபோயுள்ளாளானால்… அந்தந்த நாளினுடைய கடமைகளை முடித்துவிட்டு, சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்படிக்குச் சேர்ந்து உட்கார முடிவதுவரையிலும், அந்தக் குடும்பத்திற்கடுத்த வேலைகளில் அவளோடு சேர்ந்து நீங்கள் பங்கெடுப்பது நலமாயிருக்கும்.
அவள் உங்கள் அன்பையும், அக்கறையையும் படிப்படியாய் உணர வரும்போது, அவளுக்கு உங்கள்மேலும், உங்கள் அன்றாட ஜீவியத்தில் வெளிப்படும் உபதேசத்தினுடைய பலன்களின்மேலும் இருக்கும் மரியாதை அதிகரித்திடும். ஆரம்பத்தில் ஒருவேளை இது ஒரு புதிய நடத்தையாய் இருக்கும்பட்சத்தில், அவள் அதை ஏதோ வழக்கத்திற்கு மாறான விநோதமான நடத்தை என்று கருதிடக்கூடும்; ஆனால் போகப்போக, தொடர்ச்சியாய் இப்படி நடந்துகொள்ளுதல் என்பது அவளது நம்பிக்கையை அதிகரித்திடும் மற்றும் அவள் இருதயத்தில் மாற்றத்தை உண்டுபண்ணிடும்; மேலும் இப்படியாகக் கவனமாய் உழப்பட்ட மற்றும் ஆயத்தம் பண்ணப்பட்ட நிலமானது, சத்தியத்தின் விதைகளை ஏற்றுக்கொள்வதற்குப் பக்குவமாயும், ஆயத்தமாயும் காணப்படும் மற்றும் நீங்களும், உங்கள் மனைவியும், குடும்பமும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். கடந்த காலங்களில் இவ்விஷயத்தில் எவ்வளவேனும் அலட்சியமாய் இருந்திருப்பதை உங்களில் எவரேனும் உணர்வீர்களானால், சகோதரர்களே இதை முயற்சிப்பண்ணிப் பாருங்கள். வாட்ச் டவர் அலுவலகத்திற்குக் கடிதம் எழுதுகையில், உங்கள் கணவனோ அல்லது உங்கள் மனைவியோ சத்தியத்தின் மீது விருப்பம் அடைந்துள்ளார்களானால், அதைக் குறிப்பிடுங்கள்.
சிலசமயங்களில் மனைவியானவளே மில்லினியல் டாண் வெளியீட்டின் சத்தியங்களை முதலாவதாகக் கிரகித்துக்கொள்பவளாக இருப்பாள் மற்றும் ஒருவேளை தனக்குக் கிடைத்துள்ளதான கிருபைகளைக் குறித்துத் தன் கணவனோடு பகிருகையில், அவரின் பேச்சு நம்பிக்கை ஏதும் தராது என்பதாகத் தோன்றினாலும், அந்தக் கிருபைகளைக் கணவனிடம் சுமந்து செல்வதற்கான தன்னுடைய வாய்ப்புகளை அவள், பெரும் வாய்ப்பாகக் கருதிட வேண்டும். பாரம்பரியத்தின் பாதையினின்று தன் மனைவி விலகுவதைக் கணவன் அறிகையில், அவர் எப்போதுமே அதை ஏதோ ஒரு புதிய மத வைராக்கியம் என்று நிர்ணயித்து, தன் இருதயத்தைப் பூட்டிப்போட்டுவிடுவார் மற்றும் அதற்குத் தன் செவிகளை மூடியும் கொள்வார். இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் அவள் என்ன செய்ய வேண்டும்? அதை அவர்மீது திணித்திட வேண்டுமா? இல்லை, அப்படிச் செய்வது என்பது எதிர்ப்பை மாத்திரமே தூண்டுகின்றதாய் இருக்கும். முதலாவதாக அவள் அதைத் தன் அன்றாட ஜீவியத்தின், உயிருள்ள நிருபத்தில் அவர் வாசித்துக்கொள்ளத்தக்கதாக, அவரை விட்டுவிட வேண்டும். குடும்பத்தைச் சந்தோஷமாய் வைப்பதற்கு நீங்கள் கவனமாய்ச் செயல்படுவதில், சத்தியத்தின் நற்பலன்களை அவர் காணட்டும்; கணவனுடைய சோதனையில், சோர்வுகளில் அவர் மீதான உங்கள் பரிவையும், உங்களால் முடிந்தமட்டும் நீங்கள் உதவிகரமாய் இருப்பதையும் மற்றும் அவருடைய அன்பனைத்தையும் நீங்கள் உணர்ந்து மதிக்கிறதையும்… அவர் காணட்டும்.
கணவன் யுகங்களுக்கடுத்த திட்டத்தின்பால் ஈர்க்கப்படுவதற்குச் சிலசமயங்கள் மேற்கூறியபடி இவ்வகையான நீண்ட மற்றும் பொறுமையான பிரசங்கம் ஏறெடுக்க வேண்டியதாயிருக்கும்; பல்வேறு வழிகளில் நீங்கள் ஜீவவார்த்தையினை உங்கள் கணவனுக்கு முன்பாக உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஜீவியத்தின் மற்றும் சீரான நடத்தையின் மற்றும் சம்பாஷணையின் ஒளியானது தொடர்ந்து பிரகாசித்துக்கொண்டிருக்கட்டும் மற்றும் ஏற்றவேளையில் அவரில் மாற்றம் வெளிப்படும். இத்தகைய மனைவிகள் (தெய்வீகத் திட்டம் குறித்து நன்கு அறிவு பெற்றவர்களாக இருப்பினும்) கர்த்தருக்கான ஊழியத்தில் பரிசுத்தவான்கள் கூடிவருவதற்கென்று வீட்டைப் பயன்படுத்திடுவதற்கோ அல்லது வேறு எதற்கேனும் பயன்படுத்திடுவதற்கோ கணவன் ஒருவேளை எதிர்ப்புத் தெரிவிப்பவராயிருக்க, வீட்டிற்குத் தலைவராக அங்கீகரிக்கப்படும் கணவனின் வீட்டினைப் பரிசுத்தவான்கள் கூடிவருவதற்கெனச் சொந்தம் கொண்டாட / கையாள முற்பட்டு, கணவனின் தலைமைத்துவத்தினைப் புறக்கணிக்கும் தவறுகளைச் செய்யாதிருப்பார்களாக. ஒருவேளை வீடானது மனைவியின் சொத்தாகவே இருப்பினும், கணவனுடைய தலைமைத்துவத்தின் உறவுமுறையானது அடையாளம் கண்டுகொள்ளப்படுவதுவரையிலும், வீட்டின் தலைவரெனக் கணவனின் விருப்பங்களுக்கு மரியாதைக் கொடுப்பது கடமையாகும். கணவன் தன் பொறுப்பினை உணருகின்றாரோ, இல்லையோ, கணவன் தேவனிடத்தில் தன் பொறுப்பிற்குக் கடமைப்பட்டிருக்கின்றார். ஆனால் மனைவியானவள் குடும்பத்தின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்திச்செய்வதை எப்போதும் தொடர்வதற்குக் கட்டுப்பட்டவளல்ல; ஒருவேளை இல்லத்தில் நியாயமான சிலாக்கியங்கள் அவளுக்கு மறுக்கப்படுமானால், அவள் அப்படிச் செய்வதை நிறுத்திடவேண்டும்; ஏனெனில் இப்படித் தொடர்வது என்பது அவள் தவறை ஊக்குவிப்பதாய் இருந்துவிடும். முன்பே நாம் சொல்லியுள்ளதுபோன்று… கணவனானவன் தன் மனைவி மற்றும் குடும்பத்தை ஆதரிப்பதற்கு அவசியமான ஆரோக்கியம் முதலானவைகளைப் பெற்றிருந்தும், அவர்களின் தேவையைச் சந்தித்திட தவறுவாரானால்… அவர் தன் துணைவியைப் போஷிப்பதாகவும், பராமரிப்பதாகவும் கூறிய தன் விவாக வாக்குறுதிக்கு உண்மையற்றுப் போயுள்ளார் என்பதை நிரூபித்தவராய் இருப்பார் மற்றும் நாட்டினுடைய சட்டங்களுக்கு முன்னிலையில் அவர் “”நடைமுறையில் அவளைக் கைவிட்டுவிட்டவராக”” இருப்பார். இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் காணப்படும் மனைவியானவள் ஒருவேளை அவள் விரும்பினால் தன்னைக் குறித்துக் கைவிடப்பட்டவளாகக் கருதி, இப்படிக் கைவிட்டவரை ஆதரிப்பதற்கும், தாங்கிடுவதற்கும் அவள் மறுத்திடலாம். ஆனால் இத்தகைய கைவிடுதலானது இருவரில் எவருக்கும் துணை உயிரோடு ஜீவிப்பது வரையிலும் மறுமணம் செய்வதற்கு உரிமை அளிக்கிறதில்லை.
குடும்பத்தின் காரியங்களில் தலையாயிருப்பது போலவே, “”நானும், என் வீட்டாருமோ (என்னுடைய செல்வாக்கினுடைய ஆற்றலின்படி) கர்த்தரையே சேவிப்போம்”” என்று கூறிடுவது கிறிஸ்தவ கணவனுடைய கடமையாக இருக்கின்றது. கணவனுடைய இந்தப் பொறுப்பினை அடையாளம் கண்டுகொள்ளும் கிறிஸ்தவ மனைவியானவள், அவளது கடமை உணர்ச்சியினால் அவளால் செய்ய முடிந்தமட்டும் மகிழ்ச்சியோடு ஒத்துழைப்புக் கொடுத்திடுவாள் மற்றும் கணவனின் வழிமுறைகளை வித்தியாசமாய் அவள் ஒருவேளை கண்ணோக்கினாலும், அவரின் வழியில் இடறலின் கற்களைப் போடமாட்டாள். சத்தியத்தின் விஷயத்தில் அவரை நம்ப வைத்திடுவதற்குக் கவனமாய்ப் பிரயாசம் எடுப்பாள்; எனினும் அவரது மனசாட்சியினையோ அல்லது தேவனிடத்திலுள்ள அவரது கடமையினையோ அவள் குறுக்கிடமாட்டாள். மனைவி விஷயத்தில் கணவனுடைய நடத்தையும் தன்னிச்சையானதாக / மனம்போன போக்கில் மற்றும் நியாயமற்றதாக இருத்தல்கூடாது. அவளது மனசாட்சியினை அவர் அசட்டைப்பண்ணிடக்கூடாது; தேவனுக்கான ஊழியத்தில் அவள் தன் தாலந்துகள் அனைத்தையும் முழுமையாயும், சுதந்தரமாயும் செயல்படுத்திடுவதற்கு அவர் தடைப்பண்ணிடக்கூடாது; கணவனின் மனசாட்சியும் மற்றும் குடும்பத்தலைவருக்குரிய கணவனின் பொறுப்பும் கணவனை அனுமதிக்கும் மட்டும், இல்லத்தைப் பயன்படுத்திடும் விஷயத்தில் கணவன், மனைவிக்கு அதிகமான சுதந்தரத்தைக் கொடுத்திட வேண்டும்; ஏனெனில் மனைவிகளும் “”உங்களுடனேகூட நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களாய்”” இருக்கின்றனர் (1 பேதுரு 3:7). ஒருவேளை கணவன் வேறு கண்ணோட்டங்களில் காண்கிறவரானால் . . . தன் பலமான காரணங்களை அவள் [R1555 : page 216] கவனத்திற்கும், அங்கீகரிப்பிற்கும் கொண்டுவர வேண்டும் மற்றும் அவளது வேறுபட்ட கண்ணோட்டங்களையும், இறுதியில் இணக்கம் வரும் என்ற நம்பிக்கையில் பொறுமையோடு செவிக்கொடுத்துக் கேட்க வேண்டும். ஆனால் ஒருவேளை இணக்கம் / இசைவானது அடையப்பட முடியவில்லையெனில், தெய்வீக நியமனத்தின் பேரில் குடும்பத்தின் தலையாகிய கணவன் மீதே குடும்பம் மற்றும் அதன் செல்வாக்கிற்கடுத்த பொறுப்பானது காணப்படும்.
இந்த முழுப்பாடத்தினையும் நாம் பார்க்கையில், தேவனால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் உள்ள தனிப்பட்ட சம்பந்தத்தின் விஷயத்தில், முழுச்சபையாருக்கான அப்போஸ்தலனின் ஆலோசனையானது நமக்குப் பலமாய் நினைப்பூட்டப்படுகின்றது – அதாவது “”யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்த வேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்பட வேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ண வேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்”” (ரோமர் 13:7,8).
இதைப்போலவே அப்போஸ்தலனாகிய பேதுருவின் ஆலோசனையும் காணப்படுகின்றது: “”எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; இராஜாவைக் கனம்பண்ணுங்கள்”” (1 பேதுரு 2:17). இராஜாக்கள் எப்போதும் தனிப்பட்ட விதத்தில் பார்க்கப்பட்டால், அவர்கள் கனத்திற்குப் பாத்திரவான்களாய் இருப்பதில்லை ஆனால் “”தேவனால் ஏற்படுத்தப்பட்ட”” ஸ்தானங்கள் எப்போதுமே கனத்திற்குப் பாத்திரமானவையே ஆகும் (ரோமர் 13:1; வேதாகமப் பாடங்களினுடைய முதலாம் தொகுதியின் 8-ஆம் அதிகாரத்தில் இவர்களின் ஏற்படுத்துதலுக்குரிய விதம் மற்றும் நோக்கம் குறித்துப் பார்க்கவும்). கர்த்தர் மற்றும் அப்போஸ்தலருடைய நாட்களில் யூதேயாவை ஆண்டுவந்திட்டதான அதிகாரிகள் தனிப்பட்ட விதத்தில் பார்க்கப்படும்போது கனம்பண்ணுவதற்கு மிகவும் அபாத்திரராகவே இருந்தனர்; எனினும் அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டு இருப்பதுகுறித்துக் கர்த்தரும், அப்போஸ்தலரும் தங்களுடைய வார்த்தைகள் வாயிலாக மாத்திரம் இல்லாமல், தங்கள் மாதிரியின் வாயிலாகவும்கூட நமக்குத் தெரிவித்திருக்கின்றனர்; கர்த்தரும், அப்போஸ்தலர்களும் மதிப்புடன் நடந்துகொண்டார்கள் மற்றும் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவர்களாய் இருந்தனர் (மத்தேயு 17:27; அப்போஸ்தலர் 25:8,10,11).
குடும்பத்தின் உறவிலும்கூட, கணவன் மற்றும் தகப்பன் எனும் ஸ்தானம், குடும்பத்தின் தலை ஸ்தானம் என்பது மனைவி மற்றும் பிள்ளைகளினால் கனப்படுத்துவதற்குப் பாத்திரமான ஸ்தானமாகும் மற்றும் குடும்பத்திற்குள் காணப்படும் அந்நியர்களினால், அதாவது அக்குடும்பத்தினுடைய பாதுகாப்பையும், உபசரிப்பையும் அனுபவிக்கும் அந்நியர்களினால்கூடக் கனப்படுத்துவதற்குப் பாத்திரமான ஸ்தானமாகும். கனம்பண்ணிடுவதற்குப் பாத்திரமற்ற நாட்டினுடைய அதிகாரிகள் விஷயத்தில், அவர்களின் ஸ்தானத்தின் நிமித்தம் கனம்பண்ணிட வேண்டும் எனும் அதே கொள்கையின் அடிப்படையில், குடும்பத்தின் தலையானவர் தனிப்பட்ட விதத்தில் பார்க்கப்படும்போது கனம்பண்ணிடுவதற்குப் பாத்திரமற்றவராய் இருப்பினும், அவரின் ஸ்தானத்தின் நிமித்தம் கனம்பண்ணப்பட வேண்டும்.
“”ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் கடன்படாதிருங்கள்”” என்று கூறி கடமைப்பற்றின வெளிச்சத்தின் கீழ் அப்போஸ்தலன் இந்த அன்புகூரும் மற்றும் கனம்பண்ணிடும் மற்றும் வரி செலுத்திடும் கடமைகள் முதலானவைகளை, உடனே செலுத்தித் தீர்க்கப்பட வேண்டிய கடன்கள் என்று காண்பிக்கின்றார். ஒருவேளை அனைவரும் பூரணராய் இருந்தார்களானால் அன்பே ஆளும் கொள்கையாக இருந்திருக்கும்; எனினும் விழுந்துபோன நிலைமையில் சுயநலம் எனும் பொதுவான நோயானது குடும்பத்தின் மற்றும் இல்லத்தின் மற்றும் தொழிலின் சந்தோஷத்தினைப் பட்சித்துப்போட்டு, அழித்துப்போடுகின்றது. உண்மையான பெருந்தன்மையானது, ஆரோக்கியமான நிலைமையில் காணப்படும் ஒவ்வொரு மனுஷனையும், பெலவீன பாண்டமான பெண்களிடத்தில் மாத்திரமல்லாமல், கூட்டங்களிலும், பயணம் செய்யும் வண்டிகளிலும், அயலார்கள் மத்தியிலும் காணப்படும் வயோதிப மற்றும் தள்ளாடின நிலைமையிலுள்ள ஆண்களிடத்திலும் கரிசனையோடு இருக்கப்பண்ணிடும்; இன்னுமாக ஜீவியத்தின் பாரங்களையும், சுமைகளையும் சுமப்பதில் வீட்டிலும், வாழ்க்கை-துணையினிடத்திலும் மிக அதிகமான கரிசனைக்கூட வெளிப்படும். வீட்டிலோ, வெளியிலோ இருப்பினும் உண்மையில் உயர்பண்புள்ள புருஷன் அல்லது ஸ்திரீ யாரையும் தொந்தரவு செய்வதற்கோ அல்லது யாருக்கேனும் அசௌகரியம் உண்டுபண்ணுவதற்கோ விரும்பமாட்டார்கள்; மேலும் இவர்கள் தங்களிடம் பாராட்டப்படும் இரக்கத்தினை ஏற்றுக்கொள்வார்களானால், அது தயவு என இவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் வெகுவாய் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.
தயவிற்குப் பதிலாய் விழுகையானது அனைவரிலும் சுயநலத்தினை வளர்த்தியுள்ளது; ஆகையால் தயவுடன் காணப்படுவதற்கு விரும்புபவர்கள், சுயநலமான நன்றியற்ற தன்மையைத் [R1556 : page 216] தங்களுக்கான பலனாக அடைகையில் பெரும்பாலும் சோர்வடைந்துபோய், வெகு சிலரே தயவு பாராட்டப்படுவதற்குப் பாத்திரவான்களாய் உள்ளனர் என்று கருதுகின்றனர். ஆனால் கிறிஸ்தவ புருஷனும், ஸ்திரீயும் தங்கள் மாபெரும் மீட்பரில் உள்ள சுயநலமற்ற உதாரணத்தை நினைவில்கொள்ள வேண்டும்; சுயநலமே ஒவ்வொரு பாவத்திற்கான அடிப்படை என்றும், பாவத்திற்கு எதிராய்ப் போராடுகையில், அவர்கள் சுயநலத்திற்கு எதிராய்க் கண்டிப்பாகப் போராட வேண்டும் என்றும், அன்பை வளர்த்தி விருத்தியாக்கிடுவதற்கு நாடிட வேண்டும் என்றும் நினைவில்கொள்ள வேண்டும். கனம்பண்ணிடுவதற்கு, மதித்திடுவதற்கு, சேவித்திடுவதற்கு – அதாவது கனம்பண்ணிடுவதற்குப் பாத்திரமானவர்களைக் கனம்பண்ணிடுவதற்கு அப்போஸ்தலனானவர் நீதியாய் இருத்தலையே, சரியான பாதைக்குப் போவதற்கான உதவியெனச் சுட்டிக்காட்டுகின்றார்.
தேவனுடைய ஒழுங்கு எத்துணை அருமையாய் இருக்கின்றது மற்றும் இதற்கு உண்மையாய் இசைந்து செல்பவர்கள் யாவருக்கும் நித்திய சமாதானம் மற்றும் சந்தோஷம் அடைவதற்கு அவ்வொழுங்கு எத்துணை உதவியாய் இருக்கின்றது! இப்படியாக நம்முடைய வழிகாட்டுதலுக்கென வேதவாக்கியங்களில் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளதான கொள்கைகளைக் கவனமாய் வேறுபடுத்திப்பார்த்து அறிந்துகொள்வோமாக மற்றும் அவரது அங்கீகரிப்பே நமக்கான மகா மேன்மையான பலனாகும் மற்றும் போகப்போக அவரது ஞானம் வெளியரங்கமாகும்.