புதுச்சிருஷ்டியின் பஸ்கா

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

VOLUME 6 / pages 457–484

புதுச் சிருஷ்டியின் பஸ்கா

The Passover of the New Creation

தொகுதி 6 / பக்கங்கள் 607-644

“நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.”-1 கொரிந்தியர் 5:7,8

நிழலான இஸ்ரயேலின் அனுபவங்களுக்குள் குறிப்பிடத்தக்கதாக இருந்தது பஸ்காவாகும். பஸ்கா பண்டிகையானது, ஒவ்வொரு வருடமும் முதலாவது மாதத்தில் பதினைந்தாம் நாளன்று தொடங்கி ஏழு நாட்களுக்குக் கொண்டாடப்பட்டது. அது எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் ஜனங்கள் மீட்கப்பட்டதைப் பொதுவான முறையில் கொண்டாடியது; ஆனால் குறிப்பாக, சங்காரம் கடந்துபோகுதல் அல்லது ஜீவனைத் தப்புவித்தல் எகிப்தியர் மேல் வந்த மரணம் என்ற வாதையிலிருந்து இஸ்ரயேலரின் முதற்பேறானவர்களைத் தப்புவிக்கும்படியாகக் கொண்டாடப்பட்டது. கடைசியாக வந்த இந்த வாதை இஸ்ரயேலர்களை அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படியாக பலவந்தம்பண்ணிற்று. இஸ்ரயேலின் முதற்பேறானவர்களைக் கடந்துசென்றது, முழு இஸ்ரயேலும் விடுவிக்கப்படுவதற்கும், எகிப்தின் அடிமைத்தனத்தினின்று சுதந்திரத்திற்குப் பாதுகாப்பாக சிவந்த சமுத்திரத்திற்குள்ளாக கடந்து செல்வதற்கும் முன்னோடியாக அமைந்தது. அவர்களுடைய தேசம் பிறந்ததற்கு மிகவும் நெருங்கியுள்ள இவ்வளவு முக்கியமான ஒரு சம்பவம் சரியான விதத்தில் நினைவுகூரப்படுவதை நாம் காண்கிறோம்; ஆகவே இன்றைக்கும் இது யூதர்களால் கொண்டாடப்படுகிறது. புதுச் சிருஷ்டியின் அங்கங்கள், நிழலான ஜனங்களான மாம்சீக இஸ்ரயேல் மேலும், முழு மனுக்குலத்தின் மேலும், அவர்களுடைய பரம பிதா செய்யும் எல்லாக் காரியங்களிலும் ஒழுங்குமுறைகளிலும் அவர்கள் ஆர்வம் காட்டுவது போல், அந்தச் சம்பவங்களிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் புதுச் சிருஷ்டி எகிப்தில் நடந்த காரியங்களில் இன்னும் அதிகமான ஆர்வம் வைத்திருக்கிறார்கள்; ஏனெனில் மாம்சீக இஸ்ரயேலுக்கு நடந்த காரியங்கள் எல்லாம், புதுச் சிருஷ்டியாகிய ஆவிக்குரிய இஸ்ரயேலுக்கு முன்மாதிரியாகவும் இன்னும் அதிகமான காரியங்களில் திவ்விய திட்டத்தில் நிழலாகவும் இருக்கும்படியாக திட்டமிடப்பட்டிருந்ததென்கிற இரகசியத்தை அவர்களுக்குக் கர்த்தர் வெளிப்படுத்தினார்.

இந்த ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி அப்போஸ்தலர் அறிக்கையிடுகிறதாவது: “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். நமக்கோ (புதுச் சிருஷ்டிக்கு) தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்.” (1 கொரிந்தியர் 2:14,10) நமக்குச் சில தடயங்களைக் கொடுக்கும்படியாக, தேவன் அப்போஸ்தலர்களை தம்முடைய வார்த்தைகளைச் சொல்லுபவர்களாக உபயோகப்படுத்தினார்; இதன் மூலமாக அவருடைய ஆவியின் வழிநடத்துதலின்கீழ் தேவனுடைய ஆழமான விஷயங்களை நாம் அறிந்துகொள்ளலாம். இந்தத் தடயங்களில் ஒன்றை இந்த அதிகாரத்தின் தலைப்பில் இருப்பதைக் காணலாம். அப்போஸ்தலர் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, மாம்சீக இஸ்ரயேல் தேவனுடைய எல்லா ஜனங்களுக்கும் நிழலாக இருந்தது, அதாவது ஆயிரம் வருட யுக இறுதிவரையிலும், அவருடைய ஜனங்களாக மாறுகின்றவர்களை நிழலாகக் காட்டியது; எகிப்தியர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு எதிராளிகளையும், அவர்களுடைய இராஜா பார்வோன் பொல்லாப்புகளின் பிரபுவும், அந்தகார லோகாதிபதியுமாகிய சாத்தானையும் நிழலாகக் காட்டியது; பார்வோனின் வேலைக்காரரும் குதிரை வீரர்களும், விழுந்து போன தூதர்களையும், சாத்தானோடு தங்களைச் சேர்த்துக் கொண்டுள்ள அல்லது சாத்தானோடு சேர்ந்துகொண்டு ஆண்டவருக்கும் அவருடைய ஜனமான புதுச் சிருஷ்டிக்கும் பொதுவாக விசுவாச வீட்டாருக்கும் எதிராளியாக இருக்கிற மனிதர்களையும் நிழலாகக் காட்டுவதை நாம் தெளிவாகக் காண்கிறோம். இஸ்ரயேல் ஜனங்கள் விடுதலைக்காக பெருமூச்சு விட்டு, தங்களுடைய எஜமானர்கள் கரத்தில் துன்பம் அனுபவித்தார்கள்; அவர்கள் பெலவீனர்களாகவும், தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள இயலாதவர்களாகவும் இருந்தார்கள்; ஆனாலும் தேவன் அவர்களுக்காக மோசேயை அவர்களை விடுவிக்கிற இரட்சகராக அனுப்பாதிருந்தால் அவர்கள் தங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து ஒருபோதும் விடுவித்திருக்க முடியாது. அதுபோன்றே, கடந்த காலத்திலும் தற்காலத்திலும் மனுக்குலமானது “இந்த உலகத்தின் அதிபதியின்” கீழ் அவனுடைய சேனைகளாகிய பாவத்திலும் மரணத்திலும், பெருமூச்சு விடுவதையும், கர்ப்பவேதனை அனுபவிப்பதையும் காண்கிறோம். இந்தக் கோடிக்கணக்கான ஜனங்கள் தங்களுடைய சொந்த பெலவீனத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், அதன் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையாகும்படியாகவும், இவைகளின் தண்டனையாகிய வேதனையிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுவிக்கப்படும்படியாகவும் வாஞ்சிக்கிறார்கள். தெய்வீக உதவியில்லாமல் மனுக்குலமானது சக்தியற்றது. ஒரு சிலர் மிகவும் பாடுபட்டு ஏதோ ஒன்றைச் சாதித்துவிடுகிறார்கள், ஆனால் ஒருவரும் இலவசமாய் பெறுவதில்லை. ஆதாமின் சந்ததியினர் அனைவரும் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டு இருக்கிறார்கள், அவர்களுடைய ஒரே நம்பிக்கை தேவனிடத்தில் இருக்கிறது. அவர் மெய்யான மோசேயின் மூலம் ஏற்ற காலத்தில் தம்முடைய ஜனங்களை விடுவிப்பேன் என்று வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்; இரண்டாம் மரணத்திற்கு அடையாளமாக இருக்கிற சிவந்த சமுத்திரத்தின் வழியாகக் கொண்டு வருவார்; பார்வோனும் அவனுடைய சேனைகளும் உண்மையான சிவந்த சமுத்திரத்தில் அழிக்கப்பட்டது நிழலாக இருந்தது போல சாத்தானும் அவனோடு சேர்ந்து இருக்கிறவர்களும் அல்லது அவனுக்கு இரக்கம் காட்டுகிறவர்களும், அவனுடைய பொல்லாத வழியில் செல்லுகிறவர்களும் இந்த இரண்டாம் மரணத்தில் நித்தியமாக அழிக்கப்படுவார்கள் என்பதற்கு இது நிழலாக உள்ளது. ஆனால் தேவனுடைய பிள்ளைகள் “இரண்டாம் மரணத்தினால் சேதமடைவதில்லை.”

மேலே சொல்லப்பட்டது ஒரு பொதுவான விளக்கம். ஆனால் அதற்குள் அதன் ஒரு பகுதியாக ஒரு குறிப்பிட்ட விளக்கம் இருந்தது; அது பொதுவான மனுக்குலத்தைக் குறிப்பிடவில்லை; அவர்கள் பாவம், மரணம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாவதைக் குறிப்பிடவில்லை; ஆனால் அவர்கள் மத்தியில் உள்ள ஒரு விசேஷமான வகுப்பினரான முதற்பேறானவர்களைக் குறிப்பிட்டது. அவர்கள் நிழலாயிருக்கிற உண்மைப் பொருளாகிய புதுச் சிருஷ்டியைக் குறிக்கிறார்கள்; “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சபை” என்று ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைகளை நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நிழலில், முதற்பேறானவர்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறார்கள் – அவர்கள்தான் சுதந்தரவாளிகள்; அவர்கள் தங்களுடைய சகோதரர்களுக்கு முன்னதாகவே ஒரு விசேஷமான பரீட்சைக்கு அல்லது சோதனைக்கு உட்படுத்தப்பட்டதிலும் ஒரு விசேஷமான இடம்தான் அவர்களுக்கு இருந்தது; எகிப்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னரே அவர்கள் மரணத்திற்குப் பாத்திரமுள்ளவர்களாக இருந்தார்கள். மேலும் யாத்திரையின் போது (Exodus) இந்த முதற்பேறானவர்கள் அதில் ஒரு விசேஷமான இடத்தைப் பெற்றிருந்தார்கள். பொதுவான மீட்பில் அவர்கள் ஒரு விசேஷமான வேலையைச் செய்ய வேண்டியிருந்தது; அவர்கள் பிரித்தெடுக்கப்பட்ட வகுப்பினராக லேவி கோத்திரத்தைக் குறிப்பிடும்படியாக இருந்தார்கள்; தேசத்தில் அவர்களுக்கு இருந்த சுதந்திரத்தை முற்றுமாக துறந்து, அவர்களுடைய சகோதரர்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டார்கள். ஒரு திவ்விய ஒழுங்கின்படி அவர்களுடைய சகோதரர்களுக்கு போதகர்களாக இருக்கும்படியாகவும் பிரித்தெடுக்கப்பட்டார்கள்.

இந்தக் கோத்திரம் அல்லது லேவி வீட்டார் என்பது விசுவாச வீட்டாருக்குத் தெளிவான அடையாளமாக இருக்கிறது. இது அடுத்தபடியாக ஆயத்தமாக்கப்படுகிற இராஜரிக ஆசாரியத்துவத்திற்கு அடையாளமாகக் காட்டப்படுகிறது; இது சகோதரர்களுக்காக பூலோகக் காரியங்களில் உள்ள சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கிறது; மேலும் இதுதான் உண்மையிலேயே மெல்ல மெல்ல இராஜரிக ஆசாரியத்துவத்தை ஏற்படுத்தும். இதன் பிரதான ஆசாரியராக ஆண்டவர் இருப்பார்; இது ஆயிரம் வருட யுகத்தின்போது உலகத்திற்கு போதித்து, அதை ஆட்சி செய்து, ஆசீர்வதிக்கும். எகிப்தில் உள்ள இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் மரணத்திற்கு பாத்திரமாக இருந்தார்கள், ஆனால் மரணம் அவர்களைக் கடந்து சென்றது, அதிலிருந்து தப்பினார்கள், உலகத்தில் உள்ள சுதந்திரத்தை இழந்து ஆசாரியத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்கள்; ஆகவே தற்காலத்திய முதற்பேறானவர்களின் மெய்யான சபை இரண்டாம் மரணத்திற்குப் பாத்திரமாக உள்ளது. எஞ்சியுள்ள மனுக்குலத்திற்கு முன்னதாகவே, நித்திய வாழ்வுக்கு அல்லது நித்திய மரணத்திற்கான அவர்களுடைய பரீட்சையை அல்லது சோதனையை அடைந்து மரணத்திலிருந்து, மீட்பரின் இரத்தம் மற்றும் மரணத்தின் புண்ணியத்தால் ஜீவனுக்குள் கடந்து செல்கிறார்கள்.

அவர்களுடைய ஆண்டவரின் கிருபையில் பங்குள்ளவர்களாகி, அவர்களுடைய பூலோக சுதந்திரத்தை, பூலோகத்திலுள்ள பங்கை, பூலோக வாழ்க்கையை விட்டுக்கொடுத்து அல்லது பலியாக செலுத்தி, பரலோகத்தையும் அதன் பரிபூரண ஜீவனையும் அடைகிறார்கள். இப்படியாக புதுச் சிருஷ்டியான, முதற்பேறானவர்களின் சபை எல்லா மனிதரைப் போன்று செத்து, பூலோகக் காரியங்களில் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இழப்பது போலவும், துறப்பது போலவும் காணப்பட்டாலும், ஜென்ம சுபாவமுள்ள மனிதன் இதைப் புரிந்துகொள்ளாவிட்டாலும், இவர்கள் மேல் மரணம் கடந்துசென்றது அல்லது மரணத்திலிருந்து மீட்கப்பட்டார்கள்; மேலும், இராஜரிக ஆசாரியர்களாகத் தங்களுடைய பிரதான ஆசாரியரான இயேசுவோடுகூட மகிமையிலும், கனத்திலும், அழியாமையிலும் பங்குள்ளவர்களாவார்கள். இவர்களின் இந்தக் கடந்துபோகுதல் சுவிசேஷ யுகத்தில் இரவு நேரத்தில் நடைபெறுகிறது, ஆயிரம் வருட காலை விடிவதற்கு முன்னால் அதன் நீதியின் சூரியன் உதயமாவதற்கு முன்னால் நடைபெறுகிறது. இவர்கள் ஆண்டவரின் சேனைகளின் தலைவர்களாயிருந்து, பாவம், சாத்தான் என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார்கள். இது எப்படி அப்போஸ்தலருடைய கூற்றோடு ஒத்திருக்கிறது என்பதை கவனியுங்கள். (ரோமர் 8:22,19) “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது” “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.” முதலாம் உயிர்த்தெழுதலில் மகிமைக்கும், கனத்திற்கும், அழியாமைக்கும் முதற்பேறானவர்களின் சபை முழுமையாகக் கடந்து போவதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், இப்பொழுது, இந்த ‘நிழலின்’ இன்னொரு அம்சம் முக்கியமானது. நிழலான முதற்பேறானவர்களைச் சங்காரம் கடந்து போவதற்கும், நிழலான ஆண்டவருடைய எல்லா ஜனங்களும் வர இருக்கிற மீட்பைப் பெறுவதற்கும், பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்படுவதும், அதன் இரத்தம் வீட்டின் நிலைக்கால்கள் மேலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்கப்படுதலும், அந்த இராத்திரியிலேயே அதன் மாம்சத்தைக் கசப்பான கீரையோடும், புளிப்பில்லா அப்பத்தோடும் புசித்தலும் அவசியமாயிருந்தது. இப்படியாக இஸ்ரயேலில் உள்ள ஒவ்வொரு வீடும் விசுவாச வீட்டாருக்கு அடையாளமாக இருந்தது; ஒவ்வொரு ஆட்டுக்குட்டியும் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டியானவருக்கு அடையாளமாக இருந்தது; மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முதற்பேறானது, தலையும் சரீரமும் சேர்ந்த கிறிஸ்துவுக்கு – புதுச் சிருஷ்டிக்கு அடையாளமாக இருந்தது; கசப்பான கீரைகள் தற்காலத்துச் சோதனைகளுக்கும், உபத்திரவங்களுக்கும் அடையாளமாய் இருந்தது, அது ஆட்டுக்குட்டியானவருக்கும், புளிப்பில்லா அப்பத்திற்கும் விசுவாச மார்க்கத்தார் அதிக வாஞ்சையுள்ளவர்களாக இருக்கவும் உதவுகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டாரும் தடியை கையில் வைத்துக்கொண்டு சாப்பிடவேண்டும், மேலும் அரைகளில் கச்சையைக் கட்டிக்கொண்டு யாத்திரைக்கு ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்பது, இந்தச் சுவிசேஷயுகத்தின் இரவு நேரத்தில் ஆட்டுக்குட்டியில் பங்குபெறுகிற முதற்பேறானவர்களும் விசுவாச மார்க்கத்தாரும் இந்த உலகத்தில் அன்னியரும், பரதேசிகளுமாய் இருப்பார்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. இவர்கள் பாவம், மரணம் ஆகியவற்றின் அடிமைத்தனத்தை உணர்ந்து, ஆண்டவரால் பாவத்திலிருந்தும், அழிவிலிருந்தும் விடுதலைக்குள்ளாகவும், தேவ புத்திரரின் சுயாதீனத்திற்குள்ளாக வழிநடத்தப்படவும் வாஞ்சையுள்ளவர்களாக இருப்பார்கள்.

நம்முடைய ஆண்டவரின் ஞாபகார்த்தம்

முதலாம் மாதம் 14-ஆம் தேதி – யூதர்கள் கொண்டாடுகின்ற ஏழு நாள் பஸ்கா பண்டிகையின் முந்தின தினத்தில் இந்த நிழலான பஸ்கா ஆட்டுக்குட்டி – அடிக்கப்பட்டதற்கு இசைவாக இருக்கும்படியாக, மெய்யான பஸ்கா ஆட்டுக்குட்டியும் “உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியுமான” நம்முடைய ஆண்டவர் மரித்தார். அவர் முப்பது வயதானபோது மரணத்திற்குள்ளான அவரது ஞானஸ்நானத்தில் தொடங்கப்பட்ட அவரது பலியை, வேறு எந்த நேரத்திலும் மரணத்தில் முடிக்க நம்முடைய ஆண்டவருக்கு சாத்தியம் இல்லாதிருந்தது. ஆகவேதான் யூதர்கள் அநேகந்தரம் அவரைக் கொல்ல முயற்சித்தாலும், ஒருவரும் ஆக அவர் மேல் கைபோடவில்லை; ஏனெனில், “அவருடைய வேளை இன்னமும் வரவில்லை.” (யோவான் 7:8,30)

யூதர்கள் முதலாம் மாதம் பத்தாம் தேதியில் பலிக்கான ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளும்படியாகவும், தங்களுடைய வீடுகளில் அந்த நாளில் அதைப் பெற்றுக்கொள்ளும்படியாகவும் கட்டளையிடப்பட்டபடியே, ஆண்டவரும் அதற்கேற்ற வாறே அந்த நாளில் அவர்களிடம் தம்மை ஒப்புக்கொடுத்தார்; பஸ்கா பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக, அவர் கழுதைக்குட்டியின் மேல் ஏறினவராய் பட்டணத்திற்குள் வந்தார், அப்பொழுது திரளான ஜனங்கள் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்றார்கள். “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ (ஒரு ஜாதியாக) அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை தனிப்பட்டமுறையில்) ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளா கும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” ஒரு தேசமாக, அதன் பிரதிநிதிகளாக இருக்கிற ஆட்சியாளர்கள் மூலம் அவரை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அவரை நிராகரித்தார்கள், அதன் மூலம் அவர்கள் தங்கள் சத்துருவின் பக்கம் இருப்பதை அவ்வேளையில் காண்பித்தார்கள். இருந்தபோதிலும், தேவனுடைய கிருபையில் புது உடன்படிக்கையின் இரத்தம் யாக்கோபின் குடும்பத்தினருக்கு வல்லமை உள்ளதாக இருப்பதோடுகூட, தேவனோடு ஒருமனப்பட்டவர்களாய் இருக்க விரும்புகிற எல்லோர் மேலும் வல்லமை உள்ளதாய் இருக்கிறது. அவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் புண்ணியத்தில் பங்குள்ளவர்களாய் இருந்தார்கள், இருந்தாலும் மெய்யான ஆட்டுக்குட்டியானவரில் புசிக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் ஒரு ஜாதியினராக, முதற்பேறானவர்களாக, இராஜரிக ஆசாரியர்களாக, பரிசுத்த ஜாதியாக, மேசியாவின் விசேஷ ஜனங்களாக ஆகும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டார்கள்; அவர்கள் கடந்து போகின்ற தருணத்தையும், பரிபூரணமான மகிமையும், கனமும், அழியாமையும் உள்ள வாழ்வுக்குரிய புதுச் சிருஷ்டியின் அங்கங்களாகும் தகுதியையும் இழந்து விட்டார்கள். ஆனாலும் வேதத்தில் இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரகாரம் தேவ ஆட்டுக்குட்டியை ஏற்றுக்கொள்ள மகிமையான வேறு ஒரு தருணம் அவர்களுக்கு உண்டு என்றும், அதை ஏற்றுக்கொள்ளவும், அவருடைய மாம்சத்தில், பலியில் புசிக்கவும் அவர்களுக்கு ஒரு மகியைமான தருணம் உண்டு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்; இதன்படி பாவம், மரணம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து முதற்பேறானவர்களின் உண்மையான சபையும் ஆவிக்குரிய இஸ்ரயேலருமாகிய, ஆண்டவருடைய உண்மையான சகோதரர்களுக்குக் கீழாகவும், ஆண்டவருடைய தலைமைக்குக் கீழாகவும் இருந்து தப்புவார்கள் என்று வேதத்தில் வேறு பகுதியில் சொல்லப்பட்டுள்ளது என்று கேள்விப்படுவதில் நாம் சந்தோஷம் அடைகிறோம் (ரோமர் 11:11-26).

நம்முடைய ஆண்டவரின் ஊழியத்தில் இறுதி கட்டத்தில், முதலாம் மாதம் 14-ஆம் தேதியன்று, “அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே,” அவர் மரித்த அதே நாளிலே நிஜமான ஆட்டுக்குட்டியாக, யூதர்களின் நிழலான பஸ்காவை தம்முடைய சீஷர்களோடு கொண்டாடினார். அவருடைய பன்னிரண்டு சீஷர்களோடு போஜனம்பண்ணி, நிழலாயிருந்த ஆட்டுக்குட்டி அவருக்கே அடையாளமாக இருந்தது; உலகத்தின் பாவங்களுக்காகத் தம்முடைய சொந்த பலியாக இருந்தது; அது “உண்மையான மாம்சமாக” இருந்தது; இதன் பெலத்தினால் மாத்திரமே ஜீவனும், தேவபுத்திரரின் விடுதலையும், ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெறுகின்றன. நம்முடைய ஆண்டவரின் மரணத்திற்கு முந்திய இராத்திரியில், இந்தப் போஜனத்தை அவர் புசித்திருந்தாலும் அதே நாளன்றே அது எப்படிச் சாத்தியமானது என்றால், யூதர்களின் வழக்கப்படி ஒரு நாளானது நடுராத்திரியில் அல்ல சாயங்காலத்தில் ஆரம்பமானது. ஆண்டவர் இஸ்ரயேலின் எல்லாக் காரியங்களையும் அவர்கள் செய்ய வேண்டியிருந்த மாதிரிகளின்படியாகவே ஆண்டவர் ஒழுங்குபண்ணினார் என்பது தெரிகிறது.

“நியாயப்பிரமாணத்திற்குக் கீழாக” பிறந்த யூதர்களாக இருந்தபடியால் நம்முடைய ஆண்டவருக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இந்த மாதிரியை, அதற்குரிய நேரத்தில் கொண்டாடுவது கடமையாயிருந்தது. ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை புளிப்பில்லா அப்பத்தோடும், கசப்பான கீரையோடும் புசிப்பதன் மூலம், ஒருவேளை வழக்கத்தின் பிரகாரம் திராட்சரசத்தோடு இப்படியாக யூத இராப்போஜனம் கடைபிடிக்கப்பட்ட பின்னர், ஆண்டவர், மாதிரியாயிருக்கிற யூத இராப்போஜனத்தில் எஞ்சியிருந்த புளிப்பில்லா அப்பத்திலும், திராட்சரசத்திலும் பங்குபெற்று, தம்முடைய முழுச் சபைக்கென, அதற்குப் பிரதிநிதிகளாக இருந்த (யோவான் 17:20) அவருடைய சீஷர்கள் மத்தியில் ஒரு புதிய காரியத்தை உண்டுபண்ணினார். அது அவர்களோடு ஆவிக்குரிய இஸ்ரயேலாக, முதற்பேறானவரின் சபையாக, புதுச் சிருஷ்டிகளாக, யூத பஸ்கா போஜனத்தின் இடத்தை எடுத்து அதற்கும் மேலாக இருக்க வேண்டும் என்று ஒரு புதிய காரியத்தை ஏற்படுத்தினார். நம்முடைய ஆண்டவர் இன்னொரு, அதற்கும் மேலான, வித்தியாசமான மாதிரியான ஒரு பஸ்காவை ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக, மாதிரியாக இருந்தது இப்பொழுதுதான் அதன் நிறைவைத் தொடங்க இருந்தது. ஆகவே அதன் நிறைவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு, இனியும் அது பொருத்தமாக இருக்காது. நம்முடைய ஆண்டவர் நிஜமான ஆட்டுக்குட்டியாக, அடிக்கப்பட இருந்தார். இந்த அதிகாரத்தின் தலைப்பு வசனத்தில் அப்போஸ்தலர் சொல்லுகிறபடி “பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறார்.”

கிறிஸ்துவைப் பஸ்கா ஆட்டுக்குட்டியாக ஏற்றுக்கொள்ளுகின்றவர்களும், இப்படியாக நிழலின் இடத்தை நிஜமானது எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ளுகின்றவர்களும், நிழலான விடுதலையைக் கொண்டாடும்படி நிழலான ஓர் ஆட்டுக் குட்டியை எடுத்து அதை உண்பதற்காக உரிமையும் ஆயத்தமும் செய்வது கூடாத காரியமாகும். உண்மையான பஸ்கா ஆட்டுக்குட்டியென இயேசுவைப் பின்பற்றுகின்ற எல்லா உண்மையான விசுவாசிகளும் இனிச் செய்யக் கூடிய தகுதியான காரியம் அவர்களுடைய இருதயங்களின் நிலைக்கால்களில் அவருடைய இரத்தத்தைத் தெளிப்பதாகும்; “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும்” (தற்போதைய ஆக்கினையிலிருந்து – அவருடைய இரத்தத்தினால், அவர்களுடைய பாவங்கள் கிருபையாய் மன்னிக்கப்பட்டது என்பதை உணர்ந்து, அவருடைய இரத்தத்தினால் அவர்கள் பாவமன்னிப்பைப் பெற்றுள்ளார்கள் என்பதை உணர்ந்து) இவர்கள் இனிமேல் மனுஷனாகிய கிறிஸ்து இயேசுவின் புண்ணியத்தை, எல்லோருக்கும் தம்மை ஈடுபலியாகக் கொடுத்தவரில் புசிக்க வேண்டும் அல்லது அவர்களுடைய மீட்பரின் புண்ணியத்தைத் தங்களுடையதாக்கிக் கொள்ளவேண்டும். விசுவாசத்தினால் அந்தப் புண்ணியங்களில் பங்குபெற வேண்டும், மேலும் தங்களுடைய பாவங்கள் ஆண்டவர் மேல் சுமத்தப்பட்டன, அவர் அவர்களுக்காக மரித்தார், ஆகவே அவருடைய புண்ணியங்களும் நீதியும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் உணரவேண்டும்.

அப்படியானால், நம்முடைய ஆண்டவருடைய இராப்போஜனம், பஸ்கா போஜனத்தின் இடத்தை எடுத்துக் கொண்டதானால், இருந்தாலும் அது ஓர் உயர்ந்த மாதிரியானதாக அல்ல – நிஜமானது தொடங்கிவிட்ட நிலையில் அது எப்படிப்பட்டதாக இருக்கிறது? அது நிஜத்திற்கு ஒரு ஞாபகார்த்தமானது நிஜமான பஸ்கா – நிறைவேறுதலின் ஆரம்பம் என அவரைப் பின்பற்றுபவர்களுக்கான ஒரு ஞாபகமூட்டுகிற காரியம் என்று நாம் பதில் கூறுகிறோம்.

இப்படியாக நம்முடைய ஆட்டுக்குட்டியானவரை ஏற்றுக்கொள்ளுவது, அவர் நமக்காக மரித்ததை ஞாபகப்படுத்திக்கொள்வது என்பது தேவனுடைய ஜனங்கள் மீட்கப்படுவார்கள் என்ற வாக்குத்தத்தத்தை எதிர்ப்பார்த்திருப்பது என்று பொருள்படும்; ஆகவே, அவைகளைப் புத்திசாலித்தனமாக ஏற்றுக்கொண்டு, ஞாபகப்படுத்திக் கொள்ளுவது, அவர்கள் உலகத்தில் இருக்கும்போது, அவர்கள் உலகத்தாராய் இருக்கமாட்டார்கள் என்று பொருள்படுகிறது. ஆனால் அவர்கள் அன்னியரும், பரதேசிகளுமாய் இருந்து, இப்போது பாவமும் மரணமும் ஆட்சி செய்கின்ற காலத்தின் அடிமைத்தனத்திலிருந்து கறைதிறை மற்றும் துக்கங்களிலிருந்தும் விடுதலையாகும்படியாக, இன்னும் அதிகம் விரும்பப்படுகிற நிலைமைகளைத் தேடுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் உண்மையான புளிப்பில்லா அப்பத்தில் பங்குபெறுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஆண்டவரின் சத்துவத்திலும் வல்லமையிலும் பலப்படும்படியாக, அதின் பரிசுத்தத்திலும் மாம்சீக கோட்பாடுகளின்படியான பொல்லாப்பு (புளிப்பு) கறை திறை, அபிலாஷைகள், சுயநலம் போன்றவைகள் இல்லாமல் அதைப் பெறும்படியாக நாடுவார்கள். ஆண்டவர் தாமே நிந்திக்கப்பட்டு, துன்பப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டார் என்பதினால், அவர்களும் இதே விதமான உபசரிப்பை எதிர்பார்க்க வேண்டும்; ஏனெனில், உலகம் அவரை அறியாதது போன்று அவர்களையும் அறியமாட்டார்கள் என்றும், வேலைக்காரன் எஜமானுக்கு மேலானவன் அல்ல என்றும் ஆண்டவர் கூறிய வார்த்தையின்படி, அவர்கள் உபத்திரவம் என்னும் கசப்பான கீரையோடு பங்குகொள்ளுகிறார்கள். ஆம், யாரெல்லாம் அவருக்கு உண்மையாய் இருக்கும் பட்சத்தில் உலகத்தில் துன்பம் அனுபவியாமல் இருக்கிறார்களோ அவர்களெல்லாரும் அவருக்குப் பிடித்தமானவர்களாய் இருக்க மாட்டார்கள் என்பது அவருடைய சாட்சியாகும். அவருடைய வார்த்தைகளாவன: “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.” (மத்தேயு 5:11,12; 2 தீமோத்தேயு 3:12).

நம்முடைய ஆண்டவர் அவருடைய நினைவுகூருதலான இராப்போஜனத்தை ஏற்படுத்தினபோது, கடைசி இராப்போஜனம் என்று அழைக்கப்படுகிறது; அது மேலே கூறியபடி ஒரு புதிய அடையாளமாக இருந்தது; அது பழைய பஸ்காவின் மாதிரிக்கு நிஜமானதாகக் காட்டப்பட்டிருந்தது; ஆனாலும் அது ஒரு நினைவுகூருதலாக அல்லது நிஜமானதற்கு ஒரு ஞாபகார்த்தமாகத்தான் இருந்தது, ஆனாலும் அதன் ஒரு பகுதியாக இல்லை. நாம் வாசிக்கிறபடி, அவர் “அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது (இது நிஜமான ஆட்டுக்குட்டியான எனக்கு அடையாளமாக இருக்கிறது, இது என் மாம்சத்திற்கு அடையாளமாக இருக்கிறது) என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.” நம்முடைய ஆண்டவரின் நோக்கம் இதன்படி நிஜமான முதற்பேறானவர்களுக்கும், விசுவாச மார்க்கத்தாருக்கும் தம்மைப் பின்பற்றி வருபவர்களுக்கும், அவர்களின் மனதில் தாம்தான் நிஜமான ஆட்டுக்குட்டி என்பதை பதிய வைக்க வேண்டும் என்பதுதான் என்று தெரியவருகிறது. “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று சொல்லுவது, முந்தியதைப் பின்பற்றிய அவருடையவர்கள், அது இப்பொழுது நிறைவேற்றப்பட்டு தேவையற்றதாகிவிட்டதால், இதைப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக சொன்னார் என்று பொருள்படும். “போஜனம் பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து, இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புது உடன்படிக்கையாயிருக்கிறது” உடன் படிக்கையின் இரத்தம், புது உடன்படிக்கைக்கு முத்திரை இடுகிற இரத்தம். “நீங்கள் பானம் பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.” அதை அதற்கான நேரம், இடம் போன்றவைகளைப் பார்க்காமல் செய்ய வேண்டும் என்று பொருள்படும் என்று நாம் புரிந்துகொள்ளக் கூடாது; ஆனால் இந்தப் பாத்திரமும், புளிப்பில்லா அப்பமும் பஸ்காவை கொண்டாடும்படியாக உபயோகப் படுத்தப்பட்டது என்று அல்ல, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாதிரியை அல்ல நிஜமானதைக் கொண்டாடுவதாக எண்ணப்பட வேண்டும். ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்ட நேரத்தைத் தவிர வேறு எந்த நேரத்திலும் பஸ்காவைக் கொண்டாடுவது, நியாயமானதாக, சரியானதாக, அல்லது மாதிரியானதாக இல்லாதிருப்பது போன்று நிஜமானதை அதன் நினைவுகூரும் சமயத்தில் அன்றி வேறு சமயத்தில் கொண்டாடுவது ஏற்றதாக இருக்காது. (1 கொரிந்தியர் 11:23-25)

“ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.” (1 கொரிந்தியர் 11:26) என்று அப்போஸ்தலர் தொடர்ந்து கூறுகிறார். அப்போதிலிருந்து வருடந்தோறும் இராப்போஜனத்தைக் கொண்டாடுவது என்பது ஆண்டவரைப் பின்பற்றி வருபவர்கள் எல்லாருக்கும் ஒரு புதிய அர்த்தத்தை உடையதாக இருக்க வேண்டும் என்பதை சீஷர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் என்பதை இது காட்டுகிறது. அதாவது பிட்கப்பட்ட அப்பம் ஆண்டவருடைய சரீரத்தையும், பாத்திரம் அவருடைய இரத்தத்தையும் குறிக்கிறது என்பதாகும். இந்தப் புதிய ஏற்பாடு அவரைப் பின்பற்றி வருபவர்கள் மேல் ஒரு சட்டமாகச் சுமத்தப்படவில்லை என்றாலும், மேலும் அதைச் சரியானபடி கடைபிடிக்கத் தவறும் பட்சத்தில் தண்டனை எதுவும் குறிப்பிடப்படாவிட்டாலும், ஆண்டவர், அவரை விசுவாசிக்கிறவர்களும், நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டி என்று தம்மை ஏற்றுக்கொள்ளுகிற அனைவரும் இப்படியாக அவர் உண்டுபண்ணின நினைவுகூருதலைச் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை ஆண்டவர் அறிந்திருந்தார். இன்றைக்கும் அது அப்படியே இருக்கிறது. ஈடுபலியில் உள்ள விசுவாசம் அதன் விளக்கத்தை “அவர் வரும் வரைக்கும்” என்ற இந்த எளிமையான நினைவுகூருதலில் இன்னும் காண்கிறது; “அவர் வரும் வரைக்கும்” என்பது நம்முடைய ஆண்டவரின் வருகை வரை அல்லது பிரசன்னம் வரை என்பதையல்ல, அறுவடை அல்லது இந்த யுகத்தின் இறுதிவரை என்பதையல்ல, நம்முடைய ஆண்டவர் கூறியபடி, “தேவனுடைய இராஜ்யத்திலே நவமானதாய் இதைப் பானம் பண்ணும் நாள்வரைக்கும்” என்பதைக் குறிக்கும்; இதற்கேற்ப இதில் இன்னும் நிறைவான அளவுக்குப் பங்குபெறும்படியாக, அவருடைய வருகையில் அவருடையவர்கள், “திரைக்கு” அப்பால் ஒவ்வொருவராக கூட்டிச் சேர்க்கப்படும் வரை அவரது பலியில் உள்ள விசுவாசம் அதன் விளக்கத்தை இந்த நினைவுகூருதலில் தொடர்ந்துகாணும்.

நாம் அநேகராயிருந்தும் ஒரே அப்பமாயிருக்கிறோம்

“நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.” (1 கொரிந்தியர் 10:16,17)

அப்போஸ்தலர், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்படி நம்முடைய ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுகூருதலைப் பற்றி மேலும் ஒரு சிந்தனையை நமக்கு முன்பாக வைக்கிறார்; முக்கியமாக அப்பம், நமக்காக பலியாக செலுத்தப்பட்ட நம்முடைய ஆண்டவருடைய பிட்கப்பட்ட சரீரத்திற்கு அடையாளமாக உள்ளது என்பதை அவர் வலியுறுத்துகிறார்; மேலும் பாத்திரம் அவருடைய இரத்தத்திற்கு அடையாளமாக இருக்கிறது என்றும் அவர் வலியுறுத்திக் கூறுகிறார். அந்த இரத்தம் நம்முடைய மன்னிப்பை உறுதிப்படுத்துகிறது. ஆனால் இப்பொழுது அதற்கு மேலும், நாம் சபையின் அங்கங்களாகவும், கிறஸ்துவின் சரீரத்தின் அங்கங்களாகவும், புதுச் சிருஷ்டியாகிய முதற்பேறானவர்களாகவும் இருந்து, நம்முடைய ஆண்டவரின் மரணத்திலும், அவருடைய பலியிலும் பங்கு பெறுகிறவர்களாகிறோம்; மேலும் அவர் இன்னொரு இடத்தில் கூறியபடி, *கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக . . . நிறைவேற்றுகிறேன்” (கொலோசெயர் 1:24) என்பது நம்முடைய உடன்படிக்கையின் ஒரு பங்காக இருக்கிறது. “அவருடைய மரணத்திற்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு இருக்கிறோம்” என்ற வசனத்தில் உள்ள அதே அர்த்தம்தான் இங்கும் இருக்கிறது. இப்படியாக நம்முடைய ஆண்டவரின் மாம்சம் இந்த உலகத்திற்காக பிட்கப்படுகிற அப்பமாக இருந்தபோது, இந்தச் சுவிசேஷயுகத்தின் விசுவாசிகளும், உண்மையானவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், புதுச் சிருஷ்டியும், கிறிஸ்துவின் சரீரமான சபையின் அங்கங்களுமானவர்கள் அந்த ஓர் அப்பத்தின் பகுதிகளாக எண்ணப்படுகிறார்கள். ஆகவே அந்த அப்பம் ஆண்டவர் நமக்காகச் செய்த பலி என்று உணர்ந்த பின்னர், அப்பம் பிட்கப்படுவது, முழுச் சபைக்கெனப் பிட்கப்படுவது அல்லது பலியாகச் செலுத்தப்படுவது என உணரவேண்டும்; மேலும் அவரோடு மரிக்கும்படியாக அர்ப்பணம் செய்துகொண்ட அனைவரும், அவரோடு பிட்கப்படவும் அவருடைய பாடுகளில் பங்குள்ளவர்களாகும் படியாகவும் அந்த அப்பம் பிட்கப்பட்டது என்பதையும் உணர வேண்டும்.

*கம்யூனியன்” (Communion) என்ற வார்த்தையில், பொதுவான ஐக்கியம் (Common-union), பொதுவான பங்குபெறுதல் (common participation) என்ற அதே அர்த்தம்தான் வெளிப்படுகிறது. ஆகவே, இந்த நினைவுகூருதலை ஒவ்வொரு வருடமும் ஆசரிக்கும்போது, நம்முடைய நம்பிக்கைகள் அனைத்தும், நம்முடைய மீட்பர் நம்முடைய பாவங்களுக்காகச் செலுத்திய பலியில் அஸ்திபாரம் இடப்பட்டிருக்கிறது என்பதை உணருவது மாத்திரமல்ல, “கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம்,” ‘அவருடனேகூட பாடுபட்டால், அவருடனேகூட ஆளுகையும் செய்வோம்” என்பதற்கேற்ப நம்முடைய அர்ப்பணிப்பை உயிர்ப்பிக்கவும், புதுப்பிக்கவும் செய்கிறோம். இந்தத் தெய்வீக ஆசரிப்பின் பொருள் எவ்வளவு உயர்வானதாகவும் புரியும்படியாகவும் இருக்கிறது பாருங்கள்! உண்மைக்கு பதிலாக நாம் அடையாளத்தைப் போடவில்லை, நம்முடைய ஆண்டவரின் நோக்கமும் நிச்சயமாக இப்படியாக இருந்திருக்காது, நம்முடைய சார்பிலும் அப்படி இருந்திருக்காது. உண்மையான ஐக்கியம் என்பது, ஆண்டவருடன் இருதயப்பூர்வமாக ஐக்கியம் கொள்வதும், நம்முடைய இருதயம் அவர் மேல் வாஞ்சையாயிருப்பதும், சரீரமான சபையில் உள்ள உடன் அங்கங்களோடு இதயப்பூர்வமாக ஐக்கியமாயிருப்பதும், பலி செலுத்துவது என நாம் செய்து கொண்ட உடன்படிக்கையை இதயப்பூர்வமாக உணர்வதுமாகும். இதில் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், நம்முடைய ஆண்டவரோடு தினமும் பிட்கப்பட்டவர்களாக, அவருடைய புண்ணியத்தை அனுதினமும் புசிப்பவர்களாக, அவருடைய வல்லமையிலும் சத்துவத்திலும் பலப்படுபவர்களாக ஒவ்வொரு நாளும், வருடம் முழுவதும் இருப்போம். இந்த நினைவுகூருதலை ஆசரிப்பதினால் எப்படியான ஓர் ஆசீர்வாதம் நமக்கு வருகிறது! மென்மேலும் அறிவிலும், கிருபையிலும் வளர்வதற்குரிய ஒரு வாஞ்சை எவ்வளவாய் இருதயத்தில் பற்றி எரிகிறது! நாம் அழைக்கப்பட்டிருகிற ஊழியத்தில் உள்ள சிலாக்கியங்களில் தற்காலத்திற்குரியவைகளில் மாத்திரமல்லாமல் வருங்காலத்திற் குரியவைகளிலும் பங்கு பெறவும் ஒரு வாஞ்சை எவ்வளவாய் இருதயத்தில் பற்றி எரிகிறது!

நாம் தேவனுக்கு துதி செலுத்துகிற பாத்திரத்தைக் குறித்தும் அப்போஸ்தலர் கூறுகிறதை நாம் பார்க்க முடிகிறது. “இது கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?” (பொதுவான ஐக்கியம், பொதுவான பங்கேற்பு) உண்மையாகவே பிரதிஷ்டை செய்து கொண்ட “சிறுமந்தை” இந்தச் சுவிசேஷயுகம் முழுவதிலும் மாம்சத்தில் உண்மையான கிறிஸ்துவாக இருந்திருக்கிறார்கள். ஓ, எப்படிப்பட்ட ஒரு சிந்தனை! மேலும் மாம்சத்தில் “அவருடைய சரீரத்தின் அங்கங்கள்” என ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டவர்களின் பாடுகள், சோதனைகள், அவமானம், மரணம் ஆகியவை அனைத்தும் அவருடைய பலியின் பகுதிகளாக எண்ணப்படுகின்றன, ஏனெனில் அவர்கள் நம்முடைய தலையும், பிரதான ஆசாரியருமாயிருக்கிற ஆண்டவருக்குக் கீழாக உள்ளவர்களாகவும், அவரோடு சம்பந்தம் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, இந்தச் சபையின் அங்கம் வகிக்கும்படியான தேவனுடைய அழைப்பையும், அதனால் ஏற்படுகிற மரணத்திற்கேதுவான பலியில் இப்பொழுது பங்குகொள்வதையும், வருங்காலத்தில் மகிமையான கிரியையில் பங்குகொள்வதையும் பாராட்டுகிறவர்கள், கிறிஸ்துவின் நாமத்திற்கென நிந்தைகளை அனுபவிக்கத் தகுதியானவர் என்று எண்ணப்படுவதிலும், அவருடைய மாம்சம் மற்றும் எலும்புகளின் அங்கங்களாக இருந்து சத்தியத்தின் ஊழியத்திற்கெனத் தங்களுடைய ஜீவனையே கொடுப்பதில் களிகூராமல் இருக்க முடியுமா? “உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.” (1யோவான் 3:1) இவர்கள் உலகப்பிரகாரமான நல்ல ஆசீர்வாதங்களையும், சிலாக்கியங்களையும் இழக்க நேரிடினும், மீட்பரின் எதிர்கால மகிமையில் கிறிஸ்துவின் சரீரமாக இருந்து, ஒரு பங்கைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று எண்ணப்படும் பட்சத்தில், இந்த இழப்புகள் ஒன்றுமில்லை.

அவர்கள் கிருபையிலும், அறிவிலும், வைராக்கியத்திலும் வளரும்போது அவர்கள் ஒவ்வொருவரும் எந்த விஷயத்தையும் அப்போஸ்தலரின் மனப்பாங்கிலேயே பார்க்க முடிகிறது. பூலோக நன்மைகளையும், சிலாக்கியங்களையும் குறித்து அப்போஸ்தலர் கூறுவதாவது: “எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.” “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.” (பிலிப்பியர் 3:11; ரோமர் 8:18)

இன்னொரு கருத்து என்னவெனில், ஆண்டவரின் இந்த ஒரே சரீரத்தில் அங்கங்களாக இருக்கிறவர்களுக்கிடையில் பரஸ்பர அன்பும், இரக்கமும், ஆர்வமும் மேலோங்க வேண்டும் என்பதாகும். ஆண்டவருடைய ஆவி அதிகமதிகமாக நம் இருதயங்களை ஆளும்படி வரும்போது, நமக்குச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் எல்லாருக்கும், விசேஷமாக விசுவாச மார்க்கத்தாருக்கு நன்மை செய்வதில் அது நம்மை களிகூரும்படிச் செய்யும். நம்முடைய இரக்கங்கள் வளர்ச்சியுற்று உலகத்திலுள்ள மனுக்குலம் முழுவதற்கும் செல்லும்போது, அவர்கள் விசேஷமாக ஆண்டவரில் வளரவேண்டும், மாத்திரமல்ல அவருடைய ஆவி உள்ளவர்கள் என்று அவரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், அவருடைய அடிச்சுவட்டில் நடக்க நாடுபவர்களுக்கு நேராக வளரவேண்டும். நாம் ஆண்டவர் மேல் வைத்திருக்கிற அன்பின் அளவு, அவருடைய சரீரத்தின் அங்கங்களாக நம்மோடு உள்ள சகோதரரிடத்தில் நாம் காட்டும் அன்பைப் பொறுத்து இருக்கும் என அப்போஸ்தலர் சுட்டிக்காட்டுகிறார். மற்றவர்களுக்காக நாம் எல்லாவற்றையும் சகிக்கிற, தாங்கிக்கொள்கிற அளவுக்கு நம்முடைய அன்பு இருக்குமென்றால், நம்முடைய தலையாக இருக்கிறவர் மூலமாக நம்மோடு மிக நெருக்கமாக ஐக்கியம் கொண்டிருக்கிற அதே சரீரத்தின் இந்த உடன் அங்கங்களைப் பொறுத்தவரையில் இது எவ்வளவு பெரிய உண்மையாகக் காணப்படும்! நாம் மரணத்தைக் கடந்து ஜீவனுக்குள் வந்து விட்டோம் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்று நம்முடைய சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறோம் என்பதுதான் என்று அப்போஸ்தலர் யோவான் கூறுவது வியப்பிற்குரியதல்ல. (1 யோவான் 3:14) கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை நாம் நிறைவேற்றுவதைக் குறித்து அப்போஸ்தலர் பவுல் பேசும்பொழுது, சரீரமான சபைக்காக நிறைவேற்றுகிறேன்” என்று கூறுவதை நாம் நினைவுகூருகிறோம். (கொலோசெயர் 1:24)

” நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1யோவான் 3:16) என்ற வசனத்திலும் இதே கருத்துதான் மறுபடியும் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. எப்படிப்பட்ட சகோதரத்துவம் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது பாருங்கள்! அவர்களுக்காக ஜீவனையே கொடுக்கக் கூடிய ஒரு சகோதர அன்பை வேறு எங்குதான் நாம் காணமுடியும்? “ஆண்டவரின் வெள்ளாடுகள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிற சபையின் பலியை பாவநிவாரண நாளின் பலிகளின் ஒரு பகுதியாக ஈடுபடுத்துவதில் ஆண்டவர் எப்படிச் சந்தோஷப்படுவார் என்று நாம் இப்பொழுது கூறவில்லை. நம்மைப் பொறுத்தவரையில், ஜீவனைக் கொடுக்கும் பலியானது, சகோதரர்களுக்கு செய்கிற ஊழியத்தில் முக்கியமாக செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை அப்போஸ்தலருடன் இணைந்து நாமும் கவனத்தில் கொள்ளுகிறோம். உலகத்திற்காக செய்கிற ஊழியம் முக்கியமாக வர இருக்கின்ற யுகமான ஆயிரம் வருட யுகத்திற்கு உரியதாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் நம்முடைய நேரம், தாலந்துகள், செல்வாக்குகள், வசதிகள் எல்லாம் ஏறத்தாழ மற்றவர்களிடத்தில் (மனைவி அல்லது பிள்ளைகள் அல்லது வயதான பெற்றோர் அல்லது நம்மைச் சார்ந்து வாழ்பவர்கள்) அடகு வைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நாமாகவே, மனுஷருடைய பார்வையில் நேர்மையானவைகள், தேவையானவைகள், நல்லவைகளாகக் காணப்படுகிற தேவையான காரியங்களைச் செய்ய நாம் கடமைப்பட்டு இருக்கிறோம். இப்படியிருக்க, பலிக்கெனக் குறைந்த அளவே நம் பட்சத்தில் மிஞ்சியிருப்பதைக் காண்கிறோம், சகோதரருக்கெனக் கொடுப்பதற்கு குறைந்த அளவே நம்மிடத்தில் மிஞ்சியிருப்பதைக் காண்கிறோம். இந்தக் குறைவானதையும் உலகமும், மாம்சமும், பிசாசும் நம்மிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளவும், நாம் அர்ப்பணித்திருக்கிற பலியிலிருந்து திசை திருப்பவும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பொல்லாத காலத்தில், ஆண்டவர் சபையைத் தேர்ந்தெடுப்பது, இந்தச் சூழ்நிலையில் ஒருவர் மேல் மற்றவர் வைத்திருக்கிற அன்பு, ஆண்டவர் மேல் வைத்திருக்கிற அன்பு, விசுவாசம் ஆகியவையின் அளவைப் பொறுத்துதான் இருக்கும். நம்முடைய அன்பு குளிராயிருந்தால், உலகம், மாமிசம், சத்துரு நம்மிடத்தில் அதிகமாக உரிமை கொண்டாடுவார்கள்; நம்முடைய நேரத்தை, நம்முடைய செல்வாக்கை, நம்முடைய பணத்தை, சத்துரு கவர முயற்சிப்பான். இன்னொரு பக்கம், ஆண்டவர் மேல் உள்ள அன்பு, அனலாயும், வலிமையுள்ளதாயும் இருக்கும் அளவின்படியே இவைகளை அவருக்கு அர்ப்பணம் செய்வதில் மகிழ்ச்சியடைவோம். சகோதரருக்கெனச் செய்கின்ற ஊழியத்தில் நமக்குச் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் நம்மிடத்தில் தேவைக்கு மேலாக உள்ள சத்துவத்தையும், செல்வாக்கையும், வசதியையும் அவருக்கெனக் கொடுப்போம்; இதற்கும் மேலாக வீட்டின், குடும்பத்தின், முக்கியமாக தனது சொந்த பொருளாதார தேவைகளைக் கூடுமானவரை கட்டுப்படுத்தி, ஆண்டவருடைய பலிபீடத்தில் செலுத்தும்படியாக, அதிகமாகக் கொடுக்க, ஆண்டவரின் மேல் வைத்திருக்கிற இந்தப் பக்தியின் ஆவி நம்மை உந்தித்தள்ளும். நம்முடைய ஆண்டவர் மூன்றரை வருடங்களாக அவருடைய சரீரத்தைப் பிட்கக்கொடுத்தார், மூன்றரை வருடங்களாக அவருடைய இரத்தத்தை, ஜீவனைக் கொடுத்தார், ஆனாலும் இந்தப் பலிகள் கல்வாரியில்தான் முற்றுப் பெற்றன; இப்படியேதான் நமக்கும் இருக்கிறது. உலகப்பிரகாரமான அல்லது ஆவிக்குரிய விஷயங்களில், சகோதரருக்கென நம்முடைய ஜீவனைக் கொடுப்பது சிறு ஊழியங்களில் உள்ளது, ஆனாலும் ஆவிக்குரிய விஷயங்களில் அது பெரிய காரியமாகும். ஆகிலும் உலகப்பிரகாரமான தேவையுடன் உள்ள ஒரு சகோதரனுக்கு இரக்கம் காட்டாவிட்டால், அது ஆண்டவருடைய ஆவி அவனுடைய இருதயத்தில் சரியான அளவுக்கு ஆட்சி செய்யவில்லை என்று பொருள்படும்.

நினைவுகூருதல் இன்னும் பொருத்தமானது

நம்முடைய அன்பின் ஆண்டவரின் நினைவுகூருதல் ஆரம்பத்தில் நாம் பார்த்துள்ளபடி ஒரு குறிப்பிட்ட நாளில், யூத கணக்கின்படி முதல் மாதத்தின் பதினான்காம் தேதி கொண்டாடப்பட்டது.

(எபிரெய புது வருடம், வசந்த காலத்தில் சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்த பின்னர் (Spring Equinox) வரும் முதல் அமாவாசை (New moon) அன்று தொடங்குகிறது. பதினான்காம் நாள் எளிதில் கணக்கிடப்படுகிறது, ஆனால் பண்டிகை வாரத்தோடு குழம்பிவிடக்கூடாது. இந்தப் பண்டிகை வாரம் (யூத கொண்டாட்டம்) 15-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நீடித்தது. புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் வாரம், களிப்போடு யூதர்களால் கொண்டாடப்பட்டது ஒரு – கிறிஸ்தவனின் முழு எதிர்காலத்திற்கும் ஒத்து இருக்கிறது விசேஷமாக – நினைவுகூருதலான இராப்போஜனத்தை அடுத்த முறை கொண்டாடும் வரை உள்ள முழு வருஷத்திற்கும் அடையாளமாக உள்ளது. யூதருக்கு ஆட்டுக்குட்டி பலியிடப்படுவது முடிவுக்கு அடையாளமாகும். அது வார பண்டிகைக்குத் துவக்கமாக இருந்தது, யூதருடைய விசேஷ கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. நம்முடைய நினைவுகூருதல், ஆட்டுக்குட்டி அடிக்கப்படுவதோடு முதலாம் மாதம் நீசான் மாதத்தின் 14-ஆம் தேதியோடு தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் நாளின் – மணிக்கணக்கை கணக்கிடுவதில் மாற்றம் ஏற்பட்ட போது நீசான் மாதத்தின் 14-வது நாளின் இரவு இப்பொழுது 13-வது நாளின் சாயங்காலத்திற்கு இணையாக இருக்கும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.)

பழைய வழக்கத்தின்படியாக கணக்கிடப்பட்ட அதே நாள் இன்றும் பொருத்தமாக உள்ளது. மேலும் “பூர்வ பாதைகளைப்பற்றி” கேட்பவர்களுக்கும், அதில் நடக்கும்படி வாஞ்சையாயிருப் பவர்களுக்கும் அது பிடித்தமானதாக இருக்கும். நம்முடைய ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்ட, ஆண்டவரின் மரணம் முதலானவைகளை வருடம்தோறும் நினைவுகூருதல் என்பதும், ஆதிச் சபையினரால் கடைபிடிக்கப் பட்டதும், சமீப காலத்தில் தற்கால சத்தியத்தின் வெளிச்சத்திற்குள் வருகிறவர்கள் மத்தியில் புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது.

ஆண்டவரின் அடையாளமான இராப்போஜனத்தின் உண்மையான அர்த்தம் வரவர மறக்கப்பட்ட போது, அதை வருடந்தோறும் கடைப்பிடிப்பதில் உள்ள நோக்கமும் கவனிக்கப்படாமல் போனதில் ஆச்சரியமில்லை. இந்த இராப்போஜனத்தின் சரித்திரத்தை நாம் புரிந்துகெள்ள வரும்போது, இது மிகவும் தெளிவாகப் புரிகிறது. அது பின்வருமாறு உள்ளது:

அப்போஸ்தலர்களும், அவர்களுக்குப் பின்வந்தவர்களும் நித்திரை அடைந்தப் பின்னர் ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டில் – சபையில் ரோமன் கத்தோலிக்கக் கொள்கை அதிக செல்வாக்கு பெறத் தொடங்கியது. அதன் பொய்யான உபதேசங்களில் ஒன்று எதுவென்றால், கிறிஸ்துவின் மரணம் கடந்த கால குற்றங்களை நீக்கியிருக்கும் போது ஞானஸ்நானத்திற்குப் பின்னர், கிறிஸ்துவோடு தனிப்பட்ட விதத்தில் உறவுக்குள்ளாக வந்த விசுவாசியின் மீறுதல்களை ஈடுகட்ட இயலாதிருந்தது, இப்படியான பாவங்களுக்கு ஒரு புதிய பலி செலுத்துதல் அவசியமாக இருந்தது என்பதாகும். இந்தத் தப்பறையின் அடிப்படையில் திருப்பலி (Mass) என்ற உபதேசம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திருப்பலி (Mass) என்பது நாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்தபடி, தனிப்பட்ட நபரின் குறிப்பிட்ட பாவங்களுக்காகச் செலுத்தப்படுகின்ற புதியதான கிறிஸ்துவின் பலியாகும். மேலும் திருப்பலியை நடத்துகிற குருவானவருக்கு, அப்பத்தையும் திராட்சரசத்தையும் கிறிஸ்துவின் உண்மையான சரீரமாகவும், உண்மையான இரத்தமாகவும் மாற்றும் வல்லமை இருந்தது என்றும், மேலும் அதன் பின்னர் மெல்லிய அப்பத்தைப் பிட்பதின் மூலம், யாருக்கெனத் திருப்பலி நடத்தப்படுகின்றதோ அந்த நபரின் பாவங்களுக்காக ஆண்டவரை புதியதாக பிட்கவோ பலிசெலுத்தவோ கூடும் என்ற எண்ணத்தில் புதியதாக கிறிஸ்துவைப் பலியாகச் செலுத்துவது சரியானதாகத் தோன்றும்படி செய்யப்படுகிறது. திவ்விய நோக்கின்படி இந்த உபதேசமும் பழக்கமும் ஆண்டவருடைய பார்வையில் ஓர் அருவருப்பான காரியம் என்று நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். அது “பாழாக்கும் அருவருப்பாகும்.” (தானியேல் 11:31; 12:11)

இந்தத் தவறான உபதேசம் பாழாக்குதலை உண்டுபண்ணிற்று. அதைத் தொடர்ந்து பலதரப்பட்ட தப்பறைகளான, பெரிய விசுவாச துரோகமாகிய ரோம ஒழுங்குமுறைகள் சபையில் இடம் பிடித்தது, அது எல்லா அந்திக்கிறிஸ்துக்களிலும் பிரதானமானதாகும். கிறிஸ்தவ உலகத்தைக் கட்டுப்படுத்தி, முன்னிலையிலிருந்த இந்தத் தப்பறைகள் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்தன. இந்த நிலை பதினாறாவது நூற்றாண்டு வரை நீடித்தது. அப்பொழுது பெரிய சீர்திருத்த இயக்கம் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணி எதிர்த்தது; இதற்கேற்ப, இருண்ட காலத்தில் அந்திக்கிறஸ்துவின் தவறான உபதேசங்கள், தவறான பழக்கங்களுக்குக் கீழாக மறையுண்டிருந்த சத்தியங்களைக் கண்டுபிடிக்கத் துவங்கினார்கள். தேவனுடைய வார்த்தையின் முழுச் சாட்சியைக் குறித்த மேலதிகமான வெளிச்சம் சீர்திருத்தவாதிகளுக்குக் கொடுக்கப்பட்டது. கிறிஸ்துவின் பலியைக் குறித்த தெளிவான கருத்து அந்த வெளிச்சத்தில் தெரிந்தது. அதனால் போப்பாண்டவரின் கருத்தும் திருப்பலியும் உண்மையிலேயே “பாழாக்கும் அருவருப்பு” என்று கண்டுகொள்ளத் தொடங்கி, பலதரப்பட்ட கோணங்களில் அதை ஏற்க அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆங்கிலேய திருச்சபை 1552-ஆம் வருடம் அதன் ஜெப புஸ்தகத்தை மறுபரிசீலனை செய்து திருப்பலி (Mass) என்ற வார்த்தையை நீக்கியது.

திருப்பலி என்ற வழக்கம், வருடந்தோறும் கொண்டாடும் ஆண்டவரின் நினைவுகூருதலான இராப்போஜனத்தின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. ஏனெனில், பாவத்திலிருந்து அடிக்கடி ஜனங்களைக் கழுவும் நோக்கத்தோடுதான் திருப்பலி செய்யப்படுகிறதாக அடிக்கடி சொல்லப்பட்டது. சீர்திருத்தவாதிகள் இதில் உள்ள தப்பறையைப் பார்த்தபோது, முதலில் ஏற்படுத்தப்பட்டதில் உள்ள எளிய நிலைக்கு வர முயற்சித்தார்கள்; அதன்படி ரோம சபையின் திருப்பலி, ஆண்டவருடைய நினைவுகூருதலான இராப்போஜனத்தின் தவறான ஆசரிப்பு என்று சொல்லி அதை ஒதுக்கி விட்டார்கள். இருந்தபோதிலும், நிழலான பஸ்காவிற்கும் மெய்ப்பொருளான நம்முடைய ஆண்டவரின் மரணத்திற்கும் இடையில் உள்ள சம்பந்தத்தையும், இராப்போஜனம் என்பது ஆண்டவருடைய மரணத்தின் ஒரு நினைவுகூருதலாக இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளவில்லை; அது வருடாவருடம் கடைப்பிடிக்கப்படுவதின் தாற்பரியத்தையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆகவே இதைப் புராட்டஸ்டண்ட் (Protestant) பிரிவைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சிலர் மாதம் ஒரு முறையும், மற்றவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், சிலர் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும், ஒவ்வொரு சபைப் பிரிவினரும் தங்களுடைய சொந்த தீர்மானத்தின்படி கொண்டாடுகிறார்கள் என்று நாம் பார்க்கிறோம் சீஷர்கள் – சபையினர் (“Disciples”) வாரம் ஒரு முறை கொண்டாடுகிறார்கள். ஞானஸ்நானத்தைக் குறித்து வேதாகமம் கூறுவதை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டது போல இதையும் தவறாகப் புரிந்துகொண்டு இப்படிக் கொண்டாடுகிறார்கள். ஆராம்ப காலத்தில் வாரத்தின் முதல் நாளன்று சபை கூடி வந்தார்கள் என்றும் அப்படியான கூடுதலின் போது “அப்பம் பிட்குதல்” இருந்தது என்றும் அப்போஸ்தலர் நடபடிகளில் கூறப்பட்டதையொட்டி இராப்போஜனத்தை வாரம் ஒரு முறை கொண்டாடுகிறார்கள். (அப்போஸ்தலர் 2:42,46; 20:7)

இந்த வாராந்திர கொண்டாட்டங்கள் ஆண்டவருடைய மரணத்தை நினைவுகூருவதல்ல என்று நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். ஆனால் அதற்கு மாறாக, அவைகள் அன்பின் விருந்துகளாக அவருடைய உயிர்த்தெழுதலையும், அவர் பரமேறுவதற்கு முன்னான நாற்பது நாட்களில் அநேக முதல் – நாட்களில் அவரோடு அப்பம் பிட்ட நாட்களைச் சந்தோஷத்துடன் கொண்டாடுவதாக இருந்தது. இந்த அப்பம் பிட்குதலை நினைவுகூருவதினால் அதில் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள்; ஒருவேளை இது வாரத்தின் ஒவ்வொரு முதல் நாளன்றும் கூடிவரும்படியாக வழிநடத்தியிருக்கக்கூடும்; இதுவும் ஒரு சமுதாயமாகக் கூடி உணவு அருந்துவதற்கு, ஓர் அப்பம் பிட்குதலுக்கு வழிநடத்தியதில் தவறில்லைதான். நாம் ஏற்கெனவே பார்த்துள்ளபடி இவைகள் சம்பந்தப்பட்டவைகளில் பாத்திரம் குறித்து ஒருபோதும் சொல்லப்படவில்லை, ஆனால் ஆண்டவருடைய நினைவுகூருதலின் இராப்போஜனம் குறித்துச் சொல்லப்படும் ஒவ்வொரு வேளையிலும், அப்பத்தைப் போலவே அதுவும் ஒரு முழு முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

யார் இதை ஆசரிக்கலாம்

முதலாவதாக, இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தம் பாவங்களுக்குப் பலியாகச் சிந்தப்பட்டது என்பதை விசுவாசிக்காத எவரும் இதில் பங்கு பெறக்கூடாது என்று நாங்கள் பதில் கூறுகிறோம். பழிவாங்குதலுக்காக ஆபேலின் இரத்தம் பேசினதைப் போன்று இல்லாமல், ஒருவன் விசுவாசத்தினால் தனது பூலோகக் கூடாரத்தின் நிலையின் மேற்சட்டத்திலும், வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும், நமக்காக சமாதானத்தைப் பேசுகின்ற இரத்தத்தைத் தெளிக்காத எவரும் இதில் பங்கு பெறக்கூடாது. (எபிரெயர் 12:24) தன்னுடைய இருதயத்தில் உண்மையான விருந்தை வைத்திராதவனும், கிறிஸ்துவைத் தனக்கு ஜீவன் கொடுக்கிறவர் என்று ஏற்றுக்கொள்ளாத எவனும் இந்த அடையாள விருந்தில் பங்குபெறக்கூடாது. மேலும் ஒரே சரீரத்திலும், ஒரே அப்பத்திலும் அங்கமாக இல்லாதவனும், அதே பாத்திரத்தில், தன்னுடைய ஜீவனும், இரத்தமும் ஆண்டவரோடுகூட பலியாகச் செலுத்தப்பட்டது என்று எண்ணாத எவனும் இதில் பங்கு பெறக்கூடாது. இங்கே விசுவாசிகளுக்கும், அவிசுவாசிகளுக்கும் இடையில் மாத்திரமல்ல, பிரதிஷ்டை செய்து கொண்டவர்களுக்கும் பிரதிஷ்டை செய்து கொள்ளாதவர்களுக்கும் இடையில் இங்கே தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு கோடு வரையப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒவ்வொரு தனி மனிதனும் இந்தக் கோட்டை தானே, தனக்கென வரைந்து கொள்ளவேண்டும், எப்படியெனில் அவனுடைய வேலைகள் நல்லதாக இருக்கும் பட்சத்திலும், அவைகள் அவனுடைய வெளிப்படையான நடத்தையின் மூலம் ஓரளவு அங்கீகரிக்கப்பட்டிருந்தால் அவனே தனக்கென அந்தக் கோட்டை வரைந்து கொள்ளலாம். ஒருவன் இன்னொரு மனிதனை நியாயந்தீர்ப்பதாக இருக்கக் கூடாது, சபைகூடத் தீர்ப்புக் கூறக்கூடாது. ஆனாலும், ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி, சபைக்கு முன்பாக அந்த விஷயம் நல்ல உறுதியான விஷயமாக, கொடுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இருக்குமானால் நியாயத்தீர்ப்புக் கூறலாம். அப்படி இல்லாவிடில் மூப்பர்கள் அல்லது சபையின் பிரதிநிதிகள், கூடிவருகிறவர்கள் முன்பாக இந்த ஒழுங்கையும், நிபந்தனைகளையும் வைக்கவேண்டும்.

1. இரத்தத்தில் விசுவாசம்;

2. மரணபரியந்தம் ஆண்டவருக்காகவும் அவருடைய ஊழியத்திற்காகவும் பிரதிஷ்டை செய்து கொண்டிருத்தல்.

அதன் பிறகு இப்படிப்பட்ட மனதுடையவர்கள், பிரதிஷ்டை செய்து கொண்டவர்கள் அனைவரையும் ஆண்டவருடைய மரணத்தையும் தங்களுடைய மரணத்தையும் கொண்டாடும்படியாக அழைக்க வேண்டும். சபை பாகுபாடு பற்றிய எண்ணத்திற்கே இடமில்லாத வகையில் இதுவும் இதோடு சம்பந்தப்பட்ட எல்லா அழைப்புகளும், மிகத் தெளிவாகப் புரியும்படி இருக்க வேண்டும். விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக மீட்பு, மரணபரியந்தம் முழுமையான அர்ப்பணிப்பு, அந்த நீதியின் மேல் கட்டப்படுதல் ஆகிய அடிப்படைச் சத்தியங்களோடு முழு மனதோடு இசைந்திருப்பார்களானால், அவர்கள் எல்லோரும் மற்றப் போதனைகளில் அவர்களுடைய விசுவாசம் வேறுப்பட்டதாக இருந்தபோதிலும் இதில் பங்குபெறும்படியாக வரவேற்கப்படவேண்டும்.

இந்த இடத்தில் இதைக்குறித்து அப்போஸ்தலர் கூறுவதைக் கவனிப்பது மிகப் பொருத்தமாயிருக்கும்:-

“இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத் தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்.” 1 கொரிந்தியர் 11:27-29.

அப்போஸ்தலருடைய எச்சரிக்கை இங்கு இந்த நினைவுகூருதலை அக்கறையின்றி கொண்டாடுவதற்கு எதிராக இருப்பது போன்று தோன்றுகிறது, ஏனெனில் அது ஒரு விருந்துபோல ஆகிவிடும் என்று எச்சரித்து, அதற்கு நபர்களை ஏனோதானோ என்று அழைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். அது அப்படிப்பட்ட ஒரு விருந்தல்ல; அது பயபக்தியுடன் செய்யப்படக்கூடிய ஒரு நினைவுகூருதல். அது ஆண்டவருடைய “சரீரத்தின்” அங்கங்களாக இருக்கிறவர்களுக்கு மாத்திரம் உரியது. மேலும் இதைப் பகுத்தறியாதவனும், அப்பம் ஆண்டவராகிய இயேசுவின் மாம்சத்திற்கு அடையாளமாக இருக்கிறது என்பதையும், மேலும் பாத்திரம் அவருடைய இரத்தத்திற்கு அடையாளமாக இருக்கிறது என்பதையும் பகுத்தறியாதவனும் இதில் பங்குபெறுவான் என்றால் அவன் குற்றமுள்ளவனாயிருப்பான் பொதுவான மொழிப்பெயர்ப்பில் உள்ளபடி நித்திய ஆக்கினைக்குள்ளாக அல்ல, ஆனால் ஆண்டவருடைய பார்வையில் குற்றமுள்ளவனாக இருப்பதுபோன்று தனது சொந்த மனசாட்சியிலும் குற்றமுள்ளவனாக இருப்பான். இந்தப் பந்தியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஒவ்வொருவனும், நம்முடைய ஆண்டவரின் பிட்கப்பட்ட சரீரமும் சிந்தப்பட்ட இரத்தமும் தனக்காக அவரால் ஈடுபலியாக செலுத்தப்பட்டது என்பதை அவன் விசுவாசிக்கிறானா அல்லது இல்லையா என்று தனக்குள்ளாக தீர்மானித்துக் கொள்ளவேண்டும்; இரண்டாவதாக, அந்த “ஒரே சரீரத்தில்” அங்கமாக எண்ணப்படுவதற்காக தனக்குண்டான எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்துள்ளானா இல்லையா என்பதை ஒவ்வொருவனும் தனக்குள்ளாக தீர்மானிக்கவேண்டும்.

யாரெல்லாம் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்கள், யார் சரியான விதத்தில் ஆண்டவருடைய பந்திக்கு வரமுடியும் என்பதை கவனித்து விட்டு, நாம் சபையின் ஒவ்வொரு உண்மையான விசுவாசிக்கும் அதில் பங்குபெற உரிமை உண்டு, ஆனாலும் ஆண்டவரின் விதிமுறைகளின்படி (மத்தேயு 18:15-17) முழுச் சபையும் ஒரு பொதுவான செயலின் மூலம் அந்த உரிமையைத் தடைசெய்திராத பட்சத்தில் அவர்களும் பங்குபெற உரிமை உண்டு எனக் காண்கிறோம். இப்படிப்பட்டவர்கள் எல்லாரும் கொண்டாடலாம்; இப்படியானவர்கள் எல்லாரும் கொண்டாடுவதற்கு நிச்சயமாகவே வாஞ்சிப்பார்கள்; ஆண்டவர் மரிக்கும்போது கொடுத்த எச்சரிக்கையான “நீங்கள் வாங்கிப் புசியுங்கள், நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” என்ற வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய நிச்சயமாகவே விரும்புவார்கள். நாம் மனுஷகுமாரனின் மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தில் பானம் பண்ணாவிட்டால், நமக்குள் ஜீவன் இல்லை என்பதை அவர்கள் உணருவார்கள். மேலும் ஆண்டவருடைய பலியிலும், ஜீவனிலும் உள்ள புண்ணியத்தில் அவர்கள் பங்குபெறுவார்கள் என்பதை அவர்கள் உண்மையிலேயே இருதயத்திலும் மனதிலும் வைத்திருப்பார்களெனில், அதை நினைவுகூருவதை ஒரு சிலாக்கியமாகவும், சந்தோஷகரமானதாகவும் உணர்வதுடன், ஒருவருக்கொருவரும், ஆண்டவரிடத்திலும் மன்னிப்புக் கேட்பதும் ஒரு சிலாக்கியமானது, சந்தோஷமானது என்பதை அறிந்து கொள்வார்கள்.

யார் இதை நடத்தலாம்

திருப்பலியின் தவறான உபதேசமும், சபையில் இதைக் கொடுக்கும்படியாகவும், இப்படிப்பட்ட ஆராதனைகளை நடத்தும்படியாகவும் குருவானவர்கள் என்ற ஒரு வகுப்பினர் ஏற்படுத்தப்பட்டதும், பொது ஜனங்களின் மனதில் ஒரு பெரிய ஆழமான எண்ணத்தை உண்டுபண்ணினபடியால், புராட்டஸ்டண்ட் (Protestants) இன்றைக்கும் கூட பொதுவான ஆசீர்வாதம் கூறவும், இப்படியான நினைவுகூருதலின், ஆராதனையை நடத்தவும், நியமனம் பெற்ற குருவானவர் இருப்பது மிக அவசியமானதென்றும், வேறு எந்த முறையும் அருவருப்பானது என்றும் கருதுகிறார்கள். இந்த நினைவுகூருதலில் பங்குபெறும் சிலாக்கியம் உள்ள அனைவரும் இராஜரிக ஆசாரியத்துவத்தின் பிரதிஷ்டை பண்ணப்பட்ட அங்கங்கள், ஒவ்வொருவனும் அவனவனுடைய தாலந்துகளுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கும்படி, அவரால் முற்றுமாக நியமிக்கப்பட்டவர்கள் என்பதையும், அவருக்கும் அவருடைய சரீரத்தின் அங்கங்களாக இருப்பவர்களுக்கும், அவருடைய நாமத்தினால் மற்றவர்களுக்கும் அவர்களால் இயன்றவரை எந்த ஊழியம் செய்யவோ அல்லது சேவை செய்யவோ முற்றுமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் ஞாபகத்தில் கொண்டுவரும்போது இந்தக் கருத்து எவ்வளவு தவறானது என்பது உடனடியாக உணர்ந்துகொள்ளப்படுகிறது. “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” என்பது ஆண்டவரின் வார்த்தை, அவரோடு நாம் ஐக்கியம் கொள்ளும்போதும், அவருடைய மீட்பரின் வேலையை கொண்டாடும்போதும், நம்முடைய பொதுவான ஐக்கியத்தை அவரோடும், அவருடைய சரீரத்தின் அங்கங்களாயிருக்கிற ஒவ்வொருவரோடும்கூடக் கடைபிடிக்கும்போது இதை மறந்து விடக்கூடாது.

இருந்தாலும், நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி, ஆண்டவருடைய ஜனங்களின் ஒவ்வொரு சிறுகூட்டத்திலும், ஒவ்வொரு சின்ன சபையிலும் அல்லது கிறிஸ்துவின் சரீரமான சபையிலும் ஒழுங்கு இருக்க வேண்டும், அந்த ஒழுங்கின் ஒரு பகுதியாக, “ஒவ்வொரு சபையிலும் மூப்பர்கள் இருக்க வேண்டும்.” சபையின் அங்கமாயிருக்கிற ஒவ்வொரு புதுச் சிருஷ்டியும், நினைவுகூருதலான இராப்போஜன சம்பந்தப்பட்டதில் எந்தப் பங்கும் பெற அனுமதிக்கும்படி, ஆண்டவரால் நியமனம் பெற்றிருந்தபோதும், சபையானது, முப்பர்களை ஏற்படுத்துவதின் மூலம் இப்படிப்பட்ட விஷயங்களைப் பொறுத்தவரை முழுச் சபைக்கும் மூப்பர்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, இந்த ஊழியத்திற்கென அவர்கள் ஏற்கெனவே சபையினால் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பதால், இந்த நினைவுகூருதலை ஒழுங்குசெய்வதும், அதை நடத்துவதும் ஒரு ஊழியமாக அவர்களை சார்ந்ததாயிருக்கும்.

“இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்பது ஆண்டவருடைய கூற்று. எங்கெல்லாம் சாத்தியம் உள்ளதோ, அங்கெல்லாம் இந்த நினைவுகூருதல் சபையின் சக அங்கங்களோடு கொண்டாடப்பட வேண்டும் என்பதையே இது விளக்குகிறது. இதில் உள்ள ஆசீர்வாதம் ஒருவரையொருவர் ஐக்கியத்தில் ஈர்க்கும்படியாகவும், இந்த வருடாந்திர கூட்டத்தின்போது மாத்திரமல்ல, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கூடிவர ஈர்க்கும்படியாக உள்ளது. இரண்டு அல்லது மூன்று பேர் கூடும்போதுகூட இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்ளமுடியும், ஒரு பெரிய கூட்டத்தோடு கூடுவதற்கு முடியாததாக அல்லது வசதியற்றதாக இருக்கும் போது, அவர்கள் ஒரு முழுச் சபையாக கொண்டாடும்படியாக சிலாக்கியம் பெற்று இருக்கிறார்கள்; அப்பொழுது ஒரு தனிமனிதனும் சூழ்நிலைகளின் நிமித்தம் மற்றவர்களோடு கூடிவர வாய்ப்பு இல்லாதவனாக இருக்கும் போது, அவனுடைய விசுவாசம் போதிய பலத்துடன் ஆண்டவரிடத்தில், வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படி வெளிப்பட வேண்டும் என்று யோசனையாகக் கூறுகிறோம் – அதாவது ஆண்டவரும், அந்த நபருமாகச் சேர்ந்து இருவராகிறார்கள். பாவத்திற்காகச் செலுத்தப்பட்ட இந்தப் பெரிய பலியை, வருடந்தோறும் கொண்டாட முடியாதபடி அதில் பங்குபெற முடியாதபடி தனித்துவிடப்படும் நிலைமை தடையாக – இருக்க அனுமதிக்கக் கூடாது என்று நாம் யோசனையாகக் கூறுகிறோம். மேலும் தன்னந்தனியாக வாழ்கிற அந்த நபர் அப்பத்தையும் (புளிப்பில்லா அப்பம் – கிடைக்குமென்றால் அதை வைத்துக்கொள்ளலாம் – அது Soda Biscuit அல்லது Water cracker ஆக இருக்கலாம்) அதோடு திராட்சரசத்தையும் (raisin juice or grape juice or wine) ஏற்பாடு செய்ய வேண்டும். ஆவியில் ஐக்கியப்பட்டு ஆண்டவரோடும், இப்பொழுது சந்தர்ப்ப சூழ்நிலையால் தன்னந்தனியாக இருந்தாலும், சரீரமான சபையின் மற்ற அங்கங்களோடு அவன் கொண்டாடவேண்டும் என்று யோசனையாகக் கூறுகிறோம். (எங்களுக்கு தெரிந்தவரை, ஆண்டவர் இந்த நினைவுகூருதலை ஏற்படுத்திய போது அதிக காலம் பதப்படுத்தப்பட்ட (fermented) திராட்சப்பழரசத்தை உபயோகப்படுத்தினார். இருந்தபோதிலும் அவர் திட்டவட்டமாக ஒயின் என்று குறிப்பிடாமல் “திராட்சப்பழரசம்” என்று குறிப்பிட்டார். மேலும் நம்முடைய நாட்களில் மதுபானம் அருந்தும் பழக்கம் அதிகக் கெடுதலை விளைவிக்கும் பழக்கமாகிவிட்டதால், அதிக காலம் ஊறவைக்கப்படாத திராட்சரசத்தை அல்லது உலர்ந்த திராட்சையை உபயோகிப்பதில் ஆண்டவருடைய அனுமதியைப் பெற்றிருக்கும் என்று நாம் நம்புகிறோம். வசதிப்பட்டால், நீண்டகாலம் பதப்படுத்தப்பட்ட (fermented) திராட்சரசத் துளிகள் சேர்க்கப்படலாம்; பதப்படுத்தப்பட்ட திராட்சரசத்தை உபயோகித்தால்தான் ஆண்டவருக்கு கீழ்ப்படிதலாகும் என்று நினைப்பவர்களின் மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக, இப்படிச் செய்வதால் மாம்சத்தில் பெலகீனமாயிருக்கிற, ஆண்டவரின் சகோதரர் எவருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது.)

ஆராதனை முறைமை

ஆண்டவர் ஆராதனைக்கென ஒரு சட்டத்தையோ அல்லது ஒழுங்கையோ வைக்காதபடியினால், அப்படி ஒரு சட்டத்தை ஏற்படுத்துவது நமக்குரியதல்ல. இருந்தாலும், இந்த நினைவுகூருதலை ஒழுங்காக கொண்டாடுவதற்கு என்று சாதாரணமானது (Moderate), தகுதியானது என்று எங்களுக்குத் தோன்றுகிற ஒரு முறைமையைக் கூறலாம் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் இப்படிச் செய்வது ஒரு சட்டத்தையோ அல்லது திட்டத்தையோ உண்டாக்க வேண்டும் என்ற நோக்குடன் அல்ல, ஆனால் இந்த விஷயத்தில், மிகவும் விரிவாக நடத்தப்படுகிற ஆராதனைக்குப் பழக்கப்பட்ட சிலர் அல்லது இப்படியானவைகளுக்கு பழக்கப்பட்டிராத சிலருக்கு ஒரு சாதாரணமான வகையில் உதவிசெய்யும் நோக்கத்துடன் இதை யோசனையாகக் கூறுகிறோம். அப்படியானால் நாங்கள் கூறுகிறவைகள் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால், அப்படிச் செய்யலாம் என்ற கருத்தில் கூறுகிறோம்.

அது பின்வருமாறு:

1) இராப்போஜனத்திற்கு ஏற்ற வகையில் பயபக்தியை உண்டு பண்ணக்கூடிய, அதற்குப் பொருத்தமான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கீர்த்தனைகளைப் (Hymns) பாடி ஆராதனையை ஆரம்பிக்கலாம்.

2) கூடியிருக்கிறவர்களுக்காகவும், விசேஷமாக பங்குபெறுபவர்களுக்காகவும், உலகத்தில் உள்ள, நமக்குத் தெரிந்த, தெரியாத ஒரே சரீரத்தின் அனைத்து சக அங்கங்களுக்காகவும், விசேஷமாக இந்த வருடாந்திர நினைவுகூருதலில் பங்குபெறுபவர்களுக்காகவும் திவ்விய ஆசீர்வாதத்திற்காக ஜெபம் செய்வது.

3) நடத்துகிற மூப்பர் வேதாகமத்திலிருந்து, ஆதியில் ஏற்படுத்தப்பட்ட நினைவுகூருதலைப் பற்றிய ஒரு பகுதியை வாசிக்கலாம்.

4) அவர் அல்லது வேறொரு மூப்பர் அந்த விஷயத்தின் நிழல் பொருள் குறித்துப் பேசாலம்; அவருக்கு விருப்பமானால், முழு விஷயத்தையும் குறித்துச் சில வசனங்களை வாசித்துப் பிரசங்கம் பண்ணலாம்.

5) நம்முடைய ஆண்டவர் அப்பத்தைப் பிட்கும் முன் ஆசீர்வதித்தார் என்ற விஷயத்தில் கவனத்தை ஈர்ப்பதற்கு, தலைவராயிருக்கிறவர் தகுதியாய் இருக்கிற ஒரு சகோதரரை அப்பத்தின்மேல் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்க சொல்லலாம்; வேறு ஒருவரும் இல்லாவிட்டால் அவரே அதற்குத் தகுதி உள்ளவராக இருக்கிறபடியால், அப்பத்தின் மேலும், அதில் பங்கு பெறுபவர்கள் மேலும் திவ்விய ஆசீர்வாதம் வரும்படியாகவும், அதற்குரிய ஆசீர்வாதத்தை அல்லது அதற்குரிய ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும்படியாக, அவர்களின் பிரகாசமான மனக் கண்கள் திறக்கப்படும்படியாகவும், மேலும் ஆண்டவருடைய மாம்சத்திற்கு அடையாளமானதை உபயோகிப்பதிலும், அவரோடு பிட்கப்படுவதிலும் தங்களுடைய சொந்த அர்ப்பணிப்பைப் புதுப்பித்துக் கொள்ளுவதிலும், அதில் பங்குபெறுகிற அனைவரும் ஆண்டவரோடு ஆசீர்வாதமான ஐக்கியம் கொள்ளும்படியாகவும் திவ்விய ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்க வேண்டும்.

6) “நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்ற ஆண்டவருடைய வார்த்தையை உபயோகித்து புளிப்பில்லா அப்பத்தின் ஒரு பகுதி அப்பொழுது பிட்கலாம். அப்பம் உள்ள தட்டை சகோதரர்களில் ஒருவராவது அல்லது நடத்துபவர்தானே பரிமாற எடுத்துச் செல்லலாம்; அல்லது ஜனங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் புளிப்பில்லா அப்பம் கொண்ட பல தட்டுகள் ஒரே வேளையில், இரண்டு, நான்கு, ஆறு அல்லது எந்த எண்ணிக்கையிலும் பிரதிஷ்டை செய்துகொண்ட சகோதரர்கள் எடுத்துச் சென்று பரிமாறலாம்.

7) அப்பத்தையும் திராட்சரசத்தையும் பரிமாறும்போது அமைதி காக்கப்பட வேண்டும்; அப்பத்தின் அர்த்தத்தைக் குறித்துச் சுருக்கமான குறிப்புகள் மட்டும் – நாம் எப்படியாக ஆண்டவரின் பந்தியில் அவரைப் புசிக்கவும், பருகவும் செய்கிறோம் என்பதைக் கூறலாம்; ஆனாலும், பந்தியில் பங்குபெறுபவர்களின் கவனம் கலைக்கப்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்; பொதுவாக இந்த விஷயம் குறித்து, கொண்டாடுவதில் உள்ள அர்த்தத்தைக் குறித்து, பிரசங்கியாளரோ அல்லது தலைவரோ பரிமாறுதலுக்கு முன்பு கூறுவது நலமாயிருக்கும்.

8) நம்முடைய ஆண்டவர், “பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி” அதைச் சீஷர்களுக்குக் கொடுத்தார் என்று நாம் வாசிக்கிறது போல, பிறகு அந்தப் பாத்திரம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். ஒரு சகோதரர் இந்த ஸ்தோத்திரம் பண்ணும் ஜெபத்தை செய்யுமாறு கேட்கப்படவேண்டும்; மேலும், அதில் பங்குபெறுபவர்கள் ஆசீர்வதிக்கப்படும்படியாகவும் ஜெபிக்கக் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும். அப்பத்தைப் போன்று இதுவும் அமைதியாகப் பரிமாறப்பட வேண்டும்.

9) இறுதி வரை ஆண்டவரும் அப்போஸ்தலர்களும் செய்த வண்ணம், அதற்கு முடிவாக ஒரு ஸ்தோத்திரப்பாட்டுப் பாடப்பட வேண்டும், ஆராதனை இப்படியாக முடிவுற்று, அதன் பின்னர்க் கூட்டம் கலைந்து செல்லவேண்டும் என்று நாம் யோசனை கூறுகிறோம். இந்த வேளையின் போது வழக்கமாகச் செய்யப்படும் வாழ்த்துக்கள் கூறுதல், ஆரோக்கியத்தைப் பற்றிய விசாரிப்புகள் முதலானவைகள் நிறுத்தப்பட வேண்டும்; மேலும், இராப்போஜனப் பந்தியைக் குறித்த சிந்தனையையும் ஆவிக்குரிய ஐக்கியத்தையும் கெடுக்கக் கூடிய எதையும் கூடுமானவரை செய்யாமல் அவனவன் தன்தன் வீட்டிற்குச் செல்ல வேண்டும்; மேலும், கூடுமானவரை ஒவ்வொருவரும் அந்த ஐக்கியத்தை அந்த இராத்திரியில் மாத்திரமல்ல, மறுநாளிலும் காத்துக் கொள்ளவேண்டும், எப்படியெனில் ஆண்டவருடைய கெத்செமனே அனுபவங்களை நினைவுகூருகையில் அவருடையவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கெத்செமனே அனுபவங்களுக்குள் கடந்து செல்லக்கூடும், அவ்வேளையில் உடன் இருக்கும் சீஷர்களுக்கும் உதவியும் அனுதாபமும் தேவைப்படக்கூடும் என்பதை மனதில் கொண்டு அவ்வாறாக செய்யவேண்டும் என்று யோசனையாகக் கூறுகிறோம்.

ஆண்டவரைக் குறித்து இப்படியாக எழுதப்பட்டு உள்ளது: “அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்” – அவருடைய சொந்த சோதனையின் காலத்தில் அவரோடு அனுதாபப்படக்கூடியவர்கள் ஒருவரும் கிடையாது. நம்மைப் பொறுத்தவரை இது வித்தியாசமாக இருக்கிறது. இதேபோல் மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்று, இதேபோல் ஒரே அப்பத்தின் அங்கங்களாக பிட்கப்படும்படியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு, மேலும் அதே பரிசுத்த ஆவியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அபிஷேகம் பண்ணப்பட்ட சரீரமான சபையின் சக அங்கங்கள் நமக்கு உண்டு; நாம் இதை நினைவுகூரும்போது, சபையில் மிகச் சிறியவர்களுக்கு எதைச் செய்தாலும் அது தலையாயிருக்கிறவருக்கே செய்யப்படுகிறது என்பதையும், அது அவரால் பாராட்டப்படுகிறது என்பதையும் நினைவில் வைத்து, சபையில் நம்முடன் இருக்கிற அங்கங்களுக்கு அதிக உதவியாய் இருக்க நாடுவோமாக. பேதுருவின் உதாரணத்தை அதே வேளையில் நினைவுகூருவது பொருத்தமாயிருக்கும் ஆண்டவருடைய துடிதுடிப்புள்ள ஊழியக்காரனாக இருந்தாலும், சோதிக்கப்பட்ட வேளையில் அவருடைய பெலவீனத்தையும் ஆண்டவருடைய உதவியும் ஜெபமும் அவருக்கு தேவைப்பட்டதையும் நினைவுபடுத்திக்கொள்ளுவது சரியானதாக இருக்கும். “நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன்.” இதை நினைவுகூருவது நமக்கு பிரத்தியேகமான உதவியாக இருக்கலாம், ஏனெனில் அப்போஸ்தலர் பேதுருவுக்கு இது அப்பொழுது உதவியாக இருந்தது. “ஒவ்வொரு தேவையான வேளையிலும் கிருபை கிடைக்கும்படியாக” ஆண்டவரை அதிகமாக நோக்கிப் பார்க்க அது நமக்கு உதவிசெய்யும்.

அதே வேளையில் நாம் யூதாசையும், அவனுடைய வீழ்ச்சி சுயநலத்தினாலும், முன்னேற வேண்டும் என்ற ஆவலினாலும், பொருளாசையினாலும் வந்தது என்பதை நினைவுகூருவது நல்லது. இந்தச் சுயநலம் என்ற கதவின் வழியாக எப்படிச் சாத்தான் அதிகமதிகமாக அவனுக்குள் நுழைந்தான் என்பதை நாம் நினைவுகூரும் போது, இதேபோன்று சத்துருவின் வலைக்குள் நாமும் விழுந்து விடாதபடி ஜாக்கிரதையாக இருக்க அது நமக்கு உதவி செய்யும். அப்படியில்லையென்றால் ஏதாவது ஒரு காரியத்திற்காக நம்மைக் கிரயம் செலுத்தி வாங்கிய ஆண்டவரை மறுதலியாமல் இருக்கும்படியாகவும், எப்பொழுதாவது, வாயின் வார்த்தையின் மூலம் ஆண்டவரை அல்லது அவருடைய சகோதரரை அல்லது சத்தியத்தை மறுதலியாமல் இருக்கவும் அதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த நாளிலும் நம்முடைய அன்பான மீட்பரின் அனுபவங்களை நம்முடைய ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுவோம், இதன்படி, அவரோடு ஆழ்ந்த அனுதாபம் கொள்ளும்படியாக மாத்திரமல்ல, மேலும் அவரைப் பின்பற்றுபவர்களாக இருக்கிற நம்மேல் வரும்படியாக அனுமதிக்கப்படக் கூடிய அக்கினி போன்ற சோதனைகளையும் விநோதமானது என்று நினையாமல் இருக்கும்படியாகவும், இறுதிவரை நாம் அவரை பின்பற்றும்படியாகவும், எக்காலத்திலும் அவர் மரிக்கும் போது சொன்ன வார்த்தைகளான “எல்லாம் முடிந்தது” என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுவது நல்லது. மேலும் நமது சார்பாக அவர் செலுத்திய பாவத்திற்கான காணிக்கை முடிவு பெறுகிறது என்பதையும், அதன்மூலம் அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம் என்பதையும், அவர் நமக்காகப் பரிந்துபேசும் படியாகவும், நமக்குச் சகாயம் தேவைப்படும் ஒவ்வொரு வேளையிலும் உதவி செய்யும்படியாகவும் அவர் என்றென்றும் ஜீவிக்கிறார் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஈஸ்டர்-பஸ்கா

“ஈஸ்டர்” (“Easter”) என்கிற வார்த்தை வேதாகமத்தில் ஒரு முறை வருகிறது. (அப்போஸ்தலர் 12:4) அங்கே அது தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. அது பஸ்கா பண்டிகை என்று மொழிப்பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஈஸ்டர் என்கிற பெயர் புறஜாதியாரிடமிருந்து பெறப்பட்டது. அது ஜெர்மனியர்களின் பின்னணியிலிருந்து வந்ததாகும். அது Estera என்ற கிழக்கத்திய தேவதை, அல்லது ஜெர்மனியர்களின் தேவதையைக் குறிப்பிடுகிறது. இந்தத் தேவதைக்கான திருவிழா, பஸ்கா பண்டிகையின் காலமான வசந்த காலத்தில் (Spring) கொண்டாடப்பட்டது. இந்தப் பெயரை ஏற்றுக்கொள்ளுவது, நம்முடைய ஆண்டவரின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும், பரமேறுதலையும் கொண்டாடுகிற காலத்திற்கு இந்தப் பெயரைக் கொடுப்பது, அதுவும் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து அந்தப் பெயரைக் கொடுப்பது ஆகியவையெல்லாம் கிறஸ்தவ நிறுவனங்கள் புறஜாதியாரின் முறைமைகளைச் சபைக்குள் புகுத்தும் ஒரு முயற்சி எனத் தெரிய வருகிறது. அநேக விட்டுக்கொடுக்கப்பட்ட காரியங்களைப் போன்று, இதுவும் மூன்றாம் நூற்றாண்டின் ஒரு காலப்பகுதியில் இருந்து வருகிறது. ஈஸ்டர் என்ற புறஜாதி தேவதையின் பெயரானது, நம்முடைய மனங்களில் குறிப்பாக எந்தவித மாற்றத்தையும் உண்டுபண்ண வேண்டியதில்லை, ஏனெனில் கிழக்கத்திய தேவதையைக் கொண்டாட நாம் இனி இதை உபயோகிக்கப்போவதில்லை. புராட்டஸ்டண்ட் மக்களிடையே ஈஸ்டர் என்ற பெயரானது பழைய காலத்தைப் போலவும், கத்தோலிக்கர்களால் இன்னும் உபயோகப்படுத்தப்படுவது போலவும், ஒரு காலத்திற்கு உரியதாக அல்லாமல் ஒரு நாளைக் குறிப்பதற்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒரு நாள், ஈஸ்டர் ஞாயிறு (Easter Sunday) என்று அழைக்கப்படுகிறது. ஆண்டவரின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடுகிற எந்த நாளும் அவருடைய ஜனங்களுக்கு விலையேறப்பெற்ற நாளாக இருக்கும். ஆனால் இந்த விஷயத்தைச் சரியாக உணர்ந்துகொள்ளுகிறவர்களுக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஈஸ்டர் ஞாயிறாக (Easter Sunday) இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நம்முடைய ஆண்டவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் நாளாகும்.

இங்கே இதே விஷயத்தை அறிமுகப்படுத்துவதில் உள்ள நம்முடைய நோக்கம் முக்கியமாக ஈஸ்டர் என்கிற இந்த வார்த்தைக்குப் பரவலாக கத்தோலிக்கர்கள் கொண்டுள்ள கருத்துக்குக் கவனத்தை ஈர்ப்பதற்காகும். இதில் பெரிய வெள்ளியும், ஈஸ்டர் ஞாயிறும் உள்ளடங்கும், இவைகள் பஸ்கா பண்டிகை நாட்களுக்கு மாற்று வார்த்தைபோன்றே அர்த்தம் உள்ளது என்று நினைத்து உபயோகிக்கப்படுகிறது. திருப்பலி அறிமுகப்படுத்தப்பட்டதும், அடிக்கடி கடைபிடிக்கப்பட்டதும், நம்முடைய ஆண்டவரின் மரணத்தை வருடாவருடம் கொண்டாடுவதை அர்த்தமற்றது ஆக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது அப்படியல்ல. ஆதிகால சபையின் பழக்கமானது பெரிய முக்கியமான மையக்கருத்தைக் கொண்டாடுவதாக இருந்தது, சபை நீடித்திருப்பதற்கு உதவியாக அந்த மையக்கருத்து நீடித்து வந்தது; ஆனால் இராப்போஜனத்தைக் கொண்டாடுவதும், அதை ஏற்றக் காலத்தில் கொண்டாடுவதும் நின்றுவிட்டது; திருப்பலிகள் அதிகமாக செலுத்தப்பட்டதின் நிமித்தம் அது அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது, இப்படியாக இந்த ஒரு முக்கியமான நினைவுகூருதல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது.

நாம் ஏற்கெனவே விளக்கமாக கூறியுள்ளபடி, பல நூற்றாண்டு காலமாக யூத காலண்டர் முறைப்படி நம்முடைய ஆண்டவர் சிலுவையிலறையப்பட்ட தேதியைக் கணக்கிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் காலாகாலத்தில் கூடுமானவரை யூத நிறுவனத்தின் முறைகளை மாற்ற வேண்டும் என்ற வாஞ்சையோடு, நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்துவின் மரண நாளை கணக்கிடும் முறையில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. நிசேயா (Nice) என்ற இடத்தில் கூடிய கிறிஸ்தவ சங்கம் (Ecumenical Council), வசந்தகாலத்தில் மத்திய ரேகையைச் சூரியன் கடந்த பின்னர் (spring equinox) வருகிற முதலாவது பௌர்ணமியைத் தொடர்ந்து வருகிற வெள்ளிக்கிழமையன்று, இனிமேல் பஸ்கா பண்டிகை (Easter) கொண்டாடப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது. இது உலகம் முழுவதும் ஆண்டவருடைய மரணத்தைக் கொண்டாடுவது, “பெரிய வெள்ளி” (“Good Friday”) என்று அழைக்கப்படுகின்ற வெள்ளிக்கிழமை என்று தீர்மானித்ததுமல்லாமல், யூத பஸ்கா பண்டிகையின் நாள், இந்தப் பெரிய வெள்ளியோடு மிகக் குறைந்த பட்சத்தில் மட்டுமே இசைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுதும், இப்பொழுதும் கூட, யூதர்கள், சூரியன் வசந்த காலத்தில் மத்திய ரேகையைக் கடக்கும் வரை காத்திருந்து, அதன் பிறகு வருகிற முதலாவது அமாவாசையன்று தங்கள் மாதத்தைத் துவக்குகிறார்கள், அதிலிருந்து 14-வது நாளன்று அதாவது பௌர்ணமியன்று பஸ்காவை ஆசரிக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கணக்கிடும் முறை இப்படி மாற்றப்பட்டதால், இந்த மாற்றத்தின் மூலம் இரண்டு விதமான கணக்கீடுகளுக்கிடையில் கிட்டத்தட்ட ஒரு மாத வித்தியாசம்கூட எப்பொழுதாவது ஏற்படுகிறது.

இதில் எது உயர்ந்த முறை என்று சொல்லுவது நம்முடையதல்ல, ஆனாலும் ஆண்டவரும் அப்போஸ்தலர்களும் கடைபிடித்ததைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே நம்முடைய விருப்பமாகும். கணக்கிடுவதில் தவறு இழைத்து விட்டாலும், தவறான ஒரு நாளில் கொண்டாடினாலும் நாம் ஒரு குற்றத்தை இழைத்து விட்டோம் என்ற மனவருத்தத்துடன் அல்ல, திவ்விய ஏற்பாட்டின்படி உள்ள அதை நம்மால் இயன்றவரை, அந்த முறையைக் கடைப்பிடிக்க முயற்சித்தோம் என்ற மனதிருப்தியுடன் கடைப்பிடிக்க விரும்புகிறோம். தேதியைத் தற்கால காலண்டர்படி நிர்ணயிப்பது இன்னும் நல்லதாக இருக்கலாம் என்று ஒருவர் சொல்லக்கூடும். அது ஏப்ரல் 15-வது நாள், அல்லது ஏப்ரல் முதலாவது நாளாக அல்லது வேறு நாளாக, இன்னும் மற்றக் கணக்கீடுகள் போன்றவைகள் தேவையற்றதாகிவிடலாம், ஆண்டவர் ஏற்படுத்தியபடி அவர் யூத காலண்டரை ஒழுங்குபடுத்தியதற்கு ஒரு காரணம் வைத்திருந்தார், இந்த விஷயத்தில் அவர் ஏற்படுத்தியதை அறிந்து அதைத் தொடர விரும்புகிறோம்.

ஒரு குறிப்பிட்ட விதத்தில் தேவனுடைய ஆவிக்குரிய இராஜ்யத்திற்கு அடையாளமாக சூரியனைக் காண்கிறோம், சந்திரன் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கும், மேலும், அந்த நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குக் கீழாக இருந்த ஜனங்களுக்கும் அடையாளமாக இருக்கிறது. ஆகவே பௌர்ணமி தினத்தன்று, சரியாக அந்த நாளிலே ஆண்டவர் சிலுவையில் அறையப்படுவதில் இப்படியாக ஒரு விசேஷமான முறையில் அது சரியானதாக இருந்தது; மேலும், வேளையைப் பற்றிய தேவனின் அநாதி தீர்மானத்தின்படி அது அமைந்திருந்தது; ஆகவே அவர்களால் அந்த வேளைக்கு முன்பாக அவரைப் பிடிக்க விரும்பியும் முடியாதிருந்தது, ஏனெனில் “அவருடைய வேளை இன்னும் வராதிருந்தது” (யோவான் 7:30; 8:20) பௌர்ணமியன்று அவர் சிலுவையில் அறையப்பட்டதும், உடனடியாக சந்திரன் மறையத் தொடங்கினதும், இஸ்ரயேல் ஒரு ஜாதியாக தன்மேல் ஒரு திவ்விய நிராகரிப்பை வரவழைத்துக் கொண்டது அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அது புறம்பாக்கப்பட்டது என்ற ஒரு பாடத்தைச் கூட்டிக்காட்டுகிறது; இது சந்திரன் மறைந்துபோனதற்கு ஓர் அடையாளமாக இருப்பதுடன், அவர்கள் ஜாதியாக தாழ்த்தப்பட்டதற்கும் அடையாளமாக இருக்கிறது.

இதைக்குறித்து நன்மதிப்புப் பெற்ற ஒருவரது, சில முக்கிய பகுதிகளைக் கீழே தருகிறோம். மேற்கூறியவைகளுக்கு இது ஆதாரமாக உள்ளது.

மெக்ளின்டோக், ஸ்ட்ராங் ஆகியோரின் என்சைக்ளோபிடியாவிலிருந்து

(From Mc Mclintok and strong’s Encyclopedia)

“ஈஸ்டர் அதாவது பஸ்கா (Easter, ie., Passover-Easter):- இந்த வார்த்தை ஜெர்மனியர்களின் பின்னணியிலிருந்து வருகிறது; அது அவர்களின் தேவதையைக் குறிக்கிறது; இன்னொரு விதத்தில் பார்க்கும்போது கிழக்கத்திய தேவதையைக் குறிக்கிறது; அதன் பெயர் எஸ்டரா (Estera) என்பதாகும். இந்தத் தேவதையைக் கனப்படுத்தும் வகையில் வருடந்தோறும் பஸ்கா பண்டிகை கொண்டாடப்படும் கிட்டத்தட்ட அதே காலத்தில் (spring) பலிகள் செலுத்தப்பட்டு வந்தன. அந்தப் பெயரையொட்டி பஸ்கா பண்டிகையின்போது நடைபெற்ற கிறிஸ்தவ உயிர்த்தெழுதலின் பண்டிகைக்குப் பெயர் வழங்க தொடங்கிற்று. இதைத்தான் ஈஸ்டர் நாள் என்றும் ஈஸ்டர் ஞாயிறு (Easter-day, Easter Sunday) என்றும் தவறாகக் கூறுகிறோம். எப்படியெனில் இது ஆதிகாலத்து ஜெர்மனியர்களின் தேவதைக்கு அப்போது வைக்கப்பட்டிருந்த பண்டிகையைத்தான் குறிப்பிடுகிறது. ஆகவே ஈஸ்டர் என்ற பதத்திற்குத் தற்கால ஜெர்மனிய வார்த்தையான Ostern உபயோகப்படுத்தப்படுகிறது. இது அதே தேவதையான எஸ்டரா (Estera) அல்லது ஆஸ்டெராவைக் (Ostera) குறிப்பிடுகிறது. அங்கீகரிக்கப்பட்ட மொழிப்பெயர்ப்பில் இந்த வார்த்தை வருகிறது, – “பஸ்கா (Easter) பண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டு வரலாமொன்று எண்ணி” (அப்போஸ்தலர் 12:4) – மொழிப்பெயர்ப்பாளர்களிடையே மொழிப்பெயர்ப்பில் ஒருமைப்பாடு குறைவுபட்டிருந்ததற்கு இது ஓர் உதாரணமாக இருப்பதை முக்கியமாகக் காணமுடிகிறது. கடைசியாக செய்யப்பட்ட மொழிப்பெயர்ப்பில் எல்லாப் பகுதிகளும் பஸ்கா (Passover) என்று மாற்றப்பட்டது, ஆனால் இது …

“ஆசியா மைனரில் உள்ள எல்லாச் சபைகளும் நிசான் மாதத்தின் 14-ஆம் நாளன்று ஆண்டவரின் மரணத்தைக் கொண்டாடின. ஆதிக்காலத்துச் சபைகளனைத்தின் கருத்தின்படி இந்த நாளில் கிறிஸ்துவின் சிலுவை மரணம் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகள் (Rome) அது நடந்த நாளன்று, அதாவது அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று சிலுவை மரணம் வருடந்தோறும் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்தை உடையதாக இருந்தன. மேற்கத்திய நாட்டுச் சபைகள், கிறிஸ்துவின் மரண நாளை ஒரு துக்க நாளாகக் கருதியது, உயிர்த்தெழுந்த நாள்வரை உபவாசத்தைத் தொடர்ந்தது. இன்னொரு பக்கம், Asia Minor-இல் உள்ள சபைகள், கிறிஸ்துவின் மரணமானது மனுக்குலத்தின் மீட்புக்காக மாத்திரமே என்று எண்ணின; ஆகவே, கிறிஸ்து மரித்த அந்த வேளையில் அதாவது மத்தியான வேளை மூன்று மணியளவில் உபவாசத்தை முடித்துக்கொண்டு, உடனே ஆண்டவருடைய இராப்போஜனத்தைக் கொண்டாடினார்கள். இந்த இரு குழுவினருமே (Orthodox Eastern and Western Churches) us (Pascha Passover) என்ற பெயரை – ஏற்றுக்கொண்டார்கள்; இதன் மூலம் சில வேளைகளில் இந்த வாரத்தின் விசேஷித்த ஆசரிப்பு நாட்களைப் புரிந்துகொண்டார்கள், சில வேளைகளில் பஸ்கா (Passover) நினைவுகூரப்படுகிற முழு வாரத்தையும் புரிந்துகொண்டார்கள்.

“ஏறக்குறைய கி.பி. 196-இல் ரோமாபுரியின் பிஷப் விக்டர், சபையின் முக்கிய பிஷப்மார்களுக்கு ஒரு சுற்றறிக்கையை விடுவித்து, அவர்களுடைய மாகாணங்களில் குருமார்களின் குழுக்களைக் கூட்டவும், மேற்கத்திய வழக்கத்தை (வெள்ளிக் கிழமையிலும், ஞாயிற்றுக்கிழமையிலும் ஆசரிப்பது – சரியான நாளான நீசான் மாதத்தின் 14-வது, 16-வது நாளை விட்டுவிட்டு) அறிமுகப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். அப்போது முதல் முறையாக ஆதிச்சபையில் பெரிய தகராறு எழுந்தது; சிலர் அவருடைய வேண்டுகோளுக்கு இசைந்தார்கள், ஆனால் எபேசுவின் பிஷப் பாலிக்ரேட்ஸ் (Polycrates) கூட்டிய குழுக்கள் திட்டவட்டமாக மறுத்து பிஷப் பாலிக்ரேட்ஸின் நிருபத்தை அங்கீகரித்தன. அவர்கள் ஆசிய நாட்டுப் பழக்கத்திற்குச் சாதகமாக இருந்து, விக்டரைப் பற்றி அப்போஸ்தலர்களான பிலிப்புவின், யோவானின் அதிகாரத்திற்கும், பாலிக்கிரேப்புக்கும் (Polycrap), அவனுக்கு முன்பாக எபேசுவில் பிஷப்பாக இருந்த அவனுடைய ஏழு உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினார்கள் …

“இது வரைக்குமாக, ஆசியா மற்றும் மேற்கத்திய (Roman) சபைகளுக்கு இடையே இருந்த பிரச்சனை இரண்டு குறிப்புகள் சம்பந்தப்பட்டதாக மாத்திரம் இருந்தன. அவையாவன:

1) கிறிஸ்துவின் மரணம் நிகழ்ந்த வாரத்தின் நாள் நினைவுகூரப்பட வேண்டுமா அல்லது மாதத்தின் நாள் நினைவுகூரப்பட வேண்டுமா என்பது.

2) உபவாசம் நிறுத்தப்பட வேண்டுமா என்பது.

இப்பொழுது நீசான் மாதத்தின் 14-ஆம் தேதி வந்த அதன் சரியான நேரம் எது என்பதைக் குறித்து மூன்றாவது பிரச்சனை வந்தது. அநேக சபையின் தலைவர்களின் கருத்து, எருசலேம் அழிவுக்கு முன் உள்ள காலம் வரை யூதர்களின் ஆரம்பக் கணக்கீடு தான் சரியானது என்பதாகும், நீசான் மாதத்தின் 14-ஆம் நாள் வசந்த காலத்தில் சூரியன் மத்திய ரேகையைக் கடந்த பின்னரே வரும், ஆனால் பின்னால் வந்த யூதர்கள் தவறாகக் கணக்கிட்டதின் விளைவாகத்தான் நீசான் மாதத்தின் 14-ஆம் நாள் எப்போதாவது சூரியன் மத்திய ரேகையைக் கடப்பதற்கு முன்பு வந்தது. இது சபையில் உள்ள இரண்டு குழுவினருக்கும் மத்தியில் ஈஸ்டர் என்பது எப்போதும் சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்த பின்னர் நீசான் மாதத்தின் 14-வது நாளன்று இருக்க வேண்டும் என்று வாதித்து, நிர்ணயம் பண்ணினார்கள்.

“யூதர்கள் வருடம் சந்திர வருடமாக (Lunar year) இருந்தபடியாலும், நீசான் மாதத்தின் 14வது நாள் எப்போதும் பௌர்ணமியாக இருந்தபடியாலும், மேலே உள்ள வானசாஸ்திரத்தின்படியான கருத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள், நீசான் மாதத்தின் 14-வது நாள், சூரியன் பூமத்திய ரேகையை (Equinox) கடக்கிறதற்கு முன்னால் எப்பொழுதெல்லாம் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் யூத பஸ்கா பண்டிகைக்கு ஒரு மாதம் கழித்துக் கிறிஸ்துவின் மரணத்தைக் கொண்டாடுவார்கள். இனியும் கிறிஸ்தவர்கள் யூத காலண்டரைச் சார்ந்து இருக்க முடியாது என்றபோது, ஈஸ்டரின் நேரத்தைக் குறித்துத் தாங்கள் தங்களுடைய சொந்த கணக்கீட்டைச் செய்ய வேண்டியதிருந்தது. ஒரு பக்கம், ஏற்கெனவே முன்குறிக்கப்பட்ட காரணத்தினாலும், இன்னொரு பக்கம், சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்த தேதி சிலரால் மார்ச் 18 என்றும், சிலரால் 19 என்றும், சிலரால் 21 என்றும் நிர்ணயிக்கப்பட்டதினாலும், இந்தக் கணக்கீடுகள் அநேகமுறை வித்தியாசப்பட்டது. கி.பி. 314-இல் கூடிய ஆர்லெஸ் கவுன்சில் (Council of Arles) தேதி எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருக்கும்படியாக முயற்சி செய்தது, ஆனால் அதன் கட்டளைகள் (decrees) அதிகமான பலனைக் கொடுத்த மாதிரி தெரியவில்லை. ஆகவே இந்த விஷயம் மறுபடியும் நிசேயா (Nice) என்ற இடத்தில் கூடிய கிறிஸ்தவ சங்கம் (Ecumenical Council), இதை விவாதித்து சபைகள் அனைத்திலும், சூரியன் பூமத்திய ரேகையைக் (Equinox) கடந்த பின்னர் நீசான் மாதத்தின் 14-வது தேதிக்குப் பின் வரும் வெள்ளிக்கிழமையன்று ஈஸ்டர் கொண்டாடப்பட வேண்டும் என்று நிர்ணயித்தது. அதோடகூட, அலெக்ஸாண்டி ரியாவில் உள்ள சபை வானசாஸ்திரத்தில் சிறந்திருந்தபடியால், ரோம சபைக்கு வருடந்தோறும் காலண்டர் படி எந்தத் தேதியில் ஈஸ்டர் கொண்டாடப்பட வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும் என்றும், ரோம சபை உலகத்திலுள்ள எல்லாச் சபைகளுக்கும் அறிவிக்கவேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நிசேயா (Nice) என்ற இடத்தில் கூடிய கிறிஸ்தவ சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சட்டங்கள்கூட எல்லா வேறுபாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை; ஆகவே டயோனிசியஸ் எக்சிகஸ் (Dionysius Exiguus) என்பவர் கணக்கீடு மூலம், பழைய சபைக்குள் எல்லாருக்கும் ஒரே மாதிரியான பழக்கத்தைக் கடைபிடிக்கப்படும் வரை இது நிறுத்திவைக்கப்பட்டது. பிரிட்டன் போன்ற சில நாடுகள் பழங்காலத்துப் பழக்கத்தை ஒரு பெரிய எதிர்ப்பு இல்லாமல் விட்டுவிடவில்லை. சார்லிமேன் (Charlemagne) என்பவரின் காலத்தில் எல்லாருக்கும் ஒருமித்த கருத்து (யூதர்களின் கணக்குப்படி பௌர்ணமி நாளை ஏற்காமல், வெள்ளிக்கிழமையைக் கடைபிடிப்பது) ஏற்படுத்தப்பட்டுவிட்டது போல் தோன்றுகிறது; அதன் பிறகு, சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்த பின்னர் வருகின்ற பௌர்ணமி தினமான நீசான் மாதத்தின் 14-ஆம் தேதி கொண்டாடப்படுவதைப் பற்றி எந்தத் தடயமும் காணப்படவில்லை.

“போப் கிரகரி XII (Pope Gregory XII) என்பவர் காலண்டரைச் சீர்த்திருத்திய போது, டயோனிசியஸ் (Dionysius) என்பவரின் காலத்தில் உள்ள காலண்டரை தக்கவைத்துக் கொண்டார்; ஆனால், ஈஸ்டர் பௌர்ணமியை மிகச் சரியான விதத்தில் கணித்தார்; மேலும் வானசாஸ்திர நேரத்திலிருந்து வருங்காலத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதை தவிர்ப்பதற்குக் கவனமாக வழிவகைகளை வகுத்தார். இந்தத் துல்லியமான கணிப்பினால், கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் சில வேளைகளில் நிசேயா கிறிஸ்தவ சங்கத்தின் சட்டங்களுக்கு மாறாக யூதர்களின் பஸ்கா பண்டிகை காலத்தில் வரத்தான் செய்கிறது.”

அதே வல்லுநர் பஸ்கா பண்டிகை என்ற வார்த்தையைக் குறித்துச் சொல்லுகிறதாவது:-

பஸ்கா பண்டிகை: “அது வருடாந்திர பிரத்தியேகமான பண்டிகை; இது முக்கியமான ஸ்தானத்தில், எபிரெய சபையின் இரண்டாவது முக்கிய நியமமான விருத்தசேதனத்திற்குத் தொடர்புடையதாக இருந்தது. (யாத்திராகமம் 12:44) யோசுவா கில்காலில் திவ்விய உடன்படிக்கையைப் பரிசீலிக்கும் போது, ஜனங்களின் விருத்தசேதனம் முடிந்தவுடன் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினதைக் காணலாம். ஆனால் இந்த இரண்டு சடங்காச்சாரங்கள் இருந்த விதம், இரண்டுக்கும் இடையில் உள்ள உறவின் நிலை, இந்த நிழல்களின் உண்மைப் பொருள்கள் நிறைவேற்றப்படும் வரை, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களின் புனித ஆசரிப்பாக ஆண்டவருடைய இராப்போஜனம் அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும் வரை, முற்றிலுமாக விருத்திச் செய்யப்படவில்லை.”