R899 – கர்த்தருடைய இராப்போஜனம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R899 (page 2)

கர்த்தருடைய இராப்போஜனம்

THE LORD'S SUPPER

கர்த்தருடைய இராப்போஜனத்தின் ஆண்டு நிறைவு நாளானது, இந்த வருடத்தில் ஏப்ரல் 7-ஆம் தேதி, வியாழக்கிழமையன்று, மாலையில் வருகின்றதாய் இருக்கின்றது; மேலும் ஆதிக் கிறிஸ்தவர்களுடைய வழக்கத்திற்கு இசைவாக, அவர் நாம் ஆசரிக்கத்தக்கதாகக் கேட்டுக்கொண்ட பிரகாரமும் மற்றும் அவரால் ஆசரிக்கப்பட்ட நேரத்திலும், நமது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூருவது என்பது பாக்கியமான சிலாக்கியம் என்று ஆதிக் கிறிஸ்தவர்களைப்போன்றே நாமும் மதிக்கின்றோம். நியாயப்பிரமாணத்தின்கீழ்க் காணப்பட்டவர்களாகிய (இஸ்ரயேலர்கள்) அவருக்குள்ளான விசுவாசிகள் அனைவரையும், அவர் நியாயப்பிரமாணத்தினின்று விடுவித்திட்டாலும், அவர் “நியாயப்பிரமாணத்தின்கீழ்” காணப்பட்டார் மற்றும் அதனால் கட்டுப்படுத்தப்பட்டார். ஆகையால் அவர் யூத மாதமாகிய நீசான் 14-ஆம் தேதியன்றே சிலுவையில் அறையப்பட முடியும் (இந்த வருடம் நீசான் 14-ஆம் தேதியானது ஏப்ரல் 7-ஆம் தேதி, வியாழன் மாலை அன்று துவங்கி, 8-ஆம் தேதி, வெள்ளி மாலை 6-மணியுடன் நிறைவடைகின்றது); ஏனெனில் அவரது மரணமானது, இஸ்ரயேலின் முதற்பேறானவர்களைப் பாதுகாத்திட்ட (அ) மூடிட்ட அவர்களது வீட்டுவாசலின் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்டதான இரத்தத்தினைக் கொடுத்திட்ட ஆட்டுக்குட்டியினுடைய மரணத்துக்கு நிஜமாய்க் காணப்படுகின்றது. இந்த முதற்பேறானவர்களுக்குப் பதிலாக, லேவி கோத்திரமானது எடுத்துக்கொள்ளப்பட்டது (எண்ணாகமம் 3:12,13); இவர்களிடத்திலிருந்தே வந்த ஆசாரியர்களின் பலிச் செலுத்தும் பணியினால், ஜனங்கள் அனைவரும் நீதிமானாக்கப்பட்டார்கள்.
[R900 : page 2]

ஆட்டுக்குட்டியானது, நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அடையாளப்படுத்துகின்றது; அதன் மரணமானது, அவருடைய மரணத்தினை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. நிழலுக்கு முற்றுமுடிய இசைவாக, அவரது தியாக மரணமானது, அதே தேதியில் நிகழ வேண்டும் மற்றும் நிகழ்ந்தது. நிழலான ஆட்டுக்குட்டியினுடைய இரத்தத்தினால் காப்பாற்றப்பட்டவர்களாகிய முதற்பேறானவர்கள், “(இயேசு) தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட, முதற்பேறானவர்களின் சபைக்கு” அடையாளமாய்க் காணப்பட்டனர். அந்த முதற்போறான இஸ்ரயேலர்கள், அதாவது பிற்பாடு ஆசாரியர்கள் ஆனவர்கள், பிரதான ஆசாரியனாகக் கர்த்தர் காணப்படுகின்றதான “இராஜரிக ஆசாரியக்கூட்டத்தினை” அடையாளப்படுத்துகின்றனர்; மேலும் இந்த அபிஷேகிக்கப்பட்ட கூட்டத்தார் தேவனோடு இசைவிற்குள் வருகின்றதான ஜனங்கள் அனைவரையும், ஆசீர்வதிப்பதற்கான தேவனுடைய கருவிகளாக இருக்கப்போகின்றனர்; இந்த ஜனங்களுக்கு, இஸ்ரயேலர்கள் அனைவரும் நிழலாய்க் காணப்படுகின்றனர். இப்படியாகப் பார்க்கும்போது, நிழலான ஆட்டுக்குட்டியினுடைய இரத்தமானது, முதலாவதாகவும், நேரடியாகவும் முதற்பேறானவர்களுக்கு மாத்திரம் செயல்படுத்தப்பட்டாலும், அது இஸ்ரயேலர் அனைவரையும் சுத்திகரித்து, பாதுகாத்தது. ஒருவேளை முதற்பேனானவர்கள் காப்பாற்றப்படவில்லையெனில், எந்த ஆசாரியக்கூட்டமும் இருந்திருக்காது; ஒருவேளை ஆசாரியக்கூட்டம் ஏதும் இல்லையெனில், எந்தப் பாவ நிவிர்த்தியும் இருந்திருக்காது. இப்படியாகவே நிஜத்திலும்கூட உள்ளது; அதாவது உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறதான தேவ ஆட்டுக்குட்டியினுடைய புண்ணியமானது, சுவிசேஷ யுக இரவில் முதற்பேறானவர்களுக்கு, சபைக்கு, தெரிந்தெடுக்கப்பட்ட சிறுமந்தையினருக்கு இராஜரிக ஆசாரியக்கூட்டத்தாருக்கு மாத்திரமே செயல்படுத்தப்படுகின்றது மற்றும் இவர்கள் பிரதான ஆசாரியனுடைய தலைமையின்கீழ், வரவிருக்கிற யுகத்தில், சீக்கிரத்தில் உத்தம இருதயத்தார் அனைவரையும் (உத்தம இஸ்ரயேலர்கள் அனைவரையும்) தேவனுடன் முழு இசைவிற்குள் கொண்டுவருவார்கள்.

ஆகையால் முதற்பேறான சபையார் அனைவரும், நிழலான ஜனங்கள் போன்று நிழலான ஆட்டுக்குட்டியை நினைவுகூர்ந்து, அதன் மாம்சத்தைப் புசித்தது போலல்லாமல், மாறாக பயபக்தியுடனும், புரிந்துகொள்ளுதலுடனும், தேவ ஆட்டுக்குட்டியாகிய, நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய மரணத்தை நினைவுகூர்ந்து ஆசரிப்பார்களாக. அதன் ஆண்டு நிறைவு நாளானது, ஆண்டுதோறும் வருகையில், அவரை நினைவுகூரும் வண்ணமாய் அதை ஆசரிப்போமாக; ஏனெனில் நமது பஸ்காவாகிய (ஆட்டுக்குட்டியாகிய) கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கின்றாரே; ஆகையால் (நாம் அவரது மரணத்தை மாத்திரம் நினைவு கூராமல்) பஸ்கா வார பண்டிகையினுடைய* நிஜத்தையும்கூடச் சந்தோஷமாய் ஆசரிக்கக்கடவோம். [*”பண்டிகை” என்பது, “இராப்போஜனமல்ல,” மாறாக பண்டிகையானது, இராப்போஜனத்தைப் பின்தொடர்கின்றது மற்றும் முற்றிலும் வேறுபட்ட அர்த்தம் கொண்டிருக்கின்றது. யூதர்களுக்குப் பண்டிகையானது ஒருவாரமளவும் நீடித்ததாய் இருந்தது மற்றும் ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்டு, புசிக்கப்பட்ட பிற்பாடு துவங்குகின்றதாய் இருக்கின்றது. பண்டிகையின் ஆசரிப்பில், இருதயத்தினுடைய சந்தோஷமும், அனைத்து விதமான சிற்றின்பங்கள் மற்றும் புளிப்பிலிருந்து விலகியிருத்தலும் அடங்குகின்றது. பண்டிகையானது சந்தோஷமுள்ள, தூய்மையுள்ள மற்றும் பாவத்திலிருந்து (புளிப்பிலிருந்து) பிரிந்துள்ள ஜீவியத்தை ஆட்டுக்குட்டியினுடைய முக்கியத்துவத்தை அடையாளங்கண்டு கொண்டுள்ள அனைவரும் அனுபவிக்கவிருக்கின்ற ஜீவியத்தைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.]

“பண்டிகையானது,” “இராப்போஜனமாய்” இராமல், மாறாக அதைப் பின்தொடர்கின்ற ஒன்றாகவும், முற்றிலும் வேறான அர்த்தம் உடையதாகவும் காணப்படுகின்றது. யூதர்களுடைய “பண்டிகையானது” ஒரு வாரக் காலம் நீடித்ததாய் இருந்தது; மற்றும் ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு, புசிக்கப்பட்ட பிற்பாடு துவங்கினதாய் இருந்தது. இதன் ஆசரிப்பில் இருதயத்தின் சந்தோஷமும், அனைத்து வேட்கைகள் மற்றும் புளிப்பிலிருந்து விலகுதலும் அடங்குகின்றது. இது ஆட்டுக்குட்டியினுடைய மதிப்பு முதலானவைகளை அடையாளங்கண்டுகொள்ளும் அனைவரும் அனுபவிக்கப் போகின்றதான சந்தோஷமும், தூய்மையும், பாவத்திலிருந்து (புளிப்பிலிருந்து) விலகியுமுள்ள ஜீவியத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

ஏப்ரல் 7-ஆம் தேதியன்று இரவில், நாம் “பஸ்கா பண்டிகையினை” ஆசரிப்பதில்லை. அது அதன் ஏழு நாட்கள் அடையாளப்படுத்துகின்றதுபோல நம்முடைய ஜீவியம் முழுவதும் ஆசரிக்கப்படுகின்றதாய் இருக்கின்றது; ஆனால் நாம் அந்தத் தேதியில் இராப்போஜனத்தை ஆசரிப்போம்; இந்த இராப்போஜனத்தில் இடம்பெறுகின்றதான அப்பமும், திராட்சரசமும், நமது மீட்பருடைய மாம்சத்தையும், இரத்தத்தையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

எனினும் அப்பமும், திராட்சரசமும் அடையாளங்கள் மாத்திரமே மற்றும் நாம் செய்கிறவைகள் என்னவென்று உணர்ந்துகொள்வதற்கு, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றுகூறி, நமது கர்த்தர் கட்டளையிட்டவைகளுக்கு ஏற்ப இவைகளை நாம் பயன்படுத்துகையில், இன்னும் ஆழமாய் இவைகளை நாம் பார்க்க வேண்டும். அவரது மாம்சத்திற்கு அடையாளமான அப்பத்தில் பங்கெடுப்பது என்பது, ஆதாம் மூலம் நாமும், அனைவரும் தொலைத்திட்டதும், பூரண மனிதனாக அவருக்குள் இருந்ததுமான அந்தப் பூரணங்களில் பங்கெடுத்தலை நமக்குக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. அவரது இரத்தத்திற்கு, அவரது ஜீவனுக்கு அடையாளமான திராட்சரசத்தில் பங்கெடுப்பது என்பது, ஆதாமில் இழந்துபோனதான, ஜீவிப்பதற்கான உரிமையை, மீண்டுமாய் அவர் மூலமாய், தேவனிடமிருந்து ஏற்றுக்கொள்வதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இப்படியாக அவரது மாம்சத்திற்கும், இரத்தத்திற்கும் அடையாளமான அப்பதையும், திராட்சரசத்தையும் புசிப்பதும், பானம்பண்ணுவதும் என்பது நமது முழுமையான நீதிமானாக்கப்படுதலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. நமக்காகக் கொடுக்கப்பட்டதான மீட்பருடைய மனுஷீக பூரணங்களையும், ஜீவனுக்கான அவரது உரிமைகளும், இப்படியாக நம்மால் இந்த அடையாளத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஈடுபலியின் விசுவாசிகள் அனைவரும் இப்படியாய் இதையும், இது கொண்டுவரும் ஆசீர்வாதங்களையும் நினைவுகூர்ந்து ஆசரிப்பதற்கான சிலாக்கியம் பெற்றவர்களாய் இருக்கின்றனர்.

ஆனால் இந்த “விசுவாசிகள்” மத்தியில், “சிறுமந்தையினர்” எனும் வகுப்பார் காணப்படுகின்றனர்; இவர்களுக்கு மேற்கூறியவைகளும், இன்னும் அதிகமாகவும் அர்த்தம் காணப்படுகின்றது. இவர்கள் தங்கள் மாபெரும் பிரதான ஆசாரியன்கீழ் தங்களை உடன் ஆசாரியர்களென அர்ப்பணம் பண்ணினவர்களாய் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்த அடையாளங்களானது, இவர்களை மனுஷீக ஜீவனுக்கும், அதன் உரிமைகள் அனைத்திற்கும் நீதிமானாக்கிடும் கர்த்தருடைய பலியை மாத்திரம் குறிக்காமல், அவரோடுகூடப் பலிசெலுத்துவதிலும், அவரோடுகூடப்பாடுபடுவதிலும், அவரோடுகூட மரிப்பதிலும், அவரது பலியை ஏற்றுக்கொண்டதன் வாயிலாக தாங்கள் எதற்கு நீதிமானாக்கப்பட்டார்களோ இந்த மனுஷீக உரிமைகள் மற்றும் பூரணங்கள் அனைத்தையும் பலிசெலுத்துவதிலும் தங்களை இணைத்துக்கொண்டதான தங்களது அர்ப்பணிப்பையும்கூடக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.

ஆகையால் அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு அடையாளங்களானது (அப்பம் மற்றும் திராட்சரசமானது) கர்த்தருடைய பலிக்கான நினைவுகூருதல்களாக மாத்திரம் காணப்படாமல், அவருடன் பலிசெலுத்துவதற்கான தங்களது உடன்படிக்கைக்கும்; தாங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றி, திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகுவதற்கும், நமது கர்த்தரும், மீட்பரானவருடன், உடன் சுதந்தரர்களாகக் காணப்படுவதற்கும், ஜனங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பதில் அவருடன் உடன் வேலையாட்களாகக் காணப்படுவதற்கும் பாத்திரவான்களாகுவதற்கான காரியங்களுக்கும்கூட நினைவுகூருதல்களாகக் காணப்படுகின்றது.

நினைவுகூருதலின் இந்த அம்சத்தைப் பின்வரும் வார்த்தைகளைக்கூறி பவுல் நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார்: “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய (அபிஷேகிக்கப்பட்ட வகுப்பார் அனைவருடைய) இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் (நமது கர்த்தரைத் தலையாகப் பெற்றிருக்கும் “சிறுமந்தையாகிய,” சபை) ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான (அங்கத்தினர்களான) நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.” (1 கொரிந்தியர் 10:16,17)

இந்த யுகத்தில் விசுவாசத்தின் மூலமாக (அ) அடுத்த யுகத்தில் நிஜமாகவே அனைவரும் நமது கர்த்தர் இயேசுவின் மாம்சத்தைப் புசிக்க வேண்டும்; அதாவது அவரது பலியினால் அனைவருக்கும் பெற்றுத் தரப்பட்டதான அந்த மனுஷீக உரிமைகள் மற்றும் சிலாக்கியங்களில் பங்கெடுக்க வேண்டும்; இல்லையேல் ஒன்றில் இப்பொழுது பலிச் செலுத்துவதற்கு (அ) ஒன்றில் (பலிச் செலுத்தும் சிலாக்கியம் இல்லாமல் அப்போது) அதை அனுபவிப்பதற்கு என்று ஜீவிப்பதற்கான உரிமைகள் ஏதும் இருக்காது. ஆகையால் “இதைச் செய்வதற்கும்,” நிதானித்து, அறிந்து செய்வதற்கும் என்று நாம் விசுவாசிகள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம். அடையாளத்தைப் பயன்படுத்துகையில், அனைத்துப் பாவங்களிலிருந்துமான நீதிமானாக்கப்படுதலையும், வேறு எந்த நாமத்தின் மூலமாகவோ, வழியின் மூலமாகவோ இல்லாமல், தேவனுடைய ஆட்டுக்குட்டியின் வாயிலாக தேவன் கொடுக்கின்றதான ஜீவிப்பதற்குரிய உரிமையையும் முழுமையாய் ஏற்றுக்கொள்ளுங்கள், சொந்தமாக்கிக்கொள்ளுங்கள், பயன்படுத்திக்கொள்ளுங்கள். விசேஷமாக கிறிஸ்துவோடுகூட அவரது மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்களும் மற்றும் இப்படியாய் அவரது ‘”சரீரத்தின்’ அங்கத்துவத்துக்குள், வந்தவர்களுமாகிய விசுவாசிகள் அனைவரும், அவரது இரத்தத்தின் மூலமான நீதிமானாக்கப்படுதலை நினைவுகூர்ந்து, அவரோடுகூட மரிப்பதற்கான தங்களது உடன்படிக்கையினைப் புதிய, திவ்விய சுபாவத்தின் பங்காளிகளெனப் புதுப்பித்துக்கொண்டு, “இதை ஆசரிப்பார்களாக.” (ரோமர் 6:3,4)

ஒரே சரீரத்தின் உடன் அங்கத்தினர்கள் என்று உங்களால் அடையாளங்கண்டு கொள்ள முடிகிறவர்களுடன் கூடிக்கொள்ளுங்கள்; ஈடுபலியில் விசுவாசமற்றவரைத் தவிர்த்துவிடுங்கள். முன்கூட்டியே கூட்டத்திற்கான ஆயத்தங்களைச் செய்து கொள்ளுங்கள். உங்களில் யார் அடையாளச் சின்னங்களைக் கொண்டு ஒவ்வொருவரிடம் பரிமாறுகின்றார்கள் என்பது முக்கியமல்ல; முதலாம் ஆசரிப்பில் யூதாஸ்கூட உதவியிருந்திருக்கலாம்.

கலந்துகொள்ள முடிபவர்கள் அனைவரும், பிட்ஸ்பர்கிலுள்ள (Pittsburgh) சபையோடு கலந்துகொண்டு, ஆசரிக்கும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றோம். கர்த்தருடைய நாளாகிய, நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்கான ஆண்டு நிறைவு நாள்வரையிலும் கூடுமானால் தங்கிடத்தக்கதாக, உங்கள் அலுவல்களை ஒழுங்கு செய்திடுங்கள். எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு; நமது ஆவிக்குரிய நலன்களுக்கென்று குறிப்பாய்ப் பிரயாசங்கள் எடுக்கத்தக்கதாக நாம் சில நாட்களை ஒதுக்கிச் செலவிடலாம்.