R3534 – மிகவும் விலையேறப்பெற்ற தைலம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3534 (page 103)

மிகவும் விலையேறப்பெற்ற தைலம்

PERFUME VERY PRECIOUS

யோவான் 12:1-11

“இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.” மாற்கு 14:8

அன்று சனிக்கிழமை இரவாகக் காணப்பட்டிருக்க வேண்டும் என நாம் கருதுகின்றோம்; அதாவது, யூதர்களுடைய ஓய்வுநாள் ஆரம்பமாகும் மாலையில் ஆறு மணிக்குப் பின்னர், இயேசுவும் அவருடைய சீஷர்களும், மரண நித்திரையிலிருந்து எழுப்பப்பட்ட லாசருவும், அக்குடும்பத்தின் மற்றச் சில நண்பர்களோடு விசேஷித்த கனத்தை இயேசுவுக்குக் கொடுக்கும்படியாக அவருடைய நண்பர்களின் வீட்டில் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்த விருந்தில் அமர்ந்தார்கள். அவ்வீட்டிற்கு அவர் வந்துபோவதை, எப்பொழுதும் அவ்வீட்டார் விரும்பினார்கள். மேலும், பதிவுகள் தெரிவிக்கிற காரியங்களை வைத்துப்பார்க்கையில், அவருடைய ஊழிய நாட்களில், மற்ற வீடுகளுக்கு செல்வதைக்காட்டிலும், இவ்வீட்டிற்கே அவர் வந்துபோய் உள்ளார் என நாம் அறிந்துக்கொள்கின்றோம். இது பெத்தானியாவிலுள்ள லாசரு, மார்த்தாள் மற்றும் மரியாளின் வீடாகும். இது, குஷ்டரோகியாகிய சீமோனின் வீடு என்றும் அழைக்கப்பட்டது. மேலும், இந்தச் சீமோன், இக்குடும்பத்தில் தலைவராகிய தகப்பனாய் இருந்தார் என்று ஒரு அனுமானம் நிலவிக்கொண்டிருக்கிறது; வேறொரு அனுமானமோ, இந்த சீமோன் மார்த்தாளுடைய கணவர் என்றும், இப்பாடத்தின் சம்பவங்கள் நடந்த தருணத்தில் அவள் விதவையாய் இருந்தாள் என்றும் காணப்படுகின்றது.

நமது கர்த்தரும், அவர் சீஷர்களும் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் போகிற வழியில் புறநகர் பகுதிகளில் பெத்தானியா காணப்பட்டது. அதற்கு முந்தின தினமாகிய வெள்ளிக்கிழமை அல்லது யூதர்களின் வாரத்தின் ஆறாம் நாளன்று, அவர்கள் அநேகமாக அங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். அவர்களை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த மார்த்தாளும், மரியாளும் அருமையான விருந்தை ஆயத்தம் செய்தார்கள். மேலும், யூதர்களின் முறைமையின்படி ஓய்வுநாளில் வேலை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததினால், இப்படிப்பட்ட தருணங்களில் உணவு பண்டங்கள் முன்கூட்டியே ஆயத்தம் பண்ணப்பட்டிருக்க வேண்டும். பெத்தானியாவில் அவர்கள் கைக்கொண்ட ஓய்வுநாளைக் குறித்து எந்தப் பதிவுகளும் கொடுக்கப்படவில்லை என்றாலும், கர்த்தர் மற்றும் அவருடைய தெரிந்துக்கொள்ளப்பட்ட அப்போஸ்தலர்கள் மற்றும் அக்குடும்பத்தின் அருமையான அங்கங்கள் மத்தியில் நடந்த மகிழ்ச்சியான சம்பாஷணைகளை நாம் நன்கு கற்பனை செய்துகொள்ளலாம்.

சமுதாய வாழ்வில் இயேசு

ஆண்டவருடைய ஞானமுள்ள மற்றும் அன்பான வார்த்தைகள் பதிவு செய்யப்படவில்லையென்றாலும், நல்ல மனுஷனுடைய இருதயத்தில், நன்மையான பொக்கிஷங்கள் நிரப்பப்பட்டிருக்கும் என்றும், அப்படியாக நன்மையால் நிறைந்த இருதயத்தின் நிறைவால் வாய் பேசும் என்றும் நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே, அன்று விளையாட்டுத்தனமான வார்த்தைகளுக்கோ அல்லது செயல்பாடுகளுக்கோ இடம்கொடுக்கப்படாமல் மாறாக, சரியான இருதய நிலைமையிலுள்ள யாவருக்கும் புத்துணர்வை உண்டுபண்ணும் ஆவிக்குரிய களிகூருதலிலும், இளைப்பாறுதலிலும் அன்றையநாள் செலவழிக்கப்பட்டிருக்க வேண்டும். இதே கோட்பாடுகள், கர்த்தருடைய பின்னடியார்கள் எவ்விடங்களில் காணப்பட்டாலும், அவர்களுடைய சூழ்நிலைகள் என்னவாகக் காணப்பட்டாலும், கூட அவர்களுக்குப் பொருந்தக்கூடியதாய் இருக்கின்றது. இவர்கள் தங்களுடைய இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நன்மையான காரியங்களை மட்டுமே பேச வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள், ஆனால், ஒருவேளை இதற்கு எதிர்மாறாகக் காணப்படுவார்களேயானால், அவர்கள் விழிப்படைந்து தங்கள் தலையை (இவ்விஷயம் குறித்ததான அறிவை) மாத்திரம் சரிச்செய்து கொள்வதோடல்லாமல், இருதயத்தின் மாறுபாடுகளையும் சரிச் செய்துகொள்ள வேண்டும்.

லாசருவினாலும், அவருடைய சகோதரிகளினாலும் மிகவும் உயர்வாய்க் கருதிக்கொள்ளப்பட்டவரும், லாசருவை கல்லறையிலிருந்து வெளியே வரும்படி கூறி, தமது மேசியாவுக்குரிய அதிகாரத்தையும், தமக்குள் உயிர்த்தெழுதல் மற்றும் ஜீவனின் வல்லமை இருக்கின்றது என்பதையும் விவரித்துக் காட்டினவருமாகிய இயேசுவினிடத்தில், அவர்கள் கொண்டிருந்த அன்பை நாம் எழுத்துக்களில் காண்பிப்பதைக்காட்டிலும் நன்கு கற்பனை செய்துகொள்ளலாம். ஒருவேளை (லாசருவின் உயிர்த்தெழுதலாகிய), அந்த மாபெரும் சம்பவத்திற்குப்பின், நம்முடைய ஆண்டவர் பெத்தானியாவுக்கு இதுவே முதன்முறையாக சென்றிருக்க வேண்டும்.

நம்முடைய ஆண்டவர் பலதரப்பட்ட மக்களை நண்பர்களாகக் கொண்டிருந்தார். இவர்களில் சிலர் ஐசுவரியவான்களாகவும், சிலர் தரித்திரர்களாகவும், சிலர் நடுத்தரமான சூழ்நிலைகளிலும் இருந்தனர். பெத்தானியாவில் இருந்த இந்தக் குடும்பத்தினர் சௌகரியமான சூழ்நிலையின் கீழ்க் காணப்படும் வகுப்பாராய் இருந்தனர். மேலும், இவர்கள் சௌகரியமான சூழ்நிலைகளில் இருந்த காரியமானது, இவர்களுக்கு சொந்த வீடு இருப்பதின் மூலமும், இவர்களுக்குச் சொந்த கல்லறை இருப்பதின் மூலமும், கர்த்தரை விலையேறப்பெற்ற நளததைலம் கொண்டு அபிஷேகம் பண்ணி கனப்படுத்தும்படிக்கு அதிகம் பணம் செலவு செய்யத்தக்கதாக மரியாள் விருப்பமும், திராணியும் கொண்டிருந்ததின் மூலமும் உறுதிப்படுகின்றது. ஐசுவரியங்கள் அநேகருக்கு மாபெரும் கண்ணியாக இருக்கிறது. இன்னுமாக, ஐசுவரியவான்களில் அநேகர் இராஜ்யத்தில் பிரவேசிப்பது இல்லை என்றும் கர்த்தருடைய வார்த்தை அறிவிக்கின்றது. இவர்களுக்கு தற்கால ஜீவியத்தின் கவர்ச்சிகள் என்பது, மிகவும் சக்திவாய்ந்ததாகவும், தங்களுடைய அர்ப்பணிப்பின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குத் தடையாகவும் உள்ளது. அதாவது, தங்களுடைய அனைத்தையும் பலிச்செலுத்தவும், தங்களுடைய அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் ஒப்புவிக்கவும், தங்களுடைய பூமிக்குரிய வாய்ப்புகள் மற்றும் ஆசீர்வாதங்களைப் பயன்படுத்தும் விஷயத்தில், அவருடைய உக்கிராணக்காரர்களாக மாறுவதற்கும் தடையாக உள்ளது. இன்னுமாக, இவைகளை ஞானமாக அவருடைய ஊழியத்தில் பயன்படுத்துவதற்கும் மற்றும் தாங்கள் கொண்டிருக்கிறோம் என்று அறிக்கைபண்ணின அன்பையும், நேர்மையையும் விவரிக்கும் விதத்தில், அவைகளை அவருடைய ஊழியத்திற்குப் பயன்படுத்துவதற்கும் தடையாக உள்ளது.

பல கோணங்களில் பார்க்கும்பொழுது, மற்றவர்களுக்கு மிகவும் தாராளமாய்ச் செய்வதற்கும், மிகுந்த விருந்தோம்பல் காண்பிப்பதற்கும் என, ஜீவியத்தில் நடுத்தரமான (middle class) வசதி வாய்ப்புகள் காணப்படுவது நலமாய்த் தோன்றலாம். எனினும், நிலைத்து நிற்பதற்கும், அதேசமயம் உண்மையுள்ளவர்களாய் இருப்பதற்கும், பெரும் திரளான வசதியுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது, நடுத்தரமான வசதியுங்கூட கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகின்றது. இதன் காரணமாகவே, இவ்வுலகத்தில் ஏழ்மையானவர்களே பிரதானமாக இராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாக இருப்பார்கள் என்று நமது கர்த்தர் அறிவித்த காரியங்கள் உண்மை என அறிந்துக்கொள்கின்றோம். அதாவது, பிரதானமாகக் கொஞ்சம் உடையவர்களும், அதிகம் பெற்றுக்கொள்வதற்கு கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு உடையவர்களும் மற்றும் இப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்பின் விளைவாக, கர்த்தரை பிரதானமாய் அன்பு கூருகிறவர்களுக்கு அவர் வாக்குத்தத்தம் பண்ணியுள்ள பரம காரியங்களின்மேல் உடனடியாக மனதை திருப்பிக்கொள்ளுகிறவர்களுமே இராஜ்யத்தின் சுதந்திரவாளிகளாய் இருப்பார்கள்.

பெத்தானியாவின் வீட்டாருக்குச் சௌகரியமான சூழ்நிலைகள் இருந்ததுபோன்று நம்மிடத்தில் எந்தளவுக்குக் காணப்படுகின்றதோ, அதாவது தற்கால ஜீவியத்திற்குரிய நற்காரியங்களை எந்தளவுக்குப் பெற்றிருக்கின்றோமோ, அந்தளவுக்கு தக்கதாக இந்த ஜீவியத்திற்குரிய கவலைகளுக்கு எதிராகவும், இவ்வுலகத்தின் ஐசுவரியங்கள், இலட்சியங்கள், எதிர்ப்பார்ப்புகள் மற்றும் குறிக்கோள்களினுடைய வஞ்சனை தன்மைக்கும் எதிராகவும், விசேஷித்த விதமாக நம்மைப் பாதுகாத்துக்கொள்வது அவசியமாய் உள்ளது; இல்லையேல் இவைகள் நம்முடைய இருதயங்கள் கர்த்தரிடத்திலும், அவருடைய நோக்கத்தின் பேரிலும் காண்பிக்க வேண்டிய உண்மையையும், பக்தியையும் விட்டுவிலகச் செய்யும். மேலும், இவ்வுண்மைத் தன்மையையும், பக்தியையும் ஊக்குவிப்பதற்கும், தக்கவைப்பதற்கும் முழு விசுவாசமும் நம்பிக்கையும் தேவைப்படுகின்றது. சொல்லர்த்தமாகத் தரித்திரத்தில் இல்லாவிட்டாலும், ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருக்க முடியும். அதிகபட்சமான பூமிக்குரிய ஐசுவரியங்களைப் பெற்றிருந்தோமேயானால், இடுக்கமான வழியில் பிரவேசிப்பதற்கு அதிகமான கிருபை தேவைப்படுகிறது.

விலையேறப்பெற்ற நளததைலம்

இரண்டு சகோதரிகளும் செய்யப்பட வேண்டிய காரியங்களைத் தங்களுக்குள்ளாக ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருந்தார்கள். மார்த்தாள் பந்தியில் உணவு பரிமாறினாள். மரியாளோ அபிஷேகம் பண்ணும் விசேஷமான பணியின் மூலம் பணிவிடை புரிந்தாள். பண்டைய யூதர்களின் வழக்கத்தின்படி உயரம் குறைந்த, நீண்ட மேஜைகளைச் சுற்றி விருந்தாளிகள் பக்கவாட்டில் சாய்ந்த படுக்கை நிலையில் அமர்வார்கள். ஒரு முழங்கையின் மீது சரீரத்தின் மேற்பாதியைச் [R3535 : page 103] சாய்த்துக்கொள்வதும், மற்றக் கரத்தைக் கொண்டு உணவை வாய்க்கு எடுத்துச் செல்வதும் வழக்கமாய் இருந்தது. நம்முடைய கர்த்தர் இப்படிப் பக்கவாட்டில் சாய்ந்துப் படுத்த நிலையில் காணப்பட்டபடியினால், அவருடைய தலை பாகத்தையும், அவருடைய பாதத்தின் அருகேயும் மரியாளினால் மிகவும் சுலபமாக நெருங்க முடிந்தது. மரியாள் முதலில் அவருடைய தலையை அபிஷேகம் பண்ணி, பின்னர் அவருடைய பாதத்தைத் தைலத்தினால் அபிஷேகம் பண்ணினாள்.

இந்தத் தைலத்தின் விலை 300 பணத்திற்கும் மேல் என்று 5-ஆம் வசனம் குறிப்பிடுகின்றது. ஒரு பணம் அன்றைய தினத்திற்கான ஒருவருடைய கூலியாகும் (மத்தேயு 20:2). இப்படியாக 300 பணம் என்பது, ஒரு வருடத்தின் உழைப்பினால் பெற்ற ஊதியமாகும். ஆகவே, இக்காலத்தில் இந்த 300 பணம் என்பது, இன்றுள்ள 300-லிருந்து 600 டாலர்களுக்கு ஒப்பிடலாம்.

[R3535 : PAGE 104]

அவளால் இயன்றதை அவள் செய்தாள்

இப்படிப்பட்ட விலையுயர்ந்த தைலங்கள் மிக அரிதாகப் பயன்படுத்தப்பட்டது. உண்மையைச் சொல்லப்போனால் சக்கரவர்த்திகளும் கூட, இதைச் சிக்கனமாகப் பயன்படுத்தினார்கள். அதுவுமல்லாமல், அது பயன்படுத்தப்படும் சமயங்களில் பொதுவாகத் தலையின் மீதே ஊற்றப்படுகிறது. மரியாள் கர்த்தருடைய தலையில் தைலத்தை ஊற்றினபோது, மேற்கூறப்பட்ட அவ்வழக்கத்தைப் பின்பற்றினவளாகக் காணப்பட்டாள் என்பது மத்தேயு மற்றும் மாற்குவின் பதிவுகளிலிருந்து தெரியவருகிறது; ஆனால், இதைச் செய்த பிற்பாடோ, அவள் அவர் பாதம் அருகே வந்து, தைலத்தினால் அபிஷேகம் பண்ணி, தன்னுடைய நீண்ட கூந்தலினால் அவர் பாதங்களைத் துடைத்தாள். அன்பு கலந்த பக்திக்குரிய எத்துணை அருமையான காட்சி இங்கு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது! பாதங்கள் மனிதனுடைய சரீரத்திலேயே தாழ்மையானதும், கீழான அங்கமுமாக, மதிப்புக்குறைந்த அங்கமாக எப்பொழுதும் கருதப்படுகிறது. ஆனால், தலையிலுள்ள மயிரானது, அதுவும் விசேஷமாக, ஸ்திரீகள் விஷயத்தில் விசேஷித்த பொக்கிஷமாகவும், அவளுக்கு மகிமையாகவும் எப்போதும் கருதப்படுகின்றது. இவ்விதமாக, மரியாள் தனது மகிமையான தலைமயிரைக்கொண்டு அவருடைய பாதங்களைத் துடைத்த காரியமானது, மரியாள் தனது, கர்த்தரும் ஆண்டவருமாகிய அவரைத் தன்னைக்காட்டிலும், முற்றிலும் மேலானவராக மதிப்புடன் கருதியதைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆரம்பத்தில், அவரை மனுஷர் மத்தியில் மிகவும் அருமை வாய்ந்த நபராகவும், ஒரு மனுஷனும் அதுவரைக்கும் பேசாதவைகளைப் பேசுகின்ற ஒரு மனுஷனாகவும் மரியாள் உணர்ந்துக்கொண்டாள்; பின்னரே அவர் ஒரு மாபெரும் போதகர் என்றும், விசேஷித்த காலத்திற்காக விசேஷித்தவிதமாய் அனுப்பப்பட்டவர் என்றும் அறிந்திருந்தாள். ஆனால், அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து எழுப்பினதின் மூலம் இறுதியாக, சர்வ வல்லமையுள்ளவரின் வல்லமை அவருக்குள் இருக்கின்றது என்றும், அவர் தேவனுடைய குமாரன் என்றும் அறிந்துக்கொண்டாள். ஆகவே, அவருடைய மேன்மையான நிலையை உணர்ந்தவாறு அவருக்குப் பொருத்தமான மரியாதையைச் செலுத்தினாள்.

அவரை இந்தப் பூமியின் சிங்காசனத்தின்மேல் அவளால் அமர்த்த முடியாவிட்டாலும், தான் அவருக்கு என்றுமே பயபக்தியுடன் காணப்படும் ஓர் ஊழியக்காரி என்பதை அவளால் காட்ட முடிந்தது. இஸ்ரயேல் ஜனங்களுக்கு முன்பாக அவரை மகிமைப்படுத்த அவளால் இயலாதபோதிலும், தன்னுடைய சொந்த வீட்டிற்குள் அவரை மகிமையும், கனமும் செய்யமுடிந்தது. அவளால் அவருடைய புகழை எடுத்துக்கூறவோ, அவருடைய மகத்துவங்களை எடுத்துக்கூறி பாட முடியாவிட்டாலும், அவளுடைய இருதயத்திற்குள் அவளால் அவரைக் குறித்துப் பாட முடிந்தது, இன்னுமாக, அவர்மேல் நறுமணதைலத்தையும் அவளால் ஊற்றவும் முடிந்தது. இந்த நறுமணதைலமானது, அவளுடைய வீட்டை நறுமணத்தினால் நிரப்பியதோடல்லாமல், அவளுடைய நாள் துவங்கி தற்காலம் வரையிலும் காணப்படும் பெண் இனத்திற்குரிய கனத்திற்கு இனிமையான நறுமணத்தை வழங்குவதாகவும் இருக்கின்றது. இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள் என்று கர்த்தர் கூறினார். அதாவது, இவள் தன்னால் இயன்றமட்டும் தன்னுடைய பக்தியை/அன்பை வெளிப்படுத்தி உள்ளாள் என்றவிதத்தில் கர்த்தர் குறிப்பிட்டுள்ளார். “இந்தச் சுவிசேஷம் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும் அறிவிக்கப்படும்” என்று நம்முடைய ஆண்டவரால் கூறப்பட்ட தீர்க்கத்தரிசனம் எவ்வளவு உண்மையாக இந்நாள்வரைக்கும் நிறைவேறிவருகிறது! இது, ஓர் அன்பான இருதயத்தைக் குறித்தும், இனிமையான குணலட்சணம் குறித்ததுமான ஓர் இனிமையான நினைவுகூருதலாகும். இந்தச் சுவிசேஷயுகம் முழுவதும் உள்ள கர்த்தருடைய ஜனங்கள் அனைவர் மீதும் ஊற்றப்பட்ட நறுமணத்தினிமித்தம் உண்டான புத்துணர்வு, ஆசீர்வாதம் மற்றும் சுகந்த வாசனையின் வெளிச்சத்தின் கீழ் பார்க்கும்போது, மரியாளுடைய நளதம் தைலம் விலையுயர்ந்ததாக இருப்பினும், அது உண்டுபண்ணின பலன்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது அது அவ்வளவு விலையுயர்ந்ததாகத் தோன்றவில்லை.

இதை விற்று தரித்திரருக்குக் கொடுத்திருக்கலாமே

பணம் விரயமாக செலவழிக்கப்பட்டதைக் குறித்து யூதாஸ் எதிர்த்துப் பேசினான் என்று கூறப்படுகிறது. ஆயினும், அவன் தரித்திரனுக்காக இப்படி பரிந்துரையாமல், அவன் திருடனாக இருந்தபடியினால் தன் பணப்பையை நிரப்புவதற்கு இப்படி கூறினான் என்றும், நறுமணதைலத்திற்கு செலவிடப்பட்ட பணமானது, சீஷர்களின் கூட்டத்தாருக்கு பொருளாளராக இருக்கும் தன்னிடம் கொடுக்கப்பட்டிருந்தால், அதை தனக்காக தகாத விதமாய் பயன்படுத்தி இருக்கலாமே என்று வருத்தமடைந்தான் என்றும் சுவிசேஷங்கள் அறிவிக்கிறது. யூதாஸ்தான் அவர்கள் மத்தியில் முறுமுறுப்பை தூண்டிவிட்டான் என்பதில் ஐயமில்லை. மேலும், சீஷர் கூட்டத்தில் இருந்த சிலர், அவனுடைய கூற்றிற்கு சம்மதித்தார்கள், இப்படியிருக்க, மீதமிருந்த மற்ற அப்போஸ்தலர்கள், அவ்விஷயத்தைக் குறித்து எழுந்த சச்சரவில் பெரும்பான்மையாய்க் காணப்பட்டவர்களின் கருத்தினிமித்தம் இந்த வீண் செலவுகள் தவறு என்று ஒப்புக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவோ, “அவளை தனியே விட்டுவிடுங்கள், என்னை அடக்கம் பண்ணும் நாளுக்காக இதை செய்தாள். தரித்திரர்கள் எப்போதும் உங்களோடு இருப்பார்கள், நானோ உங்களோடு எப்போதும் இரேன்” என்ற வார்த்தைகளைச் சொல்லி அவர்களுடைய வாயை அடைத்தார்.

இன்று காணப்படும் கர்த்தருடைய சீஷர்களில் அநேகர் சிக்கனம் தொடர்பான தங்கள் கருத்துக்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். நாம் வீண் செலவு செய்யாமல், எதிர்காலத்தைக் குறித்த சிந்தனையினிமித்தம் சேமிக்கிறவர்களாய் இருக்க வேண்டும் என்பதும், ஊதாரித்தனமாய் இல்லாமல், சிக்கனமாய் இருக்க வேண்டும் என்பதும் உண்மை தான். இப்படிப்பினை குறித்து நமது கர்த்தர் அடிக்கடி கூறியுள்ளார். உதாரணத்திற்கு, திரளான ஜனங்களைப் போஷித்த பிற்பாடு மீதியிருந்த துணிக்கைகளைச் சேர்த்து வைக்கும்படி அவர் கட்டளையிட்டார் என்று நாம் பார்க்கின்றோம் (மத்தேயு 14:20). ஆனால், சிக்கனம் சரியான விஷயங்களில் காணப்பட வேண்டும். கர்த்தருடைய விஷயத்தில், சிக்கனத்துடனும், கருமித்தனத்துடனும் காணப்படுகிறவர்கள் நிச்சயமாக இழப்புக்குள்ளாவார்கள். ஏனெனில், வேதவாக்கியங்கள் இப்படியாகக் காணப்படுகின்றது. அதாவது, “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.”

நம்முடைய சொந்த விஷயங்களில், சிக்கனமாய் இருப்பது குறித்தும், கர்த்தர் மற்றும் அவருடைய ஊழியம் தொடர்பான விஷயத்தில் ஏராளமாய் செலவுசெய்யத்தக்கதாக தாராளமாய் இருப்பது குறித்தும், நாம் கற்றுக்கொள்வது, நமக்குப் புதிய காரியமாய் உள்ளது. “இராஜாவினிடத்தில் நீங்கள் வரும்போது பெரிய பெரிய விண்ணப்பங்களை சுமந்து வாருங்கள்” என்று நாம் சில சமயம் பாடுகின்றோம், ஆனால், கிருபையின் சிங்காசனத்தினிடத்தில் பெரிய பெரிய விண்ணப்பங்களைக் கொண்டு வருகிறவன் கர்த்தருக்காக நறுமணதைலமுள்ள பெரிய வெள்ளைக்கல் பரணியை தன்னோடுகூட கொண்டு வந்திருக்கின்றானா என்று கவனிக்க வேண்டும். அதாவது, கர்த்தருடைய தயவைப் பெற்றுக்கொள்வதற்கோ, அல்லது தன்னுடைய விண்ணப்பங்களை நறுமணத்தினால் பிரமாண்டமாக்கிக் கொள்வதற்கோ தைலமுள்ள பெரிய வெள்ளைக்கல் பரணியை அவன் கொண்டுவராமல் மாறாக, தான் ஏற்கெனவே பெற்றுள்ள ஆசீர்வாதங்களை உணர்ந்துக்கொண்டிருப்பதற்கான அடையாளமாய்க் கொண்டுவர வேண்டும். துதி மற்றும் நன்றிகளாகிய தைலம் நிரம்பின வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வருபவர்கள் பொதுவாக கொஞ்சம் விண்ணப்பங்களையே உடையவர்களாகக் காணப்படுவார்கள். மாறாக, தாங்கள் ஏற்கெனவே கடனாளிகளாய் இருக்கின்றார்கள் என உணர்ந்த நிலையில் காணப்படுகின்றனர், அதாவது, தாங்கள் பெற்றுக்கொண்ட தெய்வீக கிருபைகளுக்குச் சரியான பிரதிபலனை தாங்கள் ஒருபோதும் செலுத்த முடியாதவர்களாய் இருக்கின்றார்கள் என்று உணர்ந்து கொண்ட நிலையில் காணப்படுகின்றனர். தாங்கள் கேட்பது அல்லது விரும்புவதைக்காட்டிலும் அதிகமாயும் திரளாயும் கர்த்தருடைய கரங்களிலிருந்து நாளுக்கு நாள் பெற்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் உணர்ந்துகொள்கின்றனர். மேலும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களே அல்லாமல் வேறொன்றிலும் இவர்களுடைய ஏக்கங்கள் திருப்தி அடைவதில்லை. இப்படிப்பட்டவர்களே, மரியாளின் நடத்தையைப் பின்பற்றி, ஆண்டவருக்கு நறுமணம் வீசும் தைலங்களைக் கொண்டுவருகின்றனர், அதாவது, தங்களுடைய ஜெபங்களையும் இருதயப்பூர்வமான நன்றிகளையும் அவரிடத்தில் கொண்டுவந்து எவ்விதமான விண்ணப்பங்களையும் கேட்காமல் மாறாக, தங்களால் தாங்க முடியாத அளவுக்கு போதகரிடமிருந்து பொழிந்துக்கொண்டிருக்கும் ஆசீர்வாதங்களாகிய சகல காரியங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இக்காரியத்தைச் சரியாகக் கண்ணோக்கக்கூடியவர்கள், நம்மில் ஒருவரும் ஆண்டவருக்குக் கொடுக்கத்தக்கதாக, பாத்திரமான எதையும் பெற்றிருக்கவில்லை என்ற உணர்வையும் நிச்சயமாகப் பெற்றிருப்பார்கள், அதாவது, நம்மிடத்தில் இருக்கும் சிறப்பானவைகளும், நம்முடைய மிக விலையேறப்பெற்ற பரிசுகள் அல்லது பலிகள் அவருக்குக் கொடுக்கத்தக்க பாத்திரமாய் இராமல் மாறாக, நம்முடைய இருதயங்களிலுள்ள உணர்வுகளை லேசாக வெளிப்படுத்துகின்றதாய் மாத்திரம் காணப்படுகின்றது என்ற உணர்வையும் நிச்சயமாகப் பெற்றிருப்பார்கள். அவர் அங்கீகரிப்பாரானால், நாம் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்போம், மேலும், அதே இனிமையான குரல் நம்மிடத்தில்: “இவன் தன்னால் இயன்றதைச் செய்தான்” என்றும், “இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” என்றும் கூறுவதை இறுதியில் நாம் கேட்பதற்கு எவ்வளவாய் எதிர்ப்பார்க்கின்றோம்.
[R3535 : page 105]

தரித்திரர்கள் எப்பொழுதும் நம்மோடிருப்பார்கள்

சுவிசேஷயுகம் முழுவதிலும் தரித்திரம் தொடர்ந்துவரும் என்று நம்முடைய ஆண்டவர் தீர்க்கத்தரிசனமாக உரைத்த விஷயங்கள் பெருமளவில் நிறைவேறியுள்ளது. வருங்காலத்தை நாம் நோக்குகையில், அவருடைய ஆட்சியின் கீழ் எந்தவிதமான துக்கமும், தரித்திரமும் இனி இராது என்பதை நாம் அறிந்துக்கொள்ளும்போது, மகிழ்ச்சியடைகிறோம். “அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.” இந்த மாற்றமான சூழ்நிலைகள் அனைத்தும் மனித பரிணாமத்தினாலோ, மனித கோட்பாடுகளினாலோ, மனிதனுடைய சமுதாயம், கூட்டுறவு இயக்கங்கள் முதலியவைகளாலோ உண்டானவைகள் அல்ல. மனித சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக ஐசுவரியமுள்ளவர்களாகவும், சௌகரியமுள்ளவர்களாகவும், சந்தோஷமுள்ளவர்களாகவும் ஆக்கவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஏறெடுக்கப்பட்ட இத்தகைய பல்வேறு முயற்சிகள் கடந்த காலங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது, எதிர்க்காலத்திலும் தோல்வியைக் கொடுக்கக்கூடியதாகவே காணப்படும். மனுக்குலத்தின் ஒவ்வொரு அணுக்களும் பாவத்தினால், உரு சிதைந்துக் காணப்படுவதினாலும், இந்த உரு சிதைந்துபோன மனுக்குலத்தின்மேல், சுயநலம், இலட்சியங்கள் மற்றும் ஆசைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதினாலும், பாவம் தொடர்ந்துக் காணப்படும் வரையிலும் வலிகள், பாடுகள், தேவைகள் தொடர்ந்துக் காணப்பட்டுக் கொண்டே இருக்கும். மாபெரும் மேசியா, தமது மாபெரும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஆளுகைசெய்து, பாவத்தையும், நீதி மற்றும் சத்தியத்திற்கு எதிராக இருக்கும் யாவற்றையும் ஒழித்துப்போட்டு, நீதியையும் சத்தியத்தையும் பூமியில் நிலைநாட்டும் வரையிலும் பாவம் தொடர்ந்துக் கொண்டிருப்பது நிச்சயமே.

அந்த மகிமையான நாள் வரும் வரையிலும், அனைவரும் இரவின் அழுகையின் வழியாகவே கடந்துச் செல்ல வேண்டியுள்ளது; இப்பொழுது பதினெட்டு நுற்றாண்டுகளுக்குமேல் கடந்துச் சென்றிருந்தாலும், தரித்திரர்கள் நம்மோடு இருக்கின்றார்கள். மேலும், தரித்திரர்களில் அநேகர், கர்த்தருடைய அருமையானவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்தத் தரித்திரம், பல வழிகளில், இக்காலத்துச் சூழ்நிலைகளில் ஆசீர்வாதமாகவே நிரூபிக்கப்படுகிறது. தரித்திரமும் தரித்திரத்தைக் குறித்த பயமும் அநேகரை சரியான நிலையில் நிற்க உதவியுள்ளது. மேலும், வாழ்க்கையின் போராட்டத்தில் அவர்களைச் சுறுசுறுப்பாகவும் ஆக்கியுள்ளது, இவ்விதமாக, அவர்களுக்குள் ஜெயங்கொள்வதற்கு ஏதுவான குணநலன்களும் வளர்கின்றது. வேறு கோணத்தில் பார்க்கையில், தரித்திரம் இன்னும் நிலவிக்கொண்டிருக்கிறது என்ற உண்மையும், நம்முடைய பராமரிப்பும், உதவியும் தேவைப்படுகின்ற நிலையில் நமக்கு நண்பர்களும் அயலகத்தாரும், இருக்கின்றார்கள் என்ற உண்மையும், இப்பொழுது மிகுந்த சௌகரியமான சூழ்நிலைகளில் காணப்படுவோருக்கு ஆசீர்வாதமாக விளங்குகின்றது. இந்த உண்மைகளினிமித்தம் இப்படிப்பட்ட சௌகரியமான சூழ்நிலைகளில் காணப்படுவோருக்குள் அனுதாபமும், பொறுமையும், அன்பும், நன்மை செய்வதற்கான வாஞ்சையும், உதவி செய்வதற்கான வாஞ்சையும் வளர்கின்றது. ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான், கர்த்தரோ அதை அவனுக்குத் [R3536 : page 105] திருப்பிக்கொடுக்கின்றார் என்று வாசிக்கிறோம். இந்த வாக்குத்தத்தம் மிகவும் ஐசுவரியமானது, மற்றும் இது எளிமையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வார்த்தைகளுக்கு இசைவாக முதலீடு செய்வதற்கும், கர்த்தர் திருப்பிக்கொடுப்பதோடு அல்லாமல் மிகுந்த வட்டியையும் சேர்த்துக் கொடுக்கின்றார் என்று உணர்ந்துக்கொள்வதற்கும் அநேகர் அதிகம் விருப்பமற்றுக் காணப்படுகின்றனர் என்பதே வியப்பாய் உள்ளது.

நான் உங்களோடு எப்போதும் இருப்பதில்லை

ஆண்டவரைக் கனப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கொஞ்சமாகவே இருந்தது. கொஞ்ச நாட்களுக்குப் பின்பு, அவருடைய உபத்திரவங்கள் முடிவடைந்து, எல்லா தீமைகளையும், மனிதருடைய வல்லமையையும் கடந்து, அவர் மகிமையை அடையப்போகிறவராய் இருந்தார். ஆகவே, மரியாளின் கண்ணோட்டத்திலிருந்து நாம் பார்க்கும்பொழுது, (எல்லாம் முடிவடையப்போகும்) குறுகிய காலத்திற்குள் இவ்வளவு விலையுயர்ந்த தைலத்தை அவருக்குச் செலவழிப்பது ஏற்றதாய் இருந்தது. அதாவது, அந்நாளில் காணப்பட்ட நியாயசாஸ்திரிகள் மற்றும் பிரதான ஆசாரியர்களின் பழிப் பேச்சுக்களும், தூஷணங்களும் விழப்போகிற அவருடைய தலையானது, அதாவது இன்னும் கொஞ்ச நாட்களில் முட்களினால் உண்டாக்கப்பட்ட கிரீடம் சூட்டப்படப்போகின்ற அவருடைய தலையானது, இப்பொழுதே அவருடைய உண்மையான மதிப்பையும், உண்மையான மகத்துவத்தையும், அவருடைய இராஜத்துவத்தையும், அவர் உண்மையில் தேவனுடைய குமாரன் என்று அறிந்த சொற்பமான ஜனங்கள் மத்தியில் ஒருவரால் (மரியாள்), கனப்படுத்தப்படுவது பொருத்தமானதாக இருக்கும். இன்னுமாக, பாலஸ்தீனாவின் மலைப்பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் நடந்துத்திரிந்த அவருடைய அந்தப் பாதங்களை, இன்னுமாக சில சமயம் களைப்புற்ற நிலையில் காணப்பட்ட அவருடைய அந்தப் பாதங்களை, இன்னுமாக இடுக்கமான மற்றும் கரடுமுரடுமான அர்ப்பணிப்பின் பாதையில் நடந்துக் கொண்டிருப்பவர்களின் பாதங்களுக்கு அடையாளமாய் இருக்கும் அவருடைய அந்தப் பாதங்களை, இன்னுமாக விரைவில் சிலுவையில் ஆணியினால் ஊடுருவப்படப்போகிற அவருடைய அந்தப் பாதங்களை, இப்பொழுதே போதகரின் அடிச்சுவட்டில் நடக்க நாடுகிறவர்களும், அவருடைய பாதங்களை விரும்புகிறவர்களும், அவருடைய பாதங்கள் மீது நம்பிக்கை வைக்கிறவர்களும், அவைகளைக் குறித்து உணர்ந்துக்கொண்டவர்களுமாயிருக்கிற ஜனங்களில் ஒருவர் மேன்மையாகக் கனப்படுத்துவது பொருத்தமானதாய்க் காணப்படும்.

இக்காரியங்களைக் குறித்த சரியான கண்ணோட்டம் எது என்று நமக்குத் தெரியும்பொழுது, “அவளை தனியே விட்டுவிடுங்கள்,” அவளைத் தொந்தரவு செய்யாதிருங்கள், அவளிடமிருந்து அதை எடுத்துவிடாதீர்கள் என்ற விதத்தில் காணப்பட்ட நமது கர்த்தருடைய வார்த்தைகளுக்கு, நாமும் உண்மையில் இணங்க முடியும். அதாவது, அவள் தைலத்தைப் பயன்படுத்த முன் வந்தபோது, அவளைத் தடுத்து, அவளிடமிருந்து தைலத்தை எடுத்து, அதை விற்றுவிடலாம் என்று அப்போஸ்தலர்கள் விருப்பம் கொண்டிருந்தபோது, அப்படியாக அவளைக் கட்டாயப்படுத்தி அப்போஸ்தலர்கள் அதை விற்றுப்போடாதபடிக்கு, நமது கர்த்தர் அவர்களைத் தடை பண்ணும் விதத்தில், அவளைத் தனியே விட்டுவிடுங்கள், அவளைத் தடைசெய்யாதிருங்கள், அவளிடமிருந்து அதை எடுத்துவிடாதீர்கள் என்பதுபோல் கூறினார்.

அந்நாள் முதல் இந்நாள் வரைக்கும் மரியாளின் தைலம் ஒரு கிறிஸ்தவ குணநலனின் மிக அழகான அம்சங்களில் ஒன்றை அடையாளப்படுத்துகிறது. இயேசுவும், அப்போஸ்தலர்களும் தெரிவித்திருக்கிறபடி, கிறிஸ்துவின் முழுச்சபையும் விரிவான கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்படும்போது, கிறிஸ்துவின் சரீரமாக இருக்கின்றார்கள் என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு அதிக விலை கொடுத்துச் செலவு பண்ணுகிறதைக் காட்டிலும், கிறிஸ்துவின் சரீரமாகிய அபிஷேகம் பண்ணப்பட்ட சபையாருக்கு ஊழியம் புரியும்படி, மிகுந்த விலை கொடுத்து நறுமணதைலம் வாங்குபவர்களாகிய மரியாள் வகுப்பார் இன்றும் நம்மோடு காணப்படுகின்றார்கள். இன்னும் சொல்லப்போனால், கடந்த 18 நூற்றாண்டுகளாக, சபையார் மத்தியில் காணப்பட்டும் இருந்தார்கள். சரீரத்தின் தலைக்கு மாத்திரம் அபிஷேகமும், நறுமணமும், கனமும், ஆறுதலும், மகிழ்ச்சியும் அளிக்கப்படுவதோடு நிறுத்தப்படாமல், அன்று முதல் இதைப்போலவே அனைத்து அங்கங்களும், இந்த நளததைலம் ஊற்றின மரியாள் வகுப்பாரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள். இந்த மரியாள் வகுப்பார் ஆஸ்தி உடையவர்களாயும் அல்லது ஞானமுடையவர்களாயும், சொற்பொழிவாளர்களாயும் உள்ள வகுப்பாராய் எப்போதும் இருப்பதில்லை. மேலும், இவ்வகுப்பாரின் ஊழியம் ஆரவாரத்துடன் காணப்படுவதில்லை, ஆனால், அநேகருக்கு, அதிலும் விசேஷமாக உலகத்தாருக்கு இவர்களுடைய ஊழியம் முட்டாள்தனமாயும், வீணான காரியமாகவும் தோன்றும். ஆனால், கர்த்தரோ இவ்வகுப்பாருடைய ஊழியத்தை அங்கீகரிக்கின்றார். அதுபோல, இவர்களுடைய ஊழியத்தினால், ஆறுதலும், புத்துணர்வும் அடைந்த சரீரத்தின் அங்கங்களும் அங்கீகரிக்கின்றார்கள். இந்த மரியாள் வகுப்பார் மீது, ஆசீர்வாதம் தங்கியிருப்பதாக!

அங்கத்தினருக்குரிய கனம் – தலைக்குரிய கனம்

சுவிசேஷயுகம் முழுவதும் அங்கங்கள் இப்படியான விதத்தில் ஆறுதல் அளிக்கப்பட்டிருப்பார்களானால், யுகத்தின் முடிவில் இருக்கும் பாத அங்கங்கள் மீது இவ்விதமான சில குறிப்பிட்ட ஆசீர்வாதங்களை நாமும் எதிர்ப்பார்க்கலாம் அல்லவா? யுகத்தின் முடிவில் நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பதை நன்கு அறிந்திருக்கிறோம். தலை மகிமையடைந்துவிட்டது, சரீர அங்கத்தினர்களில் பலர் திரைக்கு அப்பால் சென்றுவிட்டனர், மீதமுள்ள பாத அங்கத்தினர்கள் மட்டுமே மாம்சத்தில் உள்ளார்கள். மரியாள் ஆண்டவரின் தலையையும், பாதங்களையும் அபிஷேகித்தக் காரியமானது, இக்காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நமக்கு ஓர் அருமையான நிழலாக உள்ளது. நாம் அனைவரும் மரியாள் வகுப்பாராகவும், அதேசமயம் பாத அங்கங்கள் வகுப்பாராகவும் இருக்க முடியும் என்ற தெய்வீக ஒழுங்கின் அருமையான அம்சம் இங்கு வெளிப்படுகின்றது. வேறுவார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், மரியாள் இயேசுவின் பாதங்களுக்கு ஊழியம் புரிந்ததுபோன்று, கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள ஒவ்வொரு அங்கமும் சரீரத்தின் உடன் அங்கங்களுக்கு, அதாவது பாதங்களின் உடன் அங்கங்களுக்குச் சில விதங்களில் ஊழியம் புரிய முடியும். கர்த்தருடைய உண்மையான ஜனங்களில் ஒவ்வொருவனும், இக்காரியங்களைக் குறித்துப் படிக்கையில் தேவனுடைய கிருபையினால், தானும் மரியாள் வகுப்பாரில் சேர்ந்துக்கொண்டு, விலையேறப்பெற்ற நளததைலத்தை வாங்கி, அதைச் சபையின் உண்மையான அங்கங்களாகிய கிறிஸ்துவினுடைய சரீரத்தின் பாதங்களின்மேல், தாராளமாய் ஊற்றவேண்டும் எனத் தீர்மானிப்பானாக. இங்குத் தைலம் அன்பையும், அனுதாபத்தையும், இரக்கத்தையும், தயவையும், பொறுமையையும், உதவி அளித்தலையும், ஆறுதல் அளித்தலையும் குறிக்கின்றது. இன்னுமாக இது, சகலவிதமான ஆவியின் கிருபைகள் மற்றும் கனிகள் நமக்குள் பெருகுவதையும், வளருவதையும், விருத்தியாகுவதையும் குறிக்கின்றது. இந்த ஆவியின் கனிகள் மற்றும் வரங்கள் ஒட்டுமொத்தமாக அன்பு என்னும் பெயருக்குள் அடங்குகின்றது.

அன்பான வாசகர்களே, மரியாள் இந்தப் பாடத்தில் செய்ததுபோல் நாம் செய்வது இயலாத காரியம் என்று நாம் அறிந்திருந்தாலும், இப்பொழுது உலகத்தில் காணப்படும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளாகிய, அவருடைய சரீரத்தின் பாத அங்கங்களுக்கு, ஒருவருக்கொருவர் இதைக்காட்டிலும் மிக முக்கியமான காரியங்களைச் செய்வது ஒவ்வொருவருக்கும் உரிய சிலாக்கியமாய் [R3536 : page 106] உள்ளது. அன்று மரியாள் சொல்லர்த்தமாகப் பயன்படுத்தின தைலத்தின் நறுமணம் கொஞ்ச நேரத்திற்குப் பின் இல்லாமற்போனது. ஆனால், நாம் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் அன்பின் அடிப்படையிலான சிறு வேலைகள் மற்றும் உதவிகள் கர்த்தருடைய பார்வையில் ஒருபோதும் மதிப்பை இழந்துப்போவதுமில்லை, மற்றும் ஒவ்வொருவருடைய கணிப்பிலிருந்து நித்திய காலத்திற்கும் அதின் நறுமணங்கள் இழந்துப்போவதும் இல்லை. வாழ்க்கையில் சிறிய காரியங்கள், சில வார்த்தைகள்,சிறிய அன்பளிப்புகள், அன்பான பார்வைகள், அவ்வப்போது செய்யப்படும் உதவிகளாகிய இந்தச் சின்ன சின்ன விஷயங்களே, மற்றவர்களுக்கான நம்முடைய நறுமணதைலமாகவும், வாய்ப்புகளாகவும் இருக்கின்றன.

ஒருவரின் பாதங்களை ஒருவர் கழுவுதல்

பண்டைய காலத்தில் விசேஷமாகக் கிழக்கத்திய தேசங்களில் பாதங்கள் கழுவும் காரியமானது, உடம்புக்கு ஆறுதல் அளிப்பதற்காகச் செய்யப்பட்டு வந்த வழக்கமாக இருந்தது. ஆகவே, ஒருவருக்கொருவர் பாதங்கள் கழுவும் விஷயமானது, மிகவும் தாழ்மையான/மதிப்புக் குறைவான ஊழியங்கள் மூலமாகக் கூட ஒருவருக்கொருவர் ஆறுதலையும், புத்துணர்வையும் அளிப்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. எவ்வளவுதான் மதிப்புக் குறைந்த ஊழியங்களாக இருப்பினும், அதன் மூலம் ஒருவருக்கொருவர் ஆறுதலையும், உதவியையும் அளிக்கக்கூடுமானால் அப்படிப்பட்ட மதிப்புக்குறைவான வேலைகள் மூலம், ஊழியம் செய்வதற்கான வாய்ப்புகளினிமித்தம் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதே கர்த்தருடைய பாடத்தில் அடங்கும் சாராம்சமாகும். இக்காரியத்தை நம்முடைய பாடத்திற்குப் பொருத்திப் பார்க்கலாம். மரியாள், நம்முடைய ஆண்டவரின் பாதத்தைத் தைலத்தினால் கழுவினாள். சபையில் உள்ள மிகுந்த பயபக்தியும், அன்பும் உள்ள வகுப்பாராகிய மரியாள் வகுப்பார், ஒருவருக்கொருவர் உதவி செய்கிறவர்களாகவும், ஒருவருக்கொருவர் பாதங்களைக் கழுவக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இன்னுமாக, இவைகளை அவர்கள் முரட்டுத்தனமாயும் மற்றும் அருவருப்பாயும் கருதிச் செய்யாமல், ஒருவருக்கொருவர் அன்பினாலும், மரியாதையினாலும், ஏவப்பட்டு, ஒருவருக்கொருவருடைய பாதங்களை, மரியாளுடைய நளததைலம் அடையாளப்படுத்தும் இரக்கம், அனுதாபம், அன்பு மற்றும் உணர்ந்துகொள்ளும் தன்மையினால் கழுவுகிறவர்களாய்க் காணப்பட வேண்டும். இன்னுமாக, இவர்கள் ஒருவருக்கொருவர் அன்புடனும், அக்கறையுடனும் ஆறுதல் அளிக்க வேண்டிய காரியத்திற்கு, மரியாள் தனது தலைமயிரினால் ஆண்டவருடைய பாதங்களைத் துடைக்க பயன்படுத்தின விஷயம், அடையாளமாய்க் காணப்படுகிறது.

இந்த அன்பு, அதாவது, இந்த நளததைலம் ஊற்றின மரியாளின் அன்பும், இரக்கமும் கர்த்தருடைய சரீர அங்கங்கள் மத்தியில் வளர்ந்துக்கொண்டிருப்பதற்கான சில ஆதாரங்களை நம்மால் பார்க்க முடிகின்றது. மேலும், கர்த்தருடைய அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு எதிராகக் காணப்படும் உலகம், மாம்சம் மற்றும் எதிராளியானவனின் விரோதத்தை இவர்கள் உணர்ந்துக்கொள்கையில், இவர்கள் ஒருவருக்கொருவர் இன்னும் அதிகமான பயபக்தியுடன் காணப்பட்டு, அன்பினாலும், அனுதாபத்தினாலும், பராமரிப்பினாலும், ஒருவரையொருவர் இன்னும் அதிகமாகக் கனப்படுத்தி, ஒருவருக்கொருவர் அன்புடன் பேசியும், கிரியைகள் புரிந்த நிலையிலும் காணப்படுகின்றனர். இவைகளையெல்லாம் குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இப்படியாக, அர்ப்பணிக்கப்பட்டவர்கள் ஆவியின் கனிகளில் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிந்துக்கொள்ளும்போது மகிழ்ச்சியடைகிறோம். நாம் வீட்டை அன்பின் நறுமணத்தினால் முழுமையாய் நிரப்பும் வரையிலும், கிறிஸ்தவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் அன்பாய் இருக்கின்றார்கள் என்று முழு உலகமும் அறிந்துக்கொள்ளும் வரையிலும் அதாவது, குறுகினப் பார்வையில் அல்லாமல் பிதாவை அன்புகூருகிற அனைவர்மேலும் மற்றும் பிதாவின் வழிகளில் நடப்பதற்கு நாடுகின்ற அனைவர்மேலும் கிறிஸ்து கொண்டிருக்கும் அன்பை, பரந்த பார்வையில் முழு உலகமும் புரிந்துக்கொள்ளும் வரையிலும், இந்த நற்கிரியைகள் அனைத்தும் தொடர்ந்துக் கொண்டிருப்பதாக.

நாம் இப்பொழுதே செய்வோம்

ஒருவேளை மரியாள், நளததைலத்தைக் கர்த்தருக்குப் பயன்படுத்தும் விஷயத்தில் ஒருவாரம் கழித்துச் செய்யலாம் என்று தாமதித்திருப்பாளேயானால், அவள் அதைக் கர்த்தருக்கு பயன்படுத்த முடியாமல், தனக்கே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஏனெனில், இந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள், நமது கர்த்தர் அடக்கம் பண்ணப்பட்டுவிட்டார். கல்லறையும் முத்திரையிடப்பட்டிருந்தது; கல்லறைக்கு முன்பாக ரோம போர்ச்சேவகர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஆக மொத்தம், அவருடைய மரித்துப்போன சரீரத்திற்குக்கூட அதனை ஊற்றுவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. கர்த்தர் அவளுடைய விருந்தாளியாக வந்திருந்தபோது ஆண்டவரிடத்தில், தான் கொண்ட பக்தியை அவள் வெளிப்படுத்தினது எவ்வளவு நல்ல காரியமாக இருந்தது. கிறிஸ்துவின் பாத அங்கத்தினர்களும் வெகு சீக்கிரத்தில் அவர்கள் ஓட்டத்தை முடித்துத் திரைக்கு அப்பால் கடந்துச் செல்வார்கள்.

நம்முடைய தைலமுள்ள வெள்ளைக்கல் பரணிகளை எடுத்துக்கொண்டு வருவதிலும், அவைகளைக் கிறிஸ்துவின் பாத அங்கங்களாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள நமது அருமையானவர்கள் மேல் ஊற்றுவதிலும், நாம் தாமதம் காட்டக்கூடாது என்ற ஞானம் இங்கு நமக்கு விளங்குகின்றது. ஒருவேளை நாம் தைலத்தை ஊற்றும் நபர்கள் நம்மைக் கவனிக்காமல் இருந்தாலும் அல்லது நம்மைக் குறித்துச் சிந்திக்காமல் இருந்தாலும் அல்லது நம்மை பாத அங்கங்களில் ஒருவராகக் கருதி நம்மேல் தைலத்தை அவர்கள் ஊற்றாமல் இருந்தாலும் சரி, நாம் நம்முடைய பங்கை செய்வோமாக; நாம் மரியாள் வகுப்பாராக இருப்போமாக. சீஷர்களில் சிலர் நம்முடைய அன்பு மற்றும் பக்தியின் விஷயங்களில், நாம் வரம்புமீறிச் செயல்படுகின்றோம் என்று தவறாய்க் குற்றம் சாட்டினாலும் சரி, அவளைத் தனியே விட்டுவிடுங்கள், அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள் என்று மீண்டுமாக (அன்று எச்சரித்ததுபோல்) கர்த்தர் தங்களிடத்தில் கூறுவார் (எச்சரிப்பார் என்பதைப் புரிந்துக்கொள்ளாமலேயே நம்மைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாலும் சரி, நாம் மற்றவர்கள் மீது நமது இனிமையான நறுமண தைலங்களை ஊற்றிக்கொண்டிருப்போமாக. கர்த்தருடைய சபையாகிய விசுவாச வீட்டாரும், தைலத்தின் இனிமையான வாசனையினால் நிறைந்து இருப்பார்களாக. இந்த நளததைலமும், அதினால் செய்யப்படும் அபிஷேகமும் நம்முடைய கர்த்தருடைய கணிப்பில், நம்மால் செய்ய இயன்ற காரியமாகவே கருதப்படுகின்றது. இதைக்காட்டிலும், வேறு எதுவும் அதிகமாகவோ அல்லது மேன்மையானதாகவோ அவருடைய பார்வையில் இருப்பதில்லை. இந்த நளததைலமும், அதினால் பண்ணும் அபிஷேகமும், அன்பை அதாவது மகாபெரும் அன்பைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கிறது. மேலும், இந்த அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கின்றது.

“ஒருவரையொருவர் கவனியுங்கள்” என்று அப்போஸ்தலர் கூறுகிறார். அதாவது, நாம் ஒருவரில் ஒருவர் காணப்படும் பலவீனங்களைக் கவனிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் ஏற்படும் சோதனைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும், ஒருவருக்கொருவர் ஏற்படும் பரீட்சைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்; உலகம் மாம்சம், மற்றும் எதிராளியானவனுக்கு எதிராக யுத்தம் பண்ணுவதில் ஒருவருக்கொருவர் ஏறெடுக்கும் பிரயாசங்களைக் கவனிக்க வேண்டும்; உள்ளேயிருந்தும், வெளியிலிருந்தும் வரும் எதிர்ப்புகளுக்கு எதிராக, நெருக்கமான வழியில் நடந்துக்கொண்டிருக்கையில், ஒருவருக்கொருவர் ஏற்படும் உபத்திரவங்களைக் கவனிக்க வேண்டும். மேலும், இப்படியாக நாம் கவனித்துக் கொண்டு வரும்போது, நம்முடைய இருதயங்களில் இரக்கம் உண்டாகும்; இந்த இரக்கமானது ஒரே சரீரத்திலுள்ள உடன் அங்கங்களாகிய அனைவர்மேலும், மிக விலையேறப் பெற்றதும், தூய்மையானதும், சிறப்பானதுமான நளததைலத்தை ஊற்றுவதில் மகிழ்ச்சிக்கொள்ளும்.

*ஊக்குவிப்பவர்களுடைய சமுதாயம்” என்ற மாபெரும் சமுதாயத்தைக் குறித்து ஒருவர் பேசியுள்ளார். இந்தச் சமுதாயமானது, ஜீவியத்தின் பாதையில் சோர்ந்துப் போனவர்களையும், கால்கள் தள்ளாடிப் போனவர்களையும், தூக்கி நிறுத்துவதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் மிகுதியான உதவிகளைச் செய்து வருகின்றது. இந்தச் சமுதாயத்தின் அங்கங்களைப் பார்க்கும்போது, அது ஒரு மாபெரும் சமுதாயம் போன்று தோன்றவில்லை. ஆனால், இச்சமுதாயத்திடமிருந்து உதவியும், உற்சாகமும் பெற்றவர்களுடைய பார்வையிலும், கர்த்தருடைய பார்வையிலும் இது மாபெரும் சமுதாயமாகும். நளததைலம் ஊற்றின மரியாளை, இந்த “ஊக்குவிப்பவர்களுடைய சமுதாயத்தில்” முக்கியமான அங்கமாகச் சொல்லப்படலாம். தாம் படக்கூடிய பாடுகளையும், உபத்திரவங்களையும், சிலுவை மரணத்தையும் குறித்து எண்ணிக்கொண்டிருந்த நம்முடைய ஆண்டவருக்கு, மரியாள் வெளிப்படுத்தின அன்பு மற்றும் பக்தியின் கிரியைகள் எவ்வளவு விசேஷித்த ஊக்கத்தையும், புத்துணர்வையும் அளித்திருக்க வேண்டும் என்று நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. சிலர் மாத்திரமே அவரைப் புரிந்துக் கொண்டிருந்தார்கள். சுற்றியிருக்கும் சீஷர்கள் கூடச் சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ளவில்லை. அவர்மேல் நம்பிக்கை கொண்டு, அவரிடத்தில் அன்பு வைத்திருந்த மரியாளாகிலும் அங்கு அவருக்குக் காணப்பட்டாள். இது, அவருடைய பிரயாணத்தின் எஞ்சியுள்ள நாட்களில், அவருக்குத் தைரியம் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

உண்மை

நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் அளிப்பதற்கும், உற்சாகமூட்டுவதற்குமென, தற்கால வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்கும் விதத்தில் ஒரு எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

“உங்களுடைய நண்பர்கள் மரிப்பது வரையிலும் அன்பும், இரக்கமும் உள்ள வெள்ளைக்கல் பரணியை முத்திரையிட்ட நிலையிலேயே வைத்துவிடாதீர்கள். உங்களுடைய நண்பர்களுடைய ஜீவியத்தை இனிமையாக்குங்கள். அவர்களுடைய செவிகள் கேட்கும் நிலைமையிலும் மற்றும் அவர்களது இருதயங்களானது உற்சாகமடைவதற்கு ஏதுவான நிலைமையிலும், நீங்கள் சொல்லும் வார்த்தைகளினால் சந்தோஷப்படக்கூடிய நிலைமையிலும் இருக்கும்போதே, உற்சாகமான [R3537 : page 106] வார்த்தைகளையும், மகிழ்ச்சியான வார்த்தைகளையும் பேசுங்கள். அவர்கள் மரித்துப்போன பின்னர் நீங்கள் கூறவேண்டுமென்றிருக்கும் அன்பான வார்த்தைகளை, அவர்கள் மரித்துப்போவதற்கு முன்னதாகவே சொல்லுங்கள். அவர்களது சவப்பெட்டிகளுக்கு நீங்கள் அனுப்ப வேண்டுமென்றிருக்கும் மலர்களை, அவர்கள் மரித்துப்போவதற்கு முன்னதாகவே அவர்களது இல்லங்களைப் பிரகாசிப்பதற்கும், மணமூட்டுவதற்கும் என்றும் அனுப்பிவையுங்கள். ஒருவேளை என்னுடைய நண்பர்கள் நான் மரித்த பிற்பாடு, என்னுடைய சரீரத்தின்மேல் ஊற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அனுதாபமும், பாசமுமாகிய நறுமணதைலங்களினால் நிரப்பப்பட்ட வெள்ளைக்கல் பரணிகளை எங்கோ மூலையில் வைத்திருப்பார்களானால், எனக்கு அவைகள் தேவைப்படும்போது, நான் அவைகளினால் புத்துணர்வும், மகிழ்ச்சியும் அடையத்தக்கதாக, அவர்கள் அதை என்னுடைய சோர்வான மற்றும் உபத்திரவமான நேரங்களில் என்னிடத்தில் கொண்டுவந்து அவைகளைத் திறக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அன்பு மற்றும் அனுதாபத்தின் இனிமைகள் எதுவும் என் மீது யாரும் வீசிடாத ஒரு ஜீவியத்தை ஜீவிப்பதைப் பார்க்கிலும், பூக்குவியல்கள் இல்லாத எளிமையான சவப்பெட்டியைப் பெற்றுக் கொள்வதிலும், புகழுரை இல்லாத அடக்க ஆராதனையைப் பெற்றுக்கொள்வதிலும் நான் திருப்தியாய் இருப்பேன் . சவப்பெட்டியின் மீதுள்ள பூக்களினால் அவர்கள் மரிப்பதற்கு முன்னதாக கடந்துவந்த சோர்வின் மத்தியிலான வாழ்க்கைக்கு நறுமணம் வீச முடியாது.”

திருமதி பிரஸ்டன் அவர்களின் கவிதையும் இதே கருத்தைத்தான் வெளிப்படுத்துகின்றது:

“…நான் ஒருவேளை,
பாராட்டின் ஒரு வார்த்தையையாவது,
உற்சாகத்தின் ஒரு வார்த்தையையாவது கேட்டிருந்திருப்பேனானால் –
வாழ்வா, சாவா – என்று என்னை அழுத்திக்கொண்டிருந்த பிரச்சனைகள் மத்தியில் ‘தைரியம் கொள்!’ எனும் ஒரு வார்த்தையையாவது கேட்டிருந்திருப்பேனானால் –
ஆ, அது –
மீண்டும் மீண்டுமாய்ப் பாய்ந்து வந்ததான கொந்தளிப்புகள் ஊடே
நான் செல்வதற்கு, எவ்வளவாய் எந்தன் ஆன்மாவை, வலிமைப்படுத்தியிருந்திருக்கும்.”

நறுமணம் வீசும் பலி

சபை ஜனங்கள் ஒருவருக்கொருவர் பண்ண வேண்டிய ஊழியங்களைக் குறித்துப் பேசுகையில், [R3537 : page 107] நம்முடைய பலியானது, தேவனுக்கு முன்பு சுகந்தவாசனையாக இருக்கும் என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார்; மேலும் சுவிசேஷமானது, “கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறது” என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது, நற்கிரியைகள், அன்பான வார்த்தைகள் மற்றும் நல்ல முயற்சிகளைச் சரியான நோக்கத்தையுடைய இருதயங்கள் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். அதேநேரத்தில், தவறான மனநிலையைக் கொண்டிருப்பவர்கள் எல்லா நன்மையான காரியங்களையும், தவறாகவே புரிந்துக்கொள்வார்கள். அவர்களுக்கு அது கெட்ட வாசனையாகவே இருக்கும். நம்முடைய அனுபவங்களில் இவைகளை நாம் அடிக்கடி காணலாம். கிறிஸ்துவின் பாதங்களுக்கு நாம் ஊழியம் செய்வதற்கென நம்மால் முடிந்த சிறந்த பிரயாசங்களை எடுத்தாலும், சிலர் அதினால் ஆறுதலும், புத்துணர்வும் அடைந்துள்ளார்கள்; இன்னும் சிலர் கோபமும் அடைந்துள்ளனர்; அதாவது, சிலருக்கு நம்முடைய இந்தப் பிரயாசம் சுகந்தவாசனையாகவும், வேறு சிலருக்குக் கெட்ட வாசனையாகவும் இருக்கின்றது. ஏனெனில், இவர்களுக்குக் கர்த்தரிடத்திலும், கிறிஸ்துவின் சரீர அங்கங்களிடத்திலும் தவறான இருதய நிலைமையே காணப்படுகின்றது. ஒருவேளை, அவர்களுடைய இலட்சியங்கள் அல்லது பேராசைகள், குறுக்கிடப்பட்டதினாலும் கூட அவர்களுக்கு இந்தப் பிரயாசங்கள் கெட்ட வாசனையாக இருந்திருக்கலாம்.

பெத்தானியாவிலும் அப்படியே நடந்தது. நறுமணம் வீடு முழுவதும் பரவினது. மேலும், இந்த ஊழியத்தின் விளைவாக, மரியாளுக்கு வந்த ஆசீர்வாதமும், புத்துணர்வும், யூதாசுக்கு மிக வித்தியாசமான தாக்கத்தை உண்டுபண்ணிற்று. யூதாசோ கோபமடைந்தான்; அவனுக்குள் காணப்பட்ட சுயநலம், கர்த்தருக்குச் செய்யப்பட்ட கனத்தைப் புரிந்துக்கொள்வதைத் தடைபண்ணிற்று. அவன் தன்னைப்பற்றியும், இதை விற்றால் என்ன கிடைக்கும் என்பது பற்றியும்தான் சிந்தித்துக்கொண்டிருந்தான். ஆகவே, அவனைப் பொறுத்தவரையில் இந்த அனைத்து விஷயங்களும் வீண் செலவுகளே. அவனுடைய தவறான சிந்தையினிமித்தம் அவனுடைய இருதயத்திற்குள் வந்த கசப்பானது, அவன் அதற்குப் பிற்பாடு நேராகப் பிரதான ஆசாரியரிடத்திற்குச் சென்று இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கென, பேரம் பேசின விஷயம் குறித்த பதிவுகளில் வெளியரங்கமாகுகின்றது. அன்பான சகோதர சகோதிரிகளே, நம்முடைய இருதயங்கள் ஆண்டவர் மேல் அன்பான நோக்கம் உடையதாக இருக்கின்றதா அல்லது சுயநலமான நோக்கத்துடன் இருக்கின்றதா என்றும், அவருடைய நாமத்தினால் அவருடைய சரீரத்திற்குச் செய்யப்பட்ட அனைத்தையும் உணர்ந்துக்கொண்ட நிலையில் இருக்கின்றோமா என்றும், நாம் சுயத்திற்காக நாடாதவர்களாகக் காணப்படுகின்றோமா என்றும், கவனிக்கக்கடவோம். இல்லையேல், யூதாசுக்கு இருந்ததுபோல, நமக்கு இந்த நறுமணங்கள் மரணத்துக்கு ஏதுவான மரண வாசனையாக இருந்துவிடும்.

நம்முடைய பாடத்தின் முடிவிற்கு வருவோம். அநேகமாக இந்தச் சம்பவத்திற்கு மறுநாள், இயேசுவையும், லாசருவையும் காணும்படியாக யூதர்கள் கூட்டங்கூடத் துவங்கியிருக்க வேண்டும். அனைவரின் நலனுக்காக ஒருவர் மரிப்பது நலம், என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆதியிலிருந்து இந்நாள் வரையில், “நன்மையின் காரணத்திற்காகவே,” சத்தியத்திற்கு எதிரான செயல்கள் செய்யப்பட்டு வந்ததுள்ளது. இப்படிப்பட்ட ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கக்கடவோம். சுயநலமான அன்பை அல்ல, ஆண்டவர் மீதும், மற்ற அனைத்துச் சகோதரர்கள் மீதும் உண்மையான அன்பை உத்தமமாகச் செலுத்துவோம்; இல்லாவிடில், நாம் எப்படிப்பட்ட தீமைகளுக்குள் வழிநடத்தப்படுவோம் என்று நமக்குத் தெரியாது.